• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
407
ஜூலி இருக்கும் ரூம் கதவை திறந்த ருத்ரன் வாங்க அங்கிள் என்க...
படபடப்போடு உள்ளே வந்த மகியோ அங்கிருந்த தனது மனைவியை பார்த்தவர் எஸ்தர்..

எங்கே டி போன?

உன்னை தேடி எங்கெல்லாம் அலைந்தேன் தெரியுமா என்பவரோ தனது முதல் மகள் அங்கே அதிர்வோடு இதை பார்த்துக் கொண்டிருப்பதை கவனிக்கவில்லை.

வேகமாக போய் மனைவியின் கையை பிடித்தவர் சொல்லு எஸ்தர் எங்கடி போன?எதா இருந்தாலும் கூட இருந்து சண்டை போட்டுருக்க வேண்டியதுதானே?

நம்ம பொண்ணு என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்கிறாளே என்று மனம் வருந்தி சொல்ல,தன்னை பிடித்திருக்கும் கையை உதறிய எஸ்தர் நீங்க பேசிட்டு இருங்க நான் வெளியே போகிறேன் என்று அங்கிருந்து கதவை திறந்து வெளியே போன பிறகுதான் எதற்காக இந்த ரூமிற்கு வந்தோம் என்பதே மகிக்கு புரிந்தது.

அந்த அதிர்ச்சியில் திரும்பி பெட்டை பார்க்க அங்கு உட்கார்ந்திருந்த பெண்ணோ மானசாவின் வாலிப வயது முகஜாடையில் இருப்பளை கண்டவர் பட்டூஊஊ என்று கத்தியவாறு மகளை தோளோடு அணைத்துக் கொண்டு கத்தி கதறினார்...

தன்னை அப்பா என்று முதல் முதலில் அழைத்து ஜீவனாச்சே..கடந்து 25 வருடங்களாக எந்த மகள் உயிரோடு இல்லை என்று நினைத்து வேதனைப்பட்டாரோ அதே மகள் இன்று உயிரோடு இருப்பதை பார்த்தவருக்கு அழுகையை அடக்க முடியவில்லை. .

அந்தப் பிரத்தியோக அழைப்பான பட்டு என்றவாறு அவள் கன்னத்தை ஏந்த,இந்த குரலை கேட்க எத்தனை வருடங்கள் ஏங்கினேன் என்பது புரிந்த ஜூலியும் டாடி என்று மகியின் இடுப்போடு கட்டிக்கொண்டு அழுதாள்.

அந்த நேரம் கதவைத் திறந்து உள்ளே வந்த ஷமீரா அங்கே மகியும் ஜூலியும் அழுது கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு இங்கு என்ன நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை...

கதவு சத்தம் கேட்டு திரும்பிய ருத்ரனும் ரூபாவும் அங்கு ஷமீராவை எதிர்பார்க்காததால் அவளை பாவமாக பார்க்க,பெரு மூச்சு விட்ட தீபன் வேகமாக வந்து ஷமீராவை தோளோடு அணைத்தவன் பாப்பா என்க..அவனுக்கு தொண்டை அடைத்தது.

அண்ணா என்கும் போது ஷமீராவிற்கு வார்த்தைகள் தடுமாற,ஜூலியோட அப்பாவும் அங்கிள் தான் டா.

அதைக் கேட்டு என்னாஆஆஆ என்று அதிர்ந்த ஷமீராவோ தனது நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு அவர்களை தான் பார்த்தாள்...

பட்டு...ஏன்டா இந்த அப்பாவை தேடி வரல?

மறந்துட்டியா டா என்று அழுது கொண்டே மகி கேட்க,டேடி நீங்க உயிரோடு இருக்கிற விஷயமே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எனக்கு தெரியும்...

அம்மா பா என்று பரிதவிப்போடு ஜூலி கேட்க உன் அம்மாவும் இங்கு வந்துருக்கா.உன்னை நினைத்து அழாத நாளில்லை டா பட்டு என்றவாறு மகளின் கன்னம் கிள்ளி எண்ணற்ற முத்தங்களை கொடுத்தவர் இரு நான் போய் அவளை கூப்பிட்டு வருகிறேன் என்று வேகமாக எழுந்து கண்ணை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்க்கும் பொழுது தான் அங்கே ஷமீராவோ தீபனின் அணைப்பில் அதிர்வோடு இதையெல்லாம் பார்த்து கண்ணீர் வடிய நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

எந்த மகளுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியக்கூடாது என்று நினைத்தாரே அவளே இதையெல்லாம் பார்த்தவாறு நிற்க...இதைக் கண்ட மகியோ தனது இரண்டாவது மகளை பார்த்து பேயறைந்த போல அதிர்ந்து போய் நின்றார்..

அவருக்கு ஒன்று தெரியவில்லை அவளுக்கு இந்த விஷயம் தெரிந்து பல ஆண்டுகள் ஆகின்றது என்கும் உண்மை...

சற்று முன்னர் ஜூலியிடம் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டார் என்பதை பார்த்த ஷமீராவுக்கு ஒரு நாள் கூட தனது தந்தை தன்னிடம் ஆசையாக பேசிருப்பாரா?

இல்ல அன்பாக தனது தலையாக தடவியிருப்பாரா??ஒரு வாய் சாதமாவது ஊட்டியிருப்பாரா என்பதை நினைக்க எரிமலை உள்ளுக்குள் கொதிப்பது போல இருந்தது.

இந்த சூழலை கையாண்டு தான் ஆக வேண்டும் என்கும் உண்மை புரிந்த மகி அம்மாடி ஷமீரா என்று அவளை நோக்கி வர தீபனிடமிருந்து விலகியவள் அண்ணா நிச்சயதார்த்தம் ஆரம்பிக்க போகுது மேடைக்கு வர சொல்றாங்க என்று சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியே போய்விட்டாள். .

கண்ணில் இரண்டு பக்கமும் ஆறு போல் கண்ணீர் வடிந்தோட வரும் மகளை சற்று தள்ளி இருந்து பார்த்து எஸ்தரோ வாயை மூடி அழ,வேகமாக தனது அம்மாவிடம் வந்தவள் அவரை இறுக்கமாக அணைத்துக் கொள்ள, மகள் அழுவது அவருக்கு புரிந்தது. .

இதை நான் எதிர்பார்க்கலையே என்று அவரும் அழுக,ஷமீரா ஷமீரா என்கும் செழியனின் குரல் கேட்டு இருவரும் கண்ணை துடைத்துக் கொண்டனர்.

உள்ளே வந்தவன் அவர்களை பார்த்து இங்க தான் இருக்கியா தாத்தா வீட்ல கூப்பிடுறாங்க வா என்று சொல்லி அவர்களின் வேதனையான முகத்தை கவனிக்காமல் வெளியே போய் விட்டான்

முதல்ல பாபு கண்மணி நிச்சயதார்த்தம் முடியட்டும்.அதன் பிறகு எதா இருந்தாலும் பேசிக்கலாம் மா என்று
ஷமீரா சொல்ல,தனது மகளின் முதிர்ச்சியான வார்த்தையை கேட்டவர் ரொம்ப மெச்சூர் ஆயிட்ட ஷமீ என்று சொல்லிக் கொண்டே மகளின் கைய பிடித்தவாறு வெளியே வந்தார்...

அங்கிருந்த சொந்த பந்தங்களோ எஸ்தரை பார்த்து அதிர்ந்தவர்கள் எப்ப வந்த என்க..கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன் என்று ஒருவராக பேசி எல்லாரையும் சமாளித்தார்.

தனது தங்கையை பார்த்த அந்தோணிக்கு கண்கள் கலங்கியது. எங்கே நீ வர மாட்டியோ என்று நினைத்து விட்டேனே என்று மனதிற்குள் பேசிக்கொள்ள,நான் எப்படி ணா வராமல் இருப்பேன் என்று அவரும் தனது கண்களாலே அண்ணனுக்கு பதில் சொன்னார். ..

ராணியோ வேகமாக வந்து எஸ்தரின் கையை பிடிக்க வர நாசுக்காக அவரிடம் இருந்து விலகிப் போனவர் அங்கிருந்த ஜேம்ஸ் குடும்பத்துடன் சாரதா பாட்டி இருப்பதை பார்த்து அவர்களோடு இணைந்து உட்கார்ந்து கொண்டார்..

எஸ்தரை பார்த்த ஜேம்ஸ்க்கு கண்கள் கலங்க,தனது அத்தை மகனை நீண்ட மாதங்களுக்கு பிறகு பார்த்தவர் நல்லா இருக்கீங்களா மாமா என்கும் போதே எஸ்தருக்கும் அழுகை வந்து
வார்த்தைகளும் தடுமாறியது.

தனது தொண்டையை கணைத்து சரி பண்ணிய ஜேம்ஸ் உன் மருமகன் நிச்சயதார்த்தம் நல்லபடியா முடியட்டும் அப்புறம் பேசிக்கலாம் என்க..

அவரின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ரோஸி தனது கணவருக்கு மட்டும் காதில் விழுவது போல,என்னங்க உங்கள் ஒன்சைடு காதலியை பார்த்தாச்சா??

அதைக் கேட்ட ஜேம்ஸிற்கு சிரிப்பு வரவும்,திரும்பி மனைவி பார்த்து செல்லமாக முறைக்க,உங்க காதல் கதை எல்லாம் எனக்கு தெரியும்.நான் அந்த டைரிய படிச்சிட்டேன்.ஆனாலும் இத்தனை வருடம் அதை காட்டிக்காம இருந்தேன் என்று கணவரின் தலையில் பெரிய குண்டை தூக்கி போட்டார்.

அதைக் கேட்ட ஜேம்ஸ்,அடி பாவிஈஈஈ!!!

இதை அப்படியே மனசுல போட்டு புதைச்சிடு டி!!

இல்லை குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் வரும்...

"ஆஹான்"

அத்தை மகளை பார்த்ததும் அய்யாக்கு அப்படியே பத்து வயது குறைந்த போல முகம் பளபளக்குது...

பட் இன்னமும் உங்களுக்கு அக்கா மேல காதல் இருக்கு தானே??

அதனால் தானே தமிழ்நாட்டுக்கு வரமாட்டேங்குறிங்க?

மனைவியின் கண்களை பார்த்த ஜேம்ஸ் என்றைக்கு உனக்கு புருஷனானேனோ அப்போதிலிருந்து உன்னை மட்டும் தான் டி லவ் பண்ணுறேன்.எஸ்தர் மேல எனக்கு இருப்பது என் அத்தை மகள் என்ற எண்ணம் மட்டுமே போதுமா மிசஸ் ஜேம்ஸ்!!!

நான் கேட்டதுக்கு இது பதில் இல்லையே?

காதல் இருக்கா?,இல்லையா???

சே எஸ் ஆர் நோ புருஷா...

"ஏய் ரோஸி அடி வாங்க போற டி"

எந்த நேரத்தில் என்ன பேச்சு பேசிட்டு இருக்க டி?அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன் என்று சொல்லும்போது ஜேம்ஸ்க்கு சிரிப்பு வர, டேய் திருட்டு புருஷா,உன்னை பற்றி எனக்கு தெரியும் டா என்று அவர் காதில் மட்டும் விழும்படி ரோசி சொல்ல,ஐ லவ் யூ டி என்கவும்...அந்த வார்த்தையிலே ரோசி அமைதியானார்..

மாப்பிள்ளையோட தாய் மாமா மேடைக்கு வாங்க என்கவும்

அந்தோணியோ தனது மகனின் தாய்மாமனாக இருவரையும் தான் சொல்வார்.ஜேம்ஸ் ரோசியை கூப்பிட்டு போ.

உன் அண்ணன் எதோ போன் வந்ததுனு வெளியே போயிருக்கான்.நீங்கள் முதலில் போங்க என்கவும் அண்ணாவும் வந்துரட்டுமே மாமா என்றவாறு வாசலை பார்க்க..உன் அண்ணன் வருவான் நீ போடா என்றார்

சம்பிரதாயபடி சில சடங்குகள் செய்து முடித்ததும் பொண்ணு மாப்பிள்ளையை மேடைக்கு வர சொன்னார்கள்.

கோட் சூட்டில் கம்பீரமாக மேடைக்கு வந்த பாபு அங்கே இருப்பவர்களை பார்த்து வணக்கம் சொல்லியவன் அலங்கரிக்கப்பட்ட சேரில் உட்கார, சிறிது நிமிடத்தில் தேவலோக அழகி போல மேடைக்கு வந்த கண்மணியும் பெரியவர்களை பார்த்து வணக்கம் வைத்தவள் ஒருவித படபடப்போடு பாபுவின் பக்கத்தில் உள்ள இடத்தில் கொஞ்சம் இடைவெளி விட்டு உட்கார்ந்தாள்.

அவளுக்கு மட்டும் கேட்கும்படி ரொம்ப அழகா இருக்கடி என்று பாபு பேச…

அப்பொழுது மேடைக்கு வந்த பரத் வருஷம் முழுவதும் என் தங்கச்சி கிட்ட தான் பேச போற,கொஞ்ச நேரம் வாயை தான் மூடேன் டா.லொடலொடன்னு ஓட்ட பானைல நண்டு விட்ட போல பேசிட்டு இருக்கிற...

ஐயரே வாழைப்பழம் ஆப்பிள் ஆரஞ்சு ஏதாச்சும் இருந்தா இந்த மாப்பிள்ளைகார பயலுக்கு கொடுங்க தின்னுட்டு வாய மூடிட்டு இருக்கட்டும் என்க...அதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.

பின்னர் மருமகளுக்காக வாங்கிட்டு வந்த மோதிரத்தையும் நெக்லஸை மேடைக்கு எடுத்துட்டு வந்த ராணியோ மகனிடம் கொடுத்து மோதிரம் போட சொல்ல,கண்மணியோ தனது வலது பக்க கைகளை நீட்டினாள்.

அந்த வெண்டை விரல்களை பிடித்தவனோ மோதிரத்தை போட்டு விட்டான் பின்னர் ராணியும் தனது மருமகளுக்கு அந்த நெக்லஸை போட்டு விட்டார்.

அதேபோல் கண்மணியின் அண்ணனுங்கள் மச்சான் முறைக்காக பாபுக்கு கையிலும் கழுத்திலும் விரல்களிலும் தங்க நகைகளை போட்டு விட பின்னர் இரண்டு ஊர் முக்கியஸ்தர்களின் முன்னிலையில் அவர்கள் திருமணம் நிச்சயதார்த்தத்தின் ஓலை வாசிக்கப்பட்டது.

நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிந்தது...!
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
407
மலரோ வந்ததில் இருந்து கண்ணனின் கையில் சிக்காமல் தப்பித்துக் கொண்டிருக்க...

ஓஹோ...

ரொம்ப தான் டி பண்ற...

ஒழுங்கா மேலே வா என்று மெசேஜ் அனுப்ப,முடியாதென்று பதில் அனுப்பினாள்.

ஆஹான்...

நீயாக வந்தால் நல்லது இல்லை நான்??...

மெசேஜை படித்தவள் விழி பிதுங்கும் போது,மலரு இதை போய் கண்மணிக்கு கொடுத்துட்டு வாடி என்றபடி லெமன் ஜூஸை புவனா நீட்ட,சரிங்கத்தை என்றவள் அதை எடுத்துக் கொண்டு மேலே வந்தவள் கண்மணிக்கு குடுத்து விட்டு வெளியே வந்தவளை நீண்ட கரமொன்று எட்டி இழுத்து அங்கிருந்த கதவை பூட்டியது.

அய்யோ என்று கத்தியவள் அங்கே கையை கட்டிக் கொண்டு கதவின் மேல் சாய்ந்திருக்கும் கண்ணனை பார்த்து கீழே குனிந்து கொள்ள,அவளை நோக்கி வந்தான்.

மலரோ பயந்தவாறு பின்னாடியே செல்லும் போது அங்கிருந்த கட்டிலின் மேல் இடித்து விழ வேங்கை போல பாய்ந்தவன் உடும்பாய் இறுக்கி அணைக்க...

மலரோ அதிர்ந்து போய் தன்னவனை பார்க்க,அவளை பார்த்தவனோ என்னடி முரட்டு பசு... ரொம்ப துள்ளுற?

மாட்டை அடக்கிய உன் புருஷன் உன்னை அடக்க முடியாதா?

போனா போகட்டும் என்று விட்டு வைத்தால் கண்ணுல கூட படமாட்டேங்குற?

உரிமையானவனா ஆகுற வரைக்கும் எனக்காக ஏங்கி தவிச்சியே டி??? என் பைக் சத்தம் கேட்டாலே உன் கண்கள் அலைபாயுமேடி?

இப்போது எங்கே அதையெல்லாம் காணும்?

ஏன் அந்த எண்ணம் போயிடுச்சா???பதில் சொல்லுடி என்றவாறு அவள் கன்னத்தை பிடிக்க,இரும்பு போன்ற கரத்தால் லேசாக வலித்தது.

நிமிர்ந்து நேராக பார்க்க முடியாமல் வெட்கப்பட்டவளோ வேறு பக்கம் திரும்பிக் கொண்டு,இத்தனை வருஷம் என் தவிப்பு தெரிந்தும் அமைதியாக இருந்துருக்கீங்க?

வேற எவனையாவது என்று வாயை மூடுவதற்குள் என்னை தவிர வேறு ஒருத்தனுக்கு உன்னை விட்டு கொடுத்துடுவேனா டி?

தெரியும் டி என்னைக்கு இருந்தாலும் நீ தான் என் பொண்டாட்டினு... அதான் கொஞ்சம் உன்னை காய விட்டேன்.இருந்தும் திங்கிற போல ஒரு பார்வை பார்ப்பியேஏஏஏ...

யப்பாஆஆஆ...!

கண்ணாடி இதுவென தன்னவளை முத்தமிட்டவன் எழுந்து போய் அங்கிருந்த டிராவை திறந்து எதோ ஒரு பார்சலை எடுத்து வந்து கட்டிலின் கீழே மண்டியிட்டவனோ தன்னவளின் கால்களில் இருக்கும் கொலுசை கழட்டி விட்டு அவளுக்காக வாங்கியதை போட...

கண் மூடி இதையெல்லாம் ரசித்தவளுக்கு சந்தோஷத்தில் அழுகை வந்தது.

இரண்டு கால்களிலும் மீசை முடி குத்த முத்தமிட்டவன்,கனவு கண்டது போதும் எந்திரிடி என்க...

வேகமாக எழுந்தவளை தூக்கி சுத்தியவன் போ இல்லை... உனக்கு வளையல்காப்பு தான் நேரடியாக நடக்குமென்க...

விஷயம் புரிந்தவளோ அய்யோ என்றவாறு வேகமாக கதவை திறந்து வெளியேறினாள்..

பெண் வீட்டின் சார்பாக நிச்சயத்திற்கு வந்திருந்த சொந்தகாரர்களோ தம்புசாமி வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினர்.

சரிங்க சம்பந்தி நாங்களும் கிறம்புறோமென்று அந்தோணி சொல்ல ஒரு நிமிடம் பா.பாஸ் வீடியோ கால் பண்ண சொல்லிருக்கிறார்...

மகன் சொன்னதைக் கேட்ட அந்தோணி சரி தம்பி என்றவர்,சம்பந்தி எங்க மருமகளை இவங்க பாஸ் குடும்பம் பாக்கணுமாம்.

அதுக்கென்னங்க இனி உங்கள் பொண்ணு என்ற தம்புசாமி தாத்தா பேரான்டி உன் பொண்டாட்டி மேல தான் இருக்கு.போய் பார்த்துட்டு வாயா...

சரிங்க தாத்தா என்றவன் பரத் வாடா என்று நண்பனை அழைத்துக் கொண்டு போவதை பார்த்த பெண் வீட்டினருக்கு பாபுவின் மேல் நல்ல மரியாதை வந்தது.மேலே வந்தவன் ரூம் கதவைத் தட்ட சில நொடியில் கதவு திறக்கப்படவும் அங்கிருந்த கவிதாவோ வாங்க மாமா என்க...

பாப்பா கொஞ்சம் தள்ளு என் பொண்டாட்டி கிட்ட பேசணும் என்று பாபு சொல்ல,பாப்பா என்பதை கேட்ட கவிதாவோ அவனை முறைக்க,பாபுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

உள் பக்கம் திரும்பியவள் அக்கா உன் புருஷன் வளர்ந்த பனை மரம்தான் வந்திருக்கு என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்...

டேய் நீ பேசிட்டு வாடா நான் வெயிட் பண்றேன்னு பரத் அங்கிருந்து செல்ல,உள்ளே வந்த பாபுவோ அங்கிருந்த வருங்கால மனைவியை ஆசை தீர ரசித்தான்.

கண்மணிக்கு பாபுவின் பார்வை கூச்சத்தை கொடுக்க வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.ஸ்கிரீனிற்கு பின்னால் நின்று கொண்டிருந்த கவிதாவோ நான் வரலாமா வரக்கூடாதா?

நந்தி போல இல்லாமல் இருந்தால் சந்தோஷம் என்று பாபு சொல்ல அப்போ இங்கதான் இருப்பேன் என்றாள்.எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை என்று பாபு சொல்லவும் ஐயோ என்று அங்கிருந்து வெளியே ஓடிவிட்டாள்..

பின்னர் கண்ணை மூடி திறந்தவன் அவள் உதட்டை சிறைப்படுத்தி நீண்ட முத்தத்தை மனைவிக்கு பரிசளித்தவன் நான் ஊருக்கு கிளம்புறேனு கீழே வந்த பாபு கிளம்பலாம் பா என்றவன் கண்மணி வீட்டினரிடம் வரோங்க மாமா என்க,நல்லபடியா போயிட்டு வாங்கப்பா என்று சொல்லவும் அவர்களும் இரண்டு பஸ்ஸில் ஏறி சோழனூரை நோக்கி புறப்பட்டனர் .

கண்மணி வீட்டினரோடு ஒருவித தடுமாற்றத்துடன் எஸ்தரும் மகியும் இருந்தனர்.

அவர்களுக்கு தெரிந்த ஏதாவது பிரச்சனை வருவதற்கு முன் நாமே சொல்லிவிடலாமென நினைத்த மகி சம்பந்தி உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..

அவரைப் பார்த்து செல்லதுரை உங்க குடும்ப விஷயம் அது உங்களோடு இருக்கட்டும் சம்மந்தி.என் பையன் எல்லா விஷயத்தையும் எங்களுக்கு சொல்லிட்டான்.நீங்க போயி அங்க சம்பந்தியம்மாவ பாருங்க.அங்க நம்ம வீட்ல தான் இருக்காங்க.

நாங்க இங்க இருக்கிறோம் நீங்க கிளம்புங்க என்கவும் இவ்வளவு எளிதாக அவர்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்பது அவர்கள் அதிர்ந்த முகத்திலே தெரிந்தது.

பின்னர் மகனிடம் திரும்பியவர் செழியா கூப்பிட்டு போ என்கவும் வாங்க என்றவாறு வெளியே வந்து காரை எடுக்க ஷமீராவோ ஏதோ சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல் முன்சீட்டில் உட்கார,மகி-எஸ்தர் பின் சீட்டில் உட்கார்ந்ததும் பக்கத்து தெருவில் இருக்கும் வீட்டிற்கு வந்து காரை நிறுத்தினான்.

மகி வேகமாக இறங்கி உள்ளே போக எஸ்தரோ இரும்பு போல அசையாமல் உட்கார்ந்திருந்தார்.அதற்கு மேல் ஷமீராவும் இருக்க,இருவரையும் பார்த்த செழியன்,அத்தை...

உள்ள ஜூலியோட அம்மாவுக்கு ட்ரிப்ஸ் ஏறிட்டு இருக்கு.தனது பொண்ணை பார்த்த அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான்.நீங்க உள்ள போனீங்கனா உங்களுக்கு எல்லா விஷயமும் தெரியும்.

உங்களுக்கும் மனசு விட்டு கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கும். மூன்றாவது மனுஷனா நான் அந்த இடத்தில் இருக்கிறது நல்லாருக்காது.எனக்கு அதில் விருப்பம் கிடையாது.

நீங்க ரெண்டு பேரும் உள்ளே போங்க என்கவும் கணவரை பார்த்த ஷமீராவுக்கு அழுகை வந்தது.ஏய் பைத்தியம் நான் இருக்கேன் டி.நீ எதுக்கு டி கலங்குற போ.

எப்படி இருந்தாலும் ஜூலி என் அண்ணனோட பொண்டாட்டி புரியுதா? உன்னோட அக்கா...இதை யாராலும் மாற்ற முடியாது..

மாசமா இருக்கிற பொண்ணு பார்த்து நடந்துக்க என்றவன் மனைவியின் தோளை தட்டிக் கொடுக்க அவளும் சரி என்று தலையைத்துவிட்டு கார் கதவை திறந்து கீழே இறங்கவும் எஸ்தரும் வேறு வழி இல்லையே என்று மனதில் எண்ணியபடி இறங்கினார்.

ஜூலிக்காக வீட்டிற்குள் வர கீழே இருக்கும் ரூமில் தான் மானசாவிற்கு டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருப்பது தெரிந்தது.

"ஜூலியோ ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்".

மானசாவிற்கு துணையாக ரூபாவும் தீபனும் ரூமில் இருக்க,ருத்ரனோ ஏதோ ஒன்றை ஆற்றிக் கொண்டு வந்தவன் இவர்களை பார்த்து அத்தை,ஷமீரா சாப்டீங்களா என்க,ஹம் என்று தலையசைத்தனர்..

கணவரின் குரலைக் கேட்டு கண்ணை திறந்து ஜூலி சற்று தள்ளி நிற்கும் இருவரையும் பார்த்தவள் வேகமாக எழுந்து போய் எஸ்தரை அணைத்துக் கொண்டாள்.

அவள் உடல் குலுங்குவதிலையே அழுகிறாள் என்பது எஸ்தருக்கு தெரியும்.அதான் அப்பா அம்மா உயிரோடு இருக்காங்க இல்லையா உன்னோட ஆசை தீர்ந்துவிட்டது வேற என்ன டா என்கவும் அதில் நிமிர்ந்தவள் ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க தான் என் அம்மா அதை யாராலும் மாற்ற முடியாது,அதேபோல ஷமீரா என்னோட தங்கச்சி தான்...

எனக்கு தெரிய வேண்டியது எல்லாம் என்று தயங்கியவள் பின்னர் கண்ணை மூடி திறந்து விட்டு எப்படி அப்பா உங்களை கல்யாணம் பண்ணுனாங்க?

இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு தான் நீங்க வீட்டை விட்டு வந்தீங்களா?

பதில் சொல்லுங்கள் மா?

எஸ்தரோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், சொல்லுங்கம்மா நீங்க உண்மைய சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும். அதனால் தான் உங்க கிட்ட கேட்கிறேன்..

ஹம் என்றவறோ ஷமீராவை தேடி வனிச்சூருக்கு வந்து போன அன்று இரவு மகியின் போனிற்கு வந்த அழைப்பை கேட்ட பிறகு தான் உங்க அப்பாவுக்கு இன்னொரு கல்யாணம் ஆன விஷயமே எனக்கு தெரியும்.

அதன் பிறகு அங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை.பிறகு வீட்டை விட்டுப் போனது எல்லாம் ஜூலியிடம் சொல்ல தற்பொழுது தனது தந்தையின் மேல் தான் ஜூலிக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது..

ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கும்போது எப்படி இன்னொரு கல்யாணம் பண்ணலாம்?

சட்டப்படி இது தப்பு இல்லையா?

எப்படி இதை செய்ய மனசு வந்தது?

டாடிகிட்ட இதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்கும் மனைவியின் அந்த கோபமான குரலை கேட்ட ருத்ரன்,ஏய் ஜூலி அறிவு இருக்காடி???

வயிற்றில் குழந்தை இருக்கு டி. எதற்கு தேவை இல்லாம இந்த விஷயத்துல எமோஷனல் ஆகிட்டிருக்கொ??என்னமோ புதுசா உலகத்தில் இல்லாத அப்பா அம்மாவை கண்ட போல மத்தவங்கள் உனக்கு கண்ணு தெரியலையா ??

இத்தனை வருஷம் உன் கூட இருக்கிற நாங்க மனுஷன் இல்லையா என்று அவள் கவனத்தை திசைதிருப்ப, கணவன் சொன்னதைக் கேட்டவள் ஐயையோ அப்படி இல்லைங்க.எனக்கு நீங்க தான் முக்கியம் என்றவளோ வேகமாக போய் ருத்தரனை அணைத்துக் கொண்டாள்.

பின்னர் ஷமீரா-எஸ்தரை பார்த்த ருத்ரன் நீங்க போங்கள் என்று தலையசைக்க அவர்கள் இருவரும் மானசா இருக்கும் ரூமை நோக்கி செல்ல இரண்டு பேருக்கும் நடை தடுமாறியது..

என் வாழ்க்கையில் இப்படி ஒரு கூத்து நடக்க நானே தான் காரணம்.பெத்தவள் பேச்சை ஒரு முறை கேட்டிருந்தால் இந்த நிலைக்கு வந்திருப்பேனா?

ஏன் ஆண்டவரே இப்படி என தனக்குள் வேதனைப்பட்ட எஸ்தரோ வாசல் கதவின் அருகில் வந்து தயங்கி நிற்க...

ஷமீராவோ யாரோ ஒரு மூணாவது ஆளை பார்ப்பது போல உள்ளே போனவள் அங்கிருந்த மானசாவை பார்த்து விட்டு வெளியேறினாள்.

வீழ்ந்தேனடி...
 
Last edited by a moderator:

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top