• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
டெல்லி:

அரை மணி நேர ஆட்டோ பயணத்தில் அந்த பெரிய சர்ச்சின் வாசலின் முன்னால் வந்து ஆட்டோ நிற்க, எவ்வளவு ஆனதென கூகுள் பே மூலமாக பணத்தை செலுத்தி விட்டு மூவரும் உள்ளே போனார்கள்..

எஸ்தரோ அவ்வளவு பெரிய சர்ச்சை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே வந்தார்..என்னங்கம்மா இவ்வளவு ஆச்சரியமாக பார்க்கிறீர்களென்று ரூபா கேட்க நான் இதுவரைக்கும் இவ்வளவு பெரிய சர்ச் பார்த்ததே இல்லை மா. அங்க வேளாங்கண்ணியில் பார்த்ததை விட இங்கு பெரிதாக இருக்குடா.

எங்களுக்கும் வேளாங்கண்ணி பாக்கணும்னு ரொம்ப ஆசைம்மா என்று ஜூலி சொல்ல அதுக்கு என்ன டா ஒரு நாள் கண்டிப்பா போயிட்டு வரலாமே என்றார்.இவர்கள் போன நேரம் உள்ளே பிரேயர் நடந்து கொண்டிருந்தது.

மூவரும் இடம் தேடி போய் உட்கார்ந்து கண்ணை மூடி ஜெபம் பண்ணி முடித்துவிட்டு பிறகு பாதரின் வார்த்தைகளை கேட்கலானர்...


பிரேயர் முடிந்ததும் தெரிந்தவர்கள் எல்லாம் ஜூலி ரூபாவிடம் பேச அவர்களுக்கு எஸ்தரையும் அறிமுகப்படுத்தினர்.. சரிங்கம்மா நீங்க பேசிட்டு இருங்க நான் இதோ வரேனென்றவர் நேராக அங்கிருந்த உண்டியல் முன்பு போய் நின்றவர் சிறிது நொடிகள் சென்று கழுத்தில் இருந்த தாலியை கழட்டி அதில் போடுவதை ரூபாவும் ஜூலியும் அதிர்ச்சியோடு பார்த்தனர்.

மற்றவர்கள் ஏதாவது வேண்டுதல் என்றால் இப்படி செய்வார்கள் என்பதால் அங்கிருப்பவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆண்டவரே எல்லாம் உங்கள் சித்தம் போல் நடக்கட்டும் என்று அங்கிருந்து பலிபீடத்தை பார்த்து சொல்லிய எஸ்தர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு இயல்பாக இருப்பது போல் மகள்களிடம் வந்தவர் நான் போய் வெளியில போய் சுத்தி பார்த்துட்டு இருக்கேன் நீங்க வாங்கடா என்க,நாங்களும் வரோம் மா என்றனர்...

பின்னர் வெளியே வந்து அந்த சர்ச்சை சுத்தி உள்ள குரோட்டான்ஸ் செடிகளையும்,பழவகை மரங்களையும் சிறு பிள்ளைகளுக்காக ஒரு பக்கம் இருந்த சின்ன விளையாட்டு சாதனங்கள் கூடிய மைதானம்,காப்பகம் என அங்கிருந்ததை எல்லாம் எஸ்தருக்கு சுற்றிக் காட்டி விட்டு வந்தார்கள்...

அத்தை இங்க பக்கத்துல ஒரு ரெஸ்டாரன்ட் இருக்கு.அங்க ஸ்னாக்ஸ் எல்லாம் நல்லா இருக்கும் சாப்பிடுறீங்களா என்று ரூபா கேட்க,ஏய் வாலு பொண்ணு உனக்கு தானே சாப்பிடணும் போல இருக்கு என்று சிரித்துக் கொண்டே எஸ்தர் கேட்க..

ஆமாங்கத்தை உங்க பொண்ணு அப்படியே வாயை மூடிக்கிட்டு இருப்பா நான் மட்டும் தான் குண்டா குண்டான சாப்பிடுவேன் பாருங்களேனென்று ரூபா சொல்ல,ஏய் உனக்கு சாப்பிடணும் போல இருந்தாக்க அதை சொல்லுடி அதுக்கு எதுக்கு என்னையும் இழுத்து விடுற என்று ஜூலி முறைக்க...

அப்படியா...அங்க கடைக்கு வந்து ஏதாவது ஆர்டர் பண்ணுன உன் கைய வெட்டுறேன் டி பார்த்துட்டே இரு என்று சொல்லவும் சரி சரி சண்டை வேணாம் வாங்க போகலாமென்ற எஸ்தர் அவர்களோடு கடைக்கு சென்றார்.

மூவரும் உள்ளே போனவர்கள் அங்கே டேபிளின் முன்பு உட்கார்ந்திருந்த இருவரையும் பார்த்த ஜூலியும் ரூபாவும் முறைத்தாளுங்கள்.

எவ்வளவு நேரம் தான் உங்களுக்காக வெயிட் பண்றது?,சீக்கிரமாக வாங்களென்று தீபன் சொல்லவும்,அதற்கு ரூபாவோ,ரிஷி கபூர் ரேஞ்சுக்கு உன் அண்ணன் எப்படி நடிக்கிறான் பாரேனென்றவள் ஒன்னும் தெரியாதது போல் அமைதியாக போய் தீபன் அருகில் உள்ள சேரில் உட்கார்ந்து கொண்டாள்...

நீங்க எப்படிப்பா இங்கேயென்று எஸ்தர் கேட்க,அதான் உங்க மகள் மெசேஜ் அனுப்பி இருந்தாளேங்கத்தை...
எப்படியும் இந்த கடைக்கு வருவார்கள் என்று தெரியும்.அதனால தான் முன்னாடியே வந்து நாங்க அட்டனன்ஸ் போட்டோம் என்று ருத்ரன் சொல்ல,இது வாடிக்கையா நடக்கிறதோ என்று சிரித்தார்...

வனிச்சூர்:

ஏண்டி என்னமோ அம்பது லட்சம் கொடுத்த போல ஓவரா பண்றியே...என் பொண்டாட்டிக்கு தான கொடுத்த?,அவளுக்காக 5000த்தை கொடுக்க மாட்டியா என்கவும்,மாமா..மரியாதையா வாயை மூடிகிட்டு போ,நானே செம கடுப்புல இருக்கேன். அப்புறம் வாய்க்கு வந்தபடி திட்டிடுவேன்..

அடியேய் நீ ஒரு டீச்சருடி..கொஞ்சமாவது மரியாதையா பேசு டி.அதுலாம் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் போது மரியாதை கொடுக்குறேன் உனக்கெல்லாம் மரியாதை ஒன்னு தான் கேடு என்றாள்.

ஏய் கண்ணு குட்டி நான் உன் மாமன்டி என்றான்...அதற்கு கண்மணியோ அதனாலதான் கொஞ்சம் டீசண்டா பேசுறேன்.இல்லன்னா வாயில வண்ட வண்டையா வந்துருமென்று முறைத்தாள்..

நல்ல வேளைடி உன்னை கல்யாணம் பண்ணலைனு செழியன் சொல்ல,ஆமா இப்ப நான் தான் உன்னை கட்டிக்கிறேன்னு ஒத்த காலில் நின்னேன் என்ற கண்மணியோ தனது அத்தை மகனை கொலை காண்டில் பார்த்துக் கொண்டிருந்தாள்...

ரொம்ப வாய் பேசின வாய் இருக்காதுடி என்றவன் என் பங்காளி ரொம்ப அப்பாவிடி.அவன் உன்கிட்ட மாட்டிக்கிட்டு எப்படிலாம் சீரழிய போறானோ?. ஆத்தா மலையைத்தா இவளுக்கு கொஞ்சம் நல்ல புத்தியை கொடு என்று தப்பிச்சால் போதுண்டா சாமினு அங்கிருந்து ஓடினான்.

தனது மாமன் தலை தெறிக்க ஓடுவதை பார்த்த கண்மணியோ சத்தமாக சிரித்தவள் என்னம்மா கண்ணு...உன் புருஷன் இப்படி தலை தெரிக்க ஓடுறாரு அவ்வளவு பயமா உனகென்று ஷமிராவிடம் கேட்க,ஆமா அவர் எனக்கு பயந்தார் நீ பார்த்தியா என்றாள்..

இவர்கள் இருவரும் மேலையே அரட்டை அடித்து பேசிக் கொண்டிருக்க,உள்ளே வந்த காசிநாதனோ என்ன விசேஷம் எல்லாரும் ஒன்று கூடி இருக்கீங்க என்கவும்,வாப்பா காசி என்று தம்புசாமி தாத்தா சொல்ல வரேன் மாமா என்றார் .

நல்ல விஷயமா தான் உன்னை வர சொன்னேன் என்றபடி கண்மணியின் ஜாதகத்தையும் பாபுவின் பிறந்தநாள் தேதி வருஷத்தையும் கொடுத்தவர் இது ரெண்டுத்துக்கும் பொருத்தம் பாருயா என்க,சரி மாமா நல்லபடியா பார்த்து விடலாமென்று இரண்டு கைகளால் வாங்கியவர் எல்லாம் உன் சித்தமென்று சொல்லிக்கொண்டு கையோடு எடுத்துட்டு வந்த நோட்டில் முதலில் பாபுக்கு ஜாதக கட்டம் வரைய தொடங்கினார்..

பின்னர் இருவருக்கும் பொருத்தம் பார்த்துவிட்டு நிமிர்ந்தவர் ரொம்ப நல்லா இருக்கு மாமா..தாராளமா பண்ணலாம்.

கட்டம் என்ன சொல்லுதுனாக்க நம்ம மலையம்மா மேரி அம்மா வீட்டுக்கு போவார்களென்க,ஆமாம் அப்படித்தான் மச்சானென்று அன்பரசன் சிரிக்க...

போன வாரம் அந்த ஜாதகத்தை பற்றி நீ சொல்லும் போது இந்த இடத்தில் முடியாது,மேரி அம்மா வீட்டுக்கு தான் மருமகளா போகணும்னு கண்மணி ஜாதகத்துல இருக்கு,கடல் கடந்து போய் தான் வாழுமென்று நான் தான் சொன்னனே மச்சான்.

இது நீயும் நானும் முடிவு பண்றது கிடையாது.ஆண்டவன் இன்னாருக்கு இன்னாரென்று குறித்து தான் அனுப்புறார் என்றவர் பையனை நல்லா விசாரித்த பிறகு மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்.

பொம்பள புள்ளைய குடுக்குறோம் அவசரப்பட்டு விழுந்துட கூடாது இல்லையா,நம்ம வீட்டு பொண்ணு நாளைக்கு கண்கலங்கி நின்னாக்க அது நம்மளால தாங்கிக்க முடியாது என்கவும்,அய்யா காசி கண்ணு முன்னாடி தான் மாப்பிள்ளை இருக்கிறார் பாருனு பாபுவை காட்டியவர் நம்ம செழியன் பொண்டாட்டியோட மாமா பையனுக்குதான் பேசி முடிச்சிருக்குயா,அப்படியா நல்லது மாமா.

இப்பவாவது வீட்டில் டீ தண்ணீர் ஏதாச்சும் குடிப்பீங்களானு அந்தோணியையும் ராணியையும் பார்த்து கேட்க அவர்களும் மௌனமாக சிரித்தனர்.

பொண்ணு கொடுப்பீங்களா கொடுக்க மாட்டீங்களா என்று மனசுல சின்ன கவலையோடு தான் வந்தோம். இப்பதான் முடிவு ஆயிடுச்சே சந்தோஷமா விருந்தே சாப்பிடலாமே என்கவும்,அங்கிருந்த கஸ்தூரியோ நானும் ஷமீராவும் அங்க எல்லாருக்கும் சமைச்சிட்டோமே என்றாள்.

சரிமா என்ற அன்பரசன் மனைவியை அருகில் அழைத்து அவருக்கு மட்டும் கேட்கும் படி டீ கூட சாப்பிடுற போல போண்டா பஜ்ஜி ஏதாச்சும் பண்ணு. வாழக்காய் இல்லன்னாக்க கண்ணன் கிட்ட சொல்லி நம்ம தோப்பில் வெட்டிட்டு வர சொல்லி செய் என்க...

சரிங்க என்று சொல்லிக் கொண்டு ரஞ்சனியை பார்த்து கண்ணசைத்து விட்டு கிச்சனை நோக்கி போக கஸ்தூரியும் ரஞ்சனியும் புவனாவின் பின்னாடியே சென்றனர்.

அப்போ ஒரு நல்ல நாளு பாரு காசி நிச்சயதார்த்தம் வச்சிடலாம்.அப்படியே கல்யாணத்திற்கும் நாளை பார்த்து சொல்லிடுயானு தம்புசாமி தாத்தா சொல்ல,சரிங்க மாமா என்றவர் பஞ்சாங்கத்தை எடுத்து பார்க்க ஆரம்பித்தார்.

ஆளுக்கு ஒரு வேலையை வேகவேகமாக செய்து கொண்டிருக்கும் போது ஷமீராவும் அவர்களோடு வந்து இணைந்து கொண்டாள்.

நேரமும் கடந்து சென்றது...

காசிநாதனும் இரண்டு தேதியை குறித்து சொல்ல அதில் சரி வருமா வராதா என்று அவர்கள் அதைப்பற்றி வெளியே பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அதற்குள் இவர்கள் அனைத்தையும் தயார் பண்ணி முடித்ததும்,அம்மாடி நீங்க ரெண்டு பேரும் எடுத்துட்டு போய் எல்லாருக்கும் கொடுங்களென்க அவளுங்களும் சரி மா என்றவாறு எடுத்து போனார்கள்...

எல்லாருக்கும் டீ கொடுத்துக் கொண்டே வந்த ஷமீரா கணவனுக்கு கொடுக்கும் போது என் பொண்டாட்டியை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்க... அவன் அருகில் இருந்த கண்ணனோ மானங்கெட்டவனே அதான் கல்யாணம் பண்ணிட்டல்ல மூடிட்டு உட்காரேண்டா என்றான்...

ஆமா எங்கே தீரன்-மாறன் இருவரையும் காணுமென்று செல்லதுரை கேட்க நானே விஷயத்தை சொல்ல நினைச்சேன் பா.தீரன் பொண்டாட்டி மாசமா இருக்குனு விட்டுட்டு வந்தானுங்க..

அதான் நேத்தி ராத்திரியே கிளம்பி போயிட்டானுங்க என்கவும்,இதைக் கேட்டவர்களும் அப்படியாயென்று சந்தோஷப்பட்டனர்.ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையேனு வானதியும் வீராயியும் கேட்க,விடிஞ்சு சொல்லலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க எல்லாரும் வந்துட்டீங்களேனு தம்புசாமி தாத்தா சிரித்தார்...

அண்ணா நம்ம வீட்டுக்கு மருமகள் வந்த நேரம் எல்லாமே நல்ல காரியமா நடக்குதென்று செல்லத்துரையிடம் காசிநாதன் சொல்ல,ஆமா காசி..பெரியவங்க சும்மா சொல்லலை. பொண்ணு வர நேரத்தை குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி பேசுறது...

என் வூட்டுக்கு மருமகள் கால் வச்ச நேரம் நல்ல நல்ல செய்தியா காதுல வாங்குறேனென்று தனது பேரன் பொண்டாட்டியை பற்றி பெருமை பட்டுக் கொண்டிருந்தார் வீரையன் தாத்தா...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

மே மாதத்தில் 25ஆம் தேதி நல்ல முகூர்த்த நாளாக இருக்கு.அன்னைக்கு கல்யாணத்தை வச்சுக்கலாம். நிச்சயதார்த்தத்தை பிப்ரவரி ஏழு இல்லை எட்டு,இந்த இரண்டு தேதியில் வைக்கலாம்.2 தேதியும் முகூர்த்த நாளாக இருக்கு என்கவும் அந்தோணியோ எங்களுக்கு எந்த தேதியாக இருந்தாலும் ஓகே தான் என்றார்.

அன்பரசனோ புவனாவிடம் தேதிகளை சொல்லி இது சரி வருமா என்க,அவர் எதற்காக கேட்கிறார் என்பது புரிந்து கொண்டவர்,அதே தேதியிலே வைத்து விடலாம் என்றார்.

சரிங்க அப்ப கண்மணியை கூப்பிடுங்க.இங்க உள்ள முறைப்படி பூ வைத்து விடலாமென்று அந்தோணி சொல்ல,அவர்களும் அதற்கு சரி என்றனர்.

கஸ்தூரி போய் கண்மணி கூப்பிட்டு வா மா என்கவும் சரிங்கப்பா என்று மாடிக்கு போனவள் கண்மணியை அழைத்துக் கொண்டு கீழே வந்தாள்.

மருமகளை பார்த்து சிரித்த ராணியோ தட்டிலிருந்த மல்லிகை பூவை எடுத்து அவள் தலையில் வைத்து விட்டார். பின்னர் அவர்கள் எடுத்துட்டு வந்த பழங்களை ஒரு தட்டில் வைத்து தம்புசாமி-சுமதியிடம் நீட்டவும் அவர்களும் சந்தோஷமாக வாங்கிக் கொண்டனர்...

சரிங்க அப்போ நிச்சயதார்த்தத்தில் பார்க்கலாம்.நாங்க இன்னைக்கே ஊருக்கு கிளம்புறோமென்று சொல்லிவிட்டு அங்கிருந்து செழியன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்....

தங்கையின் முகத்தை பார்த்த தம்புசாமியோ ஆத்தா என்ன ஆச்சு?ஏன் உன் முகமே சரியில்லை?.

எதுக்குணா இந்த மனுஷனுக்கு என்னை கட்டி வச்ச?நான் தான் வேண்டாம்னு ஒத்த கால்ல நின்னனே என்று கோவமா சொல்ல...

ஏத்தா இப்ப என்ன ஆச்சு?

மச்சான் என்ன பண்ணுனாரு அத சொல்லாம இத்தனை வருஷம் கழிச்சியும் இதே பாட்டை படிச்சா என்ன அர்த்தம் கழுதை என்று தாத்தா சத்தம் போட,இந்த வயசுலயும் அவர் அந்த வெள்ளையம்மா பின்னாடி தான் சுத்திட்டு இருக்கிறாரே இதை எங்க போய் சொல்லுவேனென்று தனது மூக்கை சிந்தினார்.

தங்கை சொன்னதை கேட்டவர் என்ன ஒளரிகிட்டு கிடக்குற கழுதை என்கவும்,உண்மையை தான் சொல்லிக்கிட்டு இருக்கேன்...

அத்தமவன் நொத்த மவனன்னு உன் பிடிவாதத்தில் தான் இந்த கல்யாணம் நடந்துச்சு.இன்னும் இவரு திருந்தின பாடில்லை.நான் இனிமே அந்த வீட்டு பக்கமே போக மாட்டேனென்றார்.

தம்புசாமியோ அங்கு உட்கார்ந்திருந்த தனது மச்சானை முறைக்க அய்யய்யோ மச்சான் நான் அப்படி எதுவும் பண்ணலையா...பேசுற அவசரத்துல பேரை மாத்தி சொல்லிட்டேன் என்கவும் என்னையா விளையாடிட்டு இருக்கியா?

இந்த வயசுல என் தங்கச்சி கோச்சிட்டு வருதே உனக்கு வெக்கமா இல்லையா என்று முறைக்கு,யோவ் மச்சான் என்னை நம்புயா.

கோவத்துல உன் தங்கச்சி ஏதேதோ பேசிட்டு இருக்கிறாயா. எல்லாத்துக்கும் காரணம் உன் பேரன் என்க,இது என்ன புது கதை?என்ன பண்ணுனான் என்கவும், சற்று முன்னர் தனது வீட்டில் நடந்ததை எல்லாம் வீரையனும் சொல்ல மற்றவர்களோ அதைக் கேட்டு சத்தமாக சிரித்து விட்டனர்.

பாத்துக்க மச்சான் உன் பேரனால என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது என்க...அதற்கு தம்புசாமியோ உன் லட்சணம் அப்படி என்றவர்,ஆத்தா வீராயி மச்சான் உன்ன கடுப்பேத்துவதற்காக சொல்லிட்டு இருக்கிறாரு..

அப்படி எல்லாம் உன்னை நான் விட்ருவேனா சொல்லு???கனவுல கூட உனக்கு துரோகம் பண்ணனும்னு உன் புருஷன் நினைச்சாலும் கைய கால வெட்டிட மாட்டேன் என்கவும்,அட பாவி எப்ப என் கைய கால வெட்டலாம்னு தான் காத்துட்டு இருக்கியா டா என்ற வீரையனோ தனது மாமன் மகனை பார்த்து மனதிற்குள்ளே திட்டிக் கொண்டார்.

அத்தை சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று கஸ்தூரி சொல்லவும் எடுத்து வைம்மா, நான் உங்க மாமாவையும் அவங்களையும் கூப்பிட்டு வரேனென்று ஹாலுக்கு வந்தவர் சாப்பிட்டுக்கலாம் என்கவும் அவர்களும் ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதால் டைனிங் டேபிளின் முன்பு வந்து உட்கார்ந்தனர்

கவினுக்கு வானதி சாப்பாடு ஊட்டி விட, கஸ்தூரியும் ஷமீராவும் மற்றவர்களுக்கு பரிமாறினர்.ஒரு முறையாவது தன்னவள் தன்னை பார்ப்பாளென்று செழியன் காத்திருக்க அவளோ கணவனை சிறிதும் கண்டு கொள்ளவில்லை...

செழியா உன் பொண்டாட்டி பயங்கர கோவத்துல இருக்குறாள்.கை காலில் விழுந்தாவது சமாதானப்படுத்துடா.
ஏற்கனவே ஒரு வருஷமா பேச்சு வார்த்தை இல்லாம இருந்தீங்க இப்பதான் உனக்கு புதுசா கல்யாணம் ஆயிருக்கு பார்த்துக்கொள்ளென்று அவன் மனசாட்சி சொல்ல,கண்டிப்பா எப்படி என் பொண்டாட்டி கிட்ட மன்னிப்பு கேட்கிறேன் பாரென்று சொல்லவும் சொல்லாதடா செய் என்று சொல்லிவிட்டு மனசாட்சி அங்கிருந்து சென்றது.

என்ன கிளம்பலாமானு அந்தோணி கேட்க போகலாம் என்றவாறு ஹாலுக்கு வந்தனர்.தனது வீட்டினர் ஊருக்கு கிளம்புவதை பார்த்த ஷமீராவோ கண் கலங்கினாள்...

எதுக்குடா அழுகிறாய்...ம் ன்னு சொன்னதும் மாமா ஓடி வந்துருவேன் புரியுதா.இந்த குடும்பத்தோட கௌரவம் இப்போது உன் கையிலும் இருக்கு. அதுக்கு எந்த பங்கமும் வந்து விடக்கூடாது என்கவுமா சரிங்க மாமா என்று அழுது கொண்டே தலையசைத்தாள்...

திருச்சி புகழ் வீடு:

மானசா இன்னும் என்ன பண்ணுற?

எனக்கு நேரம் ஆகிட்டு,நான் ஆபிஸ் கேண்டின்ல லஞ்ச் சாப்பிட்டுக்குறேன் நீ பொறுமையா செய் என்றவாறு தனது பேகை எடுத்துக் கொண்ட புகழ் கதவை திறந்து வெளியே போக,இதோ வந்துட்டேன்க என்றவாறு லஞ்ச் பேகோடு வந்தவரோ கணவரின் முன்பு நீட்டினார்.

மனைவியை செல்லமாக முறைத்து விட்டு பேகை வாங்கி வண்டியில் வைத்தவர் சரி நான் கிளம்புறேன்.தோட்டத்தை சுத்தம் பண்ண வாசுகிட்ட சொல்லிருக்கேன்.

வேறு எதாவது வேலை இருந்தாலும் அவங்க கிட்ட சொல்லிடு,அதை விட்டு நீயே எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்து நோவை(யை)வர வச்சிக்காதே என்றவாறு அங்கிருந்து தனது ஆபிஸை நோக்கி சென்றார்..

மானசாவோ மெயின் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தோட்டத்து பக்கம் சென்று பார்க்க அங்கே மரத்திலிருந்து கொட்டிய இலைகளோ குப்பைமேடு போல் குவிந்து இருந்தது.

கடந்த மூன்று வாரங்களாக தனது மகன் வீட்டில் இருந்ததால் தோட்டத்தை பார்க்க ஆளில்லை.

இந்த மனுஷனுக்கு ஆபீஸ் மட்டும்தான் வாழ்க்கை என்று திட்டிக்கொண்டு மரத்தில் என்னென்ன காய்கள் காய்த்து இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே முன்பக்கம் வர கணவர் சொல்லியது போல வேலைக்கு ஆட்களும் வந்தனர்.

அம்மா எப்ப வந்தீங்க?நல்லா இருக்கீங்களா என்று வாசுவும் அவன் மனைவியும் கேட்க நல்லா இருக்கிறேன்.நீங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க பசங்க ஸ்கூல் போயாச்சா என்று மானசாவும் விசாரித்தார்..

நல்லா இருக்கோங்கமா...ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு தான் வரேன் என்றவர்கள் பிறகு தோட்டத்து பக்கம் போய் வேலைகளை ஆரம்பிக்க வாங்க சாப்பிட்டு வேலை செய்யலாமே என்று மானசா கூப்பிட,சாப்பிட்டுவிட்டு தான் வந்தோம்..நீங்க போய் சாப்பிடுங்க என்றனர்.

சரி என்று வீட்டுக்குள் போனவர் அவருக்கு தேவையான டிபனை எடுத்து வைத்து சாப்பிட்டுவிட்டு மூவருக்கும் டீ போட்டு எடுத்துக் கொண்டு முன் கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு தோட்டத்து கதவை திறந்து வந்தவர் வாசு,கலா இந்த டீயை குடிச்சிட்டு அப்புறம் வேலை பாருங்களென்றார்.

மானசாவின் குணம் தெரிந்ததால் சிரித்துக் கொண்டே செய்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்தவர்கள் அவரிடமிருந்து டீயை வாங்கி குடித்தனர். .

அருண் தம்பியும்,தம்பி பொண்டாட்டியும் நல்லா இருக்காங்களாம்மா? என்க..ரெண்டு பேரும் நல்லா இருக்காங்க கலா...என் பொழப்பு அங்க 15 நாளைக்கு இங்க 15 நாளைக்குனு ஓடுது என்கவும் என்ன பண்றது தம்பிக்கு அங்க வேலை..

பிள்ளைய பாக்காம உங்களால இருக்க முடியாது.ஐயாவுக்கு இங்க வேலை அவர் இந்த வேலையை விட்டுட்டு வர மாட்டாரே என்று வாசுவும் சொல்ல, அதேதான் வாசு..இவர் ரிட்டையர்டு ஆன பிறகு தான் அவன் கூட போய் இருக்க முடியும் போல என்று வருத்தமாக சொன்னார்..

ஒத்த புள்ளைய பெத்தா இதாங்கமா நிலமை.விடுங்க என்ன பண்றது சூழ்நிலை இப்படித்தானே...ஏங்கம்மா தம்பி பொண்டாட்டி மாசமா இருக்கா என்க...இதுவரை அந்த துர்கா தேவி கண்ண திறக்கலையே..

பார்க்கலாம் கலா,அந்த தாய் கிட்ட வேண்டுதலை வச்சிருக்கேன்.நமக்கு எப்ப கிடைக்குமோ அப்பதான் கலா கிடைக்குமென்று மானசா வருத்தமாக சொல்ல,உங்க நல்ல மனசுக்கு சீக்கிரமே நல்லதா நடக்குமென்று சொல்லும்போது வீட்டு போனிற்கு கால் வரும் சத்தம் கேட்கவும்,முருகாஆஆ மணி சத்தம் கேட்குது சீக்கிரம் நல்ல செய்தி வரும் மா பாருங்களென்றாள்.

உன் வாய் முகூர்த்தம்படி அப்படி நல்லது நடந்தாக்க அதைவிட சந்தோஷம் எனக்கு வேற ஒண்ணுமே இல்ல கலா என்றவர் சரி யாரு போன் பண்ணுறாங்கனு பார்க்கிறேனென்று உள்ளே போய் அட்டென் பண்ண அவர் மகன் அருண் தான் பண்ணினான்.

சொல்லுப்பா,நல்லா இருக்கிறியா?ஷீலா நல்லா இருக்கிறாராளா என்று விசாரிக்க, நல்லா இருக்கோம் மா.

"ஒரு சந்தோஷமான விஷயம் என்றான்".

அப்படி என்ன சந்தோசமான விஷயம் என்கவும்,நீ பாட்டி ஆயிட்டமா என்று அருண் சொல்ல, கண்ணா என்ன சொல்ற என்று சந்தோஷத்தில் அதிர்ந்து போனார்.

ஆமாங்கம்மா இப்பதான் போய் டெஸ்ட் எடுத்துட்டு வந்தோம் என்றான்.அம்மா துர்கா தேவி இப்பதான் உனக்கு இறக்கம் வந்ததாயென்று மனதில் நினைத்தவர்,மருமகளிடம் பேசிவிட்டு பின்னர் மகனிடம் அப்பாவுக்கு போன் பண்ணி சொல்லுப்பா என்க சரிமா என்று போனை வைத்தான்.

ஜீனி டப்பாவை எடுத்துட்டு வந்து கலா உன் வாயை திற என்க, என்னங்க மா என்றாள்.

முதல்ல வாயைத் திற என்கவும் அவளும் சிரித்துக்கொண்டே வாயை திறக்க ஜீனியை அள்ளி கலாவின் வாயில் போட்டவர் உன் வாய் முகூர்த்தம் போல நல்ல செய்தி தான்...

மருமகள் உண்டாயிருக்கிறாளாம் இப்பதான் அருண் போன் பண்ணி சொன்னான் என்கவும்,முருகா என்றாள் அந்த செந்தூராண்டவன் புண்ணியத்துல நல்லதே நடக்குமா என்றாள்

பின்னர் அவர்கள் இருவரும் சுத்தம் பண்ணும் வேலையை பார்க்க மானசாவோ இன்னும் எட்டு மாதத்தில் தங்கள் வீட்டுக்கு வரும் பேரபிள்ளைக்கு என்னென்ன வாங்கலாம் என்று இப்பையே மனதிற்குள் கணக்கு போட தொடங்கினார்..

அப்பொழுது சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது மகள் போட்டோவை பார்த்தவர் நீயே உன் தம்பிக்கு பிள்ளையா வந்து பொறந்திடுமா என்று சொல்லும்போது மானசாவின் கண்கள் கலங்கியது.

நல்ல விஷயம் கேள்வி பட்டிருக்கும் போது எதுக்கு கண் கலங்குற என்று அவர் மனசாட்சி கேட்க, ஆமா என்று கண்ணை துடைத்தவர் பூஜை ரூமுக்கு போய் அங்கிருந்த அம்மன் போட்டோவின் முன்பு கையைக் கூப்பியவர் என் குடும்பத்துக்கு ஒரு வாரிசு கொடுத்த தாயே என் உசுரு இருக்கிற வரைக்கும் உன்னை நான் மறக்க மாட்டேன் என்று நன்றியை சொல்லி விட்டு வெளியே வந்தார். .

வீழ்ந்தேனடி..
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top