• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
467
வனிச்சூர்:

வேலையை முடித்து எல்லாரும் கலைந்து செல்ல கண்ணன் செல்லதுரை செழியன் மூவரும் ஒரு முறை கரும்பு தோப்பை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்த போரிலேயே குளித்தவர்கள் பின்னர் மோட்டாரை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

கண்மணியும் கவிதாவும் ஹாலில் உட்கார்ந்து காபி குடித்துக் கொண்டிருக்க ஷமீராவோ இருவருக்கும் பஜ்ஜி சுட்டு எடுத்துட்டு வந்து கொடுக்கவும் அந்த நேரம் இவர்கள் இருவரும் உள்ளே வர என்னடி என் பொண்டாட்டிய வேலை வாங்குறீங்களானு செழியன் கேட்க, யோவ் மாமா உன் வேலையை பாருயா...

என் அக்கா எங்களுக்கு செய்யுது உனக்கு எங்க பத்திக்கிட்டு போகுது என்று கவிதா சொல்ல,இங்க தாண்டி பத்திகிட்டு போகுது என்று தனது நெஞ்சை காட்டி செழியன் சொல்லவும் போய் கடப்பாரையை எடுத்து குத்திக்க சரியாயிடும் என்றாள்.

என்னா வாய் என்றவாறு படியில் ஏறி மேலே போன செழியன் அங்கிருந்து மனைவியை கண்ணசைத்து மாடிக்கு வா என்று சொல்ல அவளோ முடியாது என்று தலையை அசைத்தாள்.

ஒழுங்கா வந்துடுது என்று விரலைக் காட்டி சொல்லிவிட்டு செழியன் மேலே போக,அதா உன் புருஷன் கண்ணாலே கூப்பிடுறாரு போக வேண்டியது தானே என்று கண்மணி சொல்ல, ஏன்டி இப்படி என்று ஷமீரா சிரிக்க நீங்க நடத்துங்க.

உங்க காட்டில் இப்ப மழை பெய்யுது நனைஞ்சு தானே ஆகணும் என்று அவளும் சிரிக்க போடி என்றவாறு கண்மணி முதுகில் ஷமீரா ஒரு அடியை வைத்தாள்.

சரி நான் போய் உங்க மாமாக்கு டீ கொடுத்துட்டு வரேன் என்று சொல்ல, ரொமான்ஸ் பண்ண போறேன்னு சொல்லிட்டு போக்காக என்று கவிதா சிரிக்கவும்,பேச்சை பாரு என்று சிரித்துக் கொண்டே கிச்சனுக்கு போனவள் கணவனுக்கு சூடாக டீயும் பஜ்ஜியும் எடுத்துக்கொண்டு மாடியில் இருக்கும் ரூமிற்குள் போக,செழியனோ கண்ணாடி முன்பு நின்று தலை சீவிக் கொண்டிருந்தான்.

இந்தாங்கள் டீ என்று எட்டி நின்று நீட்ட,ஏன் கிட்ட வந்து கொடுக்க மாட்டீர்களோ என்பவனை பார்த்தவள் உங்களைப் பற்றி தெரிந்ததால தான் இந்த முன்னெச்சரிக்கை என்றாள்.

செல்லம் மாமா பயங்கரமா வேலை செஞ்சுட்டு ரொம்ப டயர்டா வந்துருக்கேன்.சோ இப்போ ரொமான்ஸ்கு பிரேக் விடுறேன்.கிட்ட கொண்டு வந்து குடு டி என்கவும் ஷமீராவும் பாவம் பார்த்து கிட்ட போய் கொடுக்க அங்கிருந்த கட்டிலின் மேல் உட்கார்ந்து கொண்டேவன் நீ என்க நான் காபி குடிச்சிட்டேனென்றாள்.

சரி சரி என்றவன் செல்லம் நாளைக்கு நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வராங்க என்கவும் யாருங்க என்றாள்.ஏற்கனவே உன்கிட்ட சொல்லி இருக்கிறேனே என்க,யோவ் பேர சொல்லாம மொட்டையா இப்படி சொன்னா என்ன அர்த்தம் என்று ஷமீரா முறைக்க அட ஆமா...

ஏய் நான் சொல்லி இருக்கிறேனே டெல்லியில் வெற்றியும் கபியும் இருக்கிறார்கள்னு.அவங்க ரெண்டு பேரும் பேமிலியோட நம்ம வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்காங்க டி என்றான்.

அப்படியா சந்தோஷம் தான்.குழந்தை கூட பிறந்துச்சு பாக்க போனீங்க இல்லையா என்கவும் ஆமா டி.போன வருஷம் பிறந்துச்சு.வெற்றிக்கு மூணு வயசு பையன் இருக்கிறது தான் உனக்கு தெரியுமே என்கவும் ஆமா சொல்லிருக்கீங்க.

சரிங்க வரட்டும் சந்தோஷம் தானே என்கவும் ஆமாடி இரண்டு பேரும் பார்த்தா போலீஸ் ஆபீஸர் போல இருக்காது அவ்வளவு லந்து கொடுப்பார்கள்.இங்க இருக்கிற வரைக்கும் அவங்கள நல்லபடியா கவனிக்கணும் டி என்க,சரிங்க,இதை நீங்க சொல்லணுமா என்றாள்.

பொள்ளாச்சி:

போன் ரிங்டோன் சத்தம் கேட்கவும் கண்மூடி சோபாவில் உட்கார்ந்திருந்த பாயல் டீப்பாயின் மேலிருந்த போனை எடுத்துப் பார்க்க,அதில் வசு என்று வரவும் உடனே அட்டென்ட் பண்ணியவர் வசு நல்லா இருக்கியா?

என்ன ஆச்சு என்க...அந்த அமர்நாத்தை தூக்கி உள்ள வச்சுட்டு தான் மறு வேலை பார்ப்பேன் என்கவும் கண்டிப்பாக வசு.இத்தனை வருஷம் அவன் ஆடுன வரைக்கும் போதும்.

அவனுக்கு தண்டனை கிடைத்த பிறகு தான் அந்த மண்ணுல நான் கால் வைப்பேன் என்று பாயல் சொல்லவும் கண்டிப்பா டி.இத்தனை வருஷம் எனக்கு தெரியாம போயிடுச்சு.என்ன மன்னிச்சிடுடி.நீ ஊருக்கு போனதும் உன்னை காண்டாக்ட் பண்ண முடியாமல் போயிடுச்சு அதனாலதான் இந்த நிலைமை என்கவும்,விடு வசு.

பாண்டியன் அங்கிள் சொன்ன போல விதியின்னு ஒன்னு இருக்கேடி என்று சொல்லும் போதே பாயலின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து ஓடியது.

பணத்தை வைத்து இத்தனை வருஷம் தப்பிச்சிட்டான் இந்த முறை நம்ம புள்ளைங்க அவனை தப்பிக்க விட மாட்டாங்க பாயல்...

நீ சாப்பிட்டு நிம்மதியா இரு புரியுதா என்கவும்,இன்னும் ரெண்டு நாள்ல அந்த சம்பவத்தோடு நினைவு நாள் வருதே...20 வருஷமாக தான் கோமாவில் இருந்துட்டேனே என்று கண்கலங்க,விடு பாயல்...

போனது பற்றி பேசி ஒன்றும் புண்ணியம் இல்லை.ருத்ரன்-ரூபா இருவருக்கும் நீ வேண்டும் டி.தன்ராஜ் கிட்ட தான் நீ உயிரோட இருப்பதை சொல்ல வேண்டாமென்று சொல்லிட்ட,சோ இவர்களை பற்றி யோசி என்றவர் தோழியிடம் மேலும் சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தார்.

ரூமிற்கு போன பாயல் கபோர்டில் இருந்த பேகை திறக்க அதில் பழைய ஆல்பம் ஒன்று இருந்தது.அதை எடுக்கும் போதே கண்கள் கலங்க கண்ணை மூடி கண்ணீரை வெளியேற்றியவர் ஆல்பத்தை திறந்து பார்க்க கடந்த கால நினைவுகள் எல்லாம் பாயலுக்கு வந்து சென்றது.

தனது இரண்டாவது அக்கா ஹீரல் அவர் கணவர் வம்சிகன் புகைப்படத்தை பார்த்து சத்தமின்று கதறி அழுதவர் உங்களோட சாவுக்கு காரணமானவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேனென்று அந்த ஆல்பத்தை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணை மூட கண்ணில் இருந்து கண்ணீர் ஆராய் பெருக்கெடுத்து ஓடியது.

அப்பொழுது பாயலுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்கவும் கண்ணை திறந்தவர் பெட்டின் மேல் இருந்த போனை எடுத்துப் பார்க்க பேட்டா என்று வரவும் அட்டென்ட் பண்ணியவர் ருத்ரா எப்படிப்பா இருக்கீங்க ஒன்னும் பிரச்சனை இல்லையே நல்லா தானே இருக்கீங்க என்று பதறவும்,சாச்சி எதுக்கு இவ்வளவு பதட்டப்படுறீங்க, நாங்க நல்லா இருக்கிறோம்.

ஒரு முக்கியமான விஷயம் சொல்றதுக்காக தான் கால் பண்ணினேன் என்கவும் சொல்லு பேட்டா.ரூபா ஜூலி தீபன் நல்லா இருக்காங்களா?

யாருக்கும் ஒன்னும் இல்லையேப்பா என்க ஐயோ சாச்சி இது சந்தோசமான விஷயம்.நீங்க நானியாகிட்டிங்க என்க, நிஜமாவா என்று தனது வேதனையை மறந்து பாயல் சந்தோஷத்தில் கேட்க, ஆமா சாச்சி.

உங்க மருமகள் கன்சிவாக இருக்கிறாள்.அடுத்த வாரம் நானும் தீபனும் மதுரையில் இருக்கும் மெடிக்கல் காலேஜில் ஜாயின் பண்றோம் என்று சொல்ல,அப்படியா ரொம்ப சந்தோஷம் பேட்டா என்றவர் ஜூலி கிட்ட போனை கொடு என்று மகனிடம் சொல்ல ருத்ரனும் தனது மனைவியிடம் ஃபோனை கொடுத்து பேச சொன்னான்.

அவர்களும் பேசிக்கொண்டிருக்க எஸ்தருக்கு அவர் யார் என்று தெரியாததால் அவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்ன ரூபா தீபனிடமும் பேசிவிட்டு போனை வைத்தவர் ஹூரல் உன் மருமகள் வயித்துல வந்து பிறக்க போறியா என்று சந்தோஷப்பட்டவர் அம்மா துர்கா தேவி 24 வருஷத்துக்கு முன்னாடி தான் எங்க குடும்பத்தை கைவிட்ட,இனியாவது என் பிள்ளைகளுக்கு துணையாக இருமா என்று வேண்டிக் கொண்டார்.

டெல்லி-ருத்ரன் வீடு:

எஸ்தரின் பார்வையை கண்டு அமைதியாக சிரித்த ருத்ரன், எல்லோருடைய வாழ்க்கையிலும் ஒரு ரகசியம் இருக்கிறது போல எங்களோட வாழ்க்கையிலையும் ஆறாத கொடுமையான ரகசியம் இருக்குங்கத்தை.

அது சொல்ல வேண்டிய நேரம் வரும்போது நிச்சயமா உங்ககிட்ட நான் சொல்லுவேன் என்கும்போது அவன் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோட...

அதை பார்த்த எஸ்தர் ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கு என்பதை புரிந்து கொண்டவர் கண்ணா அழாதப்பா உனக்கு எப்போ சொல்ல தோணுதோ அப்ப சொல்லு.

அத்தை உன்னை தப்பா நினைக்க மாட்டேன் என்கவும் சரிங்கத்தை என்றவன் மதுரைக்கு போக போறது பற்றி சொல்ல ரூபாவும் ஜூலியும் ஆர்கியுமென்ட் பண்ணியவர்கள் பின்னர் அவர்கள் வேலை விஷயமாக தானே போகிறார்கள் என்று சம்மதித்தனர்.

எஸ்தருக்கு மதுரை என்ற பெயரை கேட்டவுடன் தூக்கிவாரி போட்டது.ஐயோ நாம இவர்களோடு மதுரைக்கு போனால் ஷமீராவுக்கு தெரியுமா என்று யோசித்தவர் வாய்ப்பே இல்லை.அந்த ஊருக்கும் ஷமீரா இருக்கும் ஊருக்கும் தான் ரொம்ப தூரமாச்சே...

மகளுக்கு நாம் வீட்டை விட்டு வந்த விஷயம் தெரியக்கூடாது.புருஷன் கூட சந்தோஷமா வாழட்டும் என்று நினைத்துக் கொண்டவர் நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.

வெற்றி-கபிலன் வீடு:

காரை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே வர இருவரின் மனைவிகளான ஆதிராவும் ஜனனியும் அவரவர் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தனர்.

குழந்தைகள் இருவரும் அவர்கள் அப்பாவை பார்த்ததும் தாயின் மடியில் இருந்து இறங்கி ஓடிப்போய் இருவரின் கால்களை கட்டிக் கொண்டனர்.

ரியா-ஜனனி இன்னைக்கு நைட் நம்ம மதுரைக்கு போறோம்.
தேவையானதை பேக்கிங் பண்ணிக்குங்க.பத்து நாள் உங்க கூட தான் இருக்க போறோம் என்று வெற்றி சொல்லவும் ஜனனியோ தனது கணவன் சொல்வதை கேட்டு முறைத்துப் பார்க்க...

வெற்றியோ மனைவியின் பார்வையை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவன் மாமா உன் கூட தாண்டி இருக்க போறேன் என்க,ரியா மரியதையா உன் அண்ணன் வாயை மூட சொல்லு. இல்லன்னா எனக்கு இருக்கிற கடுப்புக்கு சாப்பாட்டு குண்டானை எடுத்து அந்த ஆள் மண்டையை பொளந்துருவேன் என்றாள்.

அண்ணா உண்மைய சொல்லுங்க எந்த கேஸ் விஷயமாக இப்ப மதுரைக்கு போறீங்க என்று ரியா கேட்க பாத்தியா டா என் பொண்டாட்டி எப்படி பாயிண்ட் புடிக்கிறாள்..

டாக்டருக்கு படிக்க வேண்டிய ஆளே இல்லடா வக்கீலுக்கு படிச்சிருக்க வேண்டியவள்.தப்பி தவறி பாரின்ல போய் மெடிசின் படிச்சிட்டாளென்று கபிலன் பெருமையாக சொல்ல...

தூ என்று துப்பிய ரியா நீ போட்ட சோப் போதும் மாமா.மூடிக்கிட்டு வேலைய பாரு என்கவும் அடிப்பாவி என்னடி மாமாவை இப்படி அசிங்கப்படுத்துற என்று கபிலன் பதற...

உன்னையெல்லாம் கட்டையால் சாத்தனும் வாயால பேசுறேனே அதுவரைக்கும் சந்தோஷப்படுயா.

ஒவ்வொரு வாட்டியும் உன் கேஸ் விஷயமா தான் போக பிளான் பண்ற. கடைசி நேரத்தில் நீங்கள் இரண்டு பேரும் எஸ்ஸாகிடுறிங்க.இந்த முறையும் அதே பிளான்தானே என்கவும் ஐயோ செல்லம் அப்படியெல்லாம் ஒன்றுமே கிடையாது டி இதோ டிக்கெட் என்று காட்டினான்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
467
கபிலன்-ரியா,வெற்றிவேல்-ஜனனி தம்பதிகள் அவர்கள் இருவரின் குழந்தையோடு டெல்லி ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தனர்.அவர்களுக்கான மதுரைக்கு செல்லும் பிளைட் வர இன்னும் ஒரு மணி நேரம் இருக்க உண்மையாவே எங்களை டூர் தான் கூட்டிட்டு போறீங்களா?

இல்ல கேஸ் விஷயமா ஏதாவது கோல்மால் பண்ணிட்டு வரீங்களா என்று மீண்டும் ஜனனி கேட்க,ஏண்டி இப்படி சந்தேகப் பிறவியா இருக்குற வாய மூடிட்டு வா டி என்ற வெற்றி தனது பல்லை கடித்தான்.

அப்ப வேறு ஏதோ விஷயம் இருக்கும் என்று மாறி மாறி பேசிக் கொண்டிருக்கும்போது அவர்கள் பிளைட்டிற்கான அறிவிப்பு வந்ததும் இவர்களும் சென்றனர். .

சிறிது நிமிடத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானமோ மதுரை ஏர்போர்ட்டிற்கு வந்து சேர்ந்தது. வழக்கமான பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்துக் கொண்டு வெளியே வர அவர்கள் செல்வதற்கான காரும் அங்கு டிரைவரோடு தயாராக இருந்தது.

வெற்றியிடம் டிரைவர் நலம் விசாரிக்க நல்லா இருக்கிறேன் ணா என்றவன் ஊர்ல எல்லாரும் நலமா என்க,நல்லாருக்காங்க தம்பி..

சரிங்க அண்ணா எப்படியும் ஒரு வாரத்தில் அங்க வீட்டுக்கு வரேன் அப்பா கிட்ட சொல்லிடுங்க வேற எதுவும் சொல்ல வேணாம் என்கவும் சரிங்க தம்பி என்றார்.

சாப்பிட்டு பஸ் ஏறுங்கள் என்கவும் சரிங்க தம்பி என்க,அனைவரும் அங்கிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு டிரைவரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டவர்கள் மதுரையிலிருந்து வனிச்சூரை நோக்கி கிளம்பும்போதே நள்ளிரவு ஒரு மணி ஆனது.

வெற்றி காரை நான் ஓட்டுறேன் டா என்று கபிலன் சொல்ல வேண்டாம் டா. உனக்கு இந்த ரூட் அந்த அளவுக்கு தெரியாது.பகல்னா பரவாயில்லை...

நான் ஓட்டுறேன் என்கவும் ஆமா இந்த கொய்யா பிறந்ததில் இருந்து இங்கு தான வளர்ந்தாரு இவருக்கு மட்டும் பாதை நல்லா தெரியும் என்று ஜனனி சொல்ல,அடியேய் நாலஞ்சு முறை நான் கார்லையே இங்கு வந்துருக்கேன் டி.

ஆனால் உன் நொண்ணன் பஸ்ல தான் வந்துருக்கிறான்.எதுக்கெடுத்தாலும் என் மூக்கை உடைக்கிறதே உனக்கு வேலையா இருக்குடி என்றவன் கண்ணாடி வழியாக பின்னாடி உட்கார்ந்து இருக்கும் மனைவியை பார்த்து முறைத்தான்.

செழியன் வீடு

பலவித யோசனையோடு மொட்டை மாடியில் செழியன் நடந்து கொண்டிருக்க,என்ன இந்த மனுஷனை இன்னும் காணும் என்று படியில் ஏறி மேலே வந்த ஷமீராவோ அங்கு நடந்து கொண்டிருப்பவனை பார்த்தவள் அப்படி என்ன இந்த மனுஷன் தீவிர யோசனையில் இருக்கிறார் என்றவாறு கணவனின் நோக்கி வர...

கொலுசு சத்தத்தில் திரும்பியவன் மனைவியை பார்த்து என்னடி ரெடியா என்று சிரிக்க ஷமீராவோ கணவனை முறைத்து பார்த்தாள்.

உங்களுக்குக்கு எப்ப பார்த்தாலும் அதே ஞாபகமா என்று முறைக்க,எந்த ஞாபகம் செல்லம் சொல்லு பார்க்கலாமென்று ஒன்னும் தெரியாதபோல் செழியன் கேட்க,இப்ப எதுக்கு ரெடியான்னு கேட்டிங்க அதுக்கு தான்..

நான் தூங்குறதுக்கு ரெடியானு கேட்டேனே தவிர வேறு ஒன்றும் இல்லையே டி.அப்போ உனக்கு ஆசை என்று சொல்லுடி என் கள்ளி என்று மனைவியின் கன்னத்தை இரண்டு பக்கம் பிடித்து ஆட்டினான்..

எதேஏஏ எனக்கு ஆசையா என்று கண்கள் விரிய ஷமீரா முறைக்க, மனசாட்சியை தொட்டு சொல்லு உன் புருஷன் மேல உனக்கு ஆசையே இல்லைன்னு என்றவாறு மனைவியின் கழுத்தின் மேல் கைகளை போட்டுக் கொண்டே கேட்க...

அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே என்று சிரித்துக் கொண்டே ஷமீராவும் சொல்ல உதடு தான் டி பொய் சொல்லுது பட் உன் மனசு பொய் சொல்லலையே.இப்போதைக்கு உனக்கு என்ன தேவைன்னு உன் புருஷனுக்கு தெரியுமே என்கவும் என்னவாம் என்றாள்.

இதுதான் என்றவாறு மனைவியை இழுத்து ஒரு சுத்து சுத்தியவன் குனிந்து கைகளில் தூக்கிக்கொண்டு அங்கிருந்த குடிலுக்குள் சென்றான்.

நேற்று போல் இன்றும் அந்த குடிலில் ரோஜா பூக்கள் தூவி அலங்கரிக்கப் பட்டிருந்தது.ஆனால் கேண்டில் இல்லை. தினமும் இப்படியா என்கவும்..நான் தான் முன்னாடியே உன்கிட்ட சொல்லிட்டேனே டி.

கண் மூடி மண்ணுக்குள் போற வரைக்கும் தினமும் நமக்கு முதலிரவுனு என்க,அது சும்மா விளையாட்டுக்கு சொல்றேன்னு நினைச்சுகிட்டு இருக்கியா என்க,அட பாவி புருஷா என்றாள்.

பாவி புருஷன் தான் அப்பாவி புருஷன் தான் என்றவாறு மனைவியோடு மெத்தையில் சரிந்தவன் தனக்குத் தேவையானதை இனிமையாகவும் வலிமையாகும் பெற்றுக் கொண்டே மனைவியை உறங்க விட்டான். ..

விடியலும் அழகாய் உதயமாக மதுரையிலிருந்து புறப்பட்டவர்கள் வனிச்சூரின் எல்லைக்குள் வந்து சேர காலை ஆறு மணி ஆனது.

கார் ஓட்டிக் கொண்டிருந்த வெற்றியோ நாலு வருஷம் இருக்குமாடா நம்ம இங்க வந்து என்கவும்,ஆமாடா.உன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை எடுத்துட்டு வந்தோமே அதுதான் இல்லையா என்று கபிலன் கேட்க ஆமாடா என்றான்.

இருவரும் பழைய கதைகளை பேசிக்கொண்டே பெரிய வீட்டின் முன்பு வந்து காரை நிறுத்த,அவ்வளவு அதிகாலையில் செழியன் வீட்டின் முன்னால் பெரிய கார் நிற்பதை பார்த்த அக்கம் பக்கம் இருப்பவர்களோ என்னவோ ஏதோவென்று பேசிக் கொண்டனர்.

வெற்றியோ ஹாரன் சத்தத்தை வேகமாக ஒலிக்க விட,வீட்டிற்குள் இருந்த செல்லதுரையோ யார் இவ்வளவு சத்தம் போடுவது என்றவாறு வெளியே வந்தவர் காருக்குள் இருந்த வெற்றியையும் கபிலனையும் பார்த்து அப்பு என்றவாறு வேகமாக வந்தார்.

சோழனூர்

வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு யார் வந்திருக்காங்க என்று யோசனையோடு ராணி எட்டிப் பார்க்க கதவை திறந்து பாபு தான் இறங்கி வந்தான்.

என்னப்பா வரேன்னு சொல்லவே இல்லையே என்கவும்,ஓரளவுக்கு எல்லா வேலையும் அங்கு முடிஞ்சிடுச்சு மா. அதனாலதான் நானும் கிளம்பி வந்துட்டேன் போதுமானு உள்ளே வந்தவனுக்கு இருமல் சத்தம் கேட்க,என்ன மா அப்பாவுக்கு உடம்பு சரியில்லையா?

அது வந்து பா..அது அப்பா இல்லை உன்னோட பாட்டி என்றார்.

பாட்டியா?

என்ன ஆச்சு என்று ரூம் கதவை திறந்து போய் பார்க்க அங்கே சாரதா பாட்டி படுத்திருப்பது தெரிந்தது.

பாட்டி என்று கூப்பிட கண்ணை மூடி படுத்திருந்தவரோ பேரனின் குரல் கேட்டு பட்டென்று திறந்தவர் ஐயா வந்துட்டியா என்கும் போது அவருக்கு அழுகை வந்தது.

வந்துட்டேன் பாட்டி எதுக்கு அழுவுறீங்க?

என்ன ஆச்சு?

உடம்பு சரியில்லைன்னு அப்பா கூட ஒரு வார்த்தை சொல்லவே இல்லையே என்று கோவப்பட,என் மவன் இருக்கிற வேதனைக்கு என்னத்தப்பா சொல்லுவான் என்று பாட்டி சத்தமாக கதற,ராணியோ கதவின் ஓரமாய் பயந்து கொண்டே நின்றார்.

"அய்யோஓஓ பாட்டி"

முதல்ல என்ன நடந்தது என்று தெளிவா சொல்லுங்க.இப்படி நீங்க அழுதுகிட்டே இருந்தால் என்ன அர்த்தம்?பத்து நாளைக்கு முன்னாடி கல்யாண வீட்டுல பார்த்தேன் ஜான்சிராணி போல கம்பீரமா இருந்தீங்கள்.

இன்னைக்கு என்னவென்றால் நோயாளி போல இப்படி இருக்கீங்களே என்ன ஆச்சு உங்க உடம்புக்கு?புரியிற போல சொல்லுங்க பாட்டி என்று கோபமாக கேட்க...

நம்ப தலையில அண்ணனும் தங்கச்சியும் இடிய தூக்கி போட்டுட்டாங்கப்பா.என் பொண்ணு காணாம போயி ரெண்டு வாரத்துக்கு மேல ஆகுது.பொண்ணு எங்க இருக்கான்னு தெரியலையே ராசாயென்று அழ,என்ன பாட்டி சொல்ற, அத்தையை காணுமாஆஆஆஆ?

இது எப்போ நடந்தது?

ஏன் ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லவில்லை என்கும் போது வெளியே போயிருந்த அந்தோணி வீட்டிற்கு வந்தவர் மகனின் கோவமான குரலை கேட்டு வேகமாக தனது சித்தி படுத்திருக்கும் ரூமிற்கு வந்தவர் வா பா...

எப்போது வந்த??

அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா என்க,தனது தந்தையின் குரலைக் கேட்டு வேகமாக திரும்பியவன் அப்பா தேவை இல்லாம சுத்தி வளர்க்காமல் நேரடியா விஷயத்துக்கு வாங்க.

என்ன நடந்துச்சு சொல்லுங்க என்று கடுப்பாக கேட்க,மகனின் முகத்தை பார்த்தவர் என் தங்கச்சி காணாமல் போய் பத்து நாளைக்கு மேல ஆகுது என்னால முடிஞ்ச அளவுக்கு நான் தேடிட்டு தான் இருக்கேன்.

எங்க போச்சின்னு என்னால கண்டுபிடிக்க முடியலை பா.அதைவிட ஒரு கூத்து என்னன்னாக்க உன் மாமனுக்கு இன்னொரு கல்யாணம் ஆகி குடும்பம் குட்டி என்று சந்தோஷமா வாழ்ந்துகிட்டு இருக்கான்.

இது உங்க அம்மாகாரிக்கும் நல்லா தெரியுமென்று கண்ணீரோடு சொல்ல,அதை கேட்ட பாபுவோ என்னப்பா சொல்றீங்க என்று அதிர, உண்மையை சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்.

அம்மா என்று பல்லை கடித்தவன் அப்பா சொல்லிட்டு போவதெல்லாம் உண்மையா என்க,மகனின் முகத்தை பார்த்தவர் ஆமாம் பா என்றார்.

உன் அண்ணனுக்கு எவ்வளவு திமிரு என் அத்தை வாழ்க்கையை இப்படி கெடுத்திருக்கிறாரே,அந்த ஆள் எல்லாம் மனுஷனா?

இது தெரிஞ்சும் இத்தனை வருஷம் அமைதியா இருந்துருக்கியே நீ எல்லாம் என்ன ஜென்மம்?உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தவே இல்லையா என்க, ராணியோ மகனின் கேள்வியில் அழுது கொண்டிருந்தாரே தவிர எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அப்பா அப்பா என்றவாறு தனது தந்தையின் ரூமிற்கு போனவன் ஏன் பா, போலீஸ்ல மிஸ்ஸிங் கேஸ் கொடுத்து பார்க்கலாமா?

ஏற்கனவே குடும்ப மானம் பாதி காத்துல பறந்துடுச்சு இன்னும் இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவு தானென்று அந்தோணி சொல்ல,வேறு எப்படி தான் பா அத்தையை கண்டுபிடிக்கிறது என்று உடைந்து போய் அங்கிருந்த கட்டிலில் உட்கார்ந்து விட்டான்.

அப்பொழுது பாபுவின் ஃபோனுக்கு கால் வர எடுத்துப் பார்க்கவும் பரத் என்பது தெரிந்து அட்டென்ட் பண்ணியவன் நான் நல்லபடியா ஊருக்கு வந்து சேர்ந்துட்டேன் என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தவன் எஸ்தர் காணாமல் போன விஷயத்தை பற்றி சொல்ல என்னடா சொல்ற என்று அதிர்ந்து போனான்.

ஆமாடா என்றவன் மகியின் விஷயத்தை சொல்ல ஐயோ கடவுளே இப்ப எப்படிடா தேடுவது என்கவும் அதுதான் எனக்கும் யோசனையாக இருக்கிறது.

ஏன்டா அப்பாவோட பிரண்ட் பையன் போலீஸா இருக்கிறாரே,அவங்ககிட்ட வேணா ஹெல்ப் கேட்டு பார்க்கலாமா என்கவும்,யாரடா சொல்றயென்று பாபு கேட்க,அதான்டா வெற்றிவேல் டெல்லியில் கூட சிபிஐ ஆபீஸராக இருக்கிறாரே.

நான் கூட நிறைய வாட்டி உன்கிட்ட சொல்லி இருக்கேன் டா அவங்க சொந்த ஊரு பொள்ளாச்சினு,அவங்களுக்கு கண்டிப்பா தமிழ்நாட்டுல ஹையர் ஆபீசர்ஸ் கூட லிங்க் இருக்கும்.

சொல்லி பார்க்கலாம் என்க,சரிடா நீ பேசி பார்த்துட்டு சொல்லு என்று சொல்லிவிட்டு போனை வைத்தவன் இது அவளுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியலையே என்று தலையில் கை வைத்துக் கொண்டான்.


வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
May 9, 2025
Messages
121
Aha Vetri is in Chelyans place, Babu go there and help Shamira
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top