• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
டெல்லி:

ருத்ரன் ஜூலி தம்பதியினர் புதிதாக கிடைத்த உறவான எஸ்தரோடு டெல்லி ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

தனது வாழ்க்கையில் இதுவரை அவர் இருந்த ஊரை விட்டு வேறெங்கும் போனதில்லை.ஏதோ புதிதாக இறக்கை முளைத்தது போல் எஸ்தரும் உணர்ந்தார்.

கணவருக்கு என்னதான் லீவு கிடைத்தாலும் அவர் அழைத்துக் கொண்டு போவது அவர் ஊரை சுற்றி உள்ள ஊர்களுக்கு மட்டும் தான்.

இப்பொழுது எஸ்தருக்கு தனது சிறுவயதின் மன ஆசை நினைவுக்கு வந்தது..

சினிமா பார்க்கும் போதெல்லாம் சிறு வயதிலிருந்தே அவருக்கு தாஜ்மஹாலை பார்த்து விட வேண்டுமென்று பேராசை...

கல்யாணம் முடிந்த பிறகு மகி அவரிடம் நீ எங்கே போக வேண்டும் என்க இவரும் தனது ஆசையை சொல்ல போயும் போயும் ஒரு கல்லறையை பார்க்கறதுக்கா இத்தனை வருஷம் ஆசைப்பட்டிருக்கு என்று நக்கலாக சிரிக்க அன்றிலிருந்து தனது மன ஆசையை மூட்டை கட்டி விட்டார்.

ஒரு மணி நேரம் கடந்து செல்ல அந்த அப்பார்ட்மெண்டுக்குள் காரும் நுழைந்தது.வேகமாக போய் இடது பக்கம் திரும்ப வி பிளாக் இருக்கும் இடத்தில் அவர்கள் வீட்டின் எண்ணிற்கு முன்னால் உள்ள பார்க்கிங்கில் காரை நிறுத்திய ருத்ரன் அம்மா நம்ம வீடு வந்துடுச்சு இறங்குங்களென்றான்..

ஒரே போல சுற்றி இருக்கும் பில்டிங்கை பார்த்துக் கொண்டே எஸ்தரும் கீழே இறங்கினார்.

பின்னர் லிப்டில் ஏறி ஏழாவது ப்ளோரை பிரஸ் பண்ணவும் சிறிது நொடியில் அவர்கள் தளத்தில் வந்து லிப்ட் நின்றது.

வெல்கம் மா இந்த அனாதைகளுக்கு இப்பொழுது புதிதாக ஒரு உறவு கிடைத்திருக்கிறதென்க, ஜூலி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியாக பார்க்க ஆமாம் மா எங்களுக்கு யாருமே கிடையாது.

இப்போ இரண்டு பேருக்குமே சேர்த்து அம்மாவா நீங்க கிடைத்திருக்கிறீர்கள் ஆண்டவர் தான் கொடுத்திருக்கிறார் என்கவும் நீ கிறிஸ்டியானம்மா என்கவும்ஆமாங்கம்மா நான் சர்ச் ஆசிரமத்தில் தான் வளர்ந்தேனென்றாள்..

அம்மா நான் இருக்கும் போது இனி நீங்கள் ஒருபோதும் அனாதைனு சொல்லவே கூடாது என்கும்போது எஸ்தருக்கு தனது ஒரே மகளை நினைத்து அழுகை வந்தது.இருந்தும் கட்டுப்படுத்திக் கொண்டார்.

அங்கிருந்த இன்னொரு ரூமை காட்டி இதை நீங்க யூஸ் பண்ணிக்கோங்க என்க,கதவைத் திறந்து உள்ளே போய் பார்த்தால் சகல வசதிகளோடு இருந்தது.

பின்னர் அவரவர் அறையில் குளித்து வெளியே வரவும் ஜூலியோ கிச்சனில் சமையல் வேலையை தொடங்கியிருந்தாள்.

தள்ளுமா ஜூலி நான் செய்றேன் என்கவும் இருக்கட்டுமா நான் செய்றேன் நீங்க உக்காருங்க...நீங்க காபி குடிப்பீங்களா டீ குடிப்பீங்களா?.

இத்தனை நாள் வீடு பூட்டி தான் இருந்தது.எப்படி பால் வந்தது? என எஸ்தர் யோசனையோடு கேட்க அது வந்துங்கம்மா இந்த வீட்டுக்கு இரண்டு திருட்டு பூனை வந்துட்டு போகுமென்று சிரிக்கும்போது காலிங் பெல் சத்தம் கேட்டது.

நான் சொன்னேன் இல்லங்கம்மா அதுங்க தானென்று அடுப்பை சிம்மில் போட்டுவிட்டு போய் கதவை திறக்க அங்கிருந்த ஜோடிகளை பார்த்து பரஸ்பரம் நலம் விசாரித்து வீட்டிற்குள் அழைத்து வந்தவள் சர்ப்ரைஸ் என்று எஸ்தர் அம்மாவை கூப்பிட்டு காட்ட,யார் இவங்கறென்று பார்த்தனர்.

அம்மா இது ரூபா,இது தீபன் அண்ணா. நானும் தீபன் அண்ணனும் ஒரே ஆசிரமத்தில் வளர்ந்தோம்.ருத்திரனும் ரூபாவும் அண்ணன் தங்கச்சி.

அவர்களுக்கும் புதிதாக ஒரு உறவு கிடைத்ததை பார்த்து சந்தோஷத்தில் கண் கலங்கினர்..

ருத்ரனோ ஹாஸ்பிடல் போவதற்காக தயாராகி வந்தவன் தனது தங்கையையும் ஆருயிர் நண்பனையும் அணைத்து நலம் விசாரித்துவிட்டு ஜூலி சாப்பாடு எடுத்து வை என்றவன் அம்மா நீங்களும் உட்காருங்கள் என்றான்.நீ சாப்பிட்டுட்டு கிளம்புப்பா நாங்க பொறுமையை சாப்பிடுகிறோம் என்றார்.

அவனும் வேக வேகமாக சாப்பிட்டுவிட்டு தீபனோடு அவர்கள் வேலை பார்க்கும் ஹாஸ்பிடல் நோக்கி சென்றனர். இப்பொழுது அங்கு எஸ்தர் ரூபா ஜூலி மூவர் மட்டும் இருந்தனர். .

அம்மாடி நீங்க ரெண்டு பேரும் ஏதாவது வேலை பார்க்கிறீர்களா என்க ஆமாங்கம்மா என்றவள் பக்கத்திலிருக்கும் ஸ்கூலில் ரூபா கிளாசிக்கல் டான்ஸ் டீச்சராகவும்,நான் ஹிந்தி டீச்சராக வேலை பார்ப்பதாக சொன்னாள்....

ஆனுவல் ஹாலிடே என்பதால் ஸ்கூல் திறப்பதற்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு மேல் இருப்பதாக இருவரும் சொல்லினர்.பின்னர் மூவரும் பொதுவாக பேசிக் கொண்டே நேரத்தை போக்கினர்.

M. V Heartcare:

வழக்கமாக அவர்கள் வருகையை பதிவு செய்து விட்டு இன்று நடக்க போறோம் ஆபரேஷனிற்கு தயாராக அவரவர் அறைக்கு சென்றனர்..

தீபன் வாசுதேவ் MD Cardiologist,ருத்ரன் வம்சிகன் MD cardiologist என்ற பெயர் பொரித்த அறைக்குள் போக அங்கே நர்சும் ஆப்ரேஷனுக்கு அணிந்து கொள்ள வேண்டிய உடையோடு தயாராக இருந்தார்.

ருத்ரன் தயாராகும் போது கதவு தட்டும் சத்தம் கேட்க சிறிது நொடியில் கதவை திறந்து கொண்டு தீபனும் அங்கு வந்தான்.ஹம் போகலாம் என்றவாறு இருவரும் ஏழாவது ப்ளோரில் நடக்கும் ஆப்ரேஷன் தியேட்டருக்கு லிப்டில் ஏறி சென்றனர்....

இன்று ஒன்னரை வயது குழந்தைக்கு ஆபரேஷன் என்பதால் தான் தனது டூரை கேன்சல் பண்ணிவிட்டு ருத்ரனும் டெல்லிக்கு வந்து சேர்ந்தான்.

மற்ற மருத்துவமனைகளில் எங்களால் முடியாது என்று கை விட ருத்ரனின் திறமை பற்றி அங்கு பரவலாக தெரியும் என்பதால் இந்த ஹாஸ்பிடலுக்கு தங்களது குழந்தையுடன் வந்திருந்தனர்.

தீபனோ தற்பொழுது அவன் தமிழ்நாட்டில் இருப்பதாக சொல்லவும் வேறு வழியில்லாமல் ஹாஸ்பிடலின் எம்டி சந்திப் சிங் நேரடியாக ருத்ரனுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்ல, உடனே வருவதாக ஒப்புக் கொண்டவன் அதேபோல் வந்து சேர்ந்து விட்டான்.

வனிச்சூர்:

ஆதவன் கிழக்கே உதயமாவதற்குள் இரண்டு வீட்டினரும் எழுந்து பரபரப்பாக தயாராகினர்.வேகமாக போன புவனாவோ ஷமீராவின் ரூம் கதவைத் தட்ட சிறிது நொடியில் கதவு திறக்கப்பட்டது.

அம்மாடி ஷமீரா என்று சொல்ல வர அங்கே அவள் குளித்து தலையில் துண்டு கட்டி இருப்பதை பார்த்தவர் குளிச்சிட்டியாடா.உன்னை எழுப்பி விட தான் வந்தேன்.நைட்டும் தூங்க நேரம் ஆயிடுச்சு.எங்கே தூங்கிட்டு இருப்பியோன்னு நினைச்சுட்டு இருந்தேன்.நல்லவேளை நீ எந்திரிச்சு குளிச்சிட்ட.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் அந்த பொண்ணு வந்துடுவாள்.7-8.30 முகூர்த்த நேரம் இல்லையா,அதனால உங்க அப்பா 6 மணிக்குலாம் வரச் சொல்லிட்டாங்கள்.

நீ தலைமுடியை காய வச்சுக்கிட்டு ரெடியா இரு அதற்குள் நான் உனக்கு காபி எடுத்துட்டு வரேன்னு கீழே சென்றார். .

அதேபோல் சிறிது நிமிடத்தில் காபியோடு வந்தவர் ஷமீராவுக்கு கொடுத்துவிட்டு கண்மணியையும் கவிதாவையும் எழுப்பிவிட்டு போனார்...

அரை மணி நேரம் கடந்திருக்க பியூட்டிஷியன் வந்தார்.ஷமீராவின் முடி நீளமானது என்பதாலும்,அவள் முகத்திற்கு ஏற்ற போல எந்தவிதமான மேக்கப் பண்ணலாமென்று பியூட்டிஷனும் சிறிது யோசனை பண்ணியவர் பின்னர் அவள் கூந்தலை சீவிக் கொண்டிருக்கும் போது மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்க யார் தான் இப்படி உசுர வாங்குறார்கள் என்றபடி கதவை திறக்க அந்தோணியும் ராணியும் கையில் தாம்பாளத்தோடு உள்ளே வந்தனர். கண்ணாடி வழியாக இருவரும் பார்த்த ஷமீராவோ அதிர்ந்து போய் எழுந்தாள்.

அத்தை மாமா என்கும்போதே ஷமீராவுக்கு அழுகை வந்தது.சந்தோஷமா இருக்க வேண்டிய நேரத்துல எதுக்கு கண்ணை கசிக்கிட்டு இருக்க என்றவாறு தனது அண்ணன் மகளின் கண்ணை ராணியும் துடைத்து விட,அத்தையென்று அவரை இறுக்கமாக கட்டிக்கொண்டு அழுதாள்.

ஷமீ எதுக்கு அழுதிட்டு இருக்கிற?.

பாக்குறவங்க என்ன நினைப்பாங்க என்கவும் இது சந்தோஷத்தில் வந்த கண்ணீர் தான் வேற ஒன்றும் இல்லை என்றவளோ,யாருமே இல்லாம நான் மட்டும் தனியா இருக்கேன்னு இவ்ளோ நேரம் மனதிற்குள் கவலைப்பட்டது எனக்கு தான் தான் தெரியுமென்று தனக்குள்ள சொல்லிக்கொண்டான்..

அப்பா அம்மா எப்படி இருக்காங்க என்க,எல்லாரும் நல்லா இருக்காங்க என்ற அந்தோணி ராணியென்று சொல்ல பின்னர் இருவரும் சேர்ந்து மருமகளுக்கு அந்த தாம்பாளத்தை கொடுக்க ஷமீராவும் வாங்கிக் கொண்டாள்.

அம்மாடி இதுல இருக்கிறதை போட்டு விடுங்களென்று பியூட்டிஷியனிடம் சொல்லி விட்டு இருவரும் அங்கிருந்து கீழே சென்றனர்.

அந்தோணிக்கும் ராணிக்கும் தம்புசாமி தாத்தாவே தனது வீட்டினரை அறிமுகப்படுத்தினார்.அதேபோல் அவர் வீட்டினருக்கும் ஷமீராவின் தாய் மாமன் அத்தையென்று அறிமுகப்படுத்தினார்..

பின்னர் அவர்கள் பொதுவாக பங்ஷனை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.நேரமும் கடந்து செல்ல எல்லாரும் தயாராகினர்.

அங்கே கோயிலில் பாடல் ஒரு பக்கம் ஒலிக்க இன்னொரு பக்கம் விருந்துக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

இதையெல்லாம் கண்ணன் தீரன் மாறன் மூவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.இரண்டு நாட்களுக்கு முன்பு தாத்தா தான் பேரன்கள் இருவருக்கும் போன் பண்ணி பங்க்ஷனுக்கு வருமாறு சொல்லியிருந்தார்...

கோயிலுக்கு முன்னாலிருக்கும் பெரிய திடலில் பந்தல் போட்டு கிழக்கு பக்கம் பார்த்த போல மணமேடை அலங்காரம் பண்ணியிருந்தனர்..

மருமகளுக்கு போடப்போகும் தாலி சரடை சாமியிடம் வைத்து வணங்கி விட்டு அதை எடுத்து டப்பாவில் வைத்து பூட்டி, தனது கையில் இருந்த பையில் வைத்துக் கொண்ட வானதி ஏங்க கோயிலுக்கு போகலாமா என்கவும் சரி வானதி என்றவர் மற்ற சொந்தங்களோடு வீட்டிலிருந்து கிளம்பினர்.

ஷமீராவிற்கு அலங்காரத்தை முடித்த பியூட்டிஷனும் மேடம் சரியா இருக்கா பாருங்களென்க,அவளுக்கோ தன்னை பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.

இதுவரை இப்படி எல்லாம் மேக்கப் பண்ணியதில்லை என்பதால் பார்த்தவுடனே பிடித்தது.நல்லா இருக்கென்றாள்.கவிதாவுக்கும் கண்மணிக்கும் அதே போல் அலங்காரம் பண்ணி விட்டார்...

சுமதி பாப்பாவ கூப்பிட்டு வா என்று தம்புசாமி தாத்தா சொல்ல பாட்டியோ படியில் ஏறி மேலே வந்தவர் ரூம் கதவைத் தட்ட கண்மணி போய் கதவை திறக்கவும் உள்ளே வந்தவர் ஷமீராவின் அலங்காரத்தை பார்த்து அழகாக இருக்கமா என்று கன்னம் கிள்ளியவர் வா மா என அழைத்துக் கொண்டு கீழே வந்தார்.

அலங்காரத்தோடு வரும் மருமகளை பார்த்த அந்தோணிக்கும் ராணிக்கும் திருப்தியாக இருந்தது...

என் கண்ணே பட்டுடும் போல இருக்கு ராஜாத்தி என்று மருமகளை அணைத்துக் கொண்ட ராணிக்கு தனது அண்ணனும் அண்ணியும் இங்கிருந்திருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

பின்னர் ஷமீராவை அழைத்துக் கொண்டு இரண்டு காரில் ஏறி கோயிலுக்கு சென்றனர்.

சொந்த பந்தங்களும் அங்கு வந்து குழுமியிருக்க எங்கே பாத்தாலும் பேச்சு சத்தமும் சிரிப்பு சத்தமாக இருந்தது. ஊர்க்காரர்கள் முக்கால்வாசியினர் அந்த திடலில் தான் தங்கள் வீட்டு விசேஷத்தை வைப்பார்கள்.

பொண்ணு மாப்பிள்ளை இருவரும் தயாராகுவதற்காக இரண்டு அறை கொண்ட சிறுவீட்டையும் அங்கே கட்டி இருந்தனர்.நேராகக் காரை கொண்டு போய் அந்த வீட்டின் முன்பு கண்ணன் நிறுத்த ஷமீராவோடு கண்மணி கவிதா மூவரும் மணமகள் அறைக்குள் சென்று விட்டனர்.

வனிச்சூரின் ஊர் வழக்கப்படி பொண்ணு வீட்டினரும் மாப்பிள்ளை வீட்டினரும் எதிரெதிராக மேடையில் உட்கார்ந்திருக்க ஒரு பக்கம் ஊர் முக்கியஸ்தர்கள் உட்கார்ந்து இருந்தனர்.

பின்னர் அவர்கள் வழக்கப்படி பொண்ணு மாப்பிள்ளை இருவரும் திருமணம் செய்து கொள்ள எங்களுக்கு பரிபூரண சம்மதமென்று அங்கிருந்த நோட்டில் இரண்டு வீட்டினரிடமும் ஊர் தலைவர்களில் ஒருவர் கையெழுத்து வாங்கிக் கொண்டார்.

அடுத்த சடங்காக தட்டை மாற்றிக் கொண்டனர்.அப்பொழுது மாப்பிள்ளைக்காக பொண்ணு வீட்டின் சார்பாக வாங்கிட்டு வந்த பொருட்களை வைத்து அந்தோணியும் ராணி பரத் பாபு சாரதா பாட்டியோடு சேர்ந்து கொடுக்க தங்கள் குடும்பத்தின் மூத்தவரான தனது சித்தப்பாவையும் சித்தியும் விட்டு செல்லதுரை வாங்க சொன்னார்.

அதேபோல் வீரையனும் அவர் மனைவியும் மணமகளுக்கு எடுத்து வைத்த புடவை மற்ற பொருட்கள் அடங்கிய தட்டை கொடுக்க இவர்கள் வாங்கிக் கொண்டவர்.

ராணியும் அந்த தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு சற்று தள்ளியிருக்கும் வீட்டை நோக்கி சென்றார்.

பியூட்டிஷியனும் சிறிது நிமிடத்தில் கட்டிவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை பார்த்தார்.

அப்பொழுது அங்கு வந்த புவனா ஷமீராவை மேடைக்கு வர சொல்றாங்க என்றவர் நல்லா இருக்கடா என்று சொல்லி கன்னம் கிள்ளி முத்தமிட்டார்...

பின்னர் ஷமீராவை அழைத்துக் கொண்டு அங்கே மேடைக்கு வந்தனர்.மேடையில் செழியன் இருக்க,தூரத்தில் வருபவளை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

தான் அவளுக்காக தேர்ந்தெடுத்த புடவையில் மனைவி பேரழகியாக தெரிய கண்ணை அங்கு இங்கும் அவனால் சிமிட்டவே முடியவில்லை.அங்கிருந்த சொந்த பந்தங்களும் ஷமீராவை பார்த்து நல்ல பொண்ணா தான் புடிச்சிருக்கிறான்..
பார்த்தால் நம்ம ஊரு பொண்ணு போல இல்லையே வித்தியாசமா இருக்கு என்கவும் ஆமா ரொம்ப தூரம் தான்..

ஏதோ நம்ம சொந்தத்துல பொண்ணு இல்லாத போல தேடி கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கிறான் என்று சிலர் பொறாமையிலும் சொல்லிக் கொண்டிருந்தனர். .

தலை குனிந்தபடியே மேடைக்கு வரும் பேத்தியைதான் சாரதா பாட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.

முதல் வரிசையில் உள்ள சேரில் அவர் பரத் பாபு உட்கார்ந்திருக்க,இவள் கீழே குனிந்து கொண்டே வந்ததால் பாட்டி இருப்பது அவளுக்கு தெரியவில்லை.

ஐயரும் ஓம குண்டலத்தை பற்ற வைத்தவர் வழக்கமான சடங்கு சம்பிரதாயங்களை இருவரையும் விட்டு செய்ய சொல்லிவிட்டு பின்னர் வெறும் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்க சொல்லி அவள் போட்டிருந்த தாலியை கழட்டி வாங்கியவர் அங்கிருந்த வானதியிடம் கொடுத்தார்.

புவனா ஒரு பக்கம் வானதி ஒரு பக்கம் என்று தாலியையும் அதில் மற்ற உருக்களையும் கோர்த்து முடித்து ஐயரிடம் கொடுக்க,அதை தாம்பாளத்தில் வைத்து சொந்த பந்தங்களிடம் ஆசிர்வாதம் வாங்கிட்டு வருமாறு சொல்லவும் ரஞ்சனி அதை வாங்கிட்டு போய் எல்லாரிடமும் ஆசீர்வாதம் வாங்கிட்டு வந்து கொடுக்க நல்ல நேரத்தில் கெட்டிமேளம் ஒழிக்க மீண்டும் மனைவியின் கழுத்தில் தாலி செயினை போட்டு விட்டான்.

பின்னர் மற்ற சடங்குகளை செய்ய சொல்லியவர் மச்சானோடு அக்கினியை வலம் வர சொல்ல கண்ணன் செழியன் ஷமீரா மூவரும் மூன்று முறை அக்கினியை சுற்றி வந்தனர்.

பொண்ணு மாப்பிள்ளை இருவரும் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க என்கவும் முதலில் வீட்டிற்கு பெரியவரான வீரையன் தம்பதியினர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்.

அடுத்தது தம்புசாமி சுமதியின் காலில் விழுந்தனர்.பின்னர் தனது அப்பா அம்மா காலிலும் தனது தாய் மாமாக்கள் காலிலும் மனைவியோடு விழுந்தவன் இப்பொழுது அந்தோணி ராணி இடம் வரும் போது அங்கே பாட்டி நிற்பதை பார்த்த ஷமீரா அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

பேத்தியின் கன்னத்தை தட்டிக் கொடுத்தவர் எல்லாம் முடியட்டும் பிறகு பேசிக் கொள்ளலாம் என்க அவர்கள் காலிலும் இருவரும் விழ காட் பிளஸ் யூ என்று சந்தோஷமாக ஆசிர்வாதம் செய்தார்கள்..

பாட்டி என்று அணைத்துக்கொண்டு அவள் கலங்கினாள்.

அதன் பின்னர் சொந்த பந்தங்கள் எல்லாம் அவர்களால் முடிந்த சீர் வரிசைகளை செய்ய மேடைக்கு வர
போட்டோகிராபரோ விதவிதமாக போட்டோவை எடுத்து தள்ளினார்.

நேரமும் கடந்து சென்றது. வந்தவர்களுக்கு பரிசாக செழியன் வீட்டினர் ஆளுக்கு ஒரு பையில் தேங்காய் பழம் போட்டு ஷமீரா செழியன் என்று பெயர் பொறித்த டிபன் பாக்ஸை கிப்டாக கொடுத்து அனுப்பினார்கள்...

எல்லாம் முடிந்து வீட்டிற்கு பொண்ணு மாப்பிள்ளை கிளம்பும்போது காலை 11 மணி ஆனது.நல்ல நேரம் முடிய இன்னும் அரை மணி நேரம் தான் இருப்பதால் அதற்குள் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

ஆரத்தி கரைத்து எடுத்துட்டு வந்த வானதி இருவருக்கும் சுற்றி நெற்றியில் பொட்டு வைத்தவர் வீட்டிற்குள் அழைத்துப் போனார்.அங்கிருந்த பூஜை அறையில் விளக்கேற்றுமாறு வீராயி பாட்டி சொல்லவும் ஷமீராவும் அவர் சொல்வதை போல் செய்தாள்.

பின்னர் பொண்ணு மாப்பிள்ளையை ஹாலில் உட்கார வைத்து பாலும் பழமும் சம்பிரதாயமாக கொடுத்தனர்...

மற்ற சடங்குகளையும் முடிக்க,சரி கொஞ்ச நேரம் போய் இரண்டு பேரும் ரெஸ்ட் எடுங்கள் மதிய சாப்பாடு ஆன பிறகு கூப்பிடுகிறேன் என்று வானதி சொல்ல,ஷமீராவோ தனது அத்தை மாமா தங்கியிருக்கும் அறைக்கு சென்றுவிட்டாள்.

புருஷன்காரன் ஒருத்தன் இருக்கிறானே என்று கொஞ்சமாவது திரும்பி பாக்குறாளே பார் என்று மனதிற்குள் திட்டிக் கொண்ட செழியன் வெளியே இருக்கும் நண்பர்களோடு கலந்து கொண்டான்..

டெல்லி-ருத்ரன் வீடு:

படுத்திருந்த எஸ்தருக்கு இன்று தானே மகளுக்கு பங்க்ஷன்?நல்லபடியாக முடிந்திருக்குமா??நிச்சயமாக மகள் தன்னை நினைத்து வருத்தப்படுவாள் என்பது புரிந்து கண் கலங்கினார்..

பின்னர் மகியின் ஞாபகம் வந்தது..

இனி நிம்மதியா இருப்பீங்கள்.இத்தனை வருஷம் நானும் பொறுத்து பொறுத்து போனேன் இன்னைக்கு என்னோட நடத்தையே தவறாக பேசுகிற அளவுக்கு இருக்கீங்களே அது நாக்கா இல்ல தேள் கொடுக்கா?.

எனக்கும் வலிக்கும் என்று ஏன் இத்தனை வருஷம் உங்களுக்கு தெரியவேயில்லை?

எப்படி உங்களால் என்று எதையோ சொல்ல வந்தவர்...இனி நீங்கள் நிம்மதியா இருங்களென்று தனது கணவரின் நினைவை விரட்டி விட்டவர் ஒருமுறை தனது அண்ணனுக்கு போன் பண்ணி பார்க்கலாமா என்று நினைத்தார்.

ம்கூம் வேண்டாம் அண்ணனுக்கு தெரிந்தால் நிச்சயமாக தன்னை தேடி இங்கே வந்து விடுவார் என்பது புரிந்து தனது பேகிலிருந்த மகளின் போட்டோவை எடுத்து பார்க்கவும் அழுகை வந்தது.

எங்கு இருந்தாலும் ஆண்டவர் கிருபையோடு நல்லா இரு என்று மகளைப் பார்த்து சொல்லியவர் மீண்டும் பேகில் போட்டோவை வைக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்டது..

கண்ணை துடைத்துக் கொண்டு எழுந்து போய் கதவை திறக்க அங்கே ஜூலி தான் நின்று கொண்டிருந்தாள்.வாமா ஜூலி என்கவும் இங்க பக்கத்துல டெய்லர் கடை வரைக்கும் போயிட்டு வரலாமா மா என்றாள்...

அப்படியா என்றவர் செகண்ட் ஹேண்டில் தையல் மெஷின் கிடைச்சா வாங்கி கொடு எனக்கு டெய்லரிங் தெரியும் என்க, நிஜமாவா என்று ரூபாவும் ஜூலியும் கேட்க ஆமா. டைலரிங் எனக்கு நல்லா தெரியும் என்றார்...

ஓ எம் ஜி....அய்யோ அம்மா இங்க எல்லாம் ஒரு பிளவுஸ் தைக்கிறது அவ்வளவு ரேட்...

இப்பொழுதெல்லாம் மாடனாக பிளவுஸ் வர ஆரம்பிச்ச உடனே ஆரி ஒர்க் பண்றதுக்கெல்லாம் நல்ல ரேட் போகுது.

அப்போ உங்களுக்கு ஒரு மிஷின் வாங்கலாமா என்க,தாராளமா வாங்கி கொடு நானே உங்களுக்கு தைத்து தரேன் என்கவும் அப்ப இன்னைக்கே வாங்கி விடலாம் மா.நமக்கு தெரிஞ்ச கடை கூட இருக்கென்று அவரை அழைத்துக் கொண்டு இருவரும் பஜாருக்கு சென்றனர்...

இங்கு கிடைக்காத பொருள் எதுவுமே கிடையாதுங்கம்மா..சின்ன ஊசியில் இருந்து பெரிய யானை அளவுக்கு இருக்கும் பொருள் வரையிலும் எல்லாம் கிடைத்துவிடும் என்க எஸ்தருக்கு அதையெல்லாம் பார்க்க ஆச்சரியமாக இருந்தது...

எல்லாத்தையும் விழிகள் விரிய வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தார்.

பின்னர் தையல் மெஷின் இருக்கும் ஷோரூம்கு கூப்பிட்டு போக அந்த காலத்திலிருந்து இப்பொழுது இருக்கும் லேட்டஸ்ட் மாடல் வரை அத்தனை விதமான கலெக்ஷனும் இருந்தது.

அம்மா உங்களுக்கு எது வேணுமோ எடுத்துக்கோங்க என்கவும் விலை குறைவான மெஷினை எஸ்தர் தேர்ந்தெடுக்க ஏம்மா இப்படி பண்றீங்க பணத்தை பத்தி நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க இதுவரை எங்களுக்கு அம்மாவிற்கென்று செய்வதற்கு யோகம் கிடைக்கவில்லை..

இப்பதான் கடவுள் அந்த வாய்ப்பு கொடுத்திருக்கிறார் அதை மனநிறைவா ஏற்றுக்கொள்ளுங்கள் என்கவும் அவர்கள் அன்பில் மகிழ்ந்து போன எஸ்தர் சரிமா என்க..

பின்னர் நடுத்தரமான விலையில் உள்ளதை செலக்ட் பண்ண,அதை பேக் பண்ணி தங்கள் அட்ரஸிற்கு அனுப்புமாறு பணத்தை கொடுத்துவிட்டு தையலுக்கு தேவையான மற்றொரு பொருட்களை வாங்க அடுத்த ஃப்ளோருக்கு அழைத்துப் போனார்கள்.

அங்கிருந்து பலவிதமான நூல்கள் ஊசி பட்டன் கொக்கி என்று எல்லா பொருள்களையும் வாங்கி முடித்து கீழே வந்தனர். ..

இப்பொழுது ஜவுளிக்கடைக்கு அழைத்து போகுமாறு எஸ்தர் சொல்ல சரி என்று அங்கிருக்கும் கடைக்கு அழைத்து போக, துணியை பார்த்தவர் எது நல்ல துணி என்று தேர்ந்தெடுத்து இருவருக்கும் என்ன தைக்கலாம் என்று மனதிற்குள் நினைத்து அதற்கேற்ற போல துணியை வாங்கியவர் தனது பர்சில் இருந்த ஏடிஎம் கார்டை கொடுக்க,அய்யோ அம்மா இருங்கம்மா...

ஏன் இப்படி என்று இருவரும் பதர இது என்னோட பொண்ணுங்களுக்காக இந்த அம்மா வாங்கி கொடுக்கிறேன். இவ்வளவு நேரம் நீங்க வாங்கி கொடுத்ததை நான் ஏதாவது சொன்னேனா என்கவும் அவர்கள் இருவரும் சந்தோஷத்தில் வாயடைத்து போனார்கள்.....

வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
தேங்க்யூ🤗🤩
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top