• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
370
மகி நினைவுகள்:

முதல் மகள் இறந்த துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் மனைவியையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையும் காப்பாற்ற வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தனது துக்கத்தை மறைத்துக் கொண்ட மகி,மானசாவின் முன் தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்.

இரண்டு நாட்கள் அந்த மருத்துவமனையில் இருந்த மகி ஒரு மாதம் மெடிக்கல் லீவ் இருவருக்கும் எழுதி கொடுக்க மேலிடத்திற்கு அவர்கள் சூழ்நிலை பற்றி தெரிந்ததால் உடனே லீவும் கிடைத்தது.

கையோடு சென்னைக்கு டிரான்ஸ்பர் கேட்க அதற்கு சம்மதித்து அடுத்த மாதத்தில் இருந்து சென்னையில் இருக்கும் ஆஃபீஸில் ஜாயின் பண்ண சொல்லி அவரின் மேல் அதிகாரியிடம் இருந்து மெயில் வந்திருந்தது.

பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தான்.ஏற்கனவே அவர்களை சென்னையில் தங்க வைக்க வேண்டும் என்னும் பிளான் இருந்ததால் இந்த ஐந்து வருட சம்பளத்தில் சேர்த்து வைத்த பணத்தில் ஒரு வீட்டையும் சென்னையில் வாங்கியிருக்க அந்த வீட்டிற்கு வந்து குடியேறினார்கள்.

மானசாவிற்கு பெற்ற பொண்ணோடு தாய் தகப்பன் இறந்ததும் பெரிய இழப்பு என்பதால் அதிலிருந்து தேறி வரவே வெகு நாட்கள் ஆனது.

வயிற்றில் நம்ப குழந்தை வளர்கிறதே அதை நினைத்து பாருடி என்று மகி ஒரு நாள் கடுமையாக சொல்ல நிதர்சனத்தை புரிந்து கொண்டவர் பின்னர் குடும்பத்தை கவனிக்கலானார்.

நாட்களும் கடந்து வாரங்களை தாண்டி மாதங்களும் ஓடியது.மானசாவிற்கு எட்டாவது மாதம் நடந்து கொண்டிருக்க,ஒரு நாள் வீட்டின் ஹாலின் பெல் சத்தம் கேட்டது.

மகி மார்க்கெட்டுக்கு சென்றிருக்க மானசா மட்டும் வீட்டில் இருந்தாள். கணவர் தான் வந்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டு கதவை திறக்க, அங்கே மதியின் அம்மா சாராள் மேரி நின்று கொண்டிருந்தார்.

திடீரென்று மாமியார் வந்திருப்பதை எதிர்பார்க்காத மானசாவோ அதிர்ந்து நிற்க,மேரியோ வீட்டில் வேலை செய்யும் பெண் என்று நினைத்துக் கொண்டு என்னம்மா இப்படி வழியில் நிற்கிறாய் என்கவும் அதில் சுதாரித்து வழியை விட்டவள் வாங்க அத்தை என்று சொல்ல வர பின்னர் வாயை மூடிக்கொண்டாள்.

உள்ளே வந்தவர் அங்கிருந்த சேரில் உட்கார்ந்துகொண்டு மகி இல்லையா என்கவும்,அவங்க டவுனுக்கு போயிருக்காங்க என்று சொல்லும்போது கதவு திறந்து இருந்ததால்,வீட்டுக்குள் வந்த மகியோ அங்கிருந்த தனது அம்மாவை பார்த்து அதிர்ந்து போய் கையிலிருந்த பையை கீழே போட, அதிலிருந்த காய்கறிகள் எல்லாம் சிதறி ஓடியது.

வனிச்சூர்:

கணவனின் அணைப்பிலிருந்து பொறுமையாக எழுந்து ரெஷ்ட் ரூமிற்கு போனவள் குளித்து வெளியே வந்து வேறு உடையை மாற்றிக் கொண்டு கீழே வந்தவள் வழக்கம் போல வீட்டை கூட்டி விட்டு பூஜையறையில் விளக்கேற்றியவள் காலை டிபனை செய்வதற்காக கிச்சனிற்குள் சென்றாள்.

வெற்றியையும் கபிலனையும் வாங்கப்பு என்றவர்,நல்லாருக்கீங்களா என்று விசாரிக்க அவர்கள் இருவரும் நலம் நலம் என்க,அந்த பேச்சு சத்தத்தில் பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஜனனியும் ரியாவும் தூக்கம் கலைந்தவர்கள் கதவை திறந்து வெளியே வந்து செல்லதுரையிடம் நலம் விசாரித்தனர்.

ரியாவின் மகன் தூக்கத்தில் இருக்க ஜனனியின் மகனோ தூக்கம் கலைந்து எழுந்து வந்தவன் தாத்தா என்று செல்லதுரையை கட்டிக் கொண்டான்.குழந்தையை தூக்கி முத்தமிட்டவர் நல்லாருக்கிறியா சாமி என்கவும்,நல்லாருக்கேன் தாத்தா.நீங்க எப்படி இருக்கீங்க?

தாத்தாக்கு என்ன கண்ணு என்று சிரித்தவர் உள்ள வாங்கப்பாயென்று அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் போனவர் வானதி யார் வந்திருக்காங்க பாரு என்று மனைவிக்கு குரல் கொடுக்க,பூஜை அறையில் இருந்த வானதியோ சாமியை வணங்கி விட்டு ஹாலுக்கு வந்தவர் அவர்களை பார்த்து சந்தோஷத்தில் அதிர்ந்து போனார்.

கபி வெற்றி ஜனனி ரியாஆஆஆ...ஒரு வார்த்தை கூட வரேன்னு சொல்லவே இல்லையே என்க,மாமாவுக்கு தான் தெரியுமே அத்தை என்று வெற்றி சொல்லவும் கணவரை பார்த்து வானதி முறைக்க உனக்கு அதிர்ச்சி வைத்தியமா இருக்கட்டும்னு தான் சொல்லவில்லை.

பாட்டிகிட்ட வாங்க என்கவும் செல்லதுரையிடமிருந்து கீழே இறங்கியவன் பாட்டி என்று வானதியிடம் போக நல்லாருக்கியா கண்ணா என்று குழந்தையின் கன்னம் கிள்ளி முத்தம் கொடுத்தார்.

அம்மாடி சமிராஆஆ,கிச்சனில் இருந்தவளோ மாமியாரின் குரல் கேட்டு அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு ஹாலுக்கு வந்தாள்.

இதுதான் நம்ம செழியன் பொண்டாட்டினு அறிமுகப்படுத்த வெற்றியும் கண்ணனும் அவளை போட்டோவில் பார்த்திருக்கிறார்கள். ஜனனி ரியாவும் கேள்விப் பட்டிருக்கிறார்களே தவிர பார்த்ததில்லை என்பதால் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.

ரியா காபி குடிக்கும்,மிச்ச மூணு பேருக்கு டீ போட்டு எடுத்துட்டு வா மா என்று மருமகளிடம் வானதி சொல்ல சரிங்கத்தை என்றவள் உள்ளே போய் வேக வேகமாக டீயும் காபியும் போட்டு எடுத்துட்டு வந்து கொடுக்க,எங்கத்தை உன் மகனுக்கு இன்னும் விடியலையா என்று வெற்றி கேட்கவும்,அவன் தூங்குறதால இப்ப நாடு என்ன நஷ்டமாயிடுச்சானு கபிலன் முறைத்தான்.

அதான,உடன்பிறப்பை சொன்ன உடனே உனக்கு ரோசம் பொத்துகிட்டு வந்துருமே என்றவன் டீ குடித்துக்கொண்டே தற்செயலாக வலது பக்கம் திரும்பியவன் அங்கே சுவற்றில் சாய்த்து வைத்திருக்கும் போட்டோவை பார்த்து கபி என்று கத்தினான்.

வெற்றியின் பார்வை சென்ற திசையில் திரும்பிய கபிலனும் போட்டோவை பார்த்து டேய் இவங்களானு அதிர, செல்லதுரையோ எதுக்கு இவங்க ரெண்டு பேரும் இப்படி அதிர்ச்சியாகுறாங்களென்று அவரும் பார்க்க,அங்கே நேற்று அமாவாசைக்கு படைப்பதற்காக தனது வீட்டில் இறந்து போனவர்கள் போட்டோவை எடுத்து கீழே வைத்திருப்பதை பார்த்தவர் இதை பார்த்து எதற்கு பா அதிர்ச்சியென்றார்.

அவர் குரலில் சுதாரித்த வெற்றியோ உடனே தனது போனை எடுத்தவன் அவன் அம்மாவிற்கு கால் பண்ணினான்.

கபியை தவிர மற்றவர்கள் அவன் செயலை என்னவென்று யோசனையோடு பார்க்க,இரண்டே ரிங்கில் அந்த பக்கம் அட்டென்ட் பண்ணிய வசுந்தரா என்ன வெற்றி வனிச்சூருக்கு போயிட்டீங்களா என்கவும்,அம்மா என்று வெற்றி பல்லை கடிக்க போனை துரை அண்ணன் கிட்ட குடு என்றார்.

அம்மா என்று மீண்டும் வெற்றி கூப்பிட, வெற்றி..துரை அண்ணா கிட்ட போன குடுன்னு சொல்லிட்டேன் என்று கண்டன குரலில் வசுந்தரா சொல்லவும், தனது தாயைப் பற்றி தெரிந்ததால் அங்கிருந்த செல்லதுரையிடம் மாமா..அம்மா தான் லைன்ல இருக்காங்களென்றான்.

குடுப்பா என்று வாங்கியவர் நல்லா இருக்கிறியா டா? மூர்த்தி மாப்பிள்ளை எப்படி இருக்கு? வேலையெல்லாம் எப்படி போகுது என்று நலம் விசாரிக்க நல்லா இருக்கேன் ணா.நீங்க அண்ணி செழியன்,ஷமீரா எல்லாரும் நல்லா இருக்கீங்களா என்று வசுவும் கேட்க,எல்லாரும் நல்லா இருக்காங்க மா.

ஏன் டா அண்ணா வீட்டுக்கு வரவே கூடாது என்று முடிவில் இருக்கிறியா என்கவும்,அப்படி எல்லாம் இல்லை ணா.என் வேலை பற்றி தான் உங்களுக்கு தெரியுமே என்க செல்லதுரையோ புரியுது புரியுது என்றார்.

அப்புறம் ணா ஒரு முக்கியமான விஷயம் என்று வசு தயங்க,சொல்லு டா என்ன பிரச்சனை சொல்லு அண்ணன் இருக்கிறேன்.உனக்கு எதுக்கு தயக்கம் என்ன பண்ணனும் சொல்லு என்கவும்,உங்க மருமகன் ஒரு விஷயத்தை சொல்லுவான் ணா.

அதைக் கேட்டுட்டு உங்கள் மனசுக்கு என்ன தோணுது அதன்படி முடிவு எடுங்கள் என்கவும் சரிடா வசு.நீ சொன்னா அது சரியா தான் இருக்கும் என்றவர் வெற்றி கிட்ட கொடுக்கட்டுமா என்கவும் குடுங்க ணா என்றார்.

இந்தா வெற்றி என போனை கொடுக்க ஏம்மா எல்லாம் தெரிஞ்சி தான் அனுப்புனீங்களா?என்க...காரணம் இல்லாமல் உன் அம்மா எந்த செயலும் செய்ய மாட்டார் என்று உனக்கு புரியவில்லையா வெற்றி என்று வசந்தரா அந்த பக்கம் இருந்து கேட்க, நான் இப்படி ஒரு பக்கத்தை சுதாரிக்கலைமா என்றான்.

போலீஸ்காரனாய் இருக்கும் உன்னிடம் இப்படி ஒரு அசட்டை தனமான பதில் என்னைக்கும் வரவே கூடாது.இதுவே முதலும் கடைசியுமாக இருக்கட்டும். செழியனுக்கு விஷயம் தெரியும் என்கவும் சாரி மா என்றான்.

ஓகே...சரி வெக்கேஷனை நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாங்களென்று வசு சொல்ல,பல்லை கடித்தவன் பிளான் பண்ணி அனுப்பிவிட்டு இதில் பெருசா பத்து நாள் லீவு கொடுத்த போல உனக்கு பெருமையாம்மா?

ஹா ஹா என்று சிரித்த வசுந்தரவோ என்னோட டார்லிங் போன் பண்றாரு நீ கட் பண்ணுடா என்றார்.ஓஓஓ அப்பாவா என்கவும் ஆமாம் என்று சொன்னவர் கணவர் சுந்தரமூர்த்தியிடம் இருந்து வந்த காலை அட்டென்ட் பண்ணி கான்ப்ரன்ஸில் போட,தாரா டார்லிங் எப்படி இருக்கீங்க???

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லப்பா என்று வெற்றி சொல்ல,கண்ணா நீ எப்படி??வேலை எப்படி போகுதென்று மகனிடம் விசாரிக்க,எல்லாம் உங்க பொண்டாட்டி பிளான் பண்ணி தான் எங்களை துரத்தி விட்டுருக்காங்க.
இது எதுவுமே தெரியாத போல நடிக்காதீங்கப்பா என்றான்.

டேய் உங்க வேலை விஷயத்துல நான் என்னைக்குமே தலையிட மாட்டேன் புரியுதா,உன்னோட மேலதிகாரி என்ன சொல்றாரோ அதை நீ கேட்டுதான் ஆகணும் என்க,முதல்ல நீங்க ரெண்டு பேரும் எனக்கு அப்பா அம்மா பிறகு தான் வேலை என்றான்.

சரி சரி இப்போ உன் கூட வாதம் பண்ண எனக்கு நேரமில்லை.என் டார்லிங் கூட என்னை பேச விடுடா.ரெண்டு நாளா போனே பண்ணலை.நீ கட் பண்ணு என்கவும் பேரப்பிள்ளைகள் தூக்கின வயசுல உங்க ரெண்டு பேருக்கும் ரொமான்ஸ் ஒன்னு தான் கேடா என்றான்.

பொறாமைப் படாதடா வைடா என்க சரி வைக்கிறேன் என்று சிரித்துக் கொண்டே கட் பண்ணினான்.

சரிப்பா எல்லாரும் குளிச்சிட்டு வாங்க காலை சாப்பாடு சாப்பிடலாம் என்று வானதி சொல்ல,ஆமாத்தை நைட் எல்லாம் டிராவல் பண்ணிட்டு வந்தது ரொம்ப பசிக்குது.

சீக்கிரம் சோத்த போடு என்று வெற்றி சொல்லவும்,ஏத்தா என்ன பண்ணிருக்க என்று மருமகளிடம் கேட்க,பூரிக்கு மாவு பிசைஞ்சிருக்கேன்.மசாலாக்கு உருளைக்கிழங்கு வேக வச்சிருக்கேன் அத்தை என்கவும் அப்படியா ரொம்ப நல்லது.

"வெற்றிக்கு பூரி பிடிக்கும்"

உன் அண்ணன் கபிலனுக்கு தோசை தான் பிடிக்கும்.வெற்றி போல கபி அவ்வளவு சீக்கிரம் வாயை திறக்காது மா.பார்த்து பக்குவமாக செய் என்கவும் சரிங்க அத்தை என்றாள்.

அம்மா நீங்க தம்பிய புடிங்க நானும் ஷமீரா கூட போய் வேலை பாக்குறேன் என்று ஜனனி சொல்ல,இருக்கட்டும் கா நான் பார்க்கிறேன் என்று சொல்லவும் நம்முடைய வீடு டா,அதான் அண்ணி இருக்கேன் இல்லையா நீ ஏன் கவலைப்படுகிறாய் என்றவள் ஷமீராவோடு கிச்சனிற்குள் போக, ரியாவும் தோளில் தூங்கிய குழந்தையை உள்ளே போய் பெட்டில் கடத்தி விட்டு அவர்களோடு போய் இணைந்து கொண்டாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
370
வசுந்தரா பேசியதை கேட்ட செல்லதுரைக்கு ஏதோ ஒரு விஷயம் இருக்குது. "அது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை"

"மலையம்மா"

நீ தான் கூட இருக்கணும்னு மனதிற்குள் வேண்டிக் கொண்டவர் பின்னர் பொதுவாக பேசிக் கொண்டிருக்க,கிச்சனில் இருந்தவளுங்களோ அரட்டை அடித்தபடியே காலை சமையலையும் செய்து முடித்து விட்டு ஹாலுக்கு வந்து அவர்களோடு இணைந்து கொண்டார்கள்.

மாடியில் தூங்கி எழுந்த செழியனோ குளித்து தயாராகி படியிலிறங்கி வர "ஷூ சத்தம்" கேட்டு மாடிப்படியை பார்க்க,அவனது வீட்டினரோ செழியனை பார்த்து அதிர்ச்சியாக, கபிலனும் வெற்றியும் சிரித்துக் கொண்டு சல்யூட் அடித்தனர்.

பேயறைந்த போல் நிற்கும் தனது அப்பா அம்மா மற்றும் மனைவியின் முகத்தை பார்த்த செழியனோ கண்ணை மூடி திறந்து மூச்சை இழுத்து விட்டவன் ஏதோ சொல்ல வாய் எடுக்க...

அந்நேரம் வீட்டின் முன்னால் வந்து நின்ற போலீஸ் ஜீப்பில் இருந்து இரண்டு கான்ஸ்டபிள் இறங்கி உள்ளே வந்தவர்கள் அங்கிருந்த மூரையும் பார்த்து சல்யூட் அடித்தனர்.

இவர்களும் பதிலுக்கு தலையை அசைக்க,என்னடா நடக்குது இங்கே என்பது புரியாமல் செல்லதுரை வானதி ஷமீரா மூவரும் செழியனை பார்த்தனர்.

அப்பா என்று கூப்பிடும் போதே செழியனுக்கு தொண்டை அடைத்தது.க்கும் என்று கணைத்து தன்னை சரி பண்ணிக் கொண்டவன் எதாக இருந்தாலும் நான் வந்து பிறகு கேளுங்கப்பா.

இப்போது எனக்கு முக்கியமான வேலை இருக்கு நான் போயிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு செல்லதுரை-வானதி இருவரின் காலில் விழ,அவர்களோ பொம்மை போல் மகனின் தலையில் கை வைத்து ஆசீர்வாதம் பண்ணினர்.

அதிர்ந்து போய் நிற்கும் மனைவியை தீர்க்கமாக ஓரு பார்வை பார்த்து இடது பக்க மீசையை முறுக்கி விட்டு,அங்கிருந்த கான்ஸ்டபிள்ஸை பார்த்தவன் வாங்க ணா போகலாம் என்கவும்,சரிங்க தம்பி என்று அவர்கள் முன்னே செல்ல இளஞ்செழியனோ ஐபிஎஸ் உடையில் கம்பீரமாக வெளியே சென்றான்.

செழியன் வீட்டின் முன்பு போலீஸ் வண்டி நிற்பதை கேள்விப்பட்டு எல்லாரும் பதறி ஓடி வந்து பார்க்க, அவனோ போலீஸ் உடையில் வருவதை கண்டு அதிர்ந்து போய் நின்றனர்.

அப்பொழுது வேகமாக ஓடி வந்த கண்ணன்,செழியன் யுனிபார்மில் இருப்பதை கண்டு தயங்கி நிற்க, கண்ணை மூடி திறந்தவன் மாப்பி வா என்று கண்ணனின் தோளில் கையை போட்டு காதில் எதுவோ சொல்லவும், அவனும் சரியென்று தலையசைக்க பின்னர் ஜீப்பில் ஏறிய செழியனோ தனது கடமையை நிறைவேற்ற அங்கிருந்து புறப்பட்டு சென்றான்.

வீட்டிலிருந்த செல்லதுரையும் வானதியும் இடிந்து போய் சோபாயில் உட்கார,அப்பா மாமா என்று கபிலனும் வெற்றியும் பதறிப் போய் அவர் தோளில் கை வைக்க,பெருமூச்சு விட்டவர் அப்பு உன் மாமன் எதையும் தாங்குறவன்.

என்ன விஷயம் பா மறைக்காமல் சொல்லுங்களென்று வெற்றி- கபிலனிடம் கேட்க,கண்டிப்பாக மாமா என்றவன்,கபி போய் அந்த போட்டோவை எடுத்துட்டு வா என்கவும், ஹம் என்றவன் அங்கிருந்த வம்சிகனின் போட்டோவை எடுத்துட்டு வந்தான்.

எதுக்குப்பா அண்ணனோட போட்டோ?.

காரணமாக தான் எடுத்துட்டு வரேன் என்றவன் இவங்க யாருப்பா என்று கேட்க,என்னோட இரண்டாவது அண்ணன் வம்சிகன்.எனக்கு மொத்தம் நான்கு அண்ணனுங்க.மூத்தவர் கேசவன் இரண்டாவது வம்சிகன் மூன்றாவது வாஞ்சிநாதன் நான்காவது நான்.

நாங்க மூணு பேரும் விவசாயத்தை பார்க்க வம்சி அண்ணா மட்டும் காலேஜ் போய் படிச்சிது.அதோட கூட்டாளி தன்ராஜ்.சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் நல்லா படிப்பாங்க. தன்ராஜ் அண்ணா சென்னைக்கு டாக்டர் படிப்பு படிக்க போக,வம்சி அண்ணன் காலேஜ் படிச்சிட்டு போலீஸ் ட்ரைனிங் போயிருக்கு...

இந்த விஷயம் எங்களுக்கு தெரியவே தெரியாதுப்பா.எங்க அப்பா அம்மாவுக்கு தெரியாம ட்ரைனிங் போய் அண்ணன் செலக்ட் ஆயிடுச்சு.அதுக்கு முதல் போஸ்டிங் பீகாரில் போட்டு இருந்தாங்கன்னு வீட்ல வந்து சொல்ல, எங்க அப்பாவும் அம்மாவும் அதுக்கு ஒத்துக்கவே இல்லை.

போலீஸ் வேலை தூக்கி போட்டுட்டு எங்க புள்ளையா இருன்னு சொன்னதும் அண்ணா அதை கேட்காம எனக்கு புடிச்ச வேலையை நான் பார்த்தே தான் தீர்வேன்னு பிடிவாதமா இருக்க,எங்க அப்பா என்ன சொன்னாருனா உனக்கு அந்த போலீஸ் வேலை தான் வேணும் என்றால் இந்த அப்பா வேணாம்னு தலை முழுகிடுன்னு சொல்லவும், அண்ணனோ வேற வழி இல்லாம ஒரு குடிமகனாக இந்த நாட்டுக்கு சேவை செய்யணும்னு நினைக்கிறேன்.

"ஒரு குடும்பத்துக்காக ஒருத்தனை இழக்குறது தப்பே இல்லை பா"நான் இறந்து போயிட்டேன்னு நினைச்சுக்கோங்க என்று சொல்லிட்டு அண்ணன் போயிடுச்சு.அஞ்சு வருஷம் வரைக்கும் அண்ணன் கிட்ட இருந்து எந்த தகவலும் இல்லை.

ஆறாவது வருஷம் தான் தன்ராஜ் அண்ணா மூலயமா அண்ணன் டெல்லியில் கமிஷனரா இருக்கிற விஷயம் எங்களுக்கு தெரிஞ்சது.அப்பாவுக்கு தெரியாம நானும் என்னோட பெரிய அண்ணன் கேசவனும் டெல்லிக்கு போயிருக்கும் போது தான் அண்ணனுக்கு கல்யாணம் ஆகி ஒரு பையனும் ஒரு பொண்ணும் இருக்கிற விஷயமும் தெரிஞ்சது.

எங்களை பார்த்து அண்ணனும் கட்டிப்புடிச்சு அழுதுச்சு.என்ன பண்றது குடும்பமா ஆயிட்டாங்க,சரி இனியாவது ஊருக்கு வா என்று நானும் அண்ணனும் கூப்பிட்டோம்.

நம்ம கோயில் குடைக்கு வந்துடு டா அப்பாவும் அம்மாவும் உன்ன பாக்காம உள்ளுக்குள்ள உடைஞ்சு போயிருக்காங்க அப்படின்னு பெரியண்ணன் சொல்ல,சரி நான் கண்டிப்பாக வருகிறேன் என்று சொல்லுச்சு.

இரண்டு நாள் அங்க இருந்துட்டு நானும் அண்ணனும் ஊருக்கு வந்து ஒரு வாரம் கழிச்சு நியூஸ்ல பார்த்தோம் டெல்லி கமிஷனர் வம்சிகன் குடும்பத்தோடு தீ விபத்தில் பலி என்று, அதைப் பார்த்த அதிர்ச்சியில் எங்க அம்மா இறந்துட்டாங்க.எங்க அம்மா இறந்து போன கவலையில் எங்க அப்பாவும் கொஞ்ச நாள் உடம்பு சரியாம இருந்து இறந்துட்டாரு.

அதுல இருந்து போலீஸ் என்ற வார்த்தையே புடிக்காம போயிடுச்சு. ஒருவேளை எங்க அண்ணன் போலீஸாகாமல் இருந்திருந்தால் கண்டிப்பா குடும்பத்தோடு இன்னைக்கு இருந்திருப்பாரு.

அந்த வெறுப்புல தான் செழியனை கூட போலீஸ் படம் நான் பார்க்க விடுவது கிடையாது.ஆனால் இன்றைக்கு அவனே போலீஸா இருப்பானு சத்தியமா நான் எதிர்பார்க்கவே இல்லப்பா என்று சொல்லி செல்லதுரை கண்கலங்கினார் .

இதைக் கேட்டவர்களோ வம்சிகன் குடும்பத்தை நினைத்து கவலைப்பட்டனர்.

அப்பொழுது தொண்டையை கணைத்த வெற்றி,மாமா ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.

அதை தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவம் உங்களுக்கு இருக்குன்னு எனக்கு தெரியும் என்க,ஹம் சொல்லு அப்பு...இன்னும் என்ன இடி இருக்கு என்க,அதாவது நீங்க சொல்ற போல தீ விபத்துல சார் இறக்கவில்லை. திட்டமிட்ட கொலை என்கவும்,என்னப்பா சொல்ற என்று அதிர்ந்து போய் எழுந்தார்...!!!

மகி நினைவுகள்:

காய்கறிகள் கீழே விழும் சத்தத்தில் திரும்பிப் பார்த்த மேரியோ அங்கே தனது மகன் இருப்பதை பார்த்து வா மகி.பையை ஒழுங்கா புடிக்கிறது இல்லையா?

காய்கறிகள் எல்லாம் எப்படி சிதறி கிடக்கிறது பாரு..

ஏன் யா வீட்டு வேலைக்கு இப்படி மாசமா இருக்க பொண்ணையா வைப்பாங்க? பாவம் இல்லையா என்று எழுந்து போய் கீழே கிடந்த காய்கறிகளை பொறுக்க மானசாவோ அவர் சொன்ன வார்த்தையை கேட்டு அதிர்ந்து போய் நின்றாள்.

தாயின் குரலில் சுதாரித்த மகி வா மா எப்ப வந்த?என்ன திடீர்னு வந்திருக்க என்று பதட்டப்பட,ஆமா நீயும் வந்து ஆறு மாசத்துக்கு மேல ஆகுது.வேலைன்னு ஓடிட்டே இருக்குற நான் ஒரு நல்ல விஷயமா தான் வந்து இருக்கேன்.

அப்பாவுக்கு ஏதோ மீட்டிங்ன்னு போயிட்டாரு இல்லன்னா அவரும் கூட வந்திருப்பார்.

அந்தோணிக்கும் ராணிக்கும் கல்யாணம் ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கு,அப்படியே உனக்கும் எஸ்தருக்கும் கையோட கல்யாணத்தை முடித்துவிடலாம் என்கவும்,என்னம்மா சொல்ற என்று மகி அதிர..

என்னப்பா புதுசா கேக்குற போல சொல்ற?

உனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து எஸ்தர் தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு உங்கிட்ட சொல்லிட்டு தானே இருந்தேன்,என்னமோ இப்பதான் புதுசா நான் சொல்ற போல கேட்கிற என்க..

அது வந்து அம்மா என்று மகி தயங்க சரி கொஞ்ச நேரம் இரு,குடும்ப சூழ்நிலைக்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதாக இருக்கு பாரு.வாயும் வயிறுமா இருக்கும் பொண்ணை எதுக்கு வேலைக்கு வச்சிருக்கிற?

அந்த பொண்ணுக்கு ஏதாச்சும் காசு கொடுத்து அனுப்பு.இங்க பாருமா குழந்தை பிறந்து உனக்கு கொஞ்சம் உடம்பு நல்ல ஆன பிறகு நீ வந்து என் பையனுக்கு வேலை எல்லாம் செஞ்சு கொடு.நீ வந்து போக ஏதாவது ஒன்னு கடக்க ஒன்னு ஆனால் அந்த பாவம் எதுக்கு என்கவும்,மானசாவிற்கோ மேரி பேசியதெல்லாம் கேட்டு ஆத்திரம் வர, கொஞ்சம் வாயை மூடுகிறீர்களா..

யாரைப் பார்த்து வீட்டு வேலைக்கு வந்தவள்னு சொல்லிட்டு இருக்கீங்க?

இதோ கருங்கல் போல நிக்கிறாரே உங்கள் மகன் அவரு தாலி கட்டுன பொண்டாட்டி நானு என்கவும்,என்ன என்று அதிர்ந்து போன மேரியோ மகனை பார்க்க,மகியோ எதுவும் பதில் சொல்ல முடியாமல் கீழே குனிந்து கொண்டார்.

தாசு அந்த பொண்ணு சொல்றதெல்லாம் உண்மையா என்று கேட்க,மகி அமைதியாக நிற்கவும் வாயை திறக்க போறியா இல்லையா சொல்லு?

அந்த பொண்ணு சொல்றதெல்லாம் உண்மையா என்று கேட்க,ஆமாம் என்கவும் மகனை பளார் பளாறென்று அறைந்தவர் யாரை கேட்டு இவளை கல்யாணம் பண்ணின?

இவளை பாத்தாவே ஏதோ இந்து குடும்பம் போல தெரியுதே,நம்ம குடும்பம் என்ன கோத்திரம் என்ன என் பரம்பரை கௌரவத்தை எல்லாம் குழி தோண்டி புதைப்பதற்கா உன்னை படிக்க வைத்து ஆளாக்கினேன்?

நீ என்ன பண்ணுவியோ ஏது பண்ணுவியோ தெரியாது,இவளுக்கு எவ்வளவு காசு வேண்டுமோ அதை கொடுத்துட்டு கையோடு என்கூட வர. இந்த வேலை எல்லாம் உனக்கு ஒன்னும் தேவை கிடையாது .

நாம் இருக்கிற நிலைமைக்கு நாலு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம் என்கவும்,அம்மா கொஞ்சம் அமைதியா இரும்மா.நான் மனசார விரும்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

நாலு வருஷம் ஆகுது என்கவும்,என்ன நாலு வருஷம் ஆகுதா என்று நெஞ்சில் கையை வைத்தவர்,எப்படிடா இவ்வளவு பெரிய விஷயத்தை செஞ்சுட்டு ஒன்னும் தெரியாது போல இருந்துருக்க என்று மேலும் இரண்டு அறையை விட்டவர் எஸ்தர் தான் என் வீட்டுக்கு மருமகளா வரணும்.

இல்லன்னா இந்த நிமிஷமே நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்றவர் வேகமாக போய் கிச்சனில் இருந்த அருவாமனையை எடுத்து தனது கழுத்தில் வைத்துக் கொண்டார். .



வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top