• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
392
பொள்ளாச்சி:

ஷமீ நான் எங்கேயும் போயிடல புரியுதா, உன் அண்ணன் அக்கா அண்ணி மாமா கூட தான் இருக்கிறேன்.திரும்ப அந்த வீட்டுக்கு நான் போவேன்னு உறுதியா சொல்ல முடியாது.

உனக்கும் வந்து போவதற்கு தாய் வீடு வேணும் இல்லையா?

இத்தனை நாளா நீ ஒத்த பொண்ணா இருந்த,இன்னைக்கு உனக்கு அண்ணன் அக்கா இருக்கிறார்கள்.நல்லது கெட்டதுக்கு இனிமே எனக்கு அப்புறம் இவங்க தான், அவங்களுக்கும் நீதான் புரிஞ்சி நடந்துக்க.

குடும்பத்தோட கௌரவம் வீட்டு மருமக கையில தான் இருக்கு அதை மறந்து விடக்கூடாது.நல்லதோ கெட்டதோ அனுசரிச்சு போக கத்துக்க.நீ ஒத்த மகளா அங்கு வாழ்ந்த.உன்னை இளவரசி போல நான் வளர்த்தேன்.

ஆனால் இங்கு நீ அந்த வீட்டுக்கு மருமக தான் அதே இளவரசி தோரணையோடு அங்கு வாழ்ந்தால் அது நல்லா இருக்காது.உன்னோட பொறுப்பு எதுவோ அதை உணர்ந்து யாரோட மனமும் கோணாமல் நடந்துக்கணும் புரியுதா?.

நீ எந்த அளவுக்கு இங்க நடந்துக்குறியோ அப்படித்தான் பாபுவும் கண்மணியை பார்த்துப்பான் உன்னோட மட்டும் போகல அது கண்மணிக்கும் தொடரும்.

தம்பி உங்களுக்கும் இதை தான் சொல்றேன்.நீங்க எப்படி என் பொண்ணை பாத்துக்குறீர்களோ அந்த அளவுக்கு தான் உங்க பொண்ணையும் பாபு பார்த்துப்பான்.இதுதான் நிதர்சனம்.

பாபுக்கு இந்த உலகத்திலே யாரை ரொம்ப பிடிக்குமென்று கேட்டால் யோசிக்காமல் ஷமியை தான் சொல்வான்.பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கணும்னு விதி இருக்கிறது.

சின்ன சின்ன பிரச்சனைகள் புருஷன் பொண்டாட்டிக்குள்ளும் குடும்பத்துலையும் வரும்.அதை பெருசு படுத்தாமல் பெரியவங்க சொல்றதுக்கு தாழ்ந்து போகலாம் தப்பே கிடையாது. இரண்டு பேரும் சீக்கிரம் நல்ல விஷயத்தை சொல்லுங்க என்கவும் கண்டிப்பாகங்கத்தை என்றான் .

பின்னர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு ருத்ரனும் தீபனும் அவர்களின் மனைவியோடு எஸ்தரையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டானுங்கள்.

அப்பாடா ஒரு வழியா எல்லா பிரச்சனையும் ஓஞ்சு போயிடுச்சுடா மச்சான் என்றவாறு அங்கிருந்த சோபாவில் வெற்றி உக்கார,கரெக்டாக அந்த நேரம் வசுந்தராவிடமிருந்து ஃபோன் வந்தது.

அதானே மனுஷன் நிம்மதியா இருந்தால் உன் அத்தைக்கு பொறுக்காதே என்று சொல்லிக் கொண்டு அட்டென்ட் பண்ணியவன் சொல்லு மா என்க,வெற்றி என்கும் வசுந்தராவின் குரலை வைத்து அது அபிசியல் விஷயம் என்பது தெரிந்து எஸ் மேடம்.

கேஸ் பற்றிய சில விஷயங்களை வெற்றியிடமும் செழியனிடமும் அவர் பேசிக் கொண்டிருக்கு ஷமீராவோ மாடியில் துவைத்து காய வைத்த துணிகளை எடுத்துக் கொண்டு ரூமிற்கு வரவும் ஜனனியின் பையன் சக்திவேலோ அத்தை அத்தை என்று கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

வாங்க கண்ணா என்கவும் எனக்கு மேகி வேணும் அம்மா செஞ்சு தர மாட்டேங்குறாள்.நீ செஞ்சு கொடுத்தை என்று அழ,அச்சோ இதுக்கு ஏன் செல்ல குட்டி அழறிங்க என்றவாறு கையிலிருந்த துணியை கீழே போட்டுவிட்டு பிள்ளையை தூக்கியவள் மேகி தானே இதோ அத்தை செஞ்சு கொடுக்கிறேன் வாங்க என்று தூக்கிக் கொண்டு கிச்சனுக்கு போனவள் அங்கிருந்த கிச்சன் மேடையில் தூக்கி சக்தியை உட்கார வைத்தாள்.

பின்னர் கோதுமை மாவை எடுத்து தண்ணீர் ஊத்தி பிசைந்தவள் அதை இடியாப்பம் போல் பிழிந்து கொதிக்கிற வெந்நீரில் போட்டு எடுக்கவும் அதோ நூடுல்ஸ் போல தனித்தனியாக வந்தது. பின்னர் அதற்காக காய்கறிகள் எல்லாம் வெட்டி மசாலா பண்ணி ரெடி பண்ணி நூடுல்ஸ் செய்து முடிக்க ஆஹா என்ன ஒரு வாசனை என்றவாறு செழியனும் கிச்சனிற்குள் வந்தான்.

மாமா இது எனக்காக தான் எங்க அத்தை செஞ்சா உனக்கு கிடையாது என்று சக்தி சொல்ல,அடேய் அவ என் பொண்டாட்டி டா.எனக்காக தான்டா செஞ்சாள் என்று சிறு குழந்தையிடம் வம்பு வளர்க்க,கொஞ்சம் கூட வெக்கமா இல்லையா சின்ன குழந்தைகிட்ட போய் இப்படி போட்டியா என்று ஷமீரா முறைக்க,நீ தாண்டி வம்புக்கு வர மாட்டேங்குற..

அதனால தாண்டி மருமகன் கிட்ட சண்டை போடறேன் என்று கண்ணடித்து சொன்னான்.ஆஆஆ என்று பல்லை கடித்தவள் தட்டை தூக்க,எனக்கும் எடுத்துட்டு வாடி பசிக்குது என்றான்.

ஆமா இவரு சின்ன குழந்தை பாருங்களேன் என்க,அதுல என்ன டி சந்தேகம் என்கவும்,பேசாம போங்க இல்லன்னா கொதிக்கிர பால் எடுத்து மேலேயே ஊத்திடுவேன்..

ரொம்ப தாண்டி என்னை மிரட்டுற என்று முறைத்துக் கொண்டு வெளியே போக,அந்த நேரம் மாடுகளை தொழுவத்தில் கட்டி விட்டு வீட்டிற்குள் வந்த ஜனனியோ என்ன ஒரே மசாலா வாசனையாக இருக்கிறது ணா என்கவும்,உன் நாத்தனார் என்னமோ பண்றாள் டா என்றவாறு செழியன் சோபாவில் உட்கார்ந்தான்.

சக்தி என்கிட்ட நூடுல்ஸ் கேட்டான் ணா. நான் செஞ்சு தர மாட்டேன்னு சொன்னேன்.அதான் ஷமீரா கிட்ட கேட்டு இருக்கான் போல என்கவும் ஆமாங்கண்ணி நூடுல்ஸ் தான் பட் வீட் நூடுல்ஸ் என்றபடியே அங்கு வந்த ஷமீரா சொல்ல,அடிப்பாவி என்னைக்காவது எனக்கு செஞ்சு கொடுத்திருக்கியாடின்னு முறைத்தான்.

ஷமீராவோ சிரித்துக்கொண்டு ஆளுக்கு ஒரு தட்டில் நூடுல்ஸ் போட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கவும் அதை சாப்பிட்டவர்களோ ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினர்.

டேஸ்ட் வித்தியாசமா இருக்கே ஷமீ,
இது எதுல செஞ்ச?நான்தான் நூடுல்ஸ் வாங்கி வைக்கலையே என்று ஜனனி கேட்க,அது வந்துங்க அண்ணி கோதுமை மாவில் தான் செஞ்சேன் என்றாள்.

என்னது கோதுமை மாவா என்று மற்றவர்கள் அதிர்ச்சியா கேட்க,என் பொண்டாட்டி பெரிய "செப்"டா சமையல்ல அடிச்சுக்க முடியாது என்று செழியன் சொல்லவும்,உன் பெருமை பீத்தலை கொஞ்சம் நிறுத்து முதலில் என் தங்கச்சி கிட்ட ரெசிபி கேட்கிறேன்.
உன் தங்கச்சிக்கு யூஸ் ஆகும் என்று வெற்றி சொல்லவும் ஜனனியோ கணவனை முறைத்து பார்த்தாள்.

உண்மையை தான டி சொல்றேன். என் தங்கச்சிக்கிட்ட தெரிஞ்சுக்க இதுவரைக்கும் கோதுமையில நூடுல்ஸ் செஞ்சு நீ கொடுத்திருக்கிறாயா என்க,இல்லை என்றாள்.அதனால் தான் டி சொல்கிறேன்.

அம்மாடி உன் அண்ணிகாரிக்கு கொஞ்சம் அந்த ரெசிபி சொல்லிக் கொடு டா.அண்ணனும் கொஞ்சம் வாய்க்கு ருசியான நல்ல சாப்பாடு சாப்பிடுகிறேன் என்க...

வத்த குழம்பு வச்சு குடு டி கருவாட்டு குழம்பு வச்சு குடு டி மீன் குழம்பு வச்சி குடு டி என்று நீ வருவீங்கள் தானே குழம்பு சட்டியை தூக்கி உங்க மண்டைய பொளக்குறேன் பாருங்கள் என்று ஜனனி திட்ட,அதை இன்னைக்கே செய்யலாம் டா தப்பே கிடையாது என்று செழியன் சொல்லவும்,அட கொலைகாரப் பாவி அவளுக்கு தெரியாது இவன் எடுத்து கொடுக்கிறான் பாரு என்று செழியனை வெற்றி முறைக்க..

அப்புறம் வெற்றி உன் தங்கச்சியை கூப்பிட்டு நானும் அங்கே கிளம்பறேன் என்கவும் சரி பார்த்து போயிட்டு வா. இங்கு வீட்டுக்கு வந்துட்டு தானே போவ என்க ஆமாடா என்றான்.

பின்னர் இருவரும் தயாராகி கீழே வர, ஜனனி ஜனனி என்று வெற்றி கூப்பிட இதேங்க என்றவள் சாமி ரூமில் இருந்து ஒரு தாம்பாளத்தை எடுத்து வர, அதில் பட்டு புடவை பட்டு வேஷ்டி சட்டை குங்குமம் பூ பழங்களோடு நகை பெட்டியும் இருந்தது.

இருவரும் இணைந்து ஷமீராவுக்கும் இளஞ்செழியனுக்கும் கொடுக்க அதை வாங்கிக் கொண்டனர்.எதுக்கு ணா இந்த பார்மாலிட்டிஸெல்லாம் என்க,பொறந்த பெண் அப்பா வீட்டில் இருந்து கையை வீசிக்கொண்டு போகக் கூடாது.இது நம்ம குடும்ப வழக்கம் டா.

அப்பா அம்மா இங்க இருந்தாக்க அவங்க வேற போல செய்வாங்க.அந்த ரெண்டு காதல் புறாக்களும் டெல்லியில சுத்திக்கிட்டு இருக்குங்க.அவங்க வந்த பிறகு உங்களை விருந்துக்கு கூப்பிடுவார்கள் டா.

"ஹம் சரிங்க அண்ணா"

ஏதாச்சும் இவன் வாலாட்டினால் சொல்லு டா.உன் அண்ணனும் போலீஸ்காரன் தான் என்கவும்,கண்டிப்பாக அண்ணா என்று ஷமீரா சிரிக்க..அடேய் உன் தங்கச்சியே நாலு போலீஸ்காரிக்கு சமம்.

அவளுக்கு எதுவும் தெரியாது நீ வேற சொல்லிக் கொடுக்கிறியா ஏண்டா ஏன் இப்படி என்று செழியன் முறைக்க, ஆயிரம் தான் இருந்தாலும் மனைவியோட அண்ணன் உதைக்கிற போல வராது டா.

வெற்றியின் பையன் சக்தியோ அத்தையை விட மாட்டேன் என்று அழ, சக்தி குட்டி மாமா ஒரு பயங்கர ப்ராசஸ்ல இருக்கிறேன்.அப்போ தான் உங்களுக்கு ஒரு புது பார்பிடால் போல குட்டி பாப்பா வரும் என்க,ஷமீராவோ கணவனின் இடுப்பில் தனது முழங்கையை விட்டு இடிக்க,அடியேய் உண்மையான தான டி சொல்றேன். நான் என்ன பொய்யா டி சொல்றேன்.

உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா சின்ன குழந்தை கிட்ட என்ன பேச்சு பேசுறீங்க என்று ஷமீரா பல்லை கடிக்க, எல்லாம் நல்ல பேச்சு தான் பேசுறேன்.

நீ இப்படி பேசியே நேரத்தை ஒட்டாதே கிளம்பு டி என்று மனைவியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவன் நண்பனிடமும் ஜனனியிடமும் சொல்லிக் கொண்டு இருவரும் காரில் ஏறி அங்கிருந்து மேதினூர் என்னும் ஊரை நோக்கி புறப்பட்டனர்.

போகும் வழி எங்கும் விவசாய பூமியாக இருக்க அதை எல்லாம் ரசித்து பார்த்துக் கொண்டே ஷமீராவும் வந்தாள்.

மனைவியின் முகத்தில் இருக்கும் பூரிப்பை பார்த்தவன் என்ன டி இந்த இடம் பிடித்திருக்கிறதா என்க,பார்க்க ரொம்ப அழகா இருக்குங்க.எல்லாமே விவசாய நிலம் தான் போல என்கவும்,ஆமாடி செல்லம் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு வா என்கவும் அப்படியா..உங்களுக்கு எப்படி இந்த இடம் தெரியுமென்று கேட்க..

அதெல்லாம் அங்க போய் சொல்றேன் நீ வாடி.எல்லாத்தையும் இங்கையே கேட்காதே என்கவும்..அதானே நீங்கள் ஒன்னுத்தையும் சொல்லிடாதீங்க.

உன்னிடம் ஒரு விஷயத்தை கேட்க மறந்துட்டேன் டி.உனக்கு இந்த வேலை புடிச்சிருக்கா செல்லம்?எனக்கு ரொம்ப பிடிச்சதால் தான் நான் இந்த வேலைக்கு போனேன் டி.

அதை விட வம்சி அப்பாவோட இறப்பு பத்தி தாத்தா சொல்லும் போது எனக்கு அந்த வயசுலையே சந்தேகமா தான் இருந்தது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
392
ஆனா நீ ஒரு நாள் கூட போலீஸ் பிடிக்கும் என்று சொல்லவே இல்லையே டி என்கவும்,நீங்க எங்க கேட்டீங்க?

ஐ லவ் அன்புச்செல்வன் ஐபிஎஸ் என்க, என்னடி சொன்ன என்றவாறு சடர்ன் பிரேக் போட்டு காரை நிறுத்தியவன், எட்டி மனைவியின் உதடுகளை பிடித்து இன்னொரு முறை சொல்லு டி என்க...

"வலியில் கண் கலங்கி போனாள்"

இங்கு பாரு ஷமீரா இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்.இன்னொரு முறை விளையாட்டுக்கு கூட இதைப் போல உன் வாயில் கண்டவன் பேர் வந்தது மனுசனா இருக்க மாட்டேன்.

"தேவையில்லாததை பேசி உடம்பை புண்ணாக்கிக்காதே" என்பவனை பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது.


இதுவரை போனில் மட்டுமே கணவனின் கோவத்தை கண்டவள் இன்று நேரில் பார்த்த போது உள்ளுக்குள் ஓர் நடுக்கம் வராமல் இல்லை.

ஒரு நிமிடம் மனைவியின் முகத்தை பார்த்தவன்,எதுவும் சொல்லாமல் காரை ஸ்டார்ட் பண்ணி ஓட்டலானான்.

முக்கால் மணி நேர பயணத்தில் இடது பக்கம் போகும் வழியில் காரை திருப்பியவன் நேராக சென்று அங்கிருந்த பெரிய இரும்பு கேட்டின் முன்னால் நிறுத்தி விட்டு தன்னிடமிருந்த சாவியை எடுத்து நீட்டியவன் போய் கேட்டை திற என்க...


எதுவும் சொல்லாமல் வாங்கியவள் கீழே இறங்கி போய் கதவை திறக்க காரும் உள்ளே ஓடிப்போய் நின்றது.

சுற்றி அந்த இடத்தை பார்த்துக் கொண்டே கதவை தாழிட்டு திரும்ப கணவனின் மீது இடித்து நின்றாள்.அவள் கையை பிடித்துக் கொண்டே இரும்பு கதவை பூட்டு போட்டவன் குனிந்து மனைவியை கையில் ஏந்தி முன்னே நடக்க...

ஐயோ!!

என்ன பண்றீங்க??

வீட்டில் இருப்பவர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று கால்களை உதறி கீழே இறங்க முயல,அடி மக்கு... கேட் சாவி என் கிட்ட இருக்கும் போது இங்கு யார் டி வர முடியுமென்று மனைவியின் நெற்றியில் முட்டிக் கொண்டு செழியன் கேட்க,அட ஆமாமென்றாள்.

வனிச்சூர்:

வேலை செய்த ஆட்கள் கலைந்து சென்றதும் ஒரு முறை தோட்டத்தை சுற்றி பார்த்த கண்ணன் வயல் வழியாக குடிலை நோக்கி வந்தவன் கதவு திறந்து இருப்பதை கண்டு,மாமா மாமா என்றவாறு உள்ளே வர...

இன்று இரவு காவலுக்காக பரமு தோட்டத்திலே தங்கிக் கொள்ள இருப்பதால்,தந்தைக்கு சூடாக சாப்பாடு குழம்பை எடுத்து வந்த மலர் உள்ளே இருக்கும் மேடையில் வைக்கும் போது தன்னவனின் குரலை கேட்டு அய்யோ என்று அதிர...

"யோவ் மாமா"

வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு??

இல்லை அத்தை அடிச்சதில் ஊமையாகிட்டியா என்றவாறு அங்கிருந்த ஸ்கிரீனை விலக்கிட்டு பார்க்க மலர் நிற்பது தெரிந்தது.இவள் எப்படி இங்கே என்ற யோசனையோடு மண் மேடையை பார்க்க அதில் இரண்டு வாளி இருப்பதை வைத்து ஓஓஓ மாமாவும் ராவுக்கு தங்குறாரோ என்று முணவியவன் பொறுமையாக போய் மலரின் வெறுமையான இடுப்பில் கையை வைத்து தன்னோடு இறுக்க...

அதில் சுயநினைவுக்கு வந்தவள் என்ன பண்றீங்க என்று அதிர,கண்ணனோ எதுவும் சொல்லாமல் மலரை தனது நெஞ்சோடு இறுக்கி அணைத்துக் கொண்டவன் கொஞ்ச நேரம் சும்மா இரு டி..

"உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் "

மலருக்கோ இது கண்ணன் தானா என்பதை நம்ப முடியவில்லை.பெண்மைக்கே உள்ள உணர்வில் அவனிடம் இருந்து விலக முயல..

ப்ச்...

சும்மா இரு னு சொன்னால் கேட்க மாட்டியா டி என்றவாறு அணைப்பை இளகுவாக்கி தன் பக்கம் திருப்பியவன் மலர் சுதாரிப்பதற்குள் அவள் உதடுகளை சிறை பிடித்திருந்தான்.

அய்யோ என்று உள்ளுக்குள் அலறியவளோ தன்னவனின் செய்கையில் தடுமாறி கண்ணனின் முதுகு பக்க சட்டையை இருக்கி பிடிக்க...

கண்ணனுக்கோ பெண்மையின் மென்மையான தேகத்தின் தீண்டல்களால் திக்கு முக்காட,வராத கண்ட்ரோலை போறாடி வர வைத்தவன் மனமின்றி விலகி காயம் பட்டு ரத்தம் கசியும் உதடுகளை தனது நாவால் தீண்ட...

கண்கள் இறுக்கமாய் மூடியிருக்க கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட உடல் நடுக்கத்தோடு தன்னை இறுக்கமாய் பிடித்திருப்பவளை பார்த்த கண்ணனோ,பட்டென்று தனது நெற்றியில் அடித்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியே சென்றவனோ உதடுகளை குவித்து மூச்சை இழுத்து விட்டவன் மீசையை தடவிக் கொண்டே இதழ் பிரியாமல் சிரித்தான்.

சிறிது நிமிடங்கள் கடந்திருக்கவும் அங்கு வந்த பரமு ஏன் மாப்பிள்ளை வாசல்ல நிக்கிறிங்களென்றவாறு பைக்கை நிறுத்தி விட்டு வர,உள்ளே மலரு இருக்கு மாமா,அதான் இங்குட்டே நின்னுட்டேன்.

ராவுக்கு மிளகா கொள்ளைக்கு காவல் தான்.நம்ப போர்லையே குளிச்சிட்டு இங்கன துணிய மாத்திக்கிலாம்னு வந்தேனென்று கண்ணன் சொல்லும் போதே கவிதாவும் ஸ்கூட்டரில் அங்கு வந்தாள்.

என்ன மருமகளே குழம்பு வாசனை கமக்குது என்று பரமு கேட்க,உங்களுக்கு தான் நாசர் மூக்காச்சே மாமா.தேங்காய் பாறை கருவாடு இருந்துச்சு.அதோட மொச்சை போட்டு குழம்பு வச்சேன் மாமா.

அண்ணன் மதியத்துக்கும் சாப்பிட வரலையா,அதான் இங்கையை எடுத்து வந்தேன் என்றவள்,வண்டியில் இருந்த கட்டைபையை எடுத்து வந்து கண்ணனிடம் நீட்ட...

நான் தான் வந்துருப்பனே,இந்த நேரத்தில் நீ ஏன் வந்த?

"நீ கிளம்பு,மலரும் இருக்கு கூப்பிட்டு போ"

அண்ணன் சொன்னதை கேட்டவள் என்னாஆஆஆ அக்கா உள்ள இருக்கா என்க... ஆமா கவி.. அப்பாக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்தேன் டி என்றவாறு வெளியே வந்தவள் நான் கிளம்புறேன் பா என்கவும்,சரித்தா பார்த்து போங்களேன்றார்.

கவி வண்டியை ஸ்டார்ட் பண்ண மலர் பின்னாடி உட்கார்ந்ததும் வண்டி புறப்பட்டது.இருவரும் கண்ணிலிருந்து மறையும் வரை கண்ணன் பார்க்க,மலரோ பாவத்திற்கு கூட திரும்பவில்லை.

"ச்சை... "

என்ன டா பண்ணி வச்சிருக்கிற!

அவள் என்ன நினைச்சிட்டு போறாள்னு தெரியலையே...

சரி கால் பண்ணி மன்னிப்பு கேட்டுக்கலாம் என்று நினைத்துக் கொண்டே குடிலின் உள்ளே போனவன் கபோர்டை திறந்து அங்கிருந்த மாற்று துணியை எடுத்து மாற்றிக் கொண்டவன் ஈர துணியை வெளியே உள்ள கொடியில் காய வைக்க...

கண்ணா என்றவாறு அங்கு வந்த பரமு அவனுக்கு ஒரு டம்ளர் டீயை கொடுத்து விட்டு தானும் ஒன்றை குடித்தார்.சிறு வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் என்பதால் மாமனார் என்கும் கூச்சம் வரவில்லை.

மதுரை:

வனிச்சூரிலிருந்து கிளம்பியவர்கள் காலை ஒன்பது மணிக்கெல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.சரி காலை சாப்பாட்டை சாப்பிட்டுக்கலாம்,அதற்குள் அவர்களும் வந்துடுவாங்களென்று செல்லதுரை சொல்ல,அதுவும் சரிதானென்று பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்குள் சென்றனர்.

இவர்களும் சாப்பிட்டு வெளியே வர அந்தோணியிடமிருந்து அன்பரசனுக்கு கால் வந்தது.சம்பந்தி தான் பா என்றவாறு அட்டென் பண்ணியவர் எங்கே இருக்கீங்க என்க...

அவரும் இடத்தை சொல்ல நாங்களும் அங்கு தான் இருக்கோம் என்று திரும்பியவர் அங்கிருந்த மக்களில் அந்தோணியை தேடி,சிறிது நொடியில் கண்டு விட்டு நான் பார்த்துட்டேன்.

இதோ வரோம்ங்க என்று போனை வைத்து விட்டு மற்றவர்களை அழைத்துக் கொண்டு அங்கிருந்த பிரபலமான ஜவுளி கடையை நோக்கி செல்ல,அங்கு அந்தோணி வீட்டினரோடு இன்னும் சிலரும் நின்றனர்.

பின்னர் பரஸ்பரம் நலம் விசாரித்த அந்தோணி அவரது சொந்தங்களுக்கு சம்பந்தி வீட்டினரை அறிமுகப்படுத்தினர்.அனைவரும் ஷமீராவை பற்றி விசாரிக்க அவர்கள் வெளி ஊருக்கு சென்றிருப்பதை சொன்னார்கள்.

சரி வாங்க உள்ளே போகலாம் என்றவாறு வீரையன் தாத்தா முன்னே செல்ல மற்றவர்களும் அவர் பின்னால் செல்ல,கடை சிப்பந்திகளோ இவர்களைப் பார்த்து வணக்கம் என்ன பார்க்கிறீர்கள் என்க,பட்டுப் புடவை என்றனர்.

முதல் தளத்தில் தான் இருக்கு என்கவும் தெரியும் தம்பி என்று சொல்லிக் கொண்டு படியில் ஏறி மேலே வந்தனர்.

மருமகளே விலையை பற்றி கவலைப்படாதே.உனக்கு என்ன கலர் பிடிக்குதோ அதை எடுத்துக் கொள் என்று அந்தோணி சொல்ல,அப்புறம் என்ன சம்பந்தியே சொல்லிட்டாங்க மா கண்மணி நல்லா ரெண்டு லட்சத்துல எடு என்று பாபுவின் மாமா முறை கொண்டவர் சொல்ல,சரிங்க சித்தப்பா என்று சிரித்தாள்.

எல்லாரும் இருக்கும்போது பாபு மட்டும் வராததை பார்த்தவளுக்கு மனதுக்குள் கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவளுக்கு தெரியவில்லை பரத்திற்காக அவன் காத்திருக்கும் விஷயம்..

என்ன விலையில் புடவை பார்க்கிறீர்கள் என்று சேல்ஸ்மேன் கேட்க விலையை பற்றி கவலை இல்லை நீங்க எடுத்து போடுங்கள் என்றனர்.

சரிங்கமா என்று அங்கே ரேக்கில் அடுக்கியிருக்கும் புடவைகளை எடுத்துப் போட பெண்களோ ஒவ்வொரு புடவையாக எடுத்து கண்மணி மேல் வைத்துப் பார்க்க அவளோ எதிலுமே நாட்டம் இல்லாமல் இருந்தாள்.

அவள் முகத்தை வைத்து சரி புடவை பிடிக்கவில்லை போல என்று வேறு எடுத்து காட்ட சொன்னார்கள்.அந்த நேரம் பார்த்து வாங்க வாங்க என்று பாபுவின் குரல் கேட்கவும் வேகமாய் திரும்பி பார்த்தவளோ தன்னவனை முறைக்க...

அவளின் பார்வையை ஓரக்கண்ணால் கண்டவன் மௌனமாக சிரித்து விட்டு அங்கிருந்தவர்களிடம் பேசிவிட்டு பெண்களிடம் வந்தவன் எல்லாரும் எப்படி இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டே கண்மணியின் அருகில் வந்து இயல்பாக நிற்பது போல் நின்றவன்,இவ்வளவு புடவையில் எதுவுமே பிடிக்கவில்லையா? ?

இனி தரியில தான் நெய்ய சொல்லணும் போல என்று சிரித்தவாறு அங்கிருந்த புடவைகளை கலைத்து விட்டவன் அதில் வாடாமல்லி கலரில் தங்கை ஜரிகை கொண்ட பட்டு புடவையை எடுத்து கண்மணியிடம் காட்டியவன் இது ஓகேவா??என்க,

கடை ஆளும் அந்த புடவையை பட்டை எடுத்து கண்மணியிடம் கொடுக்க தனது தோளின் மேல் போட்டுக் கொண்டவள் பாபுவை பார்க்க நல்லா இருக்கின்றது என்று தலையசைத்தான்.

பின்னர் அவனுக்கான டிரஸ்ஸையும் வாங்கி முடித்து பில் போட்டுக்கொண்டு வெளியே வரவே காலை போய் மதியமும் வந்தது.

வாங்க சாப்பிடலாம் என்று கூப்பிட, காலையில் சாப்பிட்டதே ஒரு மாதிரியாக இருக்கு.டீ காபி ஏதாவது குடிக்கலாம் என்கவும் அதே போல் அங்கிருந்த பேக்கரிக்குள் சென்றவர்கள் அவரவர்க்கு தேவையானதை வாங்கி சாப்பிட்டு விட்டு இரண்டு வீட்டினர்களும் சொல்லிக் கொண்டு அவரவர் ஊரை நோக்கி புறப்பட்டார்கள்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top