Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 390
- Thread Author
- #1
வனிச்சூர்:
தன்னவன் தான் மாப்பிள்ளை என்பது தெரிந்ததும் மலருக்கு கூடை பூக்களை தலையில் கொட்டியது போல இருக்க, வேகமாக ரூமிற்குள் வந்தவளுக்கு சந்தோஷத்தில் அழுகை வந்தது.
அவள் பின்னாடியே வந்த கண்மணி என்னடி கல்யாணத்தை நிறுத்திடலாமா?,இதைக் கேட்டு நிமிர்ந்து பார்த்த மலரோ எதுவும் சொல்லாமல் தோழியை அணைத்துக் கொண்டாள்.
அடியே பன்னாட இதை என் அண்ணனுக்கு பண்ணாலும் புண்ணியம் உண்டு.என்னை ஏண்டி கட்டி பிடிக்கிற போடி நாயே என்று சிரித்துக் கொண்டே தனது தோழியை விலக்க,ஏண்டி ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் இல்ல..இவங்க பண்ற அலப்பறைய பார்த்து நெஞ்சு எப்படி தாருமாறா துடிச்சிட்டு இருந்தது தெரியுமா என்று அழுது கொண்டே மலர் கேட்க..
ஏண்டி விளக்கெண்ண நாயே..உன்கிட்ட நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன் என் அண்ணனுக்கு பொண்டாட்டினா அது நீ தான்னு.இவ்ளோ சந்தோஷமா வந்தேனே அப்பவாவது புரிஞ்சுக்கறது இல்ல,அடிச்சை நீ தான் சரியான டியூப்லைட் ஆச்சே,உன் மண்டையில ஒரு மண்ணு மசாலாவும் கிடையாது.
உன்ன கட்டிக்கிட்டு என் அண்ணன் என்ன பாடு பட போகுதோ என்கும் போகுது அம்மாடி கண்மணி மலரை கூட்டிட்டு அங்க வர சொல்றாங்கத்தா என்று சொந்தக்கார பெண்மணி ஒருத்தர் வந்து சொல்ல,அழுது கொண்டிருந்தவளோ கண்ணை துடைத்துக்கொண்டு கண்மணியோடு முற்றத்திற்கு வந்தாள்.
இதுவரை இருந்த மனநிலை மாறி தாம்பாளத்தில் இருந்த புடவையை எடுத்து பார்த்து விழிகள் விரிய அதிர, என்ன டி நல்லாருக்கா என்று கண்மணி கேட்கவும், ஹம் சூப்பரா இருக்கே டி.
அப்போ யார் செலக்ட் பண்ணிருப்பாங்க சொல்லு பார்க்கலாம்?.
உன் அண்ணன் தானே என்கவும் எப்படி இவ்ளோ சரியா கண்டுபிடிச்சனு கண்மணி அதிர்ச்சியாக தனது தோழியை பார்த்தாள்.அது எல்லாம் அப்படித்தான் என்றவாறு புடவையை கட்டிக் கொண்டு எப்படி இருக்கு டி என்று கண்ணாடியை பார்த்துக் கொண்டே கேட்க ,ஏதோ பரவாயில்லை என்று சொல்லவும் என்ன டி ரொம்ப சலித்துக்கொள்கிறாய், உனக்கு அண்ணி நான்.வாலையெல்லாம் ஒட்ட நறுக்கிடுவேன்..
பாரு டா...
புள்ள பூச்சிக்கு ரொம்ப தான் கொடுக்க முளைச்சிடுச்சுனு சிரித்தவள் மலரோடு வெளியே வர அங்கே இரண்டு சேர் போடப்பட்டிருந்தது.ஒன்றில் கண்ணன் உட்கார்ந்து இருக்க,மற்றொன்றை காட்டி இதுல உட்காருத்தானு மலரிடம் சொல்ல, கண்ணனின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவளுக்கு படபடப்பாக இருந்தது.
சுமதி வீராயி ஆரம்பிச்சு வைங்கத்தா என்கவும் இரண்டு பாட்டிகளும் அங்கிருந்த சந்தனத்தை தொட்டு பேரனுக்கும் பேத்திக்கும் கைகளிலும் கன்னங்களிலும் தடவி விட்டவர்கள், பின்னர் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசி விட்டு இருவரும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பூக்களை தூவி ஆசீர்வாதம் பண்ணினர்.
மற்றவர்களும் அதே போல் சடங்குகளை செய்ய இரண்டு வீட்டினரும் தட்டை மாற்றிக் கொண்டு கண்ணன் மலரின் திருமணத்தை நெருங்கிய சொந்த பந்தங்களின் முன்னிலையில் உறுதிப்படுத்தினர்.
வேக வேகமாக எல்லாத்தையும் தயார் பண்ணினாலும் கண்ணனோ போட்டோகிராபரை மறக்காமல் வர வைத்திருந்தான்.இருவரையும் விதவிதமான போட்டோக்கள் எடுத்து தள்ள இதையெல்லாம் செழியனும் ஷமீராவும் வீடியோ காலில் பார்த்து ரசித்தனர்.
சாப்பிடலாம் என்று சொல்ல,வீட்டின் நடுவில் பெரிய முற்றம் என்பதால் அதில் வரிசையாக இலையை போட்டு சமைத்ததை பரிமாற சந்தோஷமாக சாப்பிட்டனர்.பொண்ணு மாப்பிள்ளை இருவரையும் ஒன்றாக வர வைத்து அவர்களுக்கு இலைய போட்டு பரிமாற மலருக்கு தான் கண்ணன் பக்கத்தில் இருக்கும் போது ஒருவித நடுக்கமாகவே இருந்தது.
அவளின் அவஸ்தையை ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டே கண்ணனும் சாப்பிட்டான்.
பின்னர் மலர் வீட்டினரிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் எல்லாரும் அங்கிருந்து சென்றார்கள்.
கடவுள் புண்ணியத்துல எப்படியோ மலருக்கு நல்ல குடும்பத்தில் சம்பந்தம் கிடைச்சிருச்சு என்று தெரிந்தவர் ஒருவர் வந்து வீட்டில் பேசிக் கொண்டிருக்கு ஆமா அதுல என்ன சந்தேகம்...
பத்மாவோட அப்பாவும் புவனா,ரஞ்சனியோவோட அம்மாவும் சித்தப்பா-பெரியப்பா மக்கள் இல்லையா,சொந்த பந்தம் எப்படி விட்டு போயிடும் என்று பேசிக்கொண்டனர்.
மலரு,ஏற்கனவே ரெண்டு பொண்ணு வெளியில இருந்து வந்திருந்தாலும் நீ நம்ம உள்ளூருக்குள்ளே வளர்ந்தவ. சொந்த பந்தங்களை எல்லாரையும் நீ தான் அனுசரித்து போகணும் சரியா என்று அவளுக்கு அந்த பெண்மணிகளும் அறிவுரை சொல்ல அவளும் சரிங்கா அப்பத்தா என்று கேட்டுக் கொண்டாள்.
தனது ரூமிற்கு வந்த கண்ணனோ கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தனது ஃபோனில் இருந்த ஒரு நம்பரை தேடி எடுத்தவன் அதற்கு கால் பண்ணினான்.
கட்டியிருந்த புடவையில் வியர்வை உலர்ந்து விட்டது தெரிந்து அதை மடித்து வைத்துக் கொண்டிருக்கும்போது மலரின் செல்போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்டது.
எட்டி டேபிள் மேலிருந்து போனை எடுத்து பெயரை பார்த்தவள் கண்ணை கசக்கி விட்டு தான் காண்பது கனவா இல்லை நினைவா என்று அதிர்ச்சியாக நின்றாள்.
பொள்ளாச்சி:
புது இடம் என்பதால் ஷமீராவுக்கு அவ்வளவாக தூக்கம் வரவில்லை.
எட்டி போனை எடுத்து மணியை பார்க்க அதிகாலை ஐந்தரை என்று காட்டியது.இனி என்னத்த தூங்குவது என்று தன்னை அணைத்து படுத்திருக்கும் கணவனின் கையை விலக்கி விட்டு எழுந்து ரெஸ்ட் ரூமிற்கு போனவள் குளித்து வேறு உடைய மாற்றிக்கொண்டு கீழே வர.அங்கே ஜனனியும் பாயலும் டீ குடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
காலடி சத்தம் கேட்டு இருவரும் பார்க்க அதுக்குள்ள எந்திரிச்சிட்டிங்களா என்றவாறு கீழே வந்தவளிடம் காபி எடுத்துட்டு வரட்டுமா ஷமீரா என்று ஜனனி கேட்க,இருக்கட்டும்ங்க அண்ணி நான் எடுத்துக்கிறேன் நீங்க உட்காருங்க என்று கிச்சனிற்குள் சென்றவள் தனக்கு தேவையான காபியை கலக்கி எடுத்துட்டு வந்து அவர்களோடு பேசிக்கொண்டே காபி குடித்துக் கொண்டிருந்தாள்.
ஆன்ட்டி முகத்துல ஒருவித தேஜஸ் தெரியுது என்று ஜனனி சொல்ல பாயலுக்கு அந்த வயதிலும் வெட்கம் வந்தது.
ஏய் வாலு என்று சிரிக்க.. இவ்வளவு நேரமெல்லாம் அங்கிள் எழுந்து வந்திருக்கனுமே,காதலியை பார்க்காம இன்னும் எப்படி தூங்குறார் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தன்ராஜ் அங்கு வந்தவர்.
குட் மார்னிங் டா என்று சொல்லிக் கொண்டு பாயலின் பக்கத்தில் வந்து உட்கார,மாமா டீ எடுத்துட்டு வரட்டுமா என்று ஷமீரா கேட்க எடுத்துட்டு வாம்மா என்றார்.
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க ஜனனியும் ஷமியும் காலை டிபன் செய்து கொண்டிருக்கும் போது எஸ்தரும் அவர்களோடு வந்து இணைந்து கொண்டார்.
அப்பொழுது வேகமாக ஒரு கார் வந்து வாசலில் நின்றது.
வெளியில் உள்ள திண்ணை உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர்கள் யார் என்று பார்க்க,அதுல இருந்து அந்தோணி பாபு சாரதா பாட்டி மூவரும் இறங்கி வந்தனர் .
அவர்களை பார்த்த செழியன் எந்திருச்சு வாங்க பாட்டி வாங்க பா வா பங்காளி என்க,உன் அத்தை எங்கப்பா இருக்கு என்று அந்தோணி கேட்க,உள்ள தான் பா என்றான்.
மற்றவர்களும் அவர்களோடு வீட்டுக்கு வர சமைத்தவைகளை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிள் வைக்கும்போது தற்செயலாக நிமிர்த்து பார்த்த எஸ்தர் தனது அண்ணனையும் சித்தியையும் கண்டவர் அதிர்ந்து போய் அப்படியே நின்று விட்டார்.
அம்மாடி எஸ்தரூஊஊ என்று தனது வயதையும் மறந்த சாரதா பாட்டி வேகமாக வந்து அக்கா மகளின் கையை பிடிக்க அதில் நிகழ்வுக்கு வந்தவர் சித்தி என்று அவரை அணைத்துக் கொண்டு அழுதார்.
எங்கதா போயிருந்த உன்னை தேடி தேடி நாங்க செத்துப் போனோமே சாமி. ஒரு முறையாவது இந்த ஆத்தாலையும் அண்ணனையும் நினைச்சு பாத்தியா என்று அழுது கொண்டு சாரதா பாட்டி கேட்க,மன்னிச்சிடு சித்தி என்றவர் தனது தங்கையை பார்த்து சந்தோஷத்தில் கண்ணீரோடு நிற்கும் அந்தோணியிடம் போனவர் அண்ணா என்று அழ..
ஏண்டா இப்படி பண்ணுன?
அண்ணன் உசுரோடு தானே இருக்கிறேன் என்று தங்கையின் கையை பிடித்து கண்ணீர் விட்டவர் உன்னை பார்த்த பிறகு தான் எனக்கு உசுரே வந்துச்சு.
ஆயிரம் இருந்தாலும் அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாதா ஆத்தா,இந்த பாவியாலதான உன் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என்று அவரும் அழுக இப்ப எதுக்கு எல்லாரும் இப்படி அழுவுறீங்க?
வாங்க வந்து உட்காருங்கள் என்ற வெற்றி மற்றவர்களுக்கு அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தான்.
போய் கையை கழுவிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம் என்கவும் எல்லாரும் ஒன்னாக உட்கார்ந்து பேசிக்கொண்டு சாப்பிட்டனர்.செழியா உன் சித்தியை கூப்பிட்டு நானும் ஊருக்கு கிளம்பறேன் யா,சரிப்பா நல்லபடியா போயிட்டு வாங்க என்று அவர்களுக்கு விடை கொடுக்க தன்ராஜ் தனது காதலியை அழைத்துக் கொண்டு வனிச்சூரை நோக்கி சென்றார்.
மாமா என்று அங்கிருந்த பாபுவை ஷமீரா கூப்பிட நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து எழுந்து வெளியே சென்று விட்டான்.
விடு எல்லாம் சரியாயிடும் என்று வெற்றி சொல்ல ஷமீராவும் கண்ணீரோடு தலையசைத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.
சரிடா நாங்களும் கிளம்புறோம் என்று கபிலன் சொல்ல பார்த்து போங்கள் என்க,கபிலனோ மனைவி மகனோடு வெற்றி வீட்டில் இருக்கும் இன்னொரு கார் எடுத்துக் கொண்டு சதுர்வேதமங்கலத்தை நோக்கி புறப்பட்டான்.
மற்றவர்கள் ஊரை சுற்றி பார்க்க சென்று விட, இப்பொழுது வீட்டில் இவர்கள் நால்வர் மட்டுமே இருக்க எதற்கு வீட்டை விட்டுப் போன என்கவும்..
துரோகியோடு இத்தன வருஷமா வாழ்ந்திருக்கிறேனே சித்தி என்றவர் மகிக்கு இன்னொரு குடும்பம் இருக்கிற விஷயம் தெரிந்தது பற்றி சொல்லி அழ, அந்த படுபாவி இப்படி பண்ணுவான்னு எதிர்பார்க்கலையே என்று அவரும் அழுதார்.
அண்ணி எப்படி இருக்காங்க?
அந்த துரோகியும் தான் கூட்டு களவாணி,அவளுக்கும் அவன் அண்ணனுக்கு கல்யாணம் ஆகி குடும்ப இருக்கிற விஷயம் தெரியும் என்க...என்னம்மா சொல்ற என்று அதிர்ந்து போய் எஸ்தர் பார்க்க...ஆமா தா. அந்த சிறுக்கியும் நம்மகிட்ட உண்மையை சொல்லலையே எல்லாமே துரோகியா இருந்திருக்கிறார்களே என்று அழுதார்..
சரி ...கொஞ்சம் உங்கள் ஒப்பாரியை தான் நிறுத்துங்களேன்,ஏன் பா நம்ம ஊருக்கு கிளம்பலாமா என்று பாபு கேட்க அப்பொழுது மார்க்கெட் போனவர்களும் வந்து சேர்ந்தனர்.