• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
376
சென்னை கோர்ட்:

மற்றவர்களோ இங்கே என்ன கேஸ் தான் நடக்க போகுது?

ஒன்னும் புரியலையே,எதுக்கு சம்பந்தமே இல்லாம ஆடியபாதத்தோட பொண்ணை பற்றி இந்த அம்மா விசாரிக்கிறார்கள் என்று பேசிக் கொண்டனர்.

சார் உங்கள் அனுமதியோட இவருக்கு நான் போன் கொடுக்கிறேன் என்க, காரணம் இல்லாமல் உமா எதுவும் செய்ய மாட்டார் என்பதை புரிந்து கொண்ட ஜட்ஜும்,பர்மிஷன் கிராண்டெட் என்று சொல்ல,தனது போனை எடுத்துட்டு வந்து ஆடியபாதத்திடம் கொடுக்க,அவனோ எதோ ஒரு நம்பரை அழுத்தி அதுக்கு கால் பண்ணியவன் பிரியாவை பேச சொல்லுங்க என்க ...

சிறிது நிமிடத்தில் அந்த பக்கமிருந்து அப்பா எப்படி இருக்கீங்க என்று பெண் குரல் ஒன்று அவனிடம் நல விசாரித்து பேசிக் கொண்டிருக்கும்போது பின்பக்கம் திரும்பிய உமா கண்ணை அசைக்க அவரின் ஜூனியர் பெண்ணோ புர்கா போட்ட ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் கூண்டில் நிற்க வைத்தாள்.

பாசமான தந்தையும் மகளைப் போல் பேசி முடித்து விட்டு அழைப்பை கட் பண்ணிய ஆடியபாதம் போதுமா?என் பொண்ணு காலேஜ்ல இருக்காள்.தேவை இல்லாம எதுக்கு என் பொண்ணை பற்றி கேக்குறீங்க என்று கோவப்பட்டான்.

மௌனமாய் சிரித்த உமா மகேஸ்வரி இவ்வளவு நேரம் நீங்க பேசியது உங்க பொண்ணு கிட்ட தானே என்கவும் ஆமாம்.இத்தனை பேருக்கு முன்னாடி தானே பேசினேன்.நான் என்ன மறைமுகமாகவா பேசினேன் என்றான்.

எதிர் கூண்டில் இருந்த உருவமோ தனது முக கவசத்தையும்,புர்காவையும் அவிழ்த்து நிற்க,அங்கிருந்த மகளை பார்த்த ஆடியபாதம் பிரியாஆஆ என்று அதிர்ந்து போனான்.

இப்போது ஜட்ஜ் பக்கம் திரும்பிய உமா மை லார்ட் இவ்வளவு நேரம் இதோ குற்றவாளி கூண்டில் இருக்கும் ஆடியபாதம் எந்த மகளிடம் போனில் பேசிக்கொண்டு இருந்தாரோ அந்த மகள் இவர்தான் மிசஸ் பிரியா ரவீந்திரன் என்கவும்,சில நொடிகள் அங்கே ஒரே சலசலப்பாக இருந்தது.

அமைதி அமைதி என்று சொல்லிய ஜட்ஜ்,மேடம் எதையும் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் என்கவும் எஸ் மை லார்ட்,சார் இந்த கேஸோட முகாந்திரமே ஆணவக் கொலை.அதில்தான் போலீஸ் இவரை அரெஸ்ட் பண்ணிருக்காங்க என்று உங்களுக்கு தெரியும்.

அதாவது நான் சொல்றதை விட இவரை அரெஸ்ட் பண்ணிய போலீஸே இதைப் பற்றி சொன்னால் நல்லா இருக்கும் என்கவும்,ஓகே வர சொல்லுங்கள் என்றார்.

அங்கிருந்த செழியனோ கம்பீர நடையோடு வந்தவன் கொஞ்சம் கீழே இறங்கி நில்லுமா என்று பிரியாவிடம் சொல்ல,அவளும் எதுவும் சொல்லாமல் கீழே இறங்கி வர,அந்த கூண்டுக்குள் நின்றவன் ஜட்ஜை பார்த்து மரியாதை நிமித்தமாக வணக்கம் வைத்தவன் நான் இளஞ்செழியன் ஐபிஎஸ்,சிபிஐ க்ரைம் பிரான்ச் டெல்லி என்றவன் மனித உரிமை கழகத்திலிருந்து இந்த ஆணவக் கொலையை விசாரிக்க சொல்லி டெல்லி மேலிடத்திற்கு தகவல் வந்தது.

"அந்த கேஸ் என்கிட்ட கொடுக்கப்பட்டது"

கடந்த ஒரு வருடமாக அதைப்பற்றி தேடலில் இருக்கும்போது முதல் குற்றவாளி எதிரே நிற்கும் ஆடியபாதம் என்பது தெரிந்ததும் டெல்லி மேலிடமே அரெஸ்ட் பண்ண சொல்லி எனக்கு பர்மிஷன் கொடுத்திருக்காங்க.

அதற்கான லெட்டர் தன்னிடம் உள்ளது என்று கையிலிருந்த கவரை நீட்டி சொல்லவும்,வக்கீல் உமாவோ அந்த லெட்டரை வாங்கி ரைட்டரிடம் கொடுத்து ஜட்ஜிடம் கொடுக்க சொன்னார்.ஜட்ஜும் அதை வாங்கி படித்துப் பார்க்க,அதில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்த கேஸை விசாரிப்பதற்காக அனுமதி கொடுத்திருப்பது தெரிந்தது.

ஓகே என்று லெட்டரை மூடி வைத்தவர், சொல்லுங்க மிஸ்டர் செழியன் நீங்க தெரிந்து கொண்டது என்னவென்று கேட்க...செழியனும் விஷயத்தை சொல்லவும் அதைக் கேட்ட ஆடியபாதம் இது சுத்த பொய்.

என் மேல ஜோடிக்க பட்ட வழக்கு என்று சொல்லவும் அமைதி அமைதி என்ற ஜட்ஜ் அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று செழியனிடம் கேட்க இதுவரை தான் சேகரித்த அத்தனை ஆதாரத்தையும் அங்கு உட்கார்ந்திருந்த கண்ணப்பனிடம் கொடுத்து வந்திருக்க,திரும்பி அவரை பார்க்கவும் அவரும் எழுந்து வந்து கொடுக்க அதையும் ஜட்ஜிடம் ஒப்படைத்தார்கள்.

அதை எல்லாம் படித்து பார்த்த ஜட்ஜ்,உமாவிடம் நீங்கள் ஆரம்பிங்கள் என்கவும் தேங்க்யூ மை லார்ட் என்றவர் சொல்லுங்க மிஸ்டர் ஆடியபாதம் உங்க பொண்ணு பாரின்ல படிச்சிட்டு இருக்காங்கன்னு சொன்னீங்க,அப்போ இவங்க யாரு?

ஒருவேளை உங்களுக்கு ரெட்டை பிள்ளையா இருக்குமோ என்க,மகளைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்தவனோ இன்னும் வெளிவரவில்லை.

சொல்லுங்க மிஸ்டர் ஆடியபாதம் அவங்க உங்களோட பொண்ணா? இல்லையா என்று உமாவின் கம்பீரமான குரலைக் கேட்டு நிகழ்விற்கு வந்த ஆடியபாதம்,ஆமாம் என்னுடைய பொண்ணு தான்.

ஆனால் என் பொண்ணு பாரின்ல தான இருந்தாள்.இப்ப கூட நான் பேசினேனே பிறகு இங்கு எப்படி என்க...அது என்ன மாயம் மந்திரமோ நீங்க தான் சொல்ல வேண்டுமென உமா கேட்க,கோர்ட்டில் இருந்தவர்களோ சிரித்தனர்.

"ஜட்ஜோ சைலன்ட் சைலன்ட் என்றார்"

ஆடியபாதம் நல்ல மனநிலையில் தானே இங்கே இருக்கிறீர்கள் என்று ஜட்ஜ் கேட்க ஆமாங்கய்யா என்றார்.

அப்போ நடந்தது என்ன என்று நீங்களே சொல்கிறீர்களா என்கவும்,ஐயா அதுதான் எனக்கும் தெரியவில்லை என் பொண்ணு இங்க இருக்கிறாள்.

பிறகு எதுக்கு இந்த ஆணவக் கொலை வழக்கு என் மேல போட்டுருக்காங்க? அப்படி நான் யாரை கொலை பண்ணினேன் என்கும் போது உமாவின் அண்ணன் பையன் ஒரு தம்பதியை அங்கே அழைத்து வந்தான்.

அவர்களை கூண்டுக்குள் நிற்க வைத்த உமா யுவர் ஆனர் இங்கே நிற்கிறார்களே பன்னீர்-வசந்தா இவர்களின் ஒரே பையன் ரவீந்திரன் பற்றிய கேஸ் தான் இது என்க...

எதற்காக மனித உரிமை கழகத்திற்கு கம்ப்ளைன்ட் பண்ணுனீங்கள் என்கவும், எங்களுடைய ஒரே பையன் ரவீந்திரனை கடந்து ஒன்றரை வருடமாக காணவில்லை.

அங்கே நிற்கிறாரே ஆடியபாதம் அவரும் நாங்களும் ஒரே ஊர்காரர்கள் தான். அவருடைய பொண்ணும் என் பையனும் காதலிச்சு கல்யாணம் பண்ணிக் கொண்டார்கள் என்க...அப்படியா என்க, ஆமாம் என்றார்.

ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிச்சவங்க.வெவ்வேறு ஜாதி.அவங்க கல்யாணம் பண்ணிக்கிற விஷயமே எங்களுக்கு தெரியாது.ஒரு நாள் இவர் ஆட்களோட வந்து எங்க வீட்ல இருக்கும் பொருள் எல்லாம் அடிச்சு ஒடைச்சிட்டு உன் பையன ஒழுங்கா இருந்துக்க சொல்லு..

இல்லை காணாமல் பண்ணிடுவேன்னு சொன்னார்.அன்று காலை தான் என் பையன் வேலை கிடைச்சிருக்குன்னு பெங்களூருக்கு கிளம்பி போனான். இதோ ஒன்றரை வருஷம் ஆகிவிட்டது.என் பையன் வரலை எங்க போனானென்றும் தெரியலை என்று கதறி அழுதார்கள்...

கோர்ட்டில் வாதம் நடந்து கொண்டிருக்கும்போது தனது போனை எடுத்துக் கொண்டு வெளியே வந்த செழியன் தனது வீட்டிற்கு கால் பண்ண செல்லதுரை தான் எடுத்து பேசியவர் மகனிடம் வேற எதுவும் கேட்காமல் நல்லா இருக்கிறியா?

நல்லபடியாக கேஸ் முடிச்சுட்டு வா என்று சொல்லியவர் பின்னர் வானதியிடம் கொடுக்க,அவரோ வருத்தமாக பேச தனது தாயை சமாதானப் படுத்தியவன் உன் மருமகள் எங்க மா என்றான்.

இப்பொழுது தான் ரூமுக்கு போனாள் என்று சொல்லவும் சரி நான் அவளுக்கு ஃபோன் பண்ணுகிறேன் என்று மனைவிக்கு கால் பண்ண ஷமீராவோ போன் அழைப்பை அட்டென்ட் பண்ணவே இல்லை.

தொடர்ந்து கால் பண்ணி கொண்டே இருக்க அவளும் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.பயங்கர கோவமா இருக்கா போலையே? என்று கண்மணிக்கு போன் பண்ணி எங்கே இருக்கிற என்க...

ஏண்டா மானங்கெட்ட மாமா.நீ போலீஸ்ன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே என்கவும்,அதுலாம் நேரில் வந்து பேசுறேன் டி.மொதல்ல என் பொண்டாட்டி கிட்ட போனை கொடு டி என்க,ஏன் உன் பொண்டாட்டி கிட்ட தான் போன் இருக்கேயென்றாள்.

அடியேய் அந்த வெங்காய மயிறு தெரியாதா? அவள் போனை எடுக்க மாட்டேங்குறாடி கோவமா இருக்குறாள்.போய் கொடு என்றான்.

சரி...நீ போனை வை நான் மேல போயிட்டு வீடியோ கால் பண்றேன்னு சொல்ல,நீ தாண்டி செல்லக்குட்டி என் மாமா பொண்ணு.நானே பொண்டாட்டிய பாக்காம ரெண்டு நாள் ஏங்கி போயிருந்தேன் டி.

மாமா மனசை புரிஞ்சுகிட்டு வீடியோ கால் பண்றேன்னு சொன்ன பாத்தியா உனக்கு கோயில் கட்டணும் தங்க குட்டி என்கவும்....யோவ் ஓவரா சோப்பு போடாதே என்றவாறு மேலே வந்தவள் ஷமீராவின் ரூம் கதவை தட்ட,துணி மடித்துக் கொண்டிருந்தவளோ கதவை திறக்க கண்மணி தான் நின்று கொண்டிருந்தாள்.

அவள் வாசலில் நிற்கும் போதே செழியனுக்கு வீடியோ கால் பண்ண அவனும் அட்டென் பண்ணியிருந்ததால் மனைவியின் முகத்தை பார்த்தவன் ஓய் பொண்டாட்டி ,என்ன டி கோவமா என்றான்.

திடீரென்று கணவனின் குரல் கேட்பதை கண்ட ஷமீராவோ கண்மணியை முறைக்க அவளோ போனை காட்டினாள்.அதில் செழியன் யூனிஃபார்மில் இருப்பது தெரியவும் எதுவும் சொல்லாமல் கண்மணியிடம் இருந்து போனை வாங்கிக் கொண்டு கணவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மனைவியின் பார்வை தன்னை ஊசி போல் ஊடுருவதை உணர்ந்தவன் மாமா கோர்ட்ல இருக்கிறேன் டி.இப்படி உத்து பார்த்தால் மூடு மாறிடும் என்கவும்,அதற்கும் அவள் ஒன்னும் சொல்லவில்லை .

யூனிஃபார்ம் ல உன் புருசன் எப்படி இருக்கிறேன்? சொல்லு டி என்று கேமராவை சற்று தள்ளி வைத்து தன்னை காட்ட,என் புருஷன் எப்படி இருந்தாலும் அழகு தான் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளோ வாயை திறந்து சொல்லவில்லை.

போலீசா இருக்குறேன்னு உன்கிட்ட சொல்லல அதுதான் கோவமா?அப்பா அம்மாக்கு மாமா வீட்ல கூட சொல்லலை டி ஏன் அதை யோசிக்கலை என்க,அப்பொழுதும் அவள் அமைதியாக இருப்பதை பார்த்து மனுஷன் இங்கு கரடியாக கத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி வாயை மூடிக்கிட்டு இருந்தாக்க என்ன அர்த்தம்?

ரொம்ப கடுப்பு மயிரா வருது.ரெண்டு நாளா பேசலன்னு எவ்ளோ ஆசையா போன் பண்ணிட்டுருக்கேன்,எடுத்து அட்டென்ட் பண்ணி பேசுவது கூட உன்னால முடியலையா?

"உடம்பெல்லாம் திமிரு டி"இரு டி உன்னை நேர்ல இருந்து வச்சுக்கிறேன் என்யவாறு அழைப்பை துண்டித்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
376
ஒரு வார்த்தை கூட என்கிட்ட சொல்லவே இல்ல பாரு அது தான் டி வருத்தமா இருக்கு.உன் மாமா கிட்ட இதுவரைக்கும் ஒரு சின்ன விஷயத்தை கூட மறைச்சதில்லை தெரியுமா என்கும் போது மீண்டும் ஷமீராவுக்கு அழுகை வந்தது.

அந்த மனுஷன் நேர்ல வருவாரு அப்போ தூக்கி போட்டு மிதி,வெளக்கமாத்தால அடி உன்னை யாரு வேண்டாம்னு சொன்னா?

வேணுன்ம்னா சொல்லு நான் ரெண்டு விளக்கமாறு புதுசா சீவி எடுத்துட்டு வந்து தரேன்னு கண்மணி சொல்ல, அடிப்பாவி..உனக்கு எவ்வளவு கொழுப்பு டி என்று கண்மணியின் தலையிலே கொட்டினாள்.

ஷமீரா பழைய இயல்புக்கு திரும்பியதை பார்த்த கண்மணி சரி வா கீழே போகலாம் என்க,இன்னும் கொஞ்சம் தான் துணி இருக்கு மடிச்சு வச்சுட்டு வரேனென்றாள்.சரி நீ மடித்து வைத்துவிட்டு வா. நான் போய் ஸ்நாக்ஸ் பண்றேன் என்று சொல்லிக்கொண்டு அவள் கீழே சென்றாள்.

ஷமீராவிற்கு ஏனோ கடந்த இரண்டு மூன்று நாட்களாக மனசு சஞ்சலமாகவே இருந்து கொண்டிருந்தது.ஒருவேளை அம்மாவுக்கு உடம்பு ஏதும் சரி இல்லையோ என்று நினைத்தவள் மாமாவுக்கு போன் பண்ணி பார்க்கலாம் என்று போனை எடுத்து அந்தோணியின் நம்பருக்கு கால் பண்ணினாள்.

மூன்றாவது ரிங்கில் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவர் பாப்பா எப்படி இருக்க?

நல்லா இருக்கிறியா என்கவும் நல்லா இருக்கேன் மாமா நீங்க எப்படி இருக்கீங்க?நம்ம வீட்டில் எல்லாம் நல்லா இருக்காங்களா என்க,அதற்கு அந்தோணியால் எந்த பதிலும் சொல்ல முடியாமல் அழுகை வர,தனது வாயை பொத்திக் கொண்டார்.

அந்த பக்கம் அமைதியாக இருப்பதை பார்த்தவள் மாமா என்ன ஆச்சு மாமா?ஹலோ ஹலோ என்ற கத்த அதில் சுதாரித்த ராணியோ அவர் காதில் இருந்த இருந்த போனை புடுங்கியவள் ஷமீ நல்லா இருக்கியா டா?

அத்தை...நான் நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கீங்களா?மாமா பேசிட்டு இருந்தாங்க ஒண்ணுமே சொல்லல என்கவும்,திடீர்னு உங்க மாமாவுக்கு இருமல் வர போல இருந்துச்சு அதனால தான் வாயை மூடிட்டார் என்று மனைவி சொன்னதை கேட்ட அந்தோணியோ முறைத்து பார்த்தார்.

அவர் தனது பார்வையால் கெஞ்ச பல்லைக் கடித்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.ராணியும் ஷமீராடம் பேசிவிட்டு போனை வைத்தவர்,எங்கே எஸ்தரை பற்றி சொல்லிடுவீங்களோனு பயந்துட்டேன் என்று கணவரை பார்க்க..

"நடிக்காதடி"

அதான் எங்க குடியை கெடுத்துட்டீங்களே..சந்தோஷம் தானே.உன் அண்ணன் கிட்ட போன் பண்ணி சொல்லிடு என் பையன் கண்ணுல படம் வேணான்னு.
அவனுக்கு இருக்குற கோவத்துக்கு என்ன பண்ணுவான்னு தெரியாது என்று சொல்லும் போது வீட்டிற்குள் வந்த பாபு அப்பா அப்பா என்று கூப்பிட்டுக்கொண்டு டிவியை ஆன் பண்ணினான்.

அதில் தலைப்பு செய்தியாக செழியன் அரெஸ்ட் பண்ணிய விஷயம் ஓட,அவர்களும் ஹாலுக்கு வர..செழியன் போலீஸ் பா என்கவும், என்னப்பா சொல்ற என்று அவர்களும் டிவியை பார்த்து அதிர்ந்தனர்.

போலீஸ்காரன் என்கிற தைரியத்துல தான் உன் அத்தமக ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டாளா என்று ராணி வாயை மூடுவதற்குள் மனைவியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டவர் உன் அண்ணன் போல ஒன்னும் கிடையாது டி.ஏதாச்சு வாய தொறந்த மரியாதை கெட்டுப் போயிடும் என்றார்.

சென்னை ஹைக்கோர்ட்:

ஆடியபாதத்தின் வக்கீலோ எனது கட்சிக்காரர் மேல் அப்பாண்டமாக பொய் சொல்கிறார்கள் என்று எழுந்திருக்க,நீங்க கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்றவர்,உமாவிடம் உங்களுடைய வாதத்தை தொடங்குங்கள் என்றார்.

யுவர் ஆனர் இவங்களோட பையன் ரவீந்திரனும் இங்கே இருக்கும் பிரியாவும் சென்னை ஐஐடியில் படித்தவர்கள்.

அதாவது அந்த கிராமத்திலே நன்கு படித்த முதல் மாணவன் யார் என்றால் ரவீந்திரன் தான்.அதே காலேஜில் அவருடைய ஜூனியராக பிரியா படிக்க, நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஆகி அது காதலாக மாறி இருக்கிறது.இருவரும் வெவ்வேறு ஜாதி,அந்தஸ்துகளிலும் இருவரும் சமம் இல்லை என்பதால் ரவீந்திரனோ முதலில் தயங்கியிருக்கிறார்.

ஆனால் உண்மையான காதல் தோற்காது என்பது போல் பிரியாவின் காதலை அவரும் ஏற்றுக்கொள்ள, படித்து முடித்ததும் இருவருக்கும் ஒரே கம்பெனியில் வேலை கிடைத்தது.

அதாவது ரவீந்திரன் தனது மேல் படிப்பையும் பிரியாவுக்காக அதே கல்லூரியில் தொடர்ந்திருந்திருக்கிறார்.

இருவரும் ஊருக்குள் வந்தவர்கள் வேலை கிடைத்திருக்கும் விஷயத்தை சொல்லவும்,மகனின் மூலமாக தனது குடும்பம் முன்னேற்றம் அடையும் என்று பன்னீரும் வசந்தாவும் பூரிப்பில் இருந்தனர்.

இரண்டு வாரங்கள் செல்ல இருவரும் அவரவர் பெற்றோரிடம் சொல்லிக் கொண்டு வேலையில் ஜாயின் பண்ணுவதற்காக சென்றுவிட்டார்கள்.

கல்யாணம் என்று வருகின்ற போது ஆடியபாதத்தால் பிரச்சனை வரும் என்பது தெரிந்து இருவரும் 2023 வது வருடம் மே மாதம் 20ஆம் தேதி சென்னையில் இருக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸ் சட்டப்படி கல்யாணம் பண்ணி இருக்கிறார்கள்.அதற்கான டாக்குமெண்ட்ஸ் என்று டேபிள் மேல் இருந்ததை எடுத்து வந்து கொடுக்க, அதை வாங்கி ஜட்ஜிடம் கொடுத்தனர்.

இருவரும் கணவன் மனைவியாக வாழ்க்கையை தொடங்கினர்.அந்த நேரத்தில் மகளுக்கு பெரிய இடத்தில் இருந்து வரன் வரவும்,நேரடியாக நிச்சயதார்த்தம் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு பண்ணிய ஆடியபாதம் மகளைக் காண பெங்களூருக்கு வந்தவர் மகள் பற்றி கேட்க,அந்த பெயரில் யாருமே அங்கு வேலை பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டனர்.

இதைக் கேட்ட ஆடியபாதத்திற்கு அதிர்ச்சி தாங்கவில்லை.பின்னர் மகள் எங்கே போனாள் என்று அவள் படித்த சென்னை ஐஐடியில் வந்து விசாரிக்கும் போது தான்,யார் மூலமாகவோ ரவீந்திரனும் பிரியாவும் காதலித்த விஷயம் தெரிந்து கோவப்பட்டவர் நேரடியாக வீட்டிற்கு போய் அவங்க வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து அவங்க அப்பா அம்மாவை அடித்திருக்கிறார் அதற்கு ஊர் மக்களும் சாட்சியாக இருந்திருக்கிறனர்.

பிரியாவும் ரவீந்திரனும் எங்கே என்று கேட்டு இருவரையும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை பண்ண அவர்களை தப்பிக்க வைத்ததே ஆடியபாதத்தின் மனைவிதான்.

மதுரையில் இருந்து தப்பித்து வந்தவர்களோ கிடைத்த வேலையை செய்து வாழ்ந்து கொண்டு மகனைப் பற்றிய ஏதாவது செய்தி கிடைக்குதா என்று இரவோடு இரவாக ஊரின் எல்லையில் இருந்து தெரிந்தவரிடம் விசாரித்து சென்று கொண்டிருப்பதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கனர்.

இந்த நிலையில் கட்சி மீட்டிங்கிற்காக டெல்லிக்கு போயிருந்த ஆடியபாதமோ அங்கே தனது மகளையும் ரவீந்திரனையும் பார்த்தவர் அவர்களிடம் அன்பாக பேசி ஊரறிய கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று சொல்லி அழைத்து வந்தவர் என்கும் போது உமா கண்ணை துடைத்துக் கொண்டார்.

தொண்டையை கணைத்து சாரி யுவர் ஹானர் என்றவர் கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் இருக்கும் ஆடியபாதத்தின் இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு அழைத்துப் போனவர் பிரியாவின் கண்முன்னே ரவீந்திரனை வெட்டி கொலை பண்ண, கண்முன்னே கணவன் இறப்பை பார்த்தவர் மயங்கி கீழே விழுந்து விட்டார்.

மகளை அந்த வீட்டிற்குள் அடைத்து வைத்துவிட்டு ரவீந்திரனை அந்த தோட்டத்திலேயே புதைத்து அதன் மேல் மரக்கன்று நட்டு எதுவும் தெரியாது போல் ஊருக்குள் வந்தவர் மகள் வெளிநாடு சென்று விட்டதாகவும் ரவீந்திரன் காதல் தோல்வியில் எங்கே போய்விட்டான் என்று கதையை பரப்பி விட்டார்.

கடந்த ஒரு வருடமாக மகனைப் பற்றி எதுவும் தெரியவில்லை என்று இருவரும் தவித்துக் கொண்டிருக்கும் போது கேரளாவில் தாரா இன்போடெக்கின் ஓனரும் முன்னால் ஐபிஎஸ் ஆபீஸரான சுந்தரபாண்டியன் அவர்கள் கடந்த சில மாதங்களாக இருவரும் வேலைக்கு வராததை பார்த்து, ரவீந்திரனை தேடிக் கொண்டு மதுரை மாவட்டத்தில் இருக்கும் அவரது ஊருக்கு வந்த பிறகுதான் மகன் கேரளாவில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்த விஷயமே இவர்களுக்கு தெரிந்திருக்கிறது.

அதாவது ரவீந்திரன்-பிரியா இருவரும் தங்கள் காதல் கதையையும் திருமணம் செய்து கொண்டதை பற்றி சுந்தரபாண்டியனிடம் வேலையில் சேரும் போதே சொல்லியிருக்கிறார்கள்.

அவரின் அணுகுமுறைப்படி தான் இவர்கள் மனித உரிமைக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள் என்க,கேட்ட அனைவருக்கும் என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

அனைத்தும் கேட்ட ஜட்ஜ் இதெல்லாம் எப்படி தெரிந்தது?யாரு சாட்சி என்கும்போது தனது ஹேண்ட் பேக்கில் இருந்த ஒரு சிடியை எடுத்துட்டு வந்து ஜட்ஜிடம் நீட்டியவர் அதை ப்ளே பண்ண சொல்ல,கடந்த ஒன்றரை வருடங்களாக சுயநினைவை இழந்த பிரியாவோ கண் முன்னால் ஏதோ ஒரு அசம்பாவிதத்தை பார்த்து நினைவு வந்ததாகவும்,அதன் பிறகு மருத்துவரிடம் சொல்லி அழுததையும் அவர் ரெக்கார்ட் பண்ணியதே இதுவரை நான் சொன்னது என்று சொல்ல...

உமா கோர்ட்டில் என்ன சொன்னாரோ அனைத்தும் அந்த வீடியோ கேசட்டில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.மகன் உயிரோடு இல்லை என்பதை கேட்ட உடனே வசந்தாவும் பன்னீரும் நெஞ்சை பிடித்துக் கொண்டு விழுந்தனர்.

கண்ணில் இருந்து தண்ணீர் வற்றிப் போய் நடை பிணமாக இருக்கும் பிரியாவை பார்க்கவே அவ்வளவு வேதனையாக இருந்தது.

என் மேல ஜோடிக்கப்பட்ட அப்பட்டமான பொய் வழக்கு என்று ஆடியபாதம் சொல்ல,அத்தனைக்கும் சாட்சி இருக்கிறது ஹானார் என்றவர் ஒவ்வொருவராக கூண்டில் கொண்டு வந்து நிற்க வைத்து கேள்வி கேட்க, அத்தனை பேரும் நடந்ததை மறைக்காமல் சொன்னார்கள்.

ஏற்கனவே இந்த கேஸை நன்கு சிபிஐ விசாரித்திருக்கிறார்கள் என்பதால் நீதிபதியும் தீர்ப்பை எழுதினார்.ஆடியபாதத்திற்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும் இந்த கேஸை ஒழுங்காக விசாரிக்காமல் இருந்த அந்த அதிகாரிகளை ஆறு மாதம் டிஸ்மிஸ் பண்ண சொல்லியும்,ஒற்றை மகனையும் இழந்து வாழ்வாதாரம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஆடியபாதத்தின் சொத்தில் பாதியை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்,கட்சி தலைமையிடமோ அவரின் மினிஸ்டர் பதவியை உடனடியாக பறிக்க வேண்டும் என்றும் அதில் தீர்பை எழுதினார்..

ஒவ்வொரு முறையும் பாதிக்கப்பட்டவர்களுக்காக மிகவும் சிரத்தை எடுத்து சிறந்த முறையில் வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தரும் உமா மகேஸ்வரியை வெகுவாக பாராட்டியவர் இந்த கேஸில் தீர விசாரித்து குற்றவாளியை பிடிப்பதற்கான தகுந்த ஆதாரங்களையும் சேகரித்த சிபிஐ ஆபிசர் இளஞ்செழியன் தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

உங்களை போல இளைஞர்கள் நாட்டிற்கு தேவை என்று பாராட்டி முடித்தார்.

பிரியாவிடம் வந்த செழியன் உனக்கு ஒரு அண்ணனாக நான் இருக்கிறேன். என்ன உதவி வேணுமோ தாராளமா எப்ப வேணாலும் எனக்கு போன் பண்ணு என்று சொல்லி தனது போன் நம்பரை கொடுக்க அவளோ எதுவும் பேசாமல் கண்ணீரோடு தலையை மட்டும் அசைத்தாள்.

இனி உங்களுக்கு மருமகளும் மகளும் நான் தான் என்று பன்னீர் வசந்தாவின் கைகளை பிடித்துக் கொள்ள,இந்த சின்ன வயசில் இப்படி ஒரு விதியா என்று அவளை நினைத்து கதறினர்.

வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
May 9, 2025
Messages
106
Kanmani I ❤️❤️and like you. Women shouldn’t hide anything to HUSBAND, but they will hide everything to poor soul wife,will say ladies will blabber that is not true.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top