Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
டெல்லி:
இருவரின் அதிர்ந்த முகத்தை பார்த்தவர் தாயில்லாமல் வளர்வது எவ்வளவு கொடுமையான விஷயமென்பதை உணர்ந்தவர் இருவரின் மனநிலையை மாற்ற நினைத்து எனக்கு ரொம்ப பசிக்கிற போல இருக்குமா.இந்த ஊர்ல பானிபூரி கச்சோரிலாம் நல்லா இருக்கும்னு கேள்விப்பட்டேன்.அம்மாவுக்கும் கொஞ்சம் வாங்கி தர மாட்டீங்களா?.
அதிர்ந்து போயிருந்த இருவரும் சிரித்து விட்டனர்.
உங்களுக்கு இல்லாததா மா...என்ன சாப்பிடணும் சொல்லுங்கள் ரெண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு செஞ்சி தரோம் என்று சொல்ல..ஐயோ அம்மாடி...
உங்க ரெண்டு பேரின் பிள்ளையை தூக்கி வளர்கணும் அதனால் இன்னும் பத்து வருஷமாவது நான் உயிரோடு இருக்கணும்..உங்க சமையல் சாப்பிட்டு எனக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது என்று பயந்து கொண்டே சொன்னார்.
அவர் சொன்னதை கேட்டு ஜூலியும் ரூபாவும் முறைத்து பார்த்தாளுங்கள்.
ஹாஹா என்று சிரித்தவர் சரி வீட்டிற்கு போகலாம்.டவுனுக்கு வந்து ரொம்ப நேரம் ஆகுது என்கவும்,பின்னர் மூவரும் அங்கிருக்கும் ரோட்டோர கடைகளில் விரும்பியதெல்லாம் சாப்பிட்டு,வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
தையல் மெஷினும் டெலிவரிக்கு வந்திருந்தது.மெஷினை வீட்டிற்குள் எங்கே வைக்கலாமென்று பார்க்க தன்னுடைய ரூமிலேயே வைத்துக் கொள்கிறேனென்றார்.
ஏனென்றால் இரவில் துணி தைக்கும் போது அந்த சத்தம் பிள்ளைகளுக்கு தொந்தரவாக இருக்குமோ என்ற எண்ணத்தில்....
அதேபோல் அவர் ரூமில் வைத்து விட்டு மெஷினை பிட் பண்ணி கொடுத்து செக் பண்ணி பார்க்க சொல்ல,ஆண்டவரேனு மனதிற்குள் ஜெபம் செய்துவிட்டு மிஷினில் உட்கார்ந்து தைத்துப் பார்த்தவர் எல்லாம் சரியாக இருக்கு பா இருங்கள் காபி எடுத்துவரேன் என்கவும் அவர்களோ வேண்டாமாயென்று சென்றனர்.
பின்னர் இருவரையும் ஒருமுறை ஏற இறங்க பார்த்து விட்டு அளவை நறுக்க ஆரம்பித்தார்..அவர் என்ன தைக்க போகிறாரென்பது ஜீலிக்கும் ரூபாவிற்கும் புரியவில்லை.
இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டே அங்கிருந்த பெட்டில் உட்கார்ந்தவர்கள் அப்படியே தூங்கிவிட்டனர்.
இருவருக்குமான துணியை பாதி தைத்து முடித்துவிட்டு எஸ்தர் நிமிர்ந்து பார்க்க,சுவரிலிருந்த கடிகாரமோ மாலை 5 மணி என்று காட்டியது.
பின்னர் கைகளை நீட்டி மடக்கி சோம்பல் முறித்தவர் இருவரும் தூங்குவதை பார்த்துவிட்டு கிச்சனிற்கு சென்று பாலை சுட வைத்து கொண்டிருக்கும் போது அவளுங்களும் எழுந்து பிரஷாகி வந்தனர்.
அம்மா என்கும் சத்தம் கேட்டு கிச்சன்ல இருக்கிறேன் டீயா இல்லை காபியா என்க எனக்கு காபி என்று ரூபா சொல்ல,ஜூலியோ எனக்கு டீ என்றாள்.
சரி என்று போட்டு எடுத்துட்டு வந்தவர் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து மூவரும் குடித்துக் கொண்டிருக்கும் போது காலிங் பெல் சத்தம் கேட்டது.
ரூபா போய் கதவை திறக்க ருத்ரனும் தீபனும் வந்தனர்.ருத்ரனின் முகத்தை வைத்து ஏதோ சரியில்லைனு உணர்த்துக் கொண்ட ஜூலி அண்ணா என்ன ஆச்சுன்னா என்க இன்னைக்கு ஒரு சின்ன குழந்தைக்கு ஆபரேஷன் அதனால் தான் அவன் அப்படி இருக்கானென்று தீபன் சொல்ல,சரி ணா என்றாள்.
தம்பி டீ எடுத்துட்டு வரட்டுமா என்கவும் நீங்க இருங்கம்மா அவள் எடுத்துட்டு வருவாளென்று தனது மனைவியை பார்த்து சொல்லியவன் எஸ்தரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு சோபாவில் சாய்ந்து கண்ணை மூடினான்.
கிச்சனிற்குள் சென்ற ரூபாவும் இஞ்சி டீ போட்டு இரண்டு கப்பில் எடுத்துட்டு வந்தவள் ஒன்றை கணவனுக்கு கொடுத்துவிட்டு மற்றொன்றை எடுத்துக் கொண்டு அண்ணனின் ரூம் கதவை தட்டிவிட்டு சில நொடிகள் சென்று கதவை திறக்க அங்கிருந்த சேரில் உட்கார்ந்து இருந்த ருத்ரனும் என்னமா என்க, டீ ணா என்றாள்.
ம்ம் குடு என்று சொல்லவும் அங்கிருந்த டீபாயின் மேல் வைத்துவிட்டு என்ன ஆச்சிணா ஏன் ஒரு மாதிரியா இருக்க?.
ஒன்னும் இல்லடா...ஒன்னரை வயது குழந்தைக்கு ஆப்ரேஷன் பண்ணினேன்.
சின்ன குழந்தை இல்லையா மனசு கஷ்டமா போயிடுச்சென்று தங்கையிடம் சொன்னாலும் உள்ளுக்குள் இருக்கும் எரிமலையோ அதன் வேலையை நிறுத்தவில்லை.
சரி ணா..வேற ஒன்னும் பிரச்சனை இல்லையே?,எனக்கு என்னடா பிரச்சனை இருக்க போகுது?அதான் எஸ்கார்ட் போல உன் புருஷன் 24 மணி நேரமும் என் கூடவே இருக்கானேயென்று சிரிக்க,ரூபாவோ தனது அண்ணனை செல்லமாக முறைத்தவள் இது உனக்கு ஓவரா தெரியலையா என்கவும்,முதல்ல அவன் எனக்கு பிரண்ட் அதுக்கப்புறம் தான் உன் புருஷன் போடி என்றான்.
தனது அண்ணனின் இயல்பு திரும்பியதைப் பார்த்த பிறகுதான் ரூபாவுக்கும் மனம் நிம்மதியாக இருந்தது..
சிறிது நிமிடத்தில் அண்ணன் தங்கை இருவரும் ஹாலிற்கு வர,வாங்க டி ஆர் என்று தீபன் சொல்ல,நக்கலு என்றபடியே நண்பனின் தோள்பட்டையில் ஓங்கி ஒன்னை வைத்துவிட்டு ஜுலியின் பக்கத்தில் போய் உட்கார்ந்தவன், என்னம்மா டெல்லி பிடித்து இருக்கா என்று எஸ்தரிடம் கேட்க,ரொம்ப பிடிச்சிருக்கு பா..இன்னைக்கு நாங்க மூணு பேரும் வெளியிலே போயிருந்தோம்.
அப்படியா?சொல்லவே இல்லையே என்றான்.
சும்மா வீட்ல இருக்க போர் அடிச்சது. அதனால தான் அம்மாவை கூட்டிட்டு போனோம்.அப்புறம் ஒரு சர்ப்ரைஸ் என்று ஜூலி சொல்ல என்ன என்றான்.
இரண்டு பேரும் அம்மா ரூம்ல பாருங்கள் என்க..என்னவா இருக்குமென்ற யோசனையோடு ரூம் கதவை திறந்து பார்க்க அங்கே தையல் மெஷின் இருப்பதை பார்த்து வாவ் சூப்பர்...
அம்மா உங்களுக்கு ஸ்டிச்சிங் தெரியுமா என்க,நல்லா தெரியும் பா.அதான் மருமகளும் மகளும் சேர்ந்து வாங்கி கொடுத்திருக்காங்க என்று அவர் உரிமையாக சொன்னதைக் கேட்டு நால்வருக்கும் கண்கள் கலங்கிவிட்டது.
உறவென்று சொல்ல இருந்த ஒரு ஜீவனும் இரண்டு வருடங்களாக தங்களிடமிருந்த விலகி இருக்கிறது.அதன் பிறகு நால்வருக்கும் நால்வரும் மட்டும்தான்.அடுத்ததாக பார்த்தால் டாக்டர் கர்ணனும் அவர் மனைவி ஷீத்தலும் தான்.மற்றபடி வேறு யார் கூடயும் அவர்கள் பழக்கம் வைத்துக் கொள்வதில்லை.
வனிச்சூர்:
என்னாது இந்த மனுஷன் ஜல்லிக்கட்டுல கலந்து கொள்ளவாறாஆஆஆஆ!!
"அடப்பாவி இன்னும் உனக்கு என்னென்ன திறமைதான்டா இருக்கு?"
இத்தனை நாளா என்கிட்ட மறைத்து வைத்திருக்கிறியேனு ஷமீரா புலம்பி கொண்டிருக்க வெளியே போய் மீண்டும் கதவைத் தட்டி உள்ளே வந்த கஸ்தூரி,வாம்மா சாமி கும்பிட வரச்சொல்றாங்க.
சரிங்கக்கானு கஸ்தூரின் பின்னாடியே போனாள்.
அவளை பூஜை அறைக்கு அழைத்துப்போக அங்கிருந்த விருமாயி பாட்டியோ அம்மாடி விளக்கை பற்றவை என்கவும் சரிங்க பாட்டி என்றவள் அங்கிருந்த காமாட்சி விளக்கை ஏற்றிவிட்டு கையை கூப்பி கண் மூடியவள் இதுவரை உங்களை வணங்க வேண்டிய சூழல் எனக்கு வந்ததில்லை...
இன்று முதல் முதலாக கேட்கிறேன் இன்று போல் என்றும் இந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குறையாமல் இருக்கணும்.
சொந்த பந்தங்கள் அனைவரும் நல்லா இருக்கணும்.இந்த குடும்பத்தில் ஒருத்தியாக என்னை கொண்டு வந்து சேர்த்ததற்கு கோடான கோடி நன்றி மா என்றாள்.
பின்னர் தட்டிலிருந்த மஞ்சள் குங்குமத்தை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டவளிடம்,பெரியவர்களிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுமாறு அவள் காதில் பொறுமையாக கஸ்தூரி சொல்ல,சரிங்கக்கா என்றவள் அங்கிருந்த விருமாயி வீரையன் காலிலும்,செல்லதுரை வானதி,பின்னர் அவளுடைய அத்தை மாமா மூவரின் காலில் விழ நல்லா இருமா என்றனர்.
கஸ்தூரி என்று வானதி சொல்ல சரிங்கத்தை என்றவள் கிச்சனில் இருந்த பால் சொம்பு எடுத்துட்டு வந்து ஷமீராவின் கையில் கொடுத்துவிட்டு வாமா என்று மாடியில் இருக்கும் ரூமிற்கு அழைத்துப் போனாள்.
படியில் ஏறி வந்து கொண்டிருந்த ஷமீராவிற்கு உள்ளுக்குள் நாலைந்து ட்ரெயின் ஓடுவது போல திக்திக்கென்று இருந்தது.ஒவ்வொரு பெண்ணும் இந்த சூழ்நிலையை கடந்து தான் வந்து ஆக வேண்டும் என்று நிதர்சனம் புரிந்தாலும் ஏதோ மனதிற்குள் கொஞ்சம் பயம் வராமலும் இல்லை .
அவளின் முகத்தை பார்த்த கஸ்தூரி பயப்படுற அளவுக்கு ஒன்னும் இல்லை மா.செழியன் தங்கமான பையன்.உன் மனசு அறிஞ்சு தான் நடந்துக்கும் என்க, கண்டிப்பாக இது தேவையாக்கா என்றாள்.
ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக தந்து விட்டு வாழ்க்கை எப்ப ஆரம்பிக்கணும்னு நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணுங்க. மற்றவர்களுக்காக நம்ம வாழ்க்கையை தொடங்கக்கூடாது புரியுதா.
இதை நான் உனக்கு சொல்றதை விட உன் புருஷனே உனக்கு சொல்லுவாரு என்ற கஸ்தூரி,அறையின் முன்பு ஷமீராவை விட்டுவிட்டு கீழே வந்து விட்டாள்.
பெருமூச்சு விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், கதவைத் திறந்து உள்ளே போக அங்கே அலங்கரிக்கப்பட்ட கட்டிலும் ரூமிற்குள் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியும் வரவேற்தது.
உள்ளே வந்து கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு கையிலிருந்த சொம்பை அங்கிருந்த டீப்பாயின் மேல் வைத்தவள் கணவன் எங்கே என்று தேட பால்கனி கதவு திறந்திருப்பது தெரிந்தது.
இந்த மனுஷன் அங்கு நிற்கிறாரோ,இன்னும் என்னலாம் மறைச்சிருக்கார்னு கேட்காமல் விடப் போவதில்லை.இதோ வருகிறேன் இருயா என்றவள்,கதவின் ஓரம் போய் எட்டிப் பார்க்க,செழியனோ பட்டு வேஷ்டி சட்டையை அணிந்து கொண்டு அங்கிருந்த பால்கனியின் கம்பியில் சாய்ந்தவாறு தூரத்து வான் நிலவை உற்று பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.
சிறிது நொடிகள் நின்றவள் சரி தானாக வரட்டும் நம்ம ஏன் போய் கூப்பிடணுமென்று அமைதியாக உள்ளே வந்தவளோ அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து கொண்டாள்.
பால்கனியில் நின்றிருந்த செழியனோ இன்னும் இவ என்ன பண்றா?மனுஷன் ஒருத்தன் இவளுக்காக காத்துட்டு இருக்கிறேனேன்னு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா பாரு...
நாலு பொம்பளைங்க ஒன்னு சேர்ந்துட்டா போதும் ஊர் கதை உலகத்து கதை என்று பேசிட்டு நேரத்தை போக்குறது.
அவர்கள் தான் வயதானவர்கள் ஏதோ பேசிட்டு போறாங்கள்.என்னமோ நூத்து கெழவி போல இவளும் அவங்க கூட கதையளக்குறாள்.இன்னைக்கு நம்ம வாழ்க்கையில எவ்வளவு முக்கியமான நாள்?.
சீக்கிரம் போய் நம்ம புருஷனை பார்ப்போம் சில பல முத்தங்களை கொடுப்போம் அப்படிங்கற எண்ணம் இவளுக்கு இருக்கா?.அதெல்லாம் சுத்தமாக கிடையாது என்று திட்டிக் கொண்டவன்,போன் பண்ணி தான் இவளை கூப்பிடணும் போல ஆண்டவா.
உலகத்துல என்ன போல எவனும் ஃபர்ஸ்ட் நைட் கொண்டாட மாட்டான் என்று முணுமுணுத்துக் கொண்டு உள்ளே வந்தவன்,அங்கிருந்த மனைவியை பார்த்து வந்துட்டியாடி என்று விழிகள் விரிய கத்தினான்.