• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
421
ஷமீரா நினைவுகள்:

அதன் பின்னர் ஒரு வாரம் வழக்கமாய் காலேஜிற்கு போயிட்டு வந்தவள். அன்று வெள்ளிக்கிழமை ஆருத்ரா தரிசனத்திற்காக உள்ளூர் பொது விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தவளோ தனது அம்மாவை அழைத்துக் கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்றாள்.

அங்கு சித்தப்பா பிள்ளைகளோடு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது எஸ்தரின் போனுக்கு கால் வர,ஷமீ உங்க அப்பா தாண்டி பண்றாரு என்றபடி அட்டென்ட் பண்ணியவர் ம்ம் சொல்லுங்க...

அந்த பக்கம் இருந்த மதி ஏய் எங்க தான் போய் தொலைஞ்சீங்க ஆத்தாளும் மகளும்?மனுஷன் வீட்ல இல்லனா இப்படித்தான் ஊர் மேய்விங்களா?

அய்யோஓஓஓ...

எங்க சித்தி வீட்டுல தாங்க இருக்குறோம்.ஷமீராவுக்கு இன்னைக்கு காலேஜ் லீவு.அதான் சித்தியை பாத்துட்டு வரலாம்னு நானும் அவளும் வந்தோம்...

எஸ்தர் சொன்னதை கேட்ட மகி அப்படியா...சரி அங்கேயே இரு நான் வரேன் என்று அழைப்பை துண்டித்தார்.

சிறிது நிமிடத்தில் உள்ளே வந்த மகி அங்கிருந்து தனது அத்தையை பார்த்து நலம் விசாரித்தவர் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

தனது தந்தையை பார்த்த உடனே ரூமிற்குள் போய் கதவை தாழ்ப்பாள் போட்டுக் கொண்ட ஷமீராவிற்கு ஜெயில் வாழ்க்கை தான் ஞாபகம் வந்தது.

வேகவேகமாக மதிய சமையலை செய்து கொண்டிருந்த எஸ்தர் டீ போட்டு கொண்டு போய் கணவருக்கு கொடுத்தவர் வரேன்னு ஒரு வார்த்தை சொல்லவே இல்லைங்களே??

ஏண்டி நான் வீட்டுக்கு வர கூடாதா?

உன்கிட்ட சொல்லிட்டு தான் வரணுமா?

ஏன் வேற எவனையாவது எதிர் பார்த்து காத்துக் கொண்டிருந்தியோ என்று வார்த்தைகளை சிதற விட,கேட்ட எஸ்தருக்கு உடம்பெல்லாம் பற்றி எரிந்தது.


சிறிது நேரம் ரூமில் படுத்திருந்த ஷமீரா பின்னர் கதவைத் திறந்து பொறுமையாக எட்டிப் பார்க்க ஹாலில் டிவி ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஓஓஓ அவர் தான் டிவி பார்க்கிறார் போல என்று நினைத்தவள் கிச்சனுக்குள் சென்று எதாவது பண்ணனுமா மா?

"ஆமா ஷமீ" என்கவும் தாய்க்கு உதவி செய்தாள்.

ஷமீ நீ சாப்பிட்டுக்க என்று மகளுக்கு அங்கேயே தட்டில் போட்டு கொடுக்க, அவளும் வேகமாக சாப்பிட்டுவிட்டு தனது ரூமிற்குள் போய் அடைந்து கொண்டாள்.

கணவருக்கான உணவை எடுத்துப் போய் டைனிங் டேபிள் வைக்க டிவி பார்த்துக் கொண்டே சாப்பிட்ட மகி,இன்னும் கொஞ்ச நேரம் கழித்து நீயும் உன் மகளும் கிளம்புங்க சிதம்பரம் வரைக்கும் போயிட்டு வரலாம்..

கிறிஸ்துமஸ்-நியூ இயர் வந்தது டிரஸ் வாங்கி கொடுக்க முடியலை.வேலை விஷயமா நான் வெளியில போயிட்டேனேனு வாய் கூசாமல் பொய் சொல்ல...

மகியின் மனசாட்சியோ அடப்பாவி திருச்சில தானடா சுத்திகிட்டு இருந்த நீ எங்கடா வெளியூருக்கு போன என்றது...

சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்த எஸ்தர் மகளின் ரூம் கதவைத் தட்ட சிறிது நிமிடத்தில் கதவை திறந்தவளிடம்,சிதம்பரத்துக்கு போகணும் உங்க அப்பா கூப்பிடுறார் டி.

நான் எதுக்கு மா?

அதான் தினமும் போயிட்டு வரேனே என்று தனது தாய்க்கு மட்டும் காதில் விழும் படி சொல்ல...

அய்யோ ஷமீஈஈஈ... கிளம்பு டி, இல்லன்னா இதுக்கும் அந்த மனுஷன் கத்துவார்.டிரஸ் எடுக்க கூப்பிடுறார் டி.ரெடியாகு போ..

அதைக் கேட்டு முறைத்தவள் கிறிஸ்துமஸ்- நியூ இயர் முடிஞ்சி இப்ப பொங்கலே வரப்போகுது இப்ப எதுக்கு உன் புருஷனுக்கு இந்த டிராமா?என்னமோ பண்ணி தொலை என்றவாறு உள்ளே போனவள் வேண்டா வெறுப்புமாக தயாராகினாள்.

வாழ்க்கையில் என்னைக்கு தான் எனக்கு சுதந்திரம் கிடைக்குமோ அது அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.

எதுக்கு தான் ஆண்டவரே என்னை இந்த உலகத்துல படைச்சீங்க என்று புலம்பியபடி தயாராகியவள் கண்ணாடியில் ஒரு முறை தன்னை பார்த்துக் கொண்டிருக்கும்போது ராஜி கோவிலுக்கு கூப்பிட்ட விஷயம் ஞாபகம் வர,ஒருவேளை போயிருப்பாளா என்று யோசனை செய்தபடியே மொபைல் எடுத்து ராஜிக்கு கால் பண்ணினாள்.

இரண்டாவது ரிங்கிள் அட்டென்ட் பண்ணியவள் சொல்லுடி??

என்னடி பண்ணிட்டிருக்க???

கோயிலுக்கு தாண்டி கிளம்பிட்டு இருக்கேன் என்க..அப்படியா நானும் அங்கு தாண்டி வரேன் என்று ஷமீரா சொல்ல, என்னடி சொல்ற என்று அந்த பக்கம் உள்ளவள் அதிர்ந்து போய் கேட்க, ஆமாடி ஹிட்லர் வந்திருக்கிறார்..

என்னன்னே தெரியல திடீர்னு சிதம்பரத்துக்கு கூப்பிடுறாரு என்கவும் அப்படியா..அப்ப ஒண்ணா போய்டலாமா?

சரி டி நான் அம்மா கிட்ட சொல்லி பார்க்கிறேன் என்றவள் போனை வைத்துவிட்டு கதவை திறந்து வெளியே போக அங்கே எஸ்தர் தலைசீவிக் கொண்டிருப்பது தெரிந்தது.

அம்மா என்றவாறு போனவள் அவரிடம் விஷயத்தை சொல்ல அப்படியா நல்லது தானே இரு அப்பாகிட்டயும் சொல்றேன் என்றவர் என்னங்க என்றவாறு அங்கிருந்த ரூம் கதவை திறந்து உள்ளே போய் விஷயத்தை சொல்ல...

சிறிது நொடிகளில் வெளியே வந்தவர் ராஜி கிட்ட ரெடியா இருக்க சொல்லு ஷமீ.போகும்போது கூட்டிட்டு போலாம்னு சொல்லிட்டாரு.

சரி மா என்றவள் தனது தோழிக்கும் விஷயத்தை சொல்லிவிட்டாள்.

பின்னர் தயாராகி வெளியே வந்தவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு காரில் போகும் வழியில் ராஜீ வீட்டினரையும் காரில் ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி சென்றனர்.

அப்புறம் மகி வேலையெல்லாம் எப்படி போகுது என்று ராஜிவின் அப்பா வேதாச்சலம் கேட்க,அட ஏன் வேதா அதை கேட்கிற உசுரு போகுதுடா. பேசாமல் நாலு மாட்டை வாங்கி மேய்ச்சிட்டு வீட்டிலேயே நிம்மதியா இருக்கலாம் போல டா...

அவர்கள் இருவரும் அவர்கள் இருவரின் வேலையை பற்றி பேசிக்கொண்டே வரேன் தாய்மார்கள் இருவரும் அவர்கள் குடும்ப கதையையும், ஷமீ-ராஜி இருவரும் பின்னாடி இருக்கும் சீட்டில் உட்கார்ந்து கொண்டவளுங்கள் வேடிக்கை பார்த்தபடி வந்தனர்.

அரை மணி நேர பயணத்தில் சிதம்பரத்துக்கு வந்து சேர்ந்தனர் சரி நீங்க இருங்க நாங்க பர்சேஸ் முடிச்சுட்டு வரும்போது உங்களை பிக்கப் பண்ணிக்கிறோம் என்று மகி சொல்லவும் ராஜியோ தனது தோழியை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏன் ராஜி நீயும் வாயேன் மா.ஷமீக்கு டிரஸ் எடுத்த பிறகு உங்க ரெண்டு பேரையும் இங்க கொண்டு வந்து விடுறேன்.நீங்க முடிச்சிட்டு வாங்க பிறகு ஒன்னாவே நம்ப ஊருக்கு போயிடலாம் என்று மகி சொல்லவும், ராஜி நீயும் ஷமீயும் இங்கு வந்ததும் கால் பண்ணுங்க நானும் அம்மாவும் உள்ளே போறோமென்ற வேதாச்சலம் சொல்ல,சரிங்கப்பா என்றவள் காரில் உட்கார்ந்து கொண்டாள்.

பின்னர் அங்கிருக்கும் பிரபலமான ஜவுளி கடைக்கு அழைத்துப் போனவர் எஸ்தர்- ஷமீராவுக்கு தேவையான துணியை வாங்கி கொடுத்துவிட்டு ராஜீ உனக்கு தேவையானதை வாங்கிக்கோ என்க,எனக்கு ஒன்னும் வேண்டாம்ப்பா. பொங்கலுக்காக நேத்து தான் பர்சேசிங் பண்ணினோமென்றாள்.

அப்படியா சரி வாங்க என்று அவர்களை அழைத்துக் கொண்டு வந்தவர் கோயில் பக்கம் ஒரே கூட்டமாக இருப்பதால் கார் அந்த பக்கம் போகாது என்பதால் சற்று தள்ளியே காரை நிறுத்திய மகி நீங்க ரெண்டு பேரும் போங்க.

முடிச்சிட்டு போன் பண்ணுங்க என்கவும் உள்ளே இருக்கும் சந்தோஷத்தை வெளியே காட்டிக்காத ஷமீ எப்போதும் போல் முகத்தை வைத்துக் கொண்டு ராஜியோடு இறங்கி சென்றாள்..

செழியன் நினைவுகள்:

ஏய் தடிமாடுகளா மணி நாலாக போகுது. எந்திரிச்சு குளிச்சிட்டு வாங்கடா..வந்தது கோயிலுக்கு ஆனா நாலு சென பன்னியும் தூங்க வந்த போல இங்க வந்து தூங்குறீங்க எந்திரிங்கடா என்று நால்வரின் முதுகிலும் ஓங்கி ஒரு அடியை செழியன் வைக்க,அதில் பதறி அடித்து எழுந்தவர்கள் ஏன் டா மாப்பி வாயால சொன்னா நாங்களே எந்திரிக்க மாட்டோமா என்க..செழியனோ அவர்களை முறைத்து பார்த்தான்.

சும்மா மச்சி சோக்கு சோக்கு என்றவனுங்கள் குளித்து தயாராக, பின்னர் ஏழு பேரும் அங்கிருந்து கோயிலுக்கு சென்றனர்.

எங்கு பாத்தாலும் கூட்டமாகவே இருந்தது..

ஒரு வழியாக அந்த கூட்டத்தில் புகுந்து உள்ளே போனவர்கள் தரிசனம் பண்ணுவதற்காக காத்திருக்கும் போது தற்செயலாக வலது பக்கம் திரும்பிய செழியனோ அங்கே வருபவளை பார்த்து அசந்து போனான்

அவளிடமிருந்து அவனால் பார்வையை விளக்க முடியவில்லை,அவள் கூட வரும் தோழியிடம் சிரித்து பேசிக்கொண்டு வருவதை பார்த்தவனுக்கு இதயத் துடிப்புகள் வேகமாக எகரி துடித்தது.

இதுவரை எந்த பெண்ணையும் பார்த்து தோன்றாத உணர்வுகள் எல்லாம் அவளை பார்த்த மாத்திறத்திலேயே வர சுற்றத்தை மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்,சாமி கும்பிடுவதை விட்டுவிட்டு இதோ வந்துடுறேன் நீங்க கும்பிட்டு வாங்கடா என்று சொல்லிக்கொண்டு நண்பர்கள் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக கூட்டத்தில் இருந்து விலகி அவளை பின் தொடர்ந்து சென்றான்..

இவன் தேடி வந்த பெண்ணோ அவள் தோழியோடு முன்னே போனவள் அங்கிருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே வரும்போது வேகமாக கூட்டத்தை விலக்கி அவர்களின் அருகில் வந்தான்.

தோழியோடு இருந்தவளோ நீ இங்க பார்த்துக் கொண்டிரு நான் அந்த கடையில் பார்க்கிறேன் என்று பக்கத்து கடைக்கு செல்ல அவள் பின்னாடியே வந்தவன் எஸ்கியூஸ் மி என்க,அதில் திரும்பியவளின் நீண்ட கூந்தலோ அவன் முகத்தில் பட கண்ணை மூடி ரசித்தான்..

இதைப் பார்த்தவளோ இவன் என்ன பைத்தியமா என்று நினைத்துக்கொண்டு கடையினுள்ளே செல்ல பின்னர் சுதாரித்த செழியன் வேகமாக அவளை தேட கடையினுள் இருப்பது தெரிந்தது..

சுற்றி பார்த்துக் கொண்டே போனவன் அவளின் அருகில் சென்று எஸ் கியூஸ் மீ நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா என்க..

திடீரென்று காதின் அருகில் கேட்ட விஷயத்தில் அதிர்ந்து போய் திரும்பியவள் அங்கிருந்தவன் மேலே இடித்து நின்றாள்..

என்னோட பேரு இளஞ்செழியன் ஊர் வனிச்சூர். நாளைக்கு காலையில உனக்காக இந்த கோயிலோட தெற்கு வாசல் பக்கம் காத்திருப்பேன். நீ வரணும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்று அவள் கண்களை பார்த்து சொல்ல..

இவ்வளவு நேரம் அவன் பேசியதை கேட்டு அதிர்வில் இருந்தவளோ எதுவும் சொல்லாமல் அங்கிருந்த தோழியை தேடி சென்று விட,செழியனும் அவளை பாலோ பண்ணிக்கொண்டு தான் வந்தான்.

இதற்கு நடுவில் அவனது நண்பர்களும் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இவனை தேடி வந்தனர்..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
421
ஏனென்று தெரியவில்லை அவள் பின்னாடியே போக சொல்லி மனம் அடம்பிடிக்க செழியனும் தன்னை மறந்து முன்னால் போகுபவளை தொடர்ந்து சென்றான்.

அவளோ திரும்பி திரும்பி பார்த்துச் செல்ல தனது பார்வையை மட்டும் செழியன் விலக்கவில்லை..

முன்னால் போனவளுக்கோ திக் திக்கென்றது.எங்கிருந்தாவது தனது அப்பாவின் கண்ணில் இது பட்டு,வீண் பிரச்சனை வருமோ என்ற எண்ணம் வரவும் தோழியின் கையை இறுக்கமாக பிடிக்க,என்னடி ஆச்சு என்றாள்.

ஒன்னும் இல்லை டி. ஜூஸ் குடிக்கலாம் என்றவாறு அங்கிருந்த கடைக்குள் நுழைந்தாள்.அந்த கடைக்குள் போனவனோ அங்கிருந்தவளை ரசனையோடு பார்க்க,அவளுக்கோ கொஞ்சம் பயம் வந்தது. .

கீழ குனிந்து உட்கார்ந்திருந்தவள் பின்னர் கேஷுவலாக திரும்புவது போல நிமிர்ந்து பார்க்க,இவளின் எதிரில் உட்கார்ந்து கொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

இவன் என்ன முன்ன பின்ன பொண்ணுங்களை பார்த்ததில்லையா?
என்னமோ இப்படி குறு குறுனு பாக்குறானே என மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.

அப்போது அவனின் செல் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்கவும் பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து பார்த்தவன் அங்கிருந்து எழுந்து போய் அட்டென்ட் பண்ணி அவளை பார்த்துக் கொண்டுதான் பேசிக் கொண்டிருந்தான்.

அந்த பக்கம் நண்பர்கள் வசைபாட,இங்க தாண்டா ஜூஸ் கடையில் இருக்கேன் வாங்கடா என்க, சிறிது நிமிடத்தில் அங்கு வந்த நண்பர்களோ அவனை முறைக்க, ஏன் டா சாமி கும்பிட வந்திட்டு எங்கடா போன என்று கபிலன் திட்ட,தேவியோட தரிசனம் பாத்துட்டேண்டா அதனாலதான் இங்க வந்தேனென்று ஷமீராவை பார்த்தவாறு சொல்ல....

என்னடா உளறு என்று கண்ணன் கேட்க...

ஒன்னும் இல்ல மாப்பு நீ ஜூஸ குடி என்றவன் அவனுங்களுக்கும் ஆர்டர் பண்ணி குடிக்க,இவளுங்க இருவரும் அவர்களை தாண்டி வெளியேறினார்கள். .

ஒருவழியாக மீண்டும் கோயிலுக்குள் போனவன் அவன் மட்டும் சாமியை தரிசனம் பண்ணிட்டு ரூமிற்கு வர, நண்பர்களோ கொலை வெறியில் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

என்னடா ஆச்சு?

எந்த புள்ளைக்கிட்டையாவது கவுந்துட்டியா?

உன் நடவடிக்கை எல்லாம் அப்படித்தான் இருக்கு என்று கண்ணன் கேட்கவும் எப்படி மச்சி இவ்ளோ சரியா கண்டுபிடிச்ச?

ஆமாண்டா..

ஒருத்திய பார்த்தேன் டா.அப்படியே பச்சை குத்துன போல மனசுக்குள்ள பதிஞ்சிட்டாள்.நான் முடிவு பண்ணிட்டேன் டா அவதான் இந்த செழியனோட பொண்டாட்டி என்றவாறு அங்கிருந்த பெட்டில் விழ,என்னடா சொல்ற என்று நண்பர்கள் அதிர்ந்து போனார்கள்.

ஆமாடா ஊரு பேரு என்னன்னு தெரியலை? கோவில்ல பார்த்தவுடனே மனசுல வந்துட்டாள்.நாளைக்கு வர சொல்லிருக்கிறேன் டா.அவள் வருவானு ஒரு குறுட்டு நம்பிக்கை...

சரி வாங்க சாப்பிட போகலாம் என்றவாறு எழுந்தான்.மற்றவர்களோ எதுவும் சொல்லாமல் அவனோடு அங்கிருந்த ஹோட்டலுக்கு சென்று அவரவர் விரும்பியதை சாப்பிட்டு வந்து படுத்தனர்.

கண்ணை மூடி படுத்திருந்த செழியனுக்கு நாளைக்கு அவள் வருவாளா?இல்லை வரமாட்டாளா? என்பதே பெரும் கேள்வியாக மண்டைக்குள் ஓட, எப்படா விடியும் விடியும் என்று விழித்திருந்தவன் அவனுங்களுக்கு முன்பாக குளித்து தயாராகி தெற்கு கோபுர வாசலில் வந்து காத்திருந்தான்..

நேரமும் காலை போய் மதியம் போய் மாலையும் வந்ததே தவிர அவள் வந்த பாடில்லை.நண்பர்களும் எவ்வளவோ அவனிடம் பேசி பார்க்க, நீங்கள் போங்க டா.நான் வரேன் என்றான்.

ஏதோ பண்ணி தொலைடா என்றவனுங்கள் அங்கிருந்த கடையின் உள்ளே போய் உட்கார்ந்து விட்டார்கள். .

ஏன்டா உனக்கு இது நியாயமா இருக்கா?

யாருன்னு தெரியாத ஒரு பொண்ணு கிட்ட போய் திடீர்னு கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டுருக்க,அதும் இல்லாம நாளைக்கு வா பேசலாம்னு சொன்னா எப்படிடா உன்ன நம்பி வருவாள் என்று அவள் மனசாட்சி கேட்க...

அதுலாம் எனக்கு தெரியாது.

கண்டிப்பா அவள் வருவாள் என் மனசுக்கு தோணுது என்று கண்ணை மூடி தனது நெஞ்சின் மேல் கையை வைத்து உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருக்கும் போது அவனின் இதய துடிப்புகள் கொஞ்சம் வேகமாக துடிப்பது போல் தோன்றவும் வேகமாய் திரும்ப சற்று தூரத்தில் அவள் வருவது தெரிந்தது..

சுற்றி பார்த்துக் கொண்டே அவனருகில் வந்தவளை பார்த்தவன் எனக்கு தெரியும் கண்டிப்பா நீ வருவ என்க...

அவனை முறைத்து பார்த்தவள்
ஹலோ மிஸ்டர் எனக்கு உங்க மேல அப்படி எந்த ஒரு அபிப்பிராயமும் கிடையாது.காலையில் நான் பஸ்ஸில் போகும்போது உங்களை பாத்தேன்

திரும்பி போகும்போது நீங்க இதே இடத்துல நின்னுட்டு இருந்தீங்க. உங்களுக்கு வேலை வெட்டி இல்லை என்றால் எனக்கும் வேலை வெட்டி இல்லைனு நினைச்சுக்காதீங்க.

உங்க மேல எனக்கு எந்த எண்ணமும் இல்லை இனிமே இப்படி தொந்தரவு பண்ணாதீங்க.இதை சொல்லிட்டு போக தான் வந்தேனென்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு அவள் திரும்பி செல்ல..

ஏய் ஒரு நிமிஷம் நில்லு டி என்று கொஞ்சம் அதிகாரமாக சொல்ல,
அவளோ அதிர்ந்து போய் திரும்பி பார்க்கவும் வேகமாக வந்தவன் ஒழுங்கு மரியாதையாக கொஞ்சம் தள்ளி வா இல்லை இங்கு நடக்கிறதே வேற என்றான்..

அவனின் குரலைக் கேட்டு கொஞ்சம் பயம் வரவும் என்ன இப்படி எல்லாம் மிரட்டுறீங்க???

ஆமா நான் அப்படி தான்.நீயே வந்தனா நல்லது இல்லன்னா நானே உன் கைய புடிச்சு இழுத்துட்டு போவேன் எப்படி வசதி என்றவாறு மேலிருந்து கீழாக அவளை பார்க்க, இவன் செஞ்சாலும் செய்வான் என்று பயந்து கொண்டு தலையசைத்தாள்..

கோயிலின் உள்ளே இடது பக்கம் இருக்கும் கல் மண்டபத்தின் அருகே நின்றவன் இங்க பாரு உன்னோட பேரு ஊர் என்னனு சத்தியமா எனக்கு தெரியாது டி.

ஆனா உன்ன பார்த்த உடனே எனக்கு மனசுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு. வாழ்ந்தால் உன் கூட தான் வாழனும்னு முடிவு பண்ணிட்டேன்.

கல்யாணம் என்ற ஒன்னு நடந்தால் அது உனக்கும் எனக்கும் மட்டும் தான் இதில் எந்த மாற்றமும் கிடையாது.இப்போ சொல்லு உன்னோட பேரு என்ன என்கவும்...

என்ன மேன் காதல் கோட்டை படம் பாத்தீங்களா?

இதேக் கேட்டவன் ஏன் டி நான் எவ்வளவு சீரியசா பேசிட்டு இருக்கேன் நீ என்னை கடுப்பேத்திட்டு இருக்கியா என்றபடி பல்லை கடித்தவன் சொல்லு உன்னுடைய பெயர் என்ன டி???

கொஞ்சம் தைரியத்தை வரவைத்துக் கொண்டவள் மிஸ்டர் இளஞ்செழியன் என்கவும் ஆமாடி என் பேரு இளஞ்செழியன் தான் அதுவும் உன் வாயால் சொல்லி கேட்கும் போது காதில் அப்படியே தேன் பாயுது...

இன்னொரு முறை சொல்லு என்கவும் அதில் கடுப்பானவள் இங்க பாருங்க மிஸ்டர் உங்களுக்கும் எனக்கும் கொஞ்சம் கூட ஒத்து வராது. உங்களுக்கு பொழுது போக நேரம் இல்லை என்றால் வேற யாராச்சும் பாருங்க.என் பின்னாடி சுத்துற வேலை வச்சுக்காதீங்க என்க...

அவள் சொன்னதைக் கேட்டவன் ஓங்கி அறைஞ்சேன் செவுளு பேந்துரும்.ஒரு மனுஷன் தானே வந்து பேசினா உனக்கெல்லாம் நக்கலா தெரியுதா?

நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன் டி.

இங்கு பாருங்கள் எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை.அதும் இல்லாம எங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளையை தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்றாள்.

ம்கும் காலம் காலமா எல்லா பொண்ணும் சொல்றதுதான்..

நாளைக்கு நைட்டு நான் ஊருக்கு கிளம்புறேன்.இது தான் என்னோட போன் நம்பர் என்றவனோ அவள் கையில் இருந்த போனை பிடுங்கி அதில் தனது நம்பரை சேவ் பண்ணியவன் அதிலிருந்து அவனுக்கு ஒரு மிஸ்டு கால் விட்டுக்கொண்டு சரி நேரம் ஆயிடுச்சு நீ கிளம்பு.

அனேகமா இங்க இருந்து பஸ்ல போற தூரம் தான் உன்னுடைய ஊர் என்று நினைக்கிறேன் என்க..ஏற்கனவே அவன் அதிரடியில் பயந்தவள் விட்டா போதும்டா சாமி என்று வேகமாக அங்கிருந்து ஓடினாள்.

ஷமீரா நினைவுகள்:

பார்த்து போ என்கும் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பியவளோ அங்கிருந்தவனை பார்த்து திகைக்க,அவளை பார்த்து சிரித்தவாறு இடது கையால் மீசையை தடவுபவனின் செய்கையில் பெண்ணவள் தடுமாறி போனாள்.

ஒரு நிமிடம் அவனை இமைக்காமல் பார்க்க,அந்நேரம் ஒலித்த பஸ் ஹாரன் சத்தத்தில் திரும்பியவளோ வேகமாக போய் பஸ்ஸில் ஏற இடது கையை ஆட்டி பாய் சொன்னான்.

ஷமீராவிற்கோ இதய துடிப்புகள் தாறுமாறாக ஒலித்தது. அவள் அறியாத ஒன்று அவளை தொடர்ந்து செழியன் வருகிறான் என்பது...

டிக்கெட் என்றவாறு கண்டக்டர் வர,சோழனூர் ஒன்னு என்று சொல்லவும் அவள் உட்கார்ந்திருக்கும் சீட்டிலிருந்து இரண்டு சீட்டு தள்ளி உட்கார்ந்திருந்தவனுக்கு அவள் சொல்லும் ஊர் பெயர் காதில் விழ, அவனிடம் வந்து டிக்கெட் என்கும் போது அவனும் அதே பேரை சொல்லி டிக்கெட் வாங்கினான்

அங்கிருந்து புறப்பட்ட பிரைவேட் பஸ்ஸில் இளையராஜா பாடல்கள் ஒலிக்க ஒரு மணி நேரம் பயணமோ சுவாரஸ்யமாக இருந்தது

யார் இவன்?

நேற்று தான் பார்த்தேன்.பார்த்த உடனே கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டான்.இன்றைக்கு என்னனா இவ்வளவு உரிமையா பேசுறானே..ஏன் இவன்கிட்ட என்னால சண்டை போட முடியலை?

மற்றவர்களிடம் இவ்வளவு பொறுமையாக நான் பேசியது கிடையாதே, யாராக இருந்தாலும் பார்வையிலே இரண்டு அடி தள்ளியே நிற்க வைக்கிறேன். இவன் கிட்ட என்னால அப்படி நடந்து கொள்ள முடியவில்லையே?

எனக்கு என்னாச்சு?

இவனை நம்ப காலேஜில் பார்த்த போல தெரியலையே??ஆனால் ஆளை பார்த்தா படிக்கிற ஸ்டூடண்ட் போல இல்லை. ரொம்ப ஹேண்ட்ஸமா இருக்கிறானே என்று மனதிற்கு நினைக்கும்போதே அவளையும் மீறி அவள் இதழோரம் சிரிப்பு வந்தது.

அப்போதுதான் அவள் செல்போனில் அவன் நம்பரை சேவ் பண்ணிய ஞாபகம் வர மொபைலை ஆன் பண்ணியவள் அதிலிருந்த நம்பரை ட்ரூகாலரில் செக் பண்ண இளஞ்செழியன் ஏர்டெல் தமிழ்நாடு என்று காட்டியது.

அவளையும் மீறி இளஞ்செழியன் ஷமீரா தாஸ் என்று சொல்லிக் கொண்டவளுக்கு அவள் அப்பாவின் நினைவு வர அந்த எண்ணத்தை அடியோடு அழித்தவள் போனில் இருந்த நம்பரை டெலிட் பண்ணினாள்.

ஆனால் மனதிலோ அந்த பத்து இலக்க எண் ஆழமாக பதிந்து விட்டது.

ராஜி எருமைமாடே...ஊருக்கு போகும்போது சொல்லிட்டு போயிருக்க கூடாதா??நானும் லீவு போட்டிருப்பேனே என்று புலம்பிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

வழக்கம்போல் எழுத்து வேலையை முடிந்ததும் சாப்பிட்டு புக்கை எடுத்துக் கொண்டு மாடியில் இருக்கும் அறைக்கு போனவள் படிக்க உட்காரும் போது மெசேஜ் வரும் பீப் சத்தம் கேட்டு என்னதென்று பார்க்க,ட்ரூகாலரில் இளஞ்செழியன் நியூ மெசேஜ் என்று காட்டியது.

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top