• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
370
டெல்லி ருத்ரன் வீடு:

போகலாமா என்று ருத்ரன் கேட்க நால்வரும் அமைதியாக தலையசைத்தனர்.எஸ்தருக்கு மட்டும் அவர்கள் எங்கே போகிறார்கள் என்று தெரியாததால் அமைதியாக இருக்க, பின்னர் வீட்டை பூட்டிக் கொண்டு கீழே வந்தவர்கள் அங்கிருந்த காரில் ஏறிக்கொண்டு சாந்தினி சௌவுக் என்னும் இடத்தை நோக்கி சென்றனர்.

நால்வரின் மனநிலையும் நாலு விதமாக இருந்தது.அவரவர் பெற்றோரை நினைத்து உள்ளுக்குள் கதறினார்கள்.

டிராபிக்குள் புகுந்து அரை மணி நேரத்தில் அந்த இடத்துக்கு வந்தவர்களோ காரை ஓரமாக நிறுத்திவிட்டு எல்லாரும் இறங்கினர். எஸ்தரோ அந்த இடத்தை சுற்றி பார்த்துக் கொண்டே அவர்களுடன் நடந்தார்.ஐந்து நிமிட நடையில் அங்கே இடிந்து போய் பாழடைந்து இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

இவர்களைப் போல இன்னும் சிலர் கையில் பூச்செண்டும் மெழுகுவர்த்தியோடும் வந்தனர்.சிலர் அங்கே நீளமாக இருந்த சிமெண்ட் கட்டையில் மெழுகு வர்த்தியை ஏற்றி வைத்து கண்களை மூடியிருக்க இவர்கள் நால்வரும் அதே போல் செய்யவும் எஸ்தருக்கு என்ன நடக்குது என்று ஒன்றுமே புரியவில்லை.

அந்த இடத்தை பார்த்தால் ஏதோ தீப்பிடித்து எரிந்து போன இடம் போல இருக்கவும் என்னவா இருக்கும் என்று யோசனையோடு இருந்தார்.பெண்கள் இருவரும் அவர்களின் பெற்றோரை நினைத்து கதறி அழ,தீபனும் ருத்ரனும் மௌனமாக கண்ணீர் வடித்தனர்.

பின்னர் இருவரும் அவர்கள் மனைவியின் கண்ணீரை துடைத்து விட்டு தோளோடு அணைத்துக் கொண்டு மௌனமாக கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

சிலர் அங்கே அழுவதை பார்த்த எஸ்தர் மனது கேட்காமல் தலையில் முக்காடு போட்டவர்,ஆண்டவரே இந்த இடத்தில் என்ன நடந்திருக்கு என்று தெரியவில்லை.ஆனால் இங்கே வேதனையோடு இருப்பவர்களை பார்த்தால் ஏதோ கொடுமையான அசம்பாவிதம் நடந்த போலிருக்கிறது.

அதை தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் இவர்களுக்கு இருந்தாலும் இனி இப்படி ஒரு சூழல் வராமல் நீங்க தான் காப்பாற்ற வேண்டும் என்று ஜெபம் பண்ணினார்.

"அரை மணி நேரம் கடந்து" எஸ்தரிடம் வந்தவர்கள் போகலாம் மா என்கவும்,எதுவும் கேட்காமல் அவர்களோடு வந்தார்.பின்னர் காரில் ஏறி அவர்கள் பிளாட்டிற்கு வந்தனர்.

நால்வரின் முகத்தை பார்த்தவர் ஏதோ தவிர்க்க முடியாத சம்பவம் நடந்திருக்குன்னு தெரியுது.உங்களுக்கு இஷ்டம் இருந்தா அம்மா கிட்ட சொல்லுங்கப்பா.இல்லன்னா வேண்டாம் என்கவும்...என்னத்தம்மா சொல்றது என்று கண்ணை மூடி திறந்த தீபன்,இப்ப நம்ம போயிட்டு வந்தோமே அதுல நடந்த தீ விபத்தில் தான் எங்கள் நாலு பேரோட அப்பா அம்மா இறந்து போனாங்க மா என்க..

என்னப்பா சொல்றீங்க என்று எஸ்தர் அதிர,ஆமா மா.அன்றைக்கு நம்ம வீட்டுக்கு மினிஸ்டர் அமர்நாத் என்ற ஒரு அயோக்கிய பையன் வந்தானே அவன் பண்ணிய கொடூரத்தால் அந்த அபார்ட்மெண்ட்ல இருந்த எல்லாருமே இறந்துட்டாங்க மா என்கவும்,ஜீசஸ் என்றவர் பிறகு எப்படிப்பா நீங்கள் தப்பித்தீர்கள் என்றார்.

ருத்ரனும் ரூபாவும் ஸ்கூல்ல பிக்னிக் கூப்பிட்டு போயிருந்தாங்கனு அங்க போயிட்டாங்க.எனக்கு பீவர்னு நான் போகலை.நானும் ஜூலியும் பின்னாடி இருந்த பார்க்கில் விளையாட போய்ட்டோம்.அப்பதான் சத்தம் கேட்டு ரெண்டு பேரும் ஓடி வரும் போது தடுக்கி கீழே விழுந்துட்டேன்.

அதன் பிறகு எங்களை வளத்ததெல்லாம் ஒரு அங்கிள் தான். நாங்க ரெண்டு பேரும் தமிழ்நாட்டிலிருக்கும் கோயம்புத்தூரில் ஒரு ஆசிரமத்துல வளர்ந்தோம்.

அங்கிருந்து 10 வயசுல தான் இந்த டெல்லியில் இருக்கும் கிறிஸ்தவ ஆசிரமத்துக்கு எங்களை அனுப்பி வைத்தாங்க.இங்க சர்சிக்கு வரும் போது தான் ருத்ரன் ரூபாவை மீண்டும் சந்தித்தோம்.

நல்லா படிச்சோம் எங்களுக்கு டாக்டர் சீட்டு கிடைத்தது.பிறகு நாங்கள் கல்யாணம் பண்ணிக் கொண்டோம் என்று சுருக்கமாக அவர்கள் வாழ்க்கையில் நடந்ததை சொல்லி முடித்தான்.கேட்ட எஸ்தருக்கு வேதனையாக இருந்தது.

அப்போ ருத்ரா நீயும் ரூபாவும் யார்கிட்ட இருந்தீங்க என்று கேட்க பேமிலி பிரண்ட் கர்ணன் அவங்க வொய்ப் ஷீத்தல் ஆன்ட்டி தான் எங்களை வளர்த்தார்கள் என்கவும்,அப்படியா என்றார்.

இவர்கள் வாழ்க்கையில் நடந்ததை விட தனது வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு வேதனையானது இல்லை என்கும் மனப்பக்குவத்திற்கு வந்தவர் சரிப்பா வேதனைப்படாதீங்க நடந்தது நடந்துச்சு.

கண்டிப்பா ஆண்டவர் அவனுக்கு தண்டனை கொடுப்பார் என்க,24 வருஷத்துக்கு முன்னாடி நடந்தது இன்னைக்கு அவன் குடும்பம் குட்டி என்று எவ்வளவு சந்தோஷமா இருக்கான்.

எங்கே மா அந்த ஆண்டவர் தண்டிச்சாரு? கடவுள் மேலே எனக்கு சுத்தமா நம்பிக்கை விட்டு போயிடுச்சு என்க,அவன் வேதனை அவனை எப்படி பேச வைக்குது என்பதை புரிந்து கொண்டார்.

இந்த ஊருக்குள்ள இருந்தா கண்டிப்பா மனசு வெடிச்சு போயிடும்.நைட்டு நானும் தீபனும் மதுரைக்கு கிளம்பறோம்.உங்க மூணு பேரையும் பொள்ளாச்சியில் இருக்கும் சித்தி கிட்ட விடுறோம் என்று சொல்ல அப்படியா என்றனர்.

"ஆமாம்" இந்த நேரத்தில் ஜீலி ட்ராவல் பண்ணலாமா என்று கேட்க மூன்று மாதமாகுது ஒன்னும் பிரச்சனை இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு என்கவும்,அப்படியா அப்போ சரி.

அதேபோல் டெல்லியில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தவர்கள் அங்கிருந்து வசுந்தராவின் வீடான பொள்ளாச்சிக்கு வந்து சேர அவர்களுக்காக பாயலும் வாசலிலே காத்துக் கொண்டிருந்தார்.

பரஸ்பரம் நலம் விசாரித்தவர் தனது வயதில் ஒரு தோழி கிடைத்ததை நினைத்து பாயலுக்கும் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

ஒரு வாரம் அவர்களோடு இருந்த ருத்ரனும் தீபனும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.

வனிச்சூர்:

தோட்டத்தில் வேலையாக இருந்த தம்புசாமி குடும்பத்தினரோ செழியன் வீட்டில் முன்பு போலீஸ் நிற்பது கேள்விப்பட்டு செய்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அனைவரும் வானதி வீட்டிற்கு ஓடி வந்தனர்.

அதேபோல் வீரையனும் விராயியும் செழியன் வீட்டிற்கு வந்தவர்கள் அங்கிருந்தவர்களை பார்த்து வாங்கப்பா என்றவர்கள் போலீஸ் வந்துச்சாமே என்னாச்சு என்று பதற...

கபிலன் அவர்களுக்கு விஷயத்தை சொல்ல என்னாஆஆஆ என் அப்பு போலீஸாஆஆஆ!!!!

அய்யோ கடவுளே அந்த வேலைக்கு போனதால் தானே எம்புள்ளை வம்சியை இழந்தோம்.இப்போது இந்த பயலும் அந்த வேலைக்கு போயிருக்கானே நான் என்ன பண்ணுவேனென்று வீரையன் தாத்தா தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

தனது சித்தப்பா அழுவதை பார்த்த செல்லதுரை யப்பா அண்ணனை கொலை பண்ணிட்டாங்களாம் என்கவும், அழு கொண்டிருந்த வீரையனோ என்ன துரை சொல்லுற என்று அதிர்ச்சியாக கேட்க,அப்படி தான்பா வெற்றி சொல்றான் என்று அழுதவர்,அப்பு நீ சொல்றது என கேள்வியாக வெற்றியை பார்க்க,அப்பட்டமான உண்மைங்க மாமா.

அந்த கேஸ் விஷயமா தான் நாங்க மூணு பேரும் ஒரு வருஷமாக அலைந்து திரிந்து எல்லாம் சேகரித்து வைத்திருக்கிறோம்.இந்த கேஸை ஹேண்டில் பண்ண போறது செழியன் தான் என்றவன் நடந்த விஷயத்தை சொல்லி முடிக்கவும் செல்லதுரையோ நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு மயங்கி சரிந்தார்.

ஆளுக்காள் பதற கொஞ்சம் தள்ளி போங்களென்ற ரியாவோ அதிர்ச்சியில் தான் மயங்கி இருக்காங்க வேற ஒன்னும் இல்லை என்று அவர் கையை பிடித்து பல்ஸை சோதித்துக் கொண்டு சொல்லியவள் சீக்கிரம் தண்ணி எடுத்துட்டு வாங்க என்க... இதோ கா என்ற கண்மணி உள்ளே ஓடிப்போய் தண்ணீர் எடுத்துட்டு வந்து கொடுக்கவும் அதை வாங்கி செல்லதுரையின் முகத்தில் தெளித்தாள்.

சிறிது நொடியில் மயக்கம் தெளிந்து எழுந்தவரை அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்து டிபன் சாப்பிடவில்லை என்றாலும் டீ கொஞ்சம் குடிங்க மாமா என்க செல்லதுரையே எதுவும் வேண்டாம் மா என்றார்.

மாமா இப்போதைக்கு கண்டிப்பாக இது உங்களுக்கு தேவை.ஆஸ் எ டாக்டராக சொல்லுறேனென்று ரியா கோவமாக சொல்ல எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்தார்.

பின்னர் எல்லாரையும் ஒரு பார்வை பார்த்த வெற்றியோ இதில் சம்பந்தப்பட்ட ஆளோ இன்னைக்கு சமூகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கான்.

ஆள் யாருனு இப்போதைக்கு என்னால் சொல்ல முடியாது.உங்க எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சிட்டு இப்ப என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க தாத்தா என்று வீரையனிடம் கேட்க...என் புள்ள உசுர எடுத்தவனை கருவறுக்காமல் விடமாட்டேன்.

இந்த கையால தானே அவன தூக்கி வளர்த்தேன்.பெத்தது என் அண்ணி அண்ணனா இருந்தாலும் இந்த மார்லையும் தோளிலையும் போட்டு என் புள்ளையை நான் வளர்த்தேனே...

என் அப்பா போலவே உருவத்தைக் கொண்டு பிறந்ததால் எங்க வம்சம் தொடருதேனு வம்சின்னு பேர் வச்சேனே,என் பிள்ளையோட வம்சத்தை அறுத்துட்டானே படுபாவி என்று மீண்டும் தாத்தா தனது தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு கதறினார்.

வயதானவர் அழுவதை பார்த்து மற்றவர்களுக்கும் கண்கள் கலங்கியது.

துரை இப்படி அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம் என்று தம்புசாமி தாத்தா கேட்க,கண்ணை மூடி திறந்தவரோ என் அண்ணன் குடும்பத்தோடு ஆயிரக்கணக்கான உயிரை பறித்தவன் ஒரு காலமும் தப்பிக்க கூடாது மாமா.

என் அண்ணனுக்காக தான் இந்த போலீஸ் வேலை எனக்கு பிடிக்காமல் போனது.இன்னைக்கு அவரோட சாவுக்கு நியாயம் கிடைக்கணுமென்றால் செழியன் இந்த வேலையில் இருக்கிறது அவசியம்...

ஏன் பா செழியனுக்கு இது வம்சி அண்ணன் சம்பந்தப்பட்டதுனு தெரியுமா என்றார்.

"தெரியும் மாமா"

கேஸ் டீட்டையல்ஸை முதல்ல அவன் கிட்ட தான் அம்மா கொடுத்தாங்க மாமா..

செழியன் இந்த விஷயத்தை உங்ககிட்ட சொல்லவும் முடியாம சொல்லாமல் இருக்கவும் முடியாமல் மனசுக்குள்ள வச்சுட்டு ரொம்ப வேதனைப்படுறான்.

கண்ணா என்று வீரையன் கூப்பிட சொல்லுங்க தாத்தா என்றவாறு அவர் முன்னாடி வந்து நிற்பவனை பார்த்தவர் அப்பு போலீஸ் வேலைக்கு போறது உனக்கு தெரியும் தானே என்கவும், மாமாவோட இறப்பில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்பதால் தான் தாத்தா அவன் போலீஸ் வேலைக்கே போனது.

நாங்க வேலை பார்க்கிற பேக்ட்டரி ஓனருக்கும் எனக்கும் தவிர செழியன் போலீஸ் என்பது இங்கு யாருக்கும் தெரியாது என்றான்.

ஹம்....நம்ப புள்ளையோடு எத்தனையோ அப்பாவி உயிரை குடிச்ச ராட்சசனை அழிக்க என் பேரன் உடம்பில் வம்சி வந்துருக்கான்.அந்த மலையம்மா கூட இருப்பாளென்றவர், என்ன துரை வாய மூடி நிக்கிற என்றார்.

உன் பேச்சுக்கு என்னைக்கு பா நான் மறுத்து பேசிருக்கேன்.அதான் நீயே சொல்லிட்டியே பா என்கவும்,ரொம்ப நன்றிங்க மாமா எங்கே நீங்க வேண்டானு சொல்லிடுவங்களோடு நாங்களும் ரொம்ப பயந்துகிட்டு இருந்தோம் என்ற வெற்றியோ அவரின் கையைப் பிடித்துக் கொண்டு சொல்ல எனக்கும் புரியுதுப்பா.

வானதி அமைதியாக இருப்பதை பார்த்து நீங்க என்ன அத்தை எதுவுமே சொல்லாம இருக்கீங்களே என்கவும், இளா இன்னும் என்னவெல்லாம் எங்ககிட்ட மறைச்சிருக்கான் பா என்று சொல்லும் போதே வானதிக்கு கண்கள் கலங்கியது.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
370
வனிச்சூர்:

போலிஸ் காரில் போய்க் கொண்டிருந்த செழியனுக்கு வீட்டினரின் அதிர்வான முகம் தான் கண் முன்னால் வந்து சென்றது.

நினைவு தெரிந்த நாளிலிருந்து அவனது அப்பா அவனுக்கு சொல்லியதோ இந்த போலீஸ் வேலை பிடிக்காது பிடிக்காது பிடிக்காது.அதற்கான காரணம் என்னவென்று அவனுக்கு அப்பொழுது தெரியவில்லை.

செழியனுக்கு12 வயது இருக்கும் போது ஒரு நாள் அவனுடைய அப்புச்சி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது டிவியில் ரஜினிகாந்த் நடித்த மூன்று முகம் படம் ஓடிக் கொண்டிருந்தது.

அதில் "எந்த பக்கம் உரசினாலும் இந்த அலெக்ஸ் பாண்டியனுக்கு தீ பிடிக்கும்" என்ற வசனம் ஓடிக்கொண்டிருக்க அதை உன்னிப்பாக கவனிக்கும் பேரனை பார்த்த வீரையனோ என்ன ராசா அப்படி பார்க்கிற?

எனக்கும் அது போல சட்ட போடணும் அப்புச்சி என்று சிறு வயது செழியன் சொல்ல,வேண்டாம் யா.ஏற்கனவே ஒரு உசுர நாங்கள் இழந்தது போதும் என்று பேரனை அள்ளி மடியில் வைத்துக் கொண்டவர் வம்சியின் இறப்பை பற்றி சொன்னார்.

அந்த வயதிலே செழியனுக்கு தாத்தா சொன்ன விஷயத்தை முழுமையாக நம்ப முடியவில்லை.ஏதோ மர்மம் இருக்கு என்பது மட்டும் புரிந்து கொண்டான்.

போலீஸ் வேலைக்கு போனால் மட்டும் தான் குற்றவாளிகளை தண்டிக்க முடியும் என்பதை புரிந்து கொண்டவன் அதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டான்.

அதே போல் மதுரையில் உள்ள கல்லூரியில் படித்து முடித்தவன் போலீஸ் எக்ஸாம் எழுத அதில் தேர்வானான்.ஒரு வருடம் ட்ரைனிங்கிற்கு ஹைதராபாத் செல்ல வேண்டும் என்பதால் என்ன பண்ணலாம் என்று யோசிக்க,அவன் நேரமோ என்னவோ ஹைதராபாத்தில் ஒரு கம்பெனியில் வேகன்ஸி இருப்பது தெரிந்தது.

உடனே கண்ணனும் அவனும் வேலைக்கு போவதாக சொல்லிக் கொண்டு ஹைதராபாத்திற்கு வந்தவர்கள் கண்ணன் மட்டும் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி வேலைக்கு சேர்ந்தான்.

செழியனோ சர்தார் வல்லபாய் பட்டேல் அகாடமியில் போய் சேர அங்கு அறிமுகமானவர்கள் தான் வெற்றிவேல் கபிலன் விபின் மூவரும்.டிரைனிங்கை முடித்து வந்தவன் அண்டர் கிரவுண்ட் ஆபிஸராக வேலைக்கு சேர்ந்தான்.

அவன் மனதிற்குள் மட்டும் அவனின் பெரியப்பா கேஸ் பற்றிய எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க,ஒருநாள் அவர்களின் மேல் அதிகாரி வசுந்தரா அழைப்பதாக சொல்ல,அவரை பார்க்க கபிலன் வெற்றிவேல் செழியன் மூவரும் போயிருக்கும் போது அவனிடம் ஒரு பைலை கொடுத்து படிக்க சொன்னார்.

அதை படித்துப் பார்த்த செழியனோ அதிர்ந்து போய் எழ,மூணு பேரும் இந்த கேஸை வெற்றிகரமா முடிக்கணும் என்கவும் சரிங்க மேடம் என்றானுங்கள்.வெற்றியும் கபிலனும் சப்போர்ட்டாக இருங்கள் என்கவும் எஸ் மேடம் என்று வெளியே வந்தவர்கள் அதன் பிறகு அந்த கேசில் தீவிரமாக இறங்கினர்.

வீட்டில் எந்த சந்தேகமும் வரக்கூடாது என்பதால் தான் அவங்க ஊரில் உள்ள மசாலா பேக்ட்ரியில் கண்ணனும் செழியனும் வேலைக்கு சேர அவர்கள் முதலாளியிடம் மட்டும் தான் போலீஸ் என்கும் விஷயத்தை சொன்னதால் இதுபோல் கேஸ் வரும் நேரத்தில் எல்லாம் வெளியூரில் இருக்கும் அவர் பேக்டரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு அவன் வேலையை பார்க்க சென்று விடுவான்.

தம்பி தம்பி என்ற குரல் கேட்க,கண்ணை மூடி தனது நினைவுகளில் மூழ்கி இருந்தவனோ சிந்தனை கலைந்து வெளியே வந்தவன் இடது பக்கம் திரும்பி பார்க்க எம்.பி ஆடியபாதம் என்ற பெயர் பலகை கண்ணில் தெரிந்தது.வாங்க ணா என்று சொல்லி காரில் இருந்து இறங்கியவன் கதவை திறந்து வீட்டிற்குள் போனான்.

செழியன் வீடு:

அந்த காலத்தில் என் பூட்டன் அதாவது மச்சானோட அப்பாவோட அப்பாவை பெத்தவரு பட்டாளத்துல இருந்தவர்.பட்டாளத்துல இருந்ததால் என் மாமன் வூட்டை பட்டாளத்தார் வூடுனு சொல்லுவாக..

அதுக்கு பொறவு என் மாமனோட அப்பாரு காலத்தில் ஆரும் பட்டாளத்துக்கு போவல..எத்த பேரன் வம்சி போலீஸூ ஆனான்.இப்போ எம் பேரன் அந்த உத்தியோகத்துக்கு போயிருக்கான்.

இது ஒன்னும் இன்னைக்கு நேத்து தொடரலை,நாலு தலைமுறைக்கு முன்ன இருந்து இந்த வம்சத்துல தொடருது.புள்ளை நம்ப கிட்ட சொல்லாம எம்புட்டு சங்கட பட்டுருப்பானு ஆரும் யோசன பண்ணல....

அன்னைக்கு வம்சி போலீஸ் ஆகணும்னு நிக்கும்போது அவனுக்கு துணையாக இருந்தது யார் தெரியுமா நானும் என் மச்சானும் தான்.

எத்தனை ஏழை பாழைங்கள் நியாயம் கிடைக்காமல் உசுர விட்டு இருக்காங்கனு கண்ணால நம்ம பார்த்தது தானே,நம்ம புள்ளையால் எத்தனையோ பேருக்கு நல்லது நடக்கும்னாக்க போகட்டுமேன்னு தன்ராஜ் கிட்ட சொல்லி புள்ளைய கூட தங்க வச்சுக்கிட்டு ஆளாக்கி அழகு பார்த்தது என் மச்சானும் நானும் தான் என்று தம்புசாமி தாத்தா சொல்ல,இது புது விஷயமாக இருந்ததால் செல்லதுரையும் மற்றவர்களும் அதிர்ந்து போய் பார்த்தனர்.

இன்னொன்னு சொல்றேன் என் அத்தை பேரன் ஒன்னும் யாருக்கும் தெரியாம அந்த வடநாட்டு புள்ளைய கல்யாணம் பண்ணிக்கலை.நானும் என் மச்சானும் கூட இருந்து என் புள்ளையை வாழ வச்சுட்டு வந்தோம்.

எத்தனை பேருக்கு எம் புள்ளை நீதி வாங்கி கொடுத்திருக்கு தெரியுமா?

அப்படிப்பட்ட பிள்ளையை அழிச்சவனை ஒருகாலும் விடக்கூடாது என்று ஆங்காரமாக தப்புசாமி தாத்தா சொல்ல, இத்தனை வருஷமாக தனக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது போலயே என்று செல்லத்துரை வியந்து போனார்.

ரெண்டு புள்ள மாமா..நான் ஊரு ஊருக்கு வரேன்னு என் புள்ளை தந்தி கொடுத்துருந்தானே,என் புள்ள குடும்பத்தை படுபாவி பயல் அழிச்சிட்டானே என்று தம்புசாமி தாத்தா கதறினார்.

மச்சான் அழுவாதயா என்ற வீரையன் போங்க எதாவது கஞ்சி கிஞ்சி ஆக்கி வந்த புள்ளைவோளுக்கு குடுங்க போங்கத்தா என்றார்.ஆண்களைத் தவிர பெண்கள் எல்லாம் அங்கிருந்து பக்கத்து ரூமிற்கு சென்றனர்.

அம்மாடி முதல்ல எல்லாரும் சாப்பிடுங்கள் என்று சொல்லிய விராயி,ஏட்டி சின்னவளே ஒருவாய் நீராகரம் எடுத்து வா என்றவாறு அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.

செல்லதுரை கண்ணை மூடி அந்த சோபாவில் சாய்ந்து விட்டார்.சிறிது நிமிடத்தில் கண்மணி எல்லாருக்கும் டீ கொண்டு வந்து கொடுக்க எனக்கு வேண்டாம் டா என்கும் மகனை பார்த்த வீரையன் தொரை டீ ய குடி.

நம்ப புள்ளை வீரம் நிறைஞ்சவன் நினைச்சதை முடிச்சிட்டு வருவான்.எப்பேர் பட்ட உத்தியோகத்துல என் அப்பு இருக்காரு அதை நினைச்சு நெஞ்சு பூரிக்குது என்றவாறு தனது மீசையை தடவி விட்டார்.

ஷமீரா மட்டும் வாய திறக்கவேயில்லை. இந்த மனுஷன் போலீஸ்காரன்னு ஒரு வார்த்தை கூட நம்ம கிட்ட சொல்லவே இல்லையே?

நீயும் நானும் ஒன்னு ஒன்னுனு மூணு வருஷமா சொல்லிட்டு இருந்தானே, எப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை நம்மகிட்ட மறைக்க முடிஞ்சது??என்று மனதிற்குள் கேட்க,அவள் மனசாட்சியோ அவன் அப்பா அம்மாகிட்டயும் சொல்லவில்லையே அதை நீ மறந்து விட்டாயோ???என்று கேள்வி கேட்டது.

நேரமும் கடந்து செல்ல மதியமும் போய் மாலையும் வர அப்பொழுது வெற்றியின் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்கவும்,கபி அந்த டிவியை ஆன் பண்ணு என்று தனது போனை பார்த்துக் கொண்டு வெற்றி சொல்ல, சரி டா என்றவன் டிவியை ஆன் பண்ணி நியூஸ் சேனலை தேடி வைக்க...

அதில் பிளாஷ் நியூஸ் ஓடலானது...

தலைப்புச் செய்திகள்..மதுரை மாவட்ட எம்.பி ஆடியபாதம் சிபிஐ ஆபிசர் இளஞ்செழியனால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆணவக் கொலை வழக்கில் கைதாகி இருப்பதாக காவல் துறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஒளிபரப்பானது...

அதைப் பார்த்து என்னப்பா இதுயென்று வீட்டில் உள்ளவர்கள் பதற,நீங்கள் பயப்படற அளவுக்கு ஒன்னும் இல்லை. அது ஒரு கொடுமையான சம்பவம் இப்போதைக்கு அந்த கேஸ் பற்றி என்னால உங்களுக்கு சொல்ல முடியாது.

சட்டத்துக்கு முன்னாடி நிற்க வைத்த பிறகு நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.கடந்த ஒரு வருஷமா செழியன் இந்த கேஸ் தான் ஹேண்டில் பண்ணிட்டு இருக்கான்னு சொல்ல ஓஓஓ அடிக்கடி மதுரைக்கு போன காரணம் இதுதானா என்றனர்.

மாமா...அப்புறம் உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் என்க,
என்னப்பா என்று பாவமாக செல்லதுரை கேட்க,உங்க அண்ணனோட வாரிசுகள் இரண்டு பேரும் உயிரோட தான் இருக்கிறார்களென்கவும்..வெற்றி சொன்னதை கேட்டு என்னப்பா சொல்ற என்று அதிர்ந்தனர்.

செல்லதுரையோ எழுந்து போய் வெற்றியின் கையை பிடித்து கண்ணு இது நிஜமாகவா என்று கேட்கும் போது அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து ஓடியது.

ஆமா மாமா.உங்க கிட்ட பொய் சொல்வேனா???அந்த விபத்தில் இருந்து அவங்க ரெண்டு பேரும் தப்பிச்சிட்டாங்க.

அவங்களுக்கும் என்ன நடந்தது என்கும் விஷயம் கடந்த ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் தெரியும் என்கவும்,ஏன் கண்ணு புள்ளைங்கள நான் பார்க்க முடியுமா என்று பதற்றமாக கேட்க, கவலைப்படாதீங்க மாமா.நேத்து தான் அவன் மதுரைக்கு வந்திருக்கிறான்.

உங்கள் மகன் சமூகத்தில் ரொம்ப உயர்வான வேலையில் இருக்கான்.அவனை கையெடுத்து கும்பிடாத ஆட்கள் மிகக் குறைவு தான் மாமா.டெல்லியில் மிகப்பெரிய ஹாஸ்பிடலில் இதய டாக்டராக இருக்கிறான்.தங்கச்சியை அவனோட பிரண்டுக்கு தான் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்கான்.

அவரும் டாக்டர் தான்.இரண்டு பேருக்குமே கல்யாணம் ஆயிடுச்சு.தம்பி இவ்ளோ பெரிய வேதனைகளுக்கு பிறகு இன்னைக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லிருக்கப்பா.என் குடும்பத்தை நான் பாக்கணும் பா அதுக்கு ஏற்பாடு பண்ணுப்பா என்று அழுது கொண்டே கேட்க,நிச்சயமாக மாமா.அவன் கிட்ட நானும் சில விஷயம் பேச வேண்டியது இருக்கு.

நான் வர சொல்றேன் என்றவன் தனது போனில் இருந்து கால் பண்ண அந்த பக்கம் அட்டன் பண்ணியவன் சொல்லு வெற்றி என்க சக்ஸஸ்ஃபுல்லா நம்ப கேஸ் முடிய போகுது.
அப்புறம் மச்சி ஒரு முக்கியமான விஷயம் உங்க கிட்ட பேசணும் ஆனா போன்ல பேச முடியாது

லொகேஷன் அனுப்புறேன் வாங்க. எப்போ காலேஜ்ல ஜாயின் பண்ணனும் என்று கேட்க வர வெட்னஸ்டே என்றான்.

சரிடா அப்ப பிரச்சனை இல்ல.உடனே கிளம்புங்க எப்படியும் நீங்க வர்றதுக்கு இங்க ஏழு எட்டு மணி ஆயிடும் நான் உங்களுக்காக அங்க வெயிட் பண்றேன் என்று வெற்றி சொல்ல சரிடா நேர்ல வந்து பேசுவோம்.முக்கியமான விஷயமா இருக்கிறதால் தான் நீ இவ்ளோ அர்ஜெண்டா வர சொல்ற.

அது என்னால புரிந்து கொள்ள முடியுது என்று சொல்லிய ருத்ரன் அழைப்பை துண்டித்தான்.பின்னர் தீபனை அழைத்துக் கொண்டு கெஸ்ட் ஹவுஸ் விட்டு வெளியே வந்தவர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு காரில் ஏறி வனிச்சூரை நோக்கி பயணமானார்கள்

வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
May 9, 2025
Messages
104
Is Shamera going to meet her mom or author you are planning to leave the ladies alone and send men to meet the family
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top