Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சி:
என்ன ஊருக்கு போனவங்க இன்னும் வரலையா?மச்சானுக்கு தெரிந்திருந்தால் இவ்வளவு நேரம் போன் பண்ணி விசாரித்து இருப்பாரே..
ஒருவேளை இன்னும் வரவில்லையோ என்று யோசனையோடு பெட்டில் மகி படுத்திருக்க,சிறிது நொடிகள் சென்று அவரது போனுக்கு கால் வரும் ரிங்டோன் சத்தம் கேட்க யார் என்று எடுத்துப் பார்க்கவும் மாமாயென வந்தது. .
அந்தோணியின் நம்பரை பார்த்த உடனே மகிக்கு திக்கென்று வந்தது.இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவர் அட்டென்ட் பண்ணி சாதாரணமாக பேசுவது போல் சொல்லுங்க மாமா, எப்படி இருக்கீங்க ராணி எப்படி இருக்கு அங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா?
இங்க எல்லாரும் நல்லா இருக்கோம் மகி.நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க?நாங்க காலை தான் ஊருக்கு வந்தோம்.
எதிர் வீட்ல காஞ்சனா அக்கா சொன்னாங்க எஸ்தர் உன்கூட தான் திருச்சிக்கு வந்துருக்குன்னு என்க...ஆமாம் மாமா நீங்களும் ஊருக்கு போய்ட்டீங்களா சரி அங்கிருந்தா இவள் பொண்ண நினைச்சு கவலைப்படுவாளே.
நல்ல காரியம் தான் பண்ணுன..சரி தங்கச்சி கிட்ட போனை கொடு என்க,ஒரு நிமிடம் பதறியவர் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தவர் மார்க்கெட் வரைக்கும் போயிருக்கா மாமா...
வீட்டுல காய் இல்லைன்னு சொன்னேன் நானே வாங்கிட்டு வரேன்னு இப்போது தான் போனாளென்க,அப்படியா என்றவர் தங்கச்சிக்கு கால் பண்ணுனேன் ஸ்விட்ச் ஆஃப் சுவிட்ச் ஆப்னு வருது மகி.
ஆமா மாமா...எஸ்தர் போன் தண்ணீரில் விழுந்துடுச்சு..புது போன் தான் வாங்கணுமென்ற மகியோ சரளமாக பொய்களை சொல்லி சமாளித்தார்.
அப்படியா என்று அந்தோணி கேட்க, ஆமாம் என்றவர்,அப்புறம் மாமா உங்க மருமகளோட பங்க்ஷன் எல்லாம் எப்படி முடிஞ்சது?.
எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது மகி.
அப்படியே கையோடு இன்னொரு நல்ல காரியமும் நடந்திருக்கென்க,என்ன விஷயம் மாமா சொல்லுங்கள்.
அது வந்து மகி நம்ப பாபுக்கு அவங்க வீட்டு பொண்ணை பேசி முடிச்சிருக்கென்கவும்,என்ன மாமா சொல்றீங்க? யாரை கேட்டு இந்த முடிவு எடுத்திருக்கீங்க?.
தாய் மாமா நான் ஒருத்தன் குத்துக்கல்லு போலிருக்கேன் என்கிட்ட ஒரு வார்த்தை இது பற்றி பேசணும்னு உங்களுக்கு தோணவே இல்லையாயென்று மகி கத்தவும் கொஞ்சம் அமைதியா இரு மகி...
அவனுக்கு பிடிச்சிருக்கு ஆசைப்பட்டுட்டான் வேற என்ன பண்ண முடியும் சொல்லு?.
ஏன் மாமா ஏற்கனவே உங்கள் தங்கச்சி மவள் அங்க ஓடிப் போய் என் குடும்ப மானத்தை வாங்கிட்டாள்.இப்ப அந்த குடும்பத்து பொண்ணையே என் தங்கச்சிக்கு மருமகளா கொண்டு வரப்போறேன்னு சொல்றீங்களே இதெல்லாம் நல்லாவா இருக்கு?
ஏற்கனவே நம்ம சொந்த பந்தம் எல்லாம் அந்த ஓடுகாளி நாயால் துப்புறாங்க, இப்ப இன்னும் துப்புவதற்கு நீங்க வழி பண்ணிட்டு வந்திருக்கீங்களே உங்ககிட்ட கொஞ்சம் கூட இதை நான் எதிர்பார்க்கவில்லைனா கத்திவிட்டு போனை வைத்தார்.
சோழனூர்
ஏண்டி உன்ணன் என்னடி நினைச்சிட்டு இருக்கான்?என்னமோ வாய்க்கு வந்த போல இப்படி கத்துறான்?
கட்டிக்கிட்டு வாழ போறது அவன். அவனுக்கு இல்லாத பிரச்சனை இவனுக்கு என்ன வந்தது? தாய்மாமன் முறைக்கு கலந்துக்குற போல இருந்தா வர சொல்லு.அத விட்டுட்டு இங்க வந்து ஜாதி மதம் மயிறுனு பேசிட்டு இருந்தான் அப்புறம் நான் மனுஷனா இருக்க மாட்டேன்.
என் தங்கச்சி கிட்ட பேசணும்னாலும் ஃபோனையும் கொடுக்க மாட்டேங்குறான்.நான் கேட்டதுக்கு வெளியில் போயிருக்குனு கதை சொல்லிக்கிட்டிருக்கான்.
என்னமோ எனக்கு மனசு சரியில்லை.நாளைக்கு காலைல திருச்சிக்கு போயிட்டு வரலாம்.நேர்ல போய் எஸ்தரை பார்த்தா தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.
ஒரு மாசம் மெடிக்கல் லீவ் எடுத்துருக்கேன் அதனால் பிரச்சினை இல்லை என்க...அந்தோணி திருச்சி என்றதுமே ராணிக்கு பக்கென்றது.
என்னங்க இப்ப எதுக்கு அவசரப்பட்டு திருச்சிக்கு போகணும்..என்னடி எப்போ பார்த்தாலும் திருச்சி பேரை கேட்டாலே அலறுர?.அதும் ஊர் தான்...அங்கு என்ன பேய் பிசாசா இருக்கென்று அந்தோணி முறைக்க,அப்படி ஒன்னும் இல்லைங்க. அண்ணன் வேலைக்கு போயிடுமே,நம்ம அங்க போய் என்ன பண்றது அதான்.
உன் அண்ணன் தானே வேலைக்கு போறான்.எஸ்தர் அங்க தானே இருக்கு அவனை பாக்க ஒன்னும் நான் ஒத்த கால்ல நிக்கலை.என் தங்கச்சிய பாக்கணும்.
ஏதோ சரியில்லாத போலிருக்கு. நான் வெளில போயிட்டு வரேன் நாளைக்கு நாம திருச்சிக்கு போகலாம்.பாபு எப்படியும் அங்க பரத் கூட கல்யாணம் வேலை பார்த்துட்டு இன்னும் ஒரு வாரம் கழிச்சு தான் வருவான்.
அதற்குள் நாம போய்ட்டு வந்துடலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார்..
ராணியோ அந்தோணி சொல்லிய விஷயத்தை யோசித்துக் கொண்டிருக்கும் போது கால் வரும் ரிங் டோன் சத்தம் கேட்க டேபிள் மேலிருந்த போனை எடுத்து பார்க்கவும் அண்ணன்னு வந்தது.
அட்டென்ட் பண்ணவும் என்ன நெனச்சிட்டு இருக்கீங்க நீயும் மாமாவும்?ஏற்கனவே ஒரு சனியன் தான் மானத்தை வாங்கிட்டாள்.
இப்போது அந்த குடும்பத்தில் சம்பந்தம் பண்ணிட்டு வந்துருக்கீங்களே என்னை விட உனக்கு அவங்க முக்கியமாக போயிடுச்சா என்று மகி கத்த, அண்ணா அது வந்து என்க..
என்ன மானங்கெட்ட குடும்பமோ தெரியலை.முதல்ல பையன்காரன் நம்ம பொண்ணை வளைச்சு போட்டான்.இப்ப அந்த குடும்பத்தில் ஒருத்தி நம்ப புள்ளைய வளைச்சி போட்டுக்கிட்டா...
அந்த பரம்பரைக்கு இதே பொழப்பா இருக்கும் போல என்கவும் அண்ணா என்று வேகமாக கத்த,என்ன ராணி ரொம்ப குரலை உசத்துற அண்ணன் என்கிற மரியாதை இல்லையா?
வந்தேன் அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன் என்கவும்,இங்க பாருணா,நம்ம பையனுக்கு பொண்ணு கொடுக்கிறோமென்று அவர்கள் இன்னும் ஒத்த காலில் நிக்கல.
நம்ப பாபுக்கு தான் அந்த பொண்ணை புடிச்சிருக்கு என்கவும்,எதேஏஏஏஏ பாபுக்கு புடிச்சிருக்கா?என்ன உளறிட்டு இருக்க மா?
பாபு தான் வெளிநாட்டில் இருக்கிறானே,அவனுக்கு எப்படி அந்த வீட்ல இருக்கும் பொண்ணு தெரியும்?அப்போ உன் மகனும் இவ ஓடிப்போனதுக்கு கூட்டா என்கவும் நிறுத்துணா என்று கத்திய ராணியோ,முதல்ல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுகிட்டு பேசு.
எப்ப பாத்தாலும் உன் இஷ்டத்துக்கு பேசாதே என்று முதல் முறையாக தனது அண்ணனை எதிர்த்து பேசினார்.
தங்கையின் குரல் ஓங்கி ஒலிப்பதை கேட்ட மகியோ அமைதியானவர் சரி சொல்லு என்க....நாங்க அங்கு பங்ஷனுக்கு போகும் போது பாபு வனிச்சூரில் தான் இருந்தான் ணா.
என்ன மா சொல்றனு மகி அதிர, ஆம் ணா என்றவர்,பின்னர் நடந்ததை எல்லாம் சொல்ல,ஓஓஓ அப்படியா...
ம்ம் நம்ம எல்லாம் வேண்டாமென்று சொல்லிட்டு உன் மருமகள் ரொம்ப சந்தோஷமா இருப்பாளே,என்னமோ காணாத கடந்த வாழ்க்கை கிடைச்ச போல தலையில தூக்கி வச்சிட்டு நிக்கிறாள்.
கண்ணை கசக்கிட்டு இங்க வரட்டும் எந்த செருப்பால் அடிப்பேன்னு எனக்கே தெரியாதென வாய்க்கு வந்தபடியெல்லாம் மகி பேசிக்கொண்டே போக ஒரு கட்டத்தில் ராணியால் தனது அண்ணனின் வார்த்தையை கேட்க முடியாமல் கோபப்பட்டு போனை கட் பண்ணி,சுவிட்ச் ஆப் பண்ணினார்.
இது நாக்கா இல்லை தேள் கொடுக்கா என்று தெரியவில்லை.வயசு இத்தனை ஆகியும் இன்னும் அதோட குணம் போகவில்லை...என்றைக்கு தான் திருந்துமோ ஆண்டவரேனு தனது அண்ணனை மனதிற்குள் திட்டிய ராணியோ,நான்கு நாட்களாக வீடு பூட்டு போட்டிருந்ததால் முதல்ல வீட்டை சுத்தப்படுத்துவோமென்று அந்த வேலையில் இறங்கினார்..
ராணி மதிய சாப்பாடு ஹோட்டலில் வாங்கிட்டு வந்துட்டேன்.அவ்வளவு தூரம் வண்டியில் வந்தது உனக்கும் அசதியா இருக்கும் சாப்பிட்டு படு நைட்டுக்கு பாத்துக்கலாமென்று சொல்லிவிட்டு கையிலிருந்த கவரை அங்கிருந்த டைனிங் டேபிளின் மேல் வைத்துவிட்டு ரூமிற்குள் சென்றார்.
வீட்டை சுத்தம் பண்ணியது கசகசனு இருக்கவும் சரி முதல்ல குளிச்சிட்டு வந்துரலாமென்ற ராணியோ ஊருக்கு எடுத்துட்டு போன துணியெல்லாம் சர்பில் ஊற வைத்துவிட்டு கிச்சனில் இருந்த பாத்திரங்களை எல்லாம் மீண்டும் ஒருமுறை கழுவி வைக்க துணியும் ஊறிவிட்டது.
அதை எல்லாம் துவைத்து விட்டு குளித்து முடித்து வெளியே வந்து வேற ட்ரெஸ்ஸை மாற்றிக் கொண்டு ஹாலுக்கு வந்தவர் அங்கே டிவி பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம் சாப்பிடலாமா என்க,ம்ம் எடுத்து வையென்றார்.
பின்னர் இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேரம் டிவி பார்த்து விட்டு படுத்து விட்டனர்..
நேரமும் யாருக்கும் காத்திடாமல் கடந்து ஓடியது...
விடியலோ பலவித திருப்பங்களை உள்ளடக்கிக்கொண்டு ஆரம்பமானது.
காலையிலையே எழுந்து குளித்து தயாராகிய அந்தோணி,இன்னும் என்னதான் பண்ற டி என்று மனைவிக்கு குரல் கொடுக்க,ஒரு வித பதட்டத்தோடு தயாராகிக் கொண்டிருந்த ராணியால் திருச்சிக்குப் போகும் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை...
ஆண்டவரே அங்கு என்ன நடக்கப் போகுதுன்னு தெரியலையே.நீ தான் கூட இருந்து பாத்துக்கணுமென்று மனதிற்குள் வேண்டிக் கொண்டவர் மீண்டும் ஒருமுறை வீட்டில் எல்லாம் சரியாக இருக்கா என்று பார்த்துவிட்டு கதவை பூட்டிக்கொண்டு வெளியே வர அந்தோணியும் காரை ஸ்டார்ட் பண்ணிட்டு ரெடியாக இருந்தார். ..
பின்னர் இருவரும் திருச்சியை நோக்கி சென்றனர்.
பைபாஸ் போட்டது எவ்வளவு வசதியா இருக்கு பாத்தியா என்க,ஆமாங்க என்றார்.
உன்ணனுக்கு நாம வரோம்னு ஏதாச்சும் சொன்னியானு அந்தோணி கேட்க,அய்யய்யோ நான் எதுவுமே சொல்லலைங்க என்று ராணி பதட்டமாக சொல்லவும்,எதுக்கு தான் இப்படி அலறுர?.
உன் அண்ணன் என்ன கத்தி எடுத்து வெட்டிடவா போறான்.அதான் நான் இருக்கிறேனே டி என்க..அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையேனு சமாளித்தார்.
இரண்டு மணி நேர பயணத்தில் அந்த அப்பார்ட்மெண்ட்டிற்கு வந்து சேர்ந்தனர். காரை நிறுத்திவிட்டு மகி தங்கியிருக்கும் பிளாட்டின் பெல்லை அழுத்த சிறிது நிமிடங்கள் வரை கதவு திறக்கவில்லை.
மணி இன்னும் ஒன்பது கூட ஆகலையே வேலைக்கு போயிருக்க வாய்ப்பில்லை என்று மனைவிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போது பக்கத்து பிளாட்டில் இருப்பவனோ இவர்களை பார்த்து விட்டு மகி சார் இங்கு இல்லைங்களே என்றார்.
அப்படியா என்க...ஆமாங்க அந்த வீட்டில் இருப்பாங்க என்றார்.அந்த வீட்டிலா என்று அந்தோணி யோசிக்க,நீங்க மகி சாரோட மச்சான் தானே உங்களுக்கு என்னை ஞாபகம் இல்லை போல...
சார் நம்ம பாலக்கரை மார்கெட்டுக்கு பின்னாடி இருக்குற வீட்ல தான் குடியிருக்கிறார்.இங்கு அவருக்கு தெரிந்த ஒரு லேடியும் அவங்க பொண்ணும் வந்து தங்குவாங்க.அப்போது அவர்களை பார்க்க வருவார்.மத்த நேரத்துல சார் இங்க வர மாட்டாரென்றார்.