Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சி:
என்னடா இது?
இவர் என்னென்னமோ சொல்றாரேயென்று தனது மனதிற்குள் நினைத்துக் கொண்டவர்,ரொம்ப நன்றிங்க.நாங்க அங்க போய் பார்க்கிறோமென்று சொல்லிவிட்டு காரில் ஏறியவர்,ஏன் ராணி உன் அண்ணன் வேற வீட்டில் இருக்கானாமே சொல்லவே இல்லையே?.
ஏங்க நானும் உங்க கூட தானே இருக்கேன்,எனக்கு எப்படி தெரியும்னு ராணி கேட்க,அட ஆமாம்.தங்கச்சி கிட்டையும் போன் இல்லை.இருந்தாக்க இதைப்பற்றி சொல்லிருக்குமென்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து பாலக்கரை நோக்கி சென்றார்.
கால் மணி நேரத்தில் பாலக்கரை மார்க்கெட்டிற்கு வந்தவர்,இதற்கு பின்னாடி தானே வீடு இருக்குனு சொன்னாரே என்கும் யோசனையோடு காரை ஓட்டியவர்,சரி இங்கு யார்கிட்டையாவது இன்கம்டாக்ஸ் ஆபீஸில் வேலை செய்கிறவர் வீடு எங்கே இருக்குன்னு கேட்டால் சொல்லாமலா போய்விடப் போகிறார்களென்று யாராவது ரோட்டில் வருகிறார்களா என பார்த்துக் கொண்டே வந்தார்...
வரிசையாக இருக்கும் வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் அது யார் வீடு என்கும் பெயர் இருப்பது தெரிந்தது.ஒவ்வொரு வீடாக பார்த்துக் கொண்டே வரும்போது மூன்றாவது வீட்டில் மகிமைதாஸ் என்ற போர்ட்டு இருப்பதை பார்த்து அந்த வீட்டின் கேட்டோரமாய் போய் காரை நிறுத்தியவர் இதுதான் மச்சானோட வீடு.
அங்க பாரு உன் அண்ணன் பேரு இருக்கென்று சொல்லவும்,ராணியோ உள்ளுக்குள்ள ஓடும் பய மெஷின்களில் என்ன சொல்வதென்று தெரியாமல், இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டவர் அப்படியானு கீழே இறங்கினார்.
அந்தோணியும் காரை நிறுத்திட்டு வந்து கேட்டை திறந்து உள்ளே போக அங்கே மகியின் காரும்,புல்லட்டும் செட்டில் நிற்பது தெரிந்தது.நல்லவேளை உன் அண்ணன் இன்னும் வேலைக்கு போகல ராணி என்றபடி சுவற்றிலிருக்கும் காலிங் பெல்லை அழுத்தினார்
சிறிது நொடியில் கதவு திறக்கப்பட்டு வெளியே வந்த பெண்மணியோ அங்கிருந்த ராணியையும் அந்தோணியையும் பார்த்தவர் வாங்க வாங்க...
எப்படி இருக்க ராணி?
"தம்பி கல்யாணம் அப்போ பார்த்தது".
அதற்கு பிறகு இன்னைக்கு தான் உனக்கு அண்ணன் வீட்டுக்கு வரணும்னு தெரிந்ததா என்க, மகிக்கு தெரிந்தவர் போல அதனால்தான் தனது மனைவிடம் இவ்வளவு சகஜமாக பேசுகிறாரென்று அந்தோணியும் நினைத்துக் கொண்டார்.
ராணியோ உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அமைதியாக சிரித்தவர் நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க?.
"நல்லாருக்கேன் ராணி"
வாசல்லையே நின்னுட்டு இருக்கீங்களே உள்ள வாங்களென்று கூப்பிட்டு போனவர் உட்காருங்கள் டீ எடுத்துட்டு வரேன் என்கும் போது அம்மு அம்மு.எத்தனை முறை உன் கிட்ட சொல்றது அடுப்புல இப்படி ஃபுல்லா தீய வச்சிட்டு உன் இஷ்டத்துக்கு வெளியில் போகாதுன்னு?
இங்க வந்து பாரு எல்லாம் பொங்கி ஊத்திடுச்சு என்கும் மகியின் குரலை கேட்ட அந்தோணியோ வேலைக்கார பொண்ணு கிட்ட என்ன இவ்வளவு சகஜமாக பேசுறானென்று நினைத்துக் கொண்டவர்,எங்க எஸ்தரை காணோமென்று மகியின் குரல் வந்த பக்கம் திரும்பியவர் அங்கே சுவற்றில் இருந்த போட்டோவை பார்த்து அதிர்ந்து எழுந்தார்..
ஏய் உனக்கு காதுல விழுதா இல்லையா டி.எவ்வளவு நேரம் மனுஷன் கத்திட்டு இருக்கேன் எங்க தான் போய் தொலைஞ்ச என்றவாறு ஹாலுக்கு வந்தவரோ அங்கிருந்த தனது தங்கையையும் மைத்துனரையும் பார்த்து அதிர்ந்து போனார் புகழ் என்ற மகிமை தாஸ்...
சுவற்றிலிருக்கும் போட்டோவில் இருந்து பார்வையை விலக்கிய அந்தோணியோ எப்படி டா இவ்ளோ பெரிய துரோகத்தை என் தங்கச்சிக்கு உன்னால பண்ண முடிஞ்சது என்கும் போது அவர் கண்கள் கலங்கியது.
ம்கும் என தொண்டையை கணைத்து தன்னை சரி படுத்திக் கொண்டவர் என் தங்கச்சி எங்கே நான் பார்க்கணும் என்க,அவர் குரலிலிருக்கும் அடக்கப்பட்ட கோபத்தை உணர்ந்து கொண்ட மகியோ மாமா நீங்க உட்காருங்க நான் எல்லா விஷயத்தையும் சொல்கிறேனென்றார்.
ஒழுங்கு மரியாதையா கேட்கிறேன் என்னோட தங்கச்சி எங்கனு கொஞ்சம் குரலை உயர்த்த,மாமா கொஞ்சம் அமைதியா உட்காருங்கள்.
அக்கம் பக்கத்துல காதில் விழுந்தால் என்ன நினைப்பாங்க என்கவும்,ஏய் என்னோட தங்கச்சி எங்கன்னு சொல்ல போறியா இல்லையாடா என்று வேகமாக போய் மகியின் சட்டையை பிடிக்க,என்னங்க என்ன பண்றீங்க? அண்ணா என்ன பண்றீங்க என்று அங்கிருந்த ராணி,மானசா இருவரின் குரலும் பதற்றமாய் ஒலித்தது.
திரும்பி மனைவியை ஒரு பார்வை பார்த்த அந்தோணி திருச்சி என்றாலே பதறுவியே,அது எதனால் என்பது இப்பதான் புரிஞ்சிது.புருஷனுக்கு ரொம்ப உண்மையா நடந்திருக்க போல என்கவும்,கணவரின் வார்த்தையோ ஆயிரம் ஊசியால் தைத்தது போன்ற வலியை ராணியால் உணர முடிந்தது.
உனக்கு இங்க ஒரு குடும்பம் இருக்கிறதால தான் என் தங்கச்சியை அவ்ளோ கொடுமை படுத்துனியாடா? ஒரு நாளைக்காவது அதுக்கு நல்ல புருஷனா நடந்துக்கிட்டியா?
இல்லை என் மருமகளுக்கு நல்ல அப்பனா நடந்துகிட்டியாடா? எப்ப பாத்தாலும் சர்வாதிகாரி போலே பண்ணிக்கிட்டு இருந்தியே இங்க ஒரு குடும்பம் இருக்கிற சந்தோஷத்தில் தானா..
நான் கேட்கும்போதெல்லாம் எனக்கு சாப்பாட்டுக்கு என்ன குறை மாமா,என்னை கவனிக்கிறதுக்கு என்ன குறைனு சொல்லிட்டு இருப்பியேடா அதுக்கான அர்த்தம் இன்னைக்கு தான் டா புரிஞ்சது....
கண்ணை மூடி திறந்தவர் என் தங்கச்சி எங்க?அதை சொல்லு..மிச்சபடி உன் கிட்ட பேசுறதுக்கு எனக்கு ஒண்ணுமே இல்லை என்கவும்,தன்னை பிடித்திருந்த மாமாவின் கையை விலக்கி விட்டவர் எஸ்தர் காணாமல் போய்ட்டாள் மாமா.
அவள் வீட்டை விட்டு போய் ஐந்து நாள் ஆகுது என்கவும்,என்னடா சொல்ற என்று ஓங்கி மைத்துனரின் கன்னத்தில் இரண்டு அறையை விட்டார்.ஒவ்வொரு அடியும் இடி போல் மகியின் கன்னத்தில் இறங்கியது.
பெண்கள் இருவரும் அய்யோ என்ன பண்றீங்க என்று பதறி கொண்டு வர அவர்களை பார்த்த மகியோ உங்க வேலையை பாருங்க.இது எனக்கும் என் மாமாவுக்கும் உள்ள பிரச்சினை நாங்க பார்த்துக்கிறோம் என்றவர் உள்ளே போய் பெட்டியிலிருந்த லெட்டரை எடுத்துட்டு வந்து அந்தோணியிடம் நீட்டியவர் இதை படிச்சு பாருங்க மாமா என்க,மானசாவிற்கும் தனது கணவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சியாக தான் இருந்தது.
கைகள் நடுங்க மகியிடமிருந்து வாங்கிய லெட்டரை படித்துப் பார்த்த அந்தோணியோ,அய்யோ எஸ்தர்!
எங்கம்மா போனனு அழுது கொண்டே நெஞ்சை பிடித்தவர் அப்படியே சரிந்தார்.
என்னங்கனு ராணி ஓடி வர,அதற்குள் சுதாரித்த மகியோ தனது மாமாவை தாங்கிப் பிடித்தவர் மானசா சீக்கிரம் போய் பக்கத்துனிலிருக்கும் டாக்டரை கூப்பிட்டு வா குயிக் என்கவும்,அதிர்விலிருந்த மானசாவோ கணவரின் குரல் கேட்டு நிகழ்விற்கு வந்தவர்,இதோ என்று வெளியே ஓடிப் போனவர் பக்கத்து வீட்டிலிருக்கும் டாக்டரை கூப்பிட்டுக் கொண்டு வந்தார்.
அதிர்ச்சியில் வந்த மயக்கம் தான் பயப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு டாக்டரும் சென்றார்.
சிறிது நிமிடங்கள் சென்று கண்ணை திறந்த அந்தோணியோ பதறி எழுந்தவர் அங்கிருந்த மகியை பார்த்தவர் இன்னும் ஒரு நிமிஷம் இங்கு நானிருந்தாலும் உன்னை கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்...
இனிமே செத்தா கூட நீ என் முகத்தில் முழிக்கவே கூடாது என்றவாறு திரும்பி மனைவியைப் பார்த்தவர்,இத்தனை வருஷமா பொய்யான ஒரு வாழ்க்கையை என் கூட வாழ்ந்திருக்கியே,உன்னை என் மனைவின்னு சொல்றதுக்கே வெட்க்கமா இருக்கு.
ஊர் உலகத்துக்கு மட்டும் தான் இனிமே நீ எனக்கு மனைவி.மிச்சபடி இந்த நிமிஷத்திலிருந்து என்ன பொறுத்த வரைக்கும் நீ செத்துப் போய்ட்ட..
இவ்வளவு வருஷமா என் தங்கச்சிக்கு துரோகம் பண்ணிட்டு ரெண்டு பேரும் எதுவுமே தெரியாது போல நாடகமாடி இருக்கீங்களேனு தனது தலையில் அடித்துக் கொண்டவர் எங்கே போய் தேடுவேன்?
அய்யோ எஸ்தர் இன்னைக்கு உனக்கு இந்த நிலமை வருவதற்கு நானும் காரணமாகிட்டேனே....படித்து படித்து எங்க அம்மா சொன்னாங்களே உன் அத்தை குடும்பம் வேண்டாம்னு....
கேட்காமல் விட்டதுக்கு இவ்வளவு பெரிய துரோகம் என் தங்கச்சிக்கு நடந்திருக்கிறதேனு கதறியவர்,முதலில் தனது தங்கையை தேட வேண்டுமென்று வேகமாக எழுந்து வெளியே இருக்கும் காருக்குள் போக ராணியோ கணவர் சொன்ன வார்த்தையிலு பாதி செத்துவிட்டார்.
நடை பிணமாக அங்கிருந்து வெளியே போனவர் காரில் ஏறி உட்கார அந்தோணியும் புயல் வேகத்தில் காரை ஓட்டிச் சென்றார்.
மகியோ ஓய்ந்து போய் அங்கிருந்த சோபாவில் உட்கார,மானசாவோ அடக்கப்பட்ட கோபத்தில் கணவனை பார்த்துக் கொண்டிருந்தார்.மனைவின் பார்வை தன் மேல் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்ட மகி கண்களை மூடி திறந்தவர் உனக்கு என்ன தெரியனும் கேளுமா என்றார்.
என்ன நடந்ததோ அதை,குறிப்பாக உண்மையை மட்டும் சொல்லுங்கள் அது போதுமென்று மானசா சொல்ல, ஷமீராவுக்கு பாபு கூட கல்யாணம் நடக்கலை.
அவ ஆசைப்பட்ட பையனையே சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டாள்.தேடி போன எங்களிடம் அப்பா அம்மா வேண்டானு சொல்லிடாடாள்.
வீட்டுக்கு வந்த நானும் கோவத்துல எஸ்தரை கண்டபடி திட்டி
சண்டை போட்டுட்டு நைட் சாப்பிட்டு படுத்துட்டேன்.காலையில தான் எஸ்தர் வீட்டை விட்டு போன விஷயமே எனக்கு தெரிஞ்சதென திருச்சிக்கு வந்ததையும் டிடெக்டிவ் கிட்ட சொல்லியிருப்பதையும் சொன்னார்.
காதலிக்கிறது என்ன அவ்வளவு குற்றமா?
ஏன் ஜாதி மதம் எல்லாம் பார்த்துதான் என்னை கல்யாணம் பண்ணுனீங்களா என்று ஆங்காரமாக மானசா கேட்க, மகியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.
நீங்களும் என்னை காதலிச்சு தானே கட்டிக்கிட்டீங்க.அப்ப நான் இந்து பொண்ணு,அதும் நார்த் இந்தியன் பிராமின் பொண்ணு என்கும் விஷயம் உங்களுக்கு தெரியாதா?
ஏன் உங்க அம்மாவுக்கு தான் தெரியாதா சொல்லுங்க?
இன்னைக்கு பொண்ணு காதலிச்சா மட்டும் அது உங்களுக்கு தெய்வ குத்தமா தெரியுதா?.அன்னைக்கு நீங்க பண்ணும் போது உங்களுக்கு தெரியல என்கவும்...ஏய் மானசா அதுவும் இதுவும் எப்படி டி ஒன்றாகும் சொல்லு?
ஏன் ஒன்னாகாது?
நீங்களும் நானும் என்ன ஒரே ஜாதியா ஒரே மதமா?சொல்லுங்க...நமக்குள் எதுக்காவது ஒத்து வந்துச்சா? அன்னைக்கு நானும் இது சொல்லி விலகி போனேனே அப்போ உங்களால பிரிந்து போக முடிச்சுதா என்று கேள்விகளை அடுக்க,மனைவி கேட்கும் கேள்விகளோ செருப்பால் அடித்தது போலிருக்க மகியால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.