• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

அன்று கண்ணன் வீட்டில் கோவப்பட்டு பேசியதோடு சரி,அதன் பின்னர் இதுவரை ஷமீராவிடம் அவன் பேசவே இல்லை.


இப்பொழுதாவது தனது மாமன் மகன் பேசுவானென்று எதிர் பார்க்க,செழியனிடம் மட்டும் போயிட்டு வரேன் பங்காளினு சொல்லிக்கொண்டு வெளியே சென்று விட்டான்.

அழாதடா அந்த நாய பத்தி தான் உனக்கு தெரியுமே..எல்லாம் சரியாயிடுமென்ற பரத்,பாரதி கல்யாணத்துக்கு பத்திரிக்கை எடுத்துட்டு வரேன் அப்போ பார்க்கலாம் டா என்றபடியே ஷமீராவின் கண்ணீரை துடைத்தவன் மச்சான் என் தங்கச்சியை நல்லா பாத்துக்கடா என்க..

"கவலைப்படாதடா மாப்பி"

இதை நீ எனக்கு சொல்லனுமானு செழியன் முறைக்க,சொல்ல வேண்டியது எனக்கு கடமையாச்சே,ஓவரா என் தங்கச்சிக்கிட்ட லந்து கொடுத்த தூக்கி போட்டு மிதிப்பேன்.

தங்கச்சி கண்ணுல கடுகளவு தண்ணீர் வந்தாலும் நார பயலே நீ நாறி போய்டுவ என்கவும்,எந்த மச்சானும் இப்படி மிரட்ட மாட்டான்டா என்றவாறு செழியன் முறைக்க, கண்டிப்பாக டா.நாங்க எல்லாம் புது டிசைன் என்றான்.

பின்னர் பெரியவர்கள் மூவரும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு வெளியே இருந்த இரண்டு காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டனர்.

ஒவ்வொரு பெண்ணும் இந்த சூழலை கடந்து தான் ஆகணுமென்று மருமகளோடு வீட்டிற்கு வந்தவர் சரி போய் உன் ரூம்ல செத்த படு.இப்போதைக்கு ஒன்னும் வேலை இல்லை என்க...சரிங்கத்தைனு மாடிக்கு சென்றாள்..

போகும் மனைவியை சோபாவில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த செழியன்,டேய் இதான் நல்ல சந்தர்ப்பம் பொண்டாட்டி கால்ல விழுந்து சமாதானப்படுத்தி விட வேண்டும்னு நினைத்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த செல்லதுரை தம்பி என்க,சொல்லுங்கப்பா என்றான்..

ஏதாவது வேலை இருக்காயா?

வெளியில போகணுமா?என்க, இல்லப்பா நாளைக்கு தான் கம்பெனிக்கு போகணும்.இன்னைக்கு வீட்ல தான் இருப்பேன் என்கும் மகனைப் பார்த்தவர்,உன்கிட்ட கொஞ்சம் பேசணும் அதுக்கு தான் கேட்டேன் என்றவாறு மகனின் அருகில் வந்து உட்கார்ந்தார்.

உனக்கு நான் அறிவுரை சொல்லணும்னு கிடையாது.ஆனால் சொல்ல வேண்டியது என்னோட கடமை. இன்னும் கொஞ்ச நாளில் நம்ம பொண்ணு உன் மாமனாரோட தங்கச்சி வீட்டில் போய் வாழ போகுது...

அவங்க பொண்ணு எந்த அளவுக்கு நம்ப நடத்துறோமோ அது போல தான் நம்ம பொண்ணையும் அவங்க பார்த்துப்பாங்க.கண்மணியும் கவிதாவும் முறைக்கு மச்சான் பிள்ளைகளாக இருந்தாலும் எனக்கு பெத்த பொண்ணு போல தான்.

உன் பொண்டாட்டியை காரணம் காட்டி அங்க என் பொண்ணு கண்ண கசக்கிச்சி நான் மனுஷனா இருக்க மாட்டேன்.அப்பா மகன் என்ற உறவை நான் பார்க்க மாட்டேன்.மரியாதை கெட்டுப் போயிடும்.

உன்னை நம்பி தான் அந்த புள்ள எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு வந்துருக்கு.அப்படின்னா எந்த அளவுக்கு உன்னை நம்பி இருக்குன்னு நீ அதை புரிஞ்சுக்கணும்.அதுக்கு தகுந்த போல நல்ல புருஷனா நடந்துக்கிறியோ இல்லையோ நல்ல மனுஷனா நடந்துக்கணும். ..

நேரம் கிடைக்கும்போது வெளியில எங்கயாச்சும் கூட்டிட்டு போ. வீட்டுக்குள்ளாரே இருக்கில்லையா அதுக்கும் மனசு ஒரு மாதிரியா இருக்கும்.

நாலு இடத்துக்கு போயிட்டு வந்தா தான் பொம்பளைங்களுக்கும் கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கும்.எந்த மனஸ்தாபமாக இருந்தாலும் அது ரூமுக்குள்ள தான் முடியனுமே தவிர நடு ஹாலுக்கு வந்துருச்சுன்னாக்க அது சந்தி சிரிச்ச கதையாகியிடும்.புருஷன் பொண்டாட்டிக்குள் சின்ன சின்ன சுணக்கம் வராம இருக்காது.

நல்ல சந்தோஷமா இருந்த பொண்ணு முகத்துல இன்னைக்கு அந்த வீட்டுக்கு வரும்போது சோகமா இருந்துச்சு. காலையில் வீட்டை விட்டு நான் வரும்போது நல்ல சிரிச்சிட்டு இருந்த பொண்ணு கொஞ்ச நேரம் கழிச்சு பார்க்கும்போது சோகமா இருக்கென்றால் நீ தானே வீட்டுக்கு போன,அப்ப நீ தான் ஏதோ அந்த புள்ள மனசு கஷ்டப்படுற போல பேசிருக்குற சரி தானே என்கவும்...

செழியனால் தனது தந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.

பாவத்திலேயே பொல்லாத பாவம் எது தெரியுமா பொண்ணோட பாவம் தான் அதை நீ வாங்கி கட்டிக்காத என்கவும், மன்னிச்சிடுங்க பா என்றான்.

"மன்னிப்பு என்கிட்ட கேக்காதேய்யா"

அது கிட்ட போய் மன்னிப்பு கேளு.பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்கிறதால் ஒன்னும் தரம் தாழ்ந்து போயிட மாட்ட.

ஆமா இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.இவரு ரொம்ப யோக்கியமென்று வானதி சொல்ல,ஏண்டி எனக்கு என்னடி கொறச்சல்?

கல்யாணம் பண்ணிய புதுசுல உன் கால புடிச்சி நான் கெஞ்சலையா சொல்லு என்க,ஐயோ...என்னங்க எந்த நேரத்தில் என்ன பேசுறீங்களென்று வானதி சிரித்து வெட்கப்பட,இது வேற நடந்திருக்கிறதானு செழியனும் சிரித்து விட்டான்..

மகனின் சிரிப்பை பார்த்தவர் இந்த சிரிப்பு எப்போதும் உன் கூட இருக்கணும் பா.அது உன் கையில தானிருக்கு.,சரிங்கப்பா நான் பாத்துக்குறேன் என்றவன் ஆமா எதுக்கு அம்மா கால்ல விழுந்தீங்க அதை சொல்லுங்கள்.

அது வேற ஒன்னுமில்லை தம்பி.. பெருமாள்னு எனக்கொரு நண்பன் சீமக்கரையில் இருக்கான்னு சொல்லிருக்கேன் இல்லையா,எங்க கல்யாணம் பண்ண புதுசுல அவங்க ஊர்ல கெடா வெட்டு வெச்சிருந்தாங்க.

நான் உன் மாமானுங்க ரெண்டு போறோட போயிருந்தோம்.அப்ப அவங்க ஊர்ல தென்னங் கள்ளு இறக்குனாங்க. நல்லா இருக்குன்னு கேள்வி பட்டதால் சும்மா குடிச்சு பார்த்தேன் ரொம்ப புடிச்சி போயிடுச்சு...

நானும் உன் மாமானுங்களும் ரெண்டு பானை குடிச்சுட்டோம்.அவன் அப்பவே சொன்னான் டேய் இதெல்லாம் குடிக்காதீங்கடானு...

இள ரத்தம் இல்லையா பரவால்லை, அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடான்னு குடிச்சிட்டு நாங்கள் அங்கே படுத்துட்டோம்...கொஞ்ச நேரம் போய் வாந்தினா வாந்தி.

பிறகு ஒரு வழியாக எந்திரிச்சி போய் அங்கிருந்த ஏரியில் குளிச்சிட்டு வீட்டுக்கு போனோம்.கெடா வெட்டும் நல்லபடியா முடிஞ்சு ஊருக்கு வந்துட்டோம்.

வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம உன் அம்மாகிட்ட என் வீர தீர செயலை சொன்னதும் கோச்சிகிட்டு பைய தூக்கிட்டு அப்பன் வீட்டுக்கு கிளம்பிட்டா...

எங்கப்பா கிட்ட போய் ஒரு குடிகாரனை எதுக்கு கட்டி வச்சிட்டீங்கனு கேட்கிறேன்.இனி உன் கூட வாழ மாட்டேனு ஒப்பாரி வைக்கிறாள்.

எவ்வளவோ சொன்னேன் நம்பவே இல்லை...பட்டுன்னு கால்ல விழுந்துட்டேன்..சத்தியமா அது தென்னங் கள்ளுடி உடம்புக்கு நல்லதுனு சொல்லி புரிய வைக்கிறதுக்குள்ள பாதி உசுரு எனக்கு போயிடுச்சு.

அன்னைக்கு விழுந்தவன் தான் அதன் பிறகு சுதாரிச்சுட்டேன் என்கவும் என்ன சொன்னீங்கனு வானதி முறைக்க, இல்லம்மா அதுக்கப்புறம் நான் எந்த தப்பும் பண்ணவில்லைனு சொன்னேன்.

யாருக்கு தெரியும்...பின்னாடியே வந்து பார்த்தால் தான் உங்க லட்சணம் தெரியுமென்று வானதி சொல்ல,அடிப்பாவி உன் புருஷன் மேல இப்படி சந்தேகப்படுறியே இதெல்லாம் அடுக்குமா என்றார்..

தனது அப்பா அம்மா போலவே நானும் எனது மனைவியும் இப்படித்தான் கேளி கிண்டலோடு சண்டை வம்பு இல்லாமல் வாழணுமென்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்,அம்மா சாயந்திரம் அவளை நான் கடைக்கு கூட்டிட்டு போறேன் என்கவும் சரி கூப்பிட்டு போ...

இல்லம்மா நாளை பின்னர் தெரிஞ்சவங்க விசேஷத்துக்கு எல்லாம் போகணுமென்றால் துணி எல்லாம் வேணும் இல்லையா?.

ஆமாப்பா நல்ல பட்டு புடவையா பார்த்து வாங்கு.. ஏன்ப்பா அவ்வளவு தூரம் திருபுவனம் போனோமே அங்க ஒரு வார்த்தை சொல்லி இருந்தாக்க இஷ்டத்துக்கு வாங்கிட்டு வந்திருக்கலாமே பா..

நம்ம சாமி கடைக்கு போ..புடவையெல்லாம் நல்லா இருக்கும் என்கவும் அதெல்லாம் வேணாம் மா. பாபு துபாயிலிருந்து வரும்போது ஒரு பெட்டி துணி வாங்கிட்டு வந்திருக்கான் மா.

அப்படியா பா சந்தோஷம்...

அப்புறம் தம்பியென்று கணவரை பார்க்க,யாரு சொன்னா என்ன வானதி நீயே சொல்லுமா என்றார்.

சொல்லுங்கம்மா என்ன விஷயம்?.

நாள பின்ன காரியத்துக்கெல்லாம் போனாக்க கையில கழுத்துல நகை வேணும் இல்லையா...அப்பாவோட பாஸ்புக் எடுத்துட்டு போயிட்டு உன் பொண்டாட்டிக்கு கொஞ்சம் நகைகள் வாங்கிட்டு வந்துடுப்பா.

இருவரையும் பார்த்து சிரித்தவன் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா என்றான்.

ஏன் தம்பி உன் பொண்டாட்டிக்கு நாங்க வாங்கி கொடுக்க கூடாதானு வானதி கோபமாக கேட்க,உங்க மருமகளுக்கு செய்யுங்க நான் வேண்டான்னு சொல்லல..

இப்போதைக்கு அவள் கிட்ட நகைகள் இருக்குமா என்கவும்,எப்படிப்பா சொல்ற? இந்த பொண்ணு எதாச்சும் அவங்க வீட்ல இருந்து திருட்டுத்தனமா எடுத்துட்டு வந்துதா என்க அய்யய்யோ அப்படிலாம் இல்லம்மா...

அவங்க மாமா,தாய் மாமா சீர் செய்ய வந்திருந்தாங்க இல்ல,ஆமா அதுக்கு...அங்க பொண்ணு அழைக்கப் போனார்களே அங்கே அவளுக்கு அவங்க சார்பா நகையெல்லாம் கொடுத்து இருக்கிறார்கள் என்றான்.

என்னப்பா சொல்ற என்று ஆச்சரியமாக கேட்க ஆமா மா.. புவனாத்தை தான் சொன்னாங்க.அங்கு கோயிலுக்கு வரும்போது போட்டிருந்த எல்லாமே அவங்க கொடுத்த நகை தான். அதுக்கப்புறம் எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டாமா என்றான்.

சரி இருக்கட்டும் எங்களுக்கு இருக்கிறது ஒத்த மருமக நாங்க வாங்கி கொடுக்குறோமே என்கவும்,ஏதாச்சும் ஒரு நல்ல விசேஷம் வந்தா அப்ப வாங்கி கொடுங்க.இப்போதைக்கு எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டான்..

அவங்க அப்பா கிட்ட என் பையன் மகாராணி போல பார்த்துப்பான்னு சொல்லிருக்கிறேன் அந்த வார்த்தையை ஒரு நாளும் மறக்காதே என்றார்.

கண்டிப்பாக என்றவன் மேல தெருவுல வேணி அக்கா துணி தைச்சாங்களாமே நல்லா இருக்குனு அவங்க கிட்டயே கொடுக்கலாம்னு சொல்றாள் மா.

நல்லது பா அந்த பொண்ணுக்காரியும் துணி தைக்குறதை வச்சி தான் ஓரளவுக்கு குடும்பத்தை ஓட்டுறாள்.
ஏதோ நம்மளால ஒரு உதவி கிடைச்ச போல இருக்கும் இல்லையா தாராளமாக கொண்டு போய் கொடு.

சரி நான் போய் கொஞ்ச நேரம் படுக்கிறேன் என்றவன் படியில் ஏறி ரூமிற்குள் வந்து மனைவியை தேட, பால்கனி கதவு திறந்து இருப்பது தெரிந்தது.

ஓ மேடம் அங்கு இருக்கிறார்களோ என்றவாறு போய் எட்டிப் பார்க்க, ஷமிராவோ அங்கிருந்த பால்கனியின் கை பிடியின் மேல் சாய்ந்து கொண்டு தூரத்து மலையை வேடிக்கை பார்த்தபடி நின்றாள்.

ஓய் பொண்டாட்டி இங்க என்னடி பண்ற என்றவாறு அவள் அருகில் வந்து நிற்க ஷமீராவோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்.

என்னடி செல்லம் புருஷன் மேல கோவமானு அவளின் தோளின் மேல் கையை போட,செழியனின் கையை தட்டி விட்டு ரூமிற்குள் சென்று விட்டாள்...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
ரொம்ப கோவமா இருக்கா போலையே, ஆத்தா மலையாத்தா கொஞ்சம் உன் புள்ளைக்கு உதவி பண்ணுமா.வாய் இருக்குன்னு இஷ்டத்துக்கு பேசிடுறேன்.இப்போது எப்படி இவள் கோவத்தை மலையிறக்க போறனோ?

நீ தான் துணையாக இருக்கணும் என்று உள்ளே வந்தவன் சாரி செல்லம் ஏதோ ஒரு கோவத்துல அப்படி பேசிட்டேன் என்கவும்,கோவத்துல பேசலை உங்க மனசுல இருக்குவதை தானே பேசினீங்க என்றாள்.

அப்பாடி இப்பயாவது மனைவி வாயை திறந்தாளே அது போதும் என்று வேகமாக போய் அவளின் பக்கத்தில் உட்கார்ந்தவன்,அவள் கையை எடுத்து தனது நெஞ்சில் மேல் வைத்துக் கொண்டு நிஜமாடி டிரஸ்ட் மீ.

எங்கே கண்மணியும்-பாபுவும் கல்யாணம் பண்ணிக்க போறது உனக்கு புடிக்கலையோனு நினைத்து தான் அப்படி பேசிட்டேன் டி என்று பாவமாக சொன்னான்..

டெல்லி:

ரூபா ஜூலி இருவரும் அவர்கள் இருவரின் கணவனையும் முறைக்க அவனுங்களோ ஹிஹி என்று சிரித்து சமாளித்தார்கள்.பின்னர் என்னென்ன தேவை என்ற நால்ரும் எஸ்தருக்கும் சேர்த்து ஆர்டர் பண்ணினர்.

சிறிது நிமிடத்தில் வெயிட்டர் கொண்டு வந்து வைக்க அது என்ன?அதற்கு என்ன பெயர் என்பதை எஸ்தருக்கு அவர்கள் நால்வரும் சொல்லிக்கொண்டே சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பினர்..

டிராபிக்குள் புகுந்து அவர்கள் அபார்ட்மெண்ட்க்கு வருவதற்கு முக்கால் மணி நேரமானது.காரை நிறுத்திவிட்டு இறங்கும் போது அவர்களுக் தெரிந்தவர் ஒருவர் தீபனையும் ருத்ரனையும் கூப்பிட,நீங்க மூணு பேரும் போங்க நாங்க பேசிட்டு வரோம் என்றானுங்கள்..

சரி என்று அவர்களும் அங்கிருந்து சென்றுவிட,என்னப்பா ஏதாச்சும் பிரச்சனையா?காலையில் அந்த வெலங்காத மினிஸ்டர் நம்ம வீட்டுக்கு வந்தானாமே?

அப்பார்ட்மெண்ட் ஃபுல்லா இதே பேச்சா தான் இருக்கு என்று என்று ருத்ரனிடம் கேட்க என்ன அங்கிள் சொல்றீங்க என்று அவர்கள் இருவரும் அதிர்ந்து போய் கேட்க,ஆமா பா...
நான் ஆபீஸ்ல இருந்து வந்த பிறகு உங்க ஆன்ட்டி தான் விஷயத்தை சொன்னாப்பா.

எங்களுக்கு எதுவும் தெரியாதுங்க அங்கிள்.நாங்க காலையிலே ஹாஸ்பிடல் போயிட்டோம்.ரூபாவும் ஜூலியும் ஒன்னும் சொல்லவில்லை என்ற ருத்ரன்,அட ஆமா....

அந்த ஆளோட பேத்திக்கு நான் தான் சர்ஜரி பண்ணினேன் அதற்காக வந்திருக்கலாம் என்று சொன்னாலும்,ஒருவேளை நாம் யார் என்று அந்த அமர்நாத்துக்கு தெரிந்து விட்டதோ என்று உள்ளுக்குள் ஓர் கேள்வி வராமல் இல்லை..

அப்படியா விஷயம் என்றவர் சரிப்பா நீங்க போங்க என்று சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து சென்றார்.

இவளுங்க இதை பற்றி சொல்லவே இல்லையேடா என்று ருத்ரன் பல்லை கடிக்க,அம்மா இருக்கிறாங்கன்னு அமைதியா இருந்திருக்கலாம் டா.எதா இருந்தாலும் வீட்ல போய் பொறுமையா கேட்டுக்கலாம் வாடா என்று நண்பனை இழுத்துக் கொண்டு லிப்டில் ஏறிய தீபனுக்கும் ஏன் ரூபா இதை சொல்லவில்லை என்ற எண்ணம் வராமல் இல்லை.

இருவரும் கோவமாக வீட்டிற்குள் வந்தவர்கள் அங்கிருந்த எஸ்தரை பார்த்து அமைதியானார்கள்.ரூபா வீட்டுக்கு வா என்று சொல்லி தீபன் அங்கிருந்து செல்ல,சரிங்கத்தை காலையில் பார்க்கலாம் என்று கணவன் பின்னாடியே அவளும் சென்றாள்.

குட் நைட் மா என்று சொல்லிக் கொண்டு ஜூலியும் ரூமிற்குள் போக எஸ்தரும் டிவியை ஆன் பண்ணி உட்கார்ந்து விட்டார்..வெளியிலே ஸ்நாக்ஸ் சாப்பிட்டு வந்ததால் இரவு உணவு எதுவும் வேண்டாம் என்று நால்வரும் சொல்லி விட்டனர்...

கதவைத் தட்டி விட்டு உள்ளே வரும் மனைவியைதான் ருத்ரனும் பார்த்துக் கொண்டிருக்க,கணவனின் பார்வையை கண்டு என்னங்க ஆச்சு என்று கேட்க வேகமாய் வந்து மனைவியை அங்கிருந்த சுவற்றில் சாய்த்தவன், அவன் வந்ததை ஏண்டி சொல்லவில்லை என்று அடக்கப்பட்ட கோபத்தில் கேட்க,அதற்கு ஜூலியோ அது ஒன்றும் அவ்வளவு முக்கியமான விஷயம் இல்லையே என்றாள்...

மனைவியின் வார்த்தையை கேட்ட ருத்ரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.ஆமாங்க அவன பத்தி பேசுறதுக்கு ஒண்ணுமே இல்லை.

அவனுடைய பேத்திக்கு சர்ஜரி பண்ணியதுக்காக கிப்ட் கொடுக்க வந்தான்.அதை நான் வாங்கவே இல்லையே என்கவும்,அங்கிள் இதை பற்றி சொல்லியதை கேட்டவுடன் ஒரு நிமிஷம் நாங்கள் பயந்துட்டோம்டி..

எங்கே நம்ம யாருன்னு அவனுக்கு தெரிஞ்சிடுச்சோனு என்க...அது எப்படிங்க தெரியும்?எதுக்கு தேவை இல்லாம டென்ஷன் எடுத்துக்குறீங்க என்றவாறு,கணவனின் கழுத்தில் மாலையாக கைகளை கோர்த்தப்படி கேட்க,நீ சொல்வதும் சரிதான்...

உன் அண்ணனும் இதான் சொல்லிட்டு இருக்கான்.நடந்தது இல்லை என்று மாற்ற முடியாதேடி என்று வேதனையோடு சொல்லியபடியே மனைவியின் தோள்பட்டையில் சாய்ந்து கொண்டான்..

கணவனின் மனநிலையை புரிந்தவள்,மிஸ்டர் புருஸ் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்..அதுக்காக காலையில இருந்து காத்துட்டு இருக்கேங்க என்றாள்.

"சொல்லுடி என்ன என்றான்"

கணவனின் வலது கையை எடுத்து தனது வயிற்றில் மேல் வைக்க,கொஞ்சமா சாப்பிடு என்றால் காதுல வாங்குனா தானே?

இஷ்டத்துக்கு பானிபூரி ஸ்வீட் அது இருந்து உருட்டி தள்ளிக்கிட்டு இருந்தால் வயிறு வலிக்காம என்ன பண்ணும்?

இருடி நான் போய் லெமன் சோடா போட்டுட்டு வரேனென்று விலக,கணவன் பேசியதை கேட்ட ஜூலிக்கு ஆத்திரம் வர,ஏண்டா நீயெல்லாம் ஒரு டாக்டரா?துப்பு கெட்டவனே போடா என்று திட்டினாள்...

பிறகே மனைவியின் செயல்கள் புரிந்து அதிர்ந்து போய் மனைவியின் தோளை பிடித்து ஜூலி நிஜமாவா என்க ஆமாம் என்றாள்.

சொல்லவே இல்லைடி என்கவும் நான் ஸ்வீட்டோடு வந்து சொல்லலாமென்று இருந்தேன்.அதுக்குள்ள நீங்க அங்க வந்துட்டீங்களே என்று கீழே குனிந்து கொண்டு சொல்ல,பாருடா என் பொண்டாட்டிக்கு வெட்கமெல்லாம் வருது...ஏய் ரவுடி உனக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட செட்டாகவில்லை என்று அணைக்க,வெட்கத்தில் கீழே குனிந்து இருந்தவளோ கணவனை பார்த்து முறைத்தாள்.

ஹா ஹா என்று சிரித்தவன் கங்கிராஜுலேசன் மிஸஸ் ருத்ரன் வம்சிகன்...நமக்கு வாரிசு வரப்போகுதேஏஏஏஏ...

உடனே இதை ரூபாவுக்கும் தீபனுக்கும் சொல்லனும் டி என்க,காலைல சொல்லிக்கலாம்.இப்ப அமைதியா இருங்க என்பவளை பார்த்தவன் எப்படி அமைதியா இருக்க முடியுமென்று பட்டென்று மனைவியின் உதட்டில் முத்தமிட தொடங்கினான்...

நீண்ட முத்தத்தை பரிசாக கொடுத்தவன் மனைவியை கையில் ஏந்தி கொண்டு அங்கிருந்த சோபாவில் போய் உட்கார்ந்தவன் ஜூலி உனக்கு என்ன வேணும் கேளுடி...

இந்த உலகத்தில் நீ என்ன கேட்டாலும் நான் வாங்கி தரேன்.எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயத்தை சொல்லி இருக்க தெரியுமா என்று சந்தோஷத்தில் கண் கலங்க...

"எனக்கு ஒரு ஆசை இருக்குங்க என்றாள் "..ஹம் சொல்லு என்க.ஒரு முறையாவது வேளாங்கண்ணிக்கு போகணும்னு ஆசையா இருக்கு...ப்ளீஸ் அங்க கூப்பிட்டு போவியா என்கவும்...ஊப் இவ்ளோ தானடி..

இன்னும் ரெண்டு மாசம் போகட்டுமே ட்ராவல் பண்ணலாம் என்கவும்,நிஜமா தானே என்றாள்.அம்மாவாகி முதல் முதலில் கேட்கிற அதை உனக்கு செய்யாமல் இருப்பேனா என்றான்..

சரி சரி சீக்கிரம் படுத்து தூங்கு அப்பதான் குழந்தைக்கு நல்லது என்கவும்,ஏன்டா இதெல்லாம் உனக்கு டூ மச்சா தெரியலை?

இத்தனை நாளும் என்னை தூங்கவிடாம இருந்த இப்ப சீக்கிரம் தூங்கு என்று சொல்லுற என்று முறைக்க,அப்படி தூங்கவிடாமல் இருந்தால் தாண்டி இன்னைக்கு இவ்வளவு பெரிய நல்ல விஷயம் சொல்லிருக்க என்று ருத்ரன் சிரிக்க, ஐயோ என்ன பேச்சு பேசுறீங்க என்று கணவனின் நெஞ்சில் மேல் புதைந்து கொண்டாள்...

சந்தோஷத்தில் ருத்ரனுக்கு தூக்கமே வரவில்லை.தனது அருகில் படுத்திருக்கும் மனைவியை இமைக்க மறந்து ரசித்தவன் வெகுநேரம் சென்றே தூங்கினாலும் வழக்கம்போல் விழிப்பு வந்தது.

எல்லாருக்கும் கொடுக்க ஏதாவது ஸ்வீட் செஞ்சு வைக்கணும் என்ற எண்ணத்தோடு வேகமா எழுந்து குளித்து தயாராகி கிச்சனுக்கு போனவன்,என்ன இருக்கின்றதென பார்த்துவிட்டு வேக வேகமாக அவனுக்கு தெரிந்த ஸ்வீட் செய்து முடிக்கவும் எஸ்தரும் கிச்சனிற்கு வந்தார்...

அங்கிருந்த மருமகனைப் பார்த்து என்னப்பா என்க,அத்தை குட் மார்னிங் என்கவும் குட் மார்னிங் என்றார். பசிக்குதா இருப்பா எதாச்சி செஞ்சு தாரேன் என்கவும்,அதெல்லாம் ஒன்னும் இல்லங்கத்தை.

ஒரு சந்தோஷமான விஷயம் என்க, சொல்லு கண்ணா என்று அவரும் ஆர்வமாக கேட்க,நீங்க பாட்டி ஆகிட்டீங்க என்றதும் நிஜமாவா என்று சந்தோஷப்பட்டார். .

ஆமாங்கத்தை நீங்க வந்த நேரம் இப்ப நம்ம குடும்பத்துக்கு புது வாரிசு வந்துடுச்சு என்று சொல்லி அவரின் கையைப் பிடித்தவன் ஒரு அம்மா வந்தாங்க...அவங்க வந்த நேரம் இன்னொரு அம்மாவோ இல்ல அப்பாவோ வர போறாங்க என்கும் போதே ருத்திரனின் கண்கள் கலங்கியது..

எதுக்கு கண்ணா சந்தோஷமான நேரத்தில் கண்கலங்குற என்று மருமகனின் கண்ணை துடைத்தவர்,நீ போய் உட்காருப்பா நான் டீ போட்டு எடுத்துட்டு வரேன் என்கவும்,எல்லாம் ரெடியா தான் இருக்குங்கத்தை.

முதல்ல இனிப்பு சாப்பிடுங்கள் என்றவன் அவன் செய்திருந்த ரைஸ் கீர் எடுத்து கிண்ணத்தில் போட்டு வந்து கொடுக்கவும்,சிரித்துக் கொண்டே மருமகனிடமிருந்து வாங்கி ஒரு வாய் சாப்பிட்டவர் நல்லா இருக்குப்பா,இதை எப்படி செஞ்ச என்று மருமகனிடம் ரெசிபியை கேட்டுக் கொண்டிருந்தார்..

இன்னைக்கு உங்க எல்லாருக்கும் நான் தான் பிரேக்ஃபாஸ்ட் பண்ண போறேங்கத்தை என்கவும்,அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ப்பா.நீ உக்காரு கண்ணு நான் சமைக்கிறேன் என்று எஸ்தர் எழ,இருக்கட்டுங்கத்தை ஓரளவுக்கு நல்லாதான் சமைப்பேன் என்று சிரித்தவன் அவரிடம் பேசி கொண்டே காலை டிபனையும் ருத்ரனே செய்ய...

ப்ரஷாகி வெளியே வந்தவளுக்கு அங்கிருந்த எஸ்தரை பார்க்க கொஞ்சம் வெட்கமாக இருந்தது.மகளின் முகத்தை பார்த்தவர் வாடா...

சந்தோஷமா இருக்குடா என்று சொல்ல, அதுக்குள்ள உங்க கிட்ட சொல்லிட்டாரா என்று கணவனை செல்லமாக முறைத்துக் கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் எஸ்தரின் தோளில் சாய்ந்து கொண்டாள்.

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top