• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்:

ஏத்தா எஸ்தரு எதுக்கு புள்ள அழுகுற என்றவாறு உள்ளே வந்தார் எஸ்தர்- அந்தோணியின் சித்தியான சாரதா.

அய்யோ அம்மா....இந்த பாவி மகள் பண்ணிய காரியத்தை என்னனு நான் சொல்லுவேன்.உங்க மருமவன் வந்தா என்னை கொன்னு போட்டுறுவாரேயென தலையில் அடித்துக்கொண்டு எஸ்தர் அழ...

ஏ ராணி மொதல்ல கதவை சாத்துடி..

ஊர்ல இருக்கவங்களுக்கு நீங்களே படத்தை போட்டு காட்டுறீயேலோனு சத்தம் போட இதோ சாத்துறேனுங்கத்தைனு முன் கதவை சாற்றி தாழ்ப்பாள் போட,சொல்லு எஸ்தரு என்னாச்சி?

எங்கே உன் மவள்?

என்ன பண்ணுனா அந்த சீமச்சினு கேட்க,அழுது கொண்டே எஸ்தர் விஷயத்தை சொல்ல ஆண்டவரே என்றபடி தனது நெஞ்சில் கையை வைத்தவர்,அய்யா அந்தோணி மகிக்கு போனை போடு என்க,சித்தி அது வந்துனு தயங்கினார்.

என்னப்பா...?

"போனை போட்டு குடு நான் பேசுறேன்"

வேலைக்கு கிளம்புற நேரம்மா என்றவாறு அங்கிருந்த கடிகாரத்தை பார்க்க,காலை 9 மணியென்று காட்டியது.

தனது போனிலிருந்து தங்கை கணவருக்கு கால் பண்ணிய அந்தோணி தனது சித்தியிடம் போனை கொடுக்க,அந்த பக்கம் அட்டென் பண்ணிய மகி சொல்லுங்க மச்சானென்க,மகி நான் அத்தை பேசுறேன்ப்பா.

சொல்லுங்கத்தை...

நல்லா இருக்கீங்களா?

வீட்ல எல்லாரும் நலம்தானே?

எல்லாரும் நல்லாருக்காங்க,நீ வேலைக்கு கிளம்பிட்டியா மகியென்று பாட்டி கேட்க,இல்லைங்கத்தை.

கொஞ்சம் வேலை இருக்கு அதனால் லேட்டா தான் போறேனென்றவர் சொல்லுங்கத்தை எதாவது பிரச்சினையா?

ம்ம் நீ லீவ் சொல்லிட்டு உடனே கிளம்பி வீட்டுக்கு வாப்பா.

அத்தை என்னாச்சி?

என்னனு சொல்லுங்க.அங்க யாருக்கு என்னவென்று மகி பதற எஸ்தருக்குதான் உடம்பு சரியில்லைப்பா நீ வா.

அப்படியா?

நேற்று பேசுனேன் உன் மவள் எதுவுமே சொல்லலையே?,சரிங்கத்தை இதோ நான் கிளம்பி வரேனென்று போனை வைத்தார்.

ராணி உன் மருமவள் ரூமுக்குள்ள போய் எதாவது கிடைக்குதானு அலசி பாரென்க,சரிங்கத்தை என்றவாறு கீழே இருக்கும் அவளது அறையில் தேடி பார்க்க எதுவும் கிடைக்கவில்லை.
அத்தை இங்க ஒன்னும் இல்லையென்க,மேலே தானே படிப்பாள்.

அங்க போய் ஒரு எட்டு பார்த்துட்டு வா என்றதும் ம்ம் என்றவாறு படியில் ஏறி மேலே வந்தவர் கதவை திறந்து உள்ளே போய் பார்த்தவர் ஷெல்பில் இருந்த புத்தகங்களிலும் நோட்டுகளிலும் தேடி பார்க்க எந்த பலனுமில்லை.

இரண்டாவது செல்பில் அவள் போட்டிருந்த நகைகள் இருந்தது.

கட்டிலுக்கு கீழே குனிந்து தேட அங்கும் வெறுமையாகவே இருக்க என்னடா இது.இவ்வளவு தெளிவா கிளம்பி போயிருக்காளே...அப்போ முன்னவே இவள் இந்த பிளானில் இருப்பாளோ என்ற யோசனையோடே கீழே வந்தார்.

என்ன ராணி எதாவது துப்பு கிடைச்சிதா?

இல்லைங்கத்தை.நல்லா பிளான் பண்ணி கிளம்பிருக்காள்.

எங்கே போனாளோ?

அவன் யாரு?

என்ன ஊருனு தெரியாமல் எப்படிங்கத்தை தேட?

வழி கிடைக்கும்.நீ போய் எஸ்தருக்கு எதாவது குடிக்க கொண்டு வந்து குடு.

அதேபோல் நால்வருக்கும் டீ போட்டு எடுத்து வர அழுது கொண்டிருந்த எஸ்தரோ எனக்கு வேண்டாங்கண்ணி...கொஞ்சம் வெசம் இருந்தால் குடுங்க அந்த மனுசன் வருவதற்குள் நான் குடிச்சிடுறேனென்று அழுதார்..

ஏத்தா என்ன நடந்து போயிருச்சு இப்போ இப்படி எல்லாம் பேசுற ஊர்ல உலகத்துல நடக்காதது ஒன்னும் நம்ம பொண்ணு செஞ்சிட்டு போகல புரியுதா..

முதல்ல அமைதியா இருத்தா மகி வந்த பின்னர் எல்லாத்தையும் பேசிக்கலாம் முதல்ல அதை வாங்கி குடியென்று தனது அக்கா மகளுக்கு ஆறுதல் சொல்ல,சித்தியின் வார்த்தையை மறுக்க முடியாமல் நாத்தனாரிடமிருந்து வாங்கி மனதே இல்லாமல் குடித்தார்.

மதுரை:

மனைவியோடு முதல் முதலாக வண்டியில் போவது உள்ளுக்குள் பேரானந்தமாக இருந்தது.கடந்து மூன்று வருடமாக காதலித்துக் கொண்டிருக்கிறார்கள் தவிர இதுவரை அருகில் கூட நின்று பேசியதில்லை. இதை சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

இருவரின் பேச்சுகளோ போனில் தான் அதிகமாக இருந்தது ஏன் ஃபோனில் தான் இருவரும் வாழ்ந்தார்களென்று சொன்னால் அது மிகையில்லை.

மேடு பள்ளத்தில் வண்டி ஏறி இறங்கும் போதெல்லாம் கணவனின் தோளோடு போய் இடித்து உட்கார்ந்திருந்த ஷமீராவுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

கண்ணாடி வழியாக மனைவியின் அவஸ்தையை ரசித்துக்கொண்டே செழியனும் பைக்கை ஒட்டியவன் அரை மணி நேரத்தில் டவுனுக்குள் இருக்கும் அந்த பெரிய துணி கடையின் பார்க்கிங்கில் வந்து வண்டியை நிறுத்தினான்.

பின்னர் மனைவியோடு படியில் ஏறி மேலே வந்தவன் லேடிஸ் செக்சன் எதுவென்று கேட்டு லிப்டில் ஏறி மூன்றாவது ப்ளோருக்கு வந்தவன் போய் உனக்கு என்ன தேவையோ எல்லாம் வாங்கிக்கோ...

நான் இங்கே இருக்கிறேனென்று சொல்லிவிட்டு தனது ஃபோனை எடுத்துக் கொண்டு கண்ணனிடம் பேச தனியாக வந்தான்.

ஷமீராவோ இப்போதைக்கு இரண்டு ஜோடி துணி போதுமென்று நினைத்தவள் விலையைப் பார்த்து இரண்டு செட் எடுத்து அதற்கு தேவையான மற்ற அசசரீஸ் வாங்கிக்கொண்டு திரும்பி புருஷனை தேட சற்று தூரத்தில் செழியன் போனில் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

நேராக அவனிடம் வந்தாள்.

ஏதோ ஒரு உந்துதலில் திரும்பிப் பார்த்த செழியன் நான் அப்புறம் பேசுறேன்டா என்று ஃபோனை வைத்தவன் எடுத்துட்டியா என்க ஹம் என்றாள்...

அதுக்குள்ள எடுத்துட்டியானு ஆச்சரியமாக கேட்க ஆமா என்றாள்.

சரி வா என்று மனைவியை அழைத்து போனவன் அவள் எடுத்து வைத்த துணிகளை பார்த்து முறைத்து விட்டு அவனே மேலும் மூன்று ஜோடி வாங்கியவன், இதுக்கும் தேவையான இன்னர்ஸெல்லாம் நான் தான் வாங்கணுமானு கேட்க கணவனின் வார்த்தையில் அதிர்ந்து போனவள் பின்னர் சுற்றம் பார்த்து விட்டு தன்னவனை முறைக்க, போய் எடுத்துக்க டி.

"ஒரு வாரத்துக்கு தேவையானது வாங்கு"..

உன் புருஷன் சம்பாதித்த பணம் நிறைய இருக்குடி.உனக்கு என்ன தேவையோ தைரியமா வாங்கென்று மனைவியின் தோளின் தட்டி சொல்ல,ஷமீராவோ அவனிடம் பணம் இருக்குமா இல்லையா என்ற யோசனையோடுதான் இருப்பதிலேயே மிகவும் குறைவான விலையிலும் ஆனால் தரமானதையும் இவ்வளவு நேரம் தேடிப் பார்த்து வாங்கினாள்...

பின்னர் இரண்டு நைட்டியை எடுத்தவள் மற்ற பொருட்களை வாங்கிக் கொண்டு பில்லுக்கு அனுப்ப தனது ஏடிஎம் கார்டு கொடுத்து பே பண்ணி விட்டு மனைவியோடு வெளியே வந்தவன் நேராக பக்கத்திலிருக்கும் பேன்சி ஸ்டோருக்கு அழைத்துப் போனான்.

இங்கே எதற்கென்று அவள் கேட்க இவ்வளவு நாள் நீ இருந்தது வேற இனிமே என்கூட வாழ போற வாழ்க்கை வேற..அப்போ உனக்கு கண்டிப்பாக இதெல்லாம் தேவையென்று அங்கிருந்த பொட்டு மஞ்சள் குங்குமத்தை காட்டி சொல்லவும்..கணவன் என்ன சொல்ல வருகிறான் என்பது ஷமீராவுக்கு புரிந்தது..பின்னர் அவள் வழக்கமாக யூஸ் பண்ணும் பொருட்களையும் வாங்க அதற்கு பணத்தை கொடுத்தான்.

ஏதாவது குடிக்கிறியா டி என்க, இருக்கும் வெயிலில் ஏதாவது ஜில்லென்று குடித்தால் தேவலாம் போலென்று தானிருந்ததால் ஹம் என்று சொல்ல தனது மனைவிக்கு ஜிகர்தண்டா பிடிக்கும் என்பதால் அங்கிருக்கும் பேமஸான கடைக்கு அழைத்துப் போனவன் இரண்டு ஜிகர்தண்டாவை ஆர்டர் பண்ணி உட்கார சிறிது நிமிடத்தில் அவர்களின் டேபிளின் மேல் இரண்டு ஜிகர்தண்டாவை வெயிட்டரும் வந்து வைத்து சென்றார்.

எடுத்து சாப்பிடுடி என்கவும் ம்ம் என்றவள் அவளுக்கு பிடித்தமானதை விரும்பி சாப்பிட ஆரம்பித்தாள்.எதிரில் உட்கார்ந்திருக்கும் மனைவியை பார்த்தபடி செழியனும் சாப்பிட,இவர் இப்படியே பார்த்துக் கொண்டிருந்தால் நம்மளால எப்படி இயல்பாக இருக்க முடியுமென்று தனக்குள்ளே முணுமுணுத்தாள்.

அதன் பின்னர் வேறு ஏதாவது வேணுமாடி என்க, இல்ல போதும் என்கவும் சரி வீட்டுக்கு கிளம்பலாமா?

அண்ணா அண்ணிக்கும் வாங்கிட்டு போகலாம் என்றாள்.

நாலு பார்சல் வரும்போது சொல்லிட்டு தாண்டி வந்தேன்.வா என்க ஷமீராவும் எதுவும் சொல்லாமல் அவன் பின்னாடியே வந்தாள்.பின்னர் இருவரும் வண்டியில் ஏறி வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

பானுவும் நசீராவும் மதிய உணவை சமைத்து விட்டு இவர்களுக்காக காத்திருந்தனர்.

இரண்டு கையிலும் பையோடு உள்ளே வந்தனர்.பானு இந்தா என்ற செழியனோ ஜிகர்தண்டா இருக்கும் கவரை கொடுக்க அதை வாங்கிப் போய் ஃப்ரிட்ஜில் வைத்தவள் அண்ணா முதலில் சாப்பிடலாம் என்கவும் சரிமா என்றான்.

பின்னர் பொண்ணு மாப்பிள்ளை இருவருக்கும் தலைவாழை இலையில் விருந்தை பரிமாறி விட்டு, சில பல கலாட்டாக்களோடு மூன்று ஜோடியும் சாப்பிட்டு முடித்தனர்.

தீரனும் மாறனும் அவர்களிடம் சொல்லிக் கொண்டு தங்களது வேலையை பார்க்க கிளம்பி சென்றுவிட நசீராவும் பானுவும் ஷமீராவோடு பொதுவாக பேசிக் கொண்டிருக்க செழியனும் சிறிது நேரம் படுக்கிறேனென்று ரூமிற்குள் சென்றுவிட்டான்.

நேரமும் கடந்து சென்றது.

மாலை போய் இரவு வேளையும் வர அவளுங்களிடம் சொல்லிக்கொண்டு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர்.

வனிச்சூருக்கு செல்லும் பேருந்து நிறுத்தத்தில் போய் இருவரோடும் நின்று கொண்டிருந்த மாறனும் தீரனும் எது நடந்தாலும் உடனே இன்பார்ம் பண்ணுடா...

"தேவையில்லாத பிரச்சினை வேண்டாம்".

நீ தான் உடனே போறேன்னு சொல்ற எனக்கு ஒன்னும் மனசு சரியில்லை என்று தீரன் சொல்ல,அவன் முடிவெடுத்தது நல்லது தான்.எத்தனை நாளைக்கு இப்படி தெரியாமல் இருக்க முடியும் சொல்லு ணா?

என்னைக்கு இருந்தாலும் இதுக்கு ஒரு தீர்வு தெரிஞ்சுதான் ஆகணுமென்று மாறன் கேட்க,அதுவும் நல்லது தான்டா என்று அரை மனதாகவே சொன்னான்.

பாப்பா அங்க என்ன வேணாலும் நடக்கலாம் நீ கொஞ்சம் பொறுத்துப் போ என்று சொல்லவும் சரிங்க அண்ணா என்றாள்.

இரவு 11 மணிக்கு வனிச்சூருக்கு செல்லும் பேருந்தும் வந்து நிற்க இருவரும் அதில் ஏறி கொண்டவர்கள் நீங்க கிளம்புங்க நாங்க போய்க் கொள்கிறோம் என்க,சரிடா பார்த்து போங்களென்று தீரனும்,மாறனும் அங்கிருந்து சென்றனர்.

சிறிது நிமிடத்தில் பஸ்சும் அங்கிருந்து புறப்பட்டது.கண்டக்டர் டிக்கட் டிக்கெட் என்று கேட்டுக் கொண்டே வர இரண்டு வனிச்சூர் என்றான்.

நம்ம ஊருக்கு போய் சேர எவ்வளவு நேரம் ஆகும் என்று ஷமீரா கேட்க காலை 7 மணிக்கு தான் போவோம் டி.

ஓஓஓ அவ்வளவு நேரமா என்க...ஆமா டி ஏன் உனக்கு தெரியாதா?எத்தனை நாளு சொல்லி இருக்கேன் என்றவன் மனைவியோடு கொஞ்சம் நெருங்கி உட்கார,என்ன பண்றீங்க எல்லாம் பக்கத்துல இருக்காங்களென்று முணுமுணுத்தாள்.

ஆமா டி அவங்க வேலையை விட்டுட்டு இப்ப நம்மளை தான் வேடிக்கை பாக்குறாராங்க என்றவாறு மனைவியின் தோளின் மேல் கையை போட்டவன் சரி தூங்கு என்க, ஜன்னல் புறமாக வந்த காற்றோ தாலாட்டு பாடுவது போலிருக்கவும் சிறிது நிமிடத்தில் இருவரும் சீட்டில் சாய்ந்தவாறு தூங்க ஆரம்பித்தனர்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்:

தனது ஆபிஸிற்கு கால் பண்ணிய மகி இரண்டு நாட்கள் வரமாட்டேனென்று சொல்லியவர் வீட்டை பூட்டிக் கொண்டு ஷெட்டிலிருந்த தனது காரில் ஏறி ஊரை நோக்கி பயணமானார்.

இரண்டு வருடத்திற்கு முன்பெல்லாம் சோழனூரில் இருந்து திருச்சிக்கு வர 4:30 மணி நேரம் ஆகும்.அதும் நேரடியாக பஸ் கிடைத்தால் தான் இந்த நேரம்..இல்லை என்றால் திருச்சியிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கும் அங்கிருந்து சோழனூருக்கும் இரண்டு பஸ் மாறியே வர முடியும்...

நல்லவேளை தற்பொழுது அவர்கள் ஊரில் பைபாஸ் போடப்பட்டுள்ளதால் ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள்ளே ஊருக்கு போய் சேர்ந்து விடுவது ரொம்ப வசதியாக இருந்தது.

நைட் கூட பேசினாளே.அப்பொழுதுகூட உடம்பு சரியில்லைன்னு நம்ம கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே.அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு ஷமியும் சொல்லலையே...அத்தை வந்து சொல்றாங்க.இவளுக்கு என்ன ஆச்சுனு தெரியலையே??

மனுஷன் சொல்வதை எங்க கேக்குறா?

வாயை கொஞ்சமாவது கட்டுப்படுத்தினால் தானே?

வயசாக சுகரு பிபி அது இது வருமென்றால் காதில வாங்குவதே இல்லை.இன்னும் அவ அப்பன் வீட்டுல மீனு நண்டுனு தின்ன போல தான் இங்கேயும் சாப்பிட நினைக்கிறாள் என்று மனைவியை பொரிந்து கொண்டிருந்தாலும் என்னாச்சோனு ஒருவித கவலையும் அவருக்கு இல்லாமலில்லை.

ஒன்றரை மணி நேரத்திலேயே வந்து சேர்ந்தவர் ஹாரனை அழுத்த... வீட்டிற்குள்ளே இருந்தவர்களுக்கு சத்தம் கேட்டது...

அய்யா அந்தோணி நம்ப மகி தான் வந்தாச்சு போல போய் கேட்ட திறந்து விடு... உன் தங்கச்சிகாரி போனாக்க அங்கேயே ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பான் என்கவும், சரி சித்தி என்றவர் வீட்டின் மெயின் கதவை திறந்து வெளியே போனவர் தனது மச்சான் காருக்காக அங்கிருந்த இரும்பு கேட்டை திறந்து விட மகியும் உள்ளே வந்து காரை நிறுத்தி விட்டு மாமா என்க வா மகியென்றார்.


காரிலிருந்து இறங்கி வந்தவர் வேகமாக வீட்டிற்குள் போக,அங்கே மனைவி சோகமான முகத்தோடு உட்கார்ந்திருப்பதை பார்த்து என்னாச்சு எஸ்தர் என்று பதற்றமாக கேட்க, ஐயா மகி இப்படி வந்து உட்காரென்று சாரதா பாட்டி சொல்ல,மகள் மட்டும் அங்கே இல்லாததை கவனித்தவர் சொல்லுங்கத்தை என்ன ஆச்சு உங்க பொண்ணுக்கு?

போன் பேசும்போது ஒன்னும் சொல்லலையே?

என் மவளுக்கு ஒன்னும் இல்ல.இது உன் மவளை பற்றிய விஷயம் தான்.

என்னத்த சொல்றீங்க ஷமீராவுக்கு என்ன?

சுத்தி வளைக்காமல் நேரடியா விஷயத்துக்கு வாங்கத்தை என்றதும் ராணி அந்த லெட்டரை எடுத்து உன் அண்ணன் கிட்ட கொடு மா என்கவும்,அவளும் தனது அண்ணியிடம் இருந்த லெட்டரை வாங்கி அண்ணனிடம் வந்து நீட்டினாள். ..

என்னது ராணி என்ற யோசனையோடு தங்கையிடமிருந்து வாங்கி லெட்டரை படித்து பார்த்தவருக்கு எல்லை இல்லா கோபம் வர என்னடி மகளை பெத்து வச்சிருக்க என்று அங்கே கணவரை பார்த்து அழுது கொண்டிருந்த எஸ்தரிடம் சென்று நாலு அறையை விட்டவர் ஒத்த பொம்பள புள்ளைய ஒழுங்கா வளர்க்க துப்பு இல்லையா?

வீட்ல தானே இருக்கிற??

மவள் என்ன பண்றானு கவனிக்காமல் நீ என்னடி மயிர் புடுங்கிட்டு இருந்தியா என்று கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தார்.

இந்தா மகி கொஞ்சம் அமைதியா இரு..எதுக்கு இப்படி கத்துரனு அந்தோணி கேட்க வேற என்ன மாமா பண்றது? இப்ப நாம எங்க போய் அவளை தேடுவது?

உன் மகள் எங்க போய் இருக்காடி என்கவும் எனக்கு எப்படி தெரியும்?
அவ காதலிக்கிறா என்கிற விஷயம் தெரிஞ்ச அன்றைக்கு நம்ப பாபுக்கும் அவளுக்கும் கல்யாணத்தை உடனடியாக முடித்து விடலாம்னு சொன்னேன்...

இன்னும் ஒரு வருஷம் படிக்கட்டும்னு நீங்கதானே அமைதியாக இருந்தீர்கள் இப்போ என்னை குறை சொன்னா என்ன அர்த்தமென்று எஸ்தரும் சத்தம் போட்டார்.

ஏண்டி படிப்பு முடிக்கட்டும்னு சொன்னது ஒரு தப்பா?

படிக்கிற பிள்ளைக்கு உடனே கல்யாணத்தை பண்ணி வச்சாக்க ஊர்ல பாக்குறவங்க எல்லாம் நம்ம மூஞ்சில துப்ப மாட்டாங்களா என்கவும் இப்போ உங்க பொண்ணு பண்ணிட்டு போன காரியத்துல மட்டும் எல்லாம் பூச்செண்டு கொடுத்து வாழ்த்துவாங்களா என்று எஸ்தரும் சரிக்கு சமமாக கணவரிடம் கேள்வி கேட்டார்.

ஐயோ எஸ்தர் மகி இரண்டு பேரும் கொஞ்சம் வாய மூடுங்க என்ற சாராதா பாட்டி,முதல்ல அவள் எங்கே போயிருக்கிறாளென்று கண்டுபிடிக்கலாம்.பிறகு மத்ததை பற்றி யோசிக்கலாம்.

யாருக்கும் தெரியாம அவளை கையோடு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நம்ப பாபுவை வர வச்சி கல்யாணத்தை முடித்து விடலாம் என்கவும்,அத்தை இன்னும் மூணு வாரத்துல தான் அவங்க ரெண்டு பேருக்கு நம்ம முடிவு பண்ண போல கல்யாணம் இருக்கேனு மகி கேட்க...

இப்ப என்ன சூழ்நிலையோ அதை மட்டும் பாரு மகி பின்னாடி நடக்க போறது யோசிக்காதே.

அவர் சொல்வதைக் கேட்ட நால்வருக்கும் இதுவும் சரியென்று பட்டது.

அவ போன் எங்கேனு மகி கேட்க ஷோகேஸிலிருந்த ஷமியின் போனை எடுத்து வந்து ராணி நீட்டவும் அதை வாங்கியவர் அதில் அவளின் ஆருயிர் தோழி ராஜியின் நம்பருக்கு கால் பண்ணினார்.

முதல் ரிங் முழுவதும் போய் கட்டானது பின்னரும் மீண்டும் கால் பண்ணினார்.அவளோ தனது தோழிதான் கால் பண்றாளென்று நினைத்துக் கொண்டு என்னடி அதிசயமா காலையிலே போன் பண்ணிருக்க??

எப்படி இருக்கடி என்க,அம்மாடி ராஜி நான் அப்பா பேசுறேனென்று சொல்லவும்,மகியின் கணீர் குரலை கேட்டவளோ,என்ன ஆச்சு?

மகி அப்பா இந்த போனிலிருந்து பேசுறாரு என்று யோசனையானாள் பின்னர் சுதாரித்து சொல்லுங்கப்பா எப்படி இருக்கீங்க?அம்மா நல்லா இருக்காங்களா?

எல்லாரும் நல்லா இருக்கிறோம் நீ வீட்ல இருக்கியாமா?..ஆமாம் பா வீட்ல தான்பா இருக்கிறேன் என்கவும் சரிமா கொஞ்ச நேரத்துல நானும் அம்மாவும் அங்க வரோமென்று சொல்லி விட்டு போனை வைத்தார்.

ராஜிக்கோ என்ன விஷயமென்று ஒன்றும் புரியவில்லை.

சிறிது நிமிட பயணத்தில் டவுனிலிருக்கும் ராஜியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

சிறுவயதிலிருந்தே இருவரும் தோழிகள்.ஒரே பள்ளியில் தான் படித்தார்கள்.அதேபோல் ஒரே காலேஜிலும் ஒரே பாடப்பிரிவை எடுத்துதான் இருவரும் படித்து முடித்தார்கள்.

வீட்டிற்குள் வந்தவர்களை ராஜியின் அம்மா வாங்க வாங்களென்று உட்கார சொல்லியவர் டீ எடுத்துட்டு வரேன் என்க...அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா.

ராஜி கிட்ட தான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்க பக்கத்தில் இருந்தவளும் சொல்லுங்கப்பா என்றாள்.

நேரடியாக விஷயத்துக்கு வந்தவர் ஷமிய வீட்டில் காணும் மா நைட்டு சாப்பிட்டு தூங்க போன போது உங்க அம்மா பார்த்திருக்கா...காலையில போனா அவ லெட்டர் எழுதி வைத்துவிட்டு யாரோ அவளுக்கு பிடிச்சவங்க கூட போறேன்னு சொல்லிருக்கிறாள் என்கவும் என்னப்பா சொல்றீங்களென்று ராஜி அதிர்ந்து போய் கேட்க ஆமாம் மா.

இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவள் யாரையோ காதலிக்கிறாங்கிற விஷயம் கேள்விப்பட்டதும் நான் அடிச்சு கண்டிச்சேன்.

அப்பயே உங்க அம்மா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு சொன்னா...நான் தான் படிச்சிட்டு இருக்கா இப்போது வேண்டாமென்று சொல்லிட்டேன்.

சரி படிப்பு முடிஞ்ச பிறகு கல்யாண பேச்சு எடுக்க, ஒரு வருஷம் வேலைக்கு போறேன் பிறகு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாள். பொண்ணு மனசு மாறிட்டான்னு அமைதியா இருக்கும் போது இந்த காரியம் பண்ணிட்டா.

உனக்கு அந்த பையனை பற்றி ஏதாவது தெரிஞ்சா சொல்லுமா என்கவும் அப்பா சத்தியமா எனக்கு அந்த பையன பத்தி எதுவும் தெரியாது.

அந்தப் பையனோட ஊரின் பேர் மட்டும் தான் தெரியும் என்க...சரி பாத்துக்கலாம்...என்ன ஊரூமா?

வனிச்சூர் என்று சொல்ல,ஏய் ராஜி உனக்கு எந்த உண்மை தெரிஞ்சாலும் மறைக்காம அப்பா கிட்ட சொல்லிடு என்று அவளின் அம்மா சொல்லவும், சத்தியமா எனக்கு வேற எந்த விஷயமும் தெரியாதென்றாள்

அவ காதலிக்கிற விஷயம்கூட அப்பா அடிச்சதால் ஒரு வாரமாக காலேஜ் வராம இருந்தாளே அப்போ தான் மா தெரியும்.

ஷமி வேற எதுவும் என்கிட்ட சொல்லவே இல்லை.ஒருவேளை நான் உங்ககிட்ட சொல்லுவேன் நினைச்சு பயந்தாளா என்னன்னு எனக்கு தெரியலை மா...

ஆனா அந்த பையனோட ஊரு மட்டும் தான் என்கிட்ட சொன்னா அதுதான் நானும் இப்ப சொல்றேன் என்க, ராஜியின் பேச்சில் பொய் இருப்பது போல் அவர்களுக்கு தெரியவில்லை.

வனிச்சூர்:

முதல்நாள் இரவு மதுரையிலிருந்து புறப்பட்ட பேருந்து காலை ஏழரை மணிக்கெல்லாம் வனிச்சூரின் பேருந்து நிலையத்தில் வந்து நின்றது.

சற்று நேரத்திற்கு முன்னே இருவரும் தூக்கம் கலைந்து பேசிக் கொண்டு வந்ததால் பஸ் வந்து நின்னதும் கீழே இறங்கினர்.அங்கிருந்து அவர்கள் ஊருக்குள் செல்வதற்கு அரை மணி நேரம்..

அதுவும் மலையடிவாரமாக தான் போக வேண்டும்.மினி பஸ் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வரும்.இல்லை டூவீலர் ஏதாவது கார் இல்லை ஆட்டோ வந்தால் போகலாம்.

மனைவியோடு பஸ் ஸ்டாண்ட் விட்டு வெளியே வந்தவன் ஷமி காபி ஏதாவது குடிக்கிறியா என்க, நான் இன்னும் பிரஷ் பண்ணவே இல்லையே என்றாள்.

ஏண்டி ஆடு மாடு எல்லாம் பல் துலக்கிட்டா இருக்கென்கவும் நீங்க இருப்பீங்க நான் அப்படி கிடையாது என்கவும் ரொம்ப தாண்டி பண்ற என்றான்.

பின்னர் அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றவன் தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி ஒரு பார்வை பார்த்துக் கொண்டு ஊருக்குள்ளே போகணும் என்கவும் உட்காருங்கள் என்றார்.

இருவரும் உட்கார்ந்ததும் ஆட்டோவும் அங்கிருந்து புறப்பட்டது.

இரண்டு பக்கமும் ஓங்கி உயர்ந்து மலைகளுக்கு நடுவே பயணம் பண்ணுவது ஷமீராவுக்கு புதுவித அனுபவமாக இருந்தது.

இதுவரை டிவியில் தான் இதைப்போல ஊரை பார்த்திருக்க,இன்று நிஜத்தில் அதையெல்லாம் கண்டவளுக்கு இருக்கும் சூழ்நிலை மறந்து அந்த இயற்கையின் அழகை ரசிக்க ஆரம்பித்தாள்.

ஆட்டோவில் ஏறியதுமே தனது வீடு இருக்கும் தெருவை டிரைவரிடம் சொல்லியிருந்ததால் அரை மணி நேரத்தில் அவரும் வந்து ஆட்டோவை நிறுத்த அவருக்கு பணத்தை கொடுத்து விட்டு மனைவியின் கையை பிடித்துக் கொண்டே கீழே இறங்கினான்.

செழியன் வீட்டின் முன்னால் ஆட்டோ வந்து நிற்குவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் யாரு என்று எட்டிப் பார்த்தனர்.வீட்டிற்குள் இருந்த வானதியோ தனது வீட்டு வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு வெளியே வந்து பார்க்க அங்கே தனது மகன் யாரோ ஒரு பொண்ணு கூட நிற்பதை கண்டு என்னங்க என்று கத்தினார்.

வீழ்ந்தேனடி...
 
Member
Joined
Nov 8, 2025
Messages
50
இந்த சைக்கோ மகியின் கதையை மீண்டும் புரட்டும்போது ஒரு புது உணர்வு மேலிடுகிறது
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top