Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 431
- Thread Author
- #1
ஷமீரா நினைவுகள்:
அம்மாடி சாமி கும்பிட்டு நீங்க ரெண்டு பேரும் அங்க இருக்குற கடையெல்லாம் சுத்தி பார்த்துட்டு இருங்கடா.
நம்ம பக்கத்து வீட்டிலிருக்கும் கமலாவுக்கு குழந்தை பிறந்துருக்கு.நானும் அம்மாவும் சீர்காழிக்கு போய் பார்த்துட்டு வரும் போது உங்களை கூப்பிட்டு போயிடுறோம் என்று வேதாச்சலம் சொல்ல அவளுங்களும் சரிங்க பா என்றாளுங்கள்.
அப்பொழுது அவளையும் மீறி தனது நெஞ்சில் மேல் ஷமீரா கையை வைக்க அவள் மனசாட்சியோ யாருக்காக நீ வரயென்று எனக்கு நல்லாவே தெரியும் டி.
என்னதான் உன் மனசை மூடி மறைக்க நினைத்தாலும் அதுக்குள்ள இருக்கிற அந்த காதல் உணர்வு மேல வந்து தான் தீரும்.அவன் வருவான் என்ற எண்ணத்தில் தானே வர?
அப்படிலாம் ஒன்னும் இல்லையே என்று மனதிற்குள் அவள் சொல்லிக்கொள்ள, அப்படியா?
அப்ப ஏன் திடீர்னு புடவை கட்டிட்டு வர?
உனக்கு தான் புடவை கட்டலாம் பிடிக்காதே?
சும்மா தோணுச்சு அதான் என்றவளை பார்த்து சிரித்த மனசாட்சி, உனக்கா தோணுச்சு இதை நான் நம்பனுமா?
இவ்வளவு நேரம் உன் மனசு என்ன தெரியுமா சொல்லிக்கிட்டு இருந்துச்சி இவங்க எல்லாம் இருக்கும்போது எப்படி அந்த கூட்டத்தில் அவனை தேடி அலைகிறது என்று, எங்கே இது உண்மை இல்லைன்னு உன் மனசாட்சியை தொட்டு சொல்லு என்க..
ஷமீராவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.அவள் வருவது செழியனுக்காக மட்டும் தான் என்பது அவள் உள் மனம் மட்டுமே அறிந்த உண்மை.
ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அவனை காண வருகிறாள்.அவன் வருவானா வரமாட்டானா என்பது தெரியவில்லை.ஆனால் அவனுக்காக மட்டுமே வருகிறாள்.
காரை சில அடி தள்ளியே பார்க்கிங் பார்த்து நிறுத்திவிட்டு நால்வரும் கோயிலை நோக்கி வரும் போது ஷமீரா மட்டும் தனது பார்வையால் எங்கேயாவது அவன் தென்படுகிறானா என்று தேடாமல் இல்லை.
கூட்டத்தை தான் டி ஒருவழியாக கோயிலுக்குள் சென்றனர்.
ஷமீரா கிறிஸ்டியன் மதத்தை சேர்ந்தவள்.அவள் சாமி கும்பிடமாட்டாள் என்பதால் நான் இங்கு வேடிக்கை பார்க்கிறேன் நீங்கள் முடிச்சிட்டு வாங்களென்க...
"சரி ஷமீ பத்ரமா இரு டா"
எதாவதுனா உடனே கால் பண்ணு டா என்று வேதாசலம் சொல்ல,சரிங்கப்பா என்றவள் அவர்கள் கோயிலின் நுழைவு வாயிலின் உள்ளே போகும் வரை அங்கையே நின்றாள்.
அங்கிருந்த கூட்டத்தில் அவர்கள் மூவரும் கலந்ததும் கூட்டத்தினை விலக்கிக் கொண்டு தரிசன கடையை நோக்கி வத்தவள்,முதன் முதலாக அவனை சந்தித்த கடையின் உள்ளே நுழைந்தவளோ அங்கிருந்தவனை பார்த்து திகைத்தாள்.
அவனை பார்த்த சந்தோஷத்தில் இதுவரை ஒருவிதமான அலைப்புறுதலோடு இருந்தவளின் முகமோ அவளையும் மீறி பிரகாசிக்க,இதழ் பிரியாமல் சிரிப்பும் வந்தது.
செழியன் நினைவுகள்:
சார் காபி இல்லை டீ?
ஐயோ சார் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்..
என்னோட வேலைக்காக நீங்க வந்துருக்கீங்க.உங்களை நான் தான் கவனிக்கணும் என்கவும்,
அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். உங்களை விட வயசுல ரொம்ப சின்ன பையன் நீங்க என்னை செழியன் என்றே கூப்பிடலாம் என்கவும் இருக்கட்டும் சார். உங்க வேலைக்கு நான் மரியாதை கொடுக்கணுமே என்றார்.
ஜேம்ஸ் சொன்னதைக் கேட்டவன் சார் நம்ம ரெண்டு பேருமே தமிழ்நாட்டுக்காரங்க எப்படி பார்த்தாலும் தாயா பிள்ளையா தான் இருப்போம்.நமக்குள்ள என்ன சார் மரியாதை கேடு என்க, அதைக் கேட்டு அவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
சரிங்க தம்பி நம்ம போகலாமா என்கவும்,இன்னும் பத்து நிமிஷத்துல சரக்கு வந்துடும் சார் வந்த பிறகு நம்ம கிளம்பலாமே என்றான்.அப்படிங்களா சரிங்க தம்பி ஒன்னும் பிரச்சனை இல்லை என்றவர் பொதுவாக இருவரை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம் செழியனின் போனிற்கு கால் வரவும் டிரைவர் தான் பண்றார்னு நினைக்கிறேன் என்றவாறு அங்கே டேபிளில் மேல் வைத்திருந்த போனை எடுத்து பார்க்க அதில் டிரைவரின் நம்பர் வந்தது.
ஒரு நிமிஷம் சார் என்று அட்டென்ட் பண்ணியவன்,சொல்லு ணா?எங்க இருக்கீங்க என்கவும் டிரைவரும் அந்த பக்கமிருந்து இருக்கும் இடத்தை சொல்லவும் அப்படிங்களா சரிங்க ணா. இதோ ஒரு அஞ்சு நிமிஷத்துல நான் வந்துடுறேன் என்று அழைப்பை துண்டித்தவன் வாங்க சார் சரக்கு வந்துடுச்சு என்றான்.
பின்னர் இருவரும் ரூமில் இருந்து கீழே வரவும் அந்த மெயின் ரோட்டில் இடது பக்கமாய் தமிழ்நாட்டு எண் குறித்த ஈச்சர் லாரி நின்று கொண்டிருந்தது.
சார் நீங்க எப்படி வந்தீங்க?
அதற்கு ஜேம்ஸோ நான் காரில் வந்தேன் தம்பி...அப்படிங்களா நான் டிரைவர் கூட லாரில வந்துடுறேன்.நீங்க முன்னாடி போய் வழிய காட்டுங்களேன்.
பரவால்ல தம்பி..என் கூடவே கார்ல வாங்க.நம்மை டிரைவரும் பாலோ பண்ணிட்டு வருவாரே பா...ஓஓஓ தேங்க்யூ சார் என்றவன் ஜேம்ஸோடு முன் சீட்டில் காரில் உட்காரவும் டிரைவரும் காரை பின் தொடர்ந்து வந்தார்.
ஏங்க சார் எப்படி திடீர்னு உங்களுக்கு இந்த ஊர்ல இவ்ளோ பெரிய மால் திறக்கணும்னு தோணுச்சு?
ஹா ஹா என்று சிரித்தவர் நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தான் படிச்சேன் தம்பி.இங்க உள்ள ஒரு புகழ்பெற்ற ஹோட்டலின் பெயரைச் சொன்னவர் முதல்ல அங்கதான் எனக்கு 5000 சம்பளத்தில் வேலை கிடைத்தது.
"நானும் நம்ப ஊரிலிருந்து இங்க வந்துட்டேன் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஹோட்டலோட சீப் செப்பானேன்"
என்னோட மனைவியும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தான் படிச்சிருக்காள் என்றவாறு சிரித்தவரை பார்த்தவன், என்ன சார் லவ் மேரேஜா?
ஹா ஹா ஹா...எனக்கு லவ் கிடையாது. என்கிட்ட ட்ரெய்னிங் வந்த பொண்ணுதான்.என்னமோ தெரியலை இந்த மொகரைய புடிச்சிடுச்சி.எங்க அப்பா அம்மா கிட்ட நேர்ல வந்து அவங்க அப்பாவும் அண்ணனும் பேசினாங்க.
மறுக்க எனக்கும் காரணம் இல்லை. பிறகு அரேஜ் மேரேஜ் ஆயிடுச்சு அப்புறம் இங்க தனியா ஒரு ஹோட்டல் வச்சு ரன் பண்ணிட்டு இருந்தாள்.நல்ல நிலைமைக்கு வந்தோம்.கொஞ்சம் கொஞ்சமா அப்படி பணம் சேர்த்து தான் இந்த இடத்தை வாங்கி போட்டோம்.
இதுல ஒரு மால் கட்டணும்னு தோணுச்சு.அதில் நமது தமிழ்நாட்டில் விளையிற எல்லா பொருளும் கிடைக்கும்னு எண்ணம் வரவும்,இங்கு மசாலா பொருட்களுக்கு நல்லா டிமாண்ட்.
அப்படி எது நம்பர் ஒன்னா இருக்குன்னு பார்க்கும்போது தான் கேகே மசாலா என்று நிறைய பேர் ரெபர் பண்ணுனாங்கள்.பிறகுதான் உங்க ஓனர் கிருஷ்ணகுமாரை காண்டாக்ட் பண்ணினேன்.
அவர் தான் உங்களோட நம்பர் கொடுத்தார் தம்பி.எதா இருந்தாலும் நீங்க செழியன் கிட்ட கேட்டுக்குங்கனு என்கவும்,அதை கேட்டு சிரித்தவன் அந்த கம்பெனியில் வேலை பார்க்கிறதுக்காக நான் சொல்லலை சார் உண்மையிலேயே எங்கள் கம்பெனி மசாலா உலகத்தரத்தில் நம்பர் ஒன்னுன்னு நான் ரொம்ப பெருமையா சொல்லுவேன்.
அங்கு வேலைக்கு சேர்ந்து இதோட மூணு வருஷம் ஆயிடுச்சு இதுவரைக்கும் ஒரு குறைகள் எங்க மசாலாவை பற்றி யாரும் சொன்னது கிடையாது.
இந்தியாவில் மட்டும் இல்லை வெளிநாட்டிலும் போய் சர்வே எடுத்தோம்.
ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னதுனா சார்,நான் ஸ்கூல் போகும் போதெல்லாம் பார்ப்பேன்.சின்ன குடிசையில அங்க மசாலா தயாரிப்பாங்க.இன்றைக்கு கடல் போல பறந்து விரிந்திருக்கிறது.
இந்த அளவு வளர்ச்சிக்கு காரணமே சாரோட பாட்டி கண்ணம்மாள் அம்மா தான். பாட்டி தான் சின்னதா ஆரம்பிச்சாங்க.அது இப்போது குடும்ப தொழிலாக மாறி எங்கையோ உயர்ந்து நிக்குது..
நீங்களும் பாருங்கள் உங்கள் மால்ல எங்கள் கம்பெனி பொருள் எப்படி ஓஹோனு ஓடுதென பேசிக் கொண்டே மாலுக்கு வந்தனர்.
வாங்க தம்பி சுற்றி பார்க்கலாமென ஜேம்ஸ் கூப்பிட,ஒரு நிமிஷம் சார் என்றவனோ லாரி டிரைவரிடம் வந்தவன் அண்ணா இந்தாங்க...முதலில் போய் சாப்பிட்டு வாங்க பிறகு சரக்கை இறக்கி வைக்கலாமென பணத்தை நீட்டினான்.
எலே தம்பி கையில பணம் இருக்குல, நீ போய் உன் சோலிய பாரும் என்றவரை பார்த்து முறைத்தவன்,என்ன ணா முன்னால் காதலி இருக்கும் ஊருக்குள் வந்ததும் நம்ப ஊர் பாஷை வருதென்று செழியன் சிரிக்க..
அட பாவி...
நீயெல்லாம் தம்பியா?
உன் அண்ணிகாரி லைன்ல இருக்காடா...
ஏன் டா ஏன்?
அய்யோ மாலா செழியன் சும்மா கிண்டல் பண்ணுறான் டி.உன் புருஷன் மனதில் நீ மட்டும் தான் டி என்னை நம்புடி என்று கெஞ்ச,அந்த பக்கமிருந்த மாலா,யாரு நீயா?
எங்கக்காவை காதலிச்சிட்டு என்னை கட்டின ஆள் தானே??உன் யோக்கியதை எனக்கு தெரியும்.வீட்டுக்கு வாயா உனக்கு இருக்கென்று போனை வைக்க...
சந்தோஷமா டா?
நீ வந்த வேலை முடிஞ்சிட்டுல போ ராசா போ என்கவும்,அவர் சொன்னதை கேட்டு சத்தமாக சிரித்தவன்,ஏன் ணா உனக்கா அண்ணியை சமாதானம் பண்ண தெரியாது?
அதைக் கேட்டவரும் சிரித்து விட்டார்.
மத்தவங்களையும் கூப்பிட்டு போய் சாப்பிட்டு வாங்களென்றவனோ அவர் பாக்கெட்டில் பணத்தை வைத்து விட்டு மால் உள்ளே போனவனோ
அஞ்சு மாடியையும் சுற்றி பார்த்துவிட்டு கீழே வர ஒரு மணிநேரம் ஆனது.
லாரியில் இருந்த மசாலா பொருட்களை அதற்குறிய இடத்தில் வேலையாட்களும் இறங்கி வைத்தனர்.
லிஸ்டில் இருந்த போல எல்லாம் வந்து விட்டதாயென மீண்டும் ஒருமுறை செக் பண்ணிய செழியன்,அனைத்தும் சரியாக இருக்கவும் லாரி டிரைவரை பார்த்தவன் சரிங்கணா நீங்கள் நல்லபடியாக ஊருக்கு கிளம்புங்களென்க, ஜேம்ஸோ லாரியில் வந்தவர்களுக்கு ஆளுக்கு தல 500 ரூபாய் கொடுக்க அதை வாங்கியவர்கள் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
பின்னர் ஜேம்ஸிடம் பொருட்கள் வந்து சேர்ந்து விட்டதாக வவுச்சரில் கையெழுத்தை வாங்கியதும்,அவரோ அதற்குறிய பணத்தை செக்-கில் எழுதி கொடுத்தார்.