• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

நண்பர்கள் மூவரும் படம் பார்த்துட்டு வந்தவனுங்களோ நேராக மொட்டை மாடியில் போய் படுத்து விட்டனர்.காலையில் குளித்துவிட்டு துவைத்த துணிகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்த கண்மணியோ என்ன இங்கு படுத்திருக்கிறார்கள் என்று யோசனையோடு துணிகளை பிழிந்து காய வைத்து விட்டு திரும்ப,தூக்கம் கலைந்து எழுந்து சோம்பல் முறித்த பாபுவோ தனது தேவதை வருவதை பார்த்தான்.


திடீரென்று அவன் எழுந்திருப்பானென்று எதிர் பார்க்காதவர்களுக்கு திக்கென்று ஒரு நொடி அதிர்வோடு அவன் கேட்ட கேள்வி ஞாபகம் வந்ததும் வேகமாக அங்கிருந்து சென்றாள்.

இதுவரை தனது கேள்விக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லையே என்று நினைத்துக் கொண்டே வந்தவன் மாடிப்படி ஓரத்தில் நின்று பார்க்க படியில் இறங்கி சென்றவளும் திரும்பி மேலே பார்க்க அங்கே பாபு நின்று கொண்டிருந்தான்.

இதை எதிர்பார்க்காதவளோ வேகமாக அங்கிருந்து ஓடிவிட்டாள்...இவ என்ன எப்ப பார்த்தாலும் இப்படி ஓடுறாள்?நான் என்ன சிங்கமா இல்ல புலியா இவளை கடிச்சு குதர?.

,உன் மொகரகட்ட ராசி.அதனால தான் தங்கச்சி பதறி அடிச்சுட்டு ஓடுது டா என்கும் குரல் கேட்டு திரும்பி பார்க்க பாரத் நின்று கொண்டிருந்தான்.

நீ எப்போட நாயே எந்திரிச்ச என்க,நீ புலம்ப ஆரம்பிச்சியே அப்பவே எந்திரிச்சிட்டேன்.நல்லவேளை என் பங்காளி காதில் விழல.இல்லைன்னா உன் குருத்தெலும்பை இங்கேயே மிதிச்சு ஒடைச்சிருப்பான் என்கவும்,நீயே சொல்லிடுவ போல என்று பாபு முறைக்கவும் சரி சரி அப்படி எல்லாம் பாக்காதடா...

என் தலையெழுத்து உன் காதலை சேர்த்து வைக்கணும்னு இருக்கென்று சலிப்போடு சொன்னவன்,ஏய் பங்காளி விடிஞ்சி எவ்வளவு நேரம் ஆகுது இன்னும் தூங்கிட்டு இருக்க...

என்ன மனுஷன் நீ என்று கண்ணனின் பக்கத்தில் போய் நின்று சத்தமாக சொல்ல அவனும் கொட்டாவி எழுந்தான்.பின்னர் மூவரும் ரூமிற்கு வந்து பிரஷ் ஆகிவிட்டு கீழே வர அவர்களுக்கு கண்மணி தான் டீ கொண்டு வந்து கொடுத்துப் போனாள்.

தன்னருகில் வரும் போது தனது உதட்டை அசைத்து இந்த பொண்ணு எனக்கு பிடித்திருக்கென்று பாபு சொல்வதை புரிந்து கொண்ட கண்மணிக்கு சிரிப்பு வந்தது.ஆனால் அதை காட்டிக்காமல் முறைப்பது போல் அவனை பார்த்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

அடேய் போதும்டா நம்மளால அடி வாங்க முடியாதுடா கொஞ்சம் அடக்கி வாசி டா என்று பரத் தான் நண்பனின் காதில் சொன்னான்...

சரி டா நாங்க போய் குளிச்சிட்டு வரோம் அநேகமா இன்னைக்கு ஊருக்கு கிளம்பினாலும் கிளம்புவோமென்று கண்ணனிடம் சொல்ல...அதுக்குள்ள ஏண்டா கிளம்புறீங்க?.இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போங்களேன் நீங்க எல்லாம் இருந்தது நல்லா இருந்துச்சுடா என்க,தங்கச்சிக்கு கல்யாணம் இல்லையாடா..

அந்த வேலையை பார்க்கணுமே, பங்காளி நானும் வரேனென்று கண்ணன் சொல்லவும்,அந்தளவுக்கு வேலை இல்லை.எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க.

சீர்வரிசை கொடுக்கிற பொருள்தான் செய்ய சொல்லி இருக்காங்க.அடுத்து பத்திரிக்கை வைக்கிற வேலைதான் இருக்கு..அப்படி ஏதாவதுனா கண்டிப்பா உன்னை நான் கூப்பிடமாட்டேனா பங்காளி என்கவும்,ஒரு போனை போடு உடனே பாய்ஞ்சு வந்துடுவேன் என்று கண்ணன் சொல்ல,சரி பங்காளி என்றவாறு செழியனின் வீட்டுக்கு வந்தனர்.

சீக்கிரம் ரெண்டு பேரும் தயாராகி வாங்களென்று அந்தோணி சொல்ல, என்ன வேலை மாமா?என்று பரத் கேட்க...

அடேய் போய் குளிச்சிட்டு தான் வாங்கலாம்டா சொல்ல மாட்டேனா? இரண்டு துரையும் பெரிய கலெக்டர் நிற்க நேரம் இல்லாம கால்ல வெந்நீர் ஊத்திட்டு இருக்காங்க என்று அந்தோணி முறைக்க...அதானே நம்மள ஏதாச்சும் சொல்லவில்லை என்றால் இவங்களுக்கு தூக்கம் வராதேயென்று முணுமுணுத்து கொண்டே படியில் ஏற, என்னடா அங்க முணுமுணுப்பு என்றார்.

ஒன்னுமில்லை மாமா சும்மா பேசிட்டு இருந்தேன்னு பரத் செல்ல அங்கிருந்தவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

அனேகமா நம்ம ரெண்டு பேரும் ஒத்த வயது உடையவர்களாக தான் இருப்போமென்று செல்லத்துரையிடம் அந்தோணி சொல்ல,எனக்கு 58ஆகுது என்கவும்,எனக்கும் 58 தான் ஆகுது. அப்போ பேரு சொல்லியே கூப்பிட்டுக்கலாமே.

தாராளமா கூப்பிட்டலாமென்று சிரித்தார்.அது வந்து துரை என் மனசுல ஒரு விஷயம் பட்டுச்சு..அது சரி வருமானு தெரியல...முதல்ல விஷயத்தை சொல்லு என்னன்னு அப்புறம் பார்க்கலாமஎன்றார்.

பின்னர் விஷயத்தை அந்தோணி சொல்ல சிறிது நிமிடம் யோசித்த செல்லதுரை நல்ல விஷயம் தான் போய் பேசி பார்ப்போம்.

ஹப்பாடா எங்கே தப்பா நினைச்சிடுவியோனு ஒரு நிமிஷம் நான் பயந்துட்டேன் என்றார்.

இதுல என்ன இருக்கு பொதுவா எல்லாரும் கேட்கிற விஷயம் தானே?நேர்ல பேசுவோமென்று பொதுவான விஷயத்தை பேசிக் கொண்டிருந்தனர்.

கிச்சனிலிருந்த ஷமீராவோ இன்னுமா இந்த மனுஷன் தூங்குறாரு என்றபடி மணியை பார்க்க அது காலை எட்டு முப்பதென்று காட்டியது.

ஆனால் அவளுக்கு தெரியாத ஒன்னு என்னவென்றால் அவள் தனது அத்தை மாமா ரூமிற்கு சென்று பேசிக் கொண்டிருக்கும்போது கீழே இறங்கி வந்த செழியனோ வயலுக்கு போவதாக சொல்லிவிட்டு எப்பயோ சென்று விட்டான்..

ஏண்டா மாப்பி என்ன விஷயமா இருக்கும்?பெருசு இவ்வளவு சீன் போடுதே என்று பரத் கேட்க,அடிச்சு பல்லெல்லாம் உடைச்சிடுவேன்டா. நானும் உன் கூட தானே இருந்தேன். எனக்கு எப்படி தெரியுமென்று பாபு திட்ட,சரி சரி ரொம்ப புகழாதே வா என்று இருவரும் கீழே வந்தனர்.

ஏங்க மாமா அடுத்து இவனுக்கும் கல்யாணத்தை முடிச்சாலாமே என்க,பாபுபோ தனது நண்பனை கொலை வெறியில் பார்த்தான்.

ஏன்டா ஆயிரம் தான் நீ எனக்கு மாப்பிள்ளை முறை என்றாலும் இப்படியா ஓயாம என்ன முறைச்சு பார்த்துட்டே இருப்பே.அதற்கு பாபுவோ டேய் ராசா நீ ஆணியே புடுங்க வேணாம்..அமைதியா உட்காரு அதுவே பெரும் புண்ணியம் சாமியென்று தனது கையை கூப்பினான்.

டெல்லி...

நண்பர்கள் ஏழு பேரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க நேரமும் கடந்து செல்ல, பின்னர் அவரவர் வீட்டை நோக்கி சென்றனர்.

நீ போடா நான் குளிச்சிட்டு வரேன் என்ற தீபன் அவன் பிளாட்டிற்கு சொல்ல, படத்தில் மூழ்கி போயிருந்த இருவருக்கும் காலிங் பெல் சத்தம் கேட்கவே இல்லை...

கிச்சனில் சமைத்துக் கொண்டிருந்த எஸ்தர் தான் பெல் சத்தம் கேட்டு கதவை திறக்க என்னங்கம்மா உங்க ரெண்டு பொண்ணும் குறட்டை விட்டு தூங்குறாளுங்களா என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர அங்கு இருவரும் டிவியில் ஓடும் படத்தை ஆர்வமா பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன் அட செவிட்டு முண்டங்களா...

எவ்ளோ நேரம் பெல்லடிக்கிறேன் இவளுங்க ரெண்டு பேரும் செவிடு போல உட்கார்ந்திருக்கிறார்களே என திட்டிக்கொண்ட சோபாவில் அழகுக்காக வைத்திருந்த சின்ன தலகாணிகள் இரண்டை எடுத்து இரண்டு பேர் மேலும் அங்கிருந்து தூக்கி எறிந்தான்.

அவளுங்களோ படம் பார்க்கும் ஆர்வத்தில் தங்கள் மேல் விழுந்ததைகூட கண்டுகொள்ளாமல் டிவியை பார்த்துக் கொண்டிருக்க இரண்டு பேரும் உலக மறந்து அப்படி என்னம்மா படம் பார்க்கிறாளுங்க என்க,தமிழ்ல வாழைனு ஒரு படம் வந்துச்சுப்பா.

ரொம்ப நல்லா இருக்கும்.அதுதான் பாத்துட்டு இருக்காங்க என்ற எஸ்தர்,குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா என்க,ஒன்னும் வேண்டாமா நான் போய் பிரஷ் ஆகிட்டு வரேன் என்று சொல்லிக் கொண்டு அவன் ரூமிற்குள் சென்று விட்டான்...

சமைத்து முடித்த எஸ்தர் எல்லாத்தையும் ஹாட்பாக்ஸில் போட்டு முடியவர் அதை எடுத்துட்டு வந்து டைனிங் டேபிள் வைக்க படத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜூலியும் ரூபாவும் அழுது கொண்டிருப்பதை பார்த்து சிரித்துவிட்டு சோபாவில் வந்து உட்கார தீபனும் ருத்ரனும் பிரஷ் ஆகி வந்தார்கள்.

அப்படி என்ன கதைமா?இப்படி ரெண்டு பேரும் அழுதுட்டு இருக்காங்க என்கவும் பின்னர் சுருக்கமாக எஸ்தர் கதையை சொல்லவும் அப்படியா...

நல்ல படமாக தான் இருக்கு நாளைக்கு நமக்கு டூட்டி இருக்காடா என்று தீபனை கேட்க இல்லடா நாளைக்கு மருநாள் தான் அந்த இன்ஜினியருக்கு சர்ஜரி,நியாபகம் இல்லையாடா என்கவும் ஆமா ஆமாம் சரி அப்ப நம்மளும் அந்த படத்தை பார்க்கலாம் என்றான்.

பாத்துட்டா போச்சி என்றபடி எஸ்தரின் பக்கம் திரும்பியவன் ஏங்கம்மா உங்க கிட்ட ஒன்னு கேட்கணும் தப்பா நினைக்க மாட்டீங்களே என்க...

நான் என்னப்பா நினைக்க போறேன் உன்னை பையன் என்று சொல்லிட்டேன்ல அம்மாகிட்ட கேக்குறதுக்கு உனக்கு என்ன தயக்கம் என்று தீபனிடம் சொல்ல,இல்லை....எந்த நம்பிக்கையில் இந்த லூசு பயல நம்பி டெல்லி வரை வந்தீர்கள் என்கவும்,ருத்ரனோ அருகில் உட்கார்ந்திருக்கும் மைத்துனனை கொலை வெறியில் முறைத்து பார்த்தான்..

எஸ்தரோ சத்தமாக சிரித்து விட்டார்....

பின்னர் தீபனின் கையை பிடித்தவர்
இப்படி ஒரு கேள்வி கேட்பேன்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை என்று சிரித்துக் கொண்டே சொல்ல, எதிர்பாராததை இந்த தீபன் கிட்ட நீங்க எதிர்பார்க்கலாமா என்றான்.

இந்த மெண்டல் பிக் பாஸ் பைத்தியம் மா என்று ருத்ரன் சொல்ல,அதெல்லாம் பார்க்க யாருக்குப்பா நேரம் இருக்கு என்றார்.

உங்களுக்கு நேரமில்லை மா ஆனா இந்த நாய் இடியே விழுந்தாலும் அதை பார்க்காமல் தூங்காது என்க...இரண்டு பேர் ஒரு வீட்ல இருந்தாலே எப்படி இருக்கும் மா.அங்கு கிட்டத்தட்ட 20 பேருக்கு மேல உள்ள ஆணையும் பெண்ணையும் ஒரு இடத்துல விடுறாங்க ஒன்னு ஒன்னும் ஒவ்வொரு குணத்தோட இருக்கும். அதெல்லாம் பாத்து நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளணும் இல்லையா...

இதெல்லாம் இவனுக்கு எங்கம்மா புரிய போது...படிப்புல மட்டும்தான் நம்பர் ஒன் மத்ததெல்லாம் ஜீரோ..பட் உங்க பையன் ஆளினால் என்று தனது காலரை தூக்கி விட்டுக் கொண்டு தீபன் சொல்லும் போது ஒரு தலைகாணி வந்து தீபனின் மூஞ்சின் மேல் விழ,எவ அவள் என்று திரும்பிப் பார்க்க அங்கே ரூபாவோ கணவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
மற்றவர்களோ காலை சாப்பாடு சாப்பிட்டு கொண்டிருக்க ஷமீராவோ உள்ளுக்குள் தனது கணவனை தான் திட்டிக் கொண்டிருந்தாள்.மணி 8:40 ஆகுது இன்னும் இந்த மனுஷன் கீழே வராமல் இருக்கிறார்கள்.

எல்லாம் என்ன நினைப்பார்கள் என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டிருந்தவள் அங்கிருந்த கஸ்தூரியிடம் அக்கா நான் போய் அவரை பார்த்துட்டு வரேன் என்று சொல்ல,அவ்வளவு தூரம் நீ எப்படி தனியா போவ என்று கேட்டுக் கொண்டே குழந்தைக்கு இட்லியை ஊட்டி விட்டாள்

ஏன் கா மாடியில் இருக்கும் ரூமிற்கு போறதுக்கு பத்து நாளா ஆகும் என்று ஷமீரா கேட்க,ஹிஹி என்று சிரித்த கஸ்தூரி செழியன் மாடியில் இருக்குனு யார் சொன்னா?என்றாள்.

ஆமாக்கா நான் வரும்போது அவர் தூங்கிட்டு தானே இருந்தார் என்று ஷமீராவும் சிறிது வெட்கத்தோடு சிரித்துக் கொண்டே சொல்ல,நீ கீழ ரூமுக்கு போகும்போதே தம்பி வழக்கமா எந்திரிச்சு வயலுக்கு போயிடுச்சு.

என்னக்கா சொல்றீங்க அவர் எந்திரிச்சுட்டாரா என்க...ஆமா மா அதெல்லாம் எந்திரிச்சு போயாச்சு. எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட வீட்டுக்கு வரும் என்று சொல்லிக்கொண்டு மகனுக்கு தண்ணீரை குடிக்க கொடுத்தாள். .

மற்றவர்களெல்லாம் காலை சாப்பாடு சாப்பிட்டு முடித்தவர்கள் நீங்களும் சாப்பிட்டு செழியன் வந்த பிறகு சாப்பாடு கொடுத்துடுங்க என்று கஸ்தூரியிடமும் ஷமீராவிடமும் சொல்லிக்கொண்டு பக்கத்து தெருவில் இருக்கும் தம்புசாமி தாத்தாவின் வீட்டை நோக்கி எல்லாரும் சென்றனர்.

அடேய் மச்சி எதுக்குடா இப்போ நகர்வலம் போல கூப்பிட்டு போறாங்க என்று தனது அருகில் வரும் நண்பனிடம் பாபு கேட்க,வேண்டாம் டா வெறி ஏத்தாதே..

நானும் உன் கூட தானே சுத்திகிட்டு இருக்கேன் எதுக்கு கூப்பிட்டு போறாருன்னு தெரியலையே உங்க அப்பாரு???

அங்க போனா விஷயம் தெரிஞ்சுரும் ஒருவேளை முப்பத்தி ரெண்டு பல்லு தெரிய மண்டபத்துல இளிச்சிட்டு இருந்தியே அதெல்லாம் பார்த்து பஞ்சாயத்தா இருக்குமோ?.

அப்படி எதாவதென்றால் பட்டுன்னு கால்ல விழுந்திடு மாப்பி.ஏன்னா இங்க எல்லாரும் அருவா கடப்பாறை என்று வைத்திருக்கிறார்கள்.உன்னை பொளந்துட போறாங்கடா என்கவும் நண்பனை நிமிர்ந்து பார்த்த பாபு,எல்லாம் உன்னோட மனசுல இருக்கும் ஆசை தானே...

அப்படி நடக்கவே நடக்காதுடா.அதே மாதிரி நடந்தால் நீ தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்லிட வேண்டியதுதான் என்கவும்,அடப்பாவி உனக்கு நண்பனாக இருந்ததற்கு இந்த தண்டனை எனக்கு தேவையாடானு பரத் முறைக்க அதுல சந்தேகமில்லைனு சிரித்தான்.

பின்னர் வீட்டிற்குள் போக எல்லாரும் வருவதை பார்த்தவர்கள் வாங்க வாங்க என்று சோபாவில் உட்கார சொல்லியவர்கள் அம்மாடி குடிக்க எடுத்துட்டு வாங்க என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா.

ஹம்..எங்க முறைப்படி செய்த விழா உங்களுக்கு பிடித்திருந்தா?

நீங்கலாம் இப்படி சம்பிரதாயம் சடங்கு எல்லாம் பண்ண மாட்டீர்கள் இல்லையானு தம்புசாமி தாத்தா கேட்க,அந்தோணியோ ஆமாங்க என்றார்.

டெல்லி:

மனைவியை பார்த்தவன் ஏன் டி செல்லம் ஏன் இவ்வளவு சிரிப்போடு இருக்கிற? மாமா மேல அவ்ளோ பாசமா என்க,அங்கு எஸ்தர் இருப்பதை பார்த்த ரூபாவோ தனது பல்லை கடிக்க,அதுலாம் எங்க அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்கடி.நீ தாராளமா விஷயத்தை சொல்லு.

மானங்கெட்டவனே இன்னைக்கு ஆசிரமத்துக்கு பணம் அனுப்பனும்னு சொன்னனே அனுப்புனியா?.

ஐயோ என்று தனது தலையில் கையை வைத்துக் கொண்டவனை பார்த்த ருத்ரன் ஏன் டா உன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்லனு தீபனின் பிடரியில் ஓங்கி ஒரு அடி வைக்க, அவனோ வலியில் அய்யோ என்று கத்தியவன் என் தலைக்கு மேல 1008 வேலை டி.

அந்த பிசில நான் மறந்துட்டேன் .நீ அனுப்புனியா என்க,அனுப்பிட்டேன் டா அறிவு கெட்டவனே என்றாள்.பார்த்தீங்களாமா உங்கள் மருமகள் புருஷனுக்கு எவ்வளவு மரியாதையை கொடுக்கிறாளெயென்று எஸ்தரிடம் சொல்ல,உனக்கு மரியாதை ஒன்னுதான் கேடு.

எல்லாத்தையும் உங்க பையன் மறந்து போயிடுறானுங்கத்தை.இவனை கட்டிக்கிட்டு நான் படுற பாடிருக்கே அய்யோ கடவுளே என்னால் முடியலையென்றாள்.

சரி மா...அதுக்கு என்ன பண்ண முடியும்?என் பையன் சரியாகிடுவான் இப்ப நேரம் ஆயிடுச்சு வாங்க சாப்பிடலாம்.

ஆமா வாங்க சாப்பிடலாமென்று முதல் ஆளாக தீபன் எழுந்து போக,ஏண்டா சோத்துக்கு செத்தவனே.சாப்பாடு என்ன ஓடியா போய்டுதென்று ருத்ரன் கேட்க,

உனக்கு வேண்டாம்னா போய் தண்ணிய குடிச்சிட்டு படு.எங்க அம்மா சமைச்சதை நானும் என் தங்கச்சியும் சாப்பிடுகிறோமென்க, சாப்பிடும் போது எதுக்கு இந்த வாக்குவாதம் அமைதியா சாப்பிடுங்கப்பானு எஸ்தரே நால்வருக்கும் பரிமாறினார்.

அம்மா நீங்களும் உட்காருங்கம்மா ஒன்னாவே சாப்பிடலாம் என்றான்.அதே போல் எஸ்தரும் உட்கார்ந்துகொள்ள அவர் சமைத்த உணவை பார்த்து வாவ் இது என்னமா வித்தியாசமா இருக்கென்றனர்

பெருசா ஒன்னும் பண்ணலை.அரிசியும் பருப்பும் ஊறவச்சி அரைச்சு பூரி செஞ்சது என்கவும்,ஏங்கம்மா மைதாவுல தானே பூரி செய்வாங்கனு கேள்வி பட்டுருக்கேனென்று தனது அரும்பெரும் கண்டுபிடிப்பை தீபன் சொல்ல,மைதா உடம்புக்கு ரொம்ப கேடு இல்லையா அரிசி பருப்பும் புரோட்டின் தானே என்றார்...

பார்ராஆஆஆ டாக்டரோட அம்மா கலக்குறீங்க என்று தீபன் சொல்லவும் பின்ன இல்லையா என்றார். ..

நால்வரும் எஸ்தரின் சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு தான் எழுந்தனர். வயிறு ஃபுல்லா இருப்பது போல் தோன்றியது.வழக்கம் போல் அவர்கள் நால்வரும் கீழே இருக்கும் பார்க்கில் வாக்கிங் போவார்கள் என்பதால் எஸ்தரிடம் சொல்லிக் கொண்டு சென்றனர்.

அதற்குள் சாப்பிட்ட பாத்திரம் எல்லாம் எஸ்தர் கழுவி வைத்துவிட்டு ஜூலிக்கும் ரூபாவுக்கும் தயாரித்த உடையை தனித்தனி பேகில் போட்டவர் காலையில் சர்ப்ரைஸாக கொடுக்கலாம் என்று வைத்துவிட்டு டிவியை ஆன் பண்ணிட்டு சோபாவில் உட்கார்ந்திருந்தவரின் சிந்தனையெல்லாம் தனது மகள் மேலும் அண்ணன் குடும்பத்தின் மேலும் தான் இருந்தது மறந்தும் மகியை அவர் நினைக்கவே இல்லை..

அப்போது கழுத்தில் ஏதோ ஊறுவது போலிருக்க தடவி பார்க்கும்போது மகி கட்டிய தாலியை பார்த்தவர் ஒரு முடிவெடுத்து விட்டு மீண்டும் டிவி பார்க்க ஆரம்பித்தார்.

நல்ல வேலையாக அதில் தமிழ் சேனலும் வந்ததால் படம் ஏதாவது ஓடுதா என்று தேடிப் பார்க்க பெண்மணி அவள் கண்மணி என்கும் விசு படம் ஓடவும் அதை வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரம் பார்க்கில் வாக்கிங் போய்விட்டு நால்வரும் வீட்டுக்கு வந்தனர்.தீபனும் ரூபாவும் குட் நைட் சொல்லிக்கொண்டு அவர்கள் பிளாட்டிற்கு சென்று விட,ருத்ரா ஜூலியம் வீட்டிற்குள் வந்து அவரோடு உக்காந்து படம் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சீக்கிரம் படுத்து தூங்குங்கத்தை அதுதான் உடம்புக்கு நல்லது என்று ருத்ரன் சொல்ல,யோவ் டாக்டர் போதும் யா ஓவரா என் அம்மாவுக்கு அட்வைஸ் பண்ணிட்டு இருக்காத.

எப்ப பாத்தாலும் டாக்டர் புத்தியோட தான் இருக்கிறது.பலவாட்டி சொல்லிட்டேன் வீட்டை விட்டு வெளியில போனாதான் நீ டாக்டர்.

வீட்டுக்குள்ள வந்தாக்க சாதாரண மனுஷன்,இந்த ஜூலியோட புருஷன்னு என்னைக்கு என் கையால வாங்கி கட்டிக்க போறனு தெரியல என்கவும், ஓ உனக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சாடி என்றான்.

என் தைரியத்திற்கு என்ன கேடு சொல்லு பாப்போம்,முதல் முதலில் நீ வாங்குனது மறக்கவில்லையா என்க, படம் பார்க்கும் ஆர்வத்தில் இவர்கள் இருவரும் பேசுவதை எஸ்தர் கவனிக்கவில்லை.

விட்டால் பொண்டாட்டி நம்ப மானத்தை வாங்கி விடுவாள் என்பது புரிந்த ருத்ரன் எட்டி தன்னவளை இழுத்து வாயைப் பொத்தி அணைத்தபடியே தனது ரூமிற்கு கூப்பிட்டு போனவன் மனைவியோடு மெத்தையில் சரிந்தான்.

படத்தை முழுவதுமாக பார்த்து முடித்த எஸ்தர் டிவியை ஆஃப் பண்ணிவிட்டு ஒரு முறை வீடு பூட்டு இருக்கா?சிலிண்டர் ஆப் ல இருக்கா என்று பார்த்துவிட்டு இரவு விளக்கை மட்டும் ஆன் பண்ணி விட்டு தனது ரூமிற்குள் சென்றார்..

திருச்சி:

பலவித யோசனையோடு கண் மூடி உட்கார்ந்திருந்த புகழுக்கு இந்தாங்கள் டீ என்கும் மனைவியின் குரல் கேட்டு கண்ணை திறந்தவர்,கொடு மானசா என்றவாறு டீ கப்பை வாங்கியவர் உன் மகனும் மருமகளும் எப்படி இருக்காங்கள்??? உன்னை நல்ல படியாக அந்த பொண்ணு கவனிச்சிதா என்க...

"அதெல்லாம் ஒரு குறையும் இல்லைங்க"

மதியம் ஒருவேளை மட்டும்தான் நான் சமைக்கிறது.மிச்ச ரெண்டு வேலையும் ஷீலா தான் சமைக்கிறாள்.
காலையிலேயே சமைச்சுட்டுதாங்க வேலைக்கு போகுது என்று மானசா சொல்லவும் எப்படியோ குடும்ப பொறுப்பு வந்தால் ரொம்ப நல்லது தானே....

"ஆமாங்க"

ரொம்ப மாற்றம் தெரியுது..

ம்ம் என்றார்..

சரி நீங்கள் போன விஷயம் என்ன ஆனது?என்க...கல்யாண வேலை போய்ட்டு தான் இருக்குமா...அப்பு இன்னும் ரெண்டு வாரத்தில் வராணாம்
தங்கச்சியும் மச்சானும் சொன்னாங்க என்றார்.

அப்படிங்களா எல்லாரும் அங்க நல்லா இருக்காங்களா வயலெல்லாம் போய் பார்த்தீர்களா?விளைச்சல் எப்படி இருக்கு?.

எல்லாம் பாத்துட்டு தான் வந்தேன். இங்கு நம்ம எம்எல்ஏ காத்தவராயன் வீட்டுக்கு ரைடு போற வேலை அதனால தான் உன்னை அழைக்க வரமுடியவில்லை என்று புகழ் சொல்ல அப்படிங்களா அந்த மனுஷன் தான் ரொம்ப நல்லவரே என்றார்.

நல்லவர் என்று நீயும் நானும் சொன்னால் போதுமா மானசா?யாரோ அவருக்கு பிடிக்காதவங்க இந்த வேலையை பண்ணிருக்காங்க.

ஆமாங்க,அரசியலில் கரை படாத ஆள் யாரென்றால் உடனே எல்லாரும் காத்தவராயன்னு சொல்லுவாங்க.ஆனா அவருக்கு யாரு இப்படி ஒரு அவப்பெயர் ஏற்படுத்தி இருப்பா?என்கவும் அதுதான் எனக்கும் புரியல மா.

ஹையர் ஆபிசர் சொல்றாங்க நான் சாதாரண ஊழியன் போய் தானே ஆகணும்...அவர் நிக்கிற தொகுதிக்கு இதுவரைக்கும் 10 பைசா பணம் கொடுத்தது கிடையாது.

அவர் செய்கிற நன்மையை பார்த்துட்டு தான் இத்தனை வருஷமும் மக்கள் ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறாங்க நல்லது பண்ணுனாவே மக்கள் அவங்களை உயர்த்துவாங்கன்னு என்னைக்கு தான் மற்ற அரசியல்வாதிகள் எல்லாம் புரிஞ்சுக்க போறாங்களோ தெரியலையென்றார்.

இப்போ இருக்கிறவங்களுக்கு எல்லாம் நல்லது என்கிறது இரண்டாவது பட்சம் முதலில் பணம்.பணம் இருந்து விட்டால் போதும்,அவன் எவ்வளவு பெரிய ஃபிராடா இருந்தாலும் சொந்த பந்தங்களும் அவனை தேடி வந்துடுது.

மனிதர்களுக்கு இப்பெல்லாம் மதிப்பே கிடையாதுங்க என்க,நீ சொல்றது உண்மைதான் என்கவும் சரி மானசா நீ டிபன் பண்ணு நான் வாக்கிங் போயிட்டு வரேனென்றபடி அங்கிருந்து சென்றார்.



வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top