Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 414
- Thread Author
- #1
டெல்லி பிரதமர் அலுவலகம்:
சார் உங்களை பார்க்க வசுந்தரா சுந்தரபாண்டியன் மேடம் வந்திருக்காங்களென்று பிரதமரின் உதவியாளர் சொல்லவும்,ஹம் வரச்சொல்லுங்க என்றவரோ கையிலிருந்த பைலை படிக்க தொடங்கினார்.
சிறிது நொடிகள் சென்று குட் மார்னிங் சார் என்கும் கம்பீரமான குரலை கேட்டு நிமிர்ந்து பார்த்தவர் வாங்க...
"உட்காருங்கள்"
தேங்க்யூ சார் என்றவாறு சேரில் உட்கார்ந்தவர் தான் கையோடு எடுத்து வந்த பைலை நீட்டவும்,அமைதியான புன்னகையுடன் வாங்கிய பிரதமர்,கேஸ் குளோஸ் அவ்வளவு தானே என்றவாறு பைலை திறந்து படித்து முடித்தபின் கையெழுத்திட்டார்.
இது தான் உங்களுடைய லாஸ்ட் கேஸ் இல்லையா?
எஸ் சார்..
ஹம்..
உங்களை போன்ற வீராங்கனைகள் நம் நாட்டிற்கு மிகமிக அவசியம்.மூன்று தலைமுறையாக உங்கள் குடும்பம் நம் நாட்டிற்கு சேவை செய்கிறீர்கள் இன்னும் அது தொடரணும்.
"கண்டிப்பாகங்க சார் என்றவாறு எழுந்து வணக்கம் வைத்த வசுந்தரா பைலோடு வெளியே வந்தவர் அடுத்து என்னனென்ன பண்ண வேண்டும் என்பதை ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததால் அதன்படி யார் யாருக்கு என்னென்ன இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கணுமோ அத்தனையும் கொடுத்தவர் எந்த காரணம் கொண்டும் இந்த மிஷன் வெளியே தெரியக்கூடாது என்று கண்டிப்பாக சொல்ல எஸ் மேடம் என்றனர்..
ஓகே என்றவர் அமர்நாத் உன்னோட ஆட்டம் முடியப்போகுது.எத்தனை கோயிலுக்கு போனாலும் உன் பாவம் தீராது.
இனி உன் பணமும் இப்போ போக போற கடவுளும் உன்னை காப்பாற்ற போவதில்லை என்று மனதிற்கு சொல்லிக் கொண்டவர் மூவருக்கும் கால் பண்ணினார்..
அப்பொழுது தான் தூங்கி எழுந்து ப்ரஷாகி ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வெற்றி,செழியன், கபிலன் மூவருக்கும் வசுந்தராவிடமிருந்து கான்ப்ரன்ஸ் கால் வர,அதான நாம கொஞ்சம் சந்தோஷமா இருந்தால் இந்த மேடம்கு மூக்கு வேர்த்துவிடுமே என்றவாறு அட்டென் பண்ணினானுங்கள்.
என்ன பாய்ஸ் என்ஜாய்மெண்ட் முடிந்ததா?
அதான் வயிறு எரிந்து கால் பண்றிங்களேங்கத்தை என்று கபிலன் சிரிக்க...ஹாஹாஹா என்றவர் அவனுங்களிடம் விஷயத்தை சொல்ல அதைக் கேட்டு எஸ் மேடம் என்றவனுங்கள் அழைப்பை துண்டித்தனர்.
வீட்டிலிருந்தவர்களோ அவர்கள் முகத்தை பார்த்து என்ன ஆச்சு என்கவும்,இவனுங்க விஷயத்தை சொல்ல அப்படியா உடனே புறப்படுங்கள் பா.
அசுரனை வேட்டையாட வேண்டிய நேரம் வந்துடுச்சி,நல்லபடியாக முடிச்சிட்டு வாங்க பா என்கவும் சரியென்றானுங்கள்.
நான் வீட்டுக்கு போயிட்டு ரெடியாகி வரேனென்ற செழியனிடம் இரு அப்பு உன் அத்தை டீ தண்ணி வக்கிது குடிச்சிட்டு போயா என்க..
இருக்கட்டும் அம்மாச்சி என்றவாறு வெளியே வந்தவன் தனது புல்லட்டில் ஏறி வீட்டை நோக்கிச் சென்றான்.
செழியன் வீடு:
எஸ்தர் உள்ளே போகாமல் வெளியேவே நின்று விட்டு மகளிடம் வந்து விட நேரமும் கடந்து செல்ல மானசாவிற்கு விழிப்பு வந்தது.
அதை பார்த்த தீபன் ஆண்ட்டி இப்போது எப்படி இருக்கென்று அவரின் கையை பிடித்து பல்ஸ் செக் பண்ண..
எட்டி தீபனின் கன்னத்தை தடவியவர் நீங்கள் இந்த உலகத்தில் இருந்தும் இத்தனை வருஷம் தெரியலையே என்று அழுக...
ஏய் மானசா....!
"திரும்ப ஆரம்பிக்காத"நம்ப பொண்ணை பார்க்கலாம் வா என்க...பட்டுஊஊஊ என்றவாறு எழுந்தவர் வேகமாக ஹாலுக்கு வர அங்கே எஸ்தரின் மடியில் ஜூலி படுத்திருக்க,இடது பக்க தோளில் ஷமீரா சாய்ந்திருந்தாள்.
இதை பார்த்த மானசாவிற்கு எஸ்தரின் மேல் பொறாமை வந்தது..அந்த கடுப்பில் பட்டுஊஊஊ என்று கத்த, கண்ணை மூடி படுத்திருந்தவளோ அந்த சத்தத்தில் பதறியடித்து எழவும்,ஆண்ட்டி என்ற ருத்ரன் ஷீ ஈஸ் மை வைப்...
எதுக்கு இப்படி கத்துறிங்க?.
இங்கே தானே இருக்கிறாள் என்றவாறு மனைவிடம் வந்து அவளின் தோளில் கையை போட்டவன்,உனக்கு இவங்க கிட்ட இப்போது பேசியே ஆகணுமா டி?
கணவனின் கண்டன குரலை கேட்டவள் ஹம்... ஆம் ஆல் ரைட் என்றவாறு ருத்ரனின் கையை பிடித்தவள் ம்ம் சொல்லுங்க?.ஏற்கனவே கல்யாணம் ஆகி உங்களுக்கு குழந்தை இருக்கும் போது எதற்காக அதை மறைத்து எங்கம்மாவை இரண்டாவது கல்யாணம் பண்ணுனிங்க? சொல்லுங்க டேட்?
ஏய் அர்ச்சனா(ஜூலிக்கு அவள் அம்மா வைத்த பெயர்)என்னை தான் டி உங்க டேட் முதலில் மேரேஜ் பண்ணியதென்று கோவமாக மானசா சொல்ல...
நான் உங்களை பற்றி கேட்கவில்லை!
என்னுடைய எஸ்தர் அம்மாவை பற்றி கேட்கிறேன் என்கவும்,ஜூலி சொன்னதை கேட்ட மானசா உன்னை பத்து மாதம் சுமந்து பெத்தவள் நான்.
எதோ மூணாவது மனுஷன் போல பேசுறியே டி...
அதான குடும்பமாக வளர்ந்திருந்தால் உனக்கு அம்மா அப்பா என்ற பாசமிருக்கும்.நீ தான் அனாதை நாயாக ஆசிரமத்தில் வளர்ந்திருக்கியே உனக்கு எங்கே டி எங்கள் அன்பு புரியப்போகுதுனு வாயை மூடுவதற்குள், மானசாஆஆ என்று கத்திய மகியோ அத்தனை பேருக்கு முன்னாடியே பளார் பளாரென்று அறைந்தவர் ச்சை...நீயெல்லாம் தாயா டி?
அவள் பத்து மாசம் சுமக்களை,ஆனால் எதோ ஒரு சூழலில் தாயா மாறியிருக்காள்.அது தான் டி தாய் பாசம்.
ஆனால் நீ?.
மானசாவோ கணவரை அதிர்ந்து போய் பார்க்க..
மோசமான பேய் டி...
உன்னை பார்க்கவே அருவருப்பாக இருக்கு..
உன்னோட எண்ணம் என்ன தெரியுமா எங்கே எஸ்தர் மீண்டும் என் வாழ்க்கையில் வந்துருவாளோனு...சரி தான?.ம்கும்...
என் பொண்டாட்டி உன்னை போல யார் கூட வேண்டுமானாலும் புருஷனை பங்கு போடும் ஆளில்லை டி. 26 வருஷத்துக்கு முன்பு நான் கட்டிய தாலி அவள் கழுத்தில் இல்லாத போதே அவளை பொறுத்தவரை நான் செத்துட்டேன் பார்த்த உடனே புரிந்து கொண்டேன்..
நானில்லை,இனி யார் சொன்னாலும் என் பொண்டாட்டி என் கூட வாழ மாட்டாள்,போதுமா.இனி உனக்கு நிம்மதி தானே?. என் வாழ்க்கையில் இவ்வளவு நடக்க நீ ஒருத்தி மட்டுமே காரணம்...
ஒழுங்கு மரியாதையா வாயை மூடிக்கொண்டு இரு..இல்லை என்று மகி பல்லை கடிக்க...,
டேடி...
உங்க ரெண்டு பேருடைய நாடகத்தை நிறுத்துங்கள்... நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கள் அது போதுமென்ற ஜூலியோ தனது தந்தையை பார்க்க...
மகி தனது சின்ன மகளை பார்க்கவும்...இது எனக்கு தேவையில்லாத ஒன்றென்று நினைத்த ஷமீராவோ அங்கிருந்து மேலே செல்ல...
போகும் மகளை குற்ற உணர்ச்சியோடு பார்த்தவர் தன்னை நிதானம் பண்ணிக்கொண்டு டெல்லியில் வேலைக்கு சேர்ந்ததிலிருந்து சென்னைக்கு வந்ததும் தாயிற்கு இந்த விஷயம் தெரிந்து பிரச்சினை ஆனது வரை சொல்லியர் அடுத்ததை சொல்ல முடியாமல் இப்போது தடுமாறினார்.
இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஜூலி,பிறகு நடந்ததை சொல்லுங்கள் டேடி...
ம்ம் என்றவர் மானாசாவின் முடிவால் விருப்பமின்றி தனது தம்பி காதலித்த அத்தை மகளை குற்ற உணர்ச்சியோடு கல்யாணம் பண்ணியதும்,அவரோடு வாழ விருப்பம் இல்லாமல் இரண்டு வருடங்களாக சண்டை வம்பென்று நாட்களை கடத்த, எஸ்தருக்கு குழந்தை இல்லை என்பதை சுட்டிக்காட்டி தனது தாய் கொடுமை படுத்துவது தெரிந்து அதன் பின்னர் மனைவியாக மனம் ஏற்றுக் கொண்டு வாழ்ந்ததை சொல்லி முடிக்க...எஸ்தரும் ஜூலியும் அற்ப புழுபோல மகியையும் மானசாவையும் பார்க்க..அவர்களோ கீழே குனிந்து கொண்டனர்.
ச்சை எவ்வளவு பெரிய சுயநலவாதி. ...
உங்க அம்மா ஆசைப்பட்டாங்க என்பதற்காக என் வாழ்க்கையை கெடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தாங்கள்?
ம்கும் ஆம்பிள்ளை தானே.
ஆயிரம் பெண்ணை கட்டிக் கொண்டாலும் இல்லை வைத்துக் கொண்டாலும் குற்றமில்லை இல்லையா?.
எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாம எப்படி இத்தனை வருஷம் என் கூட வாழ முடிஞ்சதுன்னு நினைச்சு பார்க்க என்னாலே ஜீரணிக்க முடியவில்லை.
பரவாயில்லை காலம் கடந்தே உண்மை தெரிஞ்சிருக்கு என்றவாறு மகளை தேடி எஸ்தர் செல்ல,பட்டு கிட்டுனு தயவுசெய்து என்னை தேடி வராதிங்க..
இதையெல்லாம் மறந்து உங்களை அப்பா அம்மாவாக ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு நான் வந்த பிறகு உங்களை தேடி வரேன்...
ஆனால் எப்போதும் எனக்கு அம்மா என்றால் அது எஸ்தர் அம்மா இதில் எந்த மாற்றமும் இல்லை என்ற ஜூலியோ வாங்க போகலாமென்று கீழே இருக்கும் அவர்கள் அறையை நோக்கி கணவனோடு சென்றாள்..
முகத்தை மூடிக்கொண்டு மானசா கதறி அழவும்,மகியோ அதை கண்டுகொள்ளவில்லை..
ரூமிற்குள் வந்த ஜூலியோ தனது கணவனை இறுக்கி அணைக்க,நீ பேசியது சரி டி.இதோட விட்டுறு.நான் இருக்கிறேன் இன்னும் கொஞ்ச நாளில் நமக்கு குழைந்த வர போகுது இந்த சொந்தம் போதாதா?
"எஸ்தர் அம்மா பாவங்க"
திட்டமிட்டு அவங்க வாழ்க்கையில் இப்படி துரோகம் பண்ணிருக்காங்களே??இனி ஷமீயும் அம்மாவும் என்னை பழைய போல பார்ப்பார்களா??என் யோசனை இப்போதைக்கு இதுதாங்க..
ஏய் பைத்தியம்...
அத்தையும் ஷமீராவும் மாற வாய்ப்பேயில்லை டி என்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க,நான் பார்க்கிறேனென்ற ருத்ரனோ கதவை திறக்க,அங்கே ஷமீரா தான் நின்றிருந்தாள்.
மாமா,அக்காவை கூப்பிட்டு சாப்பிட வாங்க..இவ்வளவு நேரம் வரைக்குமா பட்னியா இருப்பது??
எல்லாருக்கும் உங்க தம்பி தான் சாப்பாடு எடுத்து வந்தார் வாங்க.
சரி மா..
நீ எடுத்து வை..
அத்தைக்கு?
டைனிங் ஹால்ல தான் இருக்காங்க மாமா என்றவாறு ஷமீரா திரும்பி போக,நான் சொன்னேனடி...வா என்றவாறு மனைவியை அழைத்துக்கொண்டு அங்கு வர மனமேயின்றி கடமைக்கு சாப்பிட்டு எழுந்தனர்...
யார் என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க நான் வந்தே தான் தீருவேன் என்று கிழக்கே ஆதவனும் உதயமாக ஆரம்பமானான்..
காலிங் பெல் சத்தம் கேட்டு வேகமாக போய் கதவை திறந்தவள் அங்கிருந்த கணவனைப் பார்த்து வந்து விட்டீர்களா என்ற போது அவள் முகமோ ஆயிரம் வாட்ஸ் பல்புகள் போல பிரகாசிக்க,
என்ன டி சண்டி ராணி..
புருஷனை ரொம்ப தேடுனியா என்றவாறு உள்ளே வந்தவன் டீ எடுத்துட்டு நம்ப ரூமிற்கு வா என்று சொல்லிக் கொண்டு மேலே இருக்கும் அறைக்கு சென்று விட்டான்