• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
387
வனிச்சூர்:

இருவரும் திடலுக்கு வந்து சேர அங்கே தெரிந்தவர்கள் ஊர்க்காரர்கள் என்று கூட்டமாக இருந்தது.ஏன் யா நீ வெறும் போலீஸ் தானே இதுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்றாள்.

வாடி என்றவன் ஒரு கையால் வேஷ்டியின் நுனியை பிடித்துக் கொண்டு முன்னே நடந்து சென்றான்.

ஆண்களோ அய்யா செழியா என்று அணைத்துக் கொண்டு அவரவர் அன்பை வெளிப்படுத்த சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொண்டான்.

பின்னர் செழியனின் வேலையை பற்றி பேச்சு திரும்ப அங்கிருந்த சொந்தங்களிடம் ருத்ரனையும் தீபனையும் இன்னாரென்று அறிமுகப்படுத்தினார்.

நம்ப வம்சி மவனா என்று ஆச்சரியப்பட்டவர்கள்,அவனின் அப்பாவின் சிறு வயது செயல்களைப் பற்றி பெருமையாக சொல்லிக் கொண்டிருக்க தனது தந்தையை பற்றி கேட்டவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பின்னர் மற்றவர்களெல்லாம் கூடி பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாக திரும்பிய ருத்ரன் தனது வீட்டினரோடு பேசிக் கொண்டிருக்கும் ஷமீராவை தான் யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

வெற்றி கபிலன் கண்ணன் செழியன் தீபன் இவர்கள் ஐவரும் அரட்டையடிக்க, என்ன நம்ம அண்ணா எதுவும் பேச மாட்டேங்குறாரே என்று திரும்பிய செழியன் ருத்ரனை பார்க்க,
அவன் பார்வையோ ஷமீராவின் மேல் இருப்பதை கண்டான்.

எதுக்கு இவளை அண்ணன் இப்படி பார்க்கிறார்கள் என்று நினைத்தவன் அண்ணா என்று பக்கத்தில் இருக்கும் ருத்ரனை தட்ட,அதில் ஆங் என்று நிகழ்வுக்கு வந்தவன்,செழியா உன்கிட்ட நான் ஒரு விஷயம் கேக்கணும் என்க, சொல்லு ணா என்ன விஷயம் என்றான்.

கேட்கிறேன்னு என்னை தப்பா எடுத்துக்காத ஷமீராவோட அம்மா பேரு என்ன என்க...அவங்க பேர் எஸ்தர் ணா என்கவும் என்னடா சொல்லுற என்று அதிர்ச்சியாக கேட்க...

அய்யோ அண்ணா...இதில் ஷாக் ஆக என்ன இருக்கு?அவங்க அல்லேலூயா கும்பல் அப்போ கிறிஸ்டியன் பேரு தானே வச்சிருப்பாங்கள் என்று கபிலன் கேட்க ஒரு நிமிஷம் இருடா என்றான்.

உன் வொய்போட அம்மா போட்டோ இருக்கா?,ஏன் ணா ஏதாச்சும் பிரச்சனையா?

உனக்கு நான் காரணத்தை அப்புறம் சொல்லுறேன்.முதல்ல கேட்டதுக்கு பதில் சொல்லுடா என்று முறைக்க,ம்ம் பேமிலி போட்டோ ஒன்று அனுப்பிருக்காள்னு மூன்று வருடத்திற்கு முன்பு ஷமீரா அனுப்பிய போட்டோவை தேடி எடுத்தவன் இந்தா ணா என்று நீட்ட அதை வாங்கி பார்த்தவன் மச்சி இங்கு பாருடா என்று தீபனிடம் காட்ட அம்மாடா என்று அதிர்ந்தான்.அவர்கள் இருவரையும் பார்த்து மற்ற நால்வருக்கும் இங்கு என்னடா நடக்கின்றது என்பது புரியவில்லை.

உன் மாமியார் எங்கே இருக்காங்க டா என்க...அய்யோ அண்ணா என்ன விஷயமென்று சொல்லுங்கள் என்று செழியன் முறைக்க,இவங்க எங்க இருக்காங்கடா என்று ருத்ரன் மீண்டும் கேட்டான்...

ஆஆஆஆ...

அவங்க ஊர்ல தான் இருப்பாங்க ணா என்று கடுப்பாக சொல்ல,அப்படியா கேட்டு பாரு ஊர்ல இருக்கிறார்களா என்கவும்,டேய் ஏன் டா மண்டையை போட்டு குழப்புற விஷயத்தை சொல்லி தொலையேண்டா என்று கபிலன் கத்த, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுடா எல்லாத்தையும் அப்பறம் சொல்றேன் என்றான்.

மச்சி உன் அண்ணங்காரன் காரணம் இல்லாமல் எதுவும் சொல்ல மாட்டான்.நீ கால் பண்ணி விசாரி என்று வெற்றி சொல்லவும்,இரண்டு பேரும் என்னமோ சொல்றீங்க என்றவாறு தனது ஃபோனில் இருந்து பாபுவிற்கு கால் பண்ணினான்.

அந்த பக்கம் அட்டென் பண்ணியவன் சொல்லு பங்காளி எப்படி இருக்க என்க..நான் நல்லா இருக்கிறேன் நீ எப்படி இருக்க என்றவன் பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.பின்னர் செழியனின் வேலையை பற்றி கேட்க சொல்ல முடியாத ஒரு சூழல் பங்கு. நேர்ல பார்க்கும்போது அதெல்லாம் பேசிக்கலாம்...

அப்புறம் டா ஊர்ல எல்லாரும் எப்படி இருக்கிறாங்க?நீ எங்க இருக்கிற?பரத் வீட்லயா இல்ல சோழனூருக்கு போயிட்டியா என்க...நான் வந்து ஒரு வாரம் ஆகுது.இங்க ஒரு பிரச்சனை என்று பாபு சொல்ல,என்னடா..என்ன பிரச்சனை என்றான்.

அது வந்து டா என்று தயங்க,விஷயத்தை சொல்லு டா என்கவும்,அத்தை காணாமல் போய் 15 நாளைக்கு மேலாகுதுடா என்று பாபு சொல்ல என்னடா சொல்றயென்று அதிர்ந்தவாறு அங்கிருந்த ருத்ரனை பார்த்தான்.

இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல டா. அவளுக்கு தெரிஞ்சா எப்படி எடுத்துப்பாளோ என்று வருத்தமாக பாபு சொல்ல,நாதாரிபயலே என்ன விஷயம்னு தெளிவா சொல்லி தொலை டா என்றான்.

அது வந்து டா என்றவன் விஷயத்தை சொல்ல, செழியனோ அதிர்ந்து போய் அங்கே வீட்டினரோடு பேசிக் கொண்டிருக்கும் மனைவியை தான் வருத்தமாக பார்த்தான்.

இவ்வளவு நடந்திருக்கு ஏண்டா ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று செழியன் சத்தம் போட,எனக்கே தெரியாதுடா.நான் வந்து நாலு நாள் தான் ஆகுது.இங்கு வந்ததுக்கப்புறம் தான் இந்த விஷயம் எல்லாம் எனக்கும் தெரியுது.

நாங்கள் இங்கே தேடிக்கொண்டு தான் டா இருக்கிறோம்.எப்படியாவது அத்தையை கண்டு பிடித்து விடலாம் என்று பாபு சொல்ல,நான் இருக்கும்போது என்ன கவலை என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் அண்ணா என்ன விஷயம் சொல்லு..காரணம் இல்லாமல் நீ கேக்க மாட்டேனு புரியுது.ஷமீராவோட அம்மா காணாமல் போய் இரண்டு வாரத்துக்கு மேல ஆகுதுன்னு பாபு சொல்றான் என்றான்.

சொல்றேன் டா என்றவன் அந்த இரவு நேரத்தில் எஸ்தர் மயங்கி விழுந்ததையும்,தனது காரில் அழைத்துக்கொண்டு போனது,பிறகு அங்கிருந்து டெல்லி போனதுனு எல்லாத்தையும் சொல்லவும் அதை கேட்டவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

பெரிய யோக்கிய மயிறு போல இங்கு வந்து அந்த ஆளு பேசுனானே இவனையெல்லாம் ரொசமா கேட்க வாயில நல்லா வருது என்று தனது மாமனாரை திட்டினான்.

அப்போ பொள்ளாச்சியில் தான் அத்தையும் இருக்காங்களா ணா என்க,ஆமாண்டா.அவங்களை மட்டும்
விட்டுட்டு எப்படி வர முடியும்.

"அத்தை ரொம்ப தங்கமானவங்கடா"

ஷமீராவை பார்க்க அவங்களோட முக ஜாடையா இருந்ததா.ஒருவேளை ஒரே உருவம் போல இருப்பார்களே என்று ஒரு யோசனை இருந்திருச்சு.

வெற்றி சொல்லி ஷமீராவோட ஊரும் இவங்களை நான் சந்தித்த ஊரும் ஒரே ஊரா இருக்கவும் தான் எங்களுக்கு சந்தேகம் வந்துச்சு என்றான்.


அவங்க வீட்டை விட்டு எதுக்கு வந்தாங்கன்னு அவங்களை கேட்டால் தான்டா தெரியும்.நம்ம தான் நாளைக்கு பொள்ளாச்சிக்கு போக போறோமே பிறகென்ன..

ஆயிரம் மனஸ்தாபமா இருந்தாலும் தன்னோட பொண்ண பாத்துட்டால் அவங்களும் மனச திறந்து சொல்லுவாங்க இல்லையா...

ஒருவேளை ஷமீராவோட அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணிய விஷயம் அவங்களுக்கு தெரியாம இருந்திருந்தால் அதையும் யோசிக்கணும்.எதனால வீட்டை விட்டு வந்தாங்கன்னு அவங்க சொல்லாத போது நம்மளே ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்று ருத்ரன் சொல்ல...

இது இப்படியே இருக்கட்டும் வேற யாருக்கும் தெரிய வேண்டாம்.நேர்ல பார்த்து பேசிக்கொள்ளலாம் என்று கபிலன் சொல்லும் போது கார் ஒன்னு வேகமாக வந்து நிற்க,யார் டா அதுயென்று பார்க்க கதவை திறந்து இறங்கி வருபவரை பார்த்து தன்ராஜ் மாமாயென்று கண்ணன் சொல்ல, அதைக் கேட்ட ருத்ரன் அப்போ இவங்க தான் அப்பாவோட நண்பனாயென்க ஆமாம் என்றான்.

நான்கு மாதங்களுக்கு முன்பு மெடிக்கல் கேம்பிற்காக இங்கு வந்திருந்த தனராஜ் மறந்து கூட ஊருக்குள் செல்லவில்லை இதே இடத்தில்தான் கேம்ப் போட்டு தங்கியிருந்தார்.

தெரிந்தவர்களும் சொந்த பந்தமும் வீட்டுக்கு வரச் சொல்லி அவரை அழைக்க ஏனோ அவருக்கு ஊருக்குள் போக மனம் வரவில்லை.தற்பொழுது தனது நண்பனின் மகன் உயிரோடு இருப்பதை கேள்விப்பட்டதும் பதறி அடித்து ஓடி வந்திருக்கிறார்.

தன்ராஜை பார்த்த செல்லதுரை வேகமாக எழுந்து போய் அவர் கையை பிடித்து வா ணா என்க,துரை எங்கடா நம்ப வம்சியோட ரத்தம் என்று ஒருவித அலைப்புறுதலோடு அந்த கூட்டத்தில் தனது நண்பனின் சாயலை தேடினார்.

தன்ராஜின் மனதை புரிந்து கொண்ட செல்லதுரை அங்கு தூரத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அண்ணன் மகனை பார்த்து ருத்ரா வா என்று கையை அசைத்தார்.

ருத்ரனும் தனது சித்தப்பாவின் குரலைக் கேட்டு அங்கே போக,சில அடி தூரத்தில் வருபவனை பார்த்த தன்ராஜுக்கு பார்வையே மறைக்கும் அளவிற்கு கண்கள் கலங்கியது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து இரட்டை பிறவி போல் சுற்றித்திரிந்த அதே இளம் வயது உருவம் எதிரே வருவதை பார்த்து ஒரு நொடி தடிமாறி போனார் அந்த புகழ் பெற்ற மருத்துவர்.

தனது வயதை மறந்தவர் வம்சி என்று வேகமாக போனவர் வந்துட்டியா நீ வந்துட்டியாடா ஏண்டா என்ன விட்டுட்டு போன என்று அவனை கட்டிக் கொண்டு கதறி அழுதார்.

இதைப் பார்த்து அங்கிருந்த சொந்த பந்தங்களுக்கு இப்பயாவது அவர் மனது விட்டு அழட்டும் என்று நினைத்தாலும் அவர்களுக்கும் கண்கள் கலங்கியது.

கிட்டத்தட்ட 25 வருஷமாக தன்ராஜ் இந்த ஊருக்குள் வரவில்லை.அவரை கல்யாணம் பண்ணிக்க சொல்லி எத்தனையோ முறை அவர்கள் உடன்பிறப்புகளும் அப்பா அம்மாவும் சண்டை போட்டு கெஞ்சி கதறி பார்த்து விட்டனர்.

முடியாது என்று சொல்லிவிட்டு சென்னையிலயே தான் இருந்தார். வயது மூப்பின் காரணமாக இருந்த அவரின் அப்பாவும் அம்மாவும் தனது மகனின் அழுகுரலை கேட்டு வந்தவர்கள் ஐயா ராஜி இன்னைக்கு தான் எல்லாரையும் பார்க்கணும்னு உனக்கு மனசு இறங்குச்சா என்க...

அழுது கொண்டிருந்த தன்ராஜ் தனது தாயின் அழுகுரலை கேட்டு திரும்பியவர் என்ன மன்னிச்சிடு மா...எதுவுமே என்னிடம் கேட்காத மா.

ரெண்டு பேருக்கும் இந்த கோயில்லதானே திருநூர் பூசி அனுப்பி வச்சீங்க,அவன் இல்லாம இந்த ஊருக்குள்ள வருவதற்கு எனக்கு எப்படி மா மனசு வரவும் சொல்லுமா என்று கதறினார்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
387
வனிச்சூர்:

ஒருவழியாக தன்ராஜை சமாதானப்படுத்தினர்.தனது தந்தையின் சிறு வயது செயல்களை எல்லாம் தன்ராஜ் மூலமாக கேள்விப் பட்ட ருத்ரனுக்கு கடைசி வரை அவர் கூட வாழ முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது.

அப்பொழுது சித்தப்பா என்று செழியன் கூப்பிட,சொல்லுப்பா என்கவும் கொஞ்சம் பேசணும் என்றான்.ஓஓ என்னை போலீஸ்காரனா கூப்பிடுறியா இல்ல மகனா கூப்பிடுறியா? இரண்டுமே தான்னு செழியன் சிரித்தான்.

சொல்லு பா...என்ன என்று தன்ராஜ் கேட்க,எல்லாருக்கும் முன்னாடி கேட்கணுமா என்கும் செழியனை பார்த்தவர்,இந்த வயசுல உன் சித்தப்பாக்கிட்ட என்ன ரகசியம் இருக்க போகுது கேளுயா என்றார்.

நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்க என்கவும்,இப்படி ஒரு கேள்வி அண்ணன் மகனிடம் இருந்து வரும் என்பதை எதிர்பார்க்காத தன்ராஜ் அது வந்துயா என்று தடுமாறினார்.

சொல்லு சித்தப்பா,நீ ஏன் இத்தனை வருஷமாக கல்யாணம் பண்ணிக்கலை?

வம்சி அப்பா இல்லன்னு நம்ம ஊருக்குள்ளார நீ வரலங்குறது ஒரு காரணம்.இன்னும் ஒரு காரணமும் இருக்கு அதை நீயே சொல்றியா இல்ல நான் சொல்லட்டுமா என்கவும்...

எப்படியா முடியும்?

மனசுல ஒருத்தி இருக்கும் போது வேற ஒருத்தியை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும் என்று வருத்தமாக சொல்லவும் ஏன் பண்ணிக்க முடியாது?

உனக்கு ஒன்னும் வயசு ஆகலையேப்பா என்ன 57 வயசு தானே ஆகுது.அவனவன் 80 வயசுல கல்யாணம் பண்ணிக்கிறாங்க என்க...எப்போ அவள் இந்த உலகத்தை விட்டுப் போனாளோ அப்பவே என் மனசுல இருந்த ஆசையெல்லாம் செத்துப் போயிடுச்சுயா.

இந்த உலகத்துக்காக நான் ஒரு நடை பிணமாக தான் வாழுறேன் என்க...

அப்படியா..!!!

உன்னுடைய முடிவில் நீ உறுதியாக இருக்கிறாயா பா என்கவும் கண்டிப்பா செழியா..இத்தனை வருஷம் அப்படித்தானே உன் சித்தப்பா இருக்கிறேன் என்றார்.

"சரி அதையும் பார்க்கலாம்"

நாளைக்கு ஒரு முக்கியமான வேலையா பொள்ளாச்சிக்கு போக வேண்டியதாக இருக்கு.நீ சென்னைக்கு போக வேணாம்.என் கூட வரணும்.என்ன விஷயம் என்று நேரில் சொல்றேன் என்றான்.

தன்ராஜ் எல்லாரிடமும் பேசிக் கொண்டிருக்க ஐயா பரமு என்று தம்புசாமி தாத்தா மலரின் அப்பாவை கூப்பிட,சொல்லு மாமா என்றார்.

நம்ம சொந்த பந்தம் நிறைந்த இடத்துல மனசார கேட்கிறேன்.நம்ம சின்னவனுக்கு மலர கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதமா என்கவும், திடீரென்று இப்படி கேட்பார் என்பதை எதிர்பார்க்காத பரமுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது.

நம்ம சொந்தத்துல புள்ளைய வச்சுக்கிட்டு அவனுக்கு எதுக்கு வெளியே பொண்ணு பார்க்கணும். ஏற்கனவே அந்த ரெண்டு எருமை மாடு தான் இஷ்டத்துக்கு கட்டிட்டு வந்துருச்சு.

சின்னவனுக்காவது நம்ப ரத்தத்தில் புடிச்சு போடணும்னு யோசனை.உன் தங்கச்சிங்களுக்கு அண்ணன் மவளை கட்டணும்னு தான் விருப்பம்.நீ என்னய்யா சொல்ற?

சின்னவன பத்தி நான் சொல்லி தான் உனக்கு தெரியணும்னு அவசியம் இல்ல.ஆளு பார்க்க கொஞ்சம் கரடு முரடா இருந்தாலும் குணத்துல சொக்கத்தங்கம்.கை நிறைய சம்பாதிக்கிறான்.எந்த கெட்ட பழக்கமும் எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் இல்லை.

ஒருவேளை கூடுவாரோடு எப்படி இருக்கிறான் என்று அதை நம்ம கூட இருந்து பார்க்க முடியாது இல்லையா, உன் கண்ணு முன்னாடி வளர்ந்த பையன் யோசிச்சு நீ முடிவு சொல்லு ஒன்னு அவசரமில்லை..

மனசுல வச்சுகிட்டு எதுக்கு தயங்கி இருக்கணும்.நீனும் புள்ளைக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு தான இருக்கிற உனக்கும் தங்கச்சி மவனுக்கு பொண்ணு கொடுக்கணும்னு மனசுல எண்ணம் இல்லாமையா இருக்கும். பத்துமாகிட்ட கேட்டுட்டு நல்ல பதிலை சொல்லு.மலையாத்தா முடிவு என்னவோ அப்படியே நடக்கட்டும் என்க...

அமைதியாக இருந்தவரின் தோளை தொட்ட கனலரசன் என்ன மாமா உனக்கு இஷ்டம் இல்லையா என்கவும், அதில் சுதாகரித்தவர் எலே மாப்பிள்ளை நான் எங்கேயா அப்படி எல்லாம் சொன்னேன்?

திடீர்னு மாமா இப்படி கேட்ட உடனே அதிர்ச்சி ஆயிட்டேன்.வேற ஒன்னும் இல்லைய்யா.உன் தங்கச்சி இங்க தான இருக்கிறாள்.அவளை கூப்பிட்டு கேட்டுடலாம் என்றவர் செழியா உன் சித்தி அங்க இருக்காள் பாரு,செத்த வர சொல்லுயா என்கவும் சரி சித்தப்பா என்றவன் மச்சான் என் தங்கச்சி புருஷனா வர போறியா??

நல்ல வேளை இந்த இடத்துல நீ இல்லடா என்று சிரித்துக் கொண்டு அங்கே போன செழியன்,சித்தி சித்தப்பா கூப்பிடுது என்று சொல்லிவிட்டு மனைவியை பார்த்து கண்ணடிக்க,அவளோ இத்தனை பேருக்கு முன்னால் கணவன் செய்கையை பார்த்து முறைத்தாள்.

கொஞ்சம் கூட உனக்கு வெட்கமாகவே இல்லையா என்று கண்மணி கேட்க, ஏண்டி என் பொண்டாட்டியை பார்த்து நான் கண்ணடிக்கிறேன் இதுல நான் ஏன் டி வெட்கப்பட வேண்டுமென்றான்.

இந்த மனுஷனுக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே கிடையாதென்று தனது தலையில் தட்டிக் கொண்ட ஷமீராவோ கணவனை பார்த்து பல்லை கடித்தாள்.

எல்லாரும் சிரிக்க... சீக்கிரம் வா சித்தி என்று பத்துமாவிடம் சொல்ல உங்க சித்தப்பனுக்கு கொஞ்ச நேரம் என் அக்கா தங்கச்சி கூட பேசினால் பொறுக்காதே என்றவாறு செழியனோடு ஆண்கள் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு வந்தவர்,அங்கிருந்த பெரியவர்கள் எல்லாரையும் பார்த்து தயங்கி நிற்க...

ஏத்தா பத்துமா...ஒரு நல்ல காரியம் பேசணும் என்கவும்,சொல்லுங்கள் சித்தப்பா என்க,நம்ப சின்னவனுக்கு மலர பொண்ணு கேட்கிறோம்.நீ என்னத்த சொல்ற என்றார் .

நம்ம வூட்டுல எல்லாருக்கும் சம்மதம் இன்னைக்கு நாளும் நல்லா இருக்கு. நம்ம சொந்த பந்தங்களும் ஒரு இடத்தில கூடியிருக்கிறாங்க.இங்க நம்ம குல தெய்வத்துக்கு முன்னாடி கேக்குறோம்.

உன் மனசுல இருக்கிறதை பட்டுன்னு சொல்லுத்தா என்று தம்புசாமி கேட்க..திடீரென்று இப்படி கேட்டவுடன் அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

அவர் அமைதியாக இருப்பதை பார்த்தவர் நீ உன் மனசுல பட்டதை சொல்லு தா.ஒன்னும் வருத்தம் இல்லை என்க...அய்யோ சித்தப்பா அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.

சாதகம் ஒத்து வந்துச்சினா ரெண்டு பேருக்குமே பண்ணிடலாம் என்கவும் அதையும் கையோடு பார்த்து விடலாமே நம்ம காசி இங்க தானே இருக்கிறான். இரண்டு பேரோட பிறந்த நேரத்தையும் வருஷத்தையும் சொன்னால் பார்த்துடலாம்.நீ என்ன காசி சொல்லுற என்க..தாராளமா பார்க்கலாம் மாமா என்றார்.

பின்னர் இருவரின் பெற்றோரும் பிள்ளைகளின் பிறந்த தேதியையும் நேரத்தை சொல்ல,காசிநாதனும் கோயிலில் இருக்கும் வரவு செலவு கணக்கு நோட்டின் பின்னாடி பக்கத்தில் இருவருக்கும் பொருத்தம் பார்த்தவர் 9 பொருத்தம் இருப்பதாக சொன்னார்.

அப்புறம் என்ன ஒன்பது பொருத்தம் இருக்கு நாளைக்கு முகூர்த்த நாள் தான் குடும்பத்தோட பொண்ணு பாக்க வரோம்.கையோடு தட்டை மாத்திக்கலாம் என்க,சரி சித்தப்பா என்ற பத்மாவோ சந்தோஷமாக அங்கிருந்து சென்றார்.

சாப்பாடு ரெடியாயிடுச்சு படையல் போட்டு விடலாம் என்று கண்ணன் வந்து சொல்லவும்,சரியா என்றவர்கள் பின்னர் அவர்களின் குலதெய்வமான மலையம்மனுக்கு நீட்டு தலைவாழை இலையில் சமைத்த உணவுகளையும் மற்ற பொருட்களையும் வைத்து படைத்தவர்கள் அங்கிருந்தவர்களுக்கு விபூதி குங்குமத்தை கொடுத்துவிட்டு பின்னர் பந்தியை பரிமாற,வந்த சொந்தம் பந்தங்கள் எல்லாம் வயிறார சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர்.

பெண்களை வீட்டில் விட்டு விட்டு ஆண்கள் மட்டும் அருவிக்கு வந்தானுங்கள்.இரண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்க்கும்போது எப்படி இருந்ததோ இன்னும் அப்படியே தாண்டா இருக்கு என்று சொல்லிக்கொண்டு கபிலனும் வெற்றியும் பொதிறென்று பாறையில் இருந்து தண்ணீருக்குள் குதிக்க, ருத்ரனும் தீபனும் அதிர்ச்சியாக பார்த்தார்கள்.

ஆழம்லாம் ஒன்னும் இருக்காது தாராளமா இறங்குங்க மாமா என்று சொல்லி கண்ணன் சிரிக்க,டேய் மாப்பி என் அண்ணன் நீச்சல்ல கோல்ட் மெடல் டா விளக்கெண்ணெய் என்று செழியன் சொல்ல,என்னடா சொல்ற அப்ப மாமா மட்டும் தான் போட்டியில் கலந்து கொண்டாரா என்று சிரித்தான்.

நக்கலடா உனக்கு என்று கண்ணனின் புடரியில் ஓங்கி ஒரு அடியை ருத்ரன் வைக்க,யாத்தே....அந்த போலீஸ்காரன் கையால அடி வாங்குறது போலவே இருக்கு.அண்ணன் தம்பி எல்லாம் என்னதான் உரம் போட்டு கைக்கு வளக்குறீங்க சொல்லுங்க என்று கண்ணன் கேட்க மற்றவர்கள் அதைக் கேட்டு சிரித்து விட்டனர்.

கொஞ்ச நேரம் வரை அங்கு அருவியிலே நேரத்தை போக்கியவர்கள் பின்னர் குளித்துவிட்டு வீட்டிற்கு வர மாலை சூரியனும் மேற்கில் மறைந்தது. வந்தவர்களுக்கு சூடாக காபி-டீ என அவரவர்களுக்கு பிடித்தமானதை ஷமீராவும் ஜனனியும் கொடுத்தனர்.

இரவு வேளைக்கான சமையலை பெண்கள் மூவரும் பேசிக்கொண்டே சமைத்து முடித்தனர்.அப்பா நாளைக்கு காலையில நாங்க பொள்ளாச்சிக்கு கிளம்புறோம் என்று செல்லதுரையிடம் கபிலன் சொல்ல சரிப்பா நல்லபடியா போயிட்டு வாங்க என்றார்.

பொள்ளாச்சி:

வழக்கமாய் இவ்வளவு நேரம் எல்லாம் சாப்பிடுவதற்கு ஏதாவது தயார் பண்ணி கொடுக்கும் எஸ்தர் இன்னும் ரூம் விட்டு வெளியே வராமல் இருப்பதை பார்த்து ரூபா ஜூலி பாயல் மூவருக்கும் உடம்பு சரியில்லையோ என்ற யோசனையாக...

நான் போய் அத்தையை பார்க்கிறேன் என்று சொல்லிய ரூபா மணியை பார்க்க காலை 9 என்று காட்டியது. இவ்வளவு நேரம் அத்தை எந்திரிச்சு வராமல் இருக்க மாட்டாங்களே..எனக்கு ஏதோ மனசு பயமா இருக்கு என்கவும், அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது தைரியமாக போய் கதவை தட்டு என்று பாயல் சொல்லவும் சரி சித்தி என்றாள்..

பின்னர் இடது பக்கமா இருக்கும் மூன்றாவது ரூம் கதவிற்கு முன்பு நின்று கொண்டு அத்தை அத்தை என்று கதவை தட்டியவள் தாழ்ப்பாளில் கையை வைக்க கதவும் திறந்து கொண்டது.

உள்ளே போய் பார்த்தால் எஸ்தரோ கண்ணீரோடு அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்திருந்தார்.

என்னாச்சுங்கத்தை என்று அவர் கையைப் பிடித்து கேட்க அதில் சுய நினைவுக்கு வந்தவர் வாடா ரூபா என்க..

நீங்க இவ்வளவு நேரம் எந்திரிச்சு வரலையே,எதுக்கு அழுதுட்டு இருக்கீங்கத்தை என்க,ஒன்னும் இல்லடா.இன்னைக்கு எங்க அம்மாவோட நினைவு நாள் என்றார்.

அப்படிங்களா...

பாட்டி எங்க இருந்தாலும் அவங்களோட ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கும் வருத்தப்படாதீங்கத்தை.வாங்க என்று அவர் கண்ணை துடைத்து விட்டு அழைத்துக் கொண்டு வெளியே வந்தவள் இருவருக்கும் விஷயத்தை சொல்லவும் அவர்களும் அவருக்கு ஆறுதல் சொன்னார்கள்.

மதிய சாப்பாட்டுக்குலாம் வெற்றியும் கபிலனும் வந்துருவாங்க என்று பாயல் சொல்ல என்ன சமைக்கனும் என்று எஸ்தர் கேட்டார்.நம்ம வீட்ல சமைக்கிறதுக்கு இரண்டு பேர் இருக்கிறார்கள்.அவர்களுக்கு பிடித்தது அவங்களுக்கு நல்லா தெரியும் அதெல்லாம் சமைச்சிடுவாங்க என்றார்.

கூடமாட உதவியாவது பண்ணலாமே என்றவாறு கிச்சனிற்குள் சென்று அவர்களோடு எஸ்தரும் இணைந்து கொண்டு தடபுடலாக மதிய விருந்தை தயார் பண்ணினார்கள்.

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top