• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்

ராஜி நீ சொல்றதை நாங்க நம்புறோம் மா.அந்த ஊரு எங்கே இருக்கிறது?

அது தெரியலங்கப்பா.ஆனா ஒரு வருஷமா அந்த அண்ணா கிட்ட பேசலைனு சொன்னாளே என்கவும் அப்படியா என்று அதிர்ச்சியாக மகி கேட்க ஆமாம்பா நீங்க சம்மதிக்காமல் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு உறுதியாக இருந்தாள்.

எந்த சூழ்நிலையிலும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டே இருந்தாப்பா....

எனக்குத் தெரிந்து காரணம் இல்லாமல் இப்படி பண்ணி இருக்க மாட்டாளென்று ராஜி சொல்ல,எஸ்தரோ தன் கையில் எடுத்து வந்து கடிதத்தை நீட்டி உன் ஃபிரண்டோட லட்சணத்தை பாருயென்க,அதை வாங்கி படித்த ராஜியோ ஏன் ஷமீரா இந்த முடிவுக்கு வந்தாளென்று யோசனை பண்ணினாள்.

நாங்க கிளம்புகிறோமென்று சொல்லிக் கொண்டு வெளியில் வந்து காரில் ஏறி விட்டு,மாமா இப்ப என்ன பண்ணுரதென்று அந்தோணியிடம் கேட்கவும்,அந்த ஊர் எங்க இருக்குன்னு முதல்ல தெரியனுமே மகி?

ம்ம் என்றவாறு தனது போனை ஆன் பண்ணியவர் கூகுளில் போய் வனிச்சூரை டைப் பண்ணி சர்ச் பண்ண அது அவர்கள் இருக்கும் ஊரிலிருந்து 12 மணி நேரம் தூரத்தில் இருப்பதாக காட்டியது.

மாமா நம்ம ஊர்ல இருந்து மதுரை. மதுரையிலிருந்து எட்டு மணி நேரம் காட்டுது என்கவும் அப்படியா சரி கிளம்புனு வனிச்சூரை நோக்கி புறப்பட்டனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.

அந்தோணியும் ராணியும் ஷமீராவை தங்களது மகன் பாபுக்கு கட்டலாமென்று பிள்ளைகளின் சிறு வயதிலிருந்து ஆசையாயிருக்க ஷமீராவோ இப்படி பண்ணிட்டு போனது வருத்தமாக தான் இருந்தது.

நேரமும் கடந்து செல்ல காலையிலிருந்து எதுவும் சாப்பிடவில்லை.மதுரைக்கு வந்து சேர்ந்தவர்கள் அங்கிருந்த ஹோட்டலில் பெயருக்கு ஆளுக்கு கொஞ்சம் சாப்பிட்டு கிளம்பும் போது இரவு 10 என்று காட்டியது.

அவ்வப்போது அவர் போனுக்கு ஏதோ புது நம்பரிலிருந்து கால் வந்ததாக குறுஞ்செய்தி மட்டும் வந்திருந்தது.டவர் இல்லாத இடத்தில் இருப்பதால் அவருக்கு ரீச் ஆகவில்லை.இருக்கும் மனநிலையில் அந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் அவருக்கு தோணவில்லை

மாமா இந்த நேரத்தில நம்ம போய் என்ன பண்ணுவோம்?இங்கே ஸ்டே பண்ணிட்டு விடிய காலையில் கிளம்பலாமானு மகி கேட்க அதுவும் சரியென்று பட்டது.

போட்டுக்க துணி எல்லாம் எடுக்காம நாம பாட்டுக்கும் கிளம்பி வந்துட்டோமே??போற வழியில எதாவது ஜவுளிகடை இருக்கா பாரு மாத்துறதுக்கு ஒரு ஜோடி துணி மட்டும் வாங்கிக் கொள்ளலாம்னு அந்தோணி சொல்ல,அதேபோல் போகும் வழியிலிருந்த ஜவுளிக்கடை முன்பு காரை நிறுத்தியவர் நீங்க மூணு பேரும் உள்ள போங்க நான் பார்க்கிங் பண்ணிட்டு வரேனென்றார்.

பின்னர் நால்வரும் அவர்களுக்கு தேவையான டிரெஸ்ஸை எடுத்தவர்கள் அங்கிருந்த ஹோட்டலில் இரண்டு ரூம் போட்டு இருவரும் அவர்கள் துணைவியாரோடு பக்கத்து பக்கத்து ரூமில் தங்கிக் கொள்ள,மெத்தையில் படுத்திருந்த நால்வருக்கும் தூக்கம் மட்டும் எட்டாக் கனியானது. ..

வனிச்சூர்

தோட்டத்தில் மாட்டுக்கு கஞ்சி தண்ணீர் வைத்துக் கொண்டிருந்த செல்லதுரையோ மனைவியின் குரலைக் கேட்டு பதறி அடித்துக் கொண்டு வாசலுக்கு வந்து பார்க்க, அங்கே தனது மகனும் இன்னொரு பெண்ணும் இருப்பதை பார்த்தவர், என்னடா பண்ணி வச்சிருக்க என்றவாறு வேகமாக வந்தவர் பளார் பளாரென்று நான்கு அறையை விட்டு,இப்படி என் மானத்தையே வாங்கிட்டியேடா என்று சத்தம் போட,அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அங்கு வந்து கூடி விட்டனர்.

பக்கத்து தெருவில் தான் வானதியின் அப்பா வீடு என்பதால் விஷயம் கேள்வி பட்டதும் அவருடைய அண்ணனுங்களோ வேகமாக தங்கை வீட்டுக்கு வந்தவர்கள் அங்கே தனது மருமகன் யாரோ ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்திருப்பதை பார்த்து அவர்களுக்கும் சிறு அதிர்வு தான்.

செல்லதுரை மகனை திட்டிக் கொண்டிருக்க,வானதியோ ஒரு பக்கம் உட்கார்ந்து ஒப்பாரி வைத்தார்...

உன்னை பாராட்டி சீராட்டி வளர்த்தோமே...

பக்கத்து தெருவிலிருக்கும் என் அப்பா வீட்டுக்கு போறதுக்கு கூட என்கிட்ட சொல்லிட்டு தான போவ..இன்னிக்கு இவ்வளவு பெரிய காரியத்தை பண்ண நீயே முடிவு எடுத்திருக்கிறியேடா?

அப்பா அம்மா நாங்க ரெண்டு பேரும் குத்து கல்லு போல உசுரோட தான இருக்கோம்,செத்து போயிட்டோம்னு நினைச்சியா?

பெத்த எங்களுக்கு ஊரே மெச்சும்படி கல்யாணம் பண்ணி வைக்க தெரியாதா?ஏண்டா இப்படி யாருமே இல்லாத அனாதை போல் பண்ணிட்டு வந்திருக்கிற?

எந்த ஊர் காரியோ தெரியலையே...

ஒன்னும் தெரியாது என் பையனை மயக்கிட்டாளேனு வாய்க்கு வந்த வார்த்தைகளை சொல்லி ஒப்பாரி வைத்து அழுதார்.

அய்யா செல்லதுரை நடந்தது நடந்து போயிடுச்சு மகனையும் மருமகளையும் வீட்டுக்கு கூட்டிட்டு போகாம என்ன இப்படி வாசலிலே நிக்க வச்சு பேச்சு என்று அவரின் மாமனாரின் குரல் கேட்க,தனது தந்தையின் குரலை கேட்ட வானதியோ என் பொறந்தவனுங்க மவளை என் வீட்டுக்கு மருமகளாக கொண்டு வர இத்தனை வருஷமா கனவு கண்டுக்கொண்டு இருக்கிறேன்.நீ என்னப்பா இப்படி சொல்லுற?.

மகள் சொன்னதை கேட்டவர் யாருக்கு எங்கு அமைப்போ அங்கு தான் அமையும்.நீயும் நானும் ஆசைப்பட்டால் மட்டும் போகாது...

போ கழுதை...கண்ணை துடைச்சிட்டு ஆலத்தை எடுத்துட்டு வா என்று தனது மகளை அதட்டினார் தம்புசாமி.

என்னங்க மாமா இப்படி சொல்லுறீங்களென்று செல்லதுரை கேட்க என் மகளுக்கு சொன்னது தான் உங்களுக்கும் மாப்பிள்ளை.ஊர் சிரிச்சா மட்டும் நடந்தது இல்லன்னு மாறி போய்டுமா?

எலே கண்ணா வாடா இங்கென்று அதட்ட,கூட்டத்தின் நடுவில் நின்றவனோ தனது தாத்தாவின் அருகில் வந்தவன் எனக்கு ஏதும் தெரியாது தாத்தா என்கவும்,உன்னை நான் கேட்கவே இல்லையே..நீயே தெரியாதுனு ஆஜர் ஆனா என்னடா அர்த்தம்?

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாடா?

ரெண்டு பயலும் ஒன்னா தான் சுத்திட்டு கிடப்பீங்க.அது எப்படி இவன் காதோலூ செஞ்சது உனக்கு மட்டும் தெரியாது? இதை நான் நம்பனுமா என்க..

கண்ணன் தனது தாத்தாவிடம் மாட்டிக்கிட்டு படும்பாட்டை கண்டு செழியனும் மௌனமாய் சிரித்துக் கொண்டான்.

அங்கு நின்று வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த தெரு மக்களோ நல்ல பொண்ணா தான் புடிச்சிட்டு வந்துருங்கான்.புடிச்சாலும் புடிச்சான் நல்லா புளியம் கொம்புங்குற போல சோடிப் பொருத்தம் நல்லா தான் இருக்கு...

ஆனா பொண்ணோட வாட்டத்தையும் முக ராசியை பார்த்தா அது நம்ப சாதிசனம் போலவே தெரியலையே என்று முணுமுணுத்துக் கொண்டனர்.

வீட்டிற்குள் சென்ற வானதியும் வேறு வழியின்றி ஆலம் கரைத்து எடுத்துட்டு வந்து நிற்க...என்ன வானதி உனக்கு ஒன்னும் ஒன்னும் வெத்தலை பாக்கு வச்சு பழக்கத்தை சொல்லிக் கொடுக்கனுமா?

கையில் ஆலத்தோடு வேடிக்கை பார்த்துட்டு இருக்க...போய் எடு என்று தம்புசாமி தனது மகளை அதட்டவும் இந்த வயதிலும் தனது தந்தையின் கோவமான வார்த்தைக்கு பயந்த வானதியும் வாசலில் நிற்கும் மகன் மருமகளின் முன்பு வந்து நின்றவர் 3 சுத்து சுற்றி இருவர் நெற்றியிலும் பொட்டை வைத்து விட்டு, முந்தானையால் தனது மூக்கை சிந்திக் கொண்டு தட்டிலிருந்த ஆலத்தோடு அந்த கூட்டத்தை விலக்கி போய் ரோட்டில் ஊற்றி விட்டு வீட்டிற்குள் போனார்.

ஐயா வாயா...அம்மாடி வா மா என்று கூப்பிட மனைவியின் கையை இறுக்கமாக பிடித்த செழியனோ வலது கால் எடுத்து வை டி என்று ஷமீராவின் காதில் விழுமாறு சொல்ல அதே போல இருவரும் உள்ளே போனார்கள்.

அங்கிருந்த உறவினர்களோ அடுத்தது என்ன நடக்குமென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் சிலர் வீட்டிற்குள் வந்து அங்கங்கே உட்கார்ந்தனர்.

செல்லதுரையின் குடும்பத்தின் மூத்தவரான வீரையனோ விஷயத்தை கேள்வி பட்டு தனது அண்ணன் வீட்டிற்குள் வந்தவர் பேரனை ஒரு முறை முறைத்து விட்டு,துரை நடந்தது நடந்து போயிற்று..முகரையை தூக்கி ஏழு முழத்துக்கு வைத்து இருந்தால் ஒன்னும் புண்ணியம் கிடையாது புரியுதா என்க...

அதற்கு செல்லதுரையோ நீயும் என்னப்பா இப்படி சொல்ற என்றார்..

அப்போ வேற என்னதான் பண்ணனும்னு நினைக்கிற சொல்லு?

நம்ம புள்ள கட்டின தாலி அந்த பொண்ணு கழுத்துல இருக்கு தானே?அது இல்லன்னு உன்னால சொல்ல முடியுமா?என்று சற்று கோபமாக அண்ணன் மகனிடம் கேட்க, தனது சித்தப்பாவிற்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார்.

அம்மாடி உன் பேரு என்ன என்று தனது பேரனின் பக்கத்தில் நிற்கும் பேரன் பொண்டாட்டியை பார்த்து தம்புசாமி விசாரிக்க,அவரின் அன்பான அழைப்பில் நிமிர்ந்து பார்த்தவள் ஷமீரா தாஸூங்க தாத்தா என்றாள்.

அவள் நிதானமாக தாத்தா என்று அழைத்ததே அவருக்கு மனம் குளிர்ந்து போனது.தனது மீசையை தடவி விட்டவர் நீ எந்த ஊரு ஆத்தா???என்கவும் அவளோ சோழனூரென்றாள்.

சோழனூரா?

எங்க பக்கத்துல இந்த ஊரை நாங்க கேள்விபட்ட போலயே இல்லையேத்தா என்கவும்,அது சிதம்பரம் கிட்ட இருக்கு தாத்தானு செழியன் சொல்ல,எதேஏஏஏ சிதம்பரமாஆஆ..அவ்வளவு தூரம் நமக்கும் அந்த ஊருக்கும் சம்பந்தம் இல்லையேடா?

பிறகு எப்படி என்வும்,மூன்று வருடமாக அவளை காதலிச்சேன்.அவங்க வீட்ல வேற மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க அதனால தான் கையோடு கல்யாணம் பண்ணிக்கிர சூழ்நிலை என்றான்.

காதலிச்ச சரி...அதை பற்றி ஒரு வார்த்தை சொல்லணுமா? இல்லையா??

நீயே ஒரு முடிவு எடுத்துக்கறதுக்கு நாங்கலாம் எதுக்கு இருக்கிறோமென்று தனது மகள் வயிற்று பேரனை சத்தம் போட்டார்.

ஏற்கனவே ரெண்டு தடிமாடுங்கள் அதுங்க இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு மதுரையில் சுத்திட்டு கிடக்குங்க.

அதே போல இன்னைக்கு நீ கிளம்பிருக்கனு மகன் வழி பேரனுங்கள் மாறன் தீரனையும் அந்த நேரத்திலும் திட்ட மறக்கவில்லை...

சரித்தா உங்க அப்பா நம்பர் குடுத்தா பேசி பார்க்கும்.நாளைக்கு போலிஸ் அது இதுனா நல்லா இருக்காதென்க ஷமீராவிற்கும் தாத்தா சொல்வது சரியென்று படவும் தந்தையின் நம்பரை சொன்னாள்.

தொரை உன் மருமவள் சொல்லுற நம்பருக்கு போன போட்டு பேசுய்யா என்க,மாமா என்று அவர் தயங்க,போன போட்டு குடு நான் பேசுறேனென்று வீரையன் சொல்லவும் சரி சித்தப்பா என்றவர் தனது ஃபோனிலிருந்து ஷமீராவின் அப்பாவிற்கு கால் பண்ண அதுவோ நாட் ரீச்சபிளென்று வந்தது.

சித்தப்பா ஃபோன் போகவில்லை என்க...நிஜமாக நீ போன் போட்டியா? என்று அவர் சந்தேகமாக கேட்க,ஏன்பா இப்படி என்றார்.

நீ பண்ணினாலும் பண்ணுவியே அதனால தான் சந்தேகம் என்கவும், மற்றவர்களோ அதைக் கேட்டு சிரித்து விட்டனர்.

சித்தப்பா என்று துரை பல்லை கடிக்க திரும்ப போன் போட்டு பாரு என்றார்.துரையோ மீண்டும் ஷமீராவின் அப்பாவிற்கு கால் பண்ண இப்பொழுதும் அதே தான் சொல்லியது...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சித்தப்பா இப்பவும் போன் போகலை.

மகன் சொன்னதை கேட்ட வீரையன் எப்படியும் இவ்ளோ நேரம் அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும்,ஏத்தா நீ இந்த ஊருக்கு வருவன்ணு அவங்களுக்கு தெரியுமா?

"தெரியாதுங்க தாத்தா".

என்ன பண்றதென்று யோசித்தவர் கல்யாணம் ஆயிடுச்சு அதும் சட்டப்படி விவரமாகதான் பய கல்யாணம் பண்ணிட்டு கூட்டிட்டு வந்திருக்கானென்று வீரையன் சொல்ல,அழுது கொண்டிருந்த வானதியோ இப்ப உங்க பேரனோட பெருமை ஒன்னு தான் குறைச்சலாங்க மாமா?

அவன் இஷ்டத்துக்கு பண்ணிட்டு வந்திருக்கிறானே அதை எங்கேயாவது கண்டிக்கிறீங்களா?

கருவேப்பிலை கொத்து போல ஒத்த பிள்ளையை இதுக்கு தான் பெத்து வச்சேன்னானு அழுதார்.

ஏத்தா வானதி வாய மூட மாட்டியானு தம்புசாமி அதட்ட ஏப்பா உங்க பேரன் இவ்வளவு பெரிய காரியம் பண்ணிட்டு வந்துருக்கான் அவன் கிட்ட ஏண்டா இப்படி பண்ணுனனு கேட்காமல் என்னையே திட்டுறீங்களே இது எந்த விதத்தில் நியாயம் என்க...நடந்தது நடந்து போயிடுச்சு.அடுத்தது என்ன நடக்கணுமோ அதுதானே பார்க்கணும்.

சும்மா ஊற கூட்டி வச்சு ஒப்பாரி வச்சுட்டு இருக்குறியே நாளைக்கு நீ மாமியா இல்லை அந்த பொண்ணு தான் மருமகள் இல்லைணு ஆகிடுமா?

போ...வந்த பிள்ளைகளுக்கு முதல்ல வாய்க்கு ருசியா எதாச்சும் ஆக்கி போடு என்றவாறு திரும்பியவர் போங்கப்பா...ஊருக்குள் வெத்தலை வைக்கிறோம் எல்லாரும் அப்போது வந்து புள்ளைங்கள வாழ்த்திட்டு போங்களென்று அங்கிருக்கிறவர்களை பார்த்து தம்புசாமி சொல்ல அவர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அப்பொழுது கார் ஒன்று வேகமாக ஊரின் எல்லைக்குள் வந்தது.அதில் இருந்தவர்களோ இங்கே யாரிடம் என்ன கேட்பதென்று யோசனை பண்ணினார்.

ஊரென்றால் அதற்கு ஒரு தலைவர் நிச்சயமாக இருப்பார்.அதனால் அவர் வீட்டுக்கு நேரா போகலாமென்று அந்தோணி சொல்ல,அதற்கு மகியோ எதுக்கு மாமா பஞ்சாயத்து பண்றவன் வீட்டுக்குலாம் போகணும்...

விவசாயம் பண்றவங்கதான் அதிகமாக இருப்பார்களென்பது ஊரை பார்த்தாலே தெரியுது..கண்டிப்பா இங்கு இருக்கவங்களுக்கு படிப்பறிவு அவ்வளவு இருக்காது...என்னால் இவனுங்க கூடலாம் சரிக்கு சமமா பேச முடியாதென்றார்.

தனது மைத்துனர் சொன்னதை கேட்டு அந்தோணிக்கு பயங்கர கோபம் வந்தது. தங்கச்சி புருஷனாகிட்டான் இல்லை இவன் செவில்லே நாலு அறைவேன்னு தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்...

தனது மாமா அமைதியாக இருப்பதை பார்த்த மகி என்ன மாமா நான் பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க அமைதியாக ஊரை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறீங்களே?

ஏன் மகி நீ பேசுவது எங்கேயாவது சரியா படுதா சொல்லு?.படிக்காதவங்க எல்லாம் முட்டாளும் இல்ல படிச்ச நாமெல்லாம் அறிவாளியும் கிடையாது.
இன்று நாம் படிக்கும் பைபிள் எழுதியவர் எந்த ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் படித்தார்?
இரண்டு வரிகளில் வாழ்க்கை தத்துவத்தை அடக்கிய திருவள்ளுவர் கோல்டு மெடலா?

அறிவாளியாக இருக்க படிப்பு அவசியம் இல்லை.வாழ்க்கை பாடத்தை எந்த புத்தகமும் கற்று தருவதில்லை என்பதனால் தான் அனுபவமே சிறந்த ஆசான்னு சொல்லியிருக்கிறார்கள்...

நாம தான் புத்திசாலின்னு நினைச்சிட்டிருக்கோம் ஆனால் அவங்களுக்கு தெரியிற விஷயத்துல பாதி கூட நமக்கு தெரியாது.

நம்ப பாட்டனும் பூட்டனும் சூரியன் உச்சிக்கு வருவதை வைத்தே நேரத்தை கணிச்சிருக்காங்களே நம்மால் அப்படி கணிக்க முடியுமா?

யாராவது மணி கேட்டால் உடனே கையில் கட்டியிருக்கும் வாட்சை பார்ப்பது,இல்லைனா போன்ல பார்த்து சொல்லுறோம்.

ஏன் நாம் தான் புத்திசாலியாச்சே வானத்தை பார்த்து மணி சொல்ல வேண்டியது தானே என்க,மகியால் எதுவும் பேச முடியவில்லை.

உனக்கு பிடிக்கலையா அமைதியாக வா. அதற்கென்று உன் வாய்க்கு வந்த போல பேசாதா நான் பேசிக்கிறேன் என்கவும்,ஏங்க மாமா நாம எந்த காரியமாக வந்திருக்கிறோம் அதை பார்க்காமல் இப்போது தான் என் அண்ணனுக்கு பாடம் எடுத்துட்டிருக்கீங்களென்று ராணி கேட்க...

அதான இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாச்சே...ஏதோ என்னை கட்டியதால் உனக்கு கொஞ்சம் மனுஷத் தன்மை இருக்கிறது...

இல்லை உங்க அம்மா பார்த்த பையனை கல்யாணம் பண்ணியிருந்தால் நீயும் உன் அண்ணனை போல அகம் புடிச்ச கழுதையாக தான் வளர்ந்து இருப்படினு மனதிற்குள் சொல்லிக் கொண்டவர் உன் அண்ணனுக்கு பாடம் எடுக்கணுமென்று எனக்கு வேண்டுதல் டி.அதை சரியா செய்யணுமே என்றார்...

கணவர் தன்னை கிண்டல் பண்ணுவதை தெரிந்த ராணியோ அவரை முறைத்து பார்க்க மனைவியின் முகத்தில் தெரியும் அக்னி பிரவேசத்தை பார்த்த அந்தோணியோ மௌனமாக சிரித்தார்.

காரில் ஏறியதிலிருந்து ஜன்னல் பக்கமாய் பார்த்துக் கொண்டு வந்த எஸ்தரின் நினைவுகள் தனது மகளைப் பற்றி தான் இருந்தது.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது போல,இவன் தனது மகளை ஏமாற்றி விடுவானா?

எந்த தைரியத்தில் இவள் அவனை நம்பி ஓடி வந்தாள்?

நம்ம ஊருக்கும் இந்த ஊருக்கம் எவ்வளவோ தொலைவு இருக்கே....எப்படி இவர்களுக்குள் பழக்கமாயிருக்கும்?

ஒருவேளை இருவரும் ஒரே காலேஜில் படித்திருப்பார்களா?காதல் என்ற பெயரில் மகளிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கூப்பிட்டு வந்து விட்டானா?

இந்த வயல் காட்டில் இவள் எப்படி வாழ்வாள்?

இரண்டடுக்கு மாடியில் வாழ்ந்த தனது மகள் எங்கே இந்த கிராமத்தில் வாழும் இவன் எங்கேயென்ற யோசனையில் மூழ்கியிருக்க,கண்ணாடி வழியாக தனது தங்கையை பார்த்த அந்தோணி எஸ்தரென்றார்....

அண்ணன் குரல் கூட காதில் விழாமல் தனது சிந்தனையிலே இருக்க,மீண்டும் எஸ்தரென்று அந்தோணி கூப்பிட,அவர் குரலில் பதில் சொல்லாமலிருக்கும் மனைவியை பார்த்த மகிக்கு கோவம் வந்தது..

ஏன்டி உனக்கு காது கேட்குதா இல்லையா? மாமா எவ்வளவு நேரம் கூப்பிட்டு இருக்காரு அப்படி என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறனு மனைவியை பார்த்து சத்தம் போட்டார். .

நீ சும்மா இரு மகி என்றவர்,ராணி எஸ்தரின் தோளை தட்டென்க, அண்ணி அண்ணி எவ்வளவு நேரம் உங்க அண்ணன் கூப்பிடுறார் நீங்கள் என்ன யோசனையில் இருக்கிறீங்களென்ற பிறகு திரும்பி பார்த்தவர் சொல்லுணா என்க...

கவலைப்படாதே எல்லாம் நல்லாதான் நடக்கும் என்கவும் அதான் நடந்து போயிடுச்சே..இனிமே என்ன மாமா நல்லது நடக்க போறது?

ஒத்த பொம்பள புள்ளைய ஒழுங்கா வளர்க்க உங்க தங்கச்சிக்கு துப்பில்லை.நான் ஒரு இடத்துல கடந்து கஷ்டப்பட்டிட்டிருக்கேன் என்கவும் எஸ்தருக்கோ கணவனின் பேச்சை கேட்டு பயங்கர கோவம் வந்தது..சும்மா நிறுத்துங்க எப்ப பாத்தாலும் ஒத்த புள்ளைய வளர்க்க துப்பில்ல துப்பில்லன்னு

அவ்வளவு பொறுப்புள்ள மனுஷன் பக்கத்துலிருந்து பாத்துக்க வேண்டியது தானே..பிறகு ஏன் வேலைதான் முக்கியமென்று ஊர் ஊரா சுத்திட்டு கிடக்குறீங்க..

இத்தனை வருஷமா வளர்த்த என் வளர்ப்பு எப்படின்னு ஊர்ல உள்ளவங்களுக்கும் அக்கம் பக்கத்தில் இருக்கிறவர்களுக்கு தெரியும். மாசத்துல ரெண்டு நாளும் 15 நாளைக்கு ஒருமுறை விருந்தாளி போல வந்துட்டு போற உங்களுக்கென்ன தெரியும்?

இன்னைக்கு என் பொண்ணு இந்த முடிவு எடுத்ததற்கு முதல் காரணமே உங்களுடைய புத்தி தான்.அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது?

பொம்பள புள்ளைய கண்டித்து வளக்கணும் கண்டித்து வளர்க்கணும்னு என்னைக்காவது ஒரு அப்பாவா அவ கிட்ட பாசமா பேசியிருக்கீங்களா?

இல்ல முதல்ல அவளுக்கு என்னைக்கு பிறந்தநாளென்பது தெரியுமா? அவளுக்கு என்ன பிடிக்கும்னு தெரியுமா?அவளுக்கு என்ன திறமைகள் இருக்குனு தெரியுமா?சொல்லுங்க?

என்னமோ ஊர் உலகத்திலேயே யாரும் வேலை பார்க்காத போல,நீங்க தான் அதிசயமா வேலை பார்த்துட்டு இருக்க போல பண்ணிட்டு இருக்கீங்களேனு தனது மனதில் உள்ள குமுரல்களை எல்லாம் வார்த்தையால் கொட்டினார்.

எங்கே இது பெரிய பிரச்சனையில் போய் முடியுமோனு உணர்ந்த அந்தோணியோ தங்கையை சமாதானப்படுத்தியவர் அங்கு ஒரு டீ கடையிருக்கு...அங்க போய் கேட்கலாம் என்றவாறு கடையின் முன்பு போய் காரை நிறுத்தியவர்,அய்யா ஊர் தலைவர் வீடு எங்கிருக்கென்றார்.

இப்படியே போனால் நாலாவது தெருவுல மூணாவது வீடென்று வழிகாட்டவும் நன்றிங்கையானு அவர் சொன்ன பாதையில் சென்றார்.

சிறிது நிமிட பயணத்தில் பஞ்சாயத்துகாரர் வீட்டின் முன்பு போய் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கியவர்கள் சுற்றி உள்ள வீடுகளை பார்த்துக் கொண்டே அங்கே பனமட்டையிலிருந்த படலை திறந்து போனவர்கள் வீட்டின் கதவு லேசாக ஒருகளித்து சாத்தியிருப்பதை பார்த்தனர்.

ஐயா ஐயா என்று அந்தோணி கூப்பிட தனது கட்ட மீசையை தடவிக் கொண்டு வெளியே வந்தார் ஊர் தலைவர் பரமசிவம்.

வணக்கம் என்று இவர்கள் சொல்ல,வணக்கம் உள்ள வாங்க என்றவர் இவர்களின் தோற்றத்தை பார்த்துவிட்டு ரொம்ப படிச்சவங்களா இருப்பாங்க போலயே?

இவங்க எதுக்கு நம்மளை பார்க்க வராங்களென்னும் யோசனையுடன் உள்ளே அழைத்துப் போனவர் அங்கே முற்றத்திலிருந்த பெஞ்சில் உட்கார சொல்லிட்டு கமலா கமலா என்று உள்ளே இருக்கும் மனைவிக்கு குரல் கொடுத்தார்.

அவரும் அடுப்பங்கரையிலிருந்து வந்து முற்றத்தில் இருக்கும் தூணின் ஓரம் நின்று சொல்லுங்க என்க,வீட்டுக்கு ஆளுங்க வந்துருக்காங்க டீ தண்ணீர் கொண்டுவா என்க...அதெல்லாம் ஒன்னும் வேண்டாமென்று மகி சொல்ல,அட இருக்கட்டுங்க..

காலையில வீடு தேடி வந்திருக்கீங்க வந்தவர்களுக்கு ஒருவாய் தண்ணி கொடுப்பது தானுங்க வழக்கம் என்கவும்,பத்து நிமிடத்தில் கமலாவும் திக்கான பசும்பாலில் டீயை போட்டு எடுத்துட்டு வந்து நால்வருக்கும் கொடுத்துவிட்டு மீண்டும் அடுப்பங்கறைக்குள் சென்று சமையல் வேலையை பார்க்க ஆரம்பித்தார்.

அவர்கள் குடித்து முடிக்கும் வரைக்கும் அமைதியாக இருந்த பரமசிவம், சொல்லுங்க?

ஊருக்கு புதுசா இருக்கிறீங்க?

உங்களை யாரென்று தெரியவில்லையேனு நால்வரையும் பார்க்க,எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல் மகி யோசனையோடு இருக்கவும்,அந்தோணி தான் பேச ஆரம்பித்தார்...

வணக்கங்க நாங்க சோழனூரில் இருந்து வரோமென்று சொல்ல காலையில் செழியன் வீட்டில் அந்த பொண்ணு சொன்ன சோழனூர் என்ற வார்த்தை பரமசிவனுக்கு டக் என்று அந்த நேரத்தில் ஞாபகம் வந்தது.

ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரிங்க உங்களுக்கு நான் என்ன உதவி செய்யணும்?

எங்க பொண்ணு இந்த ஊருக்கு வந்து இருப்பதாக கேள்விப்பட்டோம்.
அதாவது தனக்கு பிடிச்சவனோட வாழப்போறனு எழுதி வச்சிட்டு வந்துருச்சி.யார் வீட்டுக்கு வந்திருக்குன்னு தெரியலைங்க?

எங்க பொண்ணை நல்லபடியாக எங்களோடு நீங்க அனுப்பி வைக்கணும் என்கவும் பரமசிவனுக்கு விஷயம் புரிந்து விட்டது.

சரி வாங்களென்று அவர் வெளியே செல்ல,இவர்கள் நால்வரும் என்ன இவர் பாட்டுக்கு வாங்கனு வெளியில் போறாரே என்கவும் ஏதோ விஷயம் இருக்கு போல,அவர் பின்னாடியே நாமளும் போகலாம். அவரைப் பார்த்தா நல்ல மரியாதையான ஆளு போல தான் தெரியுதென்று அந்தோணி சொல்ல மகியும் சரிங்க மாமா என்றார்.

வீழ்ந்தேனடி...
 
Member
Joined
Nov 8, 2025
Messages
50
பிடிச்சவனோட வாழ வந்தவளை எப்படி திருப்பி கூட்டிட்டு போவிங்க. போய் வேற வேலையை பாரு மகி
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
அதான் பாரேன் ணா... இந்த மகி போலஆளுங்களுக்கு இதே வேலை
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top