• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
திருச்சி மகி ஆபிஸ்:

மதியம் லஞ்ச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சார் உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் தப்பா நினைக்க மாட்டீங்களேனு நாதன் கேட்க, சாப்பிட்டுக் கொண்டிருந்த மகியும் கேளுங்க நாதன்.வேலை செய்கிற நேரத்தில் தான் உங்களுக்கு மேலதிகாரி மற்ற இடத்தில் நம் இருவரும் நல்ல பிரண்டு தான்.

உங்க குணம் எனக்கு தெரியும் சார் வெளியில பலா தோல் போல உள்ளே அதன் சுளையைப் போல என்கவும் இப்பொழுது எதுக்கு இந்த முகஸ்துதி?.

நீங்க கேட்க வேண்டியதை கேளுங்க நாதன் என்று சிரித்துக் கொண்டே மகி சாப்பிட,சார் நானும் ரெண்டு மூணு நாளா உங்களை பாத்துட்டு இருக்கேன் உங்க முகமே சரியில்லை..ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க என்னால முடிஞ்சா நான் அதை சால்வ் பண்ணுகிறேன்.

நாதன் இப்படி கேட்பாரென்று எதிர்பார்க்காத மகியோ ஒரு நொடி அமைதியாக இருந்தவர் ஆமா நாதன் மிகப்பெரிய பிரச்சனைதான் அது நிச்சயமா உங்களால சால்வ் பண்ண முடியாது என்றார்...

சார் பிரச்சனை பெருசா சிறுசோ அடுத்த விஷயம் முதல்ல என்னன்னு சொல்லுங்க.என்னால் முடிஞ்சா கண்டிப்பா உங்களுக்கு நான் உதவி செய்வேன்.

வெறும் மேல் அதிகாரியாக மட்டும் கடந்த பத்து வருடமாக நீங்க எங்ககிட்ட பழகவில்லை.எனக்கு ஒரு மூத்த அண்ணன் போல தான் எல்லா நேரத்திலும் சிறந்த அறிவுரையை சொல்லிருக்கீங்க சார் அந்த உரிமையில் தான் கேட்கிறேன் வேற ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க என்றார்..

நான் அப்படி எதுவும் நினைக்கல நாதன் என்றவர் பின்னர் தனது மகள் கல்யாணம் பண்ணிக் கொண்ட விஷயத்தையும் தற்போது எஸ்தர் வீட்டை விட்டு போனதையும் சொல்லி வருத்தப்பட்டார்.

இப்படி ஒரு விஷயம் இருக்குமென்பதை நாதன் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை என்பதால் என்ன சார் சொல்றீங்களென்று அதிர்ந்து போனார்..

சிறிது நிமிடங்கள் கடந்திருக்க சார்
இந்த காலத்து பொண்ணும் பையனும் அவங்க வாழ்க்கையை அவங்களே தேர்ந்தெடுக்குறாங்க சார்.சிலது நல்லதா போகுது சிலது தப்பா போகுது. பொண்ணு விஷயத்தை ஒன்னும் பண்ண முடியாது அது அவங்களோட வாழ்க்கை ஆனா நீங்க கொஞ்சம் யோசனை பண்ணிருக்கலாம் சார்.

வனிச்சூர்:

அப்புச்சி அப்புச்சி ஐயோ அப்புச்சி எவ்ளோ நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன் உனக்கு காதுல விழுதா இல்லையானு செழியன் தனது சின்ன தாத்தாவிடம் கத்த,வீரையனோ மாடுகளுக்கு புல் எடுத்து போட்டுக் கொண்டிருந்தாரே தவிர,தனது பேரன் கூப்பிடுவதை காதில் வாங்கவேயில்லை...

ஏன் அப்புச்சி இப்ப நான் என்ன கொலையா பண்ணிட்டு வந்துருக்கேன்? எனக்கு புடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டேன் அது என்ன தெய்வ குத்தமா?

உம்பாட்டுக்கு மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்?

பேரனின் கெஞ்சலையும் கணவரின் முறுக்கலையும் பார்த்த வீராயி பாட்டியோ ஏன்யா எம்புட்டு நேரமா செழியன் கூப்புடுறான்,வாயை திறந்து பேசினால் உன் வாய்ல இருக்கும் பவளம் கொட்டிடுமோ?.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தாத்தாவோ மனைவியின் பக்கம் திரும்பியவர் ஏண்டி...அவ்வளவு திமிரா?.எவ்வளவு அதப்பு இருந்தா எங்க அய்யன் பேர சொல்லுவனு கோவமாக பார்த்தார்.

ஏய்யா கூப்பிட பேர் வச்சிட்டு என் அய்யன் பேரு நொய்யன் பேருனா?.

வேற எப்படி தான்யா கூப்பிட சொல்லுற??

அப்பாயிஈஈஈ...

இப்போது ரொம்ப முக்கியம் என்றவன் யோவ் தாத்தா என்க... இங்க பாருடி எவனும் தாத்தா நோத்தானு கூப்பிட வேண்டாம்.போய் அவன் அவன் வேலையை பார்க்க சொல்லு.

நான் கூப்பிடாமல் மேல தெரு வெள்ளையம்மா பேரன் கூப்பிடணுமோ என்று செழியன் கேட்க.... அடேய் என்று அதிர்ந்து போய் திரும்பிய தாத்தாவோ தனது மனைவியை பார்க்க அவரோ கணவரை தான் முறைத்துக் கொண்டு நின்றார்....

ஓஓஓஓஓ இப்படியா சங்கதி?.

அப்போ இன்னும் அவ கூட தான் இந்த நொய்யா சுத்திட்டு கிடக்குறீரோ?

எதேஏஏஏ... அடியேய் அவள் கிட்ட நான் பேசியே பத்து நாள் ஆகுது டி...அவ எங்கே ஊர்ல இருக்கா???மவள் சாந்தி வீட்டுக்கு போய் பத்து நாள் ஆகுதே என்று ஒரு ஆர்வத்தில் உலரிகொட்ட.

ஹா ஹா ஹா என்று சிரித்த செழியன் அப்புச்சி உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றான்...

அடப்பாவி குடி கெடுத்தவனே ஏன் டா இப்படி?நான் ஒன்னும் கோவமா இல்லை நீ போய் சாப்பிடு போ போ என்று பேரனை விரட்ட,யோவ் இப்ப எதுக்கு அப்புவை விரட்டுற?.கொஞ்சம் கூட வெக்கமாக இல்லையா?

புள்ளைக்கு சம்பந்தம் போட்டு அதோட பேர புள்ளைய தூக்கியாச்சி இன்னமும் உன் முன்னால் காதலிய நினைச்சிட்டு இருக்கியே நீயெல்லாம் பஞ்சாயத்துகாரனா?

இவர் ரொம்ப யோக்கியர் போல இதுல என் பேரனை நொட்டணம் பேசுறது?

இந்தா என் அண்ணன் கிட்ட போறேன்யா இதுக்கு ஒரு முடிவு தெரியாமல் இந்த வீட்டு படியேற மாட்டாள் இந்த வீராயி என்றவாறு கோவமா திரும்பி போக....

அடியேய் கமலாஆஆஆ...

ச்சை... ஏய் வீராயி செத்த நில்லுடி...

சும்மாவே உன் அண்ணன் மணி கணக்கா பேசுவான் டி.இப்போது இது தெரிஞ்சால் அவ்வளவு தான்...காது ரெண்டும் அறுந்து கீழ விழுந்துடும்..

ஏற்கனவே வெள்ளையம்மா ஒருநாள் என்னை மாமானு கூப்பிட்டான்னு அருவாளை எடுத்து வெட்ட வந்தான் டி. இந்த வயசுல நான் பஞ்சாயத்துல போய் நின்னாக்க என் மானம் என்ன ஆவது செத்த நில்லடி என்று கூப்பிட்டுக் கொண்டு வீரையன் பின்னாடி போக ஏன் அப்புச்சி அப்பயே ஒழுங்கா என்கிட்ட பேசி இருந்தாக்க இந்த வினை உனக்கு வந்திருக்குமா?.

நல்லா வேணும் வாங்கி கட்டு என்று செழியன் சொல்ல சண்டாள பாவி ஏண்டா இப்படி பண்ணுனனு பேரனை முறைத்து பார்த்தவர் ஒழுங்கு மரியாதையா போய் உன் அப்பாயியை தடுத்து நிறுத்துடா.

உன் தாத்தன் பேசுவது சத்தியமா தாங்க முடியாதுடானு தலையில் கை வைக்க அப்போ ஒழுங்கா முதல்ல நீ என்கிட்ட பேசு என்றான்.

ஆமா நீயும் நானும் புருஷன் பொண்டாட்டி இப்ப ரெண்டு பேரும் பேசிக்கலனா வீட்ல சோறு ஆகாது பாரு போடா என்றவர் மனைவியை தடுத்து நிறுத்துவதற்காக தனது வயதையும் மறந்து வேகமாக ஓடினார்...

வந்த வேலை சிறப்பாக முடிந்து விட்டது ஹா ஹா என்று சிரித்தவனோ தனது வீட்டிற்கு வந்தான்.அப்பொழுது கஸ்தூரியோ கவினை தூக்கிக் கொண்டு வெளியே வந்தாள்...

அப்புகுட்டி சாப்டீங்களானு தனது அண்ணன் மகனை கேட்க,குழந்தைக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை தனது சித்தப்பாவை பார்த்து பொக்கை பல் தெரிய சிரித்தது..

என்னங்கண்ணி வீட்டுக்கு கிளம்பிட்டீங்களா என்க,ஆமாங்க தம்பி உங்க அண்ணன் பேங்க்கு போறாராம் பாஸ்புக் எடுத்து வைக்க சொன்னாரு என்கவும் சரி என்றபடி வீட்டிற்குள் வந்தவன் அம்மா என்கவும் வீடே அமைதியாக இருந்தது.

எங்க யாரையுமே காணும் என்றவன் தோட்டத்து கதவு வழியாக வெளியே வந்து பார்க்க ஷமீராவோ மருதாணி பறித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஓய் என்று குரல் கொடுக்க புருஷனின் குரலை கேட்டவள் திரும்பிப் பார்க்க என்னடி பண்ணிட்டு இருக்க?.
ஏன் பார்த்தா கண்ணு தெரியலையானு தனது வேலையை தொடர்ந்தாள்..

வீட்டில் யாரையுமே காணுமே என்க,எல்லாரும் தாத்தா வீட்டுக்கு போயிருக்காங்க என்கவும், தாத்தா விட்டிருக்கா?ஏன்டி என்றான்.தெரியாது என்றவளிடம் சரி மனுஷனுக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது போடுவியா போட மாட்டியா?.

இதோ வரேன் என்றவள் பறித்த மருதாணியை எடுத்துக்கொண்டு பூமிக்கு அதிராமல் பதுமையாய் புடவையில் எழில் கொஞ்சும் அழகோடு நடந்து வருபவளையே ரசித்துப் பார்த்தான்.

கணவரின் பார்வை தன்னை ரசிப்பதை உணர்ந்தவள் கீழே குனிந்து கொண்டே வர தரையில் என்னத்த போட்ட தேடிட்டு இருக்க என்றான்.தன்னை தான் கிண்டல் பண்ணுகிறான் என்பது புரிந்தவள் எதுவும் சொல்லாமல் அவனைத் தாண்டி போக...

ஏண்டி குத்தகல்லு போல இங்க ஒருத்தன் நின்னுகிட்டு இருக்கேன் உன் பாட்டுக்கு போனா என்னடி அர்த்தம் என்றபடியே மனைவியை பிடித்து இழுத்தான்..

ஐயோ என்ன பண்றீங்க யாராவது பாத்தா தப்பா நினைக்க போறாங்க கதவு வேற திறந்து இருக்குங்க.

உனக்கு அது தான் பெரும் கவலையா இப்ப பாருனு மனைவியை கையில் ஏந்தி கொண்டு போக அய்யோ இறக்கி விடுங்களென்று கால்களை உதறி இறங்க முயன்றாள்..

அடியே நீ இப்படி குதிச்சிட்டு இருந்தால் நாம ரெண்டு பேரும் தான் டி கீழே விழ வேண்டும் என்கவும் அப்ப நீங்க என்னை கீழே இறக்கி விடுங்கன்னு கத்திக்கிட்டே இருக்கவும் இம்சை பிடிச்சவளென்ற இறக்கி விட்டவன் சரி சாப்பாடு எடுத்து வை என்று கையை கழுவச் சென்றான்..

ஷமீராவும் ஹாட் பாக்ஸில் இருந்த டிபனை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிளில் வைக்க செழியனும் வந்து உட்கார்ந்தான்.

நீ சாப்பிட்டியா டி?

இன்னும் இல்லை என்றாள்.சாப்பிட வேண்டியதுதானே என்கவும் இதோ சாப்பிடணும் என்றவளை பார்த்தவன் புருஷனுக்காக வெயிட்டிங்கோ என்று சிரித்தான்..

அப்படி எல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.எனக்கு பசிக்கல அதனால் இன்னும் சாப்பிடல. நீங்கள் முதல்ல சாப்பிடுங்களென்று சூடான இட்லியை வைத்து சாம்பார் ஊற்றி சட்னி வைக்க, அதை என் முகத்தை பார்த்து சொல்லுடி கீழ குனிஞ்சுகிட்டே சொன்னா?அங்கயா உன் புருஷன் உட்கார்ந்து இருக்கான்.

எங்க பார்த்து சொன்னா என்னவாம்? அதான் உங்களுக்கு காது நல்லா கேட்குமே வேற என்ன என்றாள்...

ரொம்ப நாள் ஆசை இன்னைக்கு நிறைவேறிடுச்சிடி.இந்த வீட்ல நீ பரிமாற நான் உன்னை ரசித்துக் கொண்டே சாப்பிடணும்னு என்று சொல்லிக் கொண்டே இரண்டு வாய் சாப்பிட்டவன் ஒரு வாய் உணவை தன்னவளுக்கு நீட்டினான்..

கணவனை நிமிர்ந்து பார்க்க கண்ணடித்து சாப்பிடு என்று சொல்லவும் அதை வாங்கியவளை இழுத்து தன் மடியில் உட்கார வைத்தவன் கொஞ்சிக் கொண்டே சில பல சேட்டைகளும் செய்தபடி அவளுக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு முடித்தான்....
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
பொதுவாக பேசிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் அந்தோணியே வந்த விஷயத்தை ஆரம்பித்தார்.ஒரு முக்கியமான விஷயத்திற்காக வந்திருக்கேன் என்க

சொல்லு பா என்ன விஷயம் என்று தம்புசாமி தாத்தா கேட்க அங்கிருந்த தனது மகனை திரும்பிப் பார்த்தவர் பாபு எங்களுடைய ஒரே பையன்.இன்ஜினியரிங் படிச்சிட்டு துபாய்ல வேலை பாத்துட்டு இருக்கான்..

கை நிறைய சம்பளம்...வீடு வாசல் எல்லாம் சொந்தமா இருக்கு.என்னோட பூர்வீகம் பூம்புகார் பக்கத்துல..ஆனா நாங்க செட்டில் ஆனது என்னோட மாமியார் ஊருல தான்..

மாமியார் வீட்டில் இல்லை..மாமனார் ஊருல தனியா இடம் வாங்கி வீடு கட்டிட்டு அதில் இருக்கிறோம். என்னோட வேலை விஷயமா நான் சோழனூர்ல செட்டில் ஆயிட்டேன்.

உங்க பொண்ணு கண்மணியை எங்க பையனுக்கு பொண்ணு கேட்கலாம்னு வந்திருக்கேன் என்க...இது அவர்களுக்கு மட்டுமல்ல பாபுவுக்கும் பெரிய ஷாக்காக தானிருந்தது.

என்னடா நடக்குதென்று அருகிலிருந்த பரத்திடம் கேட்க, மானங்கெட்ட பயலே அதுதான் 24 மணி நேரமும் அந்த புள்ள மேலே கண்ண வச்சுட்டு இருந்தியே...

அது மற்றவர்களுக்கு தெரியாதா?

மனுஷன் வந்த அப்பவே கண்டுபிடிச்சிட்டாருடா..கூப்பிட்டு விசாரிச்சாரு நானும் விஷயத்தை சொல்லிட்டேன் என்கவும்,அடப்பாவி சொல்லவே இல்லைனு பாபு கேட்க,நீ கேட்கவே இல்லையே மச்சினு கூலாக சொன்னான்.

வெளியில வா உன்ன தூக்கி போட்டு மிதிக்கிறேன் என்று பல்லை கடிக்க, நான் வந்தா தானே. மாமா கூட சுத்திட்டு இருப்பேன் நீ போடா என்ற பரத் வேறு பக்கம் திரும்பி கொண்டான்.

அந்தோணி திடீரென்று இப்படி கேட்பார் என்பதை எதிர் பார்க்காதவர்களுக்கு சிறிது அதிர்வு தான் வந்தது.
அப்பொழுது அன்பரசனோ அது வந்து பொண்ணுக்கும் புள்ளைக்கும் வேற ஒரு இடத்துல ஒரே வீட்டில் சம்பந்தம் பேசிட்டோமே என்று சொல்லும் போது அவரின் போனுக்கு கால் வரும் சத்தம் கேட்டது.

செத்த இருங்க பேசிட்டு வந்துடறேன் என்று அட்டென்ட் பண்ண,அவர்கள் சம்பந்தம் பேசிய இடத்திஇருந்து தான் கால் பண்ணிருந்தார்கள்.

வணக்கங்க என்க..அன்பரசனும் வணக்கம் என்றவர் சொல்லுங்க என்று பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு அவர்கள் அந்த பக்கம் பேச தயங்குவது புரிந்து சொல்லுங்க என்ன விஷயம் என்றார்.

தப்பா நினைச்சுக்காதீங்க உங்க கூட எங்களால சம்பந்தம் பண்ணிக்க முடியாத சூழ்நிலை வந்திருச்சு.அதாவது என் பையன் அவன் கூட படித்த பொண்ண காதலிக்கிறானாம்.

அந்த பொண்ணை தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறாங்க நானும் எவ்வளவோ பேசி பார்த்தேன் அவன் இதற்கு சம்மதிக்கலைங்க...

பிள்ளைகளோடு விருப்பம் தானே முக்கியம்னு நானும் சம்மதிச்சுட்டேன்.உங்கள் குடும்பத்தில் இருந்து பொண்ணும் பையனும் எடுக்க முடியலைனு மனசு வருத்தமா இருக்குங்க என்கவும்,பரவால்ல விடுங்க.

யாருக்கு யார் கூட வாழணும்னு கொடுத்து வச்சிருக்கோ அது அங்கதாங்க அமையும் என்ற அன்பரசனுக்கு இப்பொழுது அந்தோணிக்கு சம்மதம் சொல்வதில் எந்த தடங்களும் இல்லாமல் போனது...

அவர்களிடம் போனில் பேசிய விஷயத்தை சொல்லவும் பிறகு என்னங்க தாராளமாக உங்க பொண்ணை கட்டி குடுங்க பெத்த பொண்ணு போல பார்த்துப்போமென்று சொல்லலை.

ஆனால் எங்கள் மருமகளை நல்லபடியா பார்த்துப்போம்.மகளுக்கான இடத்தை மகள் தான் நிரப்ப முடியும். மருமகளிடத்தை மருமகளால் தான் நிரப்ப முடியும்.

நீங்க நினைக்கலாம் நாங்க கிறிஸ்டியன் உங்க பொண்ணு ஹிந்து அது ஒத்து வருமா என்று,மனசு தாங்க எல்லாத்துக்கும் காரணம்.

அதுக்கு என் தங்கச்சி பொண்ணு ஒரு சிறந்த உதாரணமென்று அந்தோணி வெளிப்படையாக சொல்ல,அவர்களுக்கு மறுத்து பேச எந்த வழியும் இல்லாமல் போனது.

இவர்கள் பழகிய விதமும் அன்பரசன் குடும்பத்தினருக்கு பிடித்தது என்பது மறக்க முடியாத உண்மை.இருந்தாலும் கண்மணியை ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே, தாராளமா கேளுங்க வாழ போறது என் பையனும் உங்க பொண்ணும் தான்.

நீங்க பேசிட்டு ஒரு நல்ல முடிவா சொல்லுங்க...என் பையன் மூணு மாசம் லீவ்ல தான் வந்துருக்கிறான். கல்யாணத்தை முடிச்சு கையோட மருமகளையும் அவன் கூட அனுப்பலாம்னு இருக்கிறோம் என்க..என்னடா எங்கப்பா ஷாக் மேல ஷாக் கொடுக்கிறார் என்ற பாபுவோ அதிர்ந்து போய் தந்தையை பார்த்தான்.

டெல்லி..

மணியாகிடுச்சி இன்னும் தூங்க வராமல் இவர் என்ன பண்ணுறார் என்ற ரூபாவோ எழுந்து போய் பால்கனி கதவை திறந்து பார்க்க,தீபனோ தூரத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந்தான்...

என்ன மேன் வானத்தில் இருக்கும் ஸ்டார் எத்தனை என்று எண்ணும் போட்டியில் கலந்து கொண்டாயா என்று ரூபா கேட்க,ஆமா டி என்றான்..

கணவனின் குரல் வித்தியாசமாய் இருப்பதை உணர்ந்தவள் அவனோடு நெருங்கிப் போய் நின்று இடுப்போடு அணைத்தவளோ என்னாச்சி செல்லம் என்க...மனைவியின் அணைப்பில் அவள் பக்கம் திரும்பியவன்,உன் அண்ணன் இன்னைக்கு யாருக்கு ஆபரேஷன் பண்ணினானு தெரியுமா என்க...

டேய் என் வாய்ல எதாவது வந்துட போகுது.ஹாஸ்பிடல் போறது நீயும் அவரும்..வீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து யாருக்கு ஆபரேஷன்னு கேட்குறியே பைத்தியமாயா என்றவளுக்கு அந்த அமர்நாத் பேத்திக்கு தான் ருத்ரன் சர்ஜரி பண்ணினான் டி என்றதும்,கணவனிடம் இருந்து விலகியவள் முகமோ எரிமலை போல் தகித்தது...

மனைவியை பார்த்தவன் ஆமாம் டி வேற வழி இல்லாம பண்ண வேண்டியதாக போயிடுச்சி என்றதும் கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்திக் கொண்டவள் ஒரு குழந்தையின் உயிர் என்கும் போது அவள் கோபமும் பாதி குறைந்தது.

அவனைப் பார்த்தும் அண்ணன் எப்படி இதை பண்ண சம்மதம் சொல்லுச்சென்று கணவனிடம் கேட்க,ஆபரேஷன் தியேட்டருக்கு போற வரைக்கும் யாருக்கு ஆபரேஷன் என்பது ருத்ராவுக்கு தெரியாது ரூபா...

எனக்கு இந்த விஷயத்தை சொன்ன உடனே அவன் தமிழ்நாட்டில இருக்கிறான் கண்டிப்பா வரமாட்டான்னு சொன்னேன்.ஆனா அவன் பதவியை யூஸ் பண்ணி சிங் கிட்ட என்ன சொன்னானோ தெரியலை டி.

அவரே கால் பண்ணி எனக்கு சொல்ல என்னால் முடியாதுனு சொல்லிட்டேன். இருவரில் ஒருத்தர் அந்த குழந்தைக்கு சர்ஜரி பண்ணனும்னு பிடிவாதமாக இருந்தார்.

நானே பேசுகிறேன்னு நேரடியாக உன் அண்ணனுக்கு கால் பண்ணி வர சொல்லிருக்கிறார் டி என்கவும்,ஏன் டா இவ்வளவு நடந்துருக்கு ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று முறைத்தாள்.

இதில் என்னத்த சொல்றது சொல்லுடி?இன்னைக்கு எவ்வளவு வெயிட் தூக்கினான் தெரியுமா?லேசா பிசகியிருந்தாலும் கழுத்து தோள்பட்டை போயிருக்கும் டி...

அவனுக்குள்ள கோபத்தை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பயமா இருக்குடி செல்லம்.பேசாமல் டெல்லியை விட்டு வேற எங்கேவாது போயிடலாமா என்று மனைவியின் கையை பிடித்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டு தீபன் கேட்க...

இதுவரை தன்னவன் இப்படி எல்லாம் பேசியதில்லை என்பதை உணர்ந்தவள்,இப்ப என்ன ஆச்சு செல்லம்?எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க அதெல்லாம் ஒன்னும் நடக்காது ...

தேவையில்லாமல் எதுக்கு மனச போட்டு குழப்பிக்கிறீங்க என்று சொன்னாலும் அவளுக்கும் அந்த அமர்நாத்தை துண்டு துண்டாக வெட்டி கொள்ளணும் போல் ஆத்திரம் இருந்தது தான்...

இந்த ஊரை விட்டு போய்ட்டா மட்டும் நடந்தது எதுவும் இல்லைன்னு மாறிடுமா இல்ல மனசுல இருக்குற எரிமலைதான் தண்ணி ஊத்தி அணைச்சபோல ஆகிடுமா சொல்லுங்க?

எங்க போனாலும் அதை பேஸ் பண்ணி தான் ஆகணும்..மனைவி சொல்வது நியாயமானது என்பதை புரிந்து கொண்டவன் எனக்கு உன் அண்ணனை நினைக்க தான் பயமா இருக்குடி.

கோவத்தில் ஏதாச்சும் தவறான முடிவு எடுத்துடுவானோனு என்று அதிர்வாக சொல்ல,அப்படி எல்லாம் ஒன்னும் பண்ணாதுயென்றாள்...

அப்படி சொல்லாத ரூபா...இன்றைக்கு அவனை ஜிம்மில் பார்த்த போது எனக்கே ஒரு நிமிஷம் பயமா இருந்தது தெரியுமா அந்த கண்ணுல அவ்ளோ கொல வெறி இருந்தது...

நீங்க சொல்றது என்னால புரிஞ்சுக்க முடியுது.ஆனா நம்ம யாருன்னு அந்த அமர்நாத்துக்கு தெரியாது தானே என்கவும்,ஆமாடி கண்டிப்பா அவனுக்கு தெரியாது என்றான்...

பிறகென்ன என்று கணவனின் கையை பிடித்து ரூமுக்கு அழைத்து போனவள் எதையும் யோசிக்காமல் படுங்க என்று சொல்லிவிட்டு லைட்டை ஆஃப் பண்ணியவள்,இப்ப இருக்கும் மனநிலைக்கு கணவனை இப்படியே விட்டால் அவன் இரவு முழுவதும் தூங்காமல் அதை பற்றியே யோசிப்பான்...

அப்படி விடக்கூடாதென்று நினைத்தவள் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் என்று சொல்ல,என்னடி என்றான்.அது வந்து எனக்கு எனக்கு என ரூபா இருக்க...ஏய் என்னன்னு சொல்லுடி.

எதுக்கு டி இப்படி கடுப்பேத்துற என்கவும்,அது ஒன்னும் இல்ல...நம்மளும் எங்கேயாவது வெளியே போயிட்டு வரலாமா என்று ரூபா கேட்க..ஆமாடி.

நானும் ரொம்ப நாளா நினைச்சுட்டு தான் இருக்கேன் டி உன்னை கூட்டிட்டு போகணுமனு.அதற்கான வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதுடி.

அடுத்த வாரத்தில் ஒரு ஒன் வீக் லீவ் எடுத்துக்கிறேன் அப்ப போகலாமா என்க,ம்ம் போகலாமே என்று சொல்லியவள் கணவனின் கன்னத்தில் முத்தம் வைக்க மனைவியின் செயல்களை இப்பொழுது தனதாக்கிக் கொண்டவன் கணவனாய் தன் காதல் மனைவியிடம் தேடல்களை தொடங்கினான்.

உலகமே அழிந்தாலும் நான் வந்தே தீருவேனென்று சூரியன் கிழக்கே உதயமாகியது.புது இடம் என்பதால் எஸ்தருக்கு அவ்வளவாக தூக்கம் வரவில்லை.

வழக்கத்தை விட முன்னவே எழுந்தவர் குளித்து உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவர் இரவு விளக்குகளை அணைத்துவிட்டு கிச்சனிற்குள் சென்று பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து சுட வைத்துக் கொண்டிருக்கும் போது குட் மார்னிங் மா என்கும் குரல் கேட்க குட் மார்னிங் டா என்றார்.

என்னம்மா நல்லா தூங்குனீங்களா?புது இடம் தூக்கம் வந்திருக்காது என்கவும் ஆமா மா போக போக பழகிடும் என்றார்.

பேசிக்கொண்டே டீ வைத்தவர் இருவருக்கும் டீயை எடுத்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது,ஜிம்முக்கு போவதாக ருத்ரன் சொல்லிக் கொண்டு சென்றான்.

காலையில் என்ன டிபன் பண்ணலாம் என்று எஸ்தர் கேட்க நீங்க இருங்க மா நான் குக் பண்ணுகிறேன் என்கவும், இருக்கட்டும் என்ன வேணும் சொல்லுங்க என்க..உங்களோட விருப்பம் மா..நீங்கள் எது செய்தாலும் சாப்பிடுவோம் என்றாள்..

இட்லி மாவு எல்லாம் இங்கு கிடைக்குமா என்று கேட்க,கிடைக்கும் மா.கீழ் ப்ளோர்ல தமிழ் பேமிலி இருக்காங்க அவங்க சேல்ஸ் பண்றாங்க.நல்லா இருக்கும் அங்க தான் நாங்க வாங்கிப்போம் என்று ஜூலி சொல்லவும், அப்படியா....

அப்ப என்ன கூட்டுட்டு போய் அந்த பிளாட்டை காட்டு.எப்பயாவது தேவைப்பட்டால் வாங்கிக்கிறேன். மிச்சபடி மாவெல்லாம் வீட்டுல அரைச்சிக்கலாம்.சரிங்க மா இன்னைக்கு நாம் கடைக்கு போயிட்டு மளிகை பொருள் வாங்கிட்டு வந்துடலாமே என்றாள்


வீழ்ந்தேனடி...
 
Member
Joined
May 9, 2025
Messages
99
Grandpa and Perran fun super . Hope that Tamil family is not close to Esther.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top