• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
429
ஷமீராவின் நினைவுகள்:

அவன் அனுப்பும் மெசேஜை மட்டும் படித்துக் கொண்டே வர,பெரிய சண்டிராணியாக தான் டி இருக்கிற...இரு டி உன் திமிரையெல்லாம் அடக்கிடுறேன் என்று செழியன் அனுப்பவும்,அதை படித்தவர்களுக்கு அவளையும் மீறி சிரிப்பு வந்தது.

தனது ரூமிற்கு போனவளோ முதலில் போனை சைலண்டில் வைத்தவள் ப்ரஷாகிவிட்டு வெளியே வர இந்தா ஷமீ, ரோஸி தான் என்றவாறு மகளிடம் போனை நீட்ட,அதை வாங்கியவள் சித்தி எப்படி இருக்கீங்க என்று பரஸ்பரம் நலம் விசாரித்தனர்..

பின்னர் தம்பி தங்கைகளிடம் பேசிவிட்டு போனை வைத்த உடனே கால் வர,அதில் மகியின் நம்பர் வரவும் இந்தா மா உன் புருஷனென்று போனை கொடுத்தவள், கிச்சனிற்குள் சென்று என்ன இருக்கென்று பார்க்க,சூடாக சாதமும் மீன் குழம்பு,அவளுக்காக மீன் வறுவலும் தயாராக இருக்க...

ஆஹா ஆஹா..

எஸ்தரோட மீன் குழம்பை அடித்துக் கொள்ள இனி எவனாவது பிறந்து தான் வரணுமென்று சொல்லிக்கொண்டே தனக்கு தேவையானதை தட்டில் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர...

அங்கே எஸ்தரோ கணவரின் கேள்விக்கு ம்ம் என்றாலும் முகம் மட்டும் சோகமாக இருப்பது தெரிந்தது.

நிச்சயமாக போனிற்கு தான் சண்டை வந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டவள் சாப்பிடும் வேலையை பார்க்க..

ஒருவழியாக பேசிவிட்டு போனை வைத்த எஸ்தர் ஆண்டவரேஏஏஏஏ... என்க..என்னமா எவன் கிட்ட ஆத்தாளும் மகளும் போன்ல கதையடிச்சிங்கனு உன் புருஷன் கேட்டுருப்பாரே?

மகள் சொன்னதை கேட்ட எஸ்தருக்கு சுருக்கென்றது. தாயின் முகத்தை பார்த்தவள் இது தான் நடந்திருக்குமென்று தெரியாத அளவுக்கு நான் இல்லை மா.நல்லவேளை கடவுள் என்னை உன் வயிற்றில் பொண்ணாக பிறக்க வைத்தார்.

நான் மட்டும் பையனாக பிறந்திருந்தால் நீ தினமும் தீக்குளிக்கணும் மா.இந்த விஷயத்தில் நீ ரொம்ப கொடுத்து வைத்தவளென்று உள்ளுக்குள் கதறியவள் சாதத்தை அள்ளி வாயில் வைக்க,பிடித்தமான உணவோ விஷம் போல உள்ளுக்குள் இறங்கியது.

மகள் சாப்பிடும் வரை அமைதியாக இருந்த எஸ்தர் ஷமீ என்க,சொல்லுமா என்றவாறு அவரின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.

இந்த வருஷத்தோடு பாபுவிற்கு 27 வயசாகுது.உனக்கும் பாபுக்கும் நிச்சயம் பண்ணலாம்னு எங்கண்ணன் சொல்லிட்டு இருக்கு டி என்கவும், வழக்கம் போல் இந்த வார்த்தையை கேட்டால் எதுவும் நினைக்காமல் அமைதியாக இருப்பவளுக்கு,இப்போது கல்யாண பேச்சு வந்ததும் செழியனின் நினைவுகள் தானாக ஓடி வந்தது.

அவள் சிந்தனையோ அவனை பார்த்த நாளை நோக்கி போக,மகள் கேட்டுக் கொண்டிருக்கிறாளென,பாபு அவளை எப்படியெல்லாம் பார்த்துக் கொள்வான் என்று அவனின் குணங்களைப் பற்றி சொல்லியவர்,அதனால இந்த வருஷம் நிச்சயம் பண்ணிடலாம்னு இருக்கு டி..

இதுவரை கனவில் மூழ்கியிருந்தவளுக்கு கடைசி வார்த்தை மட்டும் அவள் காதில் விழ,ஏன் மா அவசரப்படுறீங்க?நான் இந்த வீட்ல இருக்கிறது உனக்கு இடைஞ்சலா இருக்கா என்கவும்,...

அடியேய் என்னடி பேசுற?

ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு பெத்து வச்சிருக்கேன்.உன்னை நல்லபடியா என் அண்ணன் கையில ஒப்படைச்சிட்டாக்க என் உயிர் நிம்மதியாக போயிடும்.

உன்னை தவிர வேற எனக்குன்னு யாரு இருக்கா சொல்லு?என்று கண் கலங்கியபடி எஸ்தர் சொல்ல,
ஷமீராவுக்கும் அதைக் கேட்டு அழுகை தான் வந்தது.ஆனால் மனம் ஏனோ பாபுவை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதிக்கவில்லையே என்ன செய்ய? ?

தந்தையின் சந்தேக புத்தி பற்றி எந்த வயதில் தெரிந்ததோ அன்றிலிருந்து அவளுக்கு ஆண்கள் மேல் வெருப்பு வந்ததும்,கல்யாணம் என்ற வார்த்தைக்கு தனது வாழ்க்கையில் இடமில்லை என்று அவள் மனதிற்குள் முடிவெடுத்து விஷயம் அவளைத் தவிர யாருக்கும் தெரியாதே?

அதனால் தானே பாபுக்கும் அவளுக்கும் கல்யாணம் என்று சிறுவயதில் இருந்து சொல்லும் போதெல்லாம் அதை ஒரு பொருட்டாக காதில் வாங்காமல் இருந்து கொண்டிருக்கிறாள்.

அப்படி உள்ளவளின் எண்ணத்தில் யாரென்று தெரியாத ஒருவன் சலனத்தை கொண்டு வந்ததை நினைத்து அவன் மேல் கோபமும் வந்தது.

அதே நேரம் அவளின் மனநிலையை நினைத்து அழுகையும் வந்தது.

மகளின் முகத்தை பார்த்த எஸ்தர் பாபு ரொம்ப நல்லவன் டி.அதை நான் சொல்லித்தான் உனக்கு தெரியனுமா சொல்லு?

நீ பிறந்த அன்னைக்கே பாபுவிற்கு நீதான் உனக்கு பாபு தான்னு எங்க அண்ணன் முடிவு பண்ணிடுச்சு. கண்டிப்பா எங்க அண்ணனோட பேச்சை உங்க அப்பா தட்ட மாட்டாரு அது உனக்கே நல்லா தெரியும் தானே ஷமீ??

எங்க அண்ணனுக்கும் வேற யாரு இருக்கா சொல்லு? அவருக்கு இருக்கிறது ஒரே வாரிசு தானே.தங்கச்சி மகள் நீ அந்த வீட்டுக்கு போனால் கடைசி காலத்துல அவங்களுக்கு உதவியாக இருக்கும்..

இந்த வருஷம் பாபு ஊருக்கு வரேன்னு சொல்லிருக்கிறான்.வந்த பிறகு அந்த ஆண்டவர் புண்ணியத்துல எல்லாம் நல்லபடியா நடந்தால் சந்தோஷம்.

சரி நீ போய் படு என்றவர் வெளிக்கதவை பூட்டிவிட்டு அவர் அறைக்குள் செல்ல,இடி விழுந்த நிலையில் மேலே இருக்கும் தனது அறைக்குள் வந்த ஷமீராவுக்கு என்ன பண்ணுவது என்று ஒன்றுமே புரியவில்லை..

பாபுவின் மேல் அவளுக்கு இதுவரை அதுபோல ஒரு எண்ணம் வரவில்லை. வீட்டில் தொடர்ந்து இதே பேச்சு வந்து கொண்டே இருக்க,கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இத்தனை வருஷம் அமைதியாக இருந்தது ஒருவிதத்தில் தப்போ என்று இப்பொழுது யோசித்துப் பார்த்தவளுக்கு பாபுவுடன் பேசினால் ஒரு விதத்தில் ஆறுதல் கிடைக்கும் என்று நினைத்தவள் தனது ஃபோனில் இருந்து பாபுவின் நம்பருக்கு ஹாய் மாமா என்று மெசேஜ் அனுப்பினாள்.

சிறு நிமிடத்தில் அவனிடமிருந்து கால் வர அட்டென் பண்ணியவளிடம் சொல்லுடா பாப்பா?எப்படி இருக்கடா என்றான்.

நான் நல்லாருக்கேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க என்று பரஸ்பரம் இருவரும் நலம் விசாரித்துக் கொண்டனர்.
பின்னர் அவளின் படிப்பு பற்றி கேட்க நல்லா போகுது மாமா என்கவும் அவனின் வேலையை பற்றிய ஷமீரா கேட்க அவனும் அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தான்..

அப்புறம் டி காலேஜ்ல நல்லா சைட் அடிக்கிறியா? பஸ்ல வேற தினமும் போற நிறைய ஹேண்ட்ஸம் பாய்ஸ்களை பார்த்திருப்பியே என்று பாபு சிரிக்க... மாமா என்று கோவமாக ஷமீரா சொல்ல...

அட ஆமாம் நீ ஒரு ரோபோட் என்பதை மறந்துட்டேன் டி.என்ன பொண்ணோ போ என்றவன் மேலும் சிறிது நிமிடங்கள் பேசியவன் சரி டா பாப்பா நேரம் ஆயிடுச்சு குட் நைட் டா என்க,சரி மாமா பாய் என்றவாறு அழைப்பை துண்டித்தாள்.

செழியன் நினைவுகள்:

என்னடா ஊருக்கு கிளம்பலாமா வேண்டாமா?

இப்படி புடிச்சு வச்ச பிள்ளையார் போல உக்காந்திருந்தா என்ன அர்த்தம் என்க, கிளம்பலாம் கிளம்பலாம் என்று விரக்தியாக செழியன் சொல்லவும்,மச்சி நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத டா.அந்த பிள்ளைக்கு விருப்பம் இல்லைனா விட்டுவிடுடா. எதுக்கு தொந்தரவு பண்ணிக்கிட்டு???

நம்ம சாதிசனத்துல ஊர் உலகத்தில் வேற பொண்ணா கிடைக்காது என்று அன்பு சொல்லவும்,அதைக்கேட்ட செழியனோ,இன்னொருவாட்டி இந்த சாதி,சனம் மயிறு மட்டைனு பேசுன எனக்கு செம்ம கோவம் வந்துரும் டா.

அதெல்லாம் தூக்கி குப்பையில் போடுங்கடா.படிச்ச நம்பளே இன்னும் இதை தூக்கிக்கொண்டு திரிஞ்சால் நம்ம குடும்பத்தில் இருக்கிறவங்களை என்ன சொல்றது சொல்லு?

காலம் காலமா அதே குண்டு சட்டியில் தானே குதிரை ஓட்டிக்கிட்டு இருக்கிறோம்.நல்லா முடிவு பண்ணி தான் இந்த விஷயத்துல நான் இறங்கிருக்கிறேன் டா.

முடிஞ்சா நண்பனா எனக்கு கூட இருங்கள்.இல்லை புடிக்கலைன்னா ஒதுங்கி இருங்கடா அது போதும்.அதை விட்டுட்டு இப்படி எல்லாம் பேசாதீங்கடா என்க...

ஓஓஓ என்ற கண்ணனோ அன்புவிடம் கண்ணை காட்டிவிட்டு செழியனின் பக்கத்தில் உட்கார்ந்தவன், உண்மையிலேயே நீ என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்க மாட்ட தானே டா?

திரும்பி அவனை பார்த்த செழியன், சத்தியமாக கண்மணியை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் டா.

நிஜமா தானே ஆமா டா நம்ம மலையாத்தா சத்தியமா இவளை தான் டா கட்டுவேனென்க...

அப்பாடா நல்ல வேளை என் தங்கச்சி தப்பிச்சிது.அதுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும் என்கவும், இதுவரை இருந்த மனநிலை மாறி இப்பொழுது கொலைவெறியில் செழியன் முறைக்க,மத்தவனுங்களோ அதைக் கேட்டு சத்தமாக சிரித்து விட்டார்கள். ..

ஏன் டா இப்போ உன் விளங்காத தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைப்பது தான் முக்கியமா?

நான் எவ்வளவு சீரியஸாக பேசிட்டு இருக்கிறேன் உனக்கு கிண்டல் மயிறு கேட்குதென்று எழுந்தவனோ கண்ணனின் முதுகில் எட்டி ஒரு உதைவிட அய்யோ என்றவாறு கீழே விழுந்தான்.

ஏன் டா ஏன்???

கால் தானா அது?

"ஆத்தாடி"

குருத்தெலும்பு நொருங்கிடுச்சே...

நல்ல வேளை நான் பொண்ணா பொறக்கலை டா.இல்லை உன் தலையில் என்னை கட்டிடுவாங்களென்பவனை முறைத்த செழியன்,இங்கு ஒரு கொலை விழ போகுது பாருங்கடா என்றவாறு எழுந்து போய் கண்ணாடி பார்த்தவன் சரி வாங்கடா கிளம்பலாமென்று அவன் பேகை எடுக்க,மற்ற நண்பர்களும் லக்கேஜோடே கீழே வந்தனர்.

பின்னர் ரூம் வெக்கேட் பண்ணி விட்டு பேசிக் கொண்டே பஸ் ஸ்டாண்டிற்கு வர அவர்கள் ஏற வேண்டிய பஸ்ஸும் தயாராக இருக்கவும்,வெற்றி- கபிலிடனிடம் சொல்லிக்கொண்டு இவர்கள் பஸ்ஸில் ஏறவும்,சிறிது நிமிடத்தில் மதுரையை நோக்கி அந்த பிரைவேட் பஸ் புறப்பட்டது.

பொதுவாகவே இரவு நேர பயணத்தை ரொம்பவே விரும்பும் செழியனுக்கு, இந்த முறை எதையும் ரசிக்க மனம் வரவில்லை.

சிறிது நேரம் கண்ணை மூடி சீட்டில் சாய்ந்திருந்தவன் பஸ் ஹாரன் சத்தத்தில் கண் திறக்க,அருகில் உட்கார்ந்திருக்கும் நண்பன் தூங்கி விட்டது தெரிந்தது.

பின்னர் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்தவன் தன்னவளின் வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் செக் பண்ண,அவள் ஆன் லைனில் இருப்பது தெரிந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
429
செழியன் நினைவுகள்:

ஓய் பொண்டாட்டி என்று மெசேஜ் அனுப்ப,உடனே அது பார்க்கப்பட்டதாக புளு டிக் காட்டவும் இதயம் போட்டோவை அனுப்பியவன்,என்னடி செல்லம் தூங்கலையா?

இன்னும் உன் பேர் சொல்லலையே டி??

என்னை பார்த்து நீ மயங்கிட்டட டி அது எனக்கு நல்லா தெரியும்.கண்ணை சுருக்கி திங்கிற போல ஈவ்னிங் உன் கிளாஸ் ரூம்ல பார்த்தியே யப்பாஆஆஆஆ...!!!

கோலி குண்டு கண்ணுனு சொல்லுவாங்களே அதை நேரில் பார்த்தேன் டி.

அந்த ஜூஸ் கடையிலும் ஒரு பக்கமா தலையை சாய்த்து கண்ணை சுழட்டி ஒரு பார்வை பார்த்தியே....அம்மாடி...

சத்தியமா அந்த ரெண்டு விழிகளில் டோட்டலா நான் வீழ்ந்துட்டேன் டி"

உனக்கு என்னை பிடிக்கலைனா நான் விலகி போயிடுவேன் டி.ஆனால் பிடிவாதமாக நீ வேண்டானு நிக்கிற..

திடீரென்று யாரென தெரியாத ஒருவன் கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டால்,ஒன்னு அந்த பொண்ணு கோவப்படுவாள்.இல்லை பக்கத்தில் இருக்கவங்ககிட்ட இதை பற்றி சொல்லுவாள்.

ஆனால்...

நீ....

நான் சொன்னதை கேட்டு திகைக்கும் போது உன் கன்னம் சிவந்தது டி அதை நான் கவனித்தேன்.

ஒன்னும் அவசரமில்லை.

நல்லா யோசி...

ஆனால்...

ஆனால்..

உனக்கு புருஷன்றால் அது நான் தான் இதில் எந்த மாற்றமும் இல்லை.நான் ஊருக்கு கிளம்பிட்டேன்.நல்லா படி டி.

ஆளு எப்படியும் 50 கிலோக்குள் தான் இருப்ப போல...கொஞ்சம் உடம்பை தேற்று டி.என்னை சமாளிக்க உனக்கு தெம்பு வேண்டும் இல்லையா???

இதுவரைக்கும் நான் அனுப்பிய அத்தனை மெசேஜையும் படிக்கிற டி. இதில் இருந்து தெரியவில்லையா நான் உனக்கு வேண்டுமா?

இல்லை

வேண்டாமானு???

சரி நேரம் ஆகுது தூங்கு செல்லம் டிரீம்ல உன்னை மீட் பண்ணுறேன் ஓகே...

மிஸ் யூ மை டியர் மிசஸ் செழியன் என கடைசி மெசேஜை அனுப்பி விட்டு கண்ணை மூடியவனுக்கு தூக்கமோ அவ்வளவு எளிதாக வரவில்லை.

விடிய விடிய டிரைவருக்கு துணை போல விழித்த படியே மதுரைக்கு வந்து சேர்ந்தான்.

நண்பர்கள் ஐந்து பேரும் அங்கிருக்கும் டீ கடைக்கு சென்றவர்கள் இரண்டு தண்ணீர் பாட்டில் வாங்கி முகத்தை கழுவி வாய் கொப்பளித்து விட்டு ஆளுக்கொரு டீ யை குடித்து முடிக்க அவர்கள் ஊருக்கு செல்லும் பஸ்ஸும் வந்தது.

ஏழு மணி நேர பயணத்தில் வனிச்சூருக்கு வந்து சேர்ந்தவனுங்களிடம் அவரவர் வீட்டினர்கள் கோயில் பற்றி கேட்கவும் அவனுங்களும் பதில் சொன்னானுங்கள்.

ஹாலில் உட்கார்ந்து கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்த செல்லதுரையிடம் வந்தவன் அப்பா என்க...

மகனின் குரலை கேட்டு நிமிர்ந்தவர் கையிலிருந்த நோட்டை மூடி வைத்து விட்டு சொல்லு பா என்றார்.

அது வந்து பா,டெலஸ்ல ஒரு பெட் ரூம் கட்டலாம்னு தோணுது பா..

அப்படியா....!!!

நல்ல விஷயம் தானே..

எவ்வளவு செலவு ஆகும்னு பாரு,நல்ல நாளில் வேலையை ஆரம்பிச்சிடலாம். அப்படியே உன் மாமன் கிட்ட மணல் கல் வேண்டும்னு சொல்லிடு பா.

அதைக் கேட்டு சரிங்க பா என்றவன் தனது வண்டியை எடுத்துக்கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு வந்தான்

அங்கிருந்த தம்புசாமி பேரனின் முகத்தை பார்த்தவர் என்ன சுமதி உன் பேரன் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுது ஏதாச்சும் பொண்ணு கிண்ணுனு சுத்துறான என்கவும், உள்ளே வந்து செழியனுக்கு தனது தாத்தா சொன்னதை கேட்டு இருமல் வந்தது.

அந்த நேரம் பார்த்து மாடியில் இருந்து இறங்கி வந்த கண்ணன் காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் உன் மேல் நானும் புள்ள காதல் வளர்த்தேன் என்று பாடிக் கொண்டே வர,செழியனோ தனது மாமன் மகனை பார்த்து முறைக்க பேரனை பார்த்த தம்புசாமி தாத்தா விளக்கமாறு பிஞ்சிடும் என்றார்.

இப்ப எதுக்குயா அவனை திட்றயா?

சின்னவன் நல்லா தானே பாடுறானென்று சுமதி பாட்டி கேட்க, அவன் நல்லா தாண்டி பாடுறான் இந்த வீட்ல காதல் கீதல் என்கிற பேச்சு வந்துச்சு நான் மனுசனா இருக்க மாட்டேன் என்று தனது மீசையை முறுக்க,நல்லா கேட்டுக்கடா என்று கண்ணனும் தனது அத்தை மகனிடம் ஜாடையில் சொன்னான்.

வாயா சாப்பிடலாம் என்று ரஞ்சனி கூப்பிட,இப்பதான் சாப்பிட்டேன்.மாமா எங்க காணும் என்கவும் தோட்டத்துக்கு போனாரு.இதோ வந்துருவார் என்கும் போது அன்பரசன் உள்ளே வர,மாமா என்றவனை பார்த்தவர் சொல்லுயா என்க..

அங்கு நம்ம வீட்டு மாடியில் ஒரு பெட்ரூம் ஒன்னு கட்டலாம்னு இருக்கு மாமா.அதுக்கு மண்ணு கல்லு எல்லாம் வேணும் என்கவும்,அப்படியா நல்ல விஷயம் தான்..

ஆனால் அந்த வீட்டில் தான் பத்து பன்னிரெண்டு ரூம் இருக்கு செழியா, அப்புறம் எதுக்கு???

அது வந்து மாமா...நான் கேக்குற போல ஒரு ரூம் வேணும் அதான் என்க சரி சரி லோடு இறக்க சொல்கின்றேன்?களியும் ஆட்டுக் கறி குழம்பும் காலையிலே ஆக்கிருக்காங்க வா அப்பு சாப்பிடலாமென்க,இப்பதான் மாமா சாப்பிட்டு வந்தேன் என்றான்.

சோழியும் குடுமியம் சும்மா ஆடாதாச்சே.?

சம்பந்தமே இல்லாம எதுக்கு இப்ப மாடியில் ஒத்த ரூமு வேணும்னு உன் பேரன் கேக்குறான் சுமதி என்று தனது மகள் வயிற்று பேரனை பார்க்க, செத்தாண்டா சிவனாண்டி என்று கண்ணன் முணுமுணுப்பது செழியனின காதில் நன்கு விழுந்தது.

அதன் பின்னர் ஒரு நல்ல நாளில் மொட்டை மாடியில் வாஸ்துபடி பூஜை பண்ணியவர்கள் வேலையை ஆரம்பித்தனர். .

நாட்களும் ஓட ஆரம்பித்து.

தினமும் தன்னவளுக்கு மெசேஜ் இல்லை கால் பண்ண வேண்டும் என்று மனம் தவித்தாலும் அவளை தொந்தரவு பண்ண மனம் இடம் தரவில்லை.

படிக்கும் பெண்ணின் மனதை கெடுக்க வேண்டாம் என்று ஒரு புறம் அவன் மனசாட்சி சொல்லியது.

ஆனால் காதல் கொண்ட மனமோ அவளிடம் பேச வேண்டும் என்று தவிப்பை கூட்டும் போதெல்லாம் மொட்டை மாடியில் கால் வலிக்க நடப்பதை வழக்கப்படுத்திக் கொண்டான்..

அவள் படிப்பை முடிக்கட்டும் அமைதியாக காத்திருந்தவனுக்கு ஆனி திருமஞ்ச திருவிழா வரப்போவது தெரிந்தது.

இன்னும் நான்கு நாட்களில் சிதம்பரத்தில் திருவிழா ....

இந்த இடைப்பட்ட நேரத்தில் பாம்பேயில் இருக்கும் புது மாலுக்கு அவர்கள் ஃபேக்டீரியிலிருந்து மசாலா பொருட்களை அனுப்ப இருப்பதால் சூப்பர்வைசரான செழியனும் போக வேண்டியதாக இருந்தது.

மனதிற்குள் ஒரு பிளானை போட்டு முடித்தவன் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு வேலை விஷயமாக போவதாக அங்கிருந்து பாம்பேக்கு வந்தான்.

பிரஷாகி விட்டு அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று வெற்றி கபிலனோடு கேஸ் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது காலிங்பெல் சத்தம் கேட்க, லைன்ல இருங்கடா யாரோ பெல் அடிக்கிறாங்க பார்த்துட்டு வரேன் என்றவன் கதவை திறந்து பார்க்க அங்கே ஜேம்ஸ் நின்று கொண்டிருந்தார்.

செழியன் தானே என்கவும் ஆமாம் என்றவனிடம்,நான் ஜேம்ஸ் ஆர்.ஜெ.மால் ஓனர்...ஒன் மினிட் சார் என்றவன் சரிடா அப்புறம் பேசுறேன் என்று அழைப்பு துண்டித்தவன் உள்ளே வாங்க சார் என்று அழைத்து போனவன் அங்கிருந்த சேரை காட்டி உட்கார சொன்னான்.

ஷமீரா நினைவுகள்:

மறுநாள் காலேஜ் வந்தவளுக்கு அந்த தெற்கு வீதியை பார்க்கும்போது முதல் நாள் சாயந்திரம் அந்த இடத்தில் தானே அவனை சந்தித்து பேசினோம் என்ற நினைவுகள் வந்தது.

வழமைப்போல் கல்லூரிக்குப் போவதும் படிப்பதுமாக இருந்தாலும் செழியனிடமிருந்து குறுஞ்செய்தியாவது வராதா என்று அவளும் ஏங்க தொடங்கினாள்.

மனமோ ஒரு பக்கம் இது நடக்காது உனது அப்பாவுக்கு தெரிஞ்சால் பெரிய பிரச்சினையாகும்.அவன் வேறு மதம் என்பது நல்லா தெரியுது உங்க அப்பாவோ இதற்கு நிச்சயமாக சம்மதிக்க மாட்டாரென்றது.

ஆயிரம் தடுப்பணைகள் மனதிற்கு போட்டாலும் ஏதோ ஒரு மூலையில் செழியனின் எண்ணங்கள் அவளை தொந்தரவு பண்ணாமல் இருக்கவில்லை.

வேண்டாம் என்று விலகி வந்தவளே ரிங்டோன் சத்தமோ இல்ல மெசேஜ் வரும் பீப் சவுண்ட் கேட்டாலும் செழியனாக இருக்க மாட்டானா என்று போனை எடுத்து பார்ப்பதை மட்டும் அவளால் தடுக்க முடியவில்லை.

நாட்களும் அதன் போக்கில் நகர்ந்து செல்ல இதோ ஆறு மாதம் முடிந்து விட்டது.இந்த ஆறு மாதத்தில் செழியனின் நினைவுகளோ ஷமீராவின் மனம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது..

ஒருமுறையாவது அவனிடம் பேச மாட்டோமா அவன் குரலை கேட்க மாட்டோமா என்று பெண்ணவள் தவித்துக் கொண்டிருந்தாள்.

வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும் பெரிய திருவிழாவில் ஒன்றான ஆனி திருமஞ்சன திருவிழாவும் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இந்த வருட ஆருத்ர தரிசனத்தில் தானே அவனை பார்த்தோம் என்று நினைத்தவளுக்கு அதற்குள் ஆறு மாதம் சென்று விட்டதா என்ற வியப்பு வராமலில்லை

அதோ இதோ என்று திருவிழா நாளும் வந்தது.. மகியோ ஆஃபீஸ் விஷயமாக டெல்லிக்கு போயிருப்பதால் எஸ்தரும் ராஜி வீட்டினரோடு திருவிழா பார்க்க போக அனுமதி தந்தார்.

சிறிது நிமிடத்தில் கதவைத் திறந்து வெளியே வந்த மகளைப் பார்த்து
ஆச்சரியப்பட்டார்.என்றைக்கும்.இல்லாத திருநாளாக,புடவை கட்டிட்டு வந்திருப்பதை கண்டு ஷமீ நீயாடி இது???

ஆமாமா நானே தான்...எப்படி இருக்கு மா???

ரொம்ப அழகா இருக்க டி.என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.எத்தனை முறை உன்னை புடவை கட்டிட்டு என் கூட வர சொல்லிருக்கேன் அப்பலாம் கட்டாதவள் இப்போ உன் பிரண்டு கூட போறேன்னு மட்டும் கட்டுறியே என்கவும் ஏமா இப்படி என்று சிரித்தாள்.

அப்பொழுது காலிங் பெல் சத்தம் கேட்கவும் ஆட்டோ தான் வந்திருச்சு போல உன்னை ராஜி வீட்ல கொண்டுவந்து விட சொல்லிருக்கேன் வரும்போது ராஜி அப்பா கொண்டு வந்து நம்ம வீட்டுல விட்டுருவாரு ஷமீ.

சப்போஸ் லேட் ஆகுற போல இருந்தா நீ ராஜி வீட்ல இரு நாளைக்கு காலையில வரலாம் என்கவும் சரி மா என்றவள் நீ பத்திரமாக இருப்பாயா???

அதைக் கேட்டு சிரித்தவர் எனக்கு என்ன பயம்?அதுலாம் நான் இருப்பேன்.
நீ நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா.. இந்தா,உனக்கு என்ன தேவையோ வாங்கிக்க என்று பணத்தை நீட்ட அதை வாங்கிக் கொண்டவள் போயிட்டு வரேன் என்றவாறு வெளியே போக அங்கே தெரிந்த ஆட்டோகரார் தான் நின்றார்.

அண்ணா கொண்டு போய் பத்திரமா விட்டுருங்க எனவும் சரி மா.நீ கவலைப்படாத,மருமகளை நான் போய் விட்டுடறேன் என்றவர் அதேபோல் அவளை அழைத்துக் கொண்டு ராஜியின் வீட்டில் இறக்கி விட, அங்கிருந்து அவர்கள் நால்வரும் காரில் ஏறி சிதம்பரத்தை நோக்கிச் சென்றனர்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top