Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
திருச்சி புகழ் வீடு:
ஏங்க,நானும் பாத்துட்டு இருக்கேன் எப்ப பார்த்தாலும் ஏதோவொரு யோசனையிலே இருக்கீங்களே ஏதாவது பிரச்சனையா?.
இல்ல கல்யாணத்திற்கு பணம் தேவைப்படுதா என்றவாறு மானசா தனது கணவனின் பக்கத்தில் உட்கார அப்படி எல்லாம் ஒன்னுமில்லம்மா.
நீ எதுக்கு தேவையில்லாம கற்பனை பண்ணிக்கிற என்கவும் இல்லையே நானும் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கேன் எப்போதும் கலகலப்பா பேசிட்டு இருப்பீங்க.
இந்த மூணு நாளா நானும் பாக்குறேன் அமைதியாக ஏதோ விட்டத்தை பார்த்து யோசனையா இருக்கீங்களே எந்த கோட்டையை பிடிக்கறதுக்காக சிந்தனை பண்றீங்க.
இந்த வயசுல நான் எந்த கோட்டைய பிடிக்க போறேனென்று கொஞ்சம் கடுப்பாக கேட்க ,அப்படி என்ன உங்களுக்கு வயசாயிடுச்சு?
இன்னும் நம்ம அருணுக்கு அண்ணன் போல தானே இருக்கீங்கனு சிரிக,அதில் புகழுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.அப்போ உன் புருஷன் ஹேண்ட்ஸமா இருக்கான்னு சொல்ற இல்லையா என்க,ஆமாம் அதிலென்ன சந்தேகமென்று கணவரின் தோளில் சாய,அடியேய் மனுசனை உசுப்பேத்தாதடி என்றார்.
ம்கும்..இந்த வயசுல இவரை உசுப்பேத்துறாங்க என்ற மானசா இந்த வாரம் ஒரு முக்கியமான நாள் வருது உங்களுக்கு ஞாபகம் இருக்கா என்கும் போது இவ்வளவு நேரம் அவரிடமிருந்த சிரிப்பு போய் அழுகை வந்தது.
அது எப்படி மானசா என்னால மறக்க முடியும்?நம்ம பொண்ணு இந்த உலகத்தை விட்டு போன நாளாச்சேனு வருத்தப்பட,ப்ளீஸ்ங்க இந்த முறையாவது என்ன அந்த இடத்துக்கு கூப்பிட்டு போங்களேன்?.
நானும் கடந்த 23 வருஷமா உங்ககிட்ட கேட்டுட்டு இருக்கேங்கனு கதறி அழுதார்.
இப்படி அழுது உன் உடம்பை கெடுத்துக்க வேண்டாம் என்பதற்காகதான் உன்னை கூட்டிட்டு போகாமல் இருக்கேன் மானசா.
அங்க போனால் உனக்கு நம்பளோட பொண்ணு ஞாபகம் வந்து வருத்தப்பட்டு உனக்கு ஏதாவது ஆகிடுமோ என்ற கவலை தான் மா...
அழுது கொண்டிருந்தவரோ ஏங்க இப்ப மட்டும் நம்ம பொண்ண மறந்துட்டா இருக்கேன் என்க....சரி அழாத டிக்கெட் போடுகிறேன்.ஆபிஸ்கு ஒருவாரம் லீவு எடுத்துட்டு நம்ம ரெண்டு பேரும் போயிட்டு வரலாம் சரியா.
அழுது கொண்டிருந்தவரும் சரிங்க என்றவாறு அங்கே சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் தனது மூன்று வயது மகளின் போட்டோவிற்கு மாலை போட்டுருப்பதை வேதனையோடு பார்த்தார்.
வனிச்சூர்:
காலையிலேயே குளித்து விட்டதால் வேகவேகமாக பீரோவை திறந்து அதிலிருந்த பட்டுப் புடவையை எடுத்து கட்டிக் கொண்டு தலையை பின்னி முடிக்க கவிதாவும் கதவை தட்டிக்கொண்டு உள்ளே வந்தவள் இந்தாக்கா அம்மா கொடுத்துச்சினு நகைகள் இருக்கும் பேகை கொடுக்க கண்மணியும் அதில் இருந்ததை எல்லாம் போட்டுக் கொண்டாள்.
அப்பொழுது மேலே வந்த புவனா வாடா கீழே போகலாமேன கண்மணியோடு கீழே வந்தார்.
வீராயி பாட்டியோ தனது கணவனைத் திட்டிக்கொண்டு பக்கத்து தெருவிலிருக்கும் தனது அப்பா வீட்டுக்கு வந்து கொண்டிருக்க,தெரிந்தவர்கள் பார்த்துவிட்டு என்ன வீராயி எதுக்கு இவ்வளவு வேகமா போற?என்கவும் ஒன்னும் இல்லை..
அண்ணன் வீட்டுக்கு போறேனென்று சொல்லிக் கொண்டு அந்த பெரிய வீட்டிற்குள் வந்தவர் அங்கு சொந்த பந்தங்கள் எல்லாரும் கூடியிருப்பதை பார்த்து என்ன விசேஷம் என்க,வாத்தா என்றார் வீராயின் ஒரே அண்ணன் தம்புசாமி.
அங்க வீட்ல யாருமே இல்லன்னு இங்க வந்தேன் என்கவும்,பேத்தியோட மாமா பையனுக்கு கண்மணியை பொண்ணு கேக்குறாங்க ஆத்தா,நீ என்ன சொல்றனு தனது தங்கச்சியிடம் தம்புசாமி கேட்க,நல்ல குணமான பையனா தான் தெரியுதுணா...இந்த ரெண்டு நாள்ல பாத்த வரைக்கும் சொல்றேன்,தாராளமா கட்டிக் கொடுக்கலாமே என்றார்.
அப்புறம் என்னங்க என் தங்கச்சிக்கு புடிச்சு போயிடுச்சு...அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் என் தங்கச்சி நல்லவன் கெட்டவனென்று உத்தரவாதம் கொடுக்காது என்கும் போது பதறியடித்துக் கொண்டு வீரையனும் வீட்டிற்குள் வர எதுக்கு மச்சான் என்னமோ அடுப்புக்கு கறி அள்ளிப்போட்ட போல வர என்கவும்,அதுலாம் ஒன்னும் இல்ல மச்சான் சும்மாதான்.வெயில்ல வந்தனே அதனால அப்படி தெரியுதென்றார்...
ஆமா இல்லன்னா மட்டும் அய்யா அப்படி சூரிய குஞ்சு கலரு பளபளன்னு இருப்பிங்களோனு தம்புசாமி சொல்ல அங்கிருந்தவர்களோ அதை கேட்டு சிரித்து விட்டனர்.
பாத்தியாடா உன் தாத்தன் என் அப்புச்சியை எப்படி கிண்டல் பண்றார்னு கண்ணனிடம் செழியன் சொல்ல,ஏய் அவரு தங்கச்சி புருசனா.உன் வேலையை பாருடா விளக்கெண்ணெய் என்றான்.
அப்பொழுது கொலுசு சத்தம் கேட்கவும் எல்லாரும் நிமிர்ந்து பார்க்க வந்தவர்கள் எல்லாரையும் பார்த்து வணக்கம் சொன்னவள் மறந்தும் பாபு இருக்கும் பக்கம் மட்டும் கண்மணி திரும்பவில்லை.
அவனோ தன்னவளைதான் இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பொழுது அன்பரசனோ தனது மகளை பார்த்தவர் அம்மாடி கண்மணி தம்பியை தான் உனக்கு பேசி முடிச்சிருக்கு.இன்னும் மூணு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்னு இருக்கு.ஏன்னா மே மாசம் தானே உங்களுக்கு ஸ்கூல் லீவு...நீ என்ன சொல்றமா என்றார்.
உங்களோட விருப்பமே என்னுடையதுபானு தனது சம்மதத்தை சொன்னாள்.அப்புறம் என்னங்க பொண்ணுக்கு புடிச்சிருச்சு கையோடு ஜாதகத்தை பார்த்துடலாமே என்கவும்,எங்க பையனுக்கு ஜாதகம் இல்லைங்களே இப்ப என்ன பண்றதென்று ராணி கேட்க,அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை...
பொறந்த தேதியும் நேரமும் சொன்னாக்க கணிச்சுடுவாங்க,நம்ம பங்காளி வீட்டில் ஜாதகம் பார்க்கிறவங்க இருக்காங்க அவங்கள வர சொல்லி பார்த்துடலாமனு செல்லதுரை சொல்ல,இன்னைக்கு நாள் நல்லா தான் இருக்கு தொடர்ந்து இரண்டு முகூர்த்தம் இல்லையா...
அப்போ இன்னைக்கே அதையும் பாத்துரலாமேயென்ற அன்பரசன் தனது போனை எடுத்து பக்கத்து தெருவில் இருக்கும் உறவினருக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னார்.
சுத்தி எல்லாருமே ஒண்ணுக்குள்ள ஒண்ணா தான் இருக்கீங்க போலனு அந்தோணி கேட்க,ஆமாங்க இங்கு முக்காவாசி பேரு எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு தான்.
இதோ இருக்காரே மச்சான் என்னோட சொந்த அத்தை பையன் தான். மச்சானுக்கு தான் என்னுடைய ஒரே தங்கச்சி வீராயியை கல்யாணம் பண்ணி கொடுத்தோம்.மச்சானோட தம்பி பொண்ணு தான் புவனா...
புவனாவோட சின்னம்மா பொண்ணு தான் ரஞ்சனி என்க...அப்படிங்களானு அந்தோணியும் ஆச்சரியமாக கேட்க...ஆமாங்க..சொந்த பத்தம் விட்டு போயிடக் கூடாதுன்னு நாங்க இப்படித்தான் கல்யாணம் பண்ணிக்கிறது
அதேபோல என்னோட ஒரே பொண்ணை தான் மச்சானோடு பெரியண்ணன் பையன் செல்லதுரைக்கு கொடுத்தது..
எங்களுக்கு அடுத்தது பிள்ளைகள் தலைமுறை வரும்போது மச்சான் வகையராவில் எல்லாருக்கும் பையன் தான்.கண்மணிய பெரியவன் நெடுஞ்செழியனுக்கு கட்ட முடியாது.
வயசுல பெரியவன் அதனால் தான் எங்க அம்மா வழியில கஸ்தூரியை கட்டியது.
சரி செழியனுக்கு கட்டலாம்னு இவங்க எல்லாரும் ஆசைப்பட்டாங்க.கடவுள் எப்படி நடத்தி வைப்பாரோ அப்படித்தானே நடக்கும்.இன்னைக்கு புது உறவு உங்க மூலமா எங்க குடும்பத்துக்கு வந்துருப்பது சந்தோஷம் என்றனர்.
ஏன் மாமா நம்பளே பேசிக்கிட்டா எப்படி?,கண்மணியும் பாபுவும் பேசிக்க சொல்லுங்களேன்.ஒருவரையொருவர் பேசி தெரிந்துப்பாங்களேனு செழியன் சொல்ல,அப்பாடா பங்காளி ரொம்ப நல்ல காரியம் பண்ணுனடா.
எல்லாம் என்னை பின்னாடி கவனிக்கணும் அதற்காகத்தானென்று செழியன் சிரிக்க,கண்டிப்பாக கவனிக்கிறான்டா என்று பல்லை கடித்துக் கொண்டு சொல்ல,தாரலாமா பேசட்டும்.
அதான் பேசி முடிச்சிட்டோமேனு வீரையன் தாத்தா சொல்ல,பாபுவோ ஓரமாய் நிற்பவளிடம் வா என்று கண்ணை அசைத்து விட்டு அவர்கள் பார்வையிலிருந்து சற்று தள்ளி போய் நின்று கொண்டான்.
அவளும் எதுவும் சொல்லாமல் பின்னாடியே வந்து நிற்க,ஏண்டி ஒருத்தன் கல்யாணம் பண்ணிக்கலாமா என்று கேட்டானே ஆமா இல்லையான்னு பதில் சொல்லணும் .
அதை விட்டுட்டு இரண்டு நாளா வாயில என்னடி கொழுக்கட்டையா வச்சிருக்கனு பாபு கேட்க, திடீரென்று இப்படி உரிமையாக வாடி போடி என்று பேசுவான் என்பது எதிர்பாக்காதவளோ அதிர்ந்து போய் பார்த்தாள்.
தன்னவளின் பார்வையை உணர்ந்தவன் முட்ட கண்ண வச்சுட்டு என்னடி முழிச்சிட்டு இருக்கிற?படுத்துறடி....எந்த பெண்ணு மேலையும் இப்படி ஒரு எண்ணம் வந்தது கிடையாது.
இந்த திருட்டுமுழிகாரி மேல வந்துடுச்சு என்கவும்,இவ்வளவு நேரம் அதிர்ந்து பார்த்தவளோ இப்பொழுது முறைத்தாள்.
ரொம்ப முறைக்காதடி..
அங்கு துபாயில் என்கூட தான் குடும்பம் பண்ணனும்டி.அப்போ உன்ன வச்சிக்கிறேன் டி என்றவன்,இதோ பாரு டி சீரியஸா கேட்கிறேன் உண்மையிலேயே என்னை உனக்கு புடிச்சிருக்கா?,இல்லையா?தயவு செய்து அதுக்கு மட்டும் பதில் சொல்லுடி?
யோவ் மட சாம்பிராணி பிடிக்காமதான் இவ்ளோ அலங்காரம் பண்ணிட்டு வந்திருக்கேனா மாங்கா மடையா?விருப்பம் இல்லைனா நான் ஏன் உன் கூட பேச தனியா வரப்போறேன் அந்த அறிவு கூட உனக்கு இல்லையானு அங்கிருந்து சென்று விட்டாள்..
எல்லாரும் இங்க இருக்கும்போது ஷமீராவும் கஸ்தூரியம் அங்க இருக்காங்களே அவங்களையும் கூட்டிட்டு வந்துருங்கப்பா நல்ல காரியம் பேசிட்டு இருக்கும்போது அவங்களும் இருக்கணுமென்க,நான் போய் கூட்டிட்டு வரேன் என்ற செழியனும் அங்கிருந்து சென்றான்.
அண்ணியென்று வாசலிலிருந்து குரல் கொடுக்க உள்ளே வா செழியா இங்கதான் இருக்கிறோம் என்றார். உங்களையும் இவளையும் அங்கு தாத்தாவிற்கு வீட்டுக்கு வர சொல்றாங்க என்க... சமைச்சிட்டு இருக்குறோமோ தம்பி...
என்னவாம் அங்கே என்க... கண்மணிய இவளோட மாமா பையனுக்கு பொண்ணு கேட்டதுக்கு எல்லாரும் சம்மதிச்சுட்டாங்க.
ஜாதகம் பார்ப்பதற்கு காசிநாதன் சித்தப்பாவும் வருது.அப்படியா....ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கின்ற போல உங்க விசேஷத்துக்கு வந்து அவங்களுக்கும் பொண்ணு பேசி முடிச்சிட்டாங்களா சூப்பர் என்கவும்,ஷமீராவுக்கோ ஆனந்த அதிர்ச்சியாக இருந்தது..
அவளின் முகத்தைப் பார்த்த செழியனோ ஒருவேளை கண்மணியை பாபுக்கு கல்யாணம் பண்ணி வைக்க இவளுக்கு பிடிக்கவில்லை போலயென்று அவனே நினைத்துக் கொண்டு மனைவியை பார்த்து முறைத்து விட்டு சீக்கிரம் வாங்க...
இருவரில் ஒருவரை முதலில் போய் வீட்டில் விட்டுவிட்டு வருகிறேன் என்றவாறு வெளியே போனான். விளையாடிக் கொண்டிருந்த கவினை தூக்கிக்கொண்ட கஸ்தூரியோ,அந்த பொரியல்ல தண்ணீர் சுண்டியதும் அடுப்பை ஆஃப் பண்ணிட்டு வரேன்.
நீ முதல்ல போ...உன்னை விட்டு வருவதற்குள் அது ஆயிடும் என்கவும்,இல்லக்கா நீங்க கவினோடு பஸ்ட் போங்க,நான் இதை முடிச்சுட்டு வரேனென்றாள்..