• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
டெல்லி- சிபிஐ அலுவலகம்:

மகனின் முகத்தைப் பார்த்தவர் நீங்க கேட்டுக் கொண்ட போல டென் டேஸ் லீவ் எடுத்துக்கொள்ள பர்மிஷன் தருகிறேன் என்று வசுந்தரா சொல்ல,அது போதாது மா.இன்னும் ஒன் வீக் சேர்த்து கொடுங்கள் என்றான்.

நோ,அதற்கு வாய்ப்பில்லை வெற்றி என்கவும்,வேற வழி நீங்க சொன்னதை கேட்டு தானே ஆகணும் என்று பல்லை கடித்தவன்,தேங்க்யூ மேடம் என்று சொல்லிக்கொண்டு சல்யூட் அடித்து விட்டு அங்கிருந்து வெளியே செல்ல, கபிலோனோ அவரை பாவமாக பார்க்க அதான் உங்க தல போகுதே நீங்களும் போக வேண்டியது தானே என்று சிரித்தார்...

ஆன்ட்டி என்ற கபிலனை பார்த்தவர் கல்யாணம் ஆகி குழந்தை பெத்தவனுங்க போல நடந்துக்கோங்க. ரெண்டு பேரும் சின்ன பயலுகளை விட ரொம்ப மோசமா இருக்கிறீங்க என்றார்.

கபிலனும் வெற்றியும் வெளியே போன பிறகு மீண்டும் அந்த பைலை எடுத்து படித்து பார்த்தவர்,மிஸ்டர் அமர்நாத் இந்த முறை எங்ககிட்ட இருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது.

என்னோடு மூணு சிங்கங்களும் வருது என்ன பண்றன்னு நானும் பார்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தனது வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

வெற்றியும் கபிலனும் ஆபீஸிலிருந்து தங்களது கார் நிற்கும் இடத்திற்கு வந்தனர்.டேய் அந்த நாய்க்கு போனை போடு என்று சொல்லிக் கொண்டே டிரைவர் சீட்டில் வெற்றி உட்கார,ஏன் உன் போன்ல பண்ணினால் டச் தேஞ்சு போயிடுமா என்று கபிலன் கேட்கவும், விளங்காத பயலே...

உன் தங்கச்சி டிஸ்ப்ளேவை உடைத்து விட்டாள் பாருடா என்று தனது பாக்கெட்டில் இருந்த போனை எடுத்துக்காட்ட,அதை பார்த்த கபிலனுக்கு சிரிப்பு வந்துவிட்டது...

ஏண்டா நான் என்ன சோக்கா சொல்லிட்டு இருக்கேன் நீ பல்லை காட்டிட்டு இருக்க என்று முறைக்க,அது வந்து மச்சி வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமென்று முன்னோர்கள் சொல்லிருக்காங்க டா அதான் என்றான்.

நான் கொலைவெறியில் இருக்கேன் பார்த்துக்கோ என்றவாறு காரை ஸ்டார் பண்ணிய வெற்றி அங்கிருந்து அவர்கள் வீட்டை நோக்கி சென்றான்.

கபிலனும் நண்பனுக்கு கால் பண்ண அந்த பக்கம் அட்டென் பண்ணியவன் என்ன டா?

என்னமோ காதலிக்கு போன் பண்ற போல ஓயாமல் போன் போடுற என்கவும் ஸ்பீக்கரில் இருந்ததால் இதைக் கேட்ட வெற்றியோ செருப்பு பிஞ்சிடுமென்க ஆத்தாடி விருமாண்டி என்று அந்த பக்கமிருந்த நண்பன் சொல்ல கபிலனோ இதைக் கேட்டு சத்தமாக சிரித்தான்.

வாய மூடுடா என்றவன் ஏய் வெலங்காத முண்டம் 10 நாள் லீவ்.நாங்கள் ஊருக்கு வரோம் என்க,அப்படியா என்று அந்த பக்கம் உள்ளவன் அதிர ஆமா ஆமா....

இந்த மேடம் அந்த அமர்நாத் கேஸை சீக்கிரம் முடிக்க சொல்லுறாங்கள். கண்டிப்பாக நீ வந்தே ஆகணுமென்கவும்,என்ன டா விளையாடுறீங்களா?

வீட்டுக்கு தெரிந்தால் என்ன ஆவது?

நாலு இல்லை 5 நாள் என்றால் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.அதை விட்டு உன் பாட்டுக்கு ஒரு மாதம் சொன்னா அவ்வளவு தான் என்று அந்த பக்கமிருந்த நண்பன் அலற...

சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அது உன்பாடு...தங்கச்சி கால்ல விழுவியோ இல்லை செருப்படி வாங்குவியோ எனக்கு தெரியாது.கேஸ் பற்றி நாளைக்கு நேரில் வந்து பேசுறேன் பாய் என்று சொல்லி அழைப்பை துண்டித்தான்.

வனிச்சூர்:

வண்டியை எடுத்துக்கொண்டு தனது பாட்டி வீட்டுக்கு வந்த செழியன் அத்தை கண்ணன் இருக்கானா என்க,மேல தான் படுத்துருக்கான் என்று புவனா சொல்ல, விடிஞ்சி இவ்ளோ நேரம் ஆகுது எருமை மாடு இன்னும் தூங்குது என்று படியிலேறியவனிடம் டீ பா என்கவும்,வீட்டில் குடிச்சிட்டு வந்தேன்.

அவனுக்கு டீ போட்டு குடுங்க நான் எடுத்துட்டு போறேன் என்று பாதி படியில் ஏறியவன் கீழே இறங்கி வந்து சோபாவில் உட்கார,தோட்டத்திலிருந்து வந்த தம்புசாமி தாத்தா அங்கிருந்த பேரனை பார்த்தவர் என்ன ஒரு எருமை மாடு இங்க இருக்கு இன்னொரு எருமை மாட்டை காணும் என்கவும்..

பெரிய எருமை மாடு தான் சொல்லணும் என்க,என்னடா வாய்க்குள்ளே முணவுற என்றவாறு பேரனுக்கு எதிரில் இருந்த சோபாவில் வந்து உட்கார்ந்தவர் அப்பு என்க,சொல்லு தாத்தா என்றான்.

ஏன் அப்பு நம்ம மலரை சின்ன கழுதைக்கு பார்த்தா என்னவென்று கேட்க,நானும் அதான் நினைச்சுகிட்டு இருந்தேன்.அதுக்குள்ள மாமா தான் அந்த பாத்திர கடைகாரன் பொண்ணை பேசிட்டு வந்து சேதி சொன்னாரே என்பவனுக்கு,அதுதான் இல்லன்னு ஆயிடுச்சு. .

"நம்ப புள்ளை"

ஒன்னுக்குள்ள ஒன்னு.சொந்த பந்தம் விட்டு போகாது இல்லையா என்றார்.நல்ல விஷயம் தான் தாத்தா.சித்தப்பாவும் மலருக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு தான் இருக்கு.

அதுக்கு முன்னாடி நம்ம கேட்டு வைப்பது நல்லது தானென்க,அந்த பயல பற்றி உனக்கு தெரியும்.உன் மாமனுங்க போல இந்த தடிமாடும் எந்த புள்ளையாவது மனசுல நினைச்சிருக்கா என்னன்னு தெரிஞ்சுக்கறதுக்காக தான் உன்கிட்ட கேக்குறேன் யா..

இல்ல தாத்தா.அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை.மலரை தாராளமா பேசி முடிங்க என்று செழியன் சொல்லவும்,பேரனின் வார்த்தைகளில் இருக்கும் உறுதியை கேட்ட தம்புசாமி தாத்தாவுக்கு சின்னவனாவது நம்ம பார்க்கும் பொண்ணை கட்டபோறனே என்று பெருமையாக இருந்தது.

அப்ப இன்னைக்கு அம்மாவாசை நாளைக்கு பாட்டி முகம்.வர்ற புதன்கிழமை அன்னைக்கு பொண்ணு கேக்க போகலாமா என்று தாத்தா யோசனையோடு கேட்க அதுல என்ன தயக்கம்.

பஸ் புடிச்சா போக போற?பக்கத்து தெருவுல தானே சித்தப்பா வீடு இருக்கு போக வேண்டியது தானே என்றான்.

ஆனால் மலருக்கு இந்த காட்டான் பயலை புடிக்கணுமே அது தான் முக்கியம்.என் தங்கச்சி பச்ச புள்ள என்கவும்,ஏன்டா சின்னவனுக்கு என்ன குறைச்சல் என்று தம்புசாமி தாத்தா கேட்க,அப்படி சொல்லலை.என் தங்கச்சி அப்பாவி,உன் பேரனுக்கு ஏழு ஊர் வாய் அதுக்கு சொன்னேன் என்று சிரித்தான்.

படவா ராஸ்கல் என்றவர் ஏ சுமதி இன்னுமா சிங்காரிக்கிற என்று மனைவிக்கு குரல் கொடுக்க வந்துட்டேன் வந்துட்டேன் என்றார்.

பக்கத்து தெருவுல இருக்க அப்பன் வீட்டிற்கு போவதற்கு உன் பாட்டி சீவி சிங்காரிச்சுக்கிட்டு தான் வருவாளோ என்கவும்,அதுக்குனு தலையை விரிச்சு போட்டுக்கிட்டா போக முடியும் என்றவாறு அங்கு வந்து சுமதி பாட்டி முறைக்க..

புவனாவோ டீயோடு வந்தவர் மாமனாருக்கு ஒன்றை கொடுத்துவிட்டு கண்ணனுக்கு ஒன்னு எடுத்துப் போக,நான் போறேன் என்று அவரிடம் வாங்கிக் கொண்டு படியில் ஏறி மேலே போனவன் கதவை திறந்து பார்க்க அங்கே கண்ணனோ பெட்டில் குப்புற படுத்து தூங்கிக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த டேபிள் மேல் டீயை வைத்த செழியன் ஒன் டூ த்ரீ என்று சொல்லிக் கொண்டு கட்டில் மேல் படுத்திருக்கும் கண்ணன் மேல் ஜம்ப் பண்ண தூங்கிக் கொண்டிருந்தவனோ கொலை கொலை என்று கத்தினான்.

நான் தான் மாப்பி என்று செழியன் சொல்ல,தடிப்பயலே இறங்கி தொலடா எருமை மாடு.எப்ப பார்த்தாலும் மெத்தை மேல வந்து பாயிற போல விழுறது.

எந்திரிடா நாயே என்று கண்ணன் திட்ட நீ என்னை அப்புறம் கொஞ்சிக்க ஒரு முக்கியமான விஷயம் என்று ஏதோ ரகசியமாக கண்ணனிடம் சொல்ல, படுத்திருந்தவனோ அதைக் கேட்டு பதறி அடித்து எழுந்து உட்கார்ந்து என்னடா சொல்ற என்கவும்,ஆமாடா இப்ப என்ன பண்றதுன்னு எனக்கே ஒன்னும் புரியலை டா...

"ஏதாவது வழி இருந்தால் சொல்லு மச்சி" தயவு செய்து நீ தாண்டா என்ன காப்பாத்தணும் என்றான்.

நான் தான் அப்பவே சொன்னனே இதெல்லாம் நமக்கு வேண்டாம்னு.எங்க நாயே நீ கேட்ட என்கவும்,என்னடா இப்ப வந்து இப்படி சொல்ற என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு செழியன் சொல்ல...

"செருப்பால நாலு அடி வேணாலும் அடிச்சுக்க இப்படி பாவமா முகத்தை வைக்காத" சத்தியமா என்னால பாக்கவே முடியலை,காரி துப்பனு போல இருக்கு என்று சொல்லிக் கொண்டு எழுந்தவன் கைலியை அவிழ்து உதறி கட்டிவிட்டு ரெஸ்ட் ரூமுக்குள் சென்று பிரஷ் ஆகி வெளியே வர அவனுக்கு முன்பு டீயை நீட்டினான்.

என்னடா புது பொண்டாட்டி போல பெட் டீ கொடுக்க வந்திருக்க என்று பல்லை கடித்துக் கொண்டே அத்தை மகன் கையில் இருந்து டீயை வாங்கி குடித்தவனும் என்ன பண்ணலாம் என்று யோசனையானான்.

சரி மச்சி வழக்கம் போல தெம்பா சாப்பிடுவோம்.அப்பதான் நமக்கு ஏதாவது ஐடியா கிடைக்கும் என்று கண்ணன் சொல்ல,இதுதான் சரியான பாயிண்ட் மச்சி.

சரி வா போகலாம் என்கவும் இரு டா குளிச்சிட்டு வாரேன்னு சொல்ல,சரி சரி என்ன பண்ணலாம்னு நான் யோசிக்கிறேன்.நீ போய் குளிச்சிட்டு வா என்று சொல்லியவன் அங்கிருந்த டிவியை ஆன் பண்ணி பெட்டில் படுத்துக் கொண்டான்.

கண்ணனும் ரெஸ்ட் ரூமிற்குள் சென்று குளித்து வெளியே வந்தவன் தயாராகி வாடா என்க,பின்னர் இருவரும் கீழே வந்தனர்.

சுமதியோ மாங்காயை வத்தல் போடுவதற்காக அரிந்து கொண்டிருக்க அதில் இருவரும் ஆளுக்கு ஒரு துண்டை எடுத்து வாயில் வைத்துக் கொள்ள,ரெண்டு தடிமாடும் மாசமா இருக்குங்க..இப்பதான் மாங்காய் திங்க நிக்குது என்று தோட்டத்து பக்கமாக உட்கார்ந்து இருந்த தம்புசாமி தாத்தா சொல்ல,இந்த நம்பியார் கிழவனுக்கு மட்டும் நாம என்ன பண்ணுனாலும் குத்தமா தெரியுதுடா என்றவாறு செழியன் பல்லை கடித்தான்.

விடு விடு நம்ம தாத்தா தானே பாத்துக்கலாம் என்று சொல்லிக்கொண்டு இருவரும் அங்கிருந்து வண்டியில் ஏறி செழியன் வீட்டிற்கு வந்தனர்.

ஷமீராவிற்கு இந்த அமாவாசை விரதம் எல்லாம் எப்படி செய்யணும் என்று தெரியாததால் கூடமாட உதவி செய்து கொண்டிருக்க கண்மணியும் வானதியும் சமையல் வேலையை பார்த்தார்கள்.பொரியலையாவது நான் செய்கிறேன் என்று ஷமீரா கேட்க சரி என்றனர்.

கவிதாவோ முன்னோர்கள் போட்டோக்களை எடுத்து துடைத்து பொட்டு வைத்தவள் பூஜைக்கு வாங்கிய பூக்களை அதன் மேல் மாலையாக வைத்து படையலுக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருந்தாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
கண்ணனும் செழியனும் வீட்டிற்கு வந்து டிவியை ஆன் பண்ணி பார்த்துக் கொண்டிருக்க சமைத்து முடித்தவர்கள் அதை எல்லாம் எடுத்துட்டு வந்து அங்கிருந்த முன்னோர்களின் போட்டோக்கு முன்பு இலையை போட்டு அதில் சமைத்த உணவுகளை பரிமாறும் போது சுமதியும் அங்கு வந்தார்.

பின்னர் தனது அப்பா அம்மா அண்ணன் அண்ணன் பையன் அண்ணி எல்லார் போட்டோவிற்கும் சூடத்தை காட்டி நீர் மாத்தியவர்,பிள்ளைகளை வந்து ஆரத்தி எடுத்துக்க சொல்ல அவர்களும் ஆர்த்தியை தொற்று கண்ணில் வைத்தவர்களோ விபூதி குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசி கொண்டனர்.

பின்னர் ஒரு இலையில் சமைத்த உணவை எல்லாம் எடுத்து வைத்த சுமதி சின்ன குட்டி இதை போயி காக்காவுக்கு வச்சுட்டு வா என்று சொல்ல அதை வாங்கிக் கொண்டு கவிதாவும் தோட்டத்திற்கு போய் கா கா என்று கூவினாள்.

இன்னொரு இலையில் இன்னும் கொஞ்சம் சாதத்தை எல்லாம் வைத்து ஷமீராவிடம் கொடுத்த சுமதி பாட்டி இதை போய் நம்ம பசு மாட்டுக்கு வச்சுட்டு வாத்தா.ஆம்பள புள்ளையா பெத்து எடுப்பு என்று சொல்லவும் வெட்கப் பட்டுக்கொண்டு அதை வாங்கிக் கொண்டு தோட்டத்தில் இருக்கும் பசுவிற்கு வைத்துவிட்டு வந்தாள்.

இன்னுமா காக்கா சாப்பிடலை என்று கண்ணன் கேட்க,தெரியலடா உன் தங்கச்சி தின்னாலும் திங்கலாம் என்று செழியன் சொல்லவும்,அதெல்லாம் உன் புத்தி மாமா என்றவாறு உள்ளே வந்த கவிதாவோ செழியனை பார்த்து முறைத்தாள்.

கண்ணு இலைய போடு என்கவும் சரிங்க அப்பாயி என்றவள் எல்லாரும் உட்காருங்கள் என்று சொல்லி முற்றத்தில் நீட்டாக இலையை போட, செழியன் கண்ணன் சுமதி வானதி கவிதா உட்கார ஷமீராவும் கண்மணியும் பரிமாறினார்கள்.

அவனுங்கள் இருவரும் சாப்பிட்ட முடித்ததும் செல்லதுரைக்கு வயலுக்கு கொடுத்து அனுப்புவதற்காக சமைத்தவைகளை பையில் எடுத்து வைக்க,அவனுங்களும் எடுத்துக் கொண்டு தோப்பிற்கு சென்றனர்.பின்னர் கண்மணியும் ஷமீராவும் பேசிக்கொண்டு சாப்பிட்டு முடித்தனர்.

கவிதா டிவியை ஆன் பண்ணி சோபாவில் போய் படுத்து விட,சின்ன குட்டி இப்ப தானே சாப்பிட்ட அதுக்குள்ள ஏன் படுக்குற எந்திரிச்சு உட்காரு என்றாள்.

மனுஷன் படுத்தா உங்களுக்கு பொறுக்காதே என்று பல்லை கடித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு டிவியை பார்த்தாள்.

கண்மணியும் ஷமீராவும் பேசிக்கொண்டே பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்துவிட்டு வந்து கவிதா கூட உட்கார்ந்து டிவி பார்க்கலானார்கள்.

சுமதி அப்பாயியும் வானதியும் வெளியே இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் இருந்த பெண்மணிகளும் இவர்களோடு வந்து கலந்து கொள்ள பேச்சோ எங்கெங்கே சென்றது.

கரும்பு தோப்புக்கு சாப்பாட்டு கூடையோடு வந்த இருவரும் செல்லத்துரை எங்கே என்று தேட அங்கிருக்கும் வேப்பமரத்தின் கீழே உட்கார்ந்து இருப்பது தெரிந்தது.

டேய் மாமா அங்க வேப்ப மரத்துக்கு கீழே உட்கார்ந்து இருக்கிறார்.நீ போய் சாப்பாடு குடு.நான் கொஞ்சம் கரும்பு வெட்டிட்டு வருகிறேன் என்றவன் அங்கே கரும்பு வெட்டிக் கொண்டிருக்கும் ஆட்களை நோக்கி கண்ணன் செல்ல,செழியனும் செல்லதுரை உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு வந்தவன் அப்பா சாப்பிடலாம் என்க..

சரிப்பா என்றவர் வாய்க்காலில் ஓடும் தண்ணீரில் கை கால் முகத்தை கழுவிட்டு தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முகத்தை துடைத்துக்கொண்டு செல்லதுரை உட்கார,கூடையில் இருந்த இலையை எடுத்து புல் தரையில் போட்டவன் கேரியரை திறந்து அதிலிருந்த உணவுகளை பரிமாற நீங்க எல்லாம் சாப்டீங்களா என்று கேட்கவும் ஆச்சிப்பா என்றான்.

சரிப்பா என்று வேலை செய்யும் ஆட்களை பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடிக்க,மீதம் இருந்த உணவுகளை வைத்து மூடியவன் அருவாள் எங்கப்பா நானும் போய் கொஞ்சம் கரும்பு வெட்டுகிறேன் என்க அங்கு இருக்கும் பார் என்று மரத்தை காட்டினார்.

அதில் ஆணி அடித்திருக்கவும் அதில் ஒரு பை தொங்க அது உள்ளார இருந்த அருவாளை எடுத்துக்கொண்டு செழியனும் அவர்களோடு பேசிக்கொண்டே கரும்பு வெட்ட ஆரம்பித்தான்.

ஏன் மதிய சாப்பாடு யாரும் சாப்பிடவில்லையா என்று கண்ணன் கேட்க இன்னும் கொஞ்சம் தான் வெட்டிட்டு வீட்டுக்கு போயிடலாம் கண்ணா.11:00 மணிக்கு தான் மாமா டீ வடையெல்லாம் வாங்கிட்டு வந்து கொடுத்தார் என்று வேலையாள் ஒருவர் சொல்ல சரி ணா என்றான்.

மகி நினைவுகள்..

அதன் பின்னர் ஒரு வாரம் கடந்திருக்க மகி அவர் ரூமில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது கதவைத் தட்டி உள்ளே வந்து பியூன் சார் உங்களுக்கு அசிஸ்டெண்டாக ஒரு மேடம் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரோடு வந்திருக்காங்க என்கவும்,வர சொல்லுங்க என்றான்.

மகியோ கையில் இருந்த பைலையே பார்த்துக் கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்கவும் எஸ் கம்மின் என்று சொல்ல,கதவை திறந்து உள்ளே வந்தவளை பார்த்து கண்கள் விரிய அதிர,அவளோ அவன் யாரென்று தெரியாதது போல் குட்மார்னிங் சார் என்க,அதில் இயல்புக்கு வந்தவன் எஸ் குட் மார்னிங் என்று அங்கிருந்து சேரை காட்டினான்.

"ஆஹா நம்ப ஆளு"

இவதான் நமக்கு அசிஸ்டென்டா!

"வாடி என் வெள்ளரிக்கா"

அன்னைக்கு பேர கேட்டதுக்கு என்னமோ ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டவள் போல ஓடுனியே டி இன்னைக்கு உன்னை பற்றி தெரிஞ்சுக்க போறேன் டி என்று மனதிற்குள் பேசிக் கொண்டிருந்தவன் எதுவும் தெரியாது போல் சொல்லுங்க என்ன விஷயம் என்று நியூ ஜாயினியென பைலை எடுத்து நீட்ட அதை வாங்கியவன் தன்னவளின் பெயரை பார்ப்பதற்காக முதல் பக்கத்தை திருப்ப மானசா விஸ்வநாதன் என்று இருக்கவும்,இனி மானசா மகிமைதாஸ் சென்று மனதுக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு,மழைச்சாரல் வீசுவது போல் இருக்க,ஆஹா பெயர் பொருத்தம் எவ்வளவு சூப்பரா இருக்கு என்றவன் மற்ற டீடைல்ஸ் எல்லாம் படித்து முடித்து விட்டு அவளின் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரை படித்துப் பார்க்க அவளும் கவர்மெண்ட் எக்ஸாம் எழுதி தான் பாஸாகி வந்திருக்கிறாள் என்பது புரிந்தது.

பின்னர் அவளுக்கான வேலையை பற்றி சொல்லியவன் இப்ப சொல்லுங்க உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்க,கொஞ்சம் கொஞ்சம் தெரியும் என்று மானசா வாய் திறந்து சொல்ல அப்படியா சரி போய் உங்க வேலையை பாருங்கள் என்றான்.

நாட்களும் வேகமாக ஓட மானசா அந்த ஆபீசில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்டது.அன்றொரு நாள் வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்போது மழை தூறல் போடுவது தெரிந்தது.

ஆபீஸிலிருந்து பஸ் ஸ்டாண்ட் இருக்கும் இடத்திற்கு நடந்து செல்லும் தூரம் 5 நிமிடம் என்பதால் எப்படியும் அங்க போவதற்குள் நனைந்து விடுவோமே என்ன பண்ணுவது என்று யோசனையோடு இருக்க,மகியும் வீட்டிற்கு போக வெளியே வந்தவன் அங்கே மானசா நிற்பதை பார்த்து என்ன இங்க நிற்கிறாளென்று பைக்கை எடுத்துட்டு வெளியே வரும் போது தான் தூறல் போடுவது தெரிந்தது.

மகி நல்ல வாய்ப்புடா.இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள் என்று தனக்குள் சொல்லியவன், ஹலோ மானசா நான் வீட்டுக்கு தான் போறேன்.வாங்க உங்களை டிராப் பண்ணிடுறேனென்க..

அவளோ அதைக் கேட்டு அதிர்ந்து போய் பார்க்க,ஏங்க ஒரே ஆபீஸ்ல வேலை பார்க்கிறோம்.ஒரு சின்ன ஹெல்ப் தானுங்க.வேற எந்த தப்பான எண்ணத்தில் இல்லை.

மழை வேற அதிகமாக வரப்போகுதுனு தெரியுது.கண்டிப்பா உங்களுக்கு இந்த நேரத்தில் ஆட்டோ கிடைக்காது.டைம் ஆயிடுச்சு பாருங்கள் என்கவும், நிதர்சனம் புரிந்தவள் வேறுவழியின்றி அவனோடு பைக்கில் ஏறி உட்கார, மகிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.

சிறிது நிமிடம் வரை அமைதியாக இருந்தவன் மானசா உன்கிட்ட ஒன்னு சொல்லணும் என்க,என்ன சார் என்றாள்.வாழ்க்கை முழுவதும் இந்த பயணம் நம்மோடு தொடரணும்னு ஆசைப்படுறேன் என்க...அவளோ சாரி எனக்கு அதுல விருப்பமில்லை என்று சொல்ல,அதிர்ந்து போய் பைக்கை நிறுத்தினான்.

ஏன் என்க,ஏனென்றால் நீங்க கிறிஸ்டியன் நான் பிராமின் சார். கண்டிப்பா எங்க வீட்ல இதுக்கு ஒத்துக்கவே மாட்டாங்க என்கவும்,நான் உன்னோட விருப்பத்தை தான் கேட்கிறேன்.மற்றவர்களுடைய விருப்பத்தை பற்றி எனக்கு கவலை இல்லை.வாழ்க்கை என்றால் உன்னோடு தான்.பார்த்த உடனே என் மனசுக்கு பிடித்துவிட்டது.

வாழ்வோ இல்லை சாவோ அது உன் கூட தான்னு நான் முடிவு பண்ணிட்டேன். உனக்கு ரெண்டு நாள் டைம் தரேன் நல்லா யோசிச்சு சொல்லு என்க,ஒரு வாரம் கடந்தும் மானசாவிடம் எந்த பதிலும் இல்லை.

மானசாவும் மகியிடமிருந்து எவ்வளவோ விலகிப் போக,அவனும் தொடர்ந்து தனது காதல் போரை தொடுக்கவும்,ஒரு கட்டத்தில் மானசாவின் மனமும் இளகியது. பின்னர் வீட்டில் விசயத்தை சொல்ல மானசா அப்பாவோ தாம்தூம் என்று குதித்தார்.

உங்களுக்கு நம்பிக்கை இல்லை தானே. சரி நான் உங்க பொண்ணை சட்டப்படி கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று மகி சொல்லவும் அதற்கு உங்க அப்பா அம்மா சம்மதம் வேண்டாமா என்றார்.

என்னுடைய சம்மதம் தான் எங்க அப்பா அம்மாவுக்கு முக்கியம்.எங்கே உங்க பொண்ணை நான் ஏமாத்திட்டு போய் விடுவேனோ என்று தானே நீங்க நினைக்கிறீங்க?

தாராளமாக கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று தனது பிளாட்டிற்கு போய்விட்டான்.ஒரே மகள் கல்யாணத்தை தன்னால் முடிந்த அளவுக்கு ஏற்பாடு பண்ணிய விஸ்வநாதன்,அந்த மாதத்தில் வந்த முகூர்த்த தேதியில் கல்யாணம் பண்ணலாம்னு பத்திரிகை அடித்து சொந்தங்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் கொடுத்தார்.

குறித்த நாளில் மானசாவை சட்டப்படி கல்யாணம் பண்ணி மனைவியாக ஏற்றுக் கொண்டான்.

இருவரின் கல்யாண வாழ்க்கையும் சந்தோஷமாக செல்ல,முதல் குழந்தையாக பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.எல்லாரும் மகியின் குணத்தை புகழ்ந்து பேசுவதை கேட்டு மகிக்கு செல்ல பெயராக புகழ் என்று கூப்பிட ஆரம்பித்தாள்.

தன் மேல் எந்த சந்தேகமும் வராதவாறு மகியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு போய் அப்பா அம்மாவை பார்த்துவிட்டு வந்து கொண்டிருந்தான். இதோ மூன்று வருடம் கடந்திருக்க அந்த நேரம் மானசா இரண்டாம் முறை கர்ப்பமானாள்.

ஹாஸ்பிடலுக்கு செக்கப் போக வேண்டும் என்பதற்காக குழந்தையை தனது பெற்றோர்களிடம் விட்டு விட்டு மகியும் மானசாவும் ஹாஸ்பிடலுக்கு சென்றவர்கள் டெஸ்ட் எல்லாம் முடித்துவிட்டு திரும்பி வந்து பார்க்க அவர்கள் இருந்த அப்பார்ட்மெண்டோ தரைமட்டமாக இடிந்து போய் கிடந்தது.

என்ன நடந்துச்சு என்று ஒன்றும் புரியவில்லை.மானசாவோ அதிர்ச்சியில் மயக்கம் போட்டு கீழே விழ,அவளை தூக்கிட்டு போய் பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடல் அட்மிட் பண்ண,சிறிது நேரம் சென்று அவள் கண் விழித்த பிறகு யாரோ ஒரு வீட்டில் சிலிண்டர் வெடிக்க அது அப்படியே பரவி அந்த இடமே தரைமட்டமானதை சொன்னான்.


வீழ்ந்தேனடி......
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top