• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
வனிச்சூர்:

அத்தை டிபன் ரெடி என்க,சரிமா என்றவர் இளா சாப்டுக்கேயேன் பா என மகனிடம் கேட்க,அப்பா வரட்டுமே மா என்று செழியன் சொல்லும் போது செல்லதுரையும் கையில் ஒரு கவரோடு உள்ளே வந்தவர் அம்மாடி இந்தாயென்று ஷமீராவிடம் நீட்டினார்.

இதழ் பிரியாமல் சிரித்தவாறு மாமனாரிடமிருந்து வாங்கிக் கொள்ள,மகனை கண்டன பார்வையோடு பார்த்த வானதி,குளிச்சிட்டு வந்துடுங்க சாப்பிடலாமென கணவரிடம் சொல்லவும் சரி மா என்றவாறு அவர்களது ரூமிற்குள் சென்றார்.

அத்தையென்று தனது கையிலிருந்த கவரை வானதியிடம் நீட்ட,புயலே வந்தாலும் உன் மாமானார் தீனி வாங்காமல் வீட்டுக்கு வந்ததில்லை.

உனக்கு என்ன புடிக்கும்னு அவருக்கு தெரியாது,இருக்குறதை சாப்பிடு. நாளைக்கு உனக்கு புடிச்சதை வாங்கியார சொல்லுறேன் மா என்க,மாமியாரின் வார்த்தைகளை கேட்டவளுக்கு அழுகை வந்தது.

தனக்கு என்ன பிடிக்கும் என்பது இதுவரை தன்னை பெற்ற தந்தைக்கே தெரியாது.ஏன் அதை பற்றி அவர் கேட்டதுமில்லை.இன்று நம் விருப்பத்தை கேட்பதற்கு தாய் கணவனுக்கு பிறகு இன்னும் இரண்டு உறவுகள் கிடைத்திருக்கிறதே என்பதை நினைக்க அழுகையோடு சந்தோஷமும் போட்டி போட்டுக்கொண்டு வந்தது.

போ மா...

"சாப்பாடு எடுத்து வை"

இவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டு நீயும் சாப்பிடு,நான் பிறகு சாப்டுக்கிறேன் என்ற வானதி சீரியலில் மூழ்கினார்.

அங்கிருந்த செழியனோ தனது பார்வையை மனைவியின் மேலிருந்து சிறிதும் விலக்கவில்லை.ஆனால் அவளோ அங்கு ஒருத்தன் இருப்பதைப் போலவே கண்டு கொள்ளாமல் கிச்சனிற்கு சென்றவள்,கவரை அங்கிருந்த ஷெல்பில் வைத்து விட்டு சமைத்ததை எடுத்து வந்து டைனிங் டேபிளின் மேல் வைக்க,செல்லதுரை சாப்பிட வரவும்,மனைவியை முறைத்தவாறு செழியனும் கையை கழுவிட்டு வந்து உட்கார இருவருக்கும் ஷமீரா பரிமாறினாள்.

உணவின் சுவையை வைத்து அது மருமகள் சமைத்தது என்பதை புரிந்து கொண்ட செல்லதுரை,என் வாழ்க்கையில் இன்னைக்கு தான் மா உண்மையான சப்பாத்தியை சாப்பிடுறேன்.

"உன் அத்தை ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாள் பண்ணி குடுப்பாள்".

அந்த ராட்டியை உடைச்சி ஊறவைத்து வயிற்றில் தள்ளுவதற்குள் எனக்கு கண்ணு முழிலாம் பிதுங்கிடும் மா என்க,என்ன சொல்றீங்க என்றவாறு அங்கு வந்த வானதி,கணவனை முறைத்தார்.

மனைவியை பார்த்த செல்லதுரை அது ஒன்னும் இல்ல வானதி,உன் அத்தை கிட்ட சமையல் கத்துக்கன்னு மருமகளிடம் சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன நினைச்சு என்கவும்,இல்லையே நீங்க வேற ஏதோ சொல்லிக்கிட்டு இருந்த போல என் காதுல விழுந்துச்சே என்றார்.

அட ஏன் மா இப்படி..உன்னை பற்றி மருமகள் கிட்ட எவ்வளவு பெருமையா சொல்லிக்கிட்டு இருக்கேன்,அது தெரியாமல் எப்ப பாத்தாலும் என்னை குறை சொல்றதே உனக்கு வேலை தான்..

சரி வா...

"அம்மாடி நீயும் வந்து உட்கார்ந்து மா".

ஆவி பறக்க இருக்கிற சப்பாத்தி தேவாமிர்தம் போல தொண்டைக்குள் இறங்குது வா வா என்று மனைவியை பக்கத்தில் இருக்கும் சேரை காட்டி செல்லதுரை கூப்பிட,அவரும் சிரித்துக் கொண்டு உட்கார்ந்தவர் மருமகளை பார்த்து நீயும் உட்காரு மா சாப்பிடலாம் என்க,இருக்கட்டுங்கத்தை.நீங்கள் சாப்பிடுங்கள் பிறகு நான் சாப்பிடுறேன் என்றாள்.

அட என்னம்மா நீ..ராவுக்கு ஒரு வேளை தான் எல்லாரும் உட்கார்ந்து குடும்பமா சாப்பிடுறோம்.நீ மட்டும் தனியா சாப்பிட்டா என்ன அர்த்தம் உக்காரு. அதான் உன் புருஷனுக்கு பக்கத்துல சேர் இருக்குல அதுல போய் உட்காருமா என்று செல்லதுரை சொல்ல, மாமனாரின் வார்த்தையை தட்ட முடியாமல் சரிங்க மாமா என்றவள் தனக்கு தேவையானதை எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வானதி நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா என்க,அது எப்படி மறக்க முடியும்...

சரி சரி.செழியனுக்கு நாளைக்கு வேலைக்கு போக வேண்டாம் தான்.
அப்ப சூடத்த காமிச்சுட்டு சாப்பாட்டை நம்ப கரும்பு தோப்புக்கு கொடுத்து அனுப்பி விடு.நாளைக்கு கரும்பு வெட்ட ஆள் வர வைத்திருக்கிறேன் என்கவும் சரிங்க என்றார்.

பெற்றோர்கள் எதிரில் உட்கார்ந்திருப்பதால் எந்த சேட்டையும் செய்யாமல் அமைதியாக சாப்பிட்டு எழுந்த செழியன் கையை கழுவிட்டு மாடியில் இருக்கும் அவனது ரூமிற்கு சென்று விட்டான்.

ஷமீராவும் வேலைகளை முடித்து விட்டுரூமிற்க்குள் வந்து பார்க்க செழியன் அங்கு இருப்பது போல் தெரியவில்லை.

பால்கனி கதவு திறந்திருப்பதை வைத்து மாடிக்கு போயிட்டார் போலனு நினைத்துக் கொண்டு பால் டம்ளரை எடுத்துக்கொண்டு படியில் ஏறி மேலே வர செழியனோ மாடி சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டு தூரத்தில் இருக்கும் இருட்டான மலையை பார்த்துக் கொண்டிருந்தான்.

கொலுசு சத்தமும் மல்லிகைப் பூவின் வாசமும் மனைவி வந்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்த்த அவனோ திரும்பி பார்க்காமல் அதே தோரணையிலே நின்று கொண்டிருந்தான்.

ஆண்டவரே இந்த மனுஷனுக்கு கோபத்தை எப்படித்தான் மலையிறக்க போறேன்னு தெரியலையே என்று மனதிற்குள் நினைத்தவள் என்னங்க பால் என்று சொல்ல,எதுவும் சொல்லாமல் அமைதியாக திரும்பியவன் அவள் கையில் இருந்த டிரேவிலிருந்து பால் டம்ளரை எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டான்.

கணவனின் செய்கைகளை பார்த்தவள் அட போடா ரொம்ப ஓவரா தான் பண்ணுற,ஏன் எனக்குலாம் கோவம் வராதா?போனை ஆஃப் பண்ணி வைத்ததற்கு நானும் உன் மேல கோவமாக தான் டா இருக்கணும் என மனதிற்குள் நினைத்தவள் வந்த வழியாக திரும்பி சென்றாள்.

செழியனோ மேனேஜர் சொன்ன விஷயத்தை யோசித்தபடி இருக்க கையில் இருந்த பால் டம்ளரை மறந்து விட்டான்.

தூரத்தில் நாய் சத்தம் கேட்டு சுதாரித்தவனுக்கு ஆறி போன பால் தெரிய மனைவி பின்னாடி தான் நிற்பாள் சூடு பண்ண சொல்லலாமென்று நினைத்து திரும்ப,தன்னவள் இல்லாததை பார்த்து கோவம் தலைக்கு ஏற,திமிரு புடிச்சவள்

புருஷங்காரன் கோவமா இருக்கானே அவனை எப்படியாவது சமாதானம் பண்ணனும்னு நினைக்காமல் ஏனோ தானோனு இருக்காளே,அப்படியே அவளோட அப்பன் புத்தி என்று திட்டினான்...

கீழே வந்தவளோ குளித்து விட்டு இலகுவான புடவையை கட்டிக்கொண்டு பால்கனி கதவை சாற்றியவள் காதில் ஹெட் செட் போட்டு படுத்து விட்டாள்.

இரு டி வரேனென்று முணுமுணுத்தவன் சிறிது நேரம் மாடியில் நடந்து விட்டு ரூமிற்குள் வர இரவு விளக்கின் வெளிச்சத்தில்,மனைவி பெட்டில் படுத்திருப்பது தெரிந்தது.

"ஏய் எந்திரி டி என்றான் "

ஷமீராவோ அமைதியாக இருக்க,உன்னை தாண்டி சொல்றேன் எந்திரி டி என்று கொஞ்சம் வேகமாக சொல்ல அப்பவும் அவள் படுத்தவாக்கில் இருக்கவும்,இவளுக்கு எவ்வளவு திமிரு பாரேனென்று அவள் காலை பிடித்து இழுக்க ஐயோ என்று பதறியடித்து எழுந்தாள்.

கட்டிலின் மேல் கால் நீட்டி உட்கார்ந்திருப்பவளை பார்த்தவன் எட்டி ஷமிராவின் கையை பிடித்து இழுக்க,செழியனின் நெஞ்சோடு வந்து வேகமாக மோதி பின்பக்கமாக விழப் போனவளின் கழுத்தோடு வளைத்து பிடித்தவன் ரொம்ப திமிரு...

ஒருத்தன் வீட்டுக்கு வந்து எவ்வளவு நேரம் டி ஆகுது,இதுவரை ஒரு வார்த்தை பேசலைனா என்ன டி அர்த்தம்?

அவ்வளவு அகங்காரமென்று தன்னோடு இறுக்க,ஷமீராவிற்கோ முறுக்கேறிய தன்னவன் வலிமையான உடலோடு அழுந்துவது வலியை கொடுக்க முகத்தை சுருக்கினாள்.

மனைவியின் முக சுணக்கத்தை பார்த்தாலும் தன்னவள் இவ்வளவு நேரம் வரையில் பேசாமல் இருந்தாளே என்கும் கோபம் தான் முதன்மையாக இருந்தது.

ஷமீராவும் பல்லை கடித்து வலியை பொறுத்தவள்,சிறிது நொடிகள் வரை எதுவும் பேசவில்லை.நாம் வாயை திறக்கவில்லை என்றால் தன்னவனின் கோவம் குறையாது என்பது புரிந்து,அன்னார்ந்து கணவனை பார்த்தவள் அவன் கையிலிருந்த டம்ளரை கண்டு,பால் ஆறி போயிடுச்சு முதலில் குடிங்களென்க,ஹம் என்றவன் போய் சூடு பண்ணி எடுத்துவாடியென்று தனது இரும்புக்கர வளையத்தை விலக்க,ஷமீராவிற்கு அப்பொழுதுதான் இயல்பாக மூச்சு விடுவது போல இருந்தது.

இரண்டு டம்ளரையும் எடுத்துக் கொண்டு கதவை திறந்து வெளியே போய் ஹப்பாடா என்று பெருமூச்சு விட்டவள்,இந்த மனுஷன் போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சுட்டு நம்ம பேசலன்னு கோவப்படுறாரே என்று திட்டிக்கொண்டு கீழே வர வானதியும் செல்லதுரையும் டிவி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

சூடு பண்ணிய பால் டம்ளரோடு மேலே வந்து கதவை திறந்தவளுக்கு கணவன் நிற்கும் தோற்றத்தை கண்டு திக்கென்று இருந்தது.

ட்ரெஸ்ஸிங் டேபிளில் இருக்கும் கண்ணாடி வழியாக கதவைத் திறந்து அதிர்வோடு நிற்கும் மனைவியை பார்த்து தனது மீசையை முறுக்கிவிட்டவன் என்னடி வாசல் பக்கமே நிற்கணுமென்று வேண்டுதலையா?.

எச்சில் விழுங்கியவள் உள்ளே வந்து கதவை சாற்றி விட்டு வலது கையை தூக்கி தாழ்ப்பாள் போடப்போக,ஆணி அடித்த போல அப்படியே நின்றாள்.

மனைவியின் கையிலிருந்ததை வாங்கி அங்கிருந்த டேபிளின் மேல் எட்டி வைத்தவன்,அவள் தலையில் இருக்கும் மல்லி பூவை வாசம் பிடித்தபடி ஒரு கையால் மனைவியின் இடுப்பை இறுக்கிக் கொண்டு இன்னொரு கையால் தாழ்ப்பாளின் மேலிருக்கும் கையை பிடித்து அந்த தேக்கு மர கதவில் சாய்ந்தான்.

அடர்ந்த தாடியோ வெறுமையான முதுகில் ஊர்வலம் போக பெண்ணவளோ ரோமங்கள் சிலிர்க்க கண்களை மூடியிருந்தாள்.

மனைவியின் உடல் சிலிர்ப்பதை உணர்ந்தவன் நான் கேட்டதுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கியேடி...

ஏன் நான் வந்த உடனே என்னை தேடி ரூமிற்கு வரலை?

சரி வரலை...அதன் பிறகாவது எதாவது பேசுனியா இல்லையே,நீ வந்தா வா இல்லை வராட்டி போடானு எனக்கென்ன வந்துச்சினு இருந்தால் என்ன டி அர்த்தமென்று மனைவியின் காதோரம் மீசை முடிகள் குத்த முத்தமிட்டவாரு கேட்க....

கணவனுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் உறைந்து நின்றவளோ இப்படி பண்ணிட்டு கேள்வி கேட்டால் எப்படி டா பதில் சொல்ல முடியும் விளக்கெண்ணெய் என்று மனதிற்குள் திட்டினாள்.

மனைவியின் மனதை படித்தவன் போல என்னடி மனசுக்குள்ளே உன் புருஷனை திட்டுறியா என்றவாறு இன்னும் அவளோடு நெருங்கி நிற்க. ..

மனசுக்குள்ள கூட இந்த மனுஷன் கிட்ட பேச முடியாது போலயேனு நினைத்தவள் இப்ப எதுக்கு கதவுக்கு முட்டு கொடுத்துட்டு நிக்கிறீங்களென்று ஷமீரா கேட்க,வேண்டுதலைடி என்றான்.

பின்னர் ஒரு அடி பின்னாடி தள்ளி போனவன் அவள் சுதாரிப்பதற்குள் மனைவியின் முந்தானையை பிடித்து இழுக்க ஒரு சுத்து சுற்றியவளோ என்ன பண்ணுறீங்களென்று கைகளை நெஞ்சின் மேல் தடுப்பாய் வைத்துக் கொண்டு கேட்கவும்,முழு புடவையும் செழியனின் கையில் வந்தது.

கோழி குஞ்சு போல ஒடுங்கி நிற்பவளை ரசித்துக் கொண்டே புடவையை கட்டிலில் மேல் போட்டவன் மனைவியை தூக்கிக்கொண்டு பால்கனி வழியாக மாடியில் இருக்கும் ரூமிற்கு சென்று கதவை திறக்க மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் அந்த அறையை பார்த்து திகைத்து போனாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
360
மனைவியின் அதிர்ந்த முகத்தை ரசித்து பார்த்தவன் தன்னோடு அவளின் முழு தேகமும் உரசியபடி கீழே இறக்கி விட்டு இறுக்கமாக பின்னாலிருந்து அணைத்தவன் பிடிச்சிருக்காடியென ஹஸ்கி வாய்ஸில் கேட்க,ஷமீராவோ அளவில்லாத காதலை கண்களில் பிரதிபலிக்க வலது பக்கம் கழுத்தை வளைத்து அன்னார்ந்து கணவனை பார்த்தாள்.

தன்னவளின் கண்கள் காட்டிய காதலை உணர்ந்தவன் கர்வமாக தனது மீசையை முறுக்கி விட,யாரோ கோவமாக இருந்தாங்களே?எங்கே போனாங்க அந்த ரோசக்காரறென்றாள்.

ஹா ஹா ஹா என வழமை போல கம்பீரமாக சிரித்தவன் கோவத்தை மனசுல வச்சுக்கிட்டு உன்னை தனியா படுக்க விடுவேனென்றுலாம் பகல் கனவு காணாத டி.நம்ப ரூமிற்கு வந்து விட்டால் நீ இருக்க வேண்டிய இடம் இங்க தானென்று தனது நெஞ்சை காட்டியவன்,உன் புருஷன் சர்ப்ரைஸ் எப்படி இருக்கு?.

வார்த்தையால் சொல்லவே முடியாது என்கவும் அப்படியா??அப்போ செயல்ல காட்டலாமேடி என்று மனைவியை ஒரு மார்க்கமாக பார்த்து சிரிக்க இளாஆஆஆ என்று சினுங்கினாள்.

நானே தாண்டி ..தாம்பத்தியம் என்பது சும்மா இரண்டு உடல் மட்டும் இணையுறது கிடையாது.இரண்டு மனசும் இணையறது தான்.அது ரொம்ப புனிதமானது.

கண்டிப்பா உன் புருஷன் உன்கிட்ட மென்மையான நடந்துப்பான்னு நீ கனவுல கூட எதிர் பார்க்காதே, என்னோட காதலையும் அன்பையும் முரட்டுத்தனமாக தான் காட்டுவேன் டி.

அதுக்காக காஞ்ச மாடு கம்பில் பாஞ்ச போல எல்லாம் குதறி வைக்க மாட்டேன்.
கணவன் மனைவிக்குள் எந்த அளவுக்கு தாம்பத்திய உறவு இருக்கோ அந்த அளவுக்கு அவர்கள் உறவு ரொம்ப உறுதியாக இருக்குமென்று சயின்ஸ் சொல்லுது டி.

சோ முதுமை தட்டி நாம் கண்ணை மூடுற வரைக்கும் நமக்கு தினமும் முதலிரவு தான் என்று செழியன் சொல்ல,ஐயோ ஐயோ என்று நெற்றியில் அடித்துக் கொண்டவள் ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்களென்று வெட்க்கப் பட்டுக்கொண்டு வேறு பக்கம் திரும்ப,நிதர்சனமான உண்மையை உன் கிட்ட தாண்டி பேச முடியும்,வேற யார்கிட்ட பேச முடியும் சொல்லு?.

நீயும் நானும் ஒன்னும் சின்ன குழந்தைகள் இல்லை டி.மனதின் தேவையும் உடலின் தேவைகளையும் என்னவென்று பிரித்து பார்க்கும் பக்குவம் உள்ள வயது.

திரும்ப என்ன சொல்ல வைக்காதே.முதலும் கடைசியுமா இன்றோடு போகட்டும்.இனி என்ன கோபம் இருந்தாலும் போன்ல பேசு இல்லன்னா நேர்ல நான் வந்த பிறகு பேசு.

இல்ல அப்புறம் பேசுறேன்னு சொல்லிட்டு போனை கட் பண்ணு. அதை விட்டு இன்று போல பேசிட்டு இருக்கும்போது நீ கட் பண்ணிட்டு போன,அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன். என்னை பற்றி உனக்கு நல்லா தெரியும் என்கவும்,சாரி என்றாள்.

நமக்குள்ள இந்த சாரி தேங்க்ஸ் என்றைக்கும் வரக்கூடாது புரியுதா நீ வேற நான் வேற இல்ல டி.உன்னை என்னைக்கு நான் பார்த்தேனோ அந்த நிமிஷத்தில் இருந்து இப்ப நான் பேசிட்டு இருக்குற நொடி வரைக்கும் நீ வேறயென்று நான் நினைச்சு பார்த்ததே கிடையாது.

உனக்கும் அப்படித்தான்னு நல்லா தெரிஞ்சதால் தான் நானும் இங்கு தைரியமாக இருந்தேன் புரியுதா டி என்க...கணவன் தன்மேல் வைத்திருக்கும் காதலும் அன்பும் நன்கு புரிந்தவள் தான் இருந்தாலும்,அவன் வாயால் அதைக் கேட்கும் போது ஷமீராவுக்கோ இந்த வானத்தையே வசப்படுத்தியது போல அவ்வளவு பூரிப்பாக இருந்தது.

மனைவியின் பூரிப்பு அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிவதை பார்த்தவனுக்கு,ஆண்மகனென்ற கர்வம் வர ஒரு அடி அவளை தள்ளி நிற்க வைத்து கைகளை கட்டிக்கொண்டு அங்கிருந்த கதவின் மேல் சாய்ந்து ரசித்துப் பார்த்தான்.

கணவனின் பார்வையோ தன்னை உச்சி முதல் பாதம் வரை கூறு போடுவதை புரிந்து இப்படி எல்லாம் பாக்காதீங்க என்று சினுங்க,கண்டிப்பாக பார்ப்பேன் டி.

நித்தமும் நீ எனக்கு புதுசா பூத்து பூ போல தான் டி புரியுதா?

ஆசை 60 நாள் மோகம் முப்பது நாட்களுனு கசக்கி பிழிந்து தூக்கி எறியிர ஆள் நான் கிடையாது டி அது உனக்கே நல்லா தெரிஞ்சிருக்கும் என்கவும்,ஐயோ இளா போதும் ப்ளீஸ் வாயை மூடுங்களென்றாள்...

ஓஓஓ பேசுனது போதும் செயல்ல இறங்குடா என்று சொல்லாமல் சொல்றியோ என்று செழியன் சிரிக்க, கடவுளே என்றவள் வேகமாக வந்து கணவனின் நெஞ்சிலே புதைந்து கொண்டாள்.

மீண்டும் சத்தமாக சிரித்தவன் செல்லம் இந்த ரூமுக்குள்ள இருந்து எந்த சத்தமும் வெளியிலே கேட்காது அதுபோல ரெடி பண்ணிருக்கேன்.நீ எவ்வளவு வேணாலும் கத்தலாம் ஆடலாம் பாடலாம் குதிக்கலாம் புரியுதா என்க,அப்படியா என்று ஆச்சரியமாக ஷமீரா கேட்க ஆமாம் டி.

ஆக்சுவலா இந்த ரூம் ஐடியா எனக்கு சுத்தமா கிடையாது.கீழ நம்ம பெட் ரூம் ஓகேனு தான் இருந்தேன்.மேல இந்த டெலஸில் இப்படி ஒரு ரூம் வேணும்னு உன்னை பார்த்துட்டு வந்த பிறகு தான் எனக்கு தோணுச்சு என்கவும்,என்னங்க சொல்றீங்க?

அப்பவே முடிவு பண்ணிட்டீங்களா உங்க வாழ்க்கையில் நான் தான் என்பதை கண்கள் விரிய ஷமீரா கேட்க, வாழ்க்கையை முடிவெடுக்கிறது பெரிய விஷயம் தான்.

என்னமோ தெரியலை டி உன்ன பார்த்த உடனே இவள் தான் நம்ப வாழ்க்கைனு மனசுல பட்டுருச்சி.

உன்கிட்ட பேசிட்டு ஊருக்கு வந்ததுக்கப்புறம் மேல ஒரு ரூம் ரெடி பண்ணனும்னு அப்பா கிட்ட சொன்னபோது சரிப்பா உன்னுடைய இஷ்டம் சொல்லிட்டாங்க.

ஒவ்வொண்ணும் நமக்காக பார்த்து பார்த்து டிசைன் பண்ணுனேன் டி, ஷமீராவுக்கு கணவனின் காதலை கண்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இந்த அன்பும் காதலும் கடைசி வரைக்கும் என்னோடு இருக்கணும் இளா.அது போதும் எனக்கென்று அவன் நெஞ்சில் முத்தம் வைத்துக் கொண்டே ஷமீரா சொல்லு கண்டிப்பாக டி.

புள்ளைங்க வந்தாலும் முதல் இடம் உனக்கு தான் என்றவனை பார்த்தவள் குழந்தை பற்றி நான் யோசிக்கவே இல்லையே என்று ஷமீரா சொல்ல,எதேஏஏ யோசிக்கவில்லைஆஆஆ...

என்ன டி இப்படி சொல்ற..!!!

டெல்லி:

ருத்ரனையும் தீபனையும் பார்த்த டாக்டர் கர்ணன்,பாய்ஸ் இன்னும் 10 டேஸ் டைம் இருக்கு.பொறுமையா யோசிச்சு பேக்கிங் பண்ணிட்டு கிளம்புங்க.பிப்ரவரி இரண்டாம் தேதி போய் ஜாயின் பண்ணுங்க,இப்ப எனக்கு பர்கர் சாப்பிடற வேலை இருக்கு.

நீங்க பாத்துட்டு இருந்திங்கனாக்க எனக்கு ரொம்ப வயித்த வலிக்கும்டா எந்திரிச்சு போங்கடா என்றார்.அவரை முறைத்தபடியே எழுந்தவர்கள் சரியான தின்னி முட்டையா இருப்பார் போல என்று முணுமுணுக்க டேய் என் வாய் நான் சாப்பிடுறேன் டா உங்க ஆண்டி கிட்ட போட்டு கொடுக்காமல் இரண்டு பேரும் போங்கடா என்றார்.

எனக்கு ஒரு டவுட் என்று தீபன் கேட்க அவனைப் பார்த்தவர் நான் உண்மையிலேயே டாக்டரா இல்லையா என்று உனக்கு சந்தேகமா இருக்கு அப்படித்தானே,பல்ல ஒடச்சிடுவேன் ஓடிடுங்க டா என்றவாறு பக்கத்தில் இருந்த கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலை எடுக்க, இருவரும் பதறி அடித்துக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தார்கள்.

என்னடா சார் இப்படி சொல்றாரு ?

இப்ப என்ன பண்றதுடா என ருத்ரன் கேட்க,எனக்கு ஒன்னு தோணுது சொல்றேன் கேக்குறியா மச்சி என்று தீபன் சொல்ல,ம்ம் சொல்லுடா என்றான்.

கொஞ்ச நாள் நமக்கும் ஒரு சேஞ்சஸ் இருக்கட்டுமே 3 மந்த் தானே மதுரைக்கு போகலாமே டா. நமக்கும் தமிழ்நாட்டுல போய் இருக்கணும்னு ரொம்ப நாளா ஆசைத்தான என்கவும் ஜூலி இப்படி இருக்கிறாளே டா.

இந்த நேரத்துல ட்ராவல் பண்ணினால் சரியா வருமா என்று ருத்ரன் கேட்க,ஒரு மாசம் ஜூலி இங்க இருக்கட்டும்.நம்ம அங்க போய் வீடு பார்த்து வைக்கலாம் டெம்பரவரியா தான தங்க போறோம்.

பிறகு அவங்க மூணு பேரையும் தமிழ்நாட்டுக்கு கூப்பிட்டு போகலாம் ஃபர்ஸ்ட் நம்ம மட்டும் போய்க்கலாம் என்று தீபன் சொல்ல,நீ சொல்றதும் சரியா தான்டா இருக்கு மச்சி.எனக்கும் இங்கிருந்து கொஞ்சம் விலகி இருந்தா நல்லா இருக்கணும்னு தோணுது டா என்றான்.

நீ எதை நினைச்சு சொல்றேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுதுடா அவனெல்லாம் ஒரு ஆள் என்று அவனை போய் நினைச்சுட்டு இருக்கியாடா என்ற தீபன்,இன்னும் நாலு நாள்ல அந்த நாள் வருதே ஞாபகம் வரலையா டா என்று நண்பனை பார்த்தான்.

நம்ம வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாச்சேடா என்று சொல்லும்போது அந்த நாளை நினைத்து இருவருக்கும் கண்கள் கலங்கியது.பின்னர் தன்னைத்தானே தேற்றிக் கொண்டவர்கள் அவர்கள் ரூமிற்கு சென்று மற்ற பேஷண்ட்களை பார்க்க ஆரம்பித்தனர்.

நேரமும் கடந்து செல்ல இருவரும் அவர்கள் டூட்டியை முடித்துவிட்டு பல வித யோசனைகளோடு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.இருவரின் முகத்தைப் பார்த்து ஏதோ சரியில்லை என்பதை புரிந்து கொண்ட இருவரின் மனைவிகளும் அதைப்பற்றி எதுவும் கேட்காமல் சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என்றனர்.

ருத்ரனோ எடுத்து வை என்றவன் எங்கே அத்தையை காணுமென்று கேட்கவும் அம்மா பக்கத்து வீட்டு ஆன்ட்டி கூட பார்க்குக்கு வாக்கிங் போயிருக்காங்க என்றாள்.

அம்மாவுக்கு இந்த இடம் கொஞ்சம் செட் ஆயிடுச்சு போலயென தீபன் சொல்லும் போது என்னங்க ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும்.

நான் வேறு அதை மறந்தே போயிட்டேன் என்று ஜூலி சொல்ல என்ன என்றான்.

அன்னைக்கு சர்ச்சுக்கு போயிருந்தோமோ அப்போ அம்மா அவங்க கழுத்துல இருக்கும் தாலியை கழட்டி உண்டியலில் போட்டாங்கள் என்க,என்னடி சொல்ற என்று ருத்ரன் அதிர்வாக கேட்க,தீபன் யோசனையுடன் இருக்க,ஆமாங்க...

சர்ச்சுக்கு போகனும்னு கேட்டுட்டே இருந்தாங்க நாங்க கூட்டிட்டு போனோம்.பிரேயர் முடிஞ்ச பிறகு நீங்க இருங்க நான் வரேன்னு சொல்லிட்டு அவங்க காணிக்கை உண்டியல் இருக்கிற இடத்துக்கு போனாங்களா,சரி ஏதோ காசு தான் போட போறாங்க நினைச்சுட்டு இருந்தால்,திடீர்னு அவங்க கழுத்துல இருந்த செயினை கழட்டி அதுல போட்டுட்டாங்க.

அவங்க போடும்போது நான் பார்த்தேன் அது தாலி தான் கிராஸ் போட்டிருந்தது என்க,ம்ம் எதனாலோ அத்தை மனசு உடைஞ்சு போயிருக்காங்க மட்டும் நல்லா புரியுது டி.

அவங்களாக சொல்ற வரைக்கும் நாம் இத பற்றி எதுவுமே கேட்க வேணாம் புரியுதா.இப்போதைக்கு அவங்க நம்ம வீட்டுல பெரியவங்க என்க,இதை நீங்க சொல்லி தான் எனக்கு தெரியனுமா?

உண்மையிலேயே பெத்த தாயை விட மேலாதான் கவனிச்சுக்கிறாங்கள் என்கவும் ஆமாடி அவங்கள பாத்தாலே தெரியுது.சரி நாங்கள் ப்ரஷாகிட்டு வரோமென்று ருத்ரன் தீபன் இருவரும் அங்கிருக்கும் அவரவர் அறைக்குள் சென்றனர்.

இருவர் பிளாட்டிலும் இருவருக்கும் செப்பரேட்டா ரூம் இருக்கிறதால் பிரச்சனை இல்லாமல் போனது.

வீழ்ந்தேனடி
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top