• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்-தம்புசாமி வீடு:

ஏண்டி சுமதி உன் பேரனுங்க ரெண்டு பேரும் என்னதான் மனசுல நினைச்சுட்டு இருக்கானுங்க?நம்ம குடும்பத்தில் நடக்கிற முதல் விசேஷம்...

நம்ப பொண்ணு என்ன பத்து புள்ளையா பெத்து வைத்திருக்கு?.இதுக்கு வரலைன்னா அடுத்த பிள்ளைக்கு போகலாம்னு இருக்க?.ஒத்த புள்ளை கருவேப்பிலை கொத்து போல பெத்துருக்கு.அந்த புள்ளையோட விழாவுக்கு இரண்டு பயலாலையும் இவனுங்க பொண்டாட்டிய கூப்பிட்டு வர முடியாதா?

என்னமோ கட்டாகாளி பயலுக போல கையை வீசிட்டு வராங்களேயென்று முற்றத்திலிருந்த ஈசி சேரில் உட்கார்ந்து கொண்டு மனைவியிடம் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்..

சுமதி பாட்டிக்கும் அந்த எண்ணம் இருக்க தான் செய்தது.தீரனும் மாறனும் மட்டுமே வந்திருந்தனர் தவிர பானுவையும் நசீராவையும் கூப்பிட்டு வரவில்லை.

சொந்த பந்தம் வந்துட்டு போகுற நேரத்தில் இப்படி சத்தம் போடாதீங்க என்கவும்,ஆமாண்டி நான் பேசினா உடனே சத்தம் போடுறேன்னு என் வாயை அடைச்சுரு.

அந்த ரெண்டு தடி மாடுகள் கிட்ட எதுவுமே கேட்டுறாதே,ஏன்னா உனக்கு அவனுங்கள் ரெண்டு பேரும் செல்ல பேரனுங்கள் இல்லையா என்றவாறு தம்புசாமி தாத்தா தனது மனைவியை முறைத்துப் பார்த்தார்.

அந்த நேரம் தீரன்,மாறன் மற்றும் கண்ணன் மூவரும் பேசிக்கொண்டே வீட்டிற்குள் வர,பேரன்கள் வருவதை பார்த்த சுமதி பாட்டியோ என் கண்ணே பட்டுடும் போலிருக்கே...

ரஞ்சனி ரஞ்சனி கொஞ்சம் உப்பும் மிளகாயும் எடுத்துட்டு வா என்று மருமகளுக்கு குரல் கொடுக்க, இதோ வரேங்கத்தை என்றவரும் அவர் சொன்னது போல எடுத்துட்டு வந்து கொடுத்தார்.

ஐயா செத்த நில்லுங்களென்று தனது பேரனுங்களை பார்த்து சொல்ல,தாத்தாவை பார்த்து விட்டு என்னடா இந்த நம்பியார் வேற இங்கே இருக்கிறார்.அப்பாயி நம்மள நிக்க சொல்லுதென்று மாறன் முணுமுணுக்க,செத்த இருங்கடா..நம்பளை வச்சு நம்பியார் ஏதாச்சும் இப்ப படம் காட்டுவாரு என்ஜாய் பண்ணலாமென்று தீரனும் சிரிக்காமல் சொன்னான்.

தனது அண்ணன் சொன்னதை கேட்டதும் கண்ணனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

தோட்டத்து பக்கம் திரும்பி உட்கார்ந்திருந்த தாத்தாவோ கண்ணன் சிரிக்கும் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவார் என்னடா இங்க ஆடிக்கிட்டா இருக்கிறாங்க சிரிக்கிறனு முறைத்தார்..

அதெல்லாம் ஒன்னும் இல்ல தாத்தா..வேற ஒன்னு நினைச்சேன் சிரிச்சேன் என்றான்.

அப்படி என்ன நினைச்ச சொல்லித்தொலை நானும் சிரிப்பேன் என்கவும் அது சொன்னா நீ திட்ட மாட்டியே என்றான்.

நீ முதல்ல சொல்லுயென்றார்.

உனக்கு சூப்பர் மேன் டிரஸ் போட்டு பார்த்தேன் எப்படி இருக்குன்னு?அதை நினைத்து சிரிப்பு வருது என்கவும் தங்களது தம்பி சொன்னதை கேட்டு அவனுங்களும் தாத்தாவை அந்த கோலத்தில் நினைத்து பார்த்து சத்தமாக சிரித்து விட்டனர்

தனது அண்ணன் சொன்னதை கேட்டுக் கொண்டே வந்த கவிதா கண்மணி இருவருக்கும் சிரிப்பு தாங்கவில்லை. .

பாத்தியாடி உன் பேரனை?.

எனக்கு இங்கிலீசு தெரியலன்னு கெட்ட வார்த்தைகளால் திட்டுறானேனு தாத்தாவும் கோபப்பட்டு கத்து,ஐயோ தாத்தா அண்ணன் உன்னை திட்டலை. இங்கிலீஷ் படத்துல வர ஹீரோ போல இருக்குன்னு சொல்லுதுனு கவிதா சொல்ல,என்ன சின்ன குட்டி உன் அண்ணனுக்கு ஒத்து ஊதுறியா?.

ஏன்டா ரெண்டு பேரும் என்னமோ கல்யாணம் ஆகாத பய போல மைனர் ஜாலி மணிபர்ஸ் காலினு வீசிட்டு வரீங்களே உங்க ரெண்டு பேர் பொண்டாட்டிய கூட்டிட்டு வந்தா இங்க என்ன எல்லாரும் கடிச்சு தின்னுடுவார்களா,இல்லை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிடுவாங்களா சொல்லுங்கடா?.

அது வந்து தாத்தா...நசீரா கன்சீவா இருக்காள்.இப்போதைக்கு பஸ்ல இவ்வளவு தூரம் டிராவல் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்க என்று தீரன் சொல்ல,ஈசி சேரில் உட்கார்ந்திருந்தவரோ தனது குடும்பத்திற்கு அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு வரப்போவதை கேட்டு என்னய்யா சொல்லுறனு சந்தோஷத்தில் அதிர்ந்து போய் எழுந்தார்.

ஆமாம் தாத்தா.அதனால்தான் கூப்பிட்டு வரலை.துணைக்கு பானுவும் இருக்கு.

ஏன்யா இவ்ளோ பெரிய நல்ல விஷயத்தை இந்த கிழவன்டையும் வீட்ல இருக்கிறவங்க கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணலையா?.

அந்த அளவுக்கா நாங்க பாவம் பண்ணிட்டோம் சொல்லு?.

முஸ்லிம் குடும்பத்தில் போய் கட்டிக்கிட்ட அவங்களுக்கும் நமக்கும் சாதி சண்டை வந்தா எப்படி இருக்கும்?அந்த பொண்ணோட வீட்ல என்னா பேச்சு பேசினார்கள் மறக்க முடியுமா?.

என்னமோ நம்ப ஒன்னு இல்லாத பய போலையும் அவன் கோடீஸ்வரன் போலையும் என் பொண்ணை வெச்சுகிட்டு வாழ வக்கில்லைனு சொல்லி காட்டுனாங்களே.

இன்னைக்கு அவங்க பொண்ணு ராணி போல என் பேரன் வச்சிருக்காங்கற சேதி எங்களுக்கு தெரியும்.அவங்களுக்கு தெரியுமா என்றார்..

"இல்ல தாத்தா"

நசீரா ரெண்டு வருஷமா அவங்ககிட்ட பேசறதில்லை.

சரி போனதை விடு இந்த நல்ல விஷயத்தை சொல்ல வேண்டியது நம்முடைய கடமை.பொண்ணை பெத்தவங்களுக்கு கோவதாபம் இருக்க தான் செய்யும்.சுமதி உன் மவனுக்கு போன் போட்டு வர சொல்லு என்றார்.

சின்ன குட்டி அப்பனுக்கு ஒரு போன் போட்டு கொடுத்தா என்க,சரி அப்பாயி என்றவள் பெரிய தந்தைக்கு போன் பண்ணி பாட்டியிடம் கொடுத்தாள்.

அன்பரசனோ பஞ்சாயத்து விஷயமாக பேசிக் கொண்டிருக்க போன் சத்தம் கேட்டு யாரேன்று பார்க்க வீட்டிலிருந்து கால் வருவது தெரிந்து அட்டென்ட் பண்ணியர் ஹலோ என்க அய்யா நான் தான் பேசுறேன் என்கவும்,சொல்லுமா.

தீரன் பொண்டாட்டி மாசமா இருக்காம்...உங்கப்பா வர சொல்றார்பா என்று போனை வைத்தார். ..

செழியனின் பெரியப்பா மருமகளான கஸ்தூரியை வானதி கூப்பிட, ஷமீராவோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவளும் தனது சின்ன மாமியார் கூப்பிடுவதை கேட்டு,அத்தை கூப்பிடுறாங்க..

இதோ வந்துடுறேனென்று மடியிலிருந்த குழந்தையை தூக்கி கொண்டு வானதியிடம் வந்தவளோ சொல்லுங்கத்தை என்றாள்.

அம்மாடி ராவுக்கு உன் ஓப்படியாக்கு சடங்கு இருக்கு.சாமி ரூம்ல புடவையும் மத்த பொருளெல்லாம் இருக்கு அதை கொடுத்துட்டு விசயத்தை காதில் போடுமா என்கவும்,சரிங்கத்தை நான் பாத்துக்குறேன் என்றாள்.

மருமகளின் இடுப்பிலிருந்த பேரனை பார்த்தவர் ஐயா கவினு..ஆச்சி கிட்ட வரிங்களா சாமி என்கவும் அவனும் தனது சின்ன பாட்டியிடம் தாவினான்.

கஸ்தூரியோ அங்கிருந்த பூஜை அறைக்குள் சென்றவள் தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு மலையம்மா என்றும் போல இந்த குடும்பம் சந்தோஷமாக தழைத்து வாழ நீயே அருள் புரியணுமென்று வேண்டினாள்..

பின்னர் ஷமீராவிற்கு சுமங்கலி பெண்கள் ஒற்றைப்படையில் சடங்கு செய்து முடிக்கவும்,அவள் கையில் தாம்பாளத்தை கொடுத்த கஸ்தூரி அம்மாடி போய் குளிச்சிட்டு இதை கட்டிக்கிட்டு ரெடியாகு என்றாள்.

வானதி பால் காய்ச்சியாச்சா என்று விருமாயி கேட்க ஆச்சிங்கத்தை என்றார்.சரி அந்த வெள்ளி சொம்பில் ஊத்தி வை என்க.கஸ்தூரி உன் தங்கச்சியையும் கொழுந்தனாரையும் சாப்பிட கூப்பிட்டு வாம்மா.

இதோங்கத்தை என்றவளோ ஷமீராவின் ரூம் கதவை போய் தட்ட சிறிது நொடியில் அவளும் கதவை திறந்தாள்..

அம்மாடி சாப்பிட கூப்பிடுறாங்க என்கவும் அக்கா எனக்கு வெளியில் வர ஒரு மாதிரியா இருக்குங்கக்கா.நான் வேண்டுமானால் சாப்பாட்டை எடுத்துட்டு வந்து ரூமுக்குள்ளவே சாப்பிட்டுக்கட்டுமா என்று தயக்கமாக கேட்க...ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த நாளில் இப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்த கஸ்தூரியும் இதுக்கு ஏன் தயக்கம்...

நான் எடுத்துட்டு வரேன் நீ இரு என்று சொல்லிவிட்டு கிச்சனிற்கு போனவர் அங்கிருந்த தனது சின்ன மாமியாரிடம் ஷமீராவுக்கு நான் ரூமுக்குள்ளயே சாப்பாடு கொடுக்கிறேன் என்கவும் சரிமா என்றார்...

மற்றவர்கள் எல்லாம் வெளியே இருந்த பந்தியில் சாப்பிட்டு முடித்தனர்.பரத்தும் பாபுவும் கண்ணனோடு செகண்ட் ஷோ படம் பார்ப்பதற்காக டவுனுக்கு போய்க் கொண்டிருந்தார்கள்...

ஏன் மாப்பி ஷோ எத்தனை மணிக்கு?.

9:00 மணிக்கு என்று சொல்லிக்கொண்டு கண்ணன் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்தான்...

என் கிரகத்தை பாரேன் மாப்பி...

இந்த நேரத்துல உன் தங்கச்சி கூட படம் பாக்க போக வேண்டிய வயசு ஆனால் இப்படி இரண்டு தடிமாடுங்க கூட போகணுமென்று இருக்கேயென பரத் சொல்ல உனக்கு கல்யாணம் நடக்கணுமா வேண்டாமா என்பதை நாங்க முடிவு பண்ணனும் மச்சி என்று சொல்லிக்கொண்டு நண்பனின் பிடரியில் பாபு ஒரு அடியை வைத்தான்.

அதேப்போல் ஷமீராவுக்கு டிபனை எடுத்துக் கொண்டு வந்த கஸ்தூரி கதவை தட்டி விட்டு உள்ளே வந்தார். அவரைப் பார்த்து கட்டில் மேல் உட்கார்ந்திருந்தவள் எழுந்து நிற்க நமக்குள்ள எதுக்கு இந்த சம்பிரதாயெல்லாம்..

நம்ப குடும்பத்துக்கு நான் மூத்த மருமகள் அடுத்த மருமகள் நீனு சரியா. நம்ம ரெண்டு பேரும் அக்கா தங்கச்சி அதனால இந்த மரியாதை எல்லாம் வேண்டாமென்க,கஸ்தூரியின் அன்பான பேச்சு ஷமீராவுக்கு ரொம்ப பிடித்து விட்டது..

ஒற்றைப் பெண்ணாய் பிறந்தவளுக்கு கூட ஒரு உடன்பிறப்பு இல்லை என்று எத்தனையோ நாள் வருத்தப் பட்டிருக்கிறாள்.இன்று தனது கணவன் மூலமாக எண்ணற்ற உறவுகள் தனக்கு கிடைத்திருக்கிறதை நினைக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது.

சாப்பிடுனு கஸ்தூரி சொல்ல அக்கா நீங்க சாப்பிடலையா என்று கேட்டவளை பார்த்து சிரித்தவள் உங்க மாமா வெளியில் பந்தி பரிமாறிட்டு இருக்கிறார்கள்.

அவர் வந்த பிறகு நான் சாப்பிடுகிறேன் என்க...ஓஓஓ மாமாவை விட்டு நீங்க சாப்பிட மாட்டீங்களா என்று சிரித்துக்கொண்டே கேட்க நைட் ஒரு பொழுது தான் உங்க மாமா வீட்டில் சாப்பிடுகிறார்.

காலையிலேயே காட்டுக்கு போயிடுறாங்களா சாப்பாட்டை யார்கிட்டயாவது கொடுத்து அனுப்பி விடுவேன்.சரி ஒரு வேளையாவது ஒன்னா சாப்பிடுவோமே என்றுதான்னு சிரித்துக் கொண்டே கஸ்தூரி சொல்ல சரிங்கக்கா என்றாள்...

கொழுந்தனாரு அவருக்கு ஏத்த ஜோடியா தான் உன்ன பிடிச்சிருக்கார்.

அப்படிங்களா அக்கா நெஜமாவா?

ஆமாம்....என் கொழுந்தனார வளைச்சி போட சொந்த பந்தத்தில் எவ்வளவு போட்டி தெரியுமானு பெருமையாக கஸ்தூரி சொல்ல..

அதைக் கேட்ட ஷமீரா இந்த முரட்டு காளைக்கு அவ்வளவு போட்டியாக்கா என்று சத்தமாக சிரித்து விட்டாள்...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
டெல்லி:

ரொம்ப சிக்கலான ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தவனை பார்த்த கர்ணன்,வெல்டன் மை பாய் என்றவாறு இறுக்கமாக அணைத்துக் கொண்டார்

கர்ணனின் வாயால் பாராட்டு வாங்குவதென்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதையென்பது அவரிடம் படித்த மாணவர்களுக்கும்,அவரோடு வேலை பார்ப்பவர்களுக்கும் தெரிந்த ஒன்றே.

ருத்ரனோ அவரது பாராட்டை வியந்து போய் பார்த்தான்.இதுவரை அவர் ருத்ரனை பாராட்டியதே இல்லை.இது தான் முதல்முறை என்பதால் அந்த நெகிழ்ச்சியில் அவனுக்கு ஒரு நொடி கண்கள் கலங்கிவிட்டது.

அதேபோல் அங்கிருந்த மற்ற டாக்டர்களும் நர்சுகளும் ருத்ரனுக்கு வாழ்த்துக்கள் சொல்ல தீபனோ எதுவும் சொல்லாமல் நண்பனை அணைத்துக் கொண்டான்.

அப்பொழுது கர்ணனோ டேய் படுவா என்னடா பண்ற?இது ஆபரேஷன் தியேட்டர் என்று அந்த இடத்தை சகஜமாக்க மற்றவர்களோ சிரித்து விட்டனர்.

பின்னர் கேஸ் சீட்டில் மற்ற டீடெயில்ஸ் எல்லாம் கர்ணன் எழுத ருத்ரனும் அவரை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனின் பார்வையை உணர்ந்தவர் என்னை சைட் அடிச்சு என்ன புண்ணியும் ஜூலியை போய் பார்த்தாலும் ஏதாவது வொர்க் அவுட் ஆகுமென்றவாறு எழுத,பங்கம் பங்கமென்று தீபனும் சிரித்து விட்டான்.

அங்கிருந்த நர்சுகளில் ஒருத்தியோ இதை பாத்தால் ஆபரேஷன் தியேட்டர் போலயா இருக்கிறதென்க,இன்னொரு நர்ஸோ பெரிய டாக்டர்,தீபன் டாக்டர்,ருத்ரன் டாக்டர் மூணு பேரும் ஒரு இடத்தில் சேர்ந்தால் பின்னர் அந்த இடம் கலகலப்பாக தானே இருக்குமென்கவும் அது என்னவோ உண்மைதான் என்றார்.

சரி இந்த குழந்தையோட ஃபேமிலி கிட்ட போயிட்டு முதல்ல விஷயத்தை சொல்லலாம்..அந்த பொண்ணு ரொம்ப அழுதுகிட்டே இருந்தாங்களென்ற கர்ணன் கதவை திறந்து வெளியே போக,ருத்ரனின் உடலோ இரும்பை போல் விரைத்தது.

அதை பார்த்த தீபன் டாக்டர் பேசிப்பார் நம்ம போகலாமென்று மற்றொரு கதவு வழியாக சென்றனர். .

குழந்தையின் குடும்பத்தினரோ ஆப்ரேஷன் தியேட்டர் வாசலையே பார்த்துக் கொண்டிருக்கும் போது கதவை திறந்து கொண்டு கர்ணனும் அவரோடு இன்னும் இரண்டு டாக்டர்களும் வருவதை பார்த்த அமைச்சர் அமர்நாத் எழுந்து நின்று டாக்டர் என்ன ஆச்சு?என் பேத்தி நல்லா இருக்காளா?.

சார் கொஞ்சம் அமைதியா இருங்க..

குழந்தைக்கு இனி ஒரு பிரச்சனையும் இல்லை...நல்லா இருக்காள்.

தேங்க்யூ சோ மச் டாக்டர்.என் தலைமுறையின் முதல் வாரிசு..அவளை நல்லபடியாக திருப்பிக் கொடுத்ததற்கு உங்களுக்கு என்ன வேணாலும் கொடுக்கலாம்.

சார் நீங்க ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு பேசுறீங்க.இந்த ஆபரேஷன் பண்ணியது நான் கிடையாது என்னோட ஸ்டூடன்ட் ருத்ரன்

அப்படிங்களா டாக்டர்,எங்கே அவர்..இந்த உலகத்திலிருந்து அவர் என்ன கேட்டாலும் நான் உடனே வாங்கி கொடுக்கிறேனென்க, கர்ணனோ சிரிப்பை மட்டும் பதிலாக தந்தவர் குழந்தையோட அம்மா?.

அவள் சற்று முன் மயங்கி விழுந்ததையும் பக்கத்து ரூமில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்.

அவங்க கிட்ட போய் சொல்லுங்க பாப்பா ரொம்ப நல்லா இருக்கிறாங்க இப்போதைக்கு அவங்க மயக்கத்தில் தான் இருக்காங்க ஒரு நாள் ஃபுல்லா இங்க அப்சர்வேஷன்ல இருக்கட்டும்.

ஆபரேஷன் பண்ணியிருப்பதால் எந்த இன்ஃபெக்சனும் ஆக கூடாது. குழந்தையோட அம்மாவை மட்டும் த்ரீ ஹவர்ஸ் கழிச்சு போயிட்டு எட்ட இருந்து பார்க்க சொல்லுங்களென்று அங்கிருந்து சென்றனர்.

தனது அறைக்குள் வந்த ருத்ரனோ அங்கிருந்து ஜன்னல் வழியாக ரோட்டில் போகும் வாகனங்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

மச்சானென்று அவன் தோளில் கை வைக்க இன்னைக்கு வேற ஏதாவது கேஸ் இருக்காடா?அதற்கு தீபனோ இல்லடா நாளைக்கு தான் என்றான்.

சரி அப்ப நம்ம வீட்டுக்கு கிளம்பலாம்.இனி ஒரு நிமிஷம்கூட இந்த இடத்தில் அவன் இருக்க மாட்டானென்பது தீபனுக்கும் புரிந்தது.டேய் சாரை பாத்துட்டு போகலாமே.

ம்ம் என தலையசைத்தான்...சிறிது நிமிடங்கள் சென்று மூன்றாவது ப்ளோரிலிருக்கும் கர்ணனின் ரூம் கதவை தட்டி விட்டு உள்ளே வந்தவனுங்களோ பானிபூரியை ரசித்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பார்த்து முறைக்க ஏண்டா உங்களுக்கும் வேணுமா என்றார்.

நீங்களே சாப்பிடுங்களென்று தீபன் சொல்ல நீ கேட்டாலும் தர மாட்டேன் டா.நானே பசியில இருக்கேன்...விரதம்னு சொல்லி ஷீத்தல் கோயிலுக்கு போயிட்டாள் டா.

ஆன்ட்டி உங்களுக்காக அங்கு விரதம் இருக்கிறாங்க.நீங்க இங்க நல்லா வயிறு முட்ட சாப்பிட்டிருக்கீங்களா என்று ருத்ரன் பல்லை கடிக்க,ஏண்டா அவ விரதம் இருக்கிறதுக்காக நான் ஏன் சாப்பிடாமல் இருக்கனும் சொல்லு?.

எனக்கு வயிறு பசிக்காத என்க,அவர் கேட்ட தொணியை பார்த்து இருவரும் சிரித்து விட்டனர்.

மேலும் சிறிது நேரம் அவரோடு பேசிக் கொண்டிருந்தார்.பின்னர் அவரிடம் சொல்லிக் கொண்டு இருவரும் அப்பார்ட்மெண்டிற்கு வந்து சேர்ந்தனர்.

திருச்சி எம் எல் ஏ வீடு:

மேலும் சிறிது நேரம் காத்தவராயனிடம் பேசி விட்டு வீட்டில் அப்படி சட்டவிரோதமாக எதுவும் இல்லை என்பதில் சைன் பண்ணிய மகி அதை தனது அசிஸ்டன்டிடம் கொடுத்தவர்,சார் சிரமத்திற்கு மன்னிக்கவும் என்றார்.

உங்களோடு கடமையை நீங்கள் செய்கிறீர்கள் இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை தம்பி என்றவர் இப்பொழுதாவது காபி குடிக்கலாமா என்கவும் கண்டிப்பாக சார் என்று சிரித்தார்.

பின்னர் தனது மனைவியிடம் எல்லாருக்கும் காபியும் ஸ்நாக்ஸ் கொடுக்க சொல்லவும்,அவரும் சிறிது நிமிடத்தில் கொண்டு வந்து கொடுத்து செல்ல குடிங்க தம்பி என்றார்..

நீங்க இவ்வளவு சுமூகமாக எங்களுடைய சோதனைக்கு ஒத்துழைப்பது கொடுத்ததற்கு தேங்க்யூ சார்.

குடிமகனாக இது என்னோட கடமை தம்பி.

ஓகே சார் நாங்கள் வரோம் என்றவர் மற்ற ஆபீஸர்களோடு வெளியே வந்த மகி காரில் ஏற,அங்கிருந்த கட்சிக்காரர்களோ என்ன எங்க ஐயா மேல பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளலாம்னு பாக்கறீங்களா?

நாங்கள் இருக்கும் வரையில் அப்படி ஒன்று நடக்காது என்கவும் அவர்களுக்கு எந்த பதிலும் சொல்லாமல் காரில் ஏறி சென்றனர்.

என்னங்க சார் இவ்வளவு நேரம் தேடியும் ஒண்ணுமே கிடைக்கவில்லையென்று மகியுடைய அசிஸ்டன்ட் கேட்க,எனக்கு இந்த சர்ச் வாரண்டில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை..

நான் கேள்விப்பட்ட வரைக்கும் மிஸ்டர் காத்தவராயன் ரொம்ப சுத்தமான மனுஷன்.ஆனா எப்படி மேலிடம் இவர் வீட்டில் சோதனை பண்ண சொல்லுச்சு அதுதான் எனக்கு புரியவில்லை என்க...
எங்களுக்கும் அது தான் சார் தெரியலை.

அவருடைய டாக்குமெண்ட் எல்லாம் அவ்வளவு கிளீனா இருக்கே என்றார். நேர்மையானவங்க என்னைக்குமே பயப்படவே மாட்டாங்க எல்லாத்துக்கும் துணிஞ்சு நிப்பாங்க.

உங்க வீட்ல சர்ச் பண்ண வந்திருக்கோம் என்று சொன்ன பிறகும் அவருடைய முகத்தில் ஒரு நொடி கூட எந்த மாற்றமும் வரவில்லையே அதை பார்த்தீங்களா.

நாம் போகும்போது எப்படி சாப்பிட்டு சந்தோஷமாக இருந்தாரோ கடைசி வரைக்கும் அவர் அப்படியே தான் இருக்கிறார்.

நம்ம முன்னோர்கள் ஒரு பழமொழி சொல்லுவாங்க ஞாபகம் இருக்கா?
"மடியில் கனமில்லை என்றால் வழியில் ஏன் பயப்பட வேண்டும்னு"அதுக்கு சிறந்த எக்ஸாம்பிள் தான் இன்னைக்கு நாம் பார்த்தோம் என்றவர் சரி ரிப்போர்ட் ரெடி பண்ணுங்க மெயில் அனுப்பிடலாம் என்று சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்து கண்ணை மூடியவருக்கு எஸ்தரின் நினைவுகள் வந்தது.

என் கண்ணுல மட்டும் பட்ட அன்னைக்கு தாண்டி நீ உயிரோடு இருக்கிறது கடைசி நாள்..உனக்கு எவ்வளவு திமிரு இருந்தாக்க இந்த வயசுல வீட்டை விட்டு போயிருப்ப? அந்த அளவுக்கு கொழுப்பு ஏறிட்டாடி..

நல்லா ஏசி காத்துல உக்காந்துகிட்டு ஆத்தாளும் மவளும் சாப்பிட்டு வளர்ந்தீங்க இல்லையா அப்போ நீங்கள் இப்படித்தான் இஷ்டத்துக்கு முடிவெடுப்பீங்க.

அவ என்னென்ன ஒரு இந்து பயலை கல்யாணம் பண்ணிக்கிட்டு அப்பா அம்மா வேண்டான்னு சொல்றாள்,நீ என்னவென்றால் புருஷன் வேண்டாம் என்று உன் இஷ்டத்துக்கு வீட்டை விட்டு கிளம்பி போயிருக்கிற..

உங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப துணிச்சல் தாண்டி என்றவாறு மனதிற்குள் சொல்லிக்கொண்டு ஆபீசுக்கு வந்தவர் டீட்டையல்ஸை மேலிடத்துக்கு அனுப்பிவிட்டு மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கினார்.

அதற்குள் அவருடைய பி.ஏ மதிய லஞ்சை மகிக்கு ஆர்டர் பண்ணியிருந்தார்.பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் மற்ற வேலைகளை பார்க்கத் தொடங்கினார்.

அப்பொழுது மகிக்கு கால் வர எடுத்து அட்டென்ட் பண்ணியவர் ஹம் வந்துட்டேன் காலையில் தான் வந்தேன் ஆமாம் என்று பேசியவர் சரி நேர்ல பேசிக்கலாமென்றார்.

வனிச்சூர்:

ஏம்மா என் கொழுந்தனாருக்கு என்ன குறைச்சல் சொல்லு அவ்வளவு தூரத்திலிருக்கிற உன்னை மயக்கி கல்யாணம் பண்ணியிருக்கிறாரான்றால் அப்போ செழியன் வீராதி வீரன் சூராதி சூரன் தானேயென்று கஸ்தூரி கேட்க,உங்க கொழுந்தனார் அப்படியே நாலு காளைய அடக்குற வீராதி வீரன் பாருங்க என்கவும்,உனக்கு செழியனை பற்றி தெரியாதா?.

சுற்றி உள்ள ஊரில் எங்கு ஜல்லிக்கட்டு நடந்தாலும் அதில் செழியன் இல்லாமல் இருக்காது.எத்தனை கப்பு வாங்கி இருக்கு தெரியுமா என்கவும்,என்னக்கா சொல்றீங்களென்று அதிர்ந்து போனாள்.

அட ஆமா ஷமீரா.வருடா வருடம் நடக்கும் ஜல்லிக்கட்டில் கண்ணனும் செழியனும் பரிசு வாங்காமல் வீட்டுக்கு வரவே மாட்டாங்க மா..

உன் புருஷன் ரூம்ல போய் பாரு எவ்வளவு கப்பு இருக்கென்று சொல்லவும் இதுவரை இப்படி ஒரு விஷயத்தை கணவனிடமிருந்து கேள்விப்படவில்லை என்பதால் ஷமீராவிற்கு பேரதிர்ச்சியாக இருந்தது..

ஷமீராவின் அதிர்வை பார்த்தவரோ அவளுக்கு இது தெரியாது என்பது உணர்ந்து ஒருவேளை உனக்கு இதெல்லாம் பிடிக்காதென்ற எண்ணத்தில் கொழுந்தனார் சொல்லாமல் இருந்திருக்கலாம், இல்லை இதெல்லாம் ஒரு விஷயமாயென்று மறைத்திருக்கலாம் மா...

அதான் இப்போ இங்க வந்துட்டியே இந்த வருஷம் நடக்கும் பொங்கல் ஜல்லிக்கட்டுல உன் புருஷன் கலந்து கொள்வதை பார்த்து தெரிஞ்சுக்கோ என்று சிரித்தவரிடம் அக்கா ஒன்னு கேட்கணும் என்க....

கேளுமா என்ன தயக்கம் என்க...அது வந்து எங்கு பார்த்தாலும் தனாவும் கமலாவும் இங்கு இருந்தால் நல்லா இருக்குமென்று பேச்சா இருக்கே யாருக்கா அவர்கள்?. ஏன் நம்ப வீட்டு பங்ஷனுக்கு வரலை?.

நம்ப மாமியார் மாமனார் தான் மா.உங்க மாமாவோட அம்மா அப்பா.நாத்தனாருக்கு 5 வருஷமா குழந்தை இல்லாமல் இப்போது தான் ரெட்டபுள்ளை பொறந்துருக்கு.

மகளுக்கு துணைக்கு இவங்க ரெண்டு பேரும் சிங்கப்பூரில் இருக்காங்க.குடும்பத்துக்கு மூத்த ஆண் அவர் தான் அப்போ வருத்தமாக தான இருக்கும் என்றவள் சரி வேற ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?.

ஐயோ அக்கா இதுவே போதும் என்றவள் சாப்பிட்ட தட்டோடு ரெஸ்ட் ரூமுக்குள் சென்று வாஷ்பேஷனில் கழுவிட்டு வர அதை எடுத்துக் கொண்ட கஸ்தூரியோ அங்கிருந்து வெளியே சென்றாள்...

வீழ்ந்தேனடி...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top