• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்:

இதோட நிறுத்திக்குங்க சும்மா என்னையே குறை சொல்லிட்டு இருக்காதீங்க என்கவும்,என்னடி அனாதை நாயே...வாய் ரொம்ப நீளுது...

அண்ணன் வீட்ட தவிர உனக்கு எங்கேயும் போக்கிடம் கிடையாது.அப்பா அம்மாவும் செத்துட்டாங்க.என் கால்ல தாண்டி கடைசி வரைக்கும் சுத்திட்டு கிடக்கணுமென்று தட்டை தூக்கி எறிந்து விட்டு மகி அங்கிருந்து சென்றார்...

எஸ்தருக்கு மகியின் வார்த்தைகள் மிகவும் வலித்து விட்டது.கடந்து 24 வருடங்களாக பார்த்த புருஷன் தான் இருந்தாலும் இப்படி எல்லாம் அவர் பேசியது இல்லை.

கோபம் வருமே தவிர மற்றபடி தன்னை அனாதை அப்படி இப்படி என்றுலாம் சொல்லியதில்லை.ஆனால் மகளின் காதல் விஷயம் தெரிந்ததிலிருந்து மகியின் ஒவ்வொரு சொல்லும் ஈட்டி போல் மனதை மிகவும் வேதனைப்படுத்தியது.

இனியும் நாம் ஏன் உயிரோடு இருக்கணுமென்ற எண்ணமே அவருக்கு சில நாளாக வந்து கொண்டிருந்தது என்பது அவர் மட்டும் அறிந்த உண்மை.கையை கழுவிட்டு வந்த மகி,மனைவி அங்கே நிற்பதை பார்த்து நீ என்னடி யோசனைல இருக்க?.

உன் பொண்ணு ஓடிட்ட போல நீ எவன் கூட ஓடலாம்னு எண்ணத்துல இருக்கியானு வார்த்தைகளை நெருப்பாய் கொட்ட,எஸ்தரோ எதுவும் சொல்லாமல் கீழே விழுந்த தட்டையும் சிதறி கிடந்த சாதத்தையும் அள்ளி எடுத்துக் கொண்டு,சமைத்த பாத்திரங்களை எல்லாம் கழுவி வைத்தவர் பச்சை தண்ணியை மட்டும் குடித்து விட்டு தோட்டத்து பக்கம் உட்கார பல்வேறு யோசனை வந்தது.

நேரமும் யாருக்கும் காத்திருக்காமல் கடந்து சென்றது.நன்கு யோசித்து தீர்க்கமாய் ஒரு முடிவை எடுத்த எஸ்தர் இரவு உணவை சமைத்து வைக்க வெளியில் போன மகியும் சாப்பிட வந்து உட்காரவும் கணவருக்கு பரிமாறினார்.

மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவர் என்னடி விஷம் எதாவது கலந்து வைத்திருக்கிறாயா என்க,அதற்கும் அவர் எதுவும் சொல்லவில்லை.

சாப்பிட்டு எழுந்த மகி டிவியை ஆன் பண்ணி விட்டு,சோபாவில் உட்கார்ந்து கொண்டு அந்த காலத்து படத்தை தேடி வைத்து பார்க்க ஆரம்பித்தார்.

வழக்கமாக எல்லா வேலையும் முடித்த எஸ்தர் லைட்டை நிறுத்திவிட்டு ரூமில் வந்து படுத்தார்.மேலும் ஒரு மணி நேரம் சென்றிருக்க மகிக்கு தூக்கம் வரவும் டிவியை ஆஃப் பண்ணிவிட்டு மனைவி படுத்திருக்கும் பெட்டில் வந்து படுத்தவர் சிறுது நிமிடத்தில் தூங்கி விட்டார்.

அரை மணி நேரம் கடந்து செல்ல கணவரிடமிருந்து வந்த குறட்டை சத்தத்தை கேட்ட பிறகு பொறுமையாக எழுந்தவர் போட்டிருந்த நகைகளை எல்லாம் கழட்டி கணவரின் பக்கத்திலே வைத்தவர்,எழுதிய லெட்டரையும் நகைகளின் கீழே வைத்து விட்டு தனது அண்ணன் இத்தனை வருடமாக வாங்கி கொடுத்த துணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

எங்கே போவதென்ற யோசனையோடு தலையில் முக்காடு போட்டபடி நடந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்ததும் மனதில் இருந்த வலிகளும் சேர்ந்து எஸ்தருக்கு மயக்கத்தை வர வைக்க ரோட்டிலேயே மயங்கி விழுந்தார்.

தூரத்தில் வந்த காரிலிருந்தவர்கள் எஸ்தரின் அருகில் வந்து வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக இறங்கி போய் பார்த்தனர்.

மாமு இவங்க மயங்கிட்டாங்களென்று அருகில் இருந்தவள் சொல்ல ஆமாமென்று எஸ்தரின் கையை பிடித்து பார்த்தவாறு சொன்னவன் உள்ள தூக்கிட்டு போகலாம் ஜூலி என்க,சரி மாமு என்று இருவரும் சேர்ந்து கைதாங்களாக எஸ்தரை தூக்கிட்டு வந்து காரில் படுக்க வைத்தனர்.

அந்த மெடிக்கல் கிட்டை எடு என்க, ஜூலியும் அதை எடுத்துக் கொடுக்கவும் பெட்டியை திறந்து அதிலிருந்த இன்ஜெக்ஷன் எடுத்து எஸ்தருக்கு போட,ஏன் மாமு இன்ஜெக்ஷன் என்றாள்.

ரொம்ப அனிமிக்கா இருக்காங்க பாரு, அதனால தான் டி ஊசி போட்டிருக்கேன். இவங்க சரியா சாப்பிடலை போல,இருந்ததை நாமளும் சாப்பிட்டோமே,யாரு என்னன்னு தெரியலையேடி.அவங்க எழுந்தா தான் விசாரிக்கணும் என்று சொல்லிவிட்டு மீண்டும் பயணத்தை தொடங்கினர்.

ஒரு மணி நேரம் கடந்திருக்க எஸ்தருக்கு மயக்கம் தெளிந்தது.தான் காரில் படுத்திருப்பது தெரிந்து பதறியடித்து எழுந்து உட்கார்ந்தவர் தம்பி வண்டியை நிறுத்துங்களென்று கத்த,அவரின் சத்தத்தை கேட்டு ஓரமாக வண்டியை நிறுத்தினான்.

யார் தம்பி நீங்க?என்னை ஏன் கார்ல கூப்பிட்டு போறீங்கள்னு பதற்றத்தோடு கேட்கவும்,பின்னர் நடந்ததை சொல்லியவன் சொல்லுங்கம்மா நீங்க எங்க போகணும்?

உங்களை அங்கு கொண்டு போய் விடுகிறோமென்று காரிலிருந்த இருவரும் கேட்க அப்படி எனக்கு சொல்லிக்கும்படி இல்லப்பா.யாருமில்லாத அனாதை என்றார்.

அப்படிங்களா மா...உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் எங்க கூட வர முடியுமா?என்கவும் அவரோ இருவரையும் சந்தேகமாக பார்த்தார்.

பயப்படாதீங்கள் மா.என் பேரு ருத்ரன் இவள் என்னுடைய மனைவி ஜுலி.நான் டாக்டர் என்று தன்னுடைய ஐடி கார்டை எடுத்து எஸ்தருக்கு காமிக்கவும் அதை வாங்கி பார்த்தவர் சரிங்க தம்பி உங்க கூட வரேனென்றார் .

அம்மா நாங்க டூக்காக தமிழ்நாட்டுக்கு வந்தோம்.ஆனால் நாங்கள் இருப்பது டெல்லியில் என்கவும் சரிங்கப்பா என்றவர் எப்படியோ கண் காணாத தூரத்திற்கு போனால் சரியென்று மனதில் நினைத்துக் கொண்டு கண்ணை மூடி சீட்டில் சாய்ந்தார்.

வண்டியை ஸ்டார்ட் பண்ணியவன் போகும் வழியிலிருந்த ஹோட்டலில் முன்பு காரை நிறுத்த கண்களை திறந்து பார்த்தவரிடம் வாங்கம்மா நீங்க எதுவுமே சாப்பிடலன்னு தெரியுது என்றவன் எஸ்தரை அழைத்துட்டு போய் டிபனை வாங்கி கொடுக்க நேற்றிலிருந்து எதுவும் சாப்பிடாததால் அவர் வேக வேகமாக சாப்பிடவும் புரையேறியது.

பார்த்துங்கம்மா என்ற ஜூலி அவரின் தலையில் தட்டவும் எஸ்தருக்கு தனது மகள் ஷமீராவின் ஞாபகம் வந்து கண்கள் கலங்கியது..அவர் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

அம்மா நீங்க ஏதோ மன கஷ்டத்தில் இருக்கீங்கன்னு எனக்கு புரியுது நீங்களா சொல்ற வரைக்கும் நிச்சயமா அதை பற்றி நாங்க கேட்க மாட்டோம். நீங்க நிம்மதியா எங்க கூட இருக்கலாம்.

அப்புறம் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க என்கவும் சொல்லுப்பா என்க,எந்த சூழ்நிலையிலும் சாப்பாட்டை மட்டும் ஸ்கிப் பண்ண கூடாது.அது உடம்புக்கு நல்லது இல்லைங்கம்மா.

சாதிக்கணும் என்றால் அதுக்கு உடம்புக்கு முதல்ல தெம்பு வேணும் இல்லையா என்று காரை ஓட்டியபடி ருத்ரன் கேட்க இனிமே நான் சாதித்து என்னப்பா பண்ண போறேனென்றார்.

அப்படி சொல்லாதீங்க மா....வயது முதிர்ந்த காலத்தில் எத்தனையோ பேர் சாதித்ததை நீங்கள் பார்க்கவில்லையா இல்லை கேள்விப்படவில்லையா என்று பேசிக்கொண்டு சென்னைக்கு வந்து சேர்ந்தனர்.

ஏற்கனவே தங்கள் ரெண்டு பேருக்கும் விமானத்தில் டிக்கெட் புக் பண்ணி இருந்ததால் எஸ்தரை எப்படி அழைத்துப் போவதென்று யோசனையா இருக்கும் போது தம்பி என்ன ட்ரெயின்ல ஏத்தி விடுங்க நான் வந்து சேர்ந்து விடுகிறேனென்றார்.

இருங்கம்மா பிளைட்ல டிக்கெட் ஏதாவது இருக்காயென பார்க்கிறேன் என்று ஜூலி செக் பண்ண அவர்கள் நேரமோ அவர்கள் போகப் போகும் பிளைட்டில் ஒரே ஒரு சீட் இருக்க அதிலே புக் பண்ணினாள்.பின்னர் மூவரும் அவர்களுக்கான விமானத்தில் ஏறி டெல்லிக்கு வந்து சேர்ந்தனர்.

வனிச்சூர்:

ஏன்பா ரெண்டு பேரும் அங்கையே நிக்கிறீங்கள்?இளா எங்கே கண்ணுனு வானதி கேட்கவும் தற்செயலாக மூவரும் திரும்பி பார்க்க அங்கே தனது மகனும் அவன் ஆருயிர் நண்பன் பரத்தும் நிற்பதை பார்த்து பாபு பரத் என்று மூவரும் அதிர்ச்சியாக சொன்னார்கள்.

பாபு பரத் என்று சாரதா பாட்டி கூப்பிட, ம்ம் என்று சொல்லிக் கொண்டு இருவரும் பாட்டியின் காலில் விழ காட் பிளஸ் யூ பா என்றவர் எப்ப கண்ணுங்களா வந்திங்க?.

ஏன் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்க...நீங்க மூணு பேரும் எப்ப வந்தீங்க?ஏன் சொல்லவில்லை என்று அவர்களும் திருப்பிக் கேட்டார்கள்.

இப்பதான் வந்தோம் பா...ஆமா நீ எப்போ இந்தியாவுக்கு வந்தயென்று பாபுவிடம் கேட்க நான் முந்தா நேத்து வந்தேனென்றான்.

ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே என்றனர்...ஏன் நீங்க மட்டும் நடந்தது எல்லாத்தையும் தெளிவாக என்கிட்ட சொன்னீங்களானு முறைத்துக் கொண்டு கேட்க,வானதிக்கு அவர்கள் சூழ்நிலை புரிந்து அதை சுமூகமாக்க நினைத்து நடந்தது நடந்து போயிடுச்சு...

இனிமே அது பத்தி எதுக்கு வளர்த்துக்கிட்டு.வாங்கப்பா உட்காருங்க.ரெண்டு பேருக்கும் டீ எடுத்துட்டு வரட்டுமாயா என்க அதெல்லாம் ஒன்றும் வேண்டாங்கம்மா.
நைட் சமையல் ஆகிவிட்டது அது எடுத்துட்டு வருவதற்கு பாத்திரம் கேக்குறாங்க அதுக்கு தான் ரெண்டு பேரும் வந்தோமென்று அவர்கள் மூவரையும் பார்த்துக் கொண்டு சொன்னானுங்கள்.

பாபு தம்பி உடனே கிளம்புனு தான் சொல்லுச்சு அப்பா தான் விழாவில் இருக்க சொன்னாங்களென்று வானதி அவர்களை காப்பாற்ற சொல்ல,அதற்கு ராணியோ நல்ல விஷயம் தானுங்க.
அதற்கு நான் ஒன்னும் சொல்லலை.

எங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே அவ்வளவு தான்.பாபுவை பார்த்து மூணு வருஷம் ஆகுதென்று கண்ணீரோடு சொன்னார்.

அம்மா என் வேலை அப்படி எதுக்கு இப்ப தேவை இல்லாம அழுதுட்டு இருக்கீங்க?.வீட்ல ஒரு நல்ல காரியம் நடக்குது இப்படி அழுகிறீர்களே நல்லாவா இருக்கென பாபு முறைக்க, சாரி கண்ணா என்றவர் ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்கள.

கல்யாண வேலை எப்படி போயிட்டு இருக்குப்பா என்று பரத்திடம் கேட்க ஒரு பக்கம் அதுவும் போயிட்டு இருக்குங்கத்தை.ஏனூங்கத்தை இவ்வளவு தூரம் வரீங்க ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லை.

நேற்று கூட என்கிட்ட போன்ல பேசினீங்களே?.

ஏன்டா நீங்க கூட தாண்டா வந்துருக்கீங்க ஒரு வார்த்தை சொல்லவில்லையே என்று அந்தோணி முறைத்தார்.

அதற்குள் பாத்திரம் கேட்டு போன் வர சரி மற்றதை பிறகு பேசிக்கலாம் என்றவர் நீங்க போய் வேலையை பாருங்களென அனுப்பி வைக்க, அவர்கள் இருவரும் விட்டால் போதுமென்று அங்கிருந்து சென்றனர்..

அம்மாடி வந்ததுல இருந்து ஷமீராவை காணுமே என் பேத்தி எங்கே இருக்கிறாள்?

தனது அப்பா வீட்டில் தங்க வைத்திருப்பதாக சொல்லவும், அதை கேட்டவருக்கு பேத்தியின் மாமியார் மாமனார் மேல் நல்ல எண்ணம் வந்தது.

இவர்கள் ஐவரும் பேசிக் கொண்டிருக்க செழியனும் உள்ளே வர அம்மா இவங்கதான் என்னோட பையனென்று மகனை காட்டி சொல்ல,அவர்களை பார்த்தவன் வாங்க பாட்டி வாங்கப்பா வாங்கம்மா என்று மரியாதை நிமித்தமாக கைகூப்பி செழியன் சொல்ல,கம்பீரமான ஆண்மகனாக இருப்பவனை பார்த்த சாரதா பாட்டிக்கு பேத்திக்கேற்ற மாப்பிள்ளை தான் என்கும் எண்ணம் வந்தது...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
வனிச்சூர்:

தம்பி இவங்க தான் உன் பொண்டாட்டியோட சின்ன பாட்டியென்ற வானதி,செழியன் எனக்கு ஒரே பையன் தானுங்க மா.


செழியன் கூட ரெட்டை புள்ளையாக ஒரு பொம்பள புள்ளையும் பொறந்தது.மூணு மாசம் குழந்தையாக இருக்கும் போது உடம்பு முடியாம கைய விட்டு போயிடுச்சென்று 29 வருடங்களுக்கு முன்பு இறந்து போன பெண் குழந்தையை நினைத்து இன்றும் வருத்தப்பட்டார்...

அம்மாடி கலங்காதே ஒத்த புள்ள போனா என்ன உன் மருமகள் இரட்டை பிள்ளையா பெத்து கொடுப்பாளென்க, உங்க வாய் முகூர்த்தம் போல பலிக்கட்டுமா என்றார்.

சொல்லுயா என்று மகனிடம் கேட்க சாப்பாடு எல்லாம் வந்துடுச்சு எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்திரலாம் என்கவும்,எல்லாரும் உங்க தாத்தா வீட்டுக்கு தானே போயிருக்காங்க கண்ணன் கிட்ட சொல்லி வர சொல்லுப்பா...

அம்மா கீழேயும் ரூம் இருக்கு மேலயும் ரூம் இருக்கு உங்களுக்கு படி ஏற முடியலன்னா நீங்க கீழ இருக்கிற ரூமை எடுத்துக்கலாம்.வயசான காலத்துல நமக்கு எதுக்கு தனி ரூம்.இப்படியே படுத்து கொள்கிறோமென்ற பாட்டி பார்வையால் அந்த வீட்டை முழுவதும் அலசினார்.

அவரின் பார்வையை பார்த்த செல்லதுரை இது எங்க பூர்வீக வீடுங்கம்மா.அப்போ சிமெண்ட் தரையாக தான் இருந்துச்சு.எங்க அப்பா காலத்துல இதையெல்லாம் ஒடச்சுட்டு ராஜஸ்தானில் இருந்து மார்பில்ஸ் வரவச்சு வீட்டை சரி பண்ணாங்களாம்.

ரொம்ப அற்புதமா இருக்குப்பா வீடு.பழமை மாறாமல் அதும் இந்த காலத்து புதுமையோடு கலந்து நல்லாருக்கு.

சரி வாங்க...கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க நான் உங்களுக்கு வீட்டுக்குள்ளாரே சாப்பாடு எடுத்துட்டு வர சொல்றேன் என்கவும் அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.எல்லார் கூடயுமே பந்தியில் சாப்பிட்டுக்கிறோமென்று சொல்லி விட்டனர்.

வாங்கப்பா ரூமுக்கு போகலாமென்று வலது பக்கமிருந்த ரூமை திறக்க அதுவோ பத்து பேர் தாராளமாக தங்கும் அளவிற்கு பெரிய ரூமாக இருந்தது...

இவ்ளோ பெரிய ரூமா என்று பாட்டி அதிர,அந்த காலத்தில் குடும்பம் எல்லாம் ஒற்றுமையாக தானே இருப்பார்கள் அம்மாச்சி...

தாத்தாக்களாம் ஒற்றுமையாக இருந்ததால குடும்பம் ரொம்ப பெரிசு.குழந்தை குட்டி கூட தாராளமாக ரூம்ல தங்கிக் கொள்ளணுமே அந்த எண்ணத்தில் தான் தாத்தாவோட அப்பா இவ்வளவு பெரிதாக கட்டி இருக்கிறார்.

பெரியவர்கள் முன் யோசனை என்னைக்குமே அது நல்லதாக தான் இருக்கும் கண்ணு...இந்த காலத்து பசங்க அவசரம் அவசரமா எடுத்தோம் கவிழ்த்தோமென்று எல்லா விஷயத்தையும் செய்து கொள்கிறீர்கள்.

சிலது நல்லதா முடியுது சிலது சொல்ல முடியாம வேதனையில் போய் முடியுது என்ன பண்றது அனுபவத்தை விட சிறந்த பாடம் இல்லையே என்கவும் நீங்க சொல்றது வாஸ்தவம் தான் அம்மாச்சி என்றவன் சரி நீங்க ரெஸ்ட் எடுங்க,கொஞ்சம் வேலை இருக்கு போய் பார்க்கிறேனென்று சொல்ல,கண்ணா என்று செழியனை கூப்பிட சொல்லுங்க அம்மாச்சி என்றான்.

கிட்ட வாயேன் என்கவும் அவர் அருகில் வந்து நிற்க இப்போ உன் பொண்டாட்டியை பார்க்க முடியுமா என்கவும் சிரித்துக் கொண்டவன் இருங்க அம்மாச்சி கண்ணனை வர சொல்லி உங்களை கூப்பிட்டு போக சொல்றேன் என்கவும்,யார் என்று பாட்டி பார்க்க,அம்மாவோட அண்ணன் பையன்.

நேரமும் கடந்து செல்ல இதற்கு பிறகு இன்னொரு வீட்டுக்கு போக வேண்டாம் காலையில் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்.

பின்னர் மூவரும் சாப்பிட்டு ரூமில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கதவை தட்டி விட்டு செழியனும் வானதியும் உள்ளே வந்தனர்.

சாப்பாடு பிடித்ததா என்க நல்லா இருந்தது என்றனர்.ம்ம் நைட்ல பால் குடிக்கிற பழக்கம் இருக்கா என்று செழியன் கேட்க இல்லப்பா என்றனர்.

இங்கு எல்லாருக்கும் அந்த பழக்கம் இருக்குமா.கொஞ்சமாக குடிச்சிட்டு படுங்க.வெள்ளை சக்கரை போடல நாட்டு சக்கரை தான் போட்டுருக்கேன் என்கவும்,வானதியின் அன்பான வார்த்தைகளை தட்ட முடியாமல் சரி கொடுங்கள் என்றனர்.

ஆளுக்கு ஒரு கிளாஸில் நன்கு காய்ச்சிய பாலை கொடுக்கவும் வாங்கி குடித்து பார்த்தவர்களுக்கு அதன் ருசி ரொம்ப பிடித்து விட்டது.

உன் பொண்டாட்டிக்கு சுண்ட காய்ச்சிய பாலில் வெள்ளம் போட்டு கொடுத்தாக்க குண்டா குண்டானா குடிப்பாள்.

உன் மருமகளுக்கு அந்த பால் டம்ளரை கொடுத்து கவுத்துடலாம் மா என்று பாட்டி சிரிக்க மற்றவர்களுக்கும் அவர் சொன்ன தோரணையை கேட்டு சிரிப்பு வந்து விட்டது...

சோழனூர்:

வழக்கம் போல தூங்கி எழுந்த மகி ரெஸ்ட் ரூமிற்குள் சென்று ப்ரஷாகி ஹாலுக்கு வந்தவர் எஸ்தர் டீ கொண்டு வா என்றவாறு சோபாவில் உட்கார்ந்து தனது போனை பார்க்க நிமிடங்கள் கடந்தும் டீ வராததால் ஏய் இன்னும் என்ன பண்ற?.

என்னடி ஊருக்கே டீ போடுறியா? என்று மீண்டும் குரல் கொடுத்தார்.

அப்பொழுதும் எந்த பதிலும் வராமல் போக கோவமாக எழுந்து கிச்சன் பக்கம் போக அங்கே கதவு பூட்டி இருக்க தோட்டத்தில் இருக்காளோ என்றவாறு கதவை திறந்து பார்க்க தோட்டத்திலும் மனைவி இல்லை...

எங்க தான் போய் தொலைஞ்சாள்?.

மனுஷன் இல்லாத நேரத்திலும் இப்படி தான் வீட்டில் இருக்க மாட்டாள் போலயென திட்டிக் கொண்டே மாடியில் இருப்பாளோ என படிகளில் ஏற அங்கே கதவு வெளி பக்கமாக லாக் பண்ணியிருப்பது தெரிந்தது.

இங்கேயும் இல்லையாஆஆஆ ஒருவேளை அண்ணன் வீட்டுக்கு போயிருப்பாளா?என்று யோசித்தவர் சரி எதற்கும் அங்க போய் பார்க்கலாம் என்று வீட்டை பூட்டி கொண்டு நான்கு வீடு தள்ளி இருக்கும் தனது மைத்துனர் வீட்டுக்கு வந்து பார்க்க அது வெளிப்பக்கமாக பூட்டு போட்டிருப்பது தெரிந்தது.

அட ஆமாஆ இன்னைக்கு தானே மாமா ஊருக்கு போறேன்னு சொன்னாரு.ஒருவேளை அண்ணன் கூட கிளம்பி பொண்ணோட பங்க்ஷனுக்கு போயிட்டாளா?

இருந்தாலும் இருக்கும் என்று நினைத்து கோவமாக திரும்பி வந்தவர் காலையிலே பசிக்குதே...சரி முதல்ல ஒரு டீ குடிக்கலாம் என்று தனது பைக்கை எடுத்துக் கொண்டு டவுனில் இருக்கும் டீ கடைக்கு சென்றார்..

அங்க போய் டீ குடிக்கும் போது தெரிந்தவர்களோடு பேசிக் கொண்டிருக்க நேரமும் கடந்து சென்றது. பின்னர் மணியை பார்க்க 10 என்று காட்டவும் இதுக்கு அப்புறம் வீட்டில் போய் எங்க சாப்பிடுவது...சரி டிபன் சாப்பிட்டு போகலாம் என்று காலை சாப்பாடு ஹோட்டலில் சாப்பிட்டவர் நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.

மனைவியிடம் ஒரு சாவி இருப்பதால் தைரியமாக வீட்டை பூட்டிட்டு வெளியே போனார்.

சிறிது நிமிடத்தில் வீட்டிற்கு வந்தவர் வண்டியை நிறுத்திவிட்டு கதவை பார்க்க அது பூட்டியே இருக்கவும் இன்னும் வரலையா?.

எங்கு தான் போனாள்?.

ஒருவேளை வயல்ல எதாவது வேலைக்கு ஆள் வர சொல்லி போயிருக்காளா என்கும் யோசனையோடு தனது போனை எடுத்து மனைவிக்கு கால் பண்ண,வீட்டிற்குள் இருந்து ரிங் சத்தம் கேட்டது..

போன வச்சுட்டு இவ வயலுக்கு போயிட்டா போல என்று திட்டி கொண்டு கதவை திறந்து வீட்டிற்குள் வந்தவருக்கு ஆபீஸிலிருந்து போன் வரவும் அதில் பேசிக்கொண்டே நேரம் கடந்து சென்றது.

பின்னர் குளிக்கலாம் என்று பெட்ரூமுக்கு போக அங்கு படுத்த படுக்கையெல்லாம் கலைந்தபடி கிடக்க சரி மடித்து வைக்கலாம் என்று போர்வை எடுக்கும்போது தான் அதன் மேல் வெள்ளை காகிதமும் எஸ்தர் போட்டிருந்த நகைகளும் இருக்க என்ன இது என்று அதை எடுத்து படித்துப் பார்த்தவர் அதிர்ந்து போனார்.

எஸ்தர் இப்படி விட்டுட்டு போவாரென்று மகி ஒரு நாளும் எதிர்பார்க்கவில்லை. எப்படி இருந்தாலும் தன் மனைவி தன்னை விட்டு போக மாட்டாளென்ற நம்பிக்கையோடு இருந்தவருக்கு இன்று பேரிடியாக இருந்தது.மனைவியை எங்கே போய் தேடுவது என்று புரியாமல் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார்.

தனது மாமாக்கு தெரிஞ்சா நிச்சயமாக தன்னை வெட்டாமல் விடமாட்டார்.அந்தோணியின் கோவத்தை பற்றி மகிக்கு நல்லாவே தெரியும்.

தங்கைக்காக தான் அவர் பொறுத்து போறார் என்பதை இதுவரை உணராமல் இல்லை.மனைவியை நினைத்து கண்கள் கலங்கியது.பிடித்து தான் கல்யாணம் பண்ணினார்...ஆனால் தன்னிடம் இருக்கும் அந்த மூர்க்கத்தனமான குணத்தை மற்றும் மகியால் மாற்றிக் கொள்ள முடியவில்லை...

உடனே போன் எடுத்தவர் யாருடைய வீட்டுக்கு எஸ்தர் போயிருப்பா என்று யோசனை பண்ணும்போது எல்லாருமே தூரத்தில் இருப்பது தெரிந்தது.

எஸ்தரின் இன்னொரு சித்தி வீட்டுக்கு போய் இருப்பாளா என்று நினைத்தவர் உடனே தனது பெரிய மாமியாரின் பையன் நம்பருக்கு கால் பண்ண அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியவர் பொதுவாக நலம் விசாரித்துவிட்டு எங்க மாமா அக்கா?போனை கொடுங்கள் என்று சொல்லவும்,வேலையா இருக்கிறாள்.சும்மா தான் போன் பண்ணினேன் என்று சொல்லி வைத்து விட்டார்.

பின்னர் தெரிந்த எல்லாரிடமும் போன் பண்ணி சாதாரணமாக பேசுவது போல விசாரிக்க,எல்லாரும் எஸ்தரை பற்றி இவரிடம் விசாரித்தனரே தவிர எஸ்தர் அங்கு இருப்பது போல் அவருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை.

நேரமும் கடந்து செல்ல மகிக்கு பைத்தியம் பிடிக்காத குறைதான்.எங்க போய் இவளை தேடுவது என்று இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.

மச்சான்கிட்ட சொல்லலாம் என்று நினைத்து கால் பண்ணவும் அந்தோணி நம்பருக்கு நாட் ரீச்சபிள் என்று வந்தது.

சரி இப்பொழுது ஒன்னும் சொல்ல வேண்டாம்.மைத்துனர் வரட்டும் நேரில் பேசிக்கொள்ளலாம் அதுவரைக்கும் நாமே தேடலாம் என்று வண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வர பக்கத்து ஊரில் இருக்கும் எஸ்தரின் தோழியின் ஞாபகம் வந்தது.

அங்கு போய் இருப்பாளோ என்று அவர் வீட்டிற்கு எதார்த்தமாக செல்வது போல போக எஸ்தரை கூப்பிட்டு வந்திருக்கலாமே அண்ணா என்க பக்கத்தில் ஒரு வேலை விஷயமாக வந்தேன்மா.அப்படியே உன்னையும் மச்சானையும் பசங்களையும் பார்த்துட்டு போலாம்னு வந்தேன் என்று சமாளித்தார்...

நேரமும் கடந்ததே தவிர எஸ்தரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. .

அப்பொழுது அவர் போனுக்கு கால் வர,வண்டியை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு யார் என்று பார்க்க அவரின் அசிஸ்டன்ட் தான் கால் பண்ணினார்.

அட்டென்ட் பண்ணியவர் சொல்லுங்க நாதன் என்கவும் சார் ஹெட் ஆபீஸ்ல இருந்து மெயில் வந்துருக்கு நாளைக்கு அந்த எம்எல்ஏ வீட்டுல ரைடு போகணும் என்கவும் அப்படியா என்றவர் சரி நான் வந்துடுறேன்.நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க என்று சொல்லி போனை வைத்தவருக்கு தலைமுடி பிய்த்துக் கொண்டு போனது


வீழ்ந்தேனடி...
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
மகி போல ஜென்மங்கள் இந்த பூமியில் இருக்கிறதே🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top