• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
404
வனிச்சூர்:

வீட்டிற்கு பக்கத்திலே பெரிய காலியிடம் இருப்பதால் அதிலேயே நிச்சயதார்த்தம் நடப்பதற்காக பந்தல் போடப்பட்டிருந்து.

வீட்டின் முன்னால் வந்து கார் நிற்க,அதிலிருந்து இறங்கிய எஸ்தருக்கோ ஒரு பக்கம் மனது குற்ற உணர்ச்சியாக இருக்க,ஆனால் வீட்டினரோ அவரை மரியாதையோடு வரவேற்து நலம் விசாரிக்கவும் அதன் பிறகு இயல்பானர்.

எங்கே ஷமீராவை காணுமென விசாரிக்க இப்போது தான் வீட்டுக்கு போயிருக்கு மா.இரு மா வரச் சொல்கிறேனென்று சுமதி பாட்டி சொல்ல,இல்லைங்க மா...

நான் போய் நேரில் பார்ப்பது தான் மரியாதை...

ஜூலி நீயும் ரூபாவும் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள் நான் போய் ஷமிய பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்ல,அம்மா சட்டப்படி சம்மந்தி வீட்டுக்கு நம்ம தான் போகணும்.வா ஜூலி போயிட்டு வரலாம் என்று தீபன் கூப்பிட,ஓஹோ அப்படியா சங்கதி நல்லது நல்லது என்று ருத்ரனும் ரூபாவும் சிரித்தனர்.

பின்னர் மூவரும் ஷமீரா வீட்டிற்காக வாங்கிய தின்பண்டங்களோடு பக்கத்து தெருவில் இருக்கும் செழியனின் வீட்டிற்கு வர,அப்பொழுதுதான் செல்லதுரையும் வானதியும் விஷேசம் நடக்கும் வீட்டிற்கு போக வெளியே வந்தவர்கள் வாசலில் கார் வந்து நிற்பதை பார்த்தது யார் என்று பார்க்க எஸ்தர் இறங்கி வருவது தெரிந்தது.

வா மா என்று செல்லத்துரை அன்பாக அழைக்க,வானதியோ வாங்க சம்பந்தி என்க..தன்னை எப்படி எதிர்நோக்குவார்களோ என்று ஒரு பக்கம் யோசனையோடு இருந்து எஸ்தருக்கு இவர்களின் இந்த அழைப்பு அதிர்ச்சியாக இருந்தது

மாமா இதுதான் எங்க அம்மா இதுதான் என் தங்கச்சி ஜூலி,உங்கள் மகன் ருத்ரன் மனைவி என்கவும் அப்படியா வா தாயி என்றவர் உள்ள வாங்க என்று அழைத்துப் போனவர்கள் அங்கிருந்த சோபாவில் உட்கார சொன்னவர்,வானதி மருமகளை கூப்பிடு..

அதற்கு முன்ன வந்தவங்களுக்கு மோர் கலக்கி கொண்டுட்டு வா என்கவும் எஸ்தருக்கோ முதன் முதலில் இந்த வீட்டுக்கு வந்தபோது நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

பழைய கதையை கிண்டாமல் பரஸ்பரம் நலம் விசாரித்து பேசிக் கொண்டிருக்க மூவருக்கும் மோர் கலக்கி எடுத்துட்டு வந்த வானதி இந்தாங்கண்ணி குடிங்க என்கவும்,அவரின் உரிமையான அந்த அழைப்பு எஸ்ருக்கு மனதிற்கு நிறைவை கொடுத்தது.

உங்க மருமகள் நல்லா குடும்பம் பண்றாளா??

எல்லார்கூடையும் நல்லா பழகுறாளா?

அங்க தனியாவே பிறந்து வளர்ந்து பழக்கப்பட்டவள்.இங்கு உள்ள சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் உங்க மருமகளுக்கு தெரியாது.ஆனால் ஒருமுறை சொல்லி கொடுத்தாள் கற்றுப்பாள்.

அவளால் யாருக்கும் ஒன்னும் சங்கடமில்லையே என்று வருத்தம் கலந்து ஒரு தாயாக பரிதவிப்போடு எஸ்தர் கேட்க...ஐயையோ ஏன் இப்படி?

மருமகள் மேல எந்த குறையும் இல்லைங்கண்ணி.செழியன் பொண்டாட்டியை தெரியாதவங்க சொந்தக்காரங்க யாருமே இருக்க மாட்டாங்க.

அதை நாங்க சொல்றதை விட நாலு பேர் சொல்லி நீங்கள் கேட்டால் தான் உங்களுக்கே பெருமையா இருக்கும் என்று செல்லதுரை சொல்லும் போது வெளியே போயிட்டு வீட்டிற்குள் வந்த செழியனோ அங்கிருந்தவர்களை பார்த்து சற்று அதிர்ந்து போனோன்.

பின்னர் வாங்கத்தை வா மச்சான் வாடா ஜூலி என்று நலம் விசாரிக்க, வரோங்க தம்பி நல்லா இருக்கீங்களா என்றார்.

தீபனோ போலி போலிசூஊஊசூஊஊஊ என்றவாறு செழியனை அணைத்தவன் என்ன மாப்பி,என் தங்கச்சி நிச்சயதார்த்தத்தில் ஒரு புடி புடிக்கலாம்னு வயிறு ரொம்ப காய போட்டு இருக்கியோ என்கவும், ஏண்டா சொல்ல மாட்ட...

எங்க வீட்ல என்ன சாப்பாடு இல்லையாடா?உன் தொங்கச்சி பங்ஷன்ல சாப்பிட ஒத்த காலில் நிக்கிறேனென்று மாமனும் மச்சானும் கலாய்த்துக்கொண்டதை கேட்க அவர்களுக்கு சிரிப்பு வந்தது.

அப்பொழுது எஸ்தரோ சம்பந்தி உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் இத நீங்க எப்படி எடுத்துப்பீங்கன்னு தெரியல.என்றைக்காச்சும் ஒரு நாளைக்கு இந்த விஷயம் தெரிஞ்சு நீங்க என் பொண்ணை தவறாக நினைக்க கூடாது என்கும் போது அங்கு வந்த கண்ணன் எல்லாரும் மதியம் சாப்பாடு சாப்பிடுவதற்கு வர சொல்றாங்க வாங்க...அப்புறம் பேசிக்கலாம் என்றான்.

அதோட அந்த பேச்சும் நின்று விட்டது.

மதிய உணவு பரிமாற,கேளி காலாட்டக்களோடு சாப்பிட்டு முடித்தவர்கள் சாயந்திரம் நடக்க போகும் நிச்சயதார்த்தத்துக்கு தயாரானார்கள்.

நேரமும் கடந்து செல்ல மாப்பிள்ளை வீட்டினர் ஊருக்குள் வந்து விட்டதாக யாரோ வந்து சொல்லவும்,குலதெய்வ கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அழைத்துவர வேண்டும் என்று தம்புசாமி தாத்தா சொல்ல, பெரிய மாமாவும் தொரை மச்சானும் அங்கே போயிருக்கிறார்கள் பா என்று கனலரசன் சொல்ல அவரும் சரியென்றார்.

பஸ் வருவதை பார்த்த வீரையன் தாத்தாவும் செல்லதுரையும் கையை காட்டி நிறுத்தினார்கள.

பஸ்ஸிலிருந்து கீழே இறங்கி வந்த அந்தோணி வணக்கம் எப்படி இருக்கீங்க என்க,நல்லா இருக்கோம் வாங்க நம்ம குல தெய்வத்தை கும்பிட்டு போகலாம் என்கவும்,பெண் வீட்டினர் பண்பாடு என்பதால் அவர்கள் கிறிஸ்டியனாக இருந்தாலும் கீழே இறங்கி போக கண்மணிக்காக வாங்கிட்டு வந்த புடவை மற்றும் சீர்வரிசையை பொருட்களை எடுத்துட்டு வந்து சாமிக்கு முன்னாடி வைக்கவும் பூசாரியும் தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி அம்மனுக்கு காட்டிவிட்டு மஞ்சள் குங்குமத்தை எடுத்து வந்து புடவையின் மேல் வைத்தவர் தீர்க்க சுமங்கலியா நீடூழி வாழ்க என்று வாழ்த்தினார்.

பின்னர் வாங்க என்று அவர்களை அழைத்துக் கொண்டு இவர்கள் வண்டியில் முன்னாடி சென்றார்கள்.

பத்து நிமிட பயணத்தில் தெருவுக்குள் நுழைந்த பஸ்ஸோ வீட்டுக்கு முன்னால் பந்தல் போட்டிருப்பதை பார்த்து சில அடி தள்ளியே பஸ்ஸை நிறுத்தினார்கள்.

மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்துட்டாங்க என்று யாரோ ஒருவர் சொல்லவும் பட்டாசு சத்தம் விண்ணை பிளக்க,அங்கே ஒரே பரபரப்பானது.

பஸ்ஸிலிருந்து இறங்கியவர்களோ மேளதாளம் இசைக்க,சீர்வரிசை தட்டோடு கண்மணியின் வீட்டை நோக்கி வரவாசலில் நின்று குடும்பமாக வரவேற்தனர்..

மகிக்கோ எஸ்தரை பற்றி கேட்டால் என்ன சொல்வது என்று ஒரே யோசனையாகவே இருந்தது.அதுவும் இல்லாமல் அவரிடம் இங்கு இருப்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ என்று ஒரு பக்கமும் சங்கடமாக இருக்க..,

நீயும் நானும் ஒரே குணம் கிடையாது என்பதை செல்லதுரை தம்பதிகளும் செழியனின் சொந்தக்காரர்களும் அவரை இன்முகமாக வரவேற்து நலம் விசாரிக்க,அவருக்கே அவரை நினைத்து கொஞ்சம் குற்ற உணர்ச்சியாக இருந்தது.

தான் இங்கு வந்திருக்கும் போது எப்படி எல்லாம் பேசி சென்றோம் என்பதை நினைத்தவர்,தனது மகள் அம்மா எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று ஒரு பக்கம் உள்ளுக்குள் பயமா இருக்கவும்,எங்கேயாவது மகள் கண்ணில் படுகிறாளா என்று அவரும் அங்கே இங்கேயென தேட,அங்கு இருப்பது போல் தெரியவில்லை.

கண்மணிக்கு அவள் ரூமிலே பியூட்டிஷியன் அலங்காரம் பண்ணிக் கொண்டிருக்க ஷமீரா எஸ்தர் கவிதாவும் அங்கிருந்தனர்.

சோழனூரிலிருந்து வந்து விட்டனர் என்பதை கேள்விப்பட்டார்கள் தவிர கீழே வரவில்லை.எஸ்தருக்கோ மகியின் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை. ஃபங்ஷன் நடக்கும்போது சொந்த பந்தங்களை பார்த்து நலம் விசாரித்துக் கொள்ளலாம் என்று அவரும் அமைதியாகவே அங்கு உட்கார்ந்திருந்தார்.

தனது தாயின் முகத்தை பார்த்த ஷமீராவோ கீழே போகலையா மா என கண்களால் ஜாடை காட்ட,இருக்கட்டும் என்று தலையசைத்தார்..

உறவினர்களோ அங்கிருந்து சொந்த பந்தங்களையும் விட்டு வசதியையும் பார்த்து அந்தோணிக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் கிடைத்திருக்கு என்று சிலர் பெருமையாகவும் சிலர் உள்ளுக்குள் பொறாமை பட்டனர்..

ஆமா மகி எங்கே உன் மகள் மருமகனை காணும் என்று சோழனூரிலிருந்து வந்தவர்கள் கேட்க,அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மகியோ தனது நெற்றியை தடவ...,

அந்த நேரம் அங்கு வந்த செழியன் அவர்களை பார்த்து வணக்கம் என்றவன்,வாங்கப்பா என்று அந்தோணியின் கையை பிடிக்க,எந்திரிச்சி அவன் தோளில் கையை போட்டவர் இதுதான் மாமா உங்க பேத்தியோட புருஷன்,என் தங்கச்சியோட மருமகன்,என்னோட இன்னொரு பையன் இளஞ்செழியன் ஐபிஎஸ் ஆபிசர் என்று அந்தோணி பெருமையோடு சொல்ல..

என்னாது நம்ப ஷமியோட வீட்டுக்காரர் போலீசாஆஆஆ என்று சொந்தங்கள் மட்டும் இல்லை மகியும் அதிர்ந்து போனார்.

மகனை முறைத்தவாறு அங்கு வந்து செல்லதுரை உன் பொண்டாட்டியை கூப்பிட்டு வாப்பா என்க,தந்தையின் முகத்தை பார்த்தவன் பின்னர் மகியிடம் வாங்க மாமா என்று கையைக் கூப்பி சொல்ல,அதிர்வில் இருந்த மகியோ வரேங்க மாப்பிள்ளை என்றவர் நல்லா இருக்கீங்களா?ஷமீரா நல்லாருக்காளா?

ரொம்ப நல்லாருக்கா என்றவன் இதோ வரச் சொல்றேன் என்றவாறு உள்ளே போனான்.

மாடிக்கு வந்தவன் கண்மணியின் ரூம் கதவை தட்ட,உள்ளே இருந்த கவிதாவோ அனேகமாக அந்த விருமாண்டியாக தான் கா இருக்கும் என்று சொல்லிக் கொண்டே போய் கதவை திறக்கவும்,அங்கு செழியன் நிற்பதை பார்த்தவள் நான் தான் சரியா சொன்னேன் இல்லையா...

பொண்டாட்டியை பார்க்காமல் இந்த மனுஷனால இருக்கவே முடியாது பாருங்கள் என்க..

ஆமா டி அறைவேக்காடு,முதலில் என் பொண்டாட்டிய வர சொல்லு டி வாயாடி..

அலங்காரம் பண்ணுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த ஷமீராவோ இதோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு கணவனிடம் வந்தவள் என்னங்க?

சீக்கிரம் கீழ வாடி...!!

உங்க ஊர்ல இருந்து எல்லாரும் வந்திருக்கிறார்கள்.அப்பா வேற முறைக்கிறார் என்கவும்,ஹம் என்றவளோ கணவனோடு கீழே இறங்கி வந்தாள்

வெளியே போன் பேசிக் கொண்டிருந்த ஜேம்ஸ் உள்ளே வர அவரை தனது சின்ன மச்சானென்று சம்பந்தி வீட்டினருக்கு அந்தோணி அறிமுகம் பண்ண,அவரிடம் நலம் விசாரித்து பொதுவாக பேசிக் கொண்டிருக்கும் போது மனைவியோடு அங்கு வந்த செழியனை பார்த்த ஜேம்ஸோ,செழியன் நீங்களா என்று அதிர... அவனுக்கும் அங்கிருந்த ஜேம்ஸை பார்த்து அதிர்வாகத்தான் இருந்தது...

ஷமீராவோ தனது சொந்தபந்தங்களை பார்த்த சந்தோஷத்தில் கண்கலங்க, அவர்களோ அவளை தேற்றினர்.ஆனால் மறந்தும் மகி பக்கம் அவள் திரும்பவேயில்லை.

மகியின் பார்வை முழுவதும் மகளின் மேல் தான் இருந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
404
சித்தப்பா என்று ஷமீரா விசும்ப...அண்ணன் மகளின் தலையை தடவி கொடுத்த ஜேம்ஸ்,உன்கிட்ட அப்புறம் பேசுறேன் டா.

முதலில் செழியன் எப்படி இங்கே??

அது தெரிஞ்சுக்கணும் இல்லனா எனக்கு தலையே வெடிச்சு போயிடும் போல இருக்கென்றவாறு செழியனை பார்த்தவர் நீங்க எப்படி தம்பி இங்கு?

சார் இது என்னோட தாய் மாமா வீடு.என் தாய் மாமா பொண்ணை தான் பாபுக்கு நிச்சயம் பண்ண போறது என்றான்..

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அந்தோணியோ ஏன் மச்சான் உனக்கு எப்படி செழியனை தெரியும்?

அட...நம்மளோட மாலுக்கு மசாலா பொருள் எல்லாம் இவங்க ஃபேக்டரில் இருந்து தான் வருது மாமா.தம்பி தானே கே.கே மசாலா பேக்டரியோட சூப்பர்வைசர்.நிறையவாட்டி நம்ம மாலுக்கு வந்திருக்கிறார்.

தம்பி வனிச்சூர்னு தெரியுமே தவிர இப்படி நம்ம நெருங்கின சொந்தமா இருப்பாருன்னு தெரியாது மாமா என்கவும்,

அப்படியா...

இன்னொரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க,உன்னுடைய செல்ல பொண்ணோட புருசனே செழியன் தான் என்கவும்,என்ன மச்சான் சொல்றீங்க என்று மீண்டும் ஜேம்ஸ் அதிர.

ஆமாங்க சார்..!!

உங்க பொண்ணு ஷமீராவை நான்தான் கல்யாணம் பண்ணிருக்கேன் சார்.உங்கள் அண்ணன் பாஷையில் சொல்லனுமென்றால் என் கூட தான் உங்க பொண்ணு ஓடி வந்தாள்..

அது மட்டும் இல்ல ஜேம்ஸ்,உன்னோட மருமகன் ஐபிஎஸ் ஆபீஸரா இருக்கான் இதையும் தெரிஞ்சுக்க என்று அந்தோணி சிரிக்க,இது வேறயாஆஆஆ!!!

ஒரு அப்பாவியை கூப்பிட்டு வந்து எத்தனை ஷாக் தான் கொடுப்பீங்க மாமா?

ஆண்டவரேஏஏஏ...என்னால முடியல என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு ஜேம்ஸ் சொல்ல, அதை பார்த்த செழியனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

ஆமா,எல்லாரும் இங்க இருக்கிறோம் எங்க நம்ம எஸ்தரை காணோமே? முன்னாடியே வந்துவிட்டது என்று சொன்னீர்களேனு அந்தோணியின் சித்தப்பா கேட்க.. அந்தோணிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை..

அப்பொழுது அங்கு வந்த தம்புசாமி தாத்தா நல்ல நேரமாச்சுடுச்சு சடங்கு ஆரம்பிச்சுடலாம் என்கவும்,அப்பாடா நல்லவேளை காப்பாத்த வந்தாரே என்று மனதிற்குள் நன்றி சொல்லிய அந்தோணி மகிமையை பார்த்து முறைக்க,அவரோ கீழே குனிந்து கொண்டார்..

மாப்பிள்ளையை மேடைக்கு வர சொல்லுங்க என்று அங்கிருந்த ஐயர் சொல்லவும்,பாபுவும் மேடைக்கு போக பின்னர் பொண்ணு வீட்டு சார்பாக அவனுக்கான ஆடை அலங்காரப் பொருட்கள் அடங்கிய தாம்பாளத்தை, தம்புசாமி தாத்தாவும் அவர் மனைவியும் இணைந்து கொடுக்க அதை வாங்கிக் கொண்டான்.

பின்னர் பொண்ணை வர சொல்லுங்கம்மா என்கவும்,உள்ளே போன ஷமீராவோ கண்மணியை அழைத்துக் கொண்டு மேடைக்கு வர, அவளுக்கு வாங்கிட்டு வந்த புடவை மற்ற பொருட்கள் அடங்கிய தாம்பாளத்தை அந்தோணியும் ராணியும் கொடுக்க அவளும் வாங்கிக் கொண்டு மாடிக்கு போனாள்.

"வந்தவர்களை கவனித்துக் கொண்டாலும் பொண்டாட்டியை சைட் அடிக்கும் வேலை மட்டும் செழியனும் சிறப்பாக செய்து கொண்டிருந்தான்".

அரக்கு குங்குமகலரில் தங்க சரிகை கலந்த பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு அளவான தங்க நகைகளோடு, உள்ளத்தில் இருக்கும் மகிழ்ச்சியை அப்பட்டமாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கும் மனைவியின் அதீத அழகை ரசித்தவனுக்கு,உடனே மனைவியின் இதழ் ஒற்றல் வேண்டுமென்று உள்ளம் அடம் பிடித்தது.

முரண்டு பண்ணும் மனதிடம் இரு இரு என்றவன் குறுகுறுவென மனைவியை பார்க்க,சில அடி தூரத்தில் தனது உறவினர்களோடு பேசிக் கொண்டிருந்தவளோ ஏதோ ஓர் உந்துதலில் திரும்ப,அங்கே கணவன் தன்னை பார்த்தவாறு நிற்பதை கண்டவள் எப்போதும் போல இயல்பாக சிரிக்க....

சண்டாளி...சிரிச்சு கொல்றாளே...

ஆஆஆஆ....

செழியா கன்ட்ரோல் டா என தனக்குள் சொல்லியவன் உள்ளே வா என கண்ணசைக்க முடியாதென்று திரும்பிக் கொண்டாள்.

சிறிது நொடிகள் சென்று ஷமீரா திரும்பி பார்க்க அவளை முறைத்தபடி கையை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

கணவனின் முகத்தை பார்த்தவள் சரி வாங்க என்று தலையசைத்து விட்டு அங்கிருந்தவர்களிடம் இதோ வந்துடுறேன் என்று சொல்லிக்கொண்டு உள்ளே போக,செழியனும் இயல்பாக அங்கிருந்தவர்களூடன் பேசிக்கொண்டு மனைவியின் பின்னாடி உள்ளே வந்தான்..

இந்த மனுஷன் நல்லா தான இருந்தாரு எதுக்கு இப்படி முறைச்சுக் கொண்டிருக்கிறார் என்று முணவிக் கொண்டிருக்கும் போது வேகமாக வந்து மனைவியை ஒரு கையால் அணைத்து, இன்னொரு கையால் அவள் வாயை பொத்திக்கொண்டு கீழே இருக்கும் அறைக்குள் அழைத்து போய் கதவை தாழ்ப்பாள் போட...

ஐயோ இளா என்ன பண்றீங்க?

எல்லாரும் அங்க இருக்காங்க இப்ப எதுக்கு என்ன வர சொன்னிங்க என்று பதட்டமாக ஷமீரா கேட்க மனைவியை இரண்டு அடி தள்ளி நிற்க வைத்தவன் அவள் உச்சி முதல் பாதம் வரை ரசிக்க கணவனின் பார்வையோ வெட்கத்தை தரவும் வேறு பக்கம் திரும்பிக் கொண்டவள் இதுக்கு தான் அய்யா வர சொன்னீங்களா?

"ரொம்ப அழகா இருக்கடி"

என்னால அங்க கண்ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்க முடியவில்லை என்றவனோ எட்டி மனைவியை இழுத்து தன்னோடு இறுக்கியவன் அவள் இதழை சிறை செய்ய கணவனின் செயலுக்கு ஷமீராவும் இசைந்தாள்.

நீண்ட முத்தத்தை கொடுத்தும் பெற்றுக் கொண்டவன் பின்னர் மனமே இல்லாமல் மனைவியை விலக்கிவிட்டு கலைந்திருந்த அவள் கூந்தலை அங்கிருந்த சீப்பால் சரி பண்ண,அவளோ முறைத்துக் கொண்டிருந்தாள்.

என்ன டி...?

இவ்ளோ நேரம் ரசிச்சிட்டு தான இருந்த... இப்போது என்னவாம்?

டைம் வேஸ்ட் பண்ணாத வா வா பங்ஷனுக்கு நேரமாகிடும் என்றவனோ மனைவியை தோளோடு அணைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியே போனான்.

பொண்ணு பார்க்க நல்லாருக்கு.
நம்ப பாபுக்கு ஏற்ற ஜோடி தான்.என்ன பொண்ணு மட்டும் தான் இந்து குடும்ப.வேற ஒன்னும் குறை சொல்ற போல இல்லை என்று சொந்த பந்தங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மானசாவின் பார்வை முழுவதும் அங்கிருந்த ஷமீராவின் மீதுதான் இருந்தது.

நம்ப பொண்ணு உயிரோடு இருந்தால் இப்படி தானே கல்யாணம் ஆகி குடும்பமாய் இருப்பாள் என்று நினைத்தவருக்கு அழுகை வந்தது.

நல்ல விசேஷம் நடக்கும்போது நாம் அழுதால் அது தவறாக போய்விடும் என்று வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

இவ்வளவு நேரம் தலைசுற்றலோடு வாந்தியாக இருக்கவும் ரூமில் படுத்திருந்த ஜூலிக்கு இப்போது நன்றாக இருப்பது போல இருக்கவும், கணவனோடு அங்கு வந்தவள் சொந்த பந்தங்களையும்,மாப்பிள்ளை வழி கூட்டத்தை பார்த்துக் கொண்டே வந்தவளோ அங்கிருந்த மகியை பார்த்து டேடிஈஈஈஈ என்று கத்தியவாறு மயங்கி சரிந்தாள்...

திடீரென்று ஒரு பெண் அப்பா என்று கத்திக்கொண்டு மயங்குவதை பார்த்து அங்கிருந்தவர்கள் என்ன ஆச்சு என்று பதட்டமாக,கீழே விழுவதற்கு முன்பே மனைவியை நெஞ்சோடு தாங்கியவன், யாரை பார்த்து இப்படி கத்துராளென்று நிமிர்ந்த ருத்ரனோ மகியை கண்டு ஓஓஓ அங்கிளை பார்த்துட்டாளா என்று அதிர்ந்து போனான்.

டேய் தடிமாடு...

என்னடா மரம் போல நிக்கிற என்றபடி அவன் தோளில் ஓங்கி ஒரு அடியை வைத்த தீபன்,தங்கையை தூக்கிக் கொண்டு உள்ளே போக அதன் பின்னே சுயத்திற்கு வந்தவன் வேகமாக ஓடினான்.சிறிது நேரம் அந்த இடம் முழுவதும் ஒரே பரபரப்பாக,மாசமா இருக்கிற பொண்ணில்லையா அதான் என்ற பேச்சு வந்தது. ..

ஜூலியின் முகத்தில் தண்ணீர் தெளிக்க,சிறிது நொடியில் கண்களை திறந்தவள் பட்டென்று வேகமாக எழுந்து என்னங்க என்னங்க என்னோட அப்பா உயிரோடு இருக்கிறாங்க என்று ருத்ரனின் சட்டை பிடித்து குலுக்கிக் கொண்டே சொல்ல.....

என் தம்பி அவன் பொண்டாட்டி குடும்பமென்று ஒரு போட்டோவை காட்டினானே அப்பவே அது மகி அங்கிளென்று எனக்கும் தீபனுக்கும் தெரியும் டி என தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அதை காட்டிக்காமல் அப்படியா டி.. ஒரு நிமிஷம் இங்கேயே இரு நான் போய் அங்கிள் கிட்ட பேசி கூப்பிட்டு வரேன் என்றவன் தீபனிடம் கண்ணை காட்ட அவனும் தலையசைத்தான்..

கணவன் சொன்னதை கேட்ட ஜூலி இல்லைங்க நானும் வரேன்...ஏய் செல்லம் ஒருவேளை அது வேற யாரோ இருக்கலாமே?ஒருத்தங்க போல ஏழு பேர் இருப்பார்கள்னு சொல்லுவாங்களே உனக்கு ஞாபகம் இல்லையா?

ஜூலியோ அது எனக்கு தெரியாது..!!

என்னோட அப்பாவை எனக்கு தெரியாதா?வருஷம் போனால் முகம் மறந்துவிடுமா என்று கணவனை முறைத்தாள்.

ஹேய் ரிலாக்ஸ் ஜூலி...!

ஒரு நிமிஷம் அமைதியாக இரு.நான் போயிட்டு வந்துடுறேன் என்று வேகமாக வெளியே வந்த ருத்ரன் அங்கிருந்த மகியிடம் வந்தவன் சார் என்க...

திரும்பி பார்த்தவர் சொல்லுங்க தம்பி?.

தப்பா எடுத்துக்காதிங்க.ரெண்டு நிமிஷம் என் கூட வர முடியுமா என்கவும்,அவன் முகத்தில் இருந்த பதற்றமே ஏதோ விஷயம் என்பதை புரிந்து கொண்டவர் வாங்க தம்பி என்றவாறு எழ,அவரோடு சற்று தள்ளி வந்தவன் எப்படி கேட்பது என்று அவன் ஒருவித சங்கோஜத்தில் இருக்கவும் தம்பி எதோ பிரச்சனைன்னு தெரியுது.அதோட என்னிடம் ஏதோ கேட்கணும்னு நினைக்கிறீங்க கேளுங்கப்பா என்ன விஷயம்?

சார் நான் கேட்கிறேன் என்று நீங்கள் தப்பா எடுத்துக்காதீங்க நீங்க டெல்லியில் இருந்தீங்களா?

அவனை யோசனையாக பார்த்தவர் ஆமாப்பா டெல்லியில் இருந்தேன்..

ஓ உங்களோட பேரு மகிமை தாஸ் தானே என்றவன் நான் யாருன்னு தெரியலையா என்று அவரின் கை பிடித்துக் கொண்டு ருத்ரன் கேட்க, நிஜமா உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்த போல இல்லைங்க தம்பி...

சார் கொஞ்சம் நல்லா யோசித்து பாருங்கள்.என் முகத்தை போல டெல்லியில் உங்களுக்கு யாருடைய முகத்தையாவது பார்த்த போல ஏதாவது நினைவு வருதா என்றான்.

ருத்ரனின் முகத்தை சிறிது நிமிடம் உற்று பார்த்தவருக்கு யூனிபார்ம் போட்ட வம்சீகனின் ஞாபகம் வரவும்,சாரோட பையன் ருத்ரன்,ருத்ரான் தானேனு அதிர்வாக கேட்க...

"ஆமா அங்கிள் ருத்ரன் தான்"

ஆண்டவரே என்று அவனை அணைத்துக் கொண்டவர் 25 வருஷம் பிறகு உன்ன பார்ப்பேனென்று நான் கற்பனையில கூட நினைச்சு பார்க்கல. நீயும் ரூபாவும் ஸ்கூல் டூர் போனதால தான் அந்த விபத்தில் இருந்து தப்பிச்சீங்க.

அந்த விபத்தில் நம்ம பட்டு இறந்துட்டா ருத்ரா என்று அவர் அழ,அவரை அணைத்துக் கொண்டிருந்தவனோ விலகி அவர் வாயை மூடியவன் அப்படி சொல்லாதீங்க அங்கிள்.

உங்க பொண்ணு உயிருடன் தான் இருக்கிறாளென்க...என்ன சொல்ற ருத்ரா என்று அதிர்ந்து போன மகிக்கு இப்பொழுது தலை சுற்றுவது போல இருக்க,தடுமாறியவரை தாங்கிப் பிடித்தவன் ப்ளீஸ் அங்கிள் நீங்கள் உள்ளே வாங்க... பிறகு எதாக இருந்தாலும் பேசிக்கலாமென்க,சரி ருத்ரா என்கவும், இருவரும் பின் பக்க கதவு வழியாக உள்ளே வந்தனர்.

வீழ்ந்தேனடி....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top