• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

இதுபோல பிரச்சனை எல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் ஆரம்பத்திலேயே நான் உங்ககிட்ட இருந்து விலகிப் போனேன்.

என்னை பற்றி முழுவதும் தெரிஞ்சு தானே லவ் பண்ணுனீங்க,தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணுனீங்க?இப்ப வந்து இந்த ஜாதியையும் மதமும் எங்க அப்பா போல நான் பாக்குறேன்னு சொன்னாக்க என்ன அர்த்தம்?

அதெல்லாம் பார்க்குற போல இருந்தால் உங்ககிட்ட நான் பேசிருப்பனா?இல்லை உங்களையே உசுறா நினைத்து வாழ்ந்துருப்பேனா,உங்களை நம்பி இப்படி எல்லாவற்றையும் உதறி தள்ளிட்டு நீங்கள் தான் வேண்டும்னு வந்துருப்பேனா சொல்லுங்க என்கும் போது அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

மனைவியின் அழுகையை பார்த்தவனுக்கு ஒன்னும் சொல்ல முடியல...சிறிது நொடிகள் சென்று சாரி டி மன்னிச்சிடு...உன் மனசை நான் கஷ்டப்படுத்திட்டேன்..

"தப்பு தான்"

இனிமேல் அப்படி பேச மாட்டேன் என்க,இனிமே நீங்க பேசுறீங்களோ, பேசலையோ அது அடுத்த பிரச்சினை. இப்பொழுது நீங்கள் பேசிட்டிங்களேங்க.

அப்போ உங்களுக்கு அந்த எண்ணம் இருக்குது தானே...ஒருவேளை உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணியதும்,நான் வேற மதமா இருக்குறதம் பிரச்சினையாக இருந்திருந்தால் அப்பையே என்னை தலை மூழ்கிட்டு போயிருக்க வேண்டியது தானே என்று கதறி அழுதாள்....

"ஏய்..."

உன்னை விட்டுட்டு எப்படி டி என்னால் இருக்க முடியும்?

கல்யாணமென்று ஒன்னு என் வாழ்வில் நடந்தால் அது உன் கூட தானென்பதை உன்னை பார்த்த அன்னைக்கே சொன்னேன்.

அதையே மூணு வருஷம் கழிச்சு செயலில் காட்டினேன்.உனக்கும் அப்படித்தான்.அதை நீ சொல்லித்தான் எனக்கு தெரியணுமென்று அவசியமில்லை. ..

"அப்படி பேசினது தப்புதான்"

இனிமே இப்படி நான் பேசமாட்டேன் நம்பு டி என்று செழியன் கெஞ்ச,ஷமீராவோ அழுகையோடு எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்..

அடியேய் இப்படி பேசாம இருந்து கொள்ளாதடி முடியல என்க...கணவனை பார்த்தவள் ஏன் ஒரு வருஷம் நல்லா குத்துக்கல்லு போல பேசாமல் தான இருந்தீங்க...அப்ப என்ன ஆச்சு? மூணு வேளை தின்னுட்டு தெம்பா தூங்கினீங்க தானே .

நான் நல்லா இருந்தனா இல்லையான்னு உன் மனசுக்கும் என் மனசுக்கும் தெரியும் டி என்றான்...

ம்கும் என விரக்தியாக சிரித்த ஷமிரா...நம்மள மீறி இவள் எங்கே போயிடப் போறாளென்ற திமிர்தனம் தானே உங்களுக்கு என்கவும்,ஆமாடி எனக்கு திமிர்த்தனம் தான்.

அதுவும் நான் இல்லாமல் உன்னால் வாழ முடியாதுனு எனக்கு நல்லாவே தெரியும்.அதனால தான் நானும் அமைதியா இருந்தேன் போதுமா டி?

இப்ப என்ன பண்ண சொல்ற?அதான் தெரியாம பேசிட்டுன்னு சொல்றேனே உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கணுமா சொல்லு டி?கால்ல விழட்டுமானு செழியன் கத்த...

எந்திரிச்சு நின்றவள் புடவையின் முன்பக்க கொசுவத்தை தூக்கி இரண்டு கால்களையும் காட்ட, அடிப்பாவி....

"சண்டாள சிறுக்கி"

புருஷன்காரனை இப்படி காலில் விழ சொல்றியேடி நீ எல்லாம் குடும்ப பொண்ணா டி?.

அதைக் கேட்டு வெகுண்டவளோ ஓங்கி கணவனின் தலையிலே நங்கு நங்கென்று கொட்டியவள்,ஏன் என்ன பாத்தா குடும்பக்காரி போல தெரியலையாடா என்று செழியனின் தலையை முடியை கொத்தாக பிடித்து குலுக்கினாள்...

ஐயோ அம்மா அப்பா சீக்கிரம் வாங்க என்னை காப்பாத்துங்களென்று செழியன் கத்த...

எட்டி கணவனின் வாயை பொத்தவும்,மனைவியை பார்த்தவன் அவள் கையை பிடித்து இழுத்து தனது மடியில் உட்கார வைத்து இறுக்கமாக அணைத்து கொண்டான்.

நொடிகளும் நிமிடங்களாக கடந்து செல்ல இப்படியே இருப்பதாக உத்தேசமா?விட்டால் கொஞ்சம் நல்லா இருக்கும் என்கவும்,பரவால்ல நீ இப்படியே இரு நல்லா தான் இருக்குடி என்றான்..

உங்களுக்கு எதுதான் நல்லா இருக்காதென்ற ஷமீராவோ தனது பல்லை கடிக்க,எனக்கு எல்லாமே நல்லா இருக்கும் டி என்று செழியன் சிரிக்க கணவனின் சிரிப்பை வழக்கம் போல் ரசித்தவள்,இருந்தும் அவனிடம் காட்டிக்கொள்ளவில்லை.

நல்லா வார்னிஷ் அடிச்ச தேக்கு போல இருக்கடி என்று மனைவியுடைய பிளவுஸின் இடைவெளியில் தெரியும் முதுகில் தனது முகத்தை வைத்து தேய்த்துக் கொண்டு செழியன் சொல்ல, கணவனின் தாடியும் மீசையும் குத்துவதில் நிலை குலைந்து போனாள்.

மனைவியின் நெளியலில் அவளின் தேகங்கள் அவனோடு உரச இன்னும் தன்னவளை தன்னோடு இறுக்கினான்.வலியில் லேசாக கண்ணை மூடி திறந்தவள் தொரை எங்கேயே கூப்பிட்டு போறேன்னு சொன்னீங்களே?.

அடியேய்....இப்படி துரைனு சொல்லாத டி.யாரு காதிலாவது விழுந்தா தப்பா நினைக்க போறாங்க என்கவும் அப்பொழுதுதான் தனது மாமனாரின் பெயர் செல்லதுரை என்பது அவளுக்கு ஞாபகம் வந்து ஐயோ என்று தனது வாயை பொத்திக் கொண்டாள்...

மனைவியின் செயல்களை பார்த்தவன் ஐயோ செல்லம் இது உன்னோட வேலை இல்லடி என்னோட வேலை என்று அவள் வாயை மூடியிருந்த கையை எடுத்துவிட்டு தனது வலிமையான உதடுகளால் மனைவியின் மென்மையான இதழ்களை மூடியவன் பின்வாக்கிலேயே மனைவியோடு பெட்டில் சரிந்தான்...

நேரமும் கடந்து செல்ல இருவரும் மீண்டும் குளித்து தயாராகி,பிளவுஸ் வாங்க வேண்டிய புடவைகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தனர்.


பின்னர் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே வந்தவர்கள் வண்டியில் ஏறி டவுனை நோக்கி சென்றனர்...

ஷமீராவோ அந்த இயற்கை அழகை மெய் மறந்து ரசித்துக் கொண்டே வர, நம்ம ஊரு எப்படி டி இருக்கு என்கவும், ரொம்ப நல்லா இருக்குங்க...

இங்கு இருக்கிறவங்க எல்லாம் கொடுத்து வச்சவங்க இல்லையா, இயற்கையான காற்று,பொல்யூஷன் இல்லாத ஊர்,எந்த நோய் நொடியும் அவ்வளவு சீக்கிரம் வராது போலயென்று ஷமீரா சொல்ல,ஆமாடி நம்ம ஊர்ல எந்த டிஸீஸும் வராது...

கோவிட் கூட பக்கத்து ஊர்ல வந்துச்சே தவிர நம்ம ஊருக்கு பரவலைனா பாத்துக்க,எதிர்ப்பு சக்தி நமக்கு எப்பையுமே அதிகம் டி...

உங்களை போல கண்டதெல்லாம் சாப்பிடுவதற்கு வழி கிடையாது என்று கண்ணாடியை பார்த்துக் கொண்டே சொல்ல,கணவன் சொன்னதை கேட்ட ஷமீராவோ தனது வலது கை முட்டியால் ஓங்கி கணவனின் முதுகில் ஒரு குத்து குத்தியவள் நாங்க தான் 24 மணி நேரம் ஜங்க் ஃபுட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் இந்த கொய்யா பார்த்தாரென்றாள்..

ஆமா இதை நேரில் வேற வந்து பார்க்கணுமா டி...அதான் தெரியுதே. அதுவும் காலேஜ் போற நீங்கதான் கடையில விற்கும் கண்ட கண்டதெல்லாம் வாங்கி சாப்பிடுறீங்க.

அதெல்லாம் கெடுதலென்றால் எங்க தெரிய போகுது உங்களுக்கு...சத்தான பொருளை வீட்டுல செஞ்சு சாப்பிடுவதற்கும்,நோய் உள்ள உணவுகளை விலை கொடுத்து வாங்கி சாப்பிடுவதற்கு வித்தியாசம் இருக்கில்லையா டி என்றான்...

கணவன் சொல்வது நியாயமான விஷயம் என்பதை புரிந்தவள் அது என்னமோ உண்மைதான் என்றாள்.

ம்ம் என்னைக்குமே உன் புருஷன் உண்மையை தான்டி பேசுவேன் அதுல என்ன சந்தேகமென்று தனது மீசையை முறுக்கி விட,ஆமா ஐயா வந்து அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டு பையன்னு நியூஸ்ல கூட சொன்னாங்களே என்கவும், இதிலிருந்து நல்லா தெரிஞ்சுக்கடி உன் புருஷன் எவ்ளோ பாப்புலரானவன் என்றான்.

இங்க பாரு செல்லம் உனக்கு சில விஷயத்தை சொல்லணும் டி.நம்ப ரூமுக்குள்ள என்ன டிரஸ் வேணாலும் பண்ணிக்க இல்ல பண்ணாம போ என்க...ஏதே என்று கணவனின் தலையில் கொட்டினாள்...

ஏய் ஒரு பேச்சுக்கு சொன்னேன் டி அதுக்கென்று நீ என்ன அப்படியா நிக்க போற சொல்லு என்று சத்தமாக சிரிக்க வெக்கமாக இல்லையா இப்படியெல்லாம் பேச என்று,கணவனின் முதுகில் மீண்டும் குத்த...

அடியேய் வண்டி ஓட்டுட்டு இருக்கேன் நீ பாட்டிலே அடிக்கிற குத்திக்கிட்டு இருக்க இதுக்கெல்லாம் கணக்கு வச்சுக்குறேன் அப்பறம் வட்டியும் முதலும் சம்பாதித்திட்டு தான் டி மறுவேளை பார்ப்பேன் என்கவும்,போயா போயா என்றாள்.

ரொம்ப தாண்டி துளிர் விட்டுடுச்சு உனக்கு என்கவும்,அப்படியா இருக்கட்டும் என்றவளை கண்ணாடி வழியாக பார்த்தவன் ஓஓஓஓஓ...

ஆனா அதுக்கான பலனை நீ அனுபவிச்சு தான் ஆகணும் அதுக்கு ரெடியா இருந்துக்க என்று சத்தமாக சிரித்தான்.





ஓய் பொண்டாட்டி உன்கிட்ட ஒன்னு கேட்கணும் டி என்க..ம்ம், பக்கத்துல தான் இருக்கேன்.நான் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறேன், கேளுங்கள்.

அதுசரி...உன்கிட்ட ரொம்ப பிடித்தது இந்த வாய் தான் டி.எந்த பால் போட்டாலும் அசரமா திருப்பி அடிப்படி.

அது வந்து உங்க அம்மாவை நீ ரொம்ப மிஸ் பண்ற தானே என்று கண்ணாடி வழியாக தெரியும் தனது மனைவியை பார்த்துக் கொண்டு செழியன் கேட்க,இப்படி ஒரு கேள்வி இவ்வளவு சீக்கிரம் வருமென்பதை எதிர்பார்க்கவில்லை..

பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கவும் உன்ன தாண்டி கேட்கிறேன் ஆமா இல்லைன்னு ஏதாவது ஒன்னு சொல்லு என்க...அது உங்களுக்கே தெரியும்.

பதில் தெரிஞ்சிக்கிட்டு என்னை கேட்டா என்ன அர்த்தம்.தெரியாத கேள்விக்கு தானே பதில் சொல்ல முடியும் என்க, நல்லா பேசுறடி நீ...

ஏன் செல்லம் ஒன்னு பண்ணட்டுமா,நீ லா படிக்கிறியா டி?

மாமா உன்ன படிக்க வைக்கிறேன் என்கவும் ஒரு நேரத்துல அப்படி ஒரு ஆசை இருந்துச்சு.இப்ப எனக்கு லா படிக்கணும் என்கிற எண்ணமே இல்லை என்கவும்,ஏண்டி இப்படி சொல்ற?

கனவுகளை எல்லாம் அவ்வளவு சீக்கிரம் அழிக்க கூடாதுடி.வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன் படுத்திக்கணும் டி என்றான்.

ஹம் நீங்க சொல்றது வாஸ்தவம் தான் நானும் டிகிரி முடிச்சிட்டு லா படிக்க போறேன்னு சொன்னேன்.அப்ப எங்க அம்மா ஒரு வார்த்தை சொன்னாங்க அதுல இருந்து எனக்கு மனசு உடைஞ்சு போயிடுச்சு என்றாள்...

என்னடி சொல்ற?

என் மாமியார் அப்படி என்ன சொன்னாங்க சொல்லு பார்க்கலாம் என்கவும்,மாமியாராயென்று ஷமீரா ஆச்சரியமாக கேட்க,ஆமாம் பின்னே உன்ன பெத்தவங்க எனக்கு மாமியார் இல்லாமல் பின்ன சாமியாராடி?.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
மிசஸ் மகிமை தாஸ் சொன்னாங்கள் என்கவும்,இப்ப எதுக்கு தேவை இல்லாம எங்க அப்பா பேரை இழுக்குறீங்களென்றாள்...

அடியேய் மரியாதையா தானடி சொன்னேன் இதில் என்னடி தப்பென்று செழியன் கேட்க,நான் துரைனு சொன்னதுக்கு மட்டும் எங்க அப்பா பேரு சொல்லாதடின்னு சொன்னீங்க...

இப்ப நீங்க மட்டும் எதுக்கு எங்க அப்பா பேரை சொல்றீங்க?இது மட்டும் சரியா என்கவும்,நல்லா தான் பாயிண்டை பிடிக்கிறாளென்று மனதிற்குள் நினைத்தவன் என் மாமனார் பேரை நான் சொல்றேன் டி...இதுல உனக்கு என்னடி பிரச்சனை என்றான்..

வேண்டாம் நடு ரோடு என்று பார்க்கிறேன் இல்லன்னா நடக்கறதே வேற என்க..போடி போடி எல்லாம் வாய் தான்.மற்றபடி 10 பைசாவுக்கு புண்ணியம் கிடையாது என்று செழியன் சிரிக்க...

அப்படியா...இப்ப என்ன பண்றேன் பாருங்களென்றவள் கணவனின் தலை முடியை பிடித்து ஆட்ட...ஏய்ய்ய்...
அறிவு கெட்டவளே வண்டி ஓட்டிட்டு இருக்கும் போது என்னடி பண்ற முட்டாள் என்று பிரேக் அடித்து வண்டியை நிறுத்தியவன் சுற்றி யாராவது கண்ணில் தென் படுறாங்களாயென்று பார்த்துவிட்டு இடது பக்க கையால் மனைவியின் கழுத்தை பிடித்து வளைத்து முன் பக்கம் இழுத்துட்டு வந்தவன் ஏற்கனவே உன் கிட்ட சொல்லிருக்கிறேன் டி...

ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக என் கிட்ட எதிர்வினை உண்டு என்று சொல்லிக் கொண்டே மனைவியின் உதட்டை நன்கு பல் பதிய கடித்து விட்டவன் ஒழுங்கா போய் வண்டியில் உட்காரு...

நடுரோட்டில் இப்படி மாமாவை ரொமான்ஸ் பண்ண வைக்காதே அப்புறம் நடக்கறதுக்கு நான் பொறுப்பு கிடையாதுடி.

டவுனுக்கு போற வேலை இருக்கு இல்லை நேராக அருவிக்கு இழுத்துட்டு போய்டுவேன் டி என்று கண்ணடிக்க...அருவி என்ற பெயரைக் கேட்டவுடன் அங்கு நடந்ததெல்லாம் அவளுக்கு ஞாபகம் வர,கோபம் போய் வெட்கம் வந்ததும் அமைதியாக வண்டியில் உட்கார்ந்து கொண்டாள்.

மனைவியின் கன்னங்கள் வெட்கத்தில் பளபளப்பு கொடுப்பதை கண்ணாடி வழியாக பார்த்தவன் யாகூ என்று கத்திவிட்டு சரி சரி நீ சொல்ல வந்த விஷயத்தை சொல்லு.எஸ்தர் அம்மா அப்படி என்ன சொன்னாங்களென்று மீண்டும் அதிலே வந்து நின்றான்...

லா படிக்கிறேன்னு சொன்னேனா அப்ப அம்மா என்ன தெரியுமா சொன்னாங்க...

இன்னொருத்தவங்க தாலிய அறுத்து சம்பாதிக்கிறது காசு நமக்கு தேவையா? வக்கீல் தொழில் வெறும் நீதி நேர்மை மட்டும் கிடையாது.நல்லவனை கெட்டவனா காட்டணும்.

கெட்டவனை நல்லவனா காட்டணும். நம்ம குடும்பத்துக்கு இது தேவையான்னு கேட்டாங்க.அம்மா வேற ஏதாச்சும் சொல்லிருந்தாலும் பிடிவாதமா இருந்திருப்பேன்.

அவங்க இந்த தாலி சென்டிமென்டை சொன்னவுடனே எனக்கு மனசு ஒரு மாதிரியாக ஆயிடுச்சு.அதுக்கப்புறம் லா பற்றி நான் யோசிக்கலையென்றாள்.

சிறிது நொடிகள் அமைதியாக இருந்தவன் அத்தை சொல்றது சரி தாண்டி.தீரன் மாமா படிக்கும்போது கூட வீட்ல யாருக்குமே பிடிக்கல தெரியுமா? அவர் இஷ்டத்துக்கு படிச்சாங்க அதனாலதான் இங்க வீட்டுக்கு வரமாட்டேங்குறாங்க. .

சரி அதை விடு...அப்புறம் இன்னொரு விஷயம்டி.நம்ம கண்மணி வேல பாக்குற ஸ்கூல்ல கம்ப்யூட்டர் டீச்சர் இல்லையாம்,அதற்கு இன்டர்வியூ வருதாம் டி,நீ போறியா?என்றான்..

நிஜமாவா என்று கணவனின் தோளின் மேல் சாய்ந்து கொண்டு கேட்க ஆமாடி நானும் வேலைக்கு போயிட்டால் நீ வீட்ல தான் இருக்கணும்.எவ்ளோ நேரம் வீட்டிலேயே தான் இருக்க முடியும் சொல்லு?.

போகும் போது நான் உன்னை ஸ்கூல்ல விடுகிறேன்.வரும்போது கவிதா கூட மினி பஸ்ல வந்துடு.இல்லன்னா நானே உன்னை பிக்கப் பண்ணிக்கிறேன். ஆனால் உன் புருஷனுக்காக ஈவ்னிங்5.30 வரைக்கும் நீ வெய்ட் பண்ணனும் டி.

உனக்கு புடிச்சிருந்தா போ..உன்னை நான் பிடிவாதம் பண்ணல..வேற ஏதாச்சும் கத்துக்கணும்னு ஆசைப்பட்டாலும் கத்துக்க..இல்லன்னா நம்ம வயல்ல மேற்பார்வை பார்க்கிறதாக இருந்தாலும் பாரு உனக்கு தோணுவதை செய் என்றவன் பின்னர் இருவரும் பொதுவாக பேசிக்கொண்டு டவுனுக்கு வந்து சேர்ந்தனர்.

அங்கிருந்த பெரிய கடைக்கு அழைத்துப் போனவன் இந்த ஊரிலேயே இந்த கடை தான் பெரிய கடை டி.சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் இங்கு தான் வரணும்.இதை விட்டால் மதுரைக்கு போகணும் டி.

அதனால உனக்கு என்ன வேண்டுமோ எல்லாமே வாங்கு.நான் இங்கையே இருக்கேன் என்க...அதான் என்கிட்ட எல்லாமே இருக்கேங்க,இப்ப நாம என்ன வேலைக்கு வந்தமோ அதை மட்டும் வாங்கிக்கலாமேயென்றாள்.

ஏன்டி ஒவ்வொன்றையும் பிரிச்சி பிரிச்சா சொல்ல முடியுமென்று சிரித்தவன் புடவை மட்டும் போதுமா டி? அது உள்ள போடுறதுக்கு எல்லாம் ஒன்னும் வேண்டாமா?,அய்யோ என்ன பேச்சு பேசுறீங்கனு பல்லை கடித்தாள்.

ஏய் நீதானடி கேட்ட அதான் சொன்னேன். எல்லாத்துக்கும் மேட்சாக போட்டால் தானே நல்லா இருக்கும் அப்பதான் பாக்குற எனக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்னு சொல்லவும் மரியாதையா வாயை மூடிட்டு வெளியே போங்க...

நான் எடுத்துட்டு சொல்லுறேன் அப்போ வாங்களென்க,ரொம்ப தாண்டி விரட்டுற என்றவன் வழக்கமா பொம்பளைங்க கடைக்கு போனீங்களென்றால் அவ்வளவு சீக்கிரம் திரும்பி வர மாட்டீங்க.. ..

உனக்கு எப்படியும் லேட் ஆகும்.இங்கு தெரிந்த பிரண்டு ஒருத்தன் இருக்கான் அவனை பார்த்துட்டு நான் வந்துடுறேன் டி.கையில போன் வச்சிருக்க தானே என்க,ஆமாம் என்றாள்...சரியென அங்கிருந்து சென்றான்.

டெல்லி...

ஜூலியை பார்க்கும் போதெல்லாம் தனது மகள் ஷமீரா அருகில் இருப்பது போலவே ஒரு உணர்வு எஸ்தருக்கு வந்து கொண்டிருப்பதால் மகளைப் பற்றி பெரிதாக அவர் கவலைப்படவில்லை.

நல்ல இடத்தில் சந்தோஷமாக இருக்கட்டும் என்று மனதார வாழ்த்திக் கொண்டிருந்தார்.அந்த மகளுக்கு புதிதாக ஒரு குடும்பம் கிடைத்துவிட்டது.

ஆனால் இந்த மகளுக்கு யாருமே இல்லை.அதனால் இவளுக்கு நாம் தாயாக நடந்து கொள்ள வேண்டும் என்று மனதிற்குள் தீர்மானமாக முடிவெடுத்தவர் அதன்படியே நடந்து கொள்ள ஆரம்பித்தார்.

சிறிது நிமிடங்கள் சென்று மனைவிக்கு சூடான பாதாம் பால் கொண்டு வந்து ருத்ரன் கொடுக்க வாவ்...ஆச்சரியம் ஆனால் உண்மை...

அம்மா உங்க மருமகன் ஒரு டம்ளர் டீ கூட போட்டுக் கொடுக்க மாட்டார் இப்போது பாருங்களேன் என்கவும்,தனது பிள்ளை வரப்போகும் சந்தோஷத்தில் மருமகனே எல்லா வேலையும் செய்யுதென்று எஸ்தர் சிரிக்க ...

அத்தை நீங்களும் உங்க பொண்ணு கூட சேர்ந்துகிட்டு கிண்டல் பண்றீங்களே இது நல்லாவா இருக்கென்று முறைத்தான்...

அப்பொழுது காலிங் பெல் சத்தம் கேட்க யாரும் சொல்லக்கூடாது நான் தான் சர்ப்ரைஸா சொல்லுவேன் என்று ருத்ரன் சொல்லவும் இருவரும் சரி என்றனர். ..

ஜூலி போய் கதவை திறக்க ரூபாவும் தீபனும் உள்ளே வந்தனர்.ருத்ரனை பார்த்த தீபன் என்ன மச்சி கோலம் இது? கத்தி பிடிக்க வேண்டிய கையில கரண்டியை கொடுத்தது யாரு??நெஞ்சம் பொறுக்கவில்லையே?.

டேய் ஜூலி என்னடா பண்ணி வச்ச? மச்சான் இன்னைக்கு சமையல்காரனா ஆகிட்டானே என்று கிண்டல் பண்ண...

என்னவாம்?என்னனு கேட்கிறேன் வாய மூட மாட்டீங்களா என்று ரூபா தனது கணவனை முறைக்க பாத்திங்களாம்மா,உங்களுக்கு முன்னாடி எப்படி என்னை மிரட்டுறாள்.

அப்ப தனியா ரூமுக்குள்ள கூட்டிட்டு போயிட்டு எப்படிலாம் அடிப்பாளென்று கவலையாக சொல்ல,மற்றவர்கள் சிரிக்க,ரூபாவோ கொலை வெறியில் தனது கணவனை முறைத்தாள்.

இந்த மனுஷனை என்னதான் பண்றதுனே தெரியல கடவுளே என்று கத்திய ரூபா வீட்டுக்கு தான வருவீங்களென்க,பாருங்கள் மா என்ன சொல்றாள்னு,வீட்டுக்கு வா உனக்கு கச்சேரி இருக்குன்னு சொல்றாள் மா என்கவும் ரூபாவோ தனது தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்த சோபாவில் உட்கார,எஸ்தருக்கு சிரிப்பு தாங்கவில்லை...

இருடா உன்ன வந்து வச்சுக்கிறேன் என்ற ருத்ரன் உள்ளே போய் 5 பவுலில் கீர் போட்டு ஸ்பூனை வைத்து எடுத்துட்டு வந்தவன் ஆளுக்கு ஒன்றரை கொடுக்க, அதைப் பார்த்த தீபன் என்னடா இது காலையிலேயே கஞ்சி தண்ணி குடுக்குற?என்க...

உன் மொகரைக்கு கஞ்சி தண்ணி கொடுக்காமல் கள்ளிப்பால் கொடுத்துருக்கணுமென்ற ருத்ரனோ ஒரு நல்ல விஷயம் சொல்லனுமென்க அப்படி என்ன விஷயம் மச்சி முதல்ல சொல்லு பிறகு சாப்பிடுறோம் டா என்றான்.

நீங்க ரெண்டு பேரும் மாமா அத்தையாகிட்டீங்கடா என்கவும் ஓ அப்படியா என்றவன் எதே என்று அதிர்வாக பார்க்க,ஆமான்டா நம்ம குடும்பத்துக்கு புது வாரிசு வர போகுதென்று ருத்ரன் சொல்லவும் நிஜமாவா என்று சந்தோஷத்தில் இருவரும் கத்தி விட்டனர்...

"பின்னர் ஜூலிக்கும் ருத்ரனுக்கும் வாழ்த்துக்கள் சொன்னார்கள்"

காலையில் எவ்வளவு பெரிய நல்ல விஷயத்தை சொல்லிருக்க டா என்றவாறு தனது பவுலில் இருந்ததில் ஒரு ஸ்பூன் அள்ளி ஜூலிக்கு ஊட்டி விட்டவன் சந்தோஷமா இருக்குடா.

உனக்கு என்ன வேணும் கேளு அண்ணா வாங்கி தரேன் என்கவும் முதல்ல உன் அண்ணன் வாயை மூட சொல்லு அதே பெரிய பரிசென்று ரூபா சொல்ல...

"உன் வேலையை பாருடி"

என் தங்கச்சி கிட்ட தாண்டி பேசிட்டு இருக்கேன் பொறாமை புடிச்சவளே என்றவன்,நீ கேளுடா ஜூலி உனக்கு என்ன வேணும் டா என்க...எப்பயும் போல நம்ம இப்படியே சந்தோஷமா கடைசி வரைக்கும் இருக்கணும் ணா அது மட்டும் போதுமென்றாள்..

கண்டிப்பாகடா அதில் என்ன சந்தேகம் என்று தனது தங்கையை தோளோடு அணைத்துக் கொண்டவனுக்கு அவர்கள் இருவரும் ஆசிரமத்தில் வளர்ந்த நினைவுகள் வர கண்கள் கலங்கியது...

அதன் பின்னர் ஒரு வாரம் கடந்திருக்க ஜூலியும் ரூபாவும் கீழே இருந்த பார்க்கில் வாக்கிங் போய்க் கொண்டிருக்கும் போது அவர்கள் எதிர் பிளாட்டில் இருக்கும் பெண்மணியோ அவர்களிடம் வந்தவர் உங்களிடம் ஒரு விஷயம் கேட்கணுமென்க,சொல்லுங்க திதி என்றாளுங்கள்.

போன வீக்ல ரெண்டு பேரும் ஒரே போல டிரஸ் போட்டிருந்தீர்களே அது நல்லா இருந்துச்சு.எங்க வாங்குனீங்கள் என்கவும்,அதற்கு ஜூலியோ அதை என்னோட அம்மா தான் ரெடி பண்ணுனாங்களென்றாள்..

ஓஓஓ...உங்க அம்மா டெய்லரா?

அப்ப அதேபோல கேட்டால் தைத்துக் கொடுப்பார்களா என்க,அது தெரியலையே. வீட்டுக்கு வாங்க அம்மா கிட்ட கேட்டு பாக்குறேன் என்கவும்,ஹம் அதை பார்த்த உடனே எனக்கு ரொம்ப புடிச்சிருச்சி.

நம்ம கரினாக்கும் அதே போல தைக்கலாம்னு ஒரு ஆசை தானென்று அந்த பெண்மணி சொல்ல, சரிங்க திதி அம்மா கிட்ட நான் கேட்டு சொல்கிறேனென்றாள்.

ஏன் ஜூலி நீங்கள் தப்பா எடுத்துக்கலை என்றால் இப்பையே நம்ம போகலாமா என்று கண்களில் ஆசை மின்ன அவர் கேட்பதை அவளுங்களாலும் புரிந்து கொள்ள முடிந்தது.சரி வாங்கள் என்று மூவரும் அவர்கள் பிளாட்டை நோக்கி சென்றனர்.

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top