• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
417
வனிச்சூர்:

நைட் நீ உன் வீட்டுக்காரர் கிட்ட யார் யாருக்கு எவ்வளவு சொத்து பிரிக்க வேண்டும் என்று பேசுனியே எல்லாத்தையும் நான் கேட்டேன்.

உன்னை பொறுத்த வரைக்கும் சுயநலம் சுயநலம் சுயநலம் உன் பையன் உன் பொண்ணு உன் புருஷன் என்ன பிறவியோ நீ எல்லாம்..

உங்களை சந்தித்தை நினைக்க எனக்கு வெக்கமா இருக்கு என்றவள்,என்னங்க கொஞ்சம் வெளியில நடந்துட்டு வரலாமா???

வா என்றவன் மனைவியை நோக்கி கையை நீட்ட அதில் தனது கையை வைக்க,இறுக்கமாக பிடித்த ருத்ரன் மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றான்..

நேரமும் கடந்து செல்ல குற்ற உணர்ச்சி மேலோங்க மானசாவோடு மகியும் ஊருக்கு கிளம்பினார்.

தயாராகி வந்த எஸ்தரோ தனது கையில் இருக்கும் நகைகளை அங்கிருந்த டேபிளின் மேல் வைத்தவர் இது என் கையில் கிடைத்த பணத்தில் சிறுக சிறுக சேர்த்து வைத்து வாங்கியதில் 20 பவுன் இருக்கு.

என்னுடைய ரெண்டு பெண்ணுக்கும் இந்த அம்மாவோட சீதனம்.. நீங்கள் மறுக்காமல் வாங்கிக்கணும் சம்பந்தி. என் உயிர் இருக்கும் வரை என்னால் முடிந்த சீரை இவங்களுக்கு நான் பண்ணிடுறேன்.பெரிய மனது பண்ணி இதை வாங்கிக்கணுமென்றார்.

ஜூலியும் ஷமீராவும் தாய் சொன்னதை கேட்டு கலங்கியவளுங்கள் அம்மா என்றவாறு அழுகையோடு அவரை அணைத்துக் கொண்டனர்.

இது என்னவிதமான பாசமென்று பிரமித்த செல்லதுரை தம்பதிகள், சம்பந்தியம்மா உங்கள் விருப்பம் போல இரண்டு மகளுக்கு பிறக்கும் பேரப்பிள்ளைக்கு இது சீதனமாக இருக்கட்டுமென்றனர்.

சரிங்க பா நாங்க கிளம்புறோம் என்க, நல்லபடியாக போயிட்டு வாங்க பா என்றவர்கள் அவர்களை அனுப்பி வைத்து விட்டு உள்ளே வந்த செல்லதுரை அம்மாடி ஒருவாய் டீ குடுத்தா என்றவாறு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தார்.

இதோங்க மாமா என்றவாறு கிச்சனுக்கு போன ஷமீராவும் மாமனார் மாமியாருக்கு டீ போட்டு சிறிது நிமிடத்தில் எடுத்துட்டு வந்து கொடுக்க, உட்காருமா என்று அங்கிருந்து சோபாவை காட்டினார்.

இருக்கட்டும் மாமா என்று நின்று கொண்டிருந்தாள்.ம்ம்..நடந்து போனதை யாராலும் மாற்ற முடியாது சம்பந்தி என்ன சூழ்நிலையில் இருந்தாரோ என்பது அவருக்கு தான் தெரியும்.எட்ட இருந்து பார்க்கிற நமக்கு எது சரி எது தப்புன்னு முழுசா தெரியாது இல்லையா???

இதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதே.காலம் எல்லா காயத்தையும் ஆத்தும்.நீ சந்தோஷமா இந்த வீட்டில் வாழ்வதில தான் இருக்கு உங்க அம்மாவோட சந்தோஷம்.அது உனக்கு புரியுதுதானே?

மாமனார் சொன்னதைக் கேட்டவள் ஆமாம் மாமா என்று தலையசைத்தாள்.

ராவுக்கு தோசை மட்டும் தான் ஊத்திக்கணும்.கண்மணி வத்த குழம்பும் கறி குழம்பும் கொடுத்து அனுப்பி இருக்கிறாள்.மாமாவுக்கு சாப்பாடு இருக்கு.

தோசை மட்டும் தானே பொறுமையாவே செஞ்சிக்கலாம் நீ போய் கொஞ்ச நேரம் படுத்தா போ என்று வானதி சொல்ல சரிங்கத்தை என்றவள் டீ குடித்த கிளாஸ் எல்லாம் கிச்சனில் கழுவி வைத்துவிட்டு அவளுக்கும் காஃபியை கலந்து எடுத்துக் கொண்டு ரூமிற்குள் வந்தவள் சோபாவில் உட்கார்ந்து குடித்து முடித்தவளின் பார்வையோ அங்கே சுவரில் பெரியதாக மாட்டப் பட்டிருக்கும் போட்டோவில் விழுந்தது. .

அந்த போட்டோவை பார்த்தவளுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு கணவனை சந்தித்த நிகழ்வுகள் மனக்கண்ணில் வந்தது .

அதேபோல் காரில் போய்க் கொண்டிருந்தது செழியனும் தனது போனை பார்க்க அதில் மனைவியுடன் எடுத்த விதவிதமாக போட்டோக்கள் இருக்கவும் ஒவ்வொன்றாக ரசித்து பார்த்துக் கொண்டே வந்தான்.

அப்பொழுது...

அண்ணா ஷமீயையும் கூப்பிட்டு வந்திருக்கலாமே என்று ஜனனி கேட்க, கூப்பிட்டு வந்திருக்கலாம் தாண்டா கேஸ் விஷயமா வரும்போது அவ கூட கண்டிப்பா நேரம் கொடுக்க முடியாது.

உடனே தாம் தூம்னு குதிப்பாள்.

இந்த கேஸ் முடிஞ்சால் கொஞ்சம் பிரேக் கிடைக்கும் இல்லையா,அப்ப ஒரு டூர் பிளான் பண்ணிருக்கேன் என்கவும், அப்படி போடு என்றனர்.

செழியனின் எண்ணங்களும் ஷமீராவை சந்தித்த நாளை நோக்கி ஓடியது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு..

செழியன் நினைவுகள்-வனிச்சூர்:

இன்னும் கொஞ்சம் சோறு யா?

"அய்யோ மா போதும்"

உன் அண்ணன் மகன் இலை காலியாக இருக்கு பாரு அதில் கொட்டு,எனக்கு போதும்.ஆனாலும் என் ஜிகிடி வீராயி வைக்குற போல உனக்கு மீன் குழம்பு வைக்கும் பக்குவம் வரலைமா என்றவாறு எழுந்த செழியன் சாப்பிட்ட இலையை எடுத்து போய் மாட்டுக்கு வைத்தவன் வாய்க்காலில் ஓடும் நீரில் கையை கழுவி வாய் கொப்பளிக்க அவன் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

இடுப்பில் சொருகியிருந்த போனை எடுத்து பார்த்தவன் அட்டன் பண்ணி ம்.. நாளன்னைக்கு நேர்ல பாக்கலாம் டா...ரெண்டு ரூம் போடு போதும் என்க..

அந்த பக்கமிருந்தவனோ செழியன் சொன்னதை கேட்டு சரி டா என்று அழைப்பை துண்டித்தான்.

யோசனையோடு நடந்து வந்தவனோ அங்கிருந்த மர நிழலில் துண்டை விரித்து படுக்க,ஏ தடி மாடு இப்போ தான் டா சாப்ட,அதுக்குள்ள படுக்குற,எந்திரிடா என்றவாறு வ்வாவ்வ்வ் என்ற பெரிய ஏப்பத்தோடு எழுந்த கண்ணன் உன் கை பக்குவமே தனி வானதி.

அதனால் தான் இன்னும் உன் கூட மாமா குப்பை கொட்டுறார் என்றவாறு கையை கழுக,அண்ணன் மகனை முறைத்த வானதி,அப்படியே உன் நோமனுக்கு கீழ தெருல இருந்து மேல தெரு வரைக்கும் வரிசையா நின்னாளுவோ,இந்த நொய்யா வேண்டும்னு நான் ஒத்த காலில் நின்னேன் பாரேன்...

போனா போகட்டும் அத்தமவன்னு நான் தான் டா கட்டிகிட்டேன். இல்லை தன்ராஜ் மாமா போல கட்டாகாளியாக தான் உன் நோமா சுத்திக்கிட்டு கிடப்பார்.

என்ன என் தலை உருளுது என்றவாறு தரையில் உட்கார்ந்த செல்லதுரைக்கு வாழை இலையை வைத்து அதன் மேல் உணவை பரிமாற,நீ சாப்டியானு மனைவியிடம் கேட்டவாறு சாப்பிட்டார்.

அது எப்படி மாமா நீ சாப்டாம அத்தை சாப்பிடும்?

எனக்கு ரொம்ப வருஷமா ஒரு சந்தேகம் மாமா???

இன்னைக்கு அதை கேட்டு தெரியாமல் விடுவதில்லை.. ஏன் மாமா எதுக்கு இந்த ரவுடி பொம்பளைய கல்யாணம் பண்ணுன?

சொந்தத்தில் தான் அத்தனை அத்தைங்க இருக்காங்களா?அவங்களை எல்லாம் விட்டுட்டு இந்த அம்மாவை கட்ட என்ன காரணம் என்க...

சாப்பிட்டுக் கொண்டிருந்த வானதியோ தனது அண்ணன் மகனை பார்த்து முறைத்தவர்,அலேய் சின்னவனே அந்த சொம்பு எடுத்தேன் மண்டைய பொளந்துடுவேன் டா..

பார்த்தியா மாமா...நீ எவ்வளவு பொறுமைசாலி ஆனால் உனக்கு வாய்த்தது அடங்கா பிடாரி..வேதனை மாமா என்றவாறு வராத கண்ணீரை கண்ணன் துடைக்க..

அந்தக் கொடுமையே என்னத்தடா மாப்பிள்ளை சொல்றது?என் கிரகம் உன் அத்தக்காரி பிறந்த அன்னைக்கே எனக்குன்னு சொல்லிட்டாங்க..

பத்துமாவுக்கும் இவளுக்கும் இரண்டு வயசு தான் வித்தியாசம்.பத்துமா அக்காவை தானே உன் பெரிய மாமனுக்கு கட்டிருக்கு.அப்புறம் ஒரே வீட்ல ரெண்டு பொண்ணு எடுக்க கூடாதுனு சொல்லிட்டாங்க.

மற்றவர்கள் சின்ன பொண்ணா இருக்கு.இல்லைனா பெரிய பொண்ணா இருக்குங்கடா..ஆனா டா வயசு ஆகினாலும் அத்த மகளுங்க இன்னும் அழகு தாண்டா என்று செல்லத்துரை தனது மீசையை தடவிக்கொண்டு சிரிக்க, ஓஓஓஓ..!!!!

"மீசை நரைத்து போனாலும் கிழவனுக்கு ஆசை விடலை போல"

இப்பவும் ஒன்னும் கெட்டு போகலையே, போய் கட்டிக்க வேண்டியது தானே யாரு வேண்டாம் என்று சொன்னாரென வானதி முறைக்க..

அது எப்படி???

நான் ஏகபத்னி விரதனாச்சே.என் குடும்பத்தில் யாராவது இரண்டு பொண்டாட்டி கட்டிருக்காங்களா சொல்லு பாக்கலாம்??

என் பாட்டன் பூட்டன்ல இருந்து என் சித்தப்பா நான் வரைக்கும் ஒரு பொண்டாட்டி தான் கட்டிருக்கிறோம். ஒருவேளை உன் குடும்பத்தில் இருக்கலாம் யாருக்கு தெரியும் என்றார்..

மாமா என்று கண்ணன் முறைக்க அட ஆமா நீ அந்த குடும்பம் தானே மருமகனே,நான் அதை மறந்துட்டேன் டா என்று சிரித்தார்.

ஆமா என் குடும்பத்துல தான் ஆளுக்கு ரெண்டு பொண்டாட்டி வச்சிக்கிட்டு இருக்காங்க இவங்க குடும்பம் அப்படியே யோக்கியம்..ஏன் உங்க சித்தப்பா இன்னமும் வெள்ளையம்மா அத்தையை சுத்தி சுத்தி வரலையா?அந்த சங்கதி எல்லாம் எங்களுக்கு தெரியாதா என்க..

அடியேய் பொறுமையா பேசுடி...

என் சின்னத்தா அங்கதான் நிக்குது பாரு.அது காதில் விழுந்துச்சு என் அப்பனுக்கு(சித்தப்பா) இருக்கிற நாலு மசுரையும் ஆஞ்சு எடுத்துடும் டி..

ம்கும் இல்லன்னா மட்டும் அத்தைக்கு உங்க நொத்தப்பனை பற்றி தெரியாதா என்ற வானதி தனது தாவரங்கட்டையில் முகத்தை இடித்துக் காட்டியப்படி சொல்ல. .

மரத்தின் கீழே படுத்திருந்த செழியன் ஏண்டா நாரதரே உன்னால முடிஞ்சதை இழுத்து விட்டுட்டியா டா..

இப்ப ஏன் அப்புச்சியும் அப்பாயியும் சண்டை புடிச்சுகிட்டு நிக்கணும் நீ கை கட்டி சிரிக்கணும் அப்படித்தானே என்றவன் பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து கண்ணனின் மேல் எறிய..

கல்லும் பொதிரென்று முதுகில் வந்து விழவும் வலியில் ஐயோ என்று கத்தியவன் கொலைகார பாவி ஏன்டா இப்படி என்று திரும்பி செழியனை முறைக்க,எத்திரிச்சி வந்து வாய்லையே மிதிச்சிருக்கணும் டா.போனா போகட்டும்னு இதோட விடுறேன்.
சண்டால பயலே என்னடா வேலை பாக்குற?

உன் வேலையை பாருடா எடுபட்ட பயலே..என் மாமன் கிட்ட நான் பேசுறேன் உன்னை எவன்டா மூக்கை நுழைக்க சொல்றது?,நீ சொல்லு மாமா வயசு பையன்ல எந்தெந்த அத்தையை சைட் அடிச்ச என்கவும்,அதை கேட்டு செல்லதுரைக்கு சிரிப்பு வந்துவிட்டது

வானதியோ கொலைவெறியில் கணவனை முறைக்க,எலே மருமகனே இதெல்லாம் தனியா சொல்ல வேண்டியது.பொறவு சொல்றேன் இல்லை உன் அத்தைகாரி சாமியாடிடுவாள்.

இந்த வயசுல பொண்டாட்டி கோச்சிட்டு போனால் நல்லாருக்காது.அதனால் இந்த பேச்சை இப்போது விடுடா என்றவாறு எழுந்து போய் கையை கழுவியவர்,இன்னைக்குள்ள இந்த வயலை முடிக்க சொல்லு வானதி..

பொம்பளைங்க ஊர் கதைய தான் பேசுதுங்க.. வேலை ஆகுற போல தெரியலை என்றவர்,பக்கத்து வயதில் இருக்கும் நண்பனை பார்க்க சென்றார்.

வீழ்ந்தேனடி....
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
417
ஷமீராவின் நினைவுகள்-சோழனூர்:

இரவு சட்னிக்காக வெங்காயம் உரித்துக் கொண்டிருந்த எஸ்தர் காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்து போய் கதவை திறக்க அவரின் ஒரே மகள் ஷமீராதாஸ் தான் நின்று கொண்டிருந்தாள்.


மகளின் ஓய்ந்து போன தோற்றத்தை பார்த்தவர் என்ன ஷமீ ரொம்ப கூட்டமா?

தலை வலிக்குது மா

"காபி குடேன்"

ம்ம்...

டிரஸை மாத்திட்டு வாயேன் டி அதுக்குள்ள காபி ரெடியாகிடுமென்று கிச்சனிற்குள் சென்றார்.

தனது ரூமிற்கு வந்தவள் ரெப்ரஷாகி நைட்டியை போட்டுக்கொண்டு ஹாலுக்கு வர எஸ்தரும் மகளுக்கான காபியோடு வந்தார்.

தாயிடமிருந்து வாங்கியவள் டிவியை ஆன் பண்ணிட்டு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தபடி குடித்துக் கொண்டே சேனல் மாற்றியவளோ கே.டிவியில் மௌனராகம் படம் ஓடவும் ஆஹாஆஆ...

இந்த படமென்று தெரிந்திருந்தால் லேப் ஹவர்ஸை கட்டடித்திருக்கலாமே என்று முணவியவளோ பின்னர் படத்தில் மூழ்கினாள்.

நேரமும் கடந்து செல்ல சட்னிக்கு வதக்கி ஆர வைத்து அறைத்து தாளித்தவர் ஒரு ஈடு இட்லியை ஊத்தி எடுத்து விட்டு மகளுக்கு தோசைக்கான மாவை கலக்கி வைத்தவர் ஷமீ ஷமீ... என்க..

படத்தில் மூழ்கியிருந்தவளுக்கு தாயின் குரல் கேட்கவில்லை.

இந்த பொண்ணை என்ன பண்ண?

எவ்வளவு நேரம் கத்துறேன் செவுடன் காதில் சங்கு ஊதுன போல இருக்கிறாளே என்றார்.

விடுமுறை என்பதால் எழுத வேண்டிய அசைமெண்ட் எல்லாம் எழுதி முடித்து படுக்கவே இரவு 12 மணிக்கு மேலானது. .

பின்னர் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு படுத்தவள் போனில் பிளேயரை ஆன் பண்ணி காதில் ஹெட் செட் வைத்துக்கொண்டு கண்ணை மூடியவள் பாட்டை கேட்டுக்கொண்டே தூங்கி விட்டாள்.

காலேஜ் லீவு என்பதால் எஸ்தரும் மகளை எழுப்பவில்லை.ஒருவாறு தூங்கி எழுந்தவள் மேலே இருக்கும் ரூமிலே ப்ரஷாகிவிட்டு கீழே வர,எஸ்தரும் அவளின் அத்தை ராணியும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"வாங்கத்தை"

காலேஜ் லீவுனு தூங்கிட்டியோ?

பாபு எதோ பார்சல் அனுப்பிருக்கான்னு சிதம்பரம் வரைக்கும் உன் மாமா போயிருக்கார்.ஆப்பம் சுட்டேன் உனக்கு புடிக்குமோனு எடுத்து வந்தேன்..

ம்ம்...

நீங்கள் ரெண்டு பேரும் சாப்டிங்களா?

"ஆச்சு ஷமி"

நீ போய் சாப்பிட்டு இரு,நான் சித்தி வீடு வரைக்கும் போயிட்டு வரேனென்ற எஸ்தர் போகலாங்கலா அண்ணி?

"ம்ம்"

ராணியும் எஸ்தரும் வெளியே போனதும் கதவை தாழிட்டவள் தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட்டு முடிக்க அவள் தோழி ராஜியிடமிருந்து கால் வந்தது.

அட்டென்ட் பண்ணியவள் சொல்லு டி என்ன பண்ற?

வெட்டியா தாண்டி இருக்கேன் நீ என்ன பண்ற சாப்டியா?

ம்ம் இப்பதான் டி சாப்பிட்டேன்.அத்தை தான் ஆப்பம் எடுத்துட்டு வந்தாங்க...

ஓ மருமகளை விழுந்து விழுந்து ரொம்ப கவனிக்கிறாங்களே என்ன சங்கதி சொல்லு டி என்று ராஜி சிரிக்க..

இப்பயும் ஒன்னு கெட்ட போகல பாபு மாமாவை நீயே கல்யாணம் பண்ணிக்கடி இதைவிட மேலாக உன்னை அத்தை தாங்குவார்கள் என்று ஷமீராவும் சிரிக்க ஐயோ சாமி, அந்த சிடுமூஞ்சி சிங்காரம் எனக்கு வேணாம் டி..

வத்தலோ தொத்தலோ கூனோ இல்லை குருடோ சிரித்த முகமா இருக்கிறவன் எனக்கு போதும் ஷமீ. விளையாட்டுக்கு கூட அந்த விளக்கெண்ணை கூட என்னை சேர்த்து பேசாதடி என்று அந்த பக்கம் ராஜி அலறுவதைக் கேட்ட ஷமீராவோ சத்தமாக சிரித்து விட்டாள்

உன் அத்தை மகன் கதை உனக்கு சிரிப்பா தான் டி இருக்கும் ஏண்டி சிரிக்க மாட்ட நீ?

சரி சரி போன் பண்ணிய விஷயத்தை நான் மறந்துட்டேன் பாரு..ஷமீ வர வெள்ளிக்கிழமை நம்ம சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ராதரிசனம் டி போகலாமா?

ராஜி சொன்னதை கேட்டவள் ஏன் டி தெரிந்துகொண்டே நீ கேட்கிறியே உனக்கு இது ஓவரா தெரியலையா? என்கும் ஷமீராவின் குரலை வைத்து அட ஆமா நான் மறந்தே போயிட்டேன் டி.

நீங்கதான் அல்லேலூயா கும்பலாச்சே...

அன்னைக்கு நமது காலேஜ் லீவு தானேனு அப்பா அம்மா கூட நானும் போறேன்.அப்படியே உன்னையும் கூட்டிட்டு போலாம்னு பார்த்தேன்...

நீ போய்ட்டு வாடி.காலேஜ் முடிஞ்சதும் நம்ம தரிசனம் கடைக்கு போகலாம் என்று தோழிகள் இருவரும் மேலும் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு போனை வைத்தாள்.

அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறையை தனது தாய் செய்து கொடுத்த விதவிதமான உணவுகளை ரசித்து சாப்பிட்டு டிவியை பார்த்தபடி ஷமீராவும் பொழுதை ஓட்டினாள்.

வனிச்சூர்:

இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அப்பா ஒன்னு சொல்லணும் என்க..சொல்லுப்பா என்றவாறு செல்லதுரையும் சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

நாளைக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் பா
டெல்லியில் இருந்து வெற்றி-கபிலன் வராங்க நானும் கண்ணா நம்ப குமாரு ஜீவா அன்புனு அஞ்சு பேரும் போகலாம் என்று இருக்கிறோம் பா...

ஓஓஓ..என்றவர் நல்ல விஷயம் தானப்பா தாராளமா போயிட்டு வாங்க. எப்ப பார்த்தாலும் நீயும் வீடு மசாலா ஃபேக்டரி நம்ப வய காடுனு தான் அலைஞ்சுகிட்டு இருக்க..இப்படி நாலு இடத்துக்கு போயிட்டு வந்தா தானே நல்லா இருக்கும்.

தூரமா இருக்கு இல்லனா நானும் உன் அம்மாவும் வருவோம்.

பெருமாளும் சொல்லிட்டு தான் இருப்பான் வாடா ஒரு முறையாவது நம்ம போய் அதை பார்த்துட்டு வரலாம்னு நமக்கு எங்கு பா முடியுது?

நம்ப பொழப்பு இப்படியே ஓடுது என்றவர் சரி பா செலவுக்கு பணம் எடுத்துட்டு போ.கூட்டாளிங்க கூட போறிங்க நாலு காசு எதிர்பார்க்காம செலவு பண்ணனும்.

வானதி பீரோல இருந்து தம்பிக்கு பணத்தை எடுத்துக் கொடு என்கவும் சரிங்க என்றவர் கணவரின் தட்டில் இன்னும் கொஞ்சம் குழம்பு ஊத்த போதும்.என்னைக்கும் இல்லாமே இன்னைக்கு ரொம்ப ருசியாவே குழம்பு வைத்திருக்கிறாய் என்னவாம்???

உன் அப்பா வீட்டில் இருந்து யாராச்சும் வரேன்னு சொல்லி இருந்தாங்களா என்று மனைவியை பார்க்க,வானதியோ தனது கணவரை முறைக்க, செழியனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

உண்மைய சொன்னதுக்கு இப்படி முறைச்சா என்னடி அர்த்தம் என்று சிரித்த செல்லதுரை,இருந்தாலும் என் அம்மா கை பக்கம் எல்லாம் உனக்கு வராது என்றவாறு எழுந்து போய் கையை கழுவியவர் வரவு செலவு நோட்டை எடுத்து வைத்து உட்கார்ந்து கொண்டார்.

செழியனும் சிறிது நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்தவன் பின்னே மேலே இருக்கும் அவனது அறைக்கு சென்று படுத்து விட்டான்.

மறுநாள் பொழுதும் வந்தது ஊருக்கு போவதற்காக நண்பர்களும் அவரவர் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

பின்னர் ஐந்து பேரும் அங்கிருந்து வனிச்சூர் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தவர்கள் மதுரைக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தவர்கள் பேசிக்கொண்டே வந்து சேர இரவு 11 மணியானது.

இரவு உணவை மதுரையில் உள்ள ஹோட்டலில் முடித்துக் கொண்டு சிதம்பரம்த்திற்கான பஸ் 12 மணிக்கு என்பதால் சிறிது நேரம் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர்கள் பஸ் புறப்படுவதற்கான ஹாரன் சத்தம் கேட்டதும் ஏறி உட்கார்ந்தானுங்கள்..

நண்பர்கள் ஐவரும் சிறிது நேரம் பொதுவாக பேசிக்கொண்டே வந்தவர்கள் பின்னர் அவர்களை மறந்து தூங்கிவிட்டார்கள்.

காலை 8 மணிக்கு எல்லாம் சிதம்பரம் பேருந்து நிலையத்திற்கு பஸ் வந்து சேர்ந்தது.முதல் முறையாக இன்று தான் அவர்கள் இந்த ஊருக்கு வருகிறார்கள்.

பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய அனைவரும் எப்பா உடம்பு எல்லாம் வின்னு வின்னு வலிக்குதுடா எவ்வளவு நேரம் ஆகுது என்றவாறு வெளியே வரும் போது அவர்களுக்காக கபிலனும் வெற்றியும் அங்கே நிற்க,பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டவர்கள் வாங்கடா என்று ஆட்டோவில் ஏறி கிழக்கு பக்க வாசல் அருகே இருக்கும் லாட்ஜை நோக்கி சென்றார்கள்.

இரண்டு ரூம் புக் பண்ணியிருந்ததால் அவர்களும் குளித்துவிட்டு ரெடியாகி கீழே இருக்கும் ஹோட்டலில் சாப்பிட்டு முடித்தவர்கள் சாயந்திரம் தரிசனம் பண்ண போகலாம் டா.கொஞ்ச நேரம் படுக்கலாம் உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது என்ற நண்பனுங்களோ அங்கிருந்த மெத்தையில் படுத்து சிறிது நேரத்தில் தூங்கிவிட்டார்கள்.

அட சோம்பேறி புடிச்ச பன்னிங்களா இதுக்காடா இங்க வந்தீங்க என்று வெற்றியும் கபிலனும் திட்ட உனக்கு என்ன டா??அங்கிருந்து பஸ்ஸில் வந்து பாருடா தெரியும் என்றான் .

எல்லாரும் தூங்கிவிட்டதை பார்த்த செழியன் வெற்றி கபிலனனிடம் கண்ணை காட்ட, கதவை சாத்திவிட்டு பக்கத்து ரூமிற்கு போனவர்கள் கேஸ் பற்றிய சில விஷயங்களை பேசிக் கொண்டிருக்க நேரமும் கடந்தது.

மதியம் சாப்பாட்டிற்கு கூட அவர்கள் நால்வரும் எழாமல் தூங்கிக் கொண்டிருக்க சரியான கும்பகர்ணனுங்களா இருக்கானுங்களே.இந்த தடிமாடுகளை வச்சுக்கிட்டு எங்க நம்ம ஊர் சுத்தி பார்க்க என்று வெற்றி திட்டு நீ ஏன் டா பேச மாட்ட...

டெல்லியில் இருந்து பிளைட்ல வந்து திருச்சில இறங்கின.அங்கேயிருந்து ஒன்றரை மணி நேரம் வந்து சேர்ந்துட்ட. கிட்டத்தட்ட 12 மணி நேரத்துக்கு மேல பஸ்ஸில் வந்திருக்கோம் டா பின்ன உடம்பு எல்லாம் வலிக்காதா?

எவ்வளவு மேடு பள்ளம்....அப்பப்பா எலும்பு எல்லாம் நொறுங்கன போல இருக்கு என்றவாறு பெட்டில் சரிய, தடிமாட்டு முண்டம் எப்ப பார்த்தாலும் உனக்கு இதே வேலை மேல வந்து விழுகிறது எட்ட போய் தொலடா என்று தூங்கிக் கொண்டிருந்த கண்ணன் கத்த..

நானும் அதான் டா நெனச்சேன் என்னடா பெட்டல்ல விழுந்தால் மெது மெதுன்னு இருக்குமே இது பாராங்கல் போல வலிக்குது என்ற செழியனோ கண்ணன் மேலே புரல,நாதாரி பயலே எந்திரிச்சு தொலடா.எழுந்தேன் நல்லா இருக்காது டா...ஹி ஹி ரொம்ப கொஞ்சாத மாப்பி வெக்க வெக்கமா வருது என்றான்...

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top