• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

என்ன மாமா பண்றீங்களென்று ஷமீராவின் அப்பா கத்த,நீ சும்மா இரு மகி...புள்ளை உறவு வேண்டாம்னு நீ சொல்லிட்ட...


உனக்காக என் தங்கச்சி மவளை வேண்டாமென்று தூக்கி போட முடியாது புரியுதா என்று கடுமையாக பேசியவர்,உங்க பையன் தான் பெருசுன்னு எங்களையெல்லாம் உதறி தள்ளிட்டு வந்திருக்கு .எந்த அளவுக்கு நல்லபடியா பார்த்துக்கணுமோ,அப்படி நீங்க பார்த்திருப்பீங்கன்னு நம்பி இங்கிருந்து போறேன்.

நாளைக்கு உங்களால என் பொண்ணுக்கொரு பிரச்சனை என்றால் நிச்சயமா நான் மனுசனா இருக்க மாட்டேன்...இதை மனதில் வச்சிக்குங்களென்று கடுமையாக சொல்ல...

அப்படி ஒரு சூழ்நிலை ஒரு காலமும் உங்க பொண்ணுக்கு வராது.உங்க பொண்ணு உங்க வீட்டில் இருந்ததை விட என் மகன் மகாராணியாக அவன் பொண்டாட்டிய வச்சு பார்த்துப்பான்.அந்த அளவுக்கு என் பையனுக்கு தெம்பு இருக்குங்களென்றார் வானதி.

எது...இந்த ஓட்டு வீட்ல உங்க மகன் மகாராணியா வச்சு பார்த்துப்பானோனு இளக்காரமாக எஸ்தர் சொல்ல..எம்மா வெளியில பாத்துட்டு இது ஓட்டு வீடுன்னு சொல்றியோ?முதல்ல வீட்டு உள்ளார போய் ஒவ்வொன்னையும் பார்த்துட்டு வந்து சொல்லுமா .

மாளிகை போல வீடு கட்டி வச்சிருக்கோம்... எங்க வீட்ட பார்த்து அசந்து போகாத ஆளு இந்த சுற்று வட்டார கிராமத்துல ஒருத்தவங்களும் கிடையாது மா என்று வீரையன் சொல்ல,உண்மையிலேயே அந்த வீட்டில் உள்ள மர அலங்கார பொருள்களும் ஒவ்வொரு தூணிலிருக்கும் சித்திரங்களுமே அவர்களுக்கு வியப்பை கொடுத்தது என்பது மறுக்க முடியாத நிஜம்.

அதான் அப்பா அம்மா வேண்டாமென்று சொல்லி விட்டாளே இனி இங்கென்ன வேலை என்றவாறு கோபமாக மகளை ஒரு பார்வை பார்த்து விட்டு மகி வெளியே சென்று விட மற்றவர்களும் ஷமீராவை பார்த்து விட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தலையசைத்தபடி அங்கிருந்து சென்றனர்.

வீட்டில் இருந்தவர்களுக்கு இப்பொழுது தான் மழை பெய்து விட்டது போலிருந்தது.அழுது கொண்டிருந்த மனைவியை தோளோடு அணைத்து சமாதானம் பண்ணிக் கொண்டிருக்கும் பேரனை பார்த்து,செழியா உள்ள கூட்டிட்டு போ என்று தம்பிசாமி சொல்லவும் தனது மனைவியை அழைத்துக் கொண்டு மேலேயிருக்கும் ரூமிற்குள் வந்தவன் அவளை சமாதானப்படுத்தி பார்க்க,அவளோ அழுகையை நிறுத்தாததால் அழுது கொண்டிருப்பவளின் உதட்டோடு தனது வலிமையான உதட்டை புதைத்தான்.

முதன் முதலாக தன்னவனிடமிருந்து கிடைக்கும் இதழ் முத்தத்தை கண்டு அதிர்ந்து போனவளோ கண்கள் விரிய கணவனை பார்க்க ஒரு கையால் மனைவியை தன்னோடு இறுக்கியன் அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து கொண்டு அவள் உதட்டிலே தனது கோபத்தையும் அவளின் மன வலியையும் தீர்த்துக் கொண்டிருந்தான்.

வானதி அந்த காலண்டர் எடுத்துட்டு வா என்க,சரிங்க மாமா என்றவர் அங்கே சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்ததை எடுத்துட்டு வந்து கொடுக்க அதில் அடுத்த முகூர்த்த தேதியை பார்த்தவர் இன்னும் எட்டு நாள்ல இந்த மாசத்துக்கான கடைசி முகூர்த்தம் வருது ...

அன்னைக்கு நம்ம மலையம்மன் கோயில்ல வரவேற்பு காரியத்தை வச்சுக்கலாம்.அது சரியா இருக்கும் என்க,வேற வழி செஞ்சிதானே ஆகணும் மாமா என்றார்.

மகனுக்கு செய்கிறதை நல்ல மனசோடு செய்.இன்னும் நாலு அஞ்சு ஒன்னும் நீ பெத்து வைக்கல.என் அண்ணன் குடும்பத்தோட அடுத்த தலைமுறை வாரிசு...

இதற்கு மனநிறைவோடு செய்ற போல இருந்தாக்க இதுல நீ கலந்து இல்லன்னா ஒதுங்கி இரு என்கவும், தனது சின்ன மாமனாரின் கண்டிப்பான வார்த்தையை கேட்டவர் சரிங்க மாமானு வானதி சொல்லவும் துரை நீ என்னடா சொல்ற?எதுவுமே பேசாமல் கல்ல முழுங்கினவன் போல் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்?

அதான் நீயே முடிவு எடுத்துட்டியேப்பா, அப்புறம் வேற என்னத்த நான் சொல்ல போறேன்?சொந்த பந்தங்களை வர வச்சி நல்லபடியா செஞ்சுடலாம் பா.

அப்ப அதுவரைக்கும் புள்ளைய நான் வீட்டுக்கு கூப்பிட்டு போய் வச்சிருக்கிறேனென்ற தம்புசாமி அங்கிருந்து பேரனுக்கு குரல் கொடுக்க மனைவியோடு இதழ் போரிலிருந்தவன் தனது தாத்தாவின் குரலில் அவளிடமிருந்து மனமின்றி விலகியவன் தனது தலை முடியை கோதிக்கொண்டு கீழே வந்தான்.

சொல்லு தாத்தா என்க...செழியா வரும் 20 ஆம் தேதியில் இரண்டு பேருக்கும் நம்ம மலையம்மன் கோவில் தாலி பிரிச்சு கோக்கும் காரியம் வச்சிருக்கு. அதுவரைக்கும் பொண்ண அங்க கூட்டிட்டு போறோமென்கவும், என்ன புதுசா இல்லாத வேலை பண்ற...

அதெல்லாம் எப்படி நடந்துக்கனுமென்று எங்களுக்கு தெரியும்.அவ இங்கையே இருக்கட்டுமென்று செழியன் வேகமாக சொல்ல,அடேய் அது அதுக்கு சடங்கு சம்பிரதாயம் இருக்குடா.

முன்னோர்கள் எதுக்கு இதெல்லாம் செஞ்சு வச்சுருக்காங்கனு வீரையன் சத்தம் போட செழியனாலும் தனது அப்புச்சி பேச்சை கேட்டு ஒன்னும் சொல்ல முடியவில்லை....

போய் அந்த புள்ளைய கூப்பிட்டு வா டா.

ம்ம்..கூட்டிட்டு வரேனென்று பல்லை கடித்துக் கொண்டு மாடிக்கு போனவன் கதவை திறந்து உள்ளே போய் தன்னவளிடம் விஷயத்தை சொல்ல அவளும் சரி என்றாள்...

என்னடி உனக்கு அவ்வளவு சந்தோஷமா என்னை விட்டு தனியா போய் இருக்கிறதுக்கென்க,அவளோ எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் செழியனுக்கு கோவம் வந்தது.

கட்டிலின் மேல் உட்கார்ந்திருக்கும் மனைவியின் கையை பிடித்து இழுத்து தன்னோடு அணைத்தவன்,ஏண்டி போக மாட்டேன்னு பேச்சுக்கு கூட ஒரு வார்த்தை சொல்லாமல்,உடனே சரினு சொல்லுறனு இறுக்க, வலியில் லேசாக முகத்தை சுளித்தாள்.

எலேய் இன்னும் என்ன பண்றனு தம்புசாமி குரல் கொடுக்க,இந்த தாத்தன் வேற என பல்லை கடித்தவன் மனைவிக்கு அவசர அவசரமாக எண்ணற்ற முத்தங்களை பரிசாக கொடுத்தவன்,பேகை எடுத்துட்டு வா என்றவாறு வெளியே போக சிரித்துக் கொண்டே முகத்தில் இருக்கும் ஈரத்தை துடைத்தவள் கணவன் பின்னே நடந்து கீழே வந்தாள்.

ஆத்தா நம்ப ஊட்டுக்கு போகலாம்.... மொறப்படி நீ இந்த ஊட்டுக்கு மருமவளா வருவதுதான் உனக்கு கௌரவம் என்க,சரிங்க தாத்தா என்றாள்.

பின்னர் பேரனையும் பேரன் பொண்டாட்டியையும் அழைத்துக்கொண்டு பக்கத்து தெருவிலிருக்கும் தனது வீட்டை நோக்கி சென்றவர் ஐந்து நிமிட நடை பயணத்தில் அந்த பெரிய வீட்டிற்கு வந்த தம்புசாமி,சுமதி சுமதியென மனைவியை கூப்பிட்டார்..

சமையல் கட்டில் இரண்டு மருமகள்களோடு வேலையாக இருந்தவர் உங்க மாமனார் கூப்பிடுறாரு கேட்டுட்டு வரேனென்று மருமகளிடம் சொல்லிக் கொண்டு வெளியே வர,அங்கே தனது பேரனும் பேத்தியும் நிற்பதை பார்த்து யாத்தி என்றவர்....அம்மாடி புவனா புவனா என்று தனது பெரிய மருமகளை கூப்பிட மாமியாரின் குரலை கேட்டு அவரும் வாசலுக்கு வர வேகமாக போய் ஆரத்தி கரைச்சி எடுத்துட்டு வா மா என்றார்...

சரிங்க அத்தை என்று உள்ளே போனவர் ரஞ்சனி நம்ப செழியனும் அவன் பொண்டாட்டியும் வந்திருக்காங்களென்று தனது ஓரகத்திக்கு குரல் கொடுத்துக்கொண்டு ஆலத்தைக் கரைத்து எடுத்து வந்து மாமியாரிடம் நீட்டினார்..

அதை வாங்கியவர் தனது பேரனுக்கும் பேத்திக்கும் மூன்று சுற்று சுத்தி பொட்டு வைத்தவர் உள்ள வாயா,வலது கால எடுத்து வச்சு வாமா என்கவும் தனது தாய் பிறந்த வீட்டிற்கு மனைவியோடு உள்ளே போனான்.

இருவரையும் அங்கிருந்த சோபாவில் உட்கார சொல்லிய சுமதி,ஆத்தா ரஞ்சனி பாலும் பழமும் எடுத்துட்டு வா என்று இரண்டாவது மருமகளுக்கு சொல்ல,சரிங்க அத்தைனு சிறிது நிமிடத்தில் பாலும் பழமும் கரைத்து எடுத்துட்டு வர அதை வாங்கி பேரனுக்கு கொடுத்தவர் நீ குடிச்சிட்டு பிள்ளைக்கு குடுயா என்றார்.

தனது அம்மாச்சியின் பேச்சை மறுக்க முடியாமல் குடித்துவிட்டு மனைவிக்கு கொடுக்க,இருக்கும் மனநிலையில் அதை குடிக்க அவளுக்கு விருப்பமில்லை.இருந்தாலும் பெரியவர்களுக்காக என்பதால் கொஞ்சூண்டு குடித்துவிட்டு மீதம் வைத்து விட்டாள்.

அதற்குள் வெளியே பரமசிவத்திடம் பேசிக் கொண்டிருந்த தம்புசாமி தாத்தாவும் வீட்டின் உள்ளே வந்தவர் அம்மா புவனா-ரஞ்சனி, செழியன் பொண்டாட்டிக்கு அடுத்த வாரம் நம்ம கோயில்ல தாலி பிரிச்சி கோக்குறதுக்காக முடிவு பண்ணிருக்கு.

அதுவரைக்கும் புள்ளை இந்த வீட்டுல தான் இருக்கும் என்கவும் சரிங்க மாமா என்றனர்.

அப்புறம் இன்னொரு விஷயம்,நம்ப கண்மணிய செழியனுக்கு கட்ட உங்க எல்லாருக்கும் எண்ணம் இருந்துச்சுனு எனக்கு நல்லா தெரியும்.யாருக்கு யாரோ அதுபடி தான் நடக்கும்.

அந்த கோவத்த மனசுல வச்சுக்கிட்டு நடந்துக்கிட்டீங்கனாக்க அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேனென்று கரராக சொல்ல,மாமனாரின் கோபத்தை தெரிந்தவர்களோ அப்படி எல்லாம் இல்லை,இதும் நம்ப புள்ளைதானே மாமாயென்று இருவரும் சொல்ல மருமகளுங்களின் வார்த்தையை கேட்டவரோ வழக்கம்போல் அவர்கள் எண்ணி மனதிற்குள் பெருமைப்பட்டார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஷமீராவோ அருகில் உட்கார்ந்திருந்த கணவனை நிமிர்ந்து பார்க்க,மனைவியின் பார்வையை படித்த செழியனோ ஆத்தாடி....இவளிடம் கண்மணி விஷயத்தை பற்றி இதுவரை சொல்லவே இல்லையேனு திருதிருவென்று முழித்தான்.

செழியா,பிள்ளைக்கு மேல இருக்குற அந்த ரூம காட்டுனு தம்புசாமி சொல்ல சரி தாத்தா என்றவன் மனைவியை அழைத்துக் கொண்டு மாடியிலிருக்கும் ரூமிற்கு போனான்.

வெளியே பார்க்க ஓட்டு வீடு போலிருந்தாலும் உள்ளே வந்து பார்த்தால் சின்ன அரண்மனை போல அழகாகயிருந்தது.

அந்த வீட்டை ரசித்த படியே ஷமீராவும் படியில் ஏறி மேலேயிருக்கும் ரூமிற்கு வந்தாள்.கதவை திறந்து விட்டவன் இது நாங்க வந்தா தங்குறதுனு மனைவியிடம் சொல்ல சரி என்றாள்.

அத்தைங்க ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்கடி...அதற்கும் அவள் எந்த பதிலும் சொல்லவில்லை தலை மட்டும் ஆட்டினாள்.என்னடி நான் பேசிட்டு இருக்கேன் எதுவுமே பேச மாட்டுறனு மனைவியின் தாடையை பிடித்து கேட்க யார் இந்த கண்மணி என்கவும் ஹா ஹா ஹா என்று சிரித்தவன் என்னடி பொறாமை வந்துவிட்டதோ?.

நான் ஒன்னும் அப்படி எல்லாம் கேட்கவில்லையே அவங்க ரெண்டு பேர்ல யாரோட பொண்ணு கண்மணி என்று தெரியலை.அதுக்கு தான் கேட்டேன்.ஓவரா சீன் போடாதீங்களென்றாள்.

மனைவியிடம் இருக்கும் அந்த துடுக்கத்தனம் திரும்புவதை பார்த்து விட்டு,அவளை தன்னோடு இறுக்கமாக அணைத்தவன் உங்க அப்பா அம்மா பேசுனதை நினைச்சு வருத்தமா இருக்காடி என்க..அவளோ எதுவும் சொல்லாமல் கணவனின் நெஞ்சின் மேல் சாய்ந்து கொண்டாள்.


போக போக எல்லாம் சரியாகிவிடும் என்கவும்,நீங்கள் அப்படி நினைச்சுட்டு இருக்கீங்களா?எங்க அப்பாவ பத்தி உங்களுக்கு தெரியாது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அவ்வளவுதான் தலைமுழுகிடுவாரு என்றவளுக்கு,என்னைக்கு இருந்தாலும் இன்னொரு வீட்டுக்கு நீ போய் தான ஆகணுமென்று செழியனும் கொஞ்சம் கடுப்பாக கேட்க,அவங்களா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறதுக்கும்,நாமளே பண்ணிக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கின்றதேயென்றாள்..

அப்போ என்னை கல்யாணம் பண்ணியது உனக்கு இஷ்டம் இல்லையாடி?விருப்பம் இல்லாமல் தான் என் கூட கிளம்பி வந்தியானு ஆத்திரமாக கேட்க, கோபமாக நிமிர்த்துப் பார்த்து முறைத்தாள்.

இந்த மொரப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.வாய் திறந்து நான் கேட்டதுக்கு பதில் சொல்லுடி.ஒரு மாசத்துல கல்யாணம் இருக்குன்னு நீ சொன்னதால் தானே நான் உன்னை தேடி வந்தேன் என்கவும்,ஆமா இல்லன்னா ஒரு வருஷம் பேசாம இருந்த போல தானே நீங்கள் கருங்கல்லாக இருப்பீங்க.

ஆஹான்...நான் தான் பேசலையே நீ பேச வேண்டியது தானே டி?ஏன் ரோசத்தை விட்டு வந்து பேசினால் உனக்கு கௌரவ குறைச்சலாகிடும் அப்படி தானேனு முறைக்க,பேசாம இருந்ததால உடனே நான் மறந்து விட்டதா நீங்களே கனவு கண்டுட்டு இருந்தா அதுக்கு நான் ஒருநாளும் பொறுப்பில்லையென்றாள்.

அதனா இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் மயிறு இல்லை...நீ வக்கீலுக்கு படிக்க வேண்டிய ஆள் டி. தப்பி தவறி அந்த டிவி பொட்டி(கம்ப்யூட்டர்) சம்பந்தமா படிச்சிட்ட என்றவாறு மனைவியின் கன்னத்தைப் பிடித்து நன்கு திருகினான்...

அப்பொழுது செழியன் நம்பருக்கு கால் வர சட்டை பாக்கெட்டிலிருந்த போனை எடுத்து பார்க்கவும் அதில் மாறனின் நம்பர் தெரிய அட்டென்ட் பண்ணியவன் மாமா என்க,டேய் அங்க என்னடா பிரச்சனை?

அது வந்து மாமா என்றவன் இங்க வந்ததிலிருந்து மனைவியின் அப்பா அம்மா வந்தது,பின்னர் இப்பொழுது அவர்கள் வீட்டில் இருப்பது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.

அப்பாடா நல்ல வேளைடா... இந்த அளவுக்காது பெருசு ஒத்து வந்துச்சே என்று தனது தந்தை வழி பாட்டனாரை நினைத்து மாறன் சொல்ல,ஆமா மாமா...

ஆனால் அந்த நேரத்திலும் தாத்தா உன்னையும் பெரிய மாமாவையும் திட்ட மறக்கவில்லை என்கவும், அதுதான் தெரிஞ்ச விஷயமேடா.சந்துல சிந்து பாடறது உன் தாத்தனுக்கு தான் கை வந்த கலையாச்சேடா.

மாறா போனை இங்கு கொடுனு தீரனும் வாங்கி சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தான்.

அப்பொழுது செழியா என்கும் அவனின் பெரியத்தை புவனாவின் குரல் வாசல் பக்கமாய் கேட்க உள்ளே வாங்கத்தை என்றான்.ஹம் என்று உள்ளே வந்தவர் வாங்க சாப்பிடலாமென்று இருவரையும் கூப்பிட,செழியனோ மாமாலாம் வரட்டுமேங்கத்தை என்கவும் அங்கு நம்ம காட்டுல கடலை பறிச்சிட்டு இருக்காங்க...

உன் அம்மாச்சியும் ரஞ்சனியும் அவங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு போயிருக்காங்க செழியா.நீங்க வாங்க என்கவும் சரிங்கத்தை என்று மனைவியோடு கீழே வந்து உட்கார தலைவாழை இலையை போட்டு அதில் சமைத்த உணவுகளை இருவருக்கும் பரிமாறவும்,அம்மா நீங்களும் உட்கார்ந்து சாப்பிடுங்களென்று ஷமீரா சொல்ல,அவள் அம்மா என்று அழைத்ததை கேட்டு அவருக்கு உள்ளம் குளிர்ந்து விட்டது.

தீரனும் மாறனும் இரட்டையர்கள்..அதுக்கு அடுத்தது பெண் குழந்தைக்காக அவர் காத்திருக்க கடவுள் அந்து கொடுப்பினையை புவனாவிற்கு கொடுக்கவில்லை.

அவரின் ஓரகத்திக்குதான் கண்ணன் கண்மணி,கவிதா என்கும் மூன்று பிள்ளைகள்.இன்று இவள் அம்மாயென்று அழைத்தது ஏதோ தன் வயிற்றில் பிறந்து வந்த மகள் போல ஒரு உணர்வை தர அவர் கண்கள் ஒரு நிமிடம் கலங்கிவிட்டது.

அதை பார்த்த ஷமீராவோ நாம் அம்மா என்று கூப்பிட்டது தான் அவருக்கு பிடிக்கவில்லைனு நினைத்தவள்,ஐயோ தப்பா எடுத்துக்காதீங்க...

திடீர்னு உங்களை எனக்கு அம்மான்னு கூப்பிட தோணுச்சு அதனால தான் யோசிக்காமல் அப்படியே கூப்பிட்டேன் என்று வருத்தமாக சொல்ல...

ஏய் எதுக்குடி இப்படி பதட்டப்படுற..
அத்தை சந்தோஷத்தில் கண்கலங்குறாங்கடி.அப்புறம் இன்னொரு விஷயம் அங்கே மதுரையில் பார்த்த தீரன் மாமா,மாறன் மாமா அவங்களோட அம்மா தான் புவனா அத்தையென்று மனைவிக்கு செழியன் சொல்ல,அதைக் கேட்டவளோ எதேஏஏ என அதிர்ந்து போனாள்.

ஆமாண்டி என்றவன் அங்கே புவனா கண்ணீர் வழிய நிற்பதை பார்த்து அத்தை உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்கவும் அவன் குரலில் கலைந்தவர் என்னாச்சு செழியா?என்க..கிட்ட வாங்க சொல்லுறேனென்றான்.

இங்கு தான் யாருமே இல்லையேனு புவனா சொல்ல,உங்க மாமனார் வீட்டு உள்ளார தானே இருக்காரு.அவருக்கு பாம்பு காது நான் எப்படி பேசினாலும் அவர் காதுல நல்லா கேட்குமென்று சொல்லவும் புவனாவிற்கு அதைக் கேட்டு சிரிப்பு வந்து விட்டது

செழியானு தனது மருமகனை பார்த்து செல்லமாக முறைத்தவர் என்னையானு அருகில் வந்து கேட்க,மாமாங்க ரெண்டு பேரும் தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க என்க,அப்படியானு புவனா அதிர்ச்சியாக கேட்க ஆமாத்தை.

சரி சரி வெளியே தெரிஞ்ச போல காட்டிக்காதே...ஏற்கனவே அவங்க ரெண்டு பேர் கல்யாணத்துக்கு நீயும் கண்ணனும் கையெழுத்து போட்டீங்கன்னு உங்க தாத்தா இன்னமும் சொல்லி காட்டிட்டு இருக்காரு.

ம்கும்..இல்லை என்றால் மட்டும் உங்க மாமனார் எங்களை பாராட்டி தள்ளிடுவாரு பாருங்களென்று சிரித்தான்.

பின்னர் இருவரும் சாப்பிட்டு முடிக்கவும் கண்ணனும் வீட்டுக்குள் வந்தான்.
அங்கிருந்த இருவரையும் பார்த்துட்டு அடேய் மாப்பு நீங்க ரெண்டு பேரும் எப்படிடா இங்கு?

எல்லாம் உன் தாத்தன் பண்ணிய வேலை தானென்று பல்லை கடித்துக் கொண்டு விஷயத்தை சொல்ல,வச்சார்டா நம்பியார் செக்கென்று சிரித்தான்.

கண்ணனுக்கும் புவனா சாப்பாட்டை பரிமாற அந்த நேரம் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த தம்புசாமி தாத்தாவோ, வேளா வேளைக்கு வடிச்சு கொட்டு...தின்னுட்டு கோயில் காளை போல உன் மவனும் சுத்திட்டு வரட்டும்.

மிளகாய் மூட்டைகள் எடை போட்டதை பாத்துட்டு வாடானு போக சொன்னா, மாசமா இருக்கிற பொண்ணு நடக்க முடியாத போல மூணு நாளா இந்த ஊரை சுத்தி சுத்தி வந்துட்டிருந்தான் .

என்ன சங்கதி என்பது இப்பொழுது தானே புரியுதஎன்று செழியனை பார்த்துக் கொண்டு தாத்தா சொல்ல, சண்டாள பாவி உன்னால இந்த நம்பியார் கிழவன் கிட்ட நான் திட்டு வாங்குறேன் டா என்று தனது மாமன் மகனை பார்த்து செழியன் முணுமுணுத்தான்.

அட ஆண்டவா...இந்த வெட்டருவா வீட்டுல இருக்குனு தெரியாம நான் வேற சாப்பிட வந்துட்டேன்னு கண்ணன் சொல்லுவதை கேட்ட ஷமீராவுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

என்னடா சொல்ற புள்ள சிரிக்குதே என்கவும் நான் என்ன சொல்ல போறேன்??அம்மா குழம்பு ஊத்துன்னு சொன்னேன் பின்ன வெறும் சோத்தையா திங்க முடியுமென்க,இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை...

பின்னாடி தவிடு கலந்து வச்சிருக்கேன் அதையும் கொண்டு வந்து உன் மவனுக்கு கொட்டு...அப்பயாவது புத்தி வரட்டும் என்றபடி தோட்டத்து பக்கம் சென்றார்.

ஒரு நாளைக்கு இந்த நம்பியார் கிழவனை என்ன பண்றேன் பாரு என பல்லை கடித்தவன்,யம்மா உன் மாமனார் பேச்சை ரசித்தவரை போதும். குழம்பு ஊத்து இன்னும் எவ்வளவு நேரம் தான் வாயை பொளந்துட்டு நிப்பமா?.

இலையில் பச்சை பயிறு சாம்பாரையும் பீன்ஸ் அவரை பொரியலும் வைக்க அப்பளம் ஒன்னும் பொறிக்கலையா என்றான்.ஊறுகாய் இருக்கு பாரு எங்கவும் சரி சரி என்று சாப்பிட்டு முடித்தவன் நீங்க எல்லாம் சாப்டீங்களா?

அம்மா மட்டும் சாப்பிடல நாங்க சாப்பிட்டோம் அண்ணா என்று ஷமீரா சொல்ல இப்பதான் உனக்கு நான் அண்ணன் இருக்கிறது கண்ணு தெரிஞ்சுதா என்றான்.

அண்ணா அது வந்துணா சாரி என்க, இந்த எருமை மாடு கூட உனக்கு பேச்சுவார்த்தை இல்லைன்னா ஒன்னும் நாடு அழிஞ்சிட போவதில்லை.

ஆனால் நான் என்ன பண்ணுனேன்?ஒரு வருஷமா என்கிட்ட கூட நீ பேசலையேம்மா?உனக்கு எத்தனை கால் பண்ணிருப்பேன்?எவ்வளவு மெசேஜ் அனுப்பி இருப்பேன் என்கவும் ஷமீராவால் எதுவும் சொல்ல முடியவில்லை.

சரி விடு...அது முடிஞ்சி போயிடுச்சு என்றவாறு கண்ணன் சாப்பிட்டு முடித்ததும் சரி நான் சாயந்திரம் வந்து பார்க்கிறேனென்று சொல்லிவிட்டு செழியன் தனது மாமன் மகனோடு அங்கிருந்து சென்றான்.....

மச்சான் முதல்ல நேரா நம்ம ஃபேக்டரிக்கு போகலாம் டா என்க ஆமாடா அதுதான் சரி என்று இருவரும் வண்டி எடுத்துக்கொண்டு டவுனிலிருக்கும் அந்த மசாலா ஃபேக்டரிக்கு பேசிக்கொண்டே சென்றனர்.

என்ன நடந்தது என்று போகும்போது செழியன் தனது மாமன் மகனிடம் சொல்லி முடிக்க சரிடா இதுவும் நல்லபடியா முடிஞ்சுது அடுத்தது நல்லபடியாக முடிந்தால் சந்தோஷம் என்றான்.

கே.கே மசாலா ஃபேக்டரிக்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டு நேராக மேனேஜரை பார்க்க செல்ல,ஏற்கனவே செழியன் ஒரு வாரம் லீவு கேட்டிருந்ததால் பிரச்சனை இல்லாமல் இருந்தது.

பின்னர் அவரிடம் விஷயத்தை சுருக்கமாக சொல்ல சரி செழியா. எப்போதிலிருந்து வேலைக்கு வர என்க நாளையிலிருந்து நைட் ஷிப்ட்கு வேலைக்கு வரேன் சார் என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து வெளியே வந்தனர்..

வாடா மாப்பி தாத்தா வேற மிளகாய் மண்டில போய் காசு வாங்கிட்டு வர சொன்னாரு அங்கு ஒரு எட்டு போய்ட்டு வந்துடலாம்.ஓயாம அதையே சொல்லி உசுர வாங்குறார்டானு கண்ணன் புலம்பினான்.

பின்னர் இருவரும் அங்கே போனவர்களோ பணத்தை வாங்கிக்கொண்டு பேங்கிற்கு போனவர்கள் தாத்தாவோட அக்கவுண்டில் போட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினார்.

மாலை பள்ளி விட்டு கண்மணியும் கவிதாவும் வீட்டிற்கு வந்தவர்கள் யாரோ ஒரு பெண் தனது அம்மாக்களோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தவர்கள் யாரு என்கக,ரஞ்சனி தான் செழியன் பொண்டாட்டி என்று சொல்லவும் அப்படியா என்று இருவரும் அதிர்ந்து போய் கேட்டார்கள்.

இருவரில் புடவை கட்டியிருப்பவள் தான் கண்மணி என்பது புரிந்த ஷமீராக்கு கொஞ்சம் பொறாமையும் வந்தது.

புவனாவே அவர்கள் இருவரையும் ஷமீராவுக்கு அறிமுகப் படுத்தினார். பெரியவ கண்மணி ஸ்கூல் டீச்சரா இருக்கா.கவிதா பன்னிரண்டாவது படிச்சிட்டு இருக்கு என்கவும் சரிங்கம்மா என்றாள்.

கவிதா இவங்களும் உனக்கு அக்கா..கண்மணி உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வயசு தான் என்கவும் ஹாய் என்று இருவரும் அவளிடம் சொல்ல அவளும் ஹாய் என்றாள்.

மாமா இவ்வளவு வேலை பார்த்து இருக்கு தெரியவே இல்லையே என்க அதெல்லாம் உன் அண்ணன்கார பயலுவ போல திருட்டு வேலையெல்லாம் நல்லா பார்ப்பானென்று சொல்லிக் கொண்டு தம்புசாமி தாத்தா உள்ளே வந்தார்.

என் பேரனுங்களை எதுவும் சொல்லவில்லை என்றால் உன் தாத்தனுக்கு தலை இருநூறு பதினாறு சுக்கா போயிடும் என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்த சுமதி பாட்டி வயலிலிருந்து எடுத்துட்டு வந்த உளுந்தங்காயை மருமகளிடம் கொடுத்தவர் இதை உப்பு போட்டு அவிச்சு ஆளுக்கு கொஞ்சம் குடு என்று சொல்லிவிட்டு தோட்டத்து பக்கம் குளிக்க சென்று விட்டார்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top