• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
398
திருச்சி:

கண்ணீரோடு நின்ற மானசாவோ சற்று முன்னர் நடந்தது கனவா இல்லை நிஜமா என்று யோசனையோடே கன்னத்தை தடவி பார்க்க இன்னும் வலிப்பது போல இருந்தது.

என்னுடைய புகழா இது??

என்னை அடிச்சிட்டாரா??

நிஜமா இது????

ஆமா... கல்யாணம் ஆகி 31 வருஷம் ஆகுது இதுவரை ஒரு வார்த்தை கடிந்து பேசாதவர் இன்றைக்கு எஸ்தருக்காக என்னை அடிச்சிட்டாரா என்று நினைக்கையில் மேலும் அழுகை வந்தது.

"கணவன் பேசிய வார்த்தைகள் எல்லாம் உண்மை தானே"

அவர் எவ்வளவோ சொன்னாரே இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் என் மனசுல நீ மட்டும் தான் இருக்க,அநியாயமாக எஸ்தரோட வாழ்க்கையை கெடுக்க வேணாம் என்று,நான் தானே கேட்கவில்லை..

அவங்க அம்மாவை அவரால் சமாளிக்க முடியாதா எதற்கு இப்படி ஒரு முடிவு எடுத்தேன்???

எந்த பொண்ணும் தனது புருஷனை பங்கு போட விரும்ப மாட்டாளே,அப்போ எனக்கு உண்மையாகவே இவர் மேலும் காதல் இல்லையா???

நான் எப்படி இந்த செயலுக்கு துணிந்தேன்???

எஸ்தர் வீட்டை விட்டு விட்டு போனதுக்கு காரணம் கண்டிப்பாக இவருக்கு இன்னொரு கல்யாணம் ஆயிடுச்சு என்று தெரிந்துதான் இதை என்னால உணர முடியுது.

அவரால் இதை தாங்கிக்கொள்ள முடியாது போது நான் எப்படி என்னோட புருஷனை இன்னொரு பொண்ணுகூட பங்கு போட சம்மதித்தேன்???

அய்யோஓஓஓ....!!!

அவர் சொன்ன அத்தனை வார்த்தைகளையும் மறுக்க முடியாத உண்மையாச்சே.தான் தானே இத்தனைக்கும் காரணம் என்பதை இத்தனை வருடங்களுக்கு பிறகு உணர்ந்தார்.

இத்தனை வருடமாக கணவர் தன்னிடம் பாசமாகத்தான் இருந்தார் தான் கேட்ட அத்தனையும் வாங்கி கொடுத்தாரே அப்போ எஸ்தருக்கும் அதே உரிமை இருக்கும் தானே.

அவளை எப்படி ஒண்ட வந்தவள் என்று சொல்ல முடியும்???ஊர் அறிய தாலி கட்டிய மனைவி என்ற ஸ்தானம் எஸ்தருக்கு தானே இருக்கிறது.அவர் சொன்னது போல என்னுடைய விஷயம் தெரிந்தால் என்னை தானே இரண்டாம் தாரம் என்று சொல்லுவார்கள் என்னும் உண்மை புரிந்து அழும் போது அவர் போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.

கண்ணை துடைத்துக்கொண்டு அங்கு டேபிள் மேல் இருந்த ஃபோனை எடுத்து பார்க்க அவரின் மகன் அருண் கால் பண்ணுவது தெரிந்தது.

அட்டென்ட் பண்ணியவர் சொல்லுப்பா???ரெண்டு பேரும் நல்லாருக்கீங்களா என்று கேள்விகளை அடுக்க.. உங்க பேரப்பிள்ளை நல்லா நல்லாருக்கு போதுமா.சண்டேனு இப்போது தான் தூங்கி எந்திரிச்சிருக்காள் மா என்க,சரிப்பா என்றவர் மேலும் சிறிது நிமிடம் மகனிடம் பேசி விட்டு போனை வைத்தார்.

வனிச்சூர்:

அண்ணா நான் எந்த தப்பும் பண்ணலைனு கண்மணி அழுது கொண்டே சொல்ல,தங்கையை முறைத்தவன் நீ தப்பு பண்ணினேனு நான் இப்போது சொன்னேனா?

இந்த விஷயத்தை ஏன் சொல்லலைனு தான் கேட்கிறேன்,உனக்கு அது புரியுதா? இல்லையா என்றவாறு சின்ன தங்கச்சியிடம் திரும்பியவன் நீ என்ன கவி சங்கதி??

அண்ணனின் கோவமான முகத்தை பார்த்த கவிதாவோ அய்யோ அண்ணா...!

"அப்படி எதுவும் இல்லை"

தாத்தா கிட்ட சொன்ன போல நான் டாக்டர் ஆவது தான் என் லட்சியம். நீங்களா பார்த்து எந்த பயலை கட்டி வைத்தாலும் எனக்கு சம்மதம் ணா.தாராளமாக என்னை நீங்கள் நம்பலாமென பதற்றமாக சொன்னாள்.

அவள் சொன்ன தோரணையில் கோவமாக இருந்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

பேத்தி சொன்னதை கேட்ட தாத்தாவோ,ஏ சின்ன கழுதை உன் கிட்ட படிக்கிறத கதையை பத்தி தான் கேட்குது.உனக்கு முன்னாடி பிறந்த ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகல,அதுக்குள்ள உனக்கு கல்யாணம் ஆசை வந்துடுச்சா?

அய்யா அன்பு இந்த கழுதைக்கும் மாப்பிள்ளை பாரு...நீ படிப்ப மூட்டை கட்டிட்டு போய் புருசன் வூட்டுல ஆக்கி போடு என்கவும்,ஐயோ தாத்தா அப்படி எல்லாம் முடிவு எடுக்காதே..

நான் உண்மையிலேயே படிச்சு டாக்டர் ஆகணுமென்று கவிதா பதற,அதை சொல்லாதே செயலில் செய்து காட்டு அப்போது பாக்கலாமென்றார் தம்புசாமி தாத்தா.

"கண்டிப்பாக செய்து காட்டுவேன் தாத்தா "

நம்ப டீலிங் போல உங்க அப்பாவோட அந்த ஏழு பவுனு பதக்கம் எனக்கு தான் என்கவும் டாக்டராகி காட்டு இதே கையால உனக்கு கொடுக்கிறேன் என்றார்.

அப்பா அம்மாஸ் அண்ணா அக்கா நீங்க எல்லாரும் சாட்சி,தாத்தாவோட அந்த பரம்பரை செயின் எனக்கு தான் சொல்லிட்டேன் என்கவும்,ஏ சின்ன கழுதை போய் படிக்கிற வேலையை பாரு என்று கனலரசன் சொல்லவும் விட்டால் போதும் டா சாமியென அங்கிருந்து ஓடி விட்டாள்.

கண்மணி என்று கோபமாக கனலரசன் கூப்பிட,தந்தையின் குரலை கேட்டவள் அழுது கொண்டே சொல்லுங்க பா என்க...

எல்லா பிரச்சனையும் உங்களாலே தீர்த்துக்க முடியாது.பெத்தவங்கள் எதுக்கு இருக்கோம் சொல்லு இது பெருசா போய் முடிஞ்சிருச்சினாக்க குடும்ப மான மரியாதை எல்லாம் காத்துல பறக்கும்.

அது தெரிஞ்சும் நீ அமைதியா இருக்கிறியே எவ்வளவு நெஞ்சழுத்தம்???எனக்கு வந்த கோபத்திற்கு உன்னை நல்லா பெல்டாலே சாத்தலாம்னு தான் இருந்தேன்.

அதுக்கு முன்னாடியே உன் அண்ணன் என்கிட்ட இருந்து காப்பாத்திட்டான். அதனால் தான டா இவ்வளவு வேகமா வந்து நீ அடிச்ச என்று மகனை முறைக்கவும் அது வந்து பா என்று கண்ணன் தடுமாற..போங்க போய் வேலையை பாருங்க.

நீங்க ரெண்டு பேரும் அந்த அடுப்படி, குழம்பு,சோறு மாட்டிற்கு தீவனம் வைக்கிறது இதையே பாத்துட்டு இருங்க புள்ளைங்களை எல்லாம் கவனிச்சுடாதீங்க என்று பல்லை கடிக்கவும்,புவனாவும் ரஞ்சனியும் கீழே குனிந்து கொண்டார்கள்.

அப்பொழுது வயல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுமதி எல்லாரும் ஹாலில் நிற்பதை பார்த்து ஏன் உங்க அப்பா எதாச்சு சொன்னாரா?

இப்படி நின்னுட்டே இருக்கீங்களே என்றவாறு முற்றத்தில் உட்கார,ஏய் வந்த உடனே என் வாயை தான் புடுங்குவியா?

எனக்கு வேற வேலையே கிடையாதா உன் பிள்ளையையும் பேரப்பிள்ளை மருமகளுங்களை ஏதாச்சு சொல்லிகிட்டே தான் இருப்பானா என்று தம்புசாமி தாத்தா மனைவியை முறைக்க,

அது என்ன சந்தேகம் என்றவர் ஆத்தாடி என்றவாறு அங்கிருந்த தூணில் சாய்ந்தவர் அப்பொழுதுதான் அழுது கொண்டிருக்கும் பேத்தியை பார்த்தார்.

ஆத்தா என்ன ஆச்சு ஏன் இப்படி அழுதுகிட்டு இருக்க?யாரு என்ன சொன்னா என்று பதற,யாரும் சொல்லலையே என்கும் பேரனை பார்த்தவர் நீ தான்டா புள்ளைய ஏதாச்சு சொல்லிருப்ப,இன்னொரு வூட்டுக்கு வாழ போற புள்ள இப்படி கண்ண கசகிட்டு நின்னா நல்லாவா இருக்கென்று பேரனை முறைத்தார்.

அந்த நேரம் அன்பரசனும் வீட்டுக்குள் வர மற்றவர்களுக்கோ அவரின் கோபத்தை பற்றி தெரிந்ததால் பயம் வந்தது.

சுமதி பாட்டிக்கு எதுவும் தெரியாது என்பதால் என்ன ஆச்சு ரஞ்சனி புடிச்சு வச்ச புள்ளையார் போல இருக்கீங்க என்க..

உள்ளே வந்த அன்பரசன் கண்ணு இந்தாடா என்று கையில் இருந்த பையை நீட்டினார்.

வேறு பக்கம் திரும்பி கண்களைத் துடைத்துக்கொண்டு வேகமாக வந்து கண்மணி வாங்க,இதுல சூடாக போண்டா பஜ்ஜி இருக்கு டா.எல்லாருக்கும் கொடு.

அப்படியே உன் கையால இஞ்சி டீ போட்டு எடுத்துட்டு வா தல ரொம்ப வலிக்குது.என்னா வெயிலு என்றவாறு அங்கே இருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தவர்,கனலு புள்ளைக்கு நகையை எடுத்துட்டு வந்துட்டியா டா?

ஆமா ணா..

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தோம் என்று கனலரசன் சொல்லவும் சரி டா.நானும் சமையலுக்கு,பந்தல் அலங்காரம் அப்புறம் மேளத்துக்கு சொல்லிட்டேன்.

ரொம்ப வருஷத்துக்கு பிறகு நம்ப வீட்டில் நடக்கப் போற முதல் விசேஷம். அது சிறப்பா இருக்கணும் கனலு...

மகன்கள் பேசுவதை கேட்ட சுமதி பாட்டி,எய்யா அன்பு அப்படியே தீரன் பொண்டாட்டிக்கு 5 மாசத்துல செய்யுற சடங்கு செஞ்சிடலாம் யா..

"நம்ப வூட்டு வாரிசு"

எதுக்கு குறை வச்சுக்கிட்டு?

நாலு பேரு நாக்கு மேல பல்லை போட்டு பேசக்கூடாது.கொஞ்சம் யோசிய்யா என்று பெரிய மகனிடம் சொல்ல, ம்ம் சரிம்மா உன்னோட விருப்பம் தான்.

என்ன செய்யணுமோ தாராளமா நல்லபடியா செய்யுங்கள்.அதுக்கு முன்னாடி அந்த பொண்ணோட வீட்டுக்கு நம்ம நேர்ல போய் பேசுறது நல்லது.நீங்க என்னப்பா சொல்றீங்க என்று தம்புசாமியிடம் கேட்க கண்டிப்பா அன்பு,போய் பேசிய தான் ஆகணும். பெரிய புள்ள நிச்சயதார்த்த முடியட்டும் போகலாம் யா...

இவர்கள் பேசிக் கொண்டிருக்க கண்மணியும் எல்லாருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தவள்,இந்தா பாட்டி என்கும் போது பேத்தியின் முகத்தை பார்த்தவர் என்ன கண்ணு உன் கன்னம் இப்படி சிவந்துருக்கு? என்ன ஆச்சு என்கவும் எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து நின்றாள்.

----

பொள்ளாச்சியில் இருந்து புறப்பட்ட இருவரும் மதிய உணவுக்கெல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கிருக்கும் பிரபலமான ஹோட்டலுக்கு அழைத்து போனவன் மனைவிக்கு பிடித்தமான உணவை ஆர்டர் பண்ண,சிறிது நிமிடத்தில் உணவும் வந்தது.

இப்போவாது வாயை திறப்பாளென்று செழியன் பார்க்க,ஷமீராவோ தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட தொடங்கினாள்..

பாவி...!!

"ரொம்ப பண்றாளே"

இவளை மலையிறக்குறதுக்குள் நாக்கு வறண்டு போயிடும் போல..

அய்யோ செழியா ஏதாவது பண்ணி அவளை சமாதானம் பண்ணுடா. இல்லை இதான் சாக்குனு உன் பொண்டாட்டி தனியாவே படுக்க போய்டுவாள்.

"அப்புறம் உன் லட்சியம் அதான் 10 குழந்தைகள் பிளான் ஸ்வாகா தான் "

சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் சூதானம் டா என தனக்குள் பேசிக்கொண்டே வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடிக்க,

அவன் எதிரில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவளோ அங்கிருந்த பேரரை கூப்பிட்டு மின்ட் மொஜிட்டோ ஒன்னு என்கவும், சார் உங்களுக்கு என்று செழியனிடம் கேட்க..

வேண்டாம் பில்லு கொண்டு வாங்க என்று சொல்லிவிட்டு மனைவியை பார்த்து முறைத்துக் கொண்டே கை கழுவ சென்றான்.

பின்னர் சாப்பிட்டதற்கான பணத்தை கொடுத்து விட்டு காரில் ஏறி மீண்டும் பயணத்தை தொடர்ந்தவர்கள் வனிச்சூரின் எல்லைக்குள் வரும் போது மாலை 6 மணி ஆனது..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
398
வனிச்சூர்:

வீட்டிற்கு வந்த மகன் மருமகள் இருவரையும் நலம் விசாரித்தார்.

பின்னர் இருவரும் மாடியில் இருக்கும் அவர்கள் அறைக்கு செல்ல ஷமீராவோ எதுவும் சொல்லாமல் பெட்டில் உட்கார்ந்து கொண்டாள்.செழியனோ மனைவியை பார்த்தபடியே சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்ட..

இந்த பாடி பில்டர் உடம்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று முணவிக் கொண்டு வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

டவலோடு ரெஸ்ட் ரூம் போனவனோ பிரஷ் ஆகிட்டு வெளியே வந்தவன் தலையை அங்கும் இங்கும் ஆட்ட அதிலிருந்து ஈரம் எல்லாம் அங்கு உட்கார்ந்து இருந்தவளின் மேலே தெறிக்க அவனை முறைத்தாள்.

என்ன டி பார்வையாலே எரிச்சிடுவ போல என்கவும்,அவளோ எதுவும் பேசாமல் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று கதவை தாழிடுவதை பார்த்தவன் எந்த பால் போட்டாலும் நோ பால் போகுதே?

இன்னும் பயிற்சி வேண்டுமோ?

முடியல..!!

கல்யாணம் பண்ணியவன் பாடு இதான் போல.வாயை வைத்துக்கொண்டு நம்மளும் சும்மா இருக்கிறதில்லை என்று புலம்பிக் கொண்டே கபோர்டை திறந்து டி-ஷர்ட் டிராக் பேண்ட் எடுத்து மாற்றிக் கொண்டு கீழே போனவன் மணி ஏழு தானே ஆகுது நான் போய் தாத்தா வீட்ல பாத்துட்டு வரேன் மா.

8:30 மணிக்கு மேல சாப்பிடுறேன் என்க சரி யா என்ற வானதி டிவி யை ஆன் பண்ணி சீரியல் பார்க்க ஆரம்பித்தார்.

தம்புசாமி வீடு:

ஏ கண்ணு உன்னை தான் கேட்கிறேன்??கன்னத்துல என்ன சிவந்து போய் இருக்கு மரம் போல நின்னுகிட்டு இருந்தா என்ன அர்த்தம் என்று சுமதி பாட்டி கோவமாக கேட்க அவள் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் கீழே உட்கார்ந்திருந்தவரின் கைகளில் விழுந்தது.

அதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க கண்மணி அழுது கொண்டிருப்பது தெரிந்தது ஏ புவனா ரஞ்சனி என்ன டி ஆச்சு???

யார் என்ன சொன்னீங்க என்க..அவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தனர்.

அப்போது கண்ணனோ நான் தான் உன் பேத்தியை அடிச்சேன் இப்ப அதுக்கு என்ன என்கவும்,என்ன டா சொன்ன என்றவாறு வேகமாக எழுந்து போனவர் தன் பேரனை சராமரியாக அடிக்க அந்த நேரம் வீட்டுக்குள் வந்த செழியன் இதை பார்த்து,இந்த ரவுடி பொம்பள எதுக்கு இப்படி அவனை கொஞ்சிக்கிட்டு இருக்கு?

அடி வாங்கிக் கொண்டிருந்த கண்ணனோ கொலைவெறியில் தனது அத்தை மகனை முறைத்தான்.

எதுக்குடா கண்ணுவ அடிச்ச என்ன பழக்கம் பொம்பள புள்ள மேல கைய வைக்கிறது?இப்படித்தான் உன்னை வளர்த்ததா என்று சொல்லிக் கொண்டு மீண்டும் அடிக்க...

ஏ பாட்டி என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்க.அது தெரிஞ்சால் நீயே விளக்கமாத்தால உன் பேத்தியை அடிப்ப என்று கண்ணன் கத்த..

ஆயிரம் நடந்திருக்கட்டும் வாயால் கண்டிக்க வேண்டியது தானே அது என்ன மேல கை வைக்கிறது??

உனக்கு முன்னாடி பிறந்தவன் இரண்டு பேர் இருக்கிறார்கள் அவர்களுக்கு இல்லாத பழக்கம் உனக்கு மட்டும் எப்படி வந்தது டா.கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகுது.பேர புள்ளை எடுத்துட்டேன் இதுவரைக்கும் உன் தாத்தா விளையாட்டுக்கு கூட என் மேல கையை வச்சது கிடையாது உனக்கு மட்டும் என்னடா இவ்ளோ கோவம்???

இவன் அடிக்கும்போது நீங்களாம் என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டா இருந்தீங்க?உங்க வாயில கொழுக்கட்டை இருந்துச்சா?இல்ல கை எதாச்சு பூ பறிச்சு கொண்டு இருந்ததா என்று மற்றவர்களை பார்த்து சுமதி பாட்டி முறைக்க...

சபாஷ்...

"இதுதான் என் ஜான்சி ராணி என்கிறது" நல்ல கேள்வி அம்மாச்சி என்று செழியன் கையை தட்ட,.அடேய் செத்த சும்மா இருடா என்று சத்தம் போட்ட தம்புசாமி தாத்தா,நீ எப்ப வந்த அப்பு என்கவும் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் வந்தேன்..

எதுக்கு இப்போது இந்த லம்பாடி அவனை போட்டு அடிக்குது என்க..

அழுது கொண்டிருந்த கண்மணியோ மாமா என்றவாறு வேகமாக வந்து செழியனின் கையைப் பிடித்துக் கொள்ள,என்ன டா கண்ணு என்ன ஆச்சு என்றவாறு அவள் முகத்தை பார்த்தவனுக்கும் கன்னங்கள் இரண்டும் சிவந்து போய் இருப்பது தெரிந்து என்ன டி ஆச்சு??

யாரு உன்னை அடித்தது?

நான் தாண்டா அடிச்சேன் என்று கண்ணன் சொல்ல என்னாது நீ அடிச்சியா என்று வேகமாக வந்தவன் அவன் பங்குக்கு ஓங்கி ஒரு அறை விட, அடேய் நிறுத்துங்கடா..

பாட்டியும் பேரனும் மாத்தி மாத்தி அடிச்சிட்டே இருக்கீங்க???இது உடம்பா இல்லை இரும்பா??முதல்ல என்ன நடந்துச்சுன்னு கேளுங்க..

அப்புறம் மேல் இரண்டு பேரும் அடிங்கள் என்றவன் நடந்ததை சொல்ல இப்பொழுது கண்மணி பக்கம் திரும்பிய செழியனோ அவளை ஓங்கி அறைந்தவன் இவ்வளவு நடந்துருக்கு ஒரு வார்த்தை சொல்ல தோணலைனா உனக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம்?

இது விபரீதத்தில் போய் முடிந்தால் மானம் மரியாதை என்ன ஆவது டி?

மாமா அப்பவே சொல்லுச்சு உன்னை படிக்க வைக்க வேண்டாமென்று,நான் தான் படிக்கட்டும் மாமா வேலைக்கு போகட்டும்னு சொன்னேன்.

படிச்சு நாலு காசு சம்பாரிச்சதும் கொழுப்பு வந்திருச்சா என்க,சுமதி பாட்டியும் இந்த விஷயத்தை எதிர்பார்க்கவில்லை.ஏன் கண்ணு சின்னவன் சொல்றது உண்மையா என்கவும்,ஆமாம் பாட்டியென அழுதுகொண்டே தலையசைத்தாள்.

ஐயோ மலையாத்தாஆஆஆ என்றவர் சரி சின்னவனே நம்ம புள்ளை தான் தப்பு பண்ணலையே அதுக்கு ஏன் டா அடிச்ச?வாயால கடிக்க வேண்டியது தானே என்று அதிலேயே குறியாக இருந்தார்.

இப்ப என்ன உன் பேத்தியை அடிச்சது தான் உனக்கு பெரிய தெய்வ குத்தமா இருக்கு அவ்வளவுதானே??நான் வேணா காலில் விழுந்து மன்னிப்பு கேட்கட்டுமா என்று கண்ணன் கத்த...

ச்சை வாய மூடு டா ... நாளன்னைக்கு ஆக வேண்டிய காரியத்தை பாருங்க போங்க...ஏதாவது ஒரு காரணம் கிடைச்சிட கூடாது.. அத பத்தி பேசிட்டு இருப்பீங்க.இதை அப்படியே விட்டு மத்த வேலையை பாருங்கள்,போங்க என்று தம்புசாமி தாத்தா சத்தம் போடவும் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

பின்னர் நிச்சயதார்த்த வேலையைப் பற்றி செழியன் தனது மாமாக்களிடம் விசாரிக்க அவர்களும் என்னென்ன வேலை நடந்து இருக்கிறது என்று சொல்ல சரி மாமா என்றவனோ மற்றதை பற்றி சிறிது நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தவன் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.

ஹாலில் உட்கார்ந்து கொண்டு வானதியும் ஷமீராவும் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் சாப்பாடு எடுத்து வை என்று சொல்லிக் கொண்டு கையை கழுவ,அம்மாடி உன் புருஷன் சாப்பாடு கேக்குறான் பாரு போய் பரிமாறுமா என்று மருமகளிடம் சொல்ல..

ஷமீராவும் சரிங்க அத்தை என்று தலையசைத்துக் கொண்டு போனவள் சமைத்த உணவுகளை பரிமாற மனைவியை பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.அவளோ அவனை கண்டுகொள்ளாமல் தட்டில் மட்டும் எண்ண தேவையோ அதை மட்டும் பார்த்து பார்த்து பரிமாறினாள்.

அத்தை நீங்களும் சாப்பிடுங்க என்று குரல் கொடுக்க உங்க மாமா வரட்டும் நீ சாப்பிட்டு மேலே போ.பால் காய்ச்சி வச்சிருக்கேன் பாரு என்றவாறு டிவியை பார்த்துக் கொண்டிருந்தார்

சோழனூர்:

அத்தை இப்போ எஸ்தர் கிட்ட பேச முடியுமா???

நல்லாருக்கு தானே என்கும் போது ஜேம்ஸின் தொண்டை கரகரத்தது..

மருமகனை பார்த்த சாரதா பாட்டி நல்லாருக்கு யா.இப்போது மதுரையில் தான் இருக்குறாள் என்றவர் பொள்ளாச்சிக்கு போன விஷயதை சொல்லி முடிக்க...,

ம்ம்..!!

நிச்சயத்திற்கு வரும் தானே???

கண்டிப்பாக யா.அது எப்படி வராமல் இருப்பாள்?நம்ப குடும்பத்தில் அடுத்த தலைமுறையில் நடக்கும் முதல் நல்ல காரியம்.இதுக்கு வராமல் எப்படி...

புரியுதுங்கத்தை... அண்ணனும் அங்கு வரும் எதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்ய? நம்ப புள்ளை வாழுற வூடு அதை யோசிக்க தான் மனசுக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறது....

ஜேம்ஸின் வார்த்தைகளை கேட்ட சாரதா பாட்டி அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது யா.நாம யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணியதில்லை.நல்லது நடக்கும் என்றவர் இன்னும் எத்தனை வருஷத்துக்கு தான் நீ வடக்குலே இருப்ப?

ஊரோடு வந்துடலாமே ஐயா??நல்லது கெட்டதுக்கு அவ்வளவு சீக்கிரம் உன்னால வர முடியலையே என்று வருத்தமாக கேட்க,இன்னும் ரெண்டு வருஷம் தான் அத்தை அவங்க ரெண்டு பேரும் 12வது முடிச்சிட்டாங்கனா ஊரோட வந்துடுவேன்.

பத்தாவது எழுதி இருக்காங்க.அப்புறம் காலேஜ் தானே ரெண்டு வருஷம் முடிச்ச பிறகு ஓர் அளவுக்கு நானும் ஃப்ரீ ஆயிடுவேன் என்கவும்,அதுவும் வாஸ்தவம் தான் யா.புள்ளைங்க படிப்பையும் பார்க்கணுமே..

ஏன் ஜேம்ஸ் உன் பெரிய மவள் கிட்ட போன்ல பேசினியா???

இல்லத்தை நான் பேசல..

ஓஓஓ...இது நம்புர போலயா இருக்கு?

அப்பாவும் பிள்ளையும் போலயா ரெண்டு பேரும் பேசுவீங்க?உன் கிட்ட சொல்லாம எனக்கு தெரிஞ்சு அந்த சிறுக்கி இந்த காரியம் பண்ணிருக்க மாட்டாளே என்கும் போது ஜேம்ஸுக்கு சிரிப்பு வந்து விட்டது.

மருமகனின் சிரிப்பை பார்த்தவர் ஆக உன் மவள் செய்த காரியத்தில் உனக்கும் பங்கு இருக்கிறது அப்படி தானே யா???

சிரித்துக் கொண்டிருந்த ஜேம்ஸ் ஐயோ அத்தை நான் சும்மா எதார்த்தமா சிரிச்சேன்.உடனே நீ கற்பனை பண்ணிக்காத..ஷமி செஞ்ச காரியம் எனக்கு தெரியாது.காதலிக்கிற விஷயம் மட்டும் தான் உங்களை போல எனக்கும் தெரியும்...புள்ளை தான் என்கிட்ட சொல்லுச்சு...

அப்படியா...!!!

நீ சொல்ற கதையை எவளாவது கேண சிறுக்கி நம்புவா...ஷமீரா எதுவா இருந்தாலும் பாபுக்கு அப்புறம் உன்கிட்ட தான் சொல்லுவா.இப்ப இந்த விஷயத்தை மட்டும் எப்படி சொல்லாம செஞ்சுருப்பா???

எனக்கு அப்பையில் இருந்தே சந்தேகம் உனக்கு இது கண்டிப்பா தெரிஞ்சிருக்கும்னு.இங்க நடந்த சூழலில் நான் அதை யோசிக்கலை..

ஆனால் ஒன்னு யா..

நல்ல குடும்பத்தில் வாக்கப்பட்டுருக்கா அது வரையில் ரொம்ப நிம்மதி.தங்கமான பையன்.அதேபோல அவங்க குடும்பமும் தான்..

இல்லைனா நம்ப வீட்டுக்கு அந்த வீட்டில் இருந்து பொண்ணு எடுப்போமா?என்ன சாதி மதம் வேற அவ்வளவு தான்.படிக்கும் போது நீ சொல்லுவ இந்த சாதி சாக்கடை எனக்கு வேண்டாங்கத்தை.

எல்லாரும் மனிதர்கள் என்ற எண்ணம் போதுமானதுனு.அதுக்கு உன் பெரியாத்தா பத்ரகாளி போல ஆடுவாள்.ஆனா அவங்க மவனே வேற்று சாதி பொண்ணை கட்டினானே அதுக்குனு உசுரையா விட்டாள்?

என் மவள் வாழ்க்கையை பலிகடாவாக்கிட்டாளே என்று கலங்க,விடுத்தை போனது பேசி என்ன பயனென்று தனது அத்தையை சமாதானம் பண்ணினார்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top