• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
372
வி.கே பேலஸ் கனியூர்:

தனது முன்னால் உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்தவர் சொல்லுங்கள் உங்களுக்கு என்ன உதவி வேண்டுமென்றார் தி பேமஸ் அட்வகேட் உமாமகேஸ்வரி.

அது வந்துங்க அம்மா என்று சொல்லும்போதே அந்த பெண்மணிக்கு தொண்டை அடைத்தது.அழாதீங்க மா.நீங்க என்ன விஷயம் என்று சொன்னாதான் எனக்கு தெரியும்.

வந்ததுல இருந்து இப்படி அமைதியா இருந்தீங்கன்னா நான் என்ன நினைக்கிறது?சொல்லுங்க மா
என்ன பிரச்சனை என்று உமா கேட்க, அவரிடம் அழுது கொண்டே நடந்தது எல்லாம் சொல்ல,கேட்ட உமாவுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது.

"கவலைப்படாதீங்க மா"

கண்டிப்பாக உங்க பையனை கண்டுபிடித்துவிடலாம்.நிச்சயமா உங்களுக்கான நியாயத்தை வாங்கி தரேன் என்று சொல்லும்போது தனது கையில் இருந்த பொட்டலத்தை உமாவிடம் அந்த பெண்மணி நீட்ட என்னென்னம்மா என்றார்.

இதுல நான் போட்டிருந்த தாலியும் கொஞ்சம் நஞ்ச நகைகளையும் பையன் கல்யாணம் பண்ணப் போகும் மருமகளுக்காக எங்களால முடிஞ்சதை சேர்த்து வைத்திருக்கோம் .

இதை உங்களுக்கு சம்பளமா எடுத்துக்கோங்கமா என்கவும், உமாவுக்கு கண்கள் கலங்கிவிட்டது. அய்யோ அம்மா பணத்தை பத்தி நீங்க ஒண்ணுமே கவலைப்படாதீங்க.

கண்டிப்பா இந்த கேஸை எடுத்துக்கிறேன் என்று சொன்னவர் அவர்கள் இருவரின் பாதுகாப்பை கருதி தனது தந்தை ஊரான குன்னுருக்கு அனுப்பி வைத்தவர்,அவரின் அண்ணன் சந்திரனுக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல,நான் பாத்துக்கிறேன் டா கண்ணம்மா நீ கவலைப்படாதே என்றார்.

இரவும் பகலும் இந்த கேஸிற்காக அலைந்து திரிந்த உமாவோ ஓரளவுக்கு என்ன நடந்திருக்கிறது என்பதை கணிக்க,அந்த நேரத்தில் தான் அமைச்சர் ஆடியபாதம் அரெஸ்ட் ஆன விஷயத்தை நியூசில் பார்த்தவர் நாளைக்கு கோர்ட்டில் ஆஜர் படுத்தும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று மற்ற வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்.

விடியலும் பலவிதமான திருப்பங்களோடு ஆரம்பமானது.அதிகாலையிலே எழுந்து தயாரான மனைவியை பார்த்த சுரேந்தர் போகலாமா உமா என்க,ஹம் மாமா என்றார்.

சென்னை சிபிஐ அலுவலகம்:

ஆடியபாதத்தின் முன்னால் இருக்கும் சேரில் வந்து உட்கார்ந்த செழியனோ எதுவும் கேட்காமல் கையை கட்டிக்கொண்டு அவரை தான் பார்த்தான்.நொடிகள் நிமிடங்களாக கடக்க அந்த ஏசி அறையிலும் மினிஸ்டருக்கு வேர்த்து விருவிறுத்து போனது.

இதையெல்லாம் அங்கிருந்த கேமரா மூலமாக வெளியே இருந்த போலீஸ்காரர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இவன் எப்படியும் வாயை தொரக்கமாட்டான் போலயேன்று நினைத்த மினிஸ்டரோ எதுக்கு தேவையில்லாமல் என்னை கைது பண்ணியிருக்கீங்க?

நான் ஒரு மினிஸ்டர்... மக்களுக்கு தொண்டு புரிய பிறவி எடுத்தவன் என்னை போய் இப்படி பொய் கேஸில் கைது பண்ணிருக்கீங்களே என்று அவன் சட்டைய பேட்சில் உள்ள பெயரை படித்து விட்டு,மிஸ்டர் இளஞ்செழியன், இதனால் உங்கள் மேல் மான நஷ்ட வழக்கு போடுவேனென்று பேசிக்கொண்டே போக.அப்பொழுதும் செழியன் வாயை திறக்கவே இல்லை.

இவன் அமைதியாக இருந்து நம்பகிட்ட காரியத்தை சாதிக்கலாம்னு பாக்குறான்.ஆனால் ஆணவக் கொலைனு சொல்லுறானே நம்ம வேற ஏகப்பட்ட கொலை பண்ணிருக்கோமே இவன் எந்த ரகத்தில் நம்மளை புடிச்சு வச்சிருக்கான்னு தெரியலையே என்று உள்ளுக்குள்ள யோசனையானவன், இவ்வளவு நேரம் தனது வக்கீல் தன்னை வெளியில் எடுக்க எல்லா ஏற்பாடும் பண்ணிக் கொண்டிருப்பான் என்று மிதப்பில் இருந்தாலும் செழியனை பார்த்து ஆடியபாதத்தால் பயப்படாமலும் இருக்க முடியவில்லை.

நிமிடங்களும் கடந்து சென்றிருக்க செழியனோ தன் தோரணை கொஞ்சம் கூட மாற்றவில்ல.ஆடியபாதத்திற்கோ உள்ளுக்குள் இருக்கும் பயமும் அப்பட்டமாக வெளியே தெரிய ஆரம்பித்தது.

ஊப் என்ற பெருமூச்சு விட்டு எழுந்தவன் சரிங்க மிஸ்டர் ஆடியபாதம் உங்களுக்கு சாப்பாடு வர சொல்லிருக்கேன் சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியே போக,ஹலோ தம்பி என்ன நீங்க பாட்டுல போறீங்க?

ஒன்னும் விசாரணை பண்ணலையா என்கவும்,விசாரணை முடிந்துவிட்டது என்று சிரித்துக் கொண்டே அவன் வெளியே செல்ல மினிஸ்டரோ விழி பிதுங்கி போனான்.

மறுநாள் காலை மினிஸ்டரை அழைத்துக் கொண்டு கோர்ட்டிற்கு வந்தவனை பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொள்ள,எல்லாருக்கும் வணக்கம்.இப்போதைக்கு உங்கள் கேள்விக்கான பதிலை என்னால சொல்ல முடியாது.

"கேஸ் கோர்ட்டுக்கு வந்துருச்சு"

சோ...என்னன்னு தெரிந்து கொள்ள நீங்க உள்ளே வந்தால் இன்ட்ரஸ்டிங்கான விஷயங்கள் உங்களுக்கு கிடைக்கும்.நான் சொல்றதை விட நீங்க நேரிலேயே பார்த்து தெரிஞ்சுக்கலாம்.

எது உங்களுக்கு பெட்டர்ன்னு நீங்களே சூஸ் பண்ணிக் கொள்ளுங்கள் என்று சிரித்துக் கொண்டே செழியன் சொல்ல, அவனின் அணுகுமுறை பத்திரிகையாளர்களுக்கும் பிடித்து விட்டது.

வழக்கமாக போலீஸ்காரர்களிடம் கேள்வி கேட்டால் அவர்கள் எறிந்து எறிந்து விழுவார்கள்.சரியாக பதில் சொல்ல மாட்டார்கள்.அவர்களில் இவன் வித்தியாசமாக இருக்கவும் அவர்களாலும் மறக்க முடியவில்லை ஓகே சார் என்றனர்.

குட் இப்ப வழி விடுறீங்களா நான் உள்ள போகிறேன் என்கவும் அவர்களும் விலகிக் கொள்ள மினிஸ்டரை அழைத்துக்கொண்டு போலீஸ் பாதுகாப்போடு கோர்ட்டின் உள்ளே சென்றான்.

வனிச்சூர்:

எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த தம்புசாமி இப்படி பேயறைந்து போல எதுக்கு இருக்குறீங்க?போங்க போய் ராவுக்கு சோத்தை ஆக்குங்கள்.நடந்ததை இனி மாற்ற முடியாது.நடக்கப் போவது நல்லதாக இருக்கட்டும் என்று சொல்லவும் பெண்கள் சமையல் அறைக்குள் போக ரியாவும் ஜனனியும் ஷமீராவை பார்க்க..

கண்மணியும் கவிதாவும் அவளை பேச வைக்க முயற்சி பண்ணி தோல்வியில் முடிந்து போக,எம்மாடி உன் புருஷன் வந்த பிறகு உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேப்பான் டி.எங்களை விட்டுரு தாயே மயக்கமே வருது என்று சொல்லவும் அவள் பேசிய தோரணையில் ஜனனிக்கும் ரியாவுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

அப்பொழுது கபிலனின் போனுக்கு கால் வர அட்டென்ட் பண்ணியவன் சொல்லு ருத்ரா எங்க,டேய் நான் வனிச்சூருக்கு வந்துட்டேன் டா.இங்க இருந்து எப்படி வரணும் டா.

வெற்றி உங்களுக்காக அந்த பஸ் ஸ்டாண்ட்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான் டா,ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு அவனே கால் பண்ணுவான் என்று சொல்லும்போது ருத்ரனின் போனிற்கு வெற்றியிடமிருந்து கால் வர,கபி அவன் தான் போன் பண்றான் நான் வைக்கிறேன் டா என்று அவனை கட் பண்ண சொல்லிவிட்டு வெற்றியின் கால் அட்டென்ட் பண்ணியவன் டேய் எங்கடா இருக்க என்க,பஸ் ஸ்டாண்ட் கிட்ட தான் நிக்கிறேன் பாருடா.

உன் காரை நான் பார்த்து விட்டேன் என்கவும்,நான் எந்த காரில் வரேன்னு உன்கிட்ட சொல்லவே இல்லையேடா என்கவும்,ஆமா இது பெரிய கம்ப சூத்திரம்.நீ வீட்ல இருந்து கிளம்பிய உடனே விசாரிச்சிட்டேனென்று வெற்றி சிரித்துக் கொண்டே சொன்னான்.

பின்னர் பஸ் ஸ்டாண்டில் திரும்பி பார்க்க அங்கே பைக்கில் இருந்து வெற்றி கையசைத்தான்.டேய் வெற்றி அங்க இருக்கான் காரை திருப்பு என்று சொல்லிக்கொண்டு உள்ளே உட்கார தீபனும் வெற்றியின் வண்டியை நோக்கி வந்தான்.

காரில் இருந்து இறங்கிய இருவரும் வெற்றியின் இரண்டு கைகளையும் பிடித்துக் கொண்டு எப்படி இருக்க என்று பரஸ்பரம் நலம் விசாரித்தனர்.

சரி எதா இருந்தாலும் அங்கு வீட்டுல போய் பேசிக்கலாம் வாங்க டா என்க,டேய் என்ன விஷயம்?நேர்ல வா பேசிக்கலாம்னு சொல்லிட்டு இப்போது வீட்டிற்கு போகலாம் என்கிறியே என்று ருத்ரன் முறைக்க...

என்னை பாலோவ் பண்ணி வாங்க டா என்று சிரிக்க,போலீஸ்கார புத்தியை காட்டுறியா டா.இனி வாயை திறக்க மாட்டியே என்று தீபன் முறைக்க,என்ன பண்றது பங்காளி,போலிஸ் ரத்தம் அப்படி என்று சிரித்துக் கொண்டு வெற்றி முன்னே போக அவன் வண்டியை பாலோ பண்ணிக் கொண்டே இவனுங்களும் வந்தனர்.

அரை மணி நேர பயணத்தில் அந்த பெரிய வீட்டின் முன்னால் வந்து வண்டியை நிறுத்திய வெற்றி காரை அந்த பக்கம் நிறுத்துடா என்கவும் அதே போல் நிறுத்தி விட்டு இருவரும் கீழே இறங்கியவர்கள் ஊர் ரொம்ப அழகா இருக்குடா.

இந்த நைட்லயும் சூப்பரா இருக்கே, பகல்ல பார்க்க எப்படி இருக்கும் என்கவும்,எல்லாம் நாளைக்கு பார்த்து தெரிஞ்சுக்கலாம்.இப்போது வாங்க டா என்று சொல்ல,இது யாரு வீடு டா என்றான்.

எல்லாம் நமக்கு ரொம்ப வேண்டியவங்க வீடு தான் டா.உன்னோட தோரணையே சரியில்லடா எதோ அக்யூஸ்ட் கூட்டிட்டு போற போலயே இருக்கே என்று முறைக்க,ஆமாண்டா ரெண்டு பேரும் அப்படி தான்டா இருக்கீங்க என்று சிரிக்க...

எட்டி மிதிச்சேன் என்ன நடக்கும்னு தெரியாது என்று ருத்ரன் சொல்ல,டேய் நான் போலீஸ் டா என்கவும்,ஓஓஓ இருந்துட்டு போ டா.ஓரே ஒரு ஊசி குத்தினேன் தவக்களை போல படுத்துடுவடான்னு ருத்ரன் முறைக்க,சரி சரி உன் பாசத்தை ரொம்ப காட்ட வேண்டாம் உள்ள வாங்கடா என்று அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் போனான்.

காலடி சத்தம் கேட்டு அங்கிருந்த ஆண்களோ வாசல் பக்கம் திரும்பி பார்க்க,வம்சியின் சாயலில் நிற்கும் உருவத்தை பார்த்து அதிர்ந்து போய் எழுந்து நின்றனர்.

தங்களைப் பார்த்து அதிர்ந்து போனவர்களை கண்டு ருத்ரனும் தீபனும் யார்ரா இவங்க?எதுக்குடா எங்களை பார்த்து இப்படி ஷாக் ஆகுறாங்க என்க...உள்ள வாங்கடா விஷயத்தை சொல்றேன் என்று இருவரையும் அழைச்சிட்டு போனவன் சோபாவுல உட்காருங்கள் என்க...

ருத்ரனுக்கு அவர்களை பார்த்தவுடன் உள்ளுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு வந்தது.புதிய மனிதர்கள் போல் தெரியவில்லை.

அவர்களை பார்த்து இருவரும் வணக்கம் சொல்ல,ருத்ரனின் கையை பிடித்த வெற்றி,வீரையன் தாத்தாவிடம் போனவன் அவர் கையைப் பிடித்து அதில் அவன் கையை வைத்தவன் உங்களுடைய வம்சம் தாத்தா என்கவும், அதில் சுய உணர்வுக்கு வந்தவர் ஐயோ அப்பு என்று அவனை கட்டிக்கொண்டு கதறி அழுக,தீபனுக்கும் ருத்ரனுக்கும் இங்கு என்னடா நடக்குது என்று ஒன்னும் புரியவில்லை.

ஆனால் தன்னை கட்டிக் கொண்ட பெரியவரின் அழுகையை தாங்க முடியாமல் தாத்தா எதுக்கு அழறீங்கள் என்க,அய்யா வம்சிஇஇஇ என வீரையன் தாத்தாவின் சத்தத்தில் உள்ளே இருந்த பெண்களும் பதறிக்கொண்டு ஹாலுக்கு வந்தனர்..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
372
ருத்ரனை பார்த்த வீராயியும் சுமதியும் வம்சி என்க,தனது தந்தையின் பெயரை கேட்டு ருத்ரனும் வேகமாக திரும்பிப் பார்க்க,பாட்டிகள் இருவரும் அவனிடம் வந்து அய்யா வம்சி என்று அவனின் இரண்டு பக்க தோளில் சாய்ந்து அழுதனர்.

என்னடா நடக்குது என்று அவன் பார்க்க வெற்றியோ கண்ணை மூடி கொஞ்சம் அமைதியாக இரு டா என்றான்.

எம்மா இப்படி ஆளுக்கு ஆள் அழுதுகிட்டே இருந்தால் என்னதான் அர்த்தம்?

வந்த புள்ளைக்கு ஒரு வாய் தண்ணி கொடுக்காம இப்படி பண்ணிட்டு இருக்கீங்களா என்று தம்புசாமி சத்தம் போட,அழுது கொண்டிருந்த இரண்டு பாட்டியும் வம்சி போல இருக்கிறவனின் கன்னத்தைக் கிள்ளி முத்தம் கொடுத்தவர்கள் வந்துட்டியாய்யா என்றனர்.

வெற்றி முதல்ல இங்க என்ன நடக்குது சொல்லு?எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருக்கு.இந்த வீட்டுக்குள்ள வரும்போது ஏதோ எனக்கு பழக்கப்பட்ட இடம் போலையும்,புதுசா வர போல ஒரு எண்ணமே வரல டா என்று ருத்ரன் சொல்ல,அந்த விஷயமா தான் டா உன்னை வரச் சொல்லியிருக்கேன்.

முதல்ல உக்காருடா என்க, அங்கிருந்தவர்களை ருத்ரன் பார்க்க, சொல்கிறேன் என்கும் வெற்றியின் மேல் இருந்த நம்பிக்கையில் இருவரும் எதுவும் சொல்லாமல் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்தனர்.

ஏன் ருத்ரா..வம்சி அங்கிளோட சொந்த ஊர் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா என்கவும்,என்னடா சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்கிற என்றான்.டேய் காரணமா தான் கேட்கிறேன் உனக்கு தெரிஞ்சதை சொல்லு என்றான்.

வெற்றியைப் பார்த்து முறைத்தவன் அப்பா டெல்லியில் தான் இருந்தாங்க. சென்னையில படிச்சதாக சொல்லிருக்காங்க.போஸ்டிங்காக டெல்லிக்கு வந்தோமென்று சொன்னது எனக்கு ஞாபகம் இருக்குடா,அப்போ மே பி சொந்த ஊரு சென்னையா தான் இருக்கும்.

பாயல் சித்தி கிட்ட கேட்டால் அது கன்ஃபார்ம் ஆகிவிடுமென ருத்ரன் சொல்ல,ஒரு நிமிஷம் என்று அங்கிருந்து போனவன் சுவற்றில் மாட்டியிருந்த ஒரு போட்டோவை எடுத்துட்டு வந்து ருத்ரனிடம் நீட்ட, என்னடா என்றான்.

வாங்கிப் பாரு என்கவும் அதை வாங்கியவனோ அந்த போட்டோவை பார்த்தவுடனே ஏதோ பெரிய குடும்பம் போல தெரிந்தது.ஒவ்வொரு முகமாக பார்த்துக் கொண்டே வந்தவன் அதில் தனது தந்தையும் இருப்பதை பார்த்து அதிர்ந்து போய் வெற்றியை பார்த்தவன்,டேய் இது அப்பாடா என்க...

ஹம்...

"அங்கிள் தான் "

அப்புறம் ருத்ரா உன்னை நான் வர சொன்னதுக்கு காரணம் சில விஷயங்களை நீ தெரிஞ்சுக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றவன்,பின்னர் வம்சிக்கும் இந்த வீட்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி சொல்லியவன் ஒவ்வொருவரையும் என்ன உறவு முறை என்று அறிமுகப்படுத்த கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை.

தனக்கு இவ்வளவு சொந்தபந்தம் இருக்கு என்று தெரியாமல் இத்தனை வருடம் அனாதை போல் தானும் தனது தங்கையும் வளர்ந்திருக்கோமே என்பதை நினைத்த ருத்ரனுக்கு கண்ணில் இருந்து கண்ணீரோ
தாரை தாரையாக வழிந்து ஓடியது.

அப்பொழுது அவனிடம் வந்த செல்லதுரை ஐயா இந்த சித்தப்பனை உனக்கு ஞாபகம் இல்லையா என்க, அவரின் முகத்தை பார்த்த ருத்ரனும் யோசித்துப் பார்க்க அவரைப் பார்த்தது போல் அவனுக்கு எந்த நினைவுகளும் வரவில்லை.

எனக்கு ஞாபகம் இல்லை.நீங்க சார் என்று சொல்ல வந்தவன் இல்லைங்கப்பா என்க,இப்ப என்ன சொல்லிக் கூப்பிட்ட என்று அதிர்ச்சியா கேட்க,அப்பா என்று சொன்னேன் என்கவும் இன்னொருவாட்டி சொல்லுயா என்று அவனை அணைத்துக் கொண்டு கதறி அழுதார்.

தீபனுக்கோ மனதிற்கு ஒரு பக்கம் வேதனையாக இருந்தது.நமக்கும் இப்படி எங்கேயாவது ஒரு மூலையில் சொந்த பந்தம் இருக்காதா என்று நினைத்துக் கொண்டான்.

அவனின் முகத்தை வைத்து அங்கிருந்தவர்களோ என்ன நினைக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டு,அய்யா தீபா இதுதான் உன்னோட சித்தப்பன் சித்தி என்று கண்மணியின் அப்பாவையும் பெரியப்பாவையும் காட்டி சொல்ல, இதுவரை இருந்த மனநிலை மாறி தனக்கும் உறவு கிடைத்துவிட்டது என்று சந்தோஷத்தில் சிரித்தவனுக்கும் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து ஓடியது

எம்மா பேசுனது போதும் வந்த பிள்ளைக்கு முதல்ல ஒரு வாய் சோத்த போடுங்கள் என்று சொல்லவும், மற்றவர்களும் போய் சாப்பிட உட்கார, நீங்க போங்க...

நாங்கள் பேசிட்டு வரோமென்றவன் வெற்றியிடம் சில விஷயங்களை கேட்டு தெரிந்து கொள்ள,அவனுக்கோ தனது தம்பியை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தது.

தற்பொழுது செழியன் போயிருக்கும் காரியத்தை சொல்லியவன் வெயிட் பண்ணுடா நாளைக்கு இல்லை நாளைன்னைக்கு வந்துடுவான் என்க, சரி டா என்றான்.

அந்த வீட்டை சுற்றி பார்த்த இருவரும் பழங்காலத்து வீடு என்றாலும் ரொம்ப அழகா இருக்கு என்று சொல்லிக்கொண்டு சுவற்றில் இருந்த அவர்களின் குடும்ப புகைப்படத்தை எல்லாம் பார்த்தனர்.

ஐயா சாப்பிடுங்க பிறகு பார்க்கலாம் என்று வீராயி கூப்பிட இருவரும் போய் உட்காரவும் அப்பொழுது ஷமீரா ஹாட் பாக்ஸை எடுத்துட்டு வர எஸ்தரின் முகஜாடையில் இருப்பவளை பார்த்து தீபனும் ருத்ரனும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பின்னர் அவர்கள் குடும்பக் கதைகளை பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர். சரிப்பா நேரம் ஆயிடுச்சு,படுங்க காலையில் பேசிக்கலாம் என்று சொல்லிக்கொண்டு தம்புசாமி தாத்தா வீட்டினர் அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

இவனுங்க நண்பர்கள் நால்வரும் மொட்டை மாடிக்கு வந்தவர்கள் மேலும் சில விஷயங்களை பேசிக் கொண்டிருக்கும் போது,மச்சான் எனக்கு ஒரு விஷயம் தெரியனும் என்று ருத்ரன் கேட்கவும் என்னடா என்றான்.

செழியனோட ஒய்ஃப் என்க,ஷமீரா டா என்கவும்,கிறிஸ்டியன் பொண்ணு போல என்று ருத்ரன் கேட்க,ஆமாடா.
உன் தம்பி வீடு தேடி போய் கூப்பிட்டு வந்து சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்றான்.

அப்படியா என்றவன் என்ன ஊர் டா அந்த பொண்ணு என்றான்.சோழனூர் டா என வெற்றி சொல்லவும் என்னடா சொல்ற என்று அதிர்வாய் கேட்க,இதுல ஷாக்காக என்னடா இருக்கு?

உன் தம்பி எப்படி இங்க இருந்து அவ்வளவு தூரத்துல காதலிச்சானு தெரியலடா?அது அவனா சொல்ற வரைக்கும் நமக்கு தெரியாது என்று வெற்றி சொல்ல தீபனுக்கும் ருத்ரனுக்கும் அப்போ எஸ்தருக்கும் ஷமீராவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா என்று சந்தேகம் வந்தது.

இருவரின் முகத்தைப் பார்த்த கபிலன் என்னடா யோசிக்கிறீங்க?ஏதாச்சும் பிரச்சினையா என்க,ச்சே ச்சே அப்படி எல்லாம் ஒன்னும் இல்லடா.செழியன் காதலை பற்றி யோசிக்கிறோம் என்று பேச்சை மாற்றினர்.சரிடா போய் படுக்கலாம் என்று படியிலிருந்து கீழே வந்து அவரவர் அறைக்குள் சென்றனர்.

சென்னை ஹை கோர்ட்:

கோர்ட்டின் உள்ளே உட்கார்ந்திருந்த மற்ற வக்கீல்களோ ஆடியபாதத்திற்கு எதிராக யாரு தான் வாதாட போறாங்கன்னு தெரியலையே?

அப்படி எந்த கேசா இருக்கும் என்று பேசிக் கொண்டிருக்க,அதில் ஒருவரோ யார் வந்தால் என்ன கொஞ்ச நஞ்சமா பாவம் பண்ணிருக்கான்.இதுல எந்த கேஸோ யாருக்கு தெரியும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

முதல் கேசாக ஆடியபாதத்தின் கேஸ் என்பதால் அதற்காக தனது ஜூனியர்களுடன் டிஸ்கஷன் பண்ணிக் கொண்டிருந்த உமா டைம் ஆகிவிட்டது தெரிந்து கோர்ட்டுக்குள் வந்தவர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள,அவரைப் பார்த்த அங்கிருந்த மற்ற வக்கில்களோ நிச்சயமா ஆடியபாதத்துக்கு தண்டனை உறுதி என்று சொல்லிக் கொண்டனர்.

அப்பொழுது ஜட்ஜ் வர எழுந்து நின்று மரியாதை நிமித்தமாக வணக்கம் சொல்ல அவரும் தலையசைத்து விட்டு உட்கார்ந்தவர் தனக்கு முன்னால் இருந்த கேஸ் டீட்டையல்ஸை பிரித்து படித்துவிட்டு வாதத்தை ஆரம்பிக்க சொன்னார்.

ஆடியபாதத்தின் வக்கீலோ உமாவை பார்த்தவுடனே முடிவு பண்ணி விட்டான் தண்டனை உறுதி என்பதை... இருந்தாலும் பேருக்காவது வாதாட வேண்டுமே...

இல்லையென்றால் தன்னை குடும்பத்தோடு ஆடியபாதம் அழித்து விடுவான் என்பதை நினைத்தார், அப்பனே முருகா நீ தான் என்னை காப்பாத்தணும்.

பணத்துக்காக ஆசைப்பட்டு இந்த ஆளுக்காக எத்தனையோ கேஸை ஒன்னும் இல்லாம பண்ணியிருக்கிறேன்.ஆனா இந்த உமா மேடத்து கிட்ட என்னால ஜெயிக்க முடியாது.கொஞ்சம் கருணை காட்டுப்பா என்று வேண்டிக் கொண்டான்.

முதலில் ஆடியபாதத்தை அழைக்க கூண்டுக்குள் வந்தான்.அவனை பார்த்த உமாவோ எழுந்து வந்தவர் உங்க பேர் என்று கேட்க,ஏன் என் பெயர் உங்களுக்கு தெரியாதா என்று திமிராக ஆடியபாதம் கேட்கவும்,மிஸ்டர் ஆடியபாதம் வக்கீல் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது உங்களோட கடமை.

இப்ப நீங்க ஒரு குற்றவாளி கூண்டில் தான் இருக்கீங்க அது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று கண்டன பார்வையில் ஜட்ஜ் சொல்ல, ஆடியபாதத்தால் ஒன்றும் சொல்ல முடியவில்லை

உங்களுடைய பெயர் என்ன என்று உமா மீண்டும் கேட்க,என்னுடைய பெயர் மினிஸ்டர் ஆடியபாதம் என்றான். அதைக் கேட்டு மௌனமாக சிரித்த உமா,மிஸ்டர் ஆடியபாதம் நீங்க மினிஸ்டரா இல்லை எம்எல்ஏ வா என்பது நான் கேட்கல.

உங்களோட பெயர் என்ன அதை மட்டும் தான் கேட்டேன்.சரி அதை விடுங்க எந்த முகாந்திரத்தில் உங்களை அரெஸ்ட் பண்ணி இருக்காங்கன்னு தெரியுமா என்கவும்,யாரோ எதிர்க்கட்சிக்காரர்கள் என் மேல பொய் பழி போட்டுருக்காங்க..

அது தெரியாம இந்த போலீஸ்காரர் என்னை அரஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்துட்டாரு.உண்மை கண்டிப்பாக வெல்லும் நான் குற்றமற்றவன் என்பது மக்களுக்கு சீக்கிரம் தெரியும் என்றான்.

ஓகே என்றவர் தனது கையில் இருந்த ஒரு கவரை ஜட்ஜிடம் கொடுத்து படிக்க சொல்லுமாறு அங்கிருந்த ரைட்டரிடம் உமா நீட்ட,அவரும் அதை வாங்கி ஜட்ஜ் முன்னால் வைத்தார்.

அதை எடுத்து படித்துப் பார்த்த ஜட்ஜ் ம் என்று வாதத்தை தொடங்க சொல்லவும் மிஸ்டர் ஆடியபாதம் உங்களுக்கு எத்தனை பசங்கள் என்று கேட்க,எனக்கு ஒரு பொண்ணு இரண்டு பையன் என்றார்.

மூவருக்கும் கல்யாணம் ஆகிவிட்டதா என்கவும்,என்னோட பையன் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.என் பொண்ணுக்கு இன்னும் ஆகலை.மேல் படிப்புக்காக ஃபாரின்ல இருக்காங்க என்றான்.

ஓ அப்படியா!!

உங்க பொண்ணு என்ன படிக்கிறாங்க என்கவும்,அவனோ சரளமாக பொய்யை அள்ளி விட்டான்.அப்படியா உங்க பொண்ணுக்கு ஒரு கால் பண்ண முடியுமா என்க..

எதுக்கு சம்பந்தமே இல்லாம என்னோட பொண்ண பற்றி கேக்குறீங்க?

கல்யாணம் ஆகாத வயசு பொண்ணு.நாளபின்ன கல்யாண பேச்சு வரும் போது இதைப்போல கோர்டில் என் பொண்ணை பற்றிய கதை ஓடியது தெரிந்தால் மாப்பிள்ளை வீட்டில் என்ன நினைப்பார்கள்?

ஊர் உலகத்தில் பெண்கள் மேல் அபாண்டமாக பழி போடும் ஆட்கள் இருப்பது உங்களுக்கு தெரியாதுங்களா வக்கீலம்மா என்று கொஞ்சம் கடுப்பாக கேட்க,காரணம் இருக்கு.நீங்க கால் பண்ணுங்க நான் சொல்கிறேன் என்கவும்,என்கிட்ட போன் இல்லையே என்றான்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top