Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 425
- Thread Author
- #1
செழியன் நினைவுகள்:
அவள் வீட்டிற்கு செல்லும் வழி மெயின் ரோடு என்பதால் ஆட்களின் நடமாட்டம் இருக்கவும் மற்றவர்களுக்கு சந்தேகம் வராதவாறு செழியனும் அவளை பின்தொடர்ந்து வந்தவன் அவள் வலது பக்கம் திரும்பி தெருவுக்குள் நுழைவதை பார்த்து சற்று தள்ளியே நின்றான்.
அங்கிருந்து போனவள் முதலாவதாக இருக்கும் மாடி வீட்டின் இரும்பு கதவை திறந்து நுழைவதை பார்த்தவன் ஓஓஓ இது தான் மாமனார் வீடா...
ஆள் பெரிய இடம் போலவே...???
சரி எப்படியோ இவள் தான் என் பொண்டாட்டி என்றவன் வந்த வழியில் திரும்பி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவனோ சிதம்பரம் செல்லும் பஸ்ஸில் ஏறி உட்காரவும் அவன் நண்பர்களிடமிருந்து ஏராளமான அழைப்பு வந்து கொண்டேயிருந்தது.
அட்டென்ட் பண்ணினால் ரொசரொசமாக நண்பர்கள் திட்டுவார்களென்று தெரியும் என்பதால் சிறுது நிமிடங்கள் சென்று வெற்றியின் அழைப்பை ஏற்றவன் சொல்லு மச்சி என்க...
அங்கு சரமாரியாக வாய்க்க வந்தபடி எல்லாரும் திட்ட உன் தங்கச்சியை பாலோ பண்ணி வந்தேன்டா என்றதுமே டேய் சீரியஸா நீ அந்த விஷயத்தில் இறங்கிட்டியா என்று அதிர்ந்து போய் நண்பர்கள் கேட்க...
ஆமா டா. அவள் கிட்டயும் சொல்லிட்டேன்.என்றைக்கு இருந்தாலும் என் பொண்டாட்டி அவ தான் ஊர் மட்டும் தான் தெரியுது இன்னும் பேரு தெரியலை.
இப்பதான் பஸ் ஏறியிருக்கேன் இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவேன் சாப்பாடு வாங்கி வைங்க என்று சொல்லி அழைப்பை துண்டித்து சீட்டில் சாய்ந்து கண்ணை மூடியவனுக்கு முதல் நாள் பார்த்தவளின் முகமே மன அடுக்கில் வந்து சென்றது.
எந்த பொண்ணு மேலும் வராது அந்த உணர்வு யாரென்று தெரியாத ஒருத்தியை பார்த்த உடனே வந்ததை நினைத்து அவனுக்கே அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது...
பின்னர் லாட்ஜிக்கு வர நண்பர்களோ அவனை கொலைவெறியில் பார்த்தனர்.
டேய் செழியா இவனுங்க கையில் சிக்குன உன்னை நார்நாராக கிழிச்சிடுவானுங்கள்.சூதானம் டா என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன் மச்சான் தொண்டை ரொம்ப காயுது கூலிங்கா தண்ணி வாங்கி வாடா என்றவாறு ரெஸ்ட் ரூமிற்குள் டவலோடு நுழைந்து கொள்ள...
நாதாரி பயலே.. வெளியே வாடா உன் சங்கிலே மிதிக்கிறேனென்ற அன்பு, நான் போய் வாங்கிட்டு வரேன்.நான் வந்த பிறகு தான் டா சம்பவம் என்க அவர்களும் டன் என்று கையை நீட்டினர்.
சிறிது நிமிடத்தில் பிரஷ் ஆகி வெளியே வந்த செழியன் போட்டிருந்த துணிகளை அங்கிருந்த சேரின் மேல் வைத்தவன் இன்னொரு டவலை எடுத்து தலையை துவட்ட,நண்பர்களோ அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் பார்ப்பது கண்ணாடி வழியாக அவனுக்கும் தெரிந்தது என்னமோ பிளான் பண்ணிட்டானுங்க..
சரி சமாளிப்போம் என்று சொல்லிக் கொள்ள, டேய் ஒழுங்கு மரியாதையா சொல்லு, யார் அந்த பொண்ணு???
இத்தனை வருஷமா சிதம்பரம் பக்கமே திரும்பாதவன் இப்ப மட்டும் என்ன புதுசா ஆருத்ர தரிசன பாக்கணும்னு ஒத்தகாலில் நின்று எங்களை இழுத்துட்டு வந்த? என்று இன்னொரு நண்பன் கேட்க சுத்தம் என்று தலையில் கைய வைத்தவன் சத்தியமா அவளை எனக்கு தெரியாதுடா.
நேத்து தான் டா கோயில்ல பார்த்தேன்.என்னமோ தெரியலை ஆயுசு முழுவதும் அவ கூட வாழனும்னு மனசு அடிச்சிக்கிது.இதுவரை எந்த புள்ளையையாவது இப்படி சொல்லிருக்கேனா சொல்லுங்க டா?
செழியனின் வார்த்தைகளை கேட்டவனுங்கள் அப்போ அந்த புள்ளை தான் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டியா டா என்கும் போது கதவை திறந்து உள்ளே வந்த அன்பு,இந்தா ராசா...
நாயா பேயா அலைஞ்சிட்டு வந்திருக்க இதை குடிச்சி உன் சூட்டை குறைடா என்றவாறு பாட்டிலை தூக்கி செழியன் மேல் எறிய,அதை கேட்ச் பிடித்தவன் காதலிக்கிறது அவ்வளவு பெரிய குற்றமா டா?
ஊர் உலகத்தில் யாரும் பண்ணாததையா நான் பண்ணிட்டேனென்றவாறு நண்பர்களை பார்த்து முறைத்தான்.
ஷமீரா நினைவுகள்:
இவனா என்ற அதிர்ந்தவள் மெசேஜை பார்க்காமல் கவனத்தை படிப்பில் செலுத்த முயல,மெசேஜோ தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் பீப் சவுண்டில் கடுப்பானவள் ஓபன் பண்ண..
ஹலோ பொண்டாட்டி...
நல்லபடியா வீட்டுக்கு போய் சேர்ந்துட்ட சந்தோசம் டி.அந்த பஸ்ட் வீடு தான் என் மாமனார் வீடு போல..? என்று குடும்பத்தில் யாரெல்லாம் என்று செழியனும் கேள்விகளை கேட்டு அனுப்பியிருக்க..
இவனுக்கு எப்படி நம்ம வீடு தெரிஞ்சது என்று அதிர்ந்து போனவள் வேகமாக எழுந்து பால்கனி கதவை திறந்து சுற்றி பார்க்க அங்கு அவன் இருப்பது போல் தெரியவில்லை. ..
நொடிகள் சென்று என்னடி என்னைதான் தேடுற போல என்ற மெசேஜ் வரவும் அதில் மேலும் ஷாக்கானவள்,இப்பொழுது அந்த நம்பருக்கு பதில் அனுப்ப தொடங்கினாள்..
ஹலோ இடியட்..
ஹூ ஆர் யூ மேன்?
எதுக்கு தேவை இல்லாம எனக்கு மெசேஜ் அனுப்பிட்டு இருக்கீங்க?
மிஸ்டர் இளஞ்செழியன் எங்க வீடு உனக்கு எப்படி தெரியும்?
"ஹா ஹா ஹா மாட்டினியாடி என் பிஸ்தா"
என்னை தான் உனக்கு தெரியாதுனு சொன்ன,பிறகு என் பெயர் எப்படி தெரியும் டி என்றான்.
அட ஆண்டவரே...
மண்ட மேல இருக்கிற கொண்டையை மறந்துட்ட கதையாகிடுச்சே ஷமீரா என்று தனக்குள்ளே முணவிக் கொண்டவள் இங்க பாருங்க நீங்க தப்பா நினைச்சுட்டு இருக்கீங்க...
எனக்கு இந்த காதல் கீதலெல்லாம் சுத்தமாக பிடிக்காது.தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதீங்க என்று ஷமீரா அனுப்ப..
ஏய்...நான் உன்னை காதலிக்கிறேன்னு எங்கடி சொன்னேன்?
அப்போ உனக்கு என் மேல காதல் வந்துடுச்சு போல என்று அந்த பக்கம் இருந்து செழியன் பதில் அனுப்ப அய்யோ அய்யோ என தனது தலையில் அடித்துக் கொண்டாள்.
என்னோட பேரு கூட உங்களுக்கு தெரியாது என்ன பத்தி எந்த ஒரு பேக்ரவுண்டும் தெரியாம இது என்ன பைத்தியக்காரத்தனமாக பண்ணிட்டு இருக்கீங்க?
இது என்ன சினிமாவா?
ரியல் லைஃப்...கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்குங்க என்கவும்,மனசு கேட்க மாட்டேங்குது நான் என்னடி பண்றது?
உன்ன விட அழகியெல்லாம் பார்த்தவன் டி.
உன்னை எவன் டி என் கண்ணு முன்னாடி வர சொன்னது என்று அந்த பக்கமிருந்து செழியன் பொரிந்து தள்ள..அதைக் கேட்ட ஷமீராவுக்கு ஆத்திரம் வர,அப்ப அவளுங்க பின்னாடியே போக வேண்டியது தானே எதுக்கு என்ன ஃபாலோ பண்றீங்க என்க..
ஓஹோ என் பொண்டாட்டிக்கு பொசசிவ்னஸ் வந்திருச்சாச்சே உன்னை தவிர யாரையும் ஃபாலோ பண்றது கிடையாது இனிமே என் முழு டார்கெட்டும் நீதான் டி..
"நான் ஒன்னும் ரோடு சைடு ரோமியோ இல்லை டி"
நீ தான் என் வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன்.இப்ப என்னதான் பண்ண சொல்ற சொல்லு பார்க்கலாம்?
ஓஓஓஓ...
நான் சொல்வதை செய்றிங்களா???
ஹம் டி சொல் இப்பவே உன் கழுத்தில் தாலி கட்டனுமா நான் ரெடி தான் என்றான்...
அதை படித்தவளுக்கு கண்ணை கட்டியது.நான் எந்த டிபார்ட்மென்ட்ல படிக்கிறேன் என்று கரெக்டா கண்டு பிடிச்சு நாளைக்கு வாங்க.. அப்போ நீங்க சொல்ற விஷயம் உண்மைன்னு நான் நம்புறேன் என்க..
அதை படித்தவன் அப்படியா சரி..அப்படி நான் வந்துட்டேன் என்றால் அதன் பிறகு உன் வாழ்க்கையில் என் முடிவு தான் ஓகே வா???நீ பேச்சு மாறக்கூடாது இதுக்கு சரி சொல்...
ஓகே டன்.. அவ்வளவு பெரிய யுனிவர்சிட்டியில் எங்கே நம்மளை கண்டுபிடிக்க போறான் என்ற மிதப்பில் ஷமீராவும் அதற்கு ஒத்துக்கொண்டாள்.
ஓகே டி செல்லம்.அப்படி நான் வந்து உன்னை பார்த்துட்டேன் அந்த நிமிஷத்தில் இருந்து நீ எனக்கு சொந்தமானவள்.அப்படி அன்றைய பொழுது நான் உன்னை கண்டுபிடிக்க முடியலைனா அதன் பிறகு உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன் டி.
ஆஹான்...நாளைக்கு என்ன நடக்குமென்று பார்க்கலாம் பாய் என்று சொல்லி போனை வைத்தவளுக்கு அதன் பிறகு படிக்க தோன்றவில்லை.
கண்ணை மூடிப் படுத்தவளுக்கு அவன் நினைவாகவே இருக்கவும் ஐயோ கடவுளே நேத்து தான் பார்த்தேன்.இப்படி என்னை பாடப் படுத்துறியே டா என்று புலம்பிக் கொண்டவள் ஒரு வழியாக தூங்கினாள்.
விடியலும் வந்தது....
இன்று காலை எட்டு மணிக்கு கம்ப்யூட்டர் லேப் என்பதால் வேகவேகமாக காலேஜிற்கு தயாரானவளுக்கு மதிய உணவை பேக் பண்ணிய எஸ்தர் மகளின் பேகில் வைக்க சரி மா பாய் என்றவாறு வெளியே சென்றாள்.
கால் மணி நேர நடை பயணத்தில் பஸ் ஸ்டேண்டிற்கு வர பஸ்ஸும் அங்கு தயாராக இருக்க அதில் ஏறி உட்கார்ந்தவள் ராஜிக்கு மெசேஜ் பண்ண அவளும் வந்துட்டு இருப்பதாக சொன்னாள்.
அதே போல பஸ் எடுக்கும் நேரத்தில் ராஜியும் வர அவளுக்கும் சீட் பிடித்திருக்க அதில் உட்கார்ந்தவள் இந்த 8 மணி லேப் வந்தாலே கடுப்பா வருது டி.நல்லா தூக்கம் வருது பாரு டி.அறை தூக்கத்தில் எழுந்து குளிச்சு கிளம்பி ஓடிவரோம்.எவன் தான் இந்த படிப்பை கண்டுபிடித்தானோ என்று ராஜி புலம்ப,அதைக் கேட்டவளோ வழக்கம்போல் அமைதியாக சிரித்தாள்.
பேசிக்கொண்டே இருவரும் சிதம்பரம் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.பஸ் ஸ்டாப்பில் இருந்து கல்லூரிக்கு 10 நிமிடம் நடந்து போகும் தூரம் தான். லேப் இருக்கும் பிளாக்கை நோக்கி செல்லும் போது முதல் நாள் இரவு இளஞ்செழியனிடம் சொன்ன விஷயம் நினைவுக்கு வந்தது.
பைத்தியக்காரன் போல என்னை தேடி இன்னைக்கு நல்லா சுத்த போரடா..ஏமாந்து போ..இனிமே என் வாழ்க்கையில் நீ வராதே என்று சொன்னாலும் மனதில் ஓரம் சுருக்கென்ற வலி வந்தது.
முறைமாமன் பாபு மேல் வராது அந்த உணர்வு யார் என்று தெரியாதவன் ஒருவனை நேருக்கு நேராக பார்த்த அந்த நிமிடத்தில் அவள் மனதிற்குள் அவனால் சலனம் வந்தது என்பதோ மறுக்க முடியாத உண்மை.
தந்தையின் குணம் தெரிந்தவளோ இதுபோல் ஆசைகளை மனதிற்கு வளர்க்க கூடாது என்பதற்காக தான் பள்ளிக்கூடத்தில் இருந்தே தன்னை ஒரு கூட்டிற்குள் அடைத்துக் கொண்டு, அதற்கு ஏற்ற போல வாழளானாள்.