• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
370
மகி நினைவுகள்:

"ஐயோ அம்மா..!!

"அப்படி எல்லாம் பண்ணாத மா"

தயவு செய்து அதை கீழே போடுமா என்று மகி பதற,அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கும் மானசாவிற்கு மாமியாரின் முழு குணத்தையும் செயல்களையும் பார்த்து கண்ணீர் வடிந்து ஓடியது.

பின்னர் ஒரு முடிவு எடுத்தவள் இப்போது உங்களுக்கு என்ன வேண்டும்,நீங்க ஆசைப்பட்ட போல உங்க அண்ணனோட பொண்ணை தானே கல்யாணம் பண்ணிக்கணும் தாராளமா அவர் பண்ணி பாரு போதுமா என்று கத்த...

ஏய்...!

நீ யாருடி அதை சொல்வது???

என் பையனுக்கு யாரை கல்யாணம் பண்ணி வைக்கணும் என்பதை நான் முடிவு பண்ணுவேன் டி என்று மேரி ஆங்காரமாக சொல்ல,அம்மா தயவு செய்து இப்படி பண்ணாதம்மா என்று மகி கதறினான்.

இங்க பாரு மகி என் பொண்ணோட வாழ்க்கை உன்னோட முடிவுல தான் இருக்கு.என் அண்ணன் பையன் ரொம்ப நல்லவன்.என் பொண்ணை மனசார நேசிக்கிறான்.

அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறது அதை கெடுக்கிறதுக்கு நீ முயற்சி பண்ணாதே,உன் கூட பிறந்த தங்கச்சி அவ வாழ்க்கையை பற்றி முடிவு பண்ணுடா.சுயநலமா இருக்காதே என்க,தங்கையின் பாசத்தை பகடைக்காயாக மேரி மாற்ற,மகியோ இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தான்.

புகழ் நீங்க எஸ்தரை கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள் இது நம்ம வயித்துல இருக்குற குழந்தை மேல சத்தியம் என்று மகியின் கையை பிடித்து தனது வயிற்றின் மேல் வைத்துக்கொண்டு மானசா சொல்லும்போது இருவருக்குமே அழுகை வந்தது.

நீயும் ஏண்டி இப்படி என்ன கஷ்டப் படுத்துற என்று மகி அழுக,அந்த ஒரு முடிவால் நம்ம மூணு பேரும் நிம்மதியா இருக்க முடியுமென ரூமுக்குள் போய் கதவை சாற்றிக் கொண்டாள்.

மானசாவின் பதிலை கேட்டு மேரியோ மனதிற்குள் துள்ளி குதித்தார்.

கடைசி வரையில் நம்ப ராஜ்யம் நடக்கும்.இந்த விஷயத்தை ஆறப்போட கூடாது.சூட்டோட சூடு கல்யாணத்தை முடித்து விடணும் என்று மனதிற்கு நினைத்தவர் பின்னரே அருவாள்மனையை கீழே போட வேகமாய் போன மகி அதை எடுத்து ஒளிய வைத்தவர் ஏம்மா இப்படி பண்ற என்று தாயை பிடித்துக் கொண்டு அழுதார்.

மகன் அழுவது ஒரு பக்கம் வலியாக இருந்தாலும் இதில் தனது கௌரவமும் இருப்பதை நினைத்தவர் மகனின் ஆசைக்கு முன் தனது சுய கௌரவம் ரொம்ப முக்கியம் என்பதே மேரிக்கு முதலாவதாக இருந்தது.

சரி...பத்து நாள் லீவு எடுத்துட்டு நீ வா. நான் இப்படியே ஊருக்கு கிளம்புறேன் என்றவர் அதன் பின்னர் ஒரு நிமிடம் கூட அங்கு இருக்கவில்லை.பஸ்ஸை பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார்.

இரண்டு நாட்கள் வரை மானசாவும் மகியும் எந்த வார்த்தையும் பேசிக்கவில்லை.குழந்தையின் மேல் சத்தியம் பண்ணியதை மறுத்தால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவனின் மனதை மாற்றியவள் தங்கையின் திருமணத்திற்காக ஊருக்கு அனுப்பி வைத்தாள்.

மனமே இல்லாமல் சோழனூருக்கு வந்த மகி கல்யாண விஷயத்தை பார்க்கலானான்.

ஊருக்கு வந்த மறுநாளே தனது கணவரோடு கிளம்பிய மேரியோ பூம்புகாரில் இருக்கும் தனது பிறந்து விட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

அவளின் அண்ணன் பெஞ்சமின் ஊர் கணக்கு பிள்ளை அவரின் மனைவியோ ஜென்சி.அவர்களுக்கு எஸ்தர் அந்தோணி என்று இரண்டு பிள்ளைகள். விவசாய குடும்பம் என்றாலும் தூரத்தில் உறவின் மூலமாக ஆபிரகாமின் சம்பந்தம் வரவும் சாராளை கட்டிக் கொடுத்தனர்.

"சாராளுக்கோ தலைகணம் அதிகமானது".

தன் புருஷன் கவர்மெண்ட் வேலையில் இருப்பதாகவும் சொத்து பத்து உள்ள வீட்டில் மூத்த மருமகளாக போனதை நினைத்து கர்வத்துடன் வலம் வர இது ஜென்சிக்கு சிறிதும் பிடிக்காமல் போய்விட்டது

எஸ்தர் பருவமானதிலிருந்து தனது மகனுக்கு தான் பொண்ணை கொடுக்கணும் என்று பெஞ்சமினிடம் சாராள் சொல்லும் போதெல்லாம் ஜென்சிக்கு அதைக் கேட்க எட்டிக்காயை போல் கசந்தது.

நாத்தனார் இருக்கும் வரை எதுவும் சொல்லாதவர் அவர் போன பிறகு கணவனிடம் கடிந்து கொள்ளுவார்.எந்த காரணத்தை கொண்டும் என் பொண்ணை உன் தங்கச்சிக்கு கொடுக்க மாட்டேன் என்று சண்டை போடுவார் ..

அண்ணியின் குணத்தை ஓரளவு கணித்த மேரியோ காயை எஸ்தரிடம் நகர்த்த ஆரம்பித்தாள்.

அந்தோணியும் படித்து முடித்து கவர்மெண்ட் வேலைக்கு முயல,உணவு நுகர்பொருள் அலுவலகத்தில் வேலை கிடைக்க முதல் போஸ்டிங்கோ சோழனூரில் கிடைக்கவும் அங்கு ஜென்சியின் தங்கை சாரதான்சி இருப்பதால் அவர் வீட்டில் தங்கி கொண்டு மகனை வேலைக்கு போக சொல்ல...

பருவ வயதில் இருந்த ராணிக்கு அந்தோணியின் அடக்கமான குணமும் பெரியவர்களை மதிக்கம் பாங்கும் நிதானமான பேச்சும் மிகவும் பிடித்து விட தனது தாய் மாமன் மகன் மேல் ஆசையை வளர்த்தவள் அதை அவரிடமும் வெளிப்படையாக சொல்ல அத்தை மகள் என்ற எண்ணத்தில் ராணியையும் அந்தோணிக்கும் பிடித்து விட்டது.

கல்யாணம் என்று வரும்போது அந்தோணியை காதலிப்பதை சொல்ல, ஏற்கனவே அண்ணன் மகனுக்கு தான் பொண்ணு கொடுக்க நினைத்து இருந்ததால் இந்த விஷயம் மேரிக்கும் சம்மதமானது.

பின்னர் அந்தோணியிடமே எஸ்தரை மகிக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் வீட்டில் பேசி சம்மதம் வாங்கினால் மட்டுமே ராணியை கல்யாணம் பண்ணிக்க தான் சம்மதிப்பதாக மேரி குண்டை தூக்கிப்போட,காதல் மயக்கத்தில் இருந்த அந்தோணியும் அதற்கு சரி என்று தலையாட்டி விட்டான்.

மதுரை:

அந்த பெரிய வீட்டின் முன்னிருந்த தோட்டத்தில் அங்கங்கே கட்சிக்காரர்கள் நின்று பேசிக் கொண்டிருக்க இரண்டு மூன்றென கார்களும் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தது.

என்ன நடக்க போகுதுனு இங்க இருக்கிறவங்களுக்கு ஒன்னும் தெரியாது என்று கான்ஸ்டபிள் கண்ணப்பன் சொல்ல,நல்லது.

இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன ஆட்டம் ஆடுவார்களோ பாக்கலாம் என்று செழியன் சொல்ல,அதை கேட்ட கான்ஸ்டபிள் இருவரும் சத்தம் இல்லாமல் வாயை மூடி சிரித்துக்கொண்டே அவனின் பின்னாடியே சென்றார்கள்.

மினிஸ்டர் வீடு என்பதால் போலீஸ் வந்துட்டு போவது என்றும் சாதாரண விஷயம் தானே என்று அவர்கள் எல்லாம் இருக்க நேராக வீட்டிற்குள் போக, அமைச்சர் ஆடியபாதமோ பூஜை அறையில் இருப்பது மணி சத்தத்தின் மூலமாக தெரிந்தது.

செய்வதெல்லாம் கேப்மாரி தனம்.இவனுக்கு பூஜை ஒன்னு தான் கேடு என்று மூவரும் மனதிற்குள் நினைத்துக் கொள்ள வீட்டில் இருந்தவர்களோ போலீஸ் வந்ததை பார்த்து வேலை விஷயமாக ஏதாவது இருக்கும் என்று நினைத்து விட்டு, பூஜையறையில் இருக்காங்க கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க என்று ஆடியபாதத்தின் பி ஏ சொல்ல செழியனோ அவனை ஒரு பார்வை பார்க்கவும் அமைதியாக சற்று தள்ளிப் போய் நின்று கொண்டான்.

நிதானமாக பூஜையை முடித்துவிட்டு நெற்றியில் மிகப்பெரிய பட்டையோடு வெளியே வந்த ஆடியபாதமோ அங்கே ஹாலில் இருந்த செழியனையும் இரண்டு கான்ஸ்டபிள்ஸையும் பார்த்தவர் மூவரும் புதிதாக இருக்கவும் எந்த ஸ்டேஷன்ல இருக்கீங்க?

"பார்த்ததே இல்லையே"

புதுசா நம்ப ஊருக்கு எஸ் பி வந்துருக்கிறானா?நமக்கு தெரியாம எப்படி வர முடியும் என்று யோசனையோடு அங்கு வந்தவர் வாங்க சார் டீ காபி குடிப்பீங்களா என்று கேட்டுக் கொண்டு அங்கிருந்து சோபாவில் உட்காரும் போது அவரைப் பார்த்த செழியனோ பக்கத்திலிருந்த கான்ஸ்டபிள் கண்ணப்பனை பார்க்க சரிங்க சார் என்றவர் தன்னிடம் இருந்த லெட்டரை செழியனின் முன்பு நீட்டினார்.

அதை வாங்கியவன் மிஸ்டர் ஆடியபாதம் உங்களுக்கான அரஸ்ட் வாரண்ட் என்க,இது என்னப்பா ஜோக் என்று சிரித்துக் கொண்டிருந்த ஆடியபாதத்தை பார்த்தவன் நீங்களா வந்திங்கனாக்க நல்லது.

நானே அழைத்திட்டு போனால் அது நல்லா இருக்குமா நல்லா இருக்காதா என்று நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்கும் செழியனின் குரலில் உள்ள உறுதியோ இவன் அடிச்சு இழுத்துட்டு போவான் என்பதை ஆடியபாதத்துக்கு சொல்ல,அந்த அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியோ ஒரு நொடி அவனின் கம்பீரத்தை பார்த்து அரண்டு தான் போனான்.

என்ன சார்?

யார் நீங்க?

இஷ்டத்துக்கு வந்து பேசிட்டு இருக்கீங்களே என்று பிஏவும் வீட்டில் இருந்தவர்களும் தாம் தூமென்று குதிக்க,இங்கிலீஷ் படிக்க தெரியுமா என்று ஆடியபாதத்தின் பிஏவிடம் கேட்க,ஐ ஆம் கோல்ட் மெடல் லிஸ்ட் என்றவரிடம் லெட்டரை கொடுத்து செழியன் படிக்க சொன்னான்.

அதை வாங்கி அவசர அவசரமாக பிரித்து படித்தவனோ விழி பிதுங்கிப் போய் நிற்க,யோவ் என்ன பேய் முழி முழிக்கிற என்று எம்.பி கத்த,சார் டில்லியில் இருந்து உங்களை அரெஸ்ட் பண்ண வாரண்ட் அனுப்பிருக்காங்க என்கவும்,என்னாஆஆ டில்லியில் இருந்தா என்று ஆடியபாதம் அதிர்ந்தான்.

அண்ணா எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க என்று செழியன் கேட்க வாங்க சார் என்று ஆடியபாதத்தை கூப்பிட,என்னோட வக்கீல் கிட்ட நான் பேசணும் என்றான்.

அதை எல்லாம் நீங்க ஸ்டேஷன்ல வந்து பேசிக்குங்க இப்போ நீங்களே வந்தால் நல்லது என்று குரலை உயர்த்த,பேச்சு சத்தம் கேட்டு வெளியே நின்ற கட்சி ஆட்கள் எல்லாம் வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.

ஐயா என்னங்கய்யா நடக்குது?என்றவாறு உள்ளே வந்த அடியாளில் ஒருத்தனோ செழியனை பார்த்து என்ன இன்ஸ்,ஊருக்கு புதுசா?

உனக்கு தான் மாமுல் ஒழுங்கா வந்து சேருமே,பிறகு எதுக்கு தேவை இல்லாம இங்க வந்து டிராமா பண்ணிட்டு இருக்க?

உன்ன போல எத்தனை பேரை நாங்க பார்த்து இருப்போம் என்று சொல்லிக் கொண்டே தனது சட்டை காலரை பிடிக்க வந்தவனை பார்த்தவன், கண்ணிமைக்கும் நொடிக்குள் இரண்டு அறையை விட,வாங்கிய அறையில் அவனின் கடவாய் பல் உடைந்து வாயிலிருந்து ரத்தம் வந்தது.

அதைப் பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வந்தாலும் போலிஸ் அராஜகம் ஒழிக ஒழிக என்று கோஷம் எழுப்ப,தனது சுண்டு விரலால் காதை குடைந்தவனோ மிஸ்டர் ஆடியபாதம் கடைசியா சொல்றேன்.

அமைதியா நீங்க எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நல்லது.இல்லையென்றால்?

கூட்டத்தினரை பார்த்தவன் அமைதியா இருங்க..இது எதிர்க்கட்சி செய்த சதி தான் என்று சொல்லிய ஆடியபாதம் போகலாம் என்று அவர்களோடு வந்தவன்,எந்த கேஸ்ல நம்மை அரஸ்ட் பண்றான்னு ஒன்னும் புரியலையே என்ற யோசனையோடு ஜீப்பில் போய் உட்கார்ந்தான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
370
நியூஸை பார்த்தவர்கள் மினிஸ்டரை அரெஸ்ட் பண்ணியிருக்கிறதால் செழியனுக்கு ஏதாச்சும் பிரச்சனை வருமா என்று ஒரு பக்கம் உள்ளுக்குள்ள கவலைப்படாமல் அவர்களால் இருக்க முடியவில்லை.

ஷமீராவோ காலையில் இருந்து கேள்விப்பட்ட விஷயங்களால் ஓய்ந்து போய் மூலையில் உட்கார்ந்தவள் தான் எதுவும் சாப்பிடவில்லை.யாரிடமும் பேசவும் இல்லை.

அவ்வப்போது அவள் முகத்தை பார்த்தவர்களோ அதிர்ச்சியில் இருக்கிறாள்.செழியன் வந்து சமாதானப்படுத்திக் கொள்வான் என்று நினைத்தாலும்,அவளிடம் பேச்சு கொடுக்க,அவளோ எதுவும் சொல்லாமல் அவர்களுக்கு தலையை மட்டும் ஆட்டிக் கொண்டு ஒரு சில வார்த்தைகளை மட்டும் பதிலாக சொல்லிக் கொண்டிருந்தாள்.

அப்பொழுது கண்மணியின் போனிற்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க கையில் இருந்த போனை பார்க்கவும் அதில் பாபுவின் புகைப்படம் வந்தது.

போனை சைலண்டில் போட்டு விட்டு பக்கத்தில் இருக்கும் ரூமிற்குள் போய் கதவை சாத்தியவள்,அட்டென்ட் பண்ணி ஹலோ என்று சொல்லவும் ம் என்ற பாபுவின் குரலை கேட்டு எதுவோ சரியில்லை என்பதை புரிந்து கொண்டவள் என்ன ஆச்சுங்க என்க..

உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்றான்.நானும் உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனுங்க என்று கண்மணி தயங்க,என்னடி ஆச்சு? ஏதாச்சும் பிரச்சனையா என்றான்.

எப்படி சொல்றதுன்னு தெரியலை,சரி முதல்ல நீங்க சொல்லுங்க என்கவும் எங்க அத்தை காணாமல் போய்ட்டாங்க டி.பத்து நாளைக்கு மேல ஆகுது என்று கவலையாக சொல்ல,என்னங்க சொல்றிங்கயென்று கண்மணி அதிர்ந்து போனாள்.

"ஆமா டி"

நம்ம ஊர்ல தான் இருக்கிறேன் இங்க வந்த பிறகு தான் விஷயமே தெரியுது. ஷமீராவுக்கு இந்த விஷயம் தெரியாது. தெரிஞ்சா எப்படி எடுத்துப்பாளென்று தெரியவில்லை டி.

அப்பாவும் தேடிட்டு இருக்காரு.எங்க போனாங்கன்னு தெரியல என்று சொல்லி வருத்தப்பட்டவன் உன் குரலும் சரியில்லையே அங்க என்ன ஆச்சு என்கவும் நியூஸ் பார்த்தீர்களா என்றாள்.

இல்லை டி.நாங்கள் இருக்கிற நிலமை என்ன,இந்த நேரத்தில் நியூஸ் பார்த்தியா என்று கேட்கிறியேடி என்று கோவமாக பேச,செழியன் மாமா போலீஸ் என்கவும் அப்படியா என்றவனுக்கு ஹம்...இன்றைக்கு தான் எங்களுக்கும் விஷயம் தெரியும் என்றவள் நடந்தது எல்லாம் பாபுக்கு சொல்ல,அதைக் கேட்டவனும் அதிர்ந்து போனான்.

ஒரு வார்த்தை கூட போலிஸென்று ஷமீராவும் சொல்லலையே என்று நினைக்கும் போது,ஷமீராவுக்கும் இந்த விஷயம் தெரியாதுங்க.காலையில் இருந்து எதுவுமே பேசலை.அமைதியா இருக்கிறா என்கவும்,அப்படியா என்றான்.

இப்போயாவது அவள் கிட்ட ஒரு வார்த்தை பேசுங்களேன் என்று சொல்ல,எனக்கு எப்ப பேசணும்னு தெரியும் கண்மணி.இனிமே இத பத்தி என்கிட்ட பேசாதன்னு சொல்லிட்டு போனை வைத்து விட்டான்.

"அட பனமட்டை மண்டையா"

அன்னைக்கு நான் போன கட் பண்ணியதுக்கு மட்டும் அப்படி பொரிஞ்சு தள்ளுன,இன்னைக்கு நீ என்னடா பண்ற என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினவள் இனிமே போனு கீனு பொண்டாட்டி கிண்டாட்டினு எனக்கு மெசேஜ் கால் ஏதாச்சும் பண்ணுன மானங்கெட்டு போய்விடும் என்று சொல்லி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியவள் மொபைலை சைலன்ட்டில் போட்டுவிட்டு வெளியே வந்து மற்றவர்களோடு கலந்து கொண்டாள்.

அப்பொழுது செல்லதுரைக்கு கால் வரவும் டேபிளின் மேல் இருந்த போனை எடுத்துப் பார்க்க அதில் செழியன் பெயர் வரவும் அட்டென்ட் பண்ணியவர் சொல்லு தம்பி என்று சாதாரணமாக பேச அப்பா என்ற தொண்டையை கணைக்க,சொல்லு தம்பி என்றார்.

நான் சென்னைக்கு போறேன் பா.வர ரெண்டு நாள் ஆகும் அங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே என்கவும், இல்லப்பா என்று செல்லதுரை சொல்ல, அப்புச்சி கிட்ட போன குடுங்க என்றான்.

அப்பா உன்கிட்ட தான் உன் பேரன் பேசணுமாம் என்று அங்கிருந்த வீரையனிடம் செல்போனை நீட்ட,குடு தொரை என்று வாங்கியவர் எலேய் என்க...என்ன அப்புச்சி உன் பேரன் அந்த மினிஸ்டரை கைது பண்ணிட்டானாமே டிவியில் பார்த்தியா என்க,ஹா ஹா என்று மீசையை தடவி சிரித்தவர் என் வம்சம் ஆச்சே சும்மா இருக்குமா?

"ஏண்டா அறிவு கெட்ட பயலே"

போலீஸ் பரிட்சை எழுதுறதுக்கு மட்டும் அப்புச்சி கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு போனியே,இன்னைக்கு போலீஸ் உடுப்பு போட்டுட்டு என்கிட்ட தானே மொதல்ல காட்டணும்னு தெரியாதா என்று கோவமாக கேட்க, வீட்டிலிருந்தவர்களும் அவர் பேசியதை கேட்டு அதிர்ந்து போய் பார்க்க,தாத்தாவோ தனியாக பேசுவதாக நினைத்துக் கொண்டு செழியனிடம் பேசிக் கொண்டிருந்தார்.

நான் இருக்கட்டும் இப்ப வீட்ல எல்லார்கிட்டயும் நீ மாட்டிகிட்டியே என்ன பண்ண போறனு தெரியவில்லையே என்று அந்த பக்கமிருந்து செழியன் கேட்க,பிறகு தான் மற்றவர்களை பார்த்து தாத்தா திருதிருவென்று முழித்தார்.

சரி உன் உடம்பில் ஏதும் சேதாரம் இல்லனாக்க நல்லது தான் என்று சொல்லி செழியன் போனை வைக்க, யப்பா இப்ப நீ பேசினதெல்லாம் என்று செல்லதுரை கேட்க,அய்யோ தொரை அவன் விளையாட்டுக்கு சொல்றான்னு நினைச்சுகிட்டு தான்ய்யா இருந்தேன்.

உண்மையிலேயே போலீஸ் ஆவான்னு எனக்கு தெரியாது.பரிட்சை எழுதுறதுக்கு முன்னாடி அந்த தடிமாடும் இதோ நிக்கிதே என்று கண்ணனை காட்டியவர்,இந்த தடிமாடும் தான் வந்து கால்ல விழுந்தானுங்க.

சரி எப்பயுமே பரீட்சைக்கு நம்ம புள்ள கால்ல விழுந்துட்டு தானே போவான் என்று தான் நானும் ஆசீர்வாதம் பண்ணி காசு கொடுத்து அனுப்பினேன்.

இப்படி போலீஸ் வேலைக்கு போவான்னு எனக்கு தெரியாது என்க, யோவ் என்னையா இல்லாத கதை விட்டுட்டு இருக்க?

எங்க உனக்கு தெரியாதுனு உன் மனசாட்சியை தொட்டு சொல்லுயா என்று வீராயி கேட்க அடியே உன்மேல சத்தியமா எனக்கு தெரியாது டி.

இன்னைக்கு தான் எனக்கே அந்த விஷயம் தெரியும் டி என்கவும் எவனாச்சும் இளிச்சவாயன் கிட்ட போய் சொல்லு உன் கதையை நம்புவான் என்றார்.

எப்ப பாத்தாலும் இவகிட்ட என்ன கோர்த்து விட்டே வேலை பார்க்கிறானே என்று தாத்தா புலம்ப,மற்றவர்களோ இருக்கும் மனநிலை மறந்து சிரித்து விட்டனர்.

மதுரை போலீஸ் ஸ்டேஷன்:

எம்.பி.அரஸ்ட் ஆன விஷயம் காட்டு தீ போல் பரவியது.எங்கே சட்ட ஒழுங்கு பிரச்சனை வருமோ என்று அங்கங்கே போலீசார்களும் குவிக்கப்பட்டனர்.

தமிழக முதல்வராக இருக்கும் வீராசாமியோ இந்த விஷயத்தை கேள்விப்பட்டு யாரா இருக்குமென யோசனையானார் ?

திடீர்னு எப்படி ஆச்சு?

நமக்கு எந்த விஷயமும் தெரியலையே என்று அவரின் செகரட்டரியிடம் கேட்க, சார்..டெல்லி மேலிடத்திலிருந்து அவரை அரெஸ்ட் பண்றதுக்கு பர்மிஷன் கொடுத்திருக்காங்க என்கவும் என்ன சொல்றயா என்று சி.எம் கேட்க,ஆமா சார் எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் விஷயம் தெரிஞ்சது.

எம் பி.யோட பி.ஏ கிட்ட தான் இந்த விஷயத்தை எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன் என்றான்.அப்படியா என்றவர் யார் அந்த போலீஸ் என்கவும் இளஞ்செழியன் ஐபிஎஸ் சார்..

ஓஓஓ பேர் புதுசா இருக்கே என்று அவர் சொல்ல,இத்தனை நாள் அண்டர் கிரவுண்ட் ஆபிசராக இருந்திருக்கிறார். இன்னைக்கு தான் பகிரங்கமா ஜார்ஜ் எடுத்துருக்கிறார் என்க,அப்படியா என்று யோசனையானவர் சரி டெல்லியில் இருக்கும் நம்ப பரந்தாமனுக்கு போன் போடு என்றார்.

நேராக போலீஸ் ஸ்டேஷன் முன்பு வந்து ஜீப் நிற்க,அதிலிருந்து கம்பீரமாக இறங்கி உள்ளே போன இளஞ்செழியன் ஸ்டேஷனை ஒரு பார்வை பார்க்கவும்,அங்கு இருந்தவர்களோ சல்யூட் அடித்தனர்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தங்கள் மகனை காணுமென்று கேஸ் கொடுத்திருந்தாங்களே என்று மிஸ்ஸான நபரின் பெயரைச் சொல்லி அந்த பைலை எடுத்துட்டு வருமாறு சொல்ல..

அங்கிருந்து போலீஸ்காரர்களோ அதிர்ந்து போய் ஆடியபாதத்தை பார்க்க, நான் இங்கு கேட்கிறேன்.உங்களுக்கு அங்கு என்ன பார்வை என்றான்.

செழியன் கடுமையோ அவர்களை அடுத்தது எதுவும் யோசிக்க வைக்கவில்லை.ரைட்டரோ வேகமாக போய் சிறிது நிமிடத்தில் பைலை எடுத்துட்டு வந்து குடுக்க,அதை வாங்கி படித்துப் பார்த்தவன் இந்த கேஸ்ல இருக்கிற ரவீந்தரன் தலைமறைவாக இருக்கிறார் அப்படித்தானே உங்களுடைய ரிப்போர்ட் என்கவும் எஸ் ஆர் என்றனர்.

ஓகே என்று சொல்லும்போது வெளியே கட்சிக்காரர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள்.சிறிது நிமிடம் அமைதியாக இருந்தவன் பின்னர் எழுந்து நின்று தனது தொப்பியை எடுத்து போட்டுக் வெளியே வந்தவன் அங்கு இருக்கிறவர்களை பார்த்து கையை கட்டி நின்றான்.

அவனைப் பார்த்தவர்களோ அமைதியாக,என்ன ஆச்சு?அதுக்குள்ள உங்க தொண்டை தண்ணி எல்லாம் காஞ்சி போயிடுச்சா?

எதுக்கு சார் எங்க எம்பி யை அரெஸ்ட் பண்ணிருக்கீங்க?அவரு எப்படியாப்பட்ட கொடை வள்ளல்,தியாக செம்மல் அப்படி இப்படி என்க,

அப்படியா எனக்கு தெரியாது. நீங்க எது பேசுவதாக இருந்தாலும் கோர்ட்ல வந்து பேசுங்க.

ஏற்கனவே எனக்கு சூட்டிங் ஆர்டர் வேற கொடுத்திருக்கிறார்கள் அப்புறம் நான் என்ன பண்றதுன்னு நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்.

அநாவசியமாக எந்த கலவரமும் வேண்டாமென்று நான் நினைக்கிறேன் என்றவாறு தனது இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை தடவிக் கொண்டு செழியன் சொல்ல, அவனின் கம்பீரமான பேச்சையும் அவன் தோற்றத்தையும் பார்த்தவர்களுக்கு கொஞ்சம் அள்ளுவிட்டது தான்.

பின்னர் அவன் வர வைத்த போலீஸ் வாகனம் வர அதில் எம்பி யை அழைத்துக்கொண்டு மதுரையில் இருந்த அந்த பழைய பைலையும் கையோடு எடுத்துக் கொண்டு சென்னையை நோக்கி சென்றான்.

அண்ணா வழக்கமான ரோட்ல போகாதீங்க,நான் சொல்ற ரூட்ல போங்க என்று டிரைவருக்கு சொல்ல சரிங்க தம்பி என்றார். ஆடியபாதமோ வாயவே திறக்கவில்லை. எப்படி வெளியே வரணும்னு எனக்கு தெரியாதா என்று பகல் கனவு கண்டு கொண்டிருந்தான்.

செழியன் சொன்ன ரூட்டிலேயே வண்டியை ஓட்டிய டிரைவர் கந்தவேல் நல்லபடியாக சென்னை கிரைம் பிரான்ஞ்சுக்கு வந்து சேர்ந்தனர்.
அந்த இரவு நேரத்திலும் அந்த அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

இவரை கொண்டு போய் உள்ளார உட்கார வைங்க நான் வரேன் என்று சொல்லிவிட்டு தனது ரூமிற்கு சென்றவன் ஃபோனை எடுத்து தன்னவளுக்கு கால் பண்ண ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர எடுக்கவே இல்லை.

கிட்டத்தட்ட பத்து கால்க்கு மேல் பண்ணிருப்பான்.அவளோ எதற்குமே அசராமல் கண்ணை மூடி உட்கார்ந்திருந்தாள்.

"ரொம்ப கோவமா இருக்குறாள் போல"

அடேய் செழியா உன் பொண்டாட்டி தொட்டா சிணுங்கி தோள் மேல ஏத்திடா. சும்மாவே அவளுக்கு கோவம் வரும். இப்போது என்ன காளியாட்டம் ஆடப் போறாள்னு தெரியலையே.

சாதாரண விஷயத்துக்கே கோட் போடாத வக்கீல் போல லா பேசுவாள், இதுக்கு என்ன பண்ணுவாளோ என்று புலம்பியவன், நேர்ல போய் கால்ல விழுந்து சமாதானப் படுத்திடலாம்.
ஆயிரம் தான் இருந்தாலும் அவ நம் பொண்டாட்டி.சோஓஓ முதல்ல கடமையை பார்க்கலாம் என்றவாறு எழுந்தவன் ஆடியபாதம் இருக்கும் ரூமை நோக்கி சென்றான்.

விழி தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top