• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

நான் முன்னாடி வண்டில போறேன்..என் பின்னாடியே வாங்களென்றவர் அங்கிருந்த தனது புல்லட்டில் ஏறி செல்ல,அவரை பாலோ பண்ணி கொண்டே சென்றனர்.


பரமசிவமோ இரண்டு தெருவை தாண்டி மூன்றாவது தெருவில் இருக்கும் அந்த பெரிய வீட்டின் முன்பு வந்து வண்டியை நிறுத்த,இவர்களும் காரை நிறுத்தி விட்டு இறங்கினர்.

வாங்களென்றவர் துரை துரை என்று குரல் கொடுக்க, பரமு மச்சான் குரல் கேட்பது போல இருக்கேயென்ற செல்லதுரை, உள்ள தான் இருக்கேன் மச்சான் வாங்க.

அவர்கள் நால்வரோடும் உள்ளே வந்தவர் அங்கே வீரையன் தம்புசாமி வானதியின் அண்ணன்கள் அன்பரசன் கனவரசனும் இருப்பதை பார்த்து இவங்க யாருன்னு தெரியுதா?என்க..

என்ன மச்சான் விளையாடுறியா?நீ கூப்பிட்டு வந்துட்டு எங்களை கேக்குறீங்கனு செல்லதுரை சொல்ல,பாப்பாவ வர சொல்லு என்றார்.

அதிலே விஷயம் புரிந்து விட்டது.மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்லியவர்கள் உட்காருங்களஎன்று அங்கிருந்த மர சோபாவை காட்டி சொல்ல,வந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டு,முதலில் தங்களது பிள்ளையை பார்க்க வேண்டும் என்பதால் அமைதியாக உட்கார்ந்தனர்.

மகள் எங்கே இருக்கிறாளென்று தெரியாமல் கண்களை அங்கே இங்கே எஸ்தர் அலைபாய விட,அருகில் இருந்த மகளை பார்த்த தம்புசாமியோ அம்மாடி போய் கூட்டிட்டு வா என்கவும் வானதியும் அங்கிருந்த படிகள் வழியாக மாடிக்கு போய் ரூம் கதவைத் தட்ட, சில நொடியில் ஷமீராவும் கதவை திறந்தாள்.

உன்னை பார்க்க வந்திருக்காங்களென்று சொல்லவும்,என்னையா என்றவளுக்கோ பயம் வந்துவிட்டது.எங்க அப்பா அம்மா வந்திருக்காங்களா?என்கவும்,அவங்க உன்னோட அப்பா அம்மாவாயென்று எனக்கு தெரியல ஆத்தா.

ஆனால் பார்க்க ரொம்ப படிச்சவங்க போல இருக்கிறாங்க என்கவும்,வந்திருக்கிறது தனது தந்தை தானென்பது ஷமீராவுக்கு புரிந்துவிட்டு.

அய்யோஓஓ என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே??இந்த நேரத்தில் இவர் வேற வீட்டில் இல்லையேனு ஒருபக்கம் கவலையாக இருந்தது.

அவள் அமைதியாகவு இருக்க,வாத்தா போகலாம் என்கவும் ம்ம் என்றவளோ பயந்து கொண்டே அவர் பின்னாடியே வந்தாள்.மாடியிலிருந்து கீழே இறங்கி வரும் மகளை பார்த்து வேகமாக எழுந்து போன மகியோ பளார் பளாரென்று அவள் கன்னத்தில் அறைய அதில் நாலடி தள்ளி போய் விழுந்தாள்.

ஏங்க என்னங்க பண்றீங்களென்று செல்லத்துரையும் மற்றவர்களும் கத்த, என் பொண்ணு என்ன வேணாலும் பண்ணுவேன்,அதைக் கேட்க நீங்கெல்லாம் யாருனு மதி கேட்க, உங்க பொண்ணா இருந்த வரைக்கும் நீங்க வெட்டலாம் கொல்லலாம்.அதை நாங்க கேட்க மாட்டோம்.

ஆனால் இப்போ இந்த வீட்டு மருமகள்.என் பேரனோட பொண்டாட்டினு வீரையன் தனது மீசையை முறுக்கி கொண்டு சொல்ல,அதற்கு மகியோ என்ன விளையாட்டு காட்டுறீங்களா?

யாரு பொண்ணை யாரு உறவு கொண்டாடுவது?

நீங்கெல்லாம் மனுஷங்களா?

படிச்சவங்களா இருந்தா உங்களுக்கெல்லாம் தெரியுமென வாய்க்கு வந்தபடி கோபத்தில் பேச அதைக் கேட்டு செழியன் வீட்டினரும் பேச அந்த இடமே சண்டைக்களமானது.

அட கொஞ்ச நேரம் அமைதியாக இருங்கள்...இப்படி மாறி சண்டை போடுவதால் என்ன ஆக போகுது?எதாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாமென்று தம்புசாமி தாத்தா தனது குரலை உயர்த்தி சொல்லவும்,இவ்வளவு நேரம் காச்சுமூச்சென்று கத்தி கொண்டிருந்தவர்கள் அவரின் சத்தத்தை கேட்டு அமைதியாகினர்...

யாரென்று தெரியாதவர்கள் தங்களை இவ்வளவு பேச்சு பேசுறார்களா இதற்கெல்லாம் மகள் தானே காரணம் என்னும் கோவம் வர,சோபாவிலிருந்து எழுந்த எஸ்தரோ,அங்கே அழுது கொண்டிருந்த மகளிடம் சென்றவர் ஏண்டி இப்படி பண்ணுன?

எல்லா அம்மாவை போல கண்டிப்போடா உன்னை வளர்த்தேன்?சொல்லு உங்க அப்பா கொடுக்காத சுதந்திரத்தை உனக்கு நான் கொடுக்கலையா?நீ கேக்குறதுக்கு முன்னாடியே உனக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தேனே,அதுக்கு நீ கொடுத்த பரிசா இது??

ரோட்ல ஒருத்தி நடந்து போற நடையை வைத்தே அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு யூகிக்கிற ஆளான என்னால் வீட்டுக்குள்ள இருந்த உன்னை கணிக்க முடியலையே?

கல்யாணம் ஏற்பாடு பண்ணுற வரைக்கும் வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தியேடி.இப்ப மட்டும் என்ன இவனை நம்பி ஓடி வந்து இருக்கிற?

அழுது கொண்டிருந்தவளோ தனது தாய் சொன்னதைக் கேட்டு நிமிர்ந்தவள் ஏம்மா நான்தான் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்?வாழ்ந்தால் நான் இவர் கூட தான் வாழ்வேன்..இவர தான் புடிச்சிருக்கு..எனக்கு கல்யாணம் ஒன்று நடந்தால் இவர் கூட தான் என்பதை ரெண்டு வருஷமா உங்க கிட்ட சொல்லவே இல்லையா?

நான் சொன்னதை காதுல வாங்கினீர்களா என்க,இத்தனை வருடங்களாக தங்கள் பேச்சுக்கு மறுவார்த்தை பேசாத மகளோ,இங்கு இத்தனை பேருக்கு முன்னாடி தங்களை எதிர்த்து பேசுவதை கேட்ட மகிக்கும் எஸ்தருக்கும் ஷமீராவின் மீது மேலும் ஆத்திரமும் கோவமும் அதிகமானது.

ஒத்த புள்ளைனு மார்லையும் தோளிலையும் போட்டு வளர்கள தான்..ஆனால் உன்னை கண்ணுக்குள்ள வச்சி தானே நாங்கள் வளர்த்தோம்.

நீ பிறந்ததிலிருந்து காலேஜ் படிச்சு முடிக்கிற வரைக்கும் ஒன்னு ஒன்னு பார்த்து பார்த்து செஞ்சோமே??
அதுக்காகவா இப்படி பண்ணிட்டனு அவர் பங்குக்கும் நாலு அறையை விட்டவர்,என்ன குலம் என்ன கோத்திரன்னு தெரியல,நம்ம ஊரு எங்க? இந்த ஊரு எங்க இருக்கு?

இவ்வளவு தூரம் எப்படி உனக்கு பழக்கமாச்சுடினு மேலும் நாலு அறை விட்டு கீழே கிடந்த மகளின் முடியை பிடித்து தூக்க போகும் போது தான் அவள் கழுத்தில் கிடக்கும் தாலியை பார்த்துவிட்டார்.

அய்யோ ஏசப்பாஆஆ என்று கத்தியவர் ஓஓஓ உன் இஷ்டத்துக்கு தாலி வேற கட்டிக்கிட்டியா என்றவர் ஆத்திரத்தில் என்ன பண்ணுகிறோம் என்பதை உணராமல் மகளின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுக்க போக,என்னம்மா பண்ணுறீங்களென்று வீட்டினரின் பதற்றமான குரலையும் தாண்டி நிறுத்துங்களென்ற செழியனின் கணீர் குரலை கேட்டு எஸ்தர் மட்டுமில்லை அங்கிருந்தவர்களும் ஒரு நிமிடம் அரண்டு தான் போனார்கள்.

வாசலில் நின்றிருந்தவனோ நாலே எட்டில் வேகமாக உள்ளே வந்தவன் அங்கிருந்த எஸ்தரை தீப்பார்வை பார்த்தவன் இவ்வளவுதான் உங்களுக்கு மரியாதை.

வயதில் பெரியவங்களென்று பார்க்கிறேன் இல்லை என்ன பண்ணுவேனென்று தெரியாது.என் பொண்டாட்டி கழுத்திலிருந்து முதல்ல உங்க கையை எடுங்கள் என்கவும்,நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு கம்பீரமாக நிற்பவனை பார்த்த எஸ்தருக்கு ஒரு நொடி பயம் வராமல் இல்லை..

பேரனின் கோபத்தை பற்றி நன்கு தெரிந்திருந்த வீரையனோ ஐயா செத்த அமைதியாக இருயா.பொண்ணை பெத்தவங்க கோபத்தில் நாலு வார்த்தை பேச தான் செய்வாங்க.

கொஞ்சம் பொறுத்து போய்யா.அது ஒன்னும் தப்பில்லை.உன்னை விட வயசுல பெரியவங்க இல்லையா என்கவாம்,அப்புச்சி எல்லாருக்கும் முன்னாடி உங்களை எதிர்த்து பேசுறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..

நீங்க சொல்றது வாஸ்தவம் தான். கண்டிக்கட்டும் நான் வேண்டாமென்று சொல்லவில்லை.அதுக்குன்னு இவ கழுத்துல கிடக்குற தாலியா அறுக்க போறாங்களே இது நல்லாவா இருக்கு?

ஊர் உலகத்தில் எந்த தாயாவது இவங்களை போல மகளின் கழுத்தில் இருக்கும் தாலியை அறுக்க நினைப்பார்களா?என பல்லை கடித்துக் கொண்டே கேட்டான்.

செழியின் கேள்வியோ எஸ்தருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது. ஆமாம் தானே எந்த தாயுமே இப்படி ஒரு செயலை ஒருபோதும் செய்ய மாட்டாளே?

என் பொண்ணை எப்படி எல்லாம் ஆசையா வளர்த்தேன்.அவள் மேல ஒரு துரும்பு பட்டாலும் துடித்து போவேனே, இதுவரை என் பொண்ணை விளையாட்டுக்கு கூட ஒரு அடி நான் அடித்ததில்லையே...

இன்று முதல்முறையா நானே என் பொண்ணை இத்தனை அடி அடித்துவிட்டேனே?அந்த அளவிற்கு நான் அரக்கியா மாறிட்டேனா?

ஆண்டவரே எனக்கு ஏன் இப்படி ஒரு கோபம் வந்தது?

யாரோ கண்ணுக்கு தெரியாத பெண் கஷ்ப்படுகிறாள் என்பதை கேள்விப்பட்டாலும் அவள் புருஷனோடு சந்தோஷமா இருக்கணும்னு தானே பிரேயர் பண்ணிப்பேன்.

இன்று நான் பெற்ற மகளின் கழுத்திலிருக்கும் தாலியை அறுக்க போயிருக்கேனே அந்த அளவுக்கு நான் கெட்டவளானு தன்னையே கடிந்து கொண்டார்.

இருந்தாலும் தனது மகளை இங்கிருந்து கூப்பிட்டு போக வேண்டும்.அவளுக்காக அங்கு ஒரு ராஜ வாழ்க்கை காத்துக் கொண்டிருக்கின்றது என்ற எண்ணத்தில் என் பொண்ணு மேல நான் கை வைப்பேன் அதை கேட்க நீ யாருடா என்க. .

உங்க பொண்ணு என்பது நேற்று காலையோடு முடிஞ்சு போயிடுச்சு. சட்டப்படி அவள் எனக்கு சொந்தமானவள் என்றபடி அழுது கொண்டிருந்தவளை எழுப்பி தோளோடு அணைத்தான்.

இங்க பாருங்க உங்க கூட வாக்குவாதம் பண்றதுக்காக நாங்க வரல.என் பொண்ணை எங்களோட அனுப்பி வைங்க.என் பொண்ணுக்காக நான் ஏற்கனவே மாப்பிள்ளை எல்லாம் பார்த்து முடிவு பண்ணிட்டேன்னு எஸ்தர் சொல்ல..

அட என்னங்க நீங்க...என் பையனோட பொண்டாட்டியை போய் கூப்பிட்டு போறேன்னு சொல்றீங்களே இதெல்லாம் எந்த விதத்தில் நியாயம் என்றவாறு வானதியும் வாயைத் திறந்தார்.

நீங்க எந்த குலம் கோத்திரம் தெரில. நாங்க கிறிஸ்டியன்.உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது பந்தல் போட்டாலும் பத்தாது. இதெல்லாம் சரி வராதென்று மீண்டும் எஸ்தர் சொல்ல..

அதற்கு வானதியோ,என்னம்மா பேசுறீங்க??எல்லாரும் மனுஷன் ஜாதி தானே...எப்போ உங்க பொண்ணு வீட்டை விட்டு வந்துருச்சோ அப்பவே அந்த குலம் கோத்திரம் எல்லாம் காத்துல பறந்து விட்டதென்றார்.

நீங்க பேசுறது எந்த விதத்திலும் நியாயமா இருக்கா?தேவையில்லாம பேசாதீங்க என்று வானதியிடம் சொல்லிய எஸ்தர்,கழுத்துல கிடக்கிறதை கழட்டி போட்டு விட்டு வாடி என்றார்..

இப்பொழுது மகியோ தனது மகளை ஷமீஈஈஈ என கோபமாக கூப்பிட அவளோ முடியாதுப்பா என்று சொல்லவும் அவ்வளவு கொழுப்பு வந்திருச்சா என்று மீண்டும் மகளை அடிக்க போக இன்னொரு வாட்டி என் பொண்டாட்டி மேல கைய வைக்க வந்தீங்க மனுஷனா இருக்க மாட்டேனென்று ருத்ரமூர்த்தியாக கோபம் பொங்க செழியன் சொல்வதை கேட்டு, மகளையே இமைக்காமல் பார்க்க,தந்தையின் பார்வையில் கணவனின் பின்னால் போய் மறைந்தாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த பரமசிவம்...ஐயா இங்கு வாங்க..
முதல்ல வந்து உட்காருங்கள் என்கவும், மகளே தங்களுக்கு எதிராக இருக்கிறாளே?முதலில் இங்கிருந்து அவளை அழைத்துக்கொண்டு போவது தான் உத்தேசம்.

அதற்கு சத்தம் போட்டால் காரியம் கெட்டுவிடும் என்கும் உண்மை புரிய எஸ்தரும் மகியும் அமைதியாக வந்து உட்கார,அந்தோணியோ தனது மருமகளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

தான் வந்ததிலிருந்து தனது மாமாவின் பார்வை தன் மேல் இருப்பதை புரிந்துகொண்டவளோ அங்கிருந்தே கையை கூப்பி மன்னிப்பு கேட்டாள்....


நீங்க எல்லாம் பெரியவங்க.உங்களுக்கு தெரியாதது ஒன்னும் இல்லை.எதற்கு வார்த்தைகளை வளர்த்துக்கிட்டு இருக்கணும்.என் பொண்ணு எடுத்த முடிவில் எங்களுக்கு கொஞ்சம் கூட சம்மதமில்லை...

சொந்த பந்தங்களுக்கு முன்னாடி நாங்களும் அங்க கௌரவமா வாழணும்.இன்னும் மூணு வாரத்துல கல்யாணம் இருக்கு..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
என்னோட பொண்ணை என் கூட அனுப்பி வையுங்களென்று வீரையனையும் தம்புசாமியையும் பார்த்து மகி சொல்ல,அதைக் கேட்ட செழியனுக்கு கோவம் தலைக்கு மேல் ஏற,பல்லை கடித்து தன்னை நிதானம் பண்ணிக் கொண்டவன்,இங்க பாருங்கள் அப்புச்சி சட்டப்படி நாங்கள் கல்யாணம் பண்ணிருக்கோம்.இவள் எனக்கு மட்டுமே சொந்தமானவளென்றான்...

அவன் பேசியதைக் கேட்ட மகிக்கு ஆத்திரம் வர திருட்டு கல்யாணம் பண்ணினதெல்லாம் என்னால ஒத்துக்க முடியாது.என் பொண்ணுக்கு நான் பார்த்த மாப்பிள்ளையோட கல்யாணம் பண்ணி வைக்க போறேன்.

தேவையில்லாததெல்லாம் பேசாமல் என் பொண்ணை அனுப்புற வழிய பாருங்களென்று சத்தம் போட, அதற்கு தம்புசாமி தாத்தாவோ உங்க கோபம் நியாயமானது தான்.

பெத்தவங்களுக்கு எவ்வளவு பதட்டம் இருக்குமென்று எங்களால புரிஞ்சுக்க முடியுது.இதுல நீங்கள் கவனிக்க வேண்டி இன்னொரு விஷயம் என்னதுனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பொண்ணு மாப்பிள்ளையும் இங்க வந்தாங்கள்.

எங்க புள்ளை இப்படி பண்ணுவான்னு தெரியாதுங்க என்கவும்,நம்புர போலயா கதை சொல்றீங்க?இந்த ஊருக்கும் அந்த ஊருக்கும் 12 மணி நேரம் வித்தியாசம்.அங்கிருந்து என் பொண்ண கூட்டிட்டு வந்துருக்கான்...

பெந்தவங்க சொல்லி கொடுக்காமலா இவ்வளவு துணிச்சல் வந்திருக்கு?காசு பணம் இருக்கிற பொண்ணாச்சே அதான் புடிச்சாலும் புடிச்சான் புளியங்கொம்பு என்கிற போல என் பொண்ணை தூக்கிட்டு வந்துட்டான் என்று மகி கத்த...

நிறுத்துங்க...யாருக்கு வேணும் உங்க காசு பணம்.என்கிட்ட இல்லாத காசு பணமா ?வேஷ்டி சட்டை கட்டிருக்கிறானே பட்டிக்காட்டான்னு நினைச்சுட்டு இருக்கீங்க போல?.

நாலு தலமுறை சொத்துக்கு வாரிசு என் பையன்.என்கிட்ட இருக்கும் மிளகாய் தோட்டத்துல ஒரு போகத்துக்கு விலையுறதில் ஈடாகுமா என் வாசல் நிக்கும் உங்க காரு என்று செல்லதுரை கோபமாக கேட்க...

ஐயா துரை கொஞ்சம் அமைதியாக இருப்பா.இது ஒன்னும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசி முடிக்கிற விஷயம் கிடையாது.இரண்டு பிள்ளைகளோட வாழ்க்கை என தனது அண்ணன் மகனை வீரையன் அமைதி படுத்தினார்.

இங்க பாருங்க நடந்தது நடந்து போயிடுச்சு அடுத்தது என்ன ஆகணுமோ அதை தான் பார்க்கணுமென்க...எங்களுக்கு எங்க பொண்ணு வேணுங்க...

இதோ என் மச்சான் பையனுக்காக பேசி முடிச்சிட்டேன்.அடுத்த வாரம் என் மருமகன் வெளிநாட்டிலிருந்து வரான் இன்னும் மூணு வாரத்துல எங்க பிள்ளைகளுக்கு கல்யாண தேதியை முடிவு பண்ணியிருக்கிறோம்.

இந்த நேரத்துல இப்படி ஆனாக்க என் குடும்ப மான மரியாதை என்ன ஆவது நீங்களே சொல்லுங்க?

அடுத்தடுத்து பிள்ளையாக நான் பெத்து வச்சிரல.ஒத்த புள்ள தான் பெத்து வச்சிருக்கேனென்று தந்தையின் இடத்திலிருந்து மகி வேதனையோடு சொலல மற்றவர்களாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆனால் நடந்தது நடந்து விட்டது இதை எப்படி மாற்ற முடியுமென்று நினைத்துக் கொண்டிருக்க

நீங்க படிச்சவங்க...நாங்க படிக்கல ஆனா பண்பாடுனு ஒன்னு இருக்கு.ஒரு பொண்ணு கழுத்துல தாலி ஒருமுறை தான் ஏறும் அது உங்க பொண்ணுக்கு எங்க பையனால் ஏறிடுச்சு .

அதும் இல்லாம சட்டப்படி அவங்க கல்யாணம் பண்ணி இருக்காங்கங்க அதை எப்படி பிரிக்க முடியும்?என்றார் தம்புசாமி..

இதை நான் நம்பனுமா?என்று மகி கோபமாக சொல்ல...அவரின் பேச்சில் கோபம் வந்த வீரையன் தனது பேரனிடம் திரும்பியவர் அப்பு போய் ஆதாரத்தை கொண்டு வந்து காட்டுப்பா என்றார்..

மனைவியை தோளோடு அணைத்து போய் அங்கிருந்த தூணின் ஓரமாய் நிறுத்தி விட்டு நேராக பூஜை அறைக்கு சென்றவன் அங்கிருந்த கவரை எடுத்துட்டு வந்து மகியின் முன்பு நீட்டினான்.

ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்தவர் அதை வாங்கி உள்ளே இருந்ததை பிரித்து பார்க்க மதுரை ரிஜிஸ்டர் ஆபிசில் சட்டப்படி திருமணத்திற்காக பணம் கட்டிய ரசீது இருந்தது.அதும் நேற்றைய தேதியில் என்பது புரிந்தது.

அதும் மட்டும் இல்லாமல் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் அவர்களுக்கு திருமணம் நடந்ததாக உறுதி செய்து அதில் கோயிலின் அரசாங்க முத்திரையோடு லெட்டர் இருப்பதையும் பார்த்தவர் இனி ஒன்றுமே பண்ண முடியாது என்பது புரிந்து தனது தலையில் கையை வைத்துக் கொண்டார். ..

மகள் தங்கள் கௌரவத்தை கீழிறக்க மாட்டாளென்ற எண்ணத்தில் ஷமீராவின் முன்பு போய் நின்றவர் இத்தனை வருடமாக உனக்கு நான் கண்டிப்பான அப்பாவா தான் நடந்துக்கிட்டேன்.அதே ஒருபோதும் இல்லைன்னு சொல்ல மாட்டேன்...

பொம்பள புள்ளைய கண்டிப்போடு வளர்க்கணும்ங்கிற காரணத்துக்காக தான் தவிர உன் மேல பாசம் இல்லாமலில்லை.என்னுடைய கௌரவம் மானம் மரியாதை எல்லாமும் உன்னுடைய கையில் தான் அடங்கியிருக்கு.

தயவு செய்து என் பின்னாடி வந்துரு என்க,சத்தமின்றி அழுது கொண்டிருந்த ஷமீராவோ தனது தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் என்னால் முடியாது பா.இவரை விட்டு நான் வரமாட்டேனென்றாள்.

அப்படியா அப்போ எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லையா என்க?

எனக்கு என்னாலும் பரவாயில்லை அப்படி தானேப்பா.
மனசுல இவரை நினைச்சுகிட்டு மாமாகூட எப்படி வாழ முடியும்?இது மாமாவுக்கு செய்ற துரோகம் கிடையாதா சொல்லுங்க. ..

உங்க கவுரவத்துக்காக என்னோட வாழ்க்கையை என்னால் தூக்கி போட முடியாது.வாழ்வோ சாவோ எனக்கு இவர் கூட தான்.இவரை விட்டு நான் வர மாட்டேன்ப்பா என்றவள் அங்கிருந்து போய் தனது கணவனின் கையை பிடித்துக் கொண்டு நின்றாள்.

அப்போ இனிமே எங்கள் உறவு உனக்கு வேண்டாமானு இவ்வளவு நேரம் அமைதியாகயிருந்த அந்தோணி கேட்க மாமா நீங்களே சொல்லுங்க நானும் மாமாவும் சின்ன வயசுலயிருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள்.ஒன்னா வளர்ந்தவங்களுக்கு பேர் என்ன??

புருஷன் பொண்டாட்டியா?இல்ல அண்ணன் தங்கச்சியா?சொல்லுங்க என்க,தனது மருமகளின் கேள்வியோ சாட்டையடி போல் ராணிக்கும் அந்தோணிக்கும் விழுந்தது.

பதில் சொல்லுங்க மாமா?

என்னைக்காவது புருஷன் பொண்டாட்டி என்ற அர்த்தத்தில் நாங்க ரெண்டு பேரும் பேசியிருக்கிறோமா?

இன்னமும் என்னை பாபு மாமா பாப்பான்னு கூப்பிடுறாங்க..பாப்பானு கூப்பிடறதுக்கு நம்ம பக்கத்துல என்ன அர்த்தம்?

தங்கச்சியா கூப்பிடுபவரை போய் புருஷன்னு எப்படி வாழ முடியுமென்று ஷமீரா அழ,தங்கை மகளின் வார்த்தையை கேட்ட அந்தோணி எங்கள பத்தி தான் யோசிச்சோமே தவிர உங்க ரெண்டு பேர பற்றி நாங்க யோசிக்கவில்லையே என்றபோது அந்தோணியின் நம்பருக்கு வெளிநாட்டிலிருந்து அவரது மகன் போன் பண்ணினான்.

அட்டென்ட் பண்ணியவர் சொல்லு பாபு என்க,ஏம்ப்பா கொஞ்சமாச்சும் உங்களுக்கெல்லாம் அறிவு இருக்கா இல்லையா?

என்கூடயே வளர்ந்த பிள்ளையை எப்படி நான் பொண்டாட்டியா நினைச்சி வாழ முடியும்.யாரை கேட்டு ஒரு மாசத்துல கல்யாணம் ஏற்பாடு பண்ணி எனக்கு பத்திரிக்கை அனுப்பியிருக்கீங்கனு காச்சு மூச்சென்று அவன் கத்துவது ஸ்பீக்கரில் போட்டதால் மற்றவர்களுக்கும் காதில் விழுந்தது.

கூட பொறந்தாதான் தங்கச்சியா? சொல்லுங்க....சின்ன வயசுல இருந்து பாப்பா உன் பொறுப்பு உன் பொறுப்புனு மூச்சுக்கு 300 முறை சொல்லி சொல்லி வளர்த்தீங்க..

பள்ளிக்கூடம் கூட்டிட்டு போனதிலிருந்து காலேஜிற்கு ஒரு அப்பா ஸ்தானத்தில் அண்ணா ஸ்தானத்திலிருந்து நான் பாத்துக்கிட்டேன்.இப்ப திடீர்னு போய் என்னை பொண்டாட்டியா நினைனு சொன்னாக்க என்ன கதை இதெல்லாம்?

எங்க அவள்?

இந்த கல்யாணத்துக்கு எப்படி அவ ஒத்துக்கிட்டா??ஏய் ஷமீரா எங்கடி இருக்க??...அவகிட்ட போன குடுங்களீன்று கோபமாக கத்தினான்.

தம்பி அது வந்து என்று ராணி சொல்லு, ஏம்மா உனக்கும் அறிவு கிடையாதா?

உன் அண்ணன் மகள் தான் யார் இல்லைன்னு சொன்னா...எனக்கு தங்கச்சி புரியுதா.எனக்கு முறை பொண்ணெல்லாம் கிடையாது.

ஷமீராவை என் பொண்டாட்டியாக ஒருபோதும் கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாது.

வர்ற கோவத்துக்கு என்ன பண்ணுவேன்னு எனக்கு தெரியாது...நாலு பேரும் சேர்ந்து முட்டாள் தனமான முடிவு எடுத்துட்டு இருக்கீங்க.

கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு நான் சொல்லவே இல்ல.வேற பொண்ண பார்த்து நாளைக்கே ஏற்பாடு பண்ணுங்க வந்து சேருரேன்..

அதுக்குன்னு இவளை போய் கட்டி வைக்க நிக்கிறீங்களே உங்களுக்கெல்லாம் மண்டைல ஏதாச்சும் இருக்கா இல்லையானு தாயையும் பிடித்து கத்தி விட்டு போனை வைத்தான். ..

பாபு பேசியதை கேட்டு மகிக்கு ஒன்னும் சொல்ல முடியவில்லை.இருந்தாலும் தனது வரட்டு கவுரவத்தை விடாதவர் இப்ப நீ என்னதான் முடிவு எடுத்திருக்க ஷமீரா என்க...நான் இவர் கூட தான் வாழ்வேன்.

எனக்கு உங்க கூட வர இஷ்டமில்லை என்கவும் அப்போ இன்னையோட எங்களுக்கும் உனக்குமுள்ள உறவு முடிஞ்சு போச்சு.வாழ்வோ சாவோ நல்லதோ கெட்டதோ இனி எதற்கும் அப்பா அம்மான்னு எங்களை தேடி வரக்கூடாதென்றார்.

ஒரு நிமிடம் அவர்களை நிமிர்ந்து பார்த்தவளோ சரி வர மாட்டேன் என்றாள்.

அவ்வளவு தானே?

நான் சம்பாதித்து சொத்திலிருந்து இனி பத்து பைசா கூட உனக்கு கிடையாது தெரிஞ்சிக்க என்கவும் ம்ம் வேண்டாமென்றாள்.

அடியேய் ஷமீரா ஏண்டி இப்படி பேசுற அப்பா கிட்ட இப்படி எதிர்த்து பேசுற அளவுக்கு உனக்கு யாருடி தைரியத்தை கொடுத்தா?

உலகத்தில் இல்லாத காதல நீ பண்ணிட்டன்னு இன்னைக்கு எங்களையும் தூக்கி எறிஞ்சு பேசுறியாடி நீ நல்லா இருப்பியா என்று எஸ்தர் அழ...எதுக்கு தேவ இல்லாம அவளுக்கு சாபம் விடுறீங்க என்ற ராணியோ தனது அண்ணியை முறைத்து விட்டு மருமகளிடம் சென்றவர்,உங்க ரெண்டு பேர் மனசில் இருக்கிறது தெரியாம நாங்களே ஒரு கற்பனை பண்ணிக்கிட்டு கல்யாணம் ஏற்பாடு பண்ணியது முட்டாள்தனம் தான்.

உங்களையும் ஒரு வார்த்தை கேட்டுருக்கணும் என்றவர் தனது கழுத்திலிருந்த செயினை கழட்டி மருமகளுக்கு போட்டவர் என்னைக்கா இருந்தாலும் நீ எனக்கு மருமக தான் உனக்கானது தான் இது...

நீ பொறந்த அன்னைக்கு உங்க மாமா கிட்ட சொல்லி நான் செய்ய சொன்னேன்.என்னைக்கி என் வீட்டுக்கு மருமகளா வராளோ அன்னைக்கு இந்த செயினை ஷமீராவோட கழுத்துல நான் போடணும்னு...

நல்லா இரு டா...அப்பன் தான் இல்ல அத்தை உசுரோட தான் இருக்கேன். என்ன வேணுமோ போன் பண்ணு அத்தை உடனே ஓடி வரேனென்று சொல்லவும் ஷமிரவோ தனது அத்தையை கட்டிக்கொண்டு கதறி அழுதாள்.

தனது அண்ணன் மகளை கட்டிக்கொண்டு ராணியும் அழுதார்.தனது மருமகளிடம் வந்த அந்தோணி தங்கம் மன்னிச்சிடுடா.உன் மாமானே இன்னைக்கி செருப்பால் அடித்தபோல எங்களுக்கு உண்மையை புரிய வச்சிட்டான்.

அழாதடா நல்லபடியா வாழுங்களென்க அழுது கொண்டிருந்த ஷமீராவோ சற்று தள்ளி நிற்கும் கணவனை பார்க்க, மனைவியின் பார்வையில் உள்ள விஷயத்தை புரிந்தவன் நேராக அவளிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு அவர்கள் இருவரின் காலில் விழ,நல்லா இருங்கப்பானு ஆசீர்வாதம் பண்ணினார்கள்.

வீழ்ந்தேனடி...
 
Member
Joined
Nov 8, 2025
Messages
50
ரொம்ப நல்லவங்க ராணி, எஸ்தர் புத்தி பிசகி போய் பேசுது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பெத்த வயிறு ணா 🤭🤭🤭😁😁😁
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top