• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
400
செழியன் வீடு:

கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு மேலே இருக்கும் ரூமிற்கு வந்து பார்க்க ஷமீராவோ நன்கு தூக்கத்தில் இருப்பது தெரிந்தது.

பிளான் பண்ணி தூங்கிருக்கா போல இருக்கட்டும்!!

எத்தனை நாளைக்கு தான் இப்படி கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுவனு நானும் பாக்க தாண்டி போறேன் என்று புலம்பிக்கொண்டு அவளின் பக்கத்தில் வந்து படுத்தவன் அவளை அணைத்துக் கொண்டு கண்ணை மூட சிறிது நிமிடத்தில் அவனும் தூங்கிவிட்டான்.

விடியலும் வழக்கம் போல் தொடங்க எழுந்து குளித்தவள் துணிகளை எல்லாம் துவைத்து மாடியில் காய போட்டு விட்டு கீழே வர காலை 6 மணியானது.

பின்னர் வழக்கமான வேலைகளை செய்து முடித்தவள் டீ போட்டு எடுத்துக் கொண்டு மாடிக்கு போக செழியனும் அப்பதான் ரெஸ்ட் ரூமில் இருந்து வந்தான்.

கணவன் முன்பு டீயை நீட்ட,ஏன் வாயை திறந்து குடிங்களென்று சொன்னால் உன் வாயில இருக்கு முத்து கொட்டிடுமாடி?.

வழக்கம்போல் அவள் அமைதியாக இருக்கவும் ரொம்ப தாண்டி பண்ற என்றவாறு டீயை வாங்கி குடித்தவன் தாத்தா வீட்டுக்கு போகணும் கிளம்பு என்றவனோ டீ கப்பை எடுத்துக் கொண்டு கீழே சென்று விட்டான்.

சிறிது நிமிடத்தில் ஷமீராவும் கிளம்பி வந்தவள் அத்தை
அங்கு தாத்தா வீட்டிற்கு போயிட்டு வரேன் என்கவும் சரி சரி.கழுத்தில் இன்னொரு செயின் போட்டு போ.யாராவது வந்து போவாங்க என்க..

இன்னொரு செயினாஆஆ என்று அவள் இழுக்க மௌனமாக சிரித்தவர் ஆமாம் ஆமாம்.அதோட அந்த கழுத்தை ஒட்டி போடுற அட்டிகையும் போட்டு போ என்றவாறு கிச்சனிற்குள் சென்றார்.

அய்யோஓஓஓ!

இவ்வளவு நகையை போட்டுகிட்டு எப்படி போகயென அவள் புலம்புவதை கேட்டவன் நாளைக்கு பங்ஷன்ல போட்டுக்கலாம்.இப்போதைக்கு இது போதும் வா டி என்றவாறு வெளியே போக ஷமீராவும் அவன் பின்னாடி சென்றாள்.

செழியன் புல்லட்டை ஸ்டார்ட் பண்ண பின்னாடி ஏறி உட்கார்ந்தாள்.பின்னர் இருவரும் தாத்தா வீட்டுக்கு வந்தனர்.

வாசலிலே அவளை இறக்கி விட்டவன் நீ உள்ளே போ நான் வரேனென்று அங்கிருந்து சென்றான்.

வீட்டிற்குள் வந்த ஷமீராவிடம் நலம் விசாரித்தவர்கள் பின்னர் மற்ற வேலைகளை பார்க்க தொடங்க நேரமும் கடந்து சென்றது.அம்மாடி ஊர்க்காரர்களுக்கு சொல்லணுமே என்றவாறு சுமதி பாட்டி பூ தொடுக்க இன்னும் அன்பும் கனலும் வரலையை சுமதி.

ஆம்பிளைங்க இல்லாமல் பொம்பள மட்டும் போய் சொன்னா நல்லாவா இருக்குமென்று தம்புசாமி தாத்தா கேட்கும் போது வெளியே போயிருந்த ஆண்களும் வீட்டிற்கு வந்தனர்.

கண்மணி டீ எடுத்து வா டி என்றவாறு சோபாவில் உட்கார்ந்த செழியன்,மாமா காய்கறி மளிகை சாமான் காலையிலே வந்துடும்.

"இந்தாங்க மீதி பணம்"

அந்த ரேகா பியூட்டிஷியனுக்கும் அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துட்டேன்.அப்போது தான் இவளை கொஞ்சமாவது பாக்குற போல இருக்கும் என்க...

பேரன் சொன்னதை கேட்ட தம்புசாமி தாத்தா,எலேய் எடுபட்ட பயலே என் பேத்திக்கு என்னடா குறைச்ச??உன் மொகர கட்டைய விட என் பேத்தி அழகா தான்டா இருக்குது என்கும் போது...

ஆமா ஆமா..!!

இந்த நொய்யோட பேத்தி உலக அழகி போட்டில கலந்துக்கிட்டு 50 பரிசு வாங்கி இருக்கு என் பேர மூஞ்சி தேஞ்ச திருவோடு போல இருக்கு என்றவாறு வீரையன் தாத்தா வீட்டிற்குள் வர அதுல என்ன சந்தேகம்???

உன் பேரன் மொகரையும் பாரு என் பேத்தி மொகரையும் பாரு யா. .!!

உனக்கெல்லாம் பொண்ணு கொடுத்ததே பெருசு மச்சான் என்று தம்புசாமி தாத்தா சிரிக்க,என் தலையெழுத்து யா..!!

அத்தமவ நொத்தமவனு உன் தங்கச்சியை கட்டி அனுபவிக்கிறேன் என்று வீரையன் தாத்தா முறைக்க...

அவ்வளவு கஷ்டப்பட்டு உன்னை யாரு யா என்கூட வாழ சொன்னது என்றவாறு விருமாயி பாட்டி உள்ளே வர,அடக்கடவுளே இந்த கொலகாறி பின்னாடி வருவதை மறந்துட்டேனே..

சும்மாவே தாளிப்பா!!!

இப்ப சொல்லவே வேணாம் என்று வீரையன் தாத்தா புலம்புவதை கேட்டு மற்றவர்களும் சிரித்து விட்டனர்.

சரி எல்லாருக்கும் சொல்ல போகலாமா என்று வீரையன் தாத்தா கேட்க போகலாம் மாமா என்ற அன்பரசன் அம்மா நீ வீட்ல இரு நாங்கள் போயிட்டு வந்துடுறோமென்க சரியா என்றார்..

பின்னர் அவர்கள் எல்லாம் கிளம்பி ஊரில் உள்ள அங்காளி பங்காளி கொண்டான் கொடுத்தான் வீட்டினருக்கெல்லாம் கண்மணி நிச்சயத்திற்கு வர சொல்லி சொல்லிவிட்டு வீட்டிற்கு வருவதற்கே இரவு 9 மணி ஆனது.

கண்மணியும் கவிதாவும் அவர்களுக்கெல்லாம் டிபனை செய்து தயாராக வைத்திருக்க இவர்களும் கையை கழுவிட்டு வந்து உட்கார புவனாவும் ரஞ்சனியும் பரிமாற,ஷமீரா சூடாக தோசை போட்டு கொடுக்கவும் கண்மணி எடுத்து வந்து தந்தாள்.

ஆண்கள் சாப்பிட்டு முடித்து வெளியே இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க,பெண்களும் சாப்பிட்டு முடித்து பாத்திரங்களை கழுவி வைக்க,அரைச்ச மருதாணியை எடுத்து வந்த புவனாவோ அவர்களை போட்டுக்க சொல்ல,ஷமீராவோ நான் அங்கு போய் போட்டுக்கிறேனென்றாள்

அக்கா...!!

நீ இங்கையே தங்கேன்.. நாம ஜாலியா இருக்கலாமே கா என்று கவிதா கேட்க,ஷமீராவிற்கும் தங்க ஆசை தான்.ஆனால் கணவன் என்ன சொல்வானோ என்று யோசனையானாள்..

அந்த நேரம் அவளை வீட்டுக்கு அழைத்துப் போக உள்ளே வந்த செழியனும் கவிதா சொன்னதைக் கேட்டவன் ரொம்ப நல்ல காரியம் பண்ணுன டி உன் அக்கா இங்கேயே இருக்கட்டும் நான் அங்கு நிம்மதியா தூங்குவேன் என்று அந்த சூழ்நிலையை இயல்பாக்கினான்.

அடிபொலி அடிபொலி...

அதான் விருமாண்டி சொல்லிட்டாரே பிறகு என்ன கா..வா வா நாம மாடிக்கு போகலாமென்று ஷமீராவின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கவிதா போக,கண்மணியோ மருதாணி கிண்ணத்தோடு அவளுங்களுக்கு பின்னாடி சென்றாள்

போகும் மனைவியை தான் செழியனும் பார்த்துக் கொண்டிருந்தான்.ஒரு வார்த்தை வேண்டாம் என்று சொல்கிறாளா பாரு என்று முணவியன்,சரி சுமதி நான் காலையில் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு அவனும் அங்கிருந்து வீட்டிற்கு சென்று விட்டான்.

மாடிக்கு வந்தவளோ புல்லட் சத்தம் கேட்டு ரோட்டை பார்க்க கணவன் போவது தெரிந்தது.சிறிது நொடிகள் சென்று வண்டியை நிறுத்தியவன் திரும்பி மாடியை பார்க்க...

அதற்குள் கணவனின் செயலை சுதாரித்தவளோ பின்னாடி தள்ளி போக செழியனுக்கு வெறுமையான மொட்டை மாடி மட்டுமே தெரிந்தது.ப்ச் என்றவாறு வேகமாக அங்கிருந்து சென்றான்.

மகன் மட்டும் வீட்டுக்குள் வருவதை பார்த்த வானதி,எங்கே இளா உன் பொண்டாட்டி?

நீ மட்டும் வர??

அது வந்து மா உன் மருமவளுங்க கூட இருக்கட்டும்னு வந்துட்டேன்.

ம்ம்...சரி பா.

இதை போல விஷேச நேரத்தில் எல்லாரும் ஒரு இடத்தில் இருப்பது நல்லாருக்கும்.நீ என்ன பண்ணுற உன் பொண்டாட்டிக்கு மாத்து துணி எடுத்துட்டு காலையிலேயே போ..

சரி மா என்றவன் மேலே இருக்கும் ரூமிற்குள் வர மனைவி இல்லாத அறையோ வெறுமையாக இருப்பது போல தோணவும் தன்னவளின் மேலே அவ்வளவு ஆத்திரம் வந்தது.

பொதிரென்று மெத்தையில் விழுந்தவனை பார்த்த மனசாட்சி ஏன்டா உனக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியலையா??

இத்தனை வருஷமா இந்த கட்டிலில் தனியா தானே படுத்திருந்த??

என்னமோ பிறந்ததிலிருந்து உன் பொண்டாட்டி கூடயே இருந்த போல ஓவரா பண்றியே... முதல்ல உன் பொண்டாட்டியை சமாதானப்படுத்துற வழிய பாருடா? ??

இல்லனாக்க அவளுக்கு இருக்கிற கோபத்துக்கு மாச கணக்குல அங்கே தங்குனாலும் தங்கிடுவாள் என்க, அதைக் கேட்டவன் கண்டிப்பா நீ சொல்றது உண்மைதான் அவள் தாங்குவாள்..

நாளைக்கு இங்க வந்து தானே ஆகணும்.அப்ப அவளுக்கு இருக்கு என்று சொல்லிக் கொண்டு புரண்டு புரண்டு படுத்தவன் ஒருவழியாக தூங்கினான்.

முதலில் கண்மணியின் இரண்டு கைகளிலும் மருதாணி போட்டு முடித்ததும் பின்னர் ஷமீராவுக்கு கவிதா போட்டு விட கவிதாவோ தன் ஒரு கையில் போட்டுக் கொண்டிருக்கும் போது புவனாவும் ரஞ்சனியும் மாடிக்கு வந்தனர்.

இன்னும் முடியலையா??

சாரல் வேற அதிகமா வீசுது!!

நாளைக்கு பங்க்ஷன் இருக்கே மா..மருதாணி வேற போட்டுக்கிட்டு இருக்கீங்க ரொம்ப குளிர்ச்சி என்றவர் கவிதாவின் இன்னொரு கையிலும் மருதாணி போட்டு விட,ரஞ்சனியும் போட்டுக்கொண்டார்..

நான் கீழே போய் மருதாணி போட்டுக்குறேன் என்ற புவனா அவர்களின் சிறு வயது ஞாபகங்களை சொல்லிக் கொண்டிருந்தார்.

பின்னர் கீழே வந்து கண்மணியின் ரூம் கதவை திறந்து விட மூணு பேரும் ஆளுக்கு ஒரு பக்கமா தரையில் படுத்துக் கொண்டாளுங்கள்.

வெகு நேரம் அரட்டை அடித்தவளுங்கள் பின்னர் தூங்கினாளுங்கள்.வழக்கம் போல எழுந்த ஷமீராவோ ரெஸ்ட் ரூமிற்குள் சென்று கையை கழுவி விட்டு பார்க்க மருதாணியோ கோவை பழம் போல சிவந்திருந்தது.

பின்னர் குளித்து வெளியே வந்தவளோ
கண்மணி ரூமில் இருக்கும் கபோர்டை திறந்தவள் அவளின் நைட்டியை போட்டுக் கொண்டிருக்கும் போது ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது. கதவை திறக்கும் அங்கே ரஞ்சனி நின்று கொண்டிருந்தார்...

சொல்லுங்க மா என்க..

இந்தா டா உன் புருசன் துணி எடுத்து வந்துருக்கானென்று நீட்ட,சரிங்கமா என்று வாங்கியவள் அதிலிருந்த புடவையை கட்டிக் கொண்டு வேகமாக கீழே வர அங்கு செழியனோ சோபாவில் உட்கார்ந்து டீ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது....

வெகு நேரம் வரையிலும் ஷமீராவும் தூக்கமின்றி தான் தவித்தாள்.அவளுக்கும் கணவனை விட்டு இங்கு தங்கியது மனதிற்குள் ஒரு மாதிரியாகவே இருந்தது.

ஆனால் இவ்வளவு அதிகாலையிலே கணவன் வருவான் என்பதை எதிர் பார்க்கவில்லை.ரஞ்சனி சொல்லியதும் வேகமாக புடவை கட்டிக்கொண்டு படியில் இறங்கியவள் பின்னர் நிதானமாக வருவதை போல வர..

செழியனோ கொலுசு சத்தம் கேட்டு திரும்பி பார்க்க மனைவி வருவது தெரிந்தது.காலையிலேயே ஊட்டி ரோஜா போல சும்மா கும்முனு இருக்கிறாளே...

சண்டாள சிறுக்கி நாலு அஞ்சு நாளா தொடக்கூட விடலையே இன்னைக்கு வாடி என்று மனதிற்குள்ளே முணவிக் கொண்டிருந்தான்.

இந்தா டா காபி என்று புவனா கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கி குடித்தவள் அம்மா நான் வீட்டுக்கு போயிட்டு வந்துடறேன் என்க
அவரோ சரி மா என்றார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
400
மனைவி சொல்லியது செழியனின் காதில் விழுந்தாலும் எனக்கு என்னவென்று உட்கார்ந்திருக்க,ஷமீரா ஏதும் சொல்லாமல் வெளியே போனாள்.
அவள் வாசலை தாண்டும் வரைக்கும் உட்கார்ந்திருந்தவன் அத்தை நான் வீட்டுக்கு கூப்பிட்டு போயிட்டு வரேன் என்றவாறு வெளியே வந்தவன் வண்டியை ஸ்டார்ட் பண்ணவும் பின்னால் ஏறி உட்கார்ந்தாள்..

வண்டி வீட்டிற்கு போகாமல் நேராக வயல் பக்கம் திரும்ப,இந்த மனுஷன் எங்கே கூட்டிட்டு போறார்?

வயல்ல ஒன்னும் வேலை நடக்குற போல தெரியலையே? என்னவாக இருக்கும் என்று யோசனையுடன் வந்தவள் சிறிது நிமிடத்தில் கணவன் எங்கே போகிறான் என்பது தெரிந்து இங்கேயா..???

அச்சோ!!!

நல்லா மாட்டுனடி..

இன்னைக்கு என்ன ஆகப் போறியோ என்று புலம்பிக்கொண்டே வர செழியனோ அங்கிருந்த குடிலின் முன்பு வந்து வண்டியை நிறுத்தியவன் இறங்குடி என்கவும் குரலே உஷ்ணமாக இருந்தது..

வண்டியை ஸ்டேண்ட் போட்டவன் அங்கிருந்த சாவி எடுத்து குடிலை திறந்து உள்ளே போக ஷமீராவோ திருத்திருவென்று முழித்துக் கொண்டு வெளியேவே நின்றாள்..

உள்ளே போனவனோ மனைவி வராததை பார்த்து வெளியே வந்தவன் மகாராணி வெத்தலை பாக்கு வைத்து அழைத்தால் தான் உள்ள வருவீங்களோ என்றவாறு அவளை நோக்கி வந்தவனோ அசால்ட்டாக தூக்கிக்கொண்டு உள்ளே போனவன் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு கீழே இறக்கியவனோ எவ்வளவு நெஞ்செழுத்தம் டி உனக்கு??

விட்டா போதும்னு அப்படியே குதிச்சுக்கிட்டு உன் தங்கச்சிகாரிகூட மாடிக்கு போற???

உன் கிட்ட சொல்லிருக்கு இல்லையா?

நான் இங்க இருக்கும்போது உன்னோட நேரம் எல்லாம் எனக்கு தான்.வேலை விஷயமா நான் வெளியில போனாலா அப்போ நீ தனியா இருக்கலாம்னு..அது வாஸ்தவம் ஒத்துக்கிறேன்.

ஒரே ஊர்ல நீ ஒரு தெருவில நான் ஒரு தெருவுலயும் எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா டி?படுக்க முடியலை டி அந்த பெட்ல?

தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றனே ஏன் மன்னிக்க உனக்கு மனசு கிடையாதா???அப்படி என்ன டி பொல்லாத குத்தம் பண்ணிட்டேன்?

நீ இருக்கும் போது இன்னொருத்தியை வச்சிருக்கேனா என்க..இவ்வளவு நேரம் கீழே குனிந்து கொண்டு அமைதியாக இருந்தவள் இதைக் கேட்டு நிமிர்ந்து கணவனை முறைத்து பார்த்தாள்.

எப்படா விடியும் விடியுமுன்னு இருந்தேன் டி..சரி எப்படியும் உனக்கு மாத்திக்க டிரஸ் வேணுமேனு எடுத்துட்டு வந்தா நீ நல்லா நிம்மதியா தூங்கிட்டு ஹாயா குளிச்சிட்டு ஆடி அசைஞ்சி கீழே வர என்றவாறு மனைவியை நோக்கி போக,பின்னாடியே நகர்ந்து சென்றவளோ குடிலின் மண்சுவற்றின் மேலே இடித்து நின்றாள்..

அவள் கையில் இருக்கும் மருதாணியை பார்த்தவன் புருஷன் மேல இவ்வளவு ஆசை இருக்கு இருந்தும் பிடிவாதமா பேசக்கூடாதுன்னு இருக்கு இல்லையா!!!

உன் மனசாட்சி தொட்டு சொல்லுடி என்ன நினைச்சுகிட்டு தானே இந்த மருதாணி போட்ட?அதனால தானே இப்படி சிவந்துருக்கு என்றபடியே தன்னவளுடைய இரண்டு கைகளிலும் முத்தத்தை கொடுத்தான்

சண்டை சச்சரவு கோபம் தாபம் எல்லாம் பகல் பொழுதில் தான் இருக்கணும் மாலை ஆகிவிட்டால் அது எல்லாத்தையும் மனசுல இருந்து அழிச்சிடணும்னு உன்கிட்ட நான் சொல்லி இருக்கேன் இருந்தும் அதையே மனசுல வச்சுட்டு இருக்கிறன்னா என்ன அர்த்தம் சொல்லு??

என்ன உன் காலில் விழுந்து கெஞ்சனுமா சொல்லு டி??

உன் காலில் விழுந்து கெஞ்சனுமா என்று மனைவியோடு இடித்துக் கொண்டு நிற்க ஷமீராவுக்கோ மூச்சு முட்டுவது போல இருந்தது..

சிறிது நிமிடங்களுக்கு முன்னால் தான் குளித்து வந்திருக்கிறாள் என்பதால் அவள் பூசி இருந்த மஞ்சளின் வாசம் நாசியை துளைக்கவும்,கோவத்தை மறந்து கணவனாய் கிறங்கிப் போனவன் மனைவியின் உதட்டை சிறை பிடித்து அப்படியே ஒரு கையால் அவளை அணைத்துக் கொண்டு அங்கிருக்கும் மண் தரையிலே சரிந்தான்.

நான்கு நாட்களாக மனைவி பேசவில்லையே என்று அந்த ஆதங்கத்தை எல்லாம் அவளிடமே தீர்த்துக் கொண்டிருக்க,தான் வாயை திறக்காமல் கணவன் அமைதியாக மாட்டான் என்பது புரிந்து சாரிங்க என்கவும்,அதன் பிறகு அவன் கூடலில் வன்மை போய் மென்மை வந்தது.

எண்ணற்ற முத்தங்களை மனைவிக்கு வழங்கியவன் மன்னிச்சிடு சாரி டி என்று சொல்லும்போது உண்மையிலேயே அவன் மனம் வறுந்தி கேட்கிறான் என்பது புரிந்து கொண்டவளும் போதும் போதும் மிஸ்டர் போலிஸ்...இன்னும் எவ்வளவு சாரி தான் கேட்பீங்க என்று வாய் திறக்க, எப்பா உன் வாயிலிருந்து இந்த வார்த்தை வர வைக்கறதுக்குள்ள எனக்கு நெஞ்சு தண்ணியே வந்துருச்சு டி.

ஆனாலும் இவ்வளவு கல்நெஞ்சகாரியா இருக்கக் கூடாது என்று மீண்டும் மனைவியோடு ஒரு அழகான கூடலை முடிக்கும் போது காலை 8 மணிக்கு ஒலிக்கும் பாங் சத்தம் கேட்டது.

ஏய் மணி 8 ஆயிடுச்சு டி என்றவாறு எழுந்தவன் சீக்கிரம் ரெடியாகி வா டி வீட்டுக்கு போகலாம் என்கும் கணவனை பார்த்து முறைத்தவள் சீக்கிரம் ரெடி ஆகனுமென்றால் அதுக்கு முதல்ல என்னை விடணும்.

இப்படி பிடித்துக் கொண்டு நின்னா என்ன அர்த்தம் என்கவும் பிறகுதான் அவளை அணைத்துக் கொண்டு நிற்பது அவனுக்கு தெரிந்தது..

காலையில குளிச்சிட்டேன்...திரும்ப எப்படி வீட்டில் போய் குளிக்க அய்யோஓஓஓ என்றவளை பார்த்து சிரித்தவன்,மை டியர் பொண்டாட்டி உன்னை குளிக்க வைக்க தானடி மாமா இருக்கிறேன் என்றவாறு அவளை தூக்கிக்கொண்டு தோட்டத்துக் கதவை திறந்து போனவன் அங்கிருந்த பாத்ரூமில் அவளை இறக்கி விட்டவன் நீ இங்கு குளிச்சிட்டு ரெடியா இரு.

பின்னாடி தான் ஓடை இருக்கு நான் குளிச்சிட்டு வந்துடறேன்.யாரும் இந்த நேரத்துல வர மாட்டாங்க அதனால பயப்படாம இரு டி என்று மனைவியின் கன்னத்தை வலிக்கும் படி நன்கு கடித்துவிட்டு சென்றான்.

அங்கிருந்த பைப்பை திறக்க தண்ணீரோ சில்லென்று இருந்தது. வேறு வழி என தலைக்கு ஊத்திக்கொண்டவளை பார்த்த அவள் மனசாட்சி யாரை ஒருத்தர் ரோசமா இருந்தாங்களே எங்கே என்க...

காதலுக்கு முன்னாடி ரோசலாம் ஒன்னும் கிடையாது என்று சிரித்துக் கொண்டே சொன்னவள் பின்னர் குளித்து முடித்துவிட்டு குடிலுக்குள் வந்தவளோ அங்கிருந்த ஆடையை தண்ணீரில் அலசி உதறியவள் அதையே போட்டுக்கொண்டு தலையில் ஈரம் போக தட்டிக் கொண்டிருக்கும் போது செழியனும் குளித்து தலையை துவட்டிக் கொண்டே வந்தான்.

போலாமாடி என்கவும் ம்ம் என்றவள் வெளியே போக, அங்கே மாட்டியிருந்தது சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன் பின்னர் குடிலை பூட்டி விட்டு வண்டியில் ஏறியவன் மனைவியோடு வீட்டிற்கு சென்றான்

சோழனூர்:

என்ன ணா பஸ் எடுக்கலாமா என்று டிரைவர் சீட்டில் இருந்தவர் அந்தோணியிடம் கேட்க...

இதோ நம்ப ஆல்பர்ட் சித்தப்பா வந்துட்டு இருக்கார் டா.அவர் வந்ததும் கிளம்பிடலாம்.கொஞ்ச நேரத்துக்கு முன்னதாக தான் சென்னையில் இருந்து சித்தப்பாவும் சித்தியும் வந்துருக்காங்க என்கும் போகுது ஆல்பர்ட்டும் அவர் மனைவியும் வந்தனர்.பின்னர் சொந்த பந்தங்களோடு இரண்டு பஸ்களில் ஏறி வனிச்சூரை நோக்கி புறப்பட்டனர்.

காலை சாப்பாட்டை திருச்சியில் முடித்தனர்.

திருச்சியின் எல்லைக்குள் வரும்போது ராணியும் தனது அண்ணனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல,அவரும் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டுக் கொண்டார்.

மகி மட்டும் நிச்சயத்திற்கு கிளம்புவதை பார்த்த மானசா எப்போதும் இல்லாமல் இந்த முறையை தன்னையும் அழைத்து போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்க ஏன்டி நீ என்ன பைத்தியமா??கிளம்புற நேரத்துல என்ன கடுப்பேத்திட்டு இருக்காத..

என் தங்கச்சி பையன் நிச்சயதார்த்தம் நல்லபடியா முடியணும்.அங்க உன்னை கூப்பிட்டு போய் யாருன்னு சொல்ல முடியும் சொல்லு ???நீ என் பொண்டாட்டின்னு சொன்னா என்ன நினைப்பாங்க??

இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையாவது காப்பாற்றுகிறேன் அது என்ன புதுசா எங்க வீட்டு சம்பந்தப்பட்ட பங்க்ஷன்க்கு எல்லாம் வரணும்னு நினைக்கிற???

ஷமீரா பிறந்தாளே அப்ப வந்து பார்க்கல அவளுக்கு எத்தனை பிறந்தநாள் வந்துச்சு அப்போ வரல ஏன் என்ன போகவே விடலையே நீனு.அவ பிறந்தநாள் எப்பன்னு கூட எனக்கு ஞாபகம் கிடையாது. ..

எங்க சித்தி எவ்வளவோ உடம்பு சரியில்லாமா இருந்தாங்க. என்னோட அப்பா அம்மா இறந்து போனாங்க அப்பெல்லாம் உனக்கு பாக்கணும்னு பாசம் வரல இப்பதான் ரொம்ப பொங்குதோ என்று பல்லை கடித்தவர் பத்திரமா இரு நான் போயிட்டு வரேன் என்று கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே போனவர் சிறுது நொடிகள் சென்று உள்ளே வந்தவர் சரி ரெடியாகி வா என்ன நடக்குது பார்த்துக்கொள்ளலாம் என்க..மானசாவும் சந்தோஷமாக உள்ளே போனவர் வேக வேகமாக தயாராகி வந்தார்.

பின்னர் இருவரும் காரில் ஏறி ராணி சொன்ன இடத்திற்கு வர அங்கே இரண்டு பஸ் ரோட்டில் ஒரு பக்கமா நின்று கொண்டிருந்தது.நீ இங்கையே இரு நான் போய் பாத்துட்டு வரேன் என்றவர் காரில் இருந்து இறங்கி ஹோட்டல் உள்ளே போக அங்கே அவரது சொந்த பந்தங்கள் எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

எல்லாரிடமும் நலம் விசாரிக்க சாரதா பாட்டியோ தனக்குள் வந்த ஆத்திரத்தை அத்தனை பேருக்கு முன்னாடி காட்டாமல் சாதாரணமாக பேசி வைத்தார்.

அந்தோணியிடம் போன மகியோ மாமா என்க..நிமிர்ந்து மகிமையை பார்க்க, அவர் காதில் மட்டும் விழும்படி மானசாவும் நிச்சயதார்த்தத்துக்கு வரேன்னு சொல்றாள்.நான் என்ன பண்றது???

இதை கேட்டவர் இந்த நேரத்தில் பிரச்சனை பண்ணினால் சொந்த பந்தங்களுக்கு முன்னாடி மகிக்கு இன்னொரு கல்யாணம் ஆன விஷயம் தெரிந்து விடும்.அதோடு எஸ்தர் காணாமல் போன விஷயமும் தெரிந்து விடுமே வேறு வழி என்று மனதிற்குள் நினைத்தவர் உன்னோட விருப்பம் என்று சொல்லிவிட்டு சாப்பிடும் வேலையை பார்த்தார்.

மற்றவர்களிடம் நலம் விசாரித்து வந்த மகி அங்கிருந்த ஜேம்ஸ் அவர் மனைவி ரோசியிடம் எப்ப வந்தீங்களே என்று பேசிக் கொண்டிருந்தார்.ஜேம்ஸிற்கு தனது அண்ணனை பார்க்க அவ்வளவு ஆத்திரம் வந்தது.

பின்னர் சாப்பிட்டு முடித்ததும் அங்கிருந்து பயணத்தை தொடர்ந்தார்கள்.இன்னும் பழமும் பூ மட்டும்தான் வாங்க வேண்டும் என்பதால் அதை மதுரையில் போய் வாங்கிக் கொள்ளலாம் என்று இருக்க..

அதே போல் சில மணி நேரத்தில் மதுரைக்கு வந்தவர்கள் நிச்சயதார்த்தத்துக்கு தேவையான பூ பழங்கள் ஸ்வீட் வகை எல்லாம் வாங்கி முடித்துவிட்டு மீண்டும் அங்கிருந்து வனிச்சூரை நோக்கி பயணம் ஆனவர்கள் மாலை 5 மணிக்கு எல்லாம் ஊரின் எல்லைக்குள் வந்தனர்.

சொந்த பந்தங்களோ என்ன இவ்வளவு தூரமா இருக்கென்று பேசிக்கொண்டு வந்தார்கள்.

வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
May 9, 2025
Messages
116
Aha waiting see the meeting of dad and daughter.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top