Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 360
- Thread Author
- #1
திருச்சி மகி வீடு:
நேரமும் கடந்து சென்றதே தவிர மானசா கதவைத் திறந்து வெளியே வரவே இல்லை.பெருமூச்சு விட்டு எழுந்த மகி, சுவரில் இருக்கும் கடிகாரத்தை பார்க்க மதியம் 12 என்று காட்டியது.
பின்னர் மனைவியிருக்கும் ரூம் கதவின் முன்பு நின்று மானசா மானசா என்று தட்ட,சிறிது நொடிகள் சென்று கதவை திறந்தவர் என்ன என்றார்.
பசிக்குது சாப்பாடு எடுத்து வை என்கவும்,எதுவும் சொல்லாமல் கிச்சனுக்கு போனவர் சமைத்ததை மீண்டும் சூடு பண்ணி எடுத்து வந்து டைனிங் டேபிளின் மேல் வைக்க,மகியும் கையை கழுவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்.
இன்னைக்கு நைட்டு எட்டு மணிக்கு நமக்கு பிளைட்.ஞாபகம் இருக்கு தானே என்க,தெரியுமென்று தலையை மட்டும் மானசா அசைக்க,சரி அதுக்கு தேவையானது எல்லாம் பேக் பண்ணிக்க.
நான் ஆபீஸ் வரைக்கும் போயிட்டு வரேனென்று சாப்பிட்டு எழுந்தவர் அங்கிருந்து சென்றார்..
வீட்டை பூட்டிவிட்டு ஹாலில் வந்து உட்கார்ந்த மானசாவிற்கு எஸ்தரின் நினைவாக தான் இருந்தது
எஸ்தரிடம் எல்லாம் சொல்லி கல்யாணம் பண்ணினதாக தான் இதுவரை நினைத்துக் கொண்டிருக்க,
இன்று எஸ்தருக்கு இந்த விஷயம் தெரியாது என்பது புரிய,அப்போ அன்று நான் போன் பண்ணும் போது எடுத்தது எஸ்தர் தானானு அதிர்ச்சியாக இருந்தது.
மனம் கடந்த காலத்தை நினைக்கவும் அவரையும் மீறி அழுகை வர கண்ணீர் வழிந்து ஓடியது.தன்னை தாயாக்கிய முதல் ஜீவன் தன்னை அம்மா என்று அழைத்த முதல் உயிர் அல்லவா,பெற்ற தாயால் அந்த ஜீவனை எப்படி மறக்க முடியும்?
"அம்மா துர்கா தேவி"
நினைவு தெரிந்த நாளிலிருந்து உன்னை தானே வணங்கிட்டு இருக்கேன்.ஏன் எனக்கு இப்படி ஒரு வேதனையை கொடுத்தீங்க?
ஆசையா பெத்து எடுத்து வளர்த்த மகளை இப்படி தீக்கு இரையாக எடுத்துக்க உங்களுக்கு எப்படி தாயே மனசு வந்துச்சு?என்று அழும் போது அவர் மனசாட்சியோ அன்று பலியானது உன் மகள் மட்டும் இல்லையே,எத்தனையோ உயிர் என்பதை ஏன் மறந்துவிட்டாய் மானசா என்றது..
ஆமாம்..என் மகள் மட்டும் இல்லையே அங்கிருந்த எல்லாரும் தானே தீக்கு இறையானார்கள் என்ற நிதர்சனம் புரிந்தாலும் மகளை நினைத்து அழாமல் இருக்க முடியவில்லை.
கண்ணீரோடே தேவையானது எல்லாம் பேக்கிங் பண்ணி முடித்தவர் அப்படியே அந்த பெட்டில் படுத்து கண்களை மூட அவரையும் மீறி தூங்கிவிட்டார்..
நேரமும் கடந்து சென்றது.ஒரு வழியாக தூக்கம் கலைந்து எழுந்த மானசாவிற்கு ரூம் இருட்டாக இருக்கவும் மணி என்ன ஆச்சுனு தெரியலையே என்று பதறி அடித்து பெட்டில் இருந்து எழுந்தவர், சுவிட்சை தேடி லைட்டை ஆன் பண்ணி விட்டு ஹாலுக்கு வந்து லைட்டை போட்டு மணியை பார்க்க மாலை ஆறு என்று காட்டியது.
முகத்தை கழுவிட்டு வேக வேகமாக கார பணியாரத்தை செய்து முடிக்க மகியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.ஈவினிங் லைட்டாக சாப்பிட்டுக் கொண்டு அங்கு போய் இரவு டின்னரை பார்த்துக்கலாம் என்று முன்பே முடிவு செய்திருந்தனர்.
பின்னர் இருவரும் சாப்பிட்டு தயாராகி அவர்கள் காரை எடுத்துக்கொண்டு ஏர்போர்ட்டிற்கு சென்றனர்.
எல்லா ஃபார்மாலிட்டீசும் முடித்து காத்திருக்க அரை மணி நேரத்தில் அவர்கள் செல்வதற்கான இண்டிகோ விமானத்தின் அறிவிப்பு வந்ததும் இருவரும் ஃபிளைட்டை நோக்கி சென்றனர்..
உள்ளே வந்தவர்கள் அவர்களுக்கான இருக்கையில் உட்கார சிறிது நிமிடங்கள் கடந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்த இண்டிகோ விமானம் டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டை நோக்கி வானில் பறந்து சென்றது.
அருகருகே கணவன் மனைவி இருவரும் உட்கார்ந்திருந்தாலும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசிக்கவில்லை.ஒரு மணி நேரம் வானில் பறந்து வந்த விமானமோ டெல்லி ஏர்போர்ட்டில் வந்து இறங்கியது.
பின்னர் இருவரும் தங்களது லக்கேஜோடு வெளியே வர மகி புக் பண்ணிய காரும் அவர்களுக்காக அங்கே காத்திருக்க,டிரைவருக்கு போன் பண்ணியவர் இருக்கும் இடத்தை சொல்ல சிறிது நிமிடத்தில் அவர்கள் முன்பு காரும் வந்து நின்றது.
இவர்கள் ஏறிய காரோ டெல்லி டிராபிக்குள் புகுந்து சாந்தினி சௌக் என்ற இடத்திற்கு வந்து சேர முக்கால் மணி நேரமானது.
டிரைவரிடம் பணத்தை கொடுத்து விட்டு அங்கிருந்த ஹோட்டல் உள்ளே போனவர் ரிசப்ஷனில் இருந்த ஆளிடம் ரூம் புக் பண்ணிய விஷயத்தை பற்றி ஹிந்தியில் சொல்ல,அவனும் கம்ப்யூட்டரில் செக் பண்ணியவன் ரூம் நம்பர் 207 என்று சொல்லி கீயை கொடுத்தவன்,அங்கிருந்த வேலை செய்யும் பையனை அழைத்து இவர்கள் லக்கேஜை எடுத்துட்டு போக சொல்ல,டீகே பாய் என்றவன் இவர்களோடு லிப்டில் ஏறி இரண்டாவது ப்ளோருக்கு வந்தான்.
பின்னர் கதவை திறந்து உள்ளே போக லக்கேஜை உள்ளே வைத்தவன் ஆர்டர் பண்ணிய உணவை எடுத்துட்டு வரட்டுமா என்று கேட்க,மகியும் எடுத்துட்டு வர சொன்னார்.
பத்து நிமிடத்தில் அவர்களுக்கான டிபனையும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவன் சென்று விட, இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு அங்கிருந்த பெட்டில் படுத்தவர்களுக்கு கடந்த கால வாழ்க்கை சுவடுகள் நினைவிற்கு வந்தது...
30 வருடங்களுக்கு முன்பு,சோழனூர்:
மேரி மேரி என்கும் குரலை கேட்டு வரோனென்றவாறு கையில் கரண்டியோடு ஹாலுக்கு வந்தார் ஆப்ரகாமின் மனைவியான சாராள் மேரி.
மனைவியை பார்த்தவர் ஒரு சந்தோஷமான விஷயம் டி என்க, கணவரை முறைத்த மேரியோ உங்களுக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன் இப்படி வாசலில் இருந்து கத்தாதீங்க கத்தாதிங்கன்னு...
ஏன் அங்க சமையல் கட்டுக்கு வந்து சொன்னால் தேய்ந்து போயிடுவீங்களா என்று முறைக்க,மனைவியைப் பார்த்து அசடு வழிய சிரித்தவர் சந்தோஷத்தில் அப்படி கத்திட்டேன் டி என்றார்..
ஓஓஓஓ...
அப்படி என்ன விஷயம் அய்யா இவ்வளவு குதூகலமாக இருக்கீங்களென்று மேரி கேட்க,மகி இன்டர்வியூரில் பாஸ் பண்ணிட்டான் டி. போஸ்டிங் டெல்லியில் கிடைச்சிருக்கு என்கவும்,என்னங்க சொல்றீங்க என்று மேரியும் சந்தோஷத்தில் கண்கள் விரிய கேட்டார்.
"ஆமா"
கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் ஸ்கூலுக்கு டிரங்க் கால் வந்தது.அதான் உன்னிடம் சொல்ல ஓடி வந்தேனென்றார் ஆபிரகாம்.
"ஏசப்பா" என்றவர் நல்லவேளைங்க,புள்ள ராப்பகலா சோறு தண்ணி பாக்காமல் படித்ததற்கு ஆண்டவர் நல்ல பலனை கொடுத்திருக்கிறார்.ஆமாம் தாஸ் எப்போங்க வரானென்க,இன்றைக்கு நைட் டிரைன் டி.
"எப்படியும் ரெண்டு நாள் ஆகுமென்றார்".
வனிச்சூர்:
இளா என்று ஷமீரா பல்லை கடிப்பது செழியனுக்கு கேட்க செல்லம் நீ என்னதான் பல்லை கடிச்சாலும் நடப்பது நடந்து தாண்டி ஆகும்.
நாளைக்கு சண்டே கம்பெனி லீவு தான். சோ உன் மாமாக்கு நாளைக்கு ஃபுல் டைம் உனக்கு நீச்சல் கத்துக் கொடுக்கிறதுதான் வேலை.பயிற்சி இந்த குளத்தில் வேணாம்.அங்கு அருவிக்கு போகலாம் என்கவும் எதே அருவியாஆஆ என்று அலறினாள்...
அதே அதே என்று மனைவியின் அலறலை ரசித்தவன் மிசஸ்.செழியன் இப்படி எல்லாத்துக்கும் பயந்துட்டே இருந்தீங்கன்னா என்ன அர்த்தம் சொல்லுங்க?நீங்க தான் தைரியமான ஆளாச்சே என்க,என்னய்யா விளையாடுறியா என்றாள்.
ஆமா என் பொண்டாட்டி கூட விளையாடாம வேற எவன் பொண்டாட்டி கூட விளையாட சொல்றடி என்று செழியன் கேட்க,அதான் உங்களை சைட் அடிக்கிறாளுங்களே அவங்களுக்கு போய் கத்துக்கொடு.உன்னுடைய டிரைனிங் எனக்கு ஒன்னும் தேவையில்லை என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
அடுத்த செகண்ட் போன் வர கணவன் தான் என்பது தெரிந்தும் எடுக்காமல் இருந்தாள்.முதல் அழைப்பு கட்டாக மீண்டும் கால் வரவும் அட்டென்ட் பண்ணினாள்.
ஏய் என்னடி திமிரா?
உன்கிட்ட பலவாட்டி சொல்லிருக்கேன்.இப்படி பேசிட்டு இருக்கும்போது போனை வைக்காதன்னு.இன்னும் நீ திருந்தவே இல்லை...
"எதா இருந்தாலும் பேசணும்"இல்லை அமைதியாக இருக்கணும் அதை விட்டு மூஞ்சில அடிச்ச போல கட் பண்ணினால் என்ன டி அர்த்தம்.இதைப்போல உன் செயலால் தான் ஒரு வருஷம் உன்னிடம் பேசாமல் இருந்தேன்...அதன் பிறகும் உன் குணம் மாறவேயில்லை ச்சை என்று சொல்லி போனை வைத்து விட்டான்.
ஷமீராவிற்கு ஒன்னுமே சொல்ல முடியவில்லை.தான் செய்தது தவறு என்பதும் இதே போல செய்வது கணவனுக்கு பிடிக்காது என்பதும் திரும்பவும் இப்படி செய்து விட்டோமே என்று குற்ற உணர்ச்சியாக இருக்க, உடனே தனது ஃபோனில் இருந்து கணவனுக்கு கால் பண்ண,ரிங் போய்க்கொண்டே இருந்ததே தவிர செழியன் அட்டென் பண்ணவில்லை.
ஷமீராவும் விடாமல் கால் பண்ணிக் கொண்டே இருக்க,அங்கே குளத்தில் நீச்சலடித்துக் கொண்டிருந்த இருவரும் ஷமீ,ஷமி என்று கூப்பிட,நிமிர்ந்து பார்த்தவளோ என்னவென்றாள்.
வா என்கவும் போனில் பேசுவதாக சைகையில் சொல்ல உன் புருசனுக்கு கம்பனியில் வேலை இல்லையாடி என்று கண்மணி சிரிக்க,மலரோ அவளை அடித்துவிட்டு நீ பேசு செல்லமென்றாள்.
பின்னர் மீண்டும் கால் பண்ண,கால் வந்து கொண்டே இருப்பதை பார்த்த செழியனும் கண்ணை மூடி திறந்தவன் அட்டன் பண்ணி என்ன டி உனக்கு பிரச்சனை?
எதுக்கு கால் பண்ணி உயிரை வாங்கிட்டு இருக்க என்கவும் சாரிங்க என்றாள்.ஏய் உன் வேலை மயிரை பாருடி.சும்மா மனுஷனை கடுப்பேத்திட்டு இருக்காதயென்று கட் பண்ணியவனோ கோவத்தில் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
ஷமீராவும் மீண்டும் கால் பண்ணி பார்க்க ஸ்விட்ச் ஆப் என்று வந்ததும் கண்ணில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் தரையில் விழுந்தது.
பின்னர் கண்களை துடைத்தவள் இயல்பாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டு குளக்கரைக்கு போக,அங்கே மலரும் கண்மணியும் போட்டி போட்டுக் கொண்டு அக்கறையை தொடுவதற்காக நீச்சல் அடித்து சென்று கொண்டிருந்தாளுங்கள்.
ஷமீராவின் பார்வை குளத்தில் இருக்கும் தோழிகள் மேல் இருந்தாலும் சிந்தனைகள் எல்லாம் கணவனிடம் தான் இருந்தது.
எப்படி இந்த மனுஷனை சமாதானப் படுத்த போறேன்னு தெரியலையே? அவருக்கு இப்படி பண்றது சுத்தமா பிடிக்காது.இருந்தாலும் நம்ம ஏன் இப்படி நடந்து கொள்கிறோம் என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டிருந்தாள்.
அவள் தானாக பேசிக் கொண்டிருப்பதை கரையில் ஏறி வந்த மலரும் கண்மணியும் வித்தியாசமாக பார்த்தனர்.
ஓய் ஷமீ என்னடி பைத்தியம் பிடித்து விட்டதா என்று கண்மணி கேட்க,உன் மாமனை கட்டியிருக்கேன் அப்போ பைத்தியம் பிடிக்காமல் என்னடி பண்ணும் என்று ஷமீராவும் சொல்ல, அது உன் தலையெழுத்து டி.அந்த மனுஷன் தான் வேணும்னு நின்னல்ல அனுபவித்து தாண்டி ஆகணுமென்று சிரித்தாள்..