• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
சோழனூர்...

வீட்டுக்குள் வந்த எஸ்தர் தங்களது ரூமை எட்டிப் பார்க்க,அங்கே மகி பெட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது..


பின்னர் சத்தம் இன்றி கதவை லேசாக ஒருகளித்து சாற்றி விட்டு,பக்கத்து ரூமிற்கு போய் பீரோவை திறந்தவர் அதில் மகளுக்காக கணவருக்கு தெரியாமல் சீட்டு போட்டதில் வாங்கி வைத்த நகைகளையெல்லாம் ஒரு பேக்கில் போட்டவர்,தனது புடவை முந்தானைக்குள் மறைத்து எடுத்துட்டு வந்து முன்பக்க கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு தோட்டத்துக் கதவு வழியாக 4 வீடு தள்ளி இருக்கும் அண்ணன் வீட்டுக்கு வேகவேகமாக வந்தார்.

ராணியோ அங்கே தோட்டத்தில் உள்ள குப்பைகளை கூட்டிக் கொண்டிருப்பதை பார்த்து அண்ணி என்று கதவை திறந்து உள்ளே வந்தவர் இது உங்க மருமகளுக்காக வாங்குனது...
உங்க அண்ணனுக்கு தெரியாம சீட்டு போட்ட பணத்தில் இத்தனை வருஷமா நான் வாயை கட்டி வயித்தை கட்டி குருவி போல சேர்த்து வச்சிருக்கேன்.

இது அவகிட்ட கொடுத்திருங்கள் அண்ணி என்கும்போது எஸ்தருக்கு அழுகை வர,இதை சந்தோஷமா நீங்களே அவ கையில கொடுத்தாக்க எவ்வளவு நல்லா இருக்கும்?.

ஏங்கண்ணி தெரிஞ்சே இப்படி கேக்குறீங்களே?

இது நியாயமா?

சரி விடுங்கண்ணி ஏதோ ஒரு ஆதங்கத்தில் கேட்டுட்டேன்.உள்ள வாங்க டீ வைக்கிறேன் என்க,அய்யோ அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ராணி.

உங்க அண்ணன் தூங்கிட்டு இருக்காரு அதான் இதை கொடுத்துட்டு போலாம்னு வந்தேன்.எந்திரிச்சி பார்த்து நான் இல்லையென்றால்,நானும் எங்கேயோ ஓடிட்டேன்னு சொன்னாலும் சொல்லுவாரு என்கும் போது எஸ்தருக்கு கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்து ஓடியது.

ராணிக்கு ஒன்றும் சொல்ல முடியவில்லை...அண்ணனையும் ஏதும் கேட்க முடியாது.அண்ணிக்கு எவ்வளவு தான் ஆறுதல் சொல்ல முடியும்?மகியின் குணமே இப்படித்தான்...தான் பேசுவது மட்டுமே சரி.தான் மட்டும் தான் எல்லாவற்றிலும் பர்பெக்ட் என்ற எண்ணம்.

ஏங்கண்ணி அப்பயே அத்தை இந்த கல்யாணம் வேண்டாமென்று சொன்னாங்கள் தானேயென்று ராணி கேட்கவும்,காலம் போன பிறகு அதை பத்தி யோசித்து என்ன புண்ணியம்?

உங்க அண்ணனுக்கு என்னை கல்யாணம் பண்ணி கொடுக்க கொஞ்சம் கூட எங்கம்மாக்கு விருப்பமே இல்லை.அவங்க அண்ணன் பையன கட்டிக்கிட்டா ராணி போல வச்சிருப்பார்னு சொன்னாங்க...

நான் தான் நம்ம அத்தை குடும்பமென்று எங்க அம்மாவை மீறி உங்கம்மா பேசுன வார்த்தையை கேட்டு இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன் அதனால்தான் இத்தனை வருஷமா அனுபவிச்சிட்டு இருக்கேன்.

என்னைக்கு நான் செத்து அந்த ஆண்டவருக்குள்ள போறேனோ அன்னைக்கு தான் எனக்கு நிம்மதி கிடைக்கும் என்கவும் அப்படி எல்லாம் சொல்லாதீங்கண்ணி என்று வருத்தப்பட்டார்.

என் தலையெழுத்து இது தான் இதை மாற்ற முடியாதென்று வேகமாக தனது வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

ராணிக்கோ தனது அத்தை மகளை நினைத்து வருத்தமாக இருந்தது..

தனது அண்ணனுக்கு அப்படியே தாயைப் போல குணம்.எல்லாம் மாறிடும் அண்ணியென்று சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் போனார்.

அந்தோணியும் காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு மேலும் சில பொருட்களையும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தார்.

நேரமும் கடந்து சென்றது...இரவு சாப்பாட்டு முடித்துவிட்டு மறுநாள் எடுத்திட்டு போக வேண்டிய பொருட்களை எல்லாம் தயாராக இருவரும் எடுத்து வைக்கும் போது சாரதா பாட்டியும் வந்தார்..

சித்தி காலையிலேயே கிளம்பிடலாமா என்க...ஆமாயா...அதுக்காக தான் இப்பவே உன் தம்பி பொண்டாட்டி கிட்ட சொல்லிட்டு வந்துட்டேனென்றார்.

விடியலும் ஆரம்பமாக அதிகாலையிலே தயாரானவர்கள் வனிச்சூரை நோக்கி பயணமாகினர்.

டிரைவர் வைத்துக் கொள்ளலாமென்று ராணி சொல்ல அதான் நான் இருக்கிறேன் ஒன்னும் பிரச்சனை இல்லை என்று அந்தோணி சொல்லிவிட்டார்.

போகும் போது எஸ்தரை பற்றி சொல்லி வருத்தப்பட அவர்களுக்கும் வருத்தம் தான் பட முடிந்ததே தவிர மகியை எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.

சின்ன பிள்ளையா அடித்து திருத்துவதற்கு தலைக்கு மேல உயர்ந்த ஆண்மகனை போய் என்ன கேட்பதென்று சாரதா பாட்டியும் வருத்தப்பட்டார்.

அந்தோணிக்கோ தன்னால் தானே தங்கை வாழ்க்கை இப்படி ஆனதென்பதை நினைத்து வேதனை படாமல் இருக்க முடியவில்லை...

ஒருவேளை அன்று ராணி என் மேல் விருப்பம் இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயமாக தங்கைக்கு இந்த வாழ்க்கை கிடைத்திருக்காது.

தனது அம்மா சொந்தத்தில் மாமன் மகனை கல்யாணம் பண்ணிக் கொண்டு தங்கை நல்லா இருந்திருப்பாளேயென்ற எண்ணம் வராமலும் இருக்கவில்லை.

என்னுடைய சுயநலத்துக்காக உன் வாழ்க்கை பலியாக வேண்டிய சூழல் வந்து விட்டதே??இந்த அண்ணனை மன்னிச்சிடுமா என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

வழக்கம்போல் தூங்கி எழுந்த மகி சர்ச்சுக்கு போக ரெடியாகென்று சொல்லிவிட்டு சென்றார்.

பின்னர் இருவரும் காரில் ஏறி டவுனுக்குள் இருக்கும் சர்ச்சுக்கு சென்றனர்..

பிரேயர் முடிந்து வீட்டுக்கு வரவே மதியம் 12 ஆனது.நல்லவேளை காலையிலேயே எழுந்து எஸ்தர் சமைத்து வைத்திருந்ததால் மகியிடம் திட்டு வாங்காமல் இருக்க முடிந்தது.

சாப்பாடு எடுத்து வை என்று சொல்லவும் சமைத்ததை திரும்ப சூடு பண்ணி டைனிங் டேபிள் எடுத்து வைக்க மகியும் வந்து சாப்பிட உட்கார்ந்தார்.

என்ன உன் அண்ணனும்,எங்க அத்தையும் கிளம்பிட்டாங்களா என்க,எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

உன்ன தாண்டி கேட்கிறேன் காதில் விழுதா இல்லையா?.

ஏன் உங்க தங்கச்சியும் தானே போயிருக்காங்க அங்கு கேட்க வேண்டியது தானே என்க..என்ன டி ரொம்ப வாய் நீளுது என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டை தூக்கி அடிக்க வந்தார்.

வனிச்சூர்:

"பணம் வந்துட்டா தாம் தூம்னு குதிக்கிறது"

எனக்காக எந்த கிப்ட் வாங்காதீங்கன்னு உங்க கிட்ட பல முறை சொல்லிருக்கேன்.

உங்கள யாரு இவ்ளோ பணத்தை செலவு பண்ண சொன்னா?ஏற்கனவே நம்ம கல்யாணத்துக்காக செலவு பண்ணிட்டீங்க அக்கவுண்ட்ல பணம் இருக்கா இல்லையா?

நீங்க எல்லாம் வயல்ல இறங்கி கஷ்டப்பட்டு இருந்தீங்கனாக்க உங்களுக்கு பணத்தோட அருமை தெரியும்.ஐயா தான் நல்ல ஜாலியா ஏசிலையும் பேன் காத்துலையும் வேலை பாக்குறீங்களே உங்களுக்கு எங்கு இதோட அருமை தெரியும்?.

அப்போ இஷ்டத்துக்கு செலவு பண்ணிட்டு தான் இருப்பீங்களென்று ஷமீரா பொரிந்து தள்ள பொறுத்து பொறுத்து பார்த்தவன் மனைவியும் வாயை தனது பாணியில் அடைத்தான்...

ம்ம் என்றவாறு கணவனின் முதுகில் ஷமீரா அடிக்க அதையெல்லாம் சட்ட பண்ணாதவன் ஏதோ நீண்ட நாள் பசியாக இருந்தவன் போல் மனைவியின் உதட்டை மென்று தின்பதிலே குறியாக இருந்தான்..

கணவனின் நீண்ட முத்தமும் அவன் கைகள் உடலில் பயணிக்கும் சிலிர்ப்பில் ஷமீரா தான் தவித்து போனாள்.மனைவியின் நிலை புரிந்தாலும் தனது செயலை மட்டும் செழியன் நிறுத்தவில்லை.

ஒரு நாள் இரண்டு நாள் இல்லையே மூன்று வருட காதல் இதில் ஒன்றரை வருடம் இருவரும் பார்த்துக் கொள்ளவும் இல்லை பேசிக்கொள்ளவும் இல்லை.

இரண்டு வருட காதலில் தனது விரல் நகத்தை கூட தன்னவள் தீண்ட விட்டதில்லை அவ்வளவு கண்ணியமான காதலா என்று கேட்டால் ஆமாம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லுவான்.

வழக்கமான எல்லா காதலர்களும் போலும் பரிசை பரிமாறிக் கொள்ளவில்லை.பீச்,பார்க்,சினிமா ஷாப்பிங் என்று இருவரும் சென்றதில்லையே இரண்டு வருடமாக தங்கள் வாழ்க்கையை போனில் பேசியபடி தானே வாழ்ந்தனர்...

கணவனின் அடர்ந்த தாடியும் மீசையும் பெண்ணவளின் முகத்தில் அங்கும் இங்கும் உரசுவதில் சிலிர்த்துப் போனவள் அவன் முதுகு பக்கம் இருக்கும் சட்டையை இறுக்கி பிடிக்க போதும் இதற்கு மேலும் இருந்தால் இங்கு என்ன வேணாலும் நடக்கலாமென்று செழியனின் மனதிற்குள் தோண, என் மனைவி தானே அவளோடு என் வாழ்க்கை தொடங்குவதில் என்ன தப்பு? என்று இன்னொரு பக்கம் அவன் மனம் கேட்டது.

பொருத்ததுதான் பொருத்தோம் இன்னும் ஓர் இரவு மட்டும் தானே அதன் பின்னர் மனைவி தன்னோடு தன் வீட்டில் தன்னறையில் இருப்பாள் என்னும் உண்மை புரிய,பின்னர் அவளிடம் இருந்து விலகியவன் மனைவியின் உதட்டை பார்க்க பல் தடங்கள் அப்பட்டமாக தெரிந்தது..

எப்படி உன் புருஷனோட முத்தம் என்க அவளோ அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

சிரித்துக் கொண்டே மனைவியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன் அதிகமா செலவு பண்ணலடி என்று சொல்லிக் கொண்டு பாக்கெட்டில் இருந்த தனது போனை எடுத்து அதில் தனது ஜிபே அக்கவுண்ட்டை ஓபன் பண்ணியவன் பாரு?.

என்ன செலவு பண்ணி இருக்கேன் இதுவரைக்கும் என்று காட்ட,அதில் ட்ரான்ஸாக்க்ஷன் ஹிஸ்டரியை பார்க்க இதுவரை அவன் அக்கவுண்டில் இருந்து கடந்து எட்டு வருஷமா எந்த அமௌண்டும் டெபிட் ஆகவில்லை .

ஒரு வாரத்திற்கு முன்புதான் அதிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் பணம் டெபிட்டாகி இருப்பது காட்டியது.

கண்கள் விரிய புருஷனை நிமிர்ந்து பார்க்கவும் ஆமாம் என்று தலையை அசைத்தவன் உன்கிட்ட சொன்ன போல இதுவரைக்கும் அப்பா அம்மா என் சம்பளத்தை பத்தி கேட்கவே இல்லடி.

அதுக்காக ஊதாரி தனமா செலவு பண்றவன் உன் புருஷன் கிடையாது. இதுலாம் நான் ஓட்டி பார்த்து சம்பாதிக்கிற காசு.

அதுவும் இல்லாம நடுவுல ஏதாச்சும் வேலை வந்துச்சுன்னாக்க நானும் கண்ணனும் போவோம்.அதை பற்றி உன்கிட்ட நான் சொல்லிருக்கேன் இல்லையா,அதுல வரும் பணத்தை தான் செலவு பண்ணுவேன்.

உனக்கு வாங்குனது கூட உன் புருஷன் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி சம்பாரிச்ச காசு தாண்டி எங்கவும் இப்பொழுது ஷமீராவோ தனது கணவனிடம் நெருங்கி வந்து இறுக்கமாக அணைத்துக் கொண்டவள் அவன் நெஞ்சின் மேல் தலை சாய்த்து லவ் யூ இளா என்கவும் என்ன சொன்னடி என்று அதிர்ந்து போய் கேட்டான் .

ஏன் காது கேட்காதா?.

ஹேய் திரும்ப சொல்லுடி என்கவும், முடியாது ஒருமுறை தான் சொல்வேன் என்க,ஏய் ஒன்னரை வருஷத்துக்கு முன்னாடி சொன்ன டி திரும்ப இன்னொரு வாட்டி சொல்லுடி என்று மனைவியின் இடுப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கேட்க ப்ளீஸ் வலிக்குது என்றாள்.

வலிக்கட்டும்...அப்போ சொல்லு அதான் சொன்னேனே என்க...எனக்கு காதில் விழல இப்ப திரும்பவும் சொல்லு என்றான்.

சொல்லாமல் நிச்சயமாக கணவன் தன்னை விட மாட்டான் என்பது புரிந்து நிமிர்ந்து கணவனின் கண்ணை பார்த்தவள் லவ் யூ சோ மச் இளா என்று அவன் கழுத்தில் தனது கரங்களை மாலையாக கோர்த்தது போல் கட்டிக் கொண்டாள்..
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
344
லவ் யூ சோ மச் மை டியர் செல்ல பொண்டாட்டி என்று அவள் தலையில் முத்தம் கொடுத்தவன்,சரி வா ரொம்ப நேரம் ஆயிடுச்சு கீழே போகலாமென்று மனைவியை அணைத்தபடியே,
இன்னொரு கையில் கேக்கை எடுத்துக் கொண்டு வந்து அவளை ரூமில் விட்டவன்,அடுத்தது நம்ம பெட் ரூம்ல பார்க்கலாமென்க ச்சி போங்களென்று வெட்கப்பட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ஏய் பொண்டாட்டி நாளைக்கு பங்க்ஷன் முடிஞ்சு அடுத்தது நம்மளுடைய "ஃபர்ஸ்ட் நைட் தாண்டி"இதுல வெட்கப்பட என்ன இருக்கென்று சிரித்துக் கொண்டே செழியன் கேட்க,அய்யோ இளா வாய மூடுங்கனு மௌனமாக சிரித்தாள்.

சரி டி சரி டி என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து போகும் போது மனைவி வேறு பக்கம் திரும்பி நின்றதால் அவள் இடுப்பில் நன்கு கிள்ளி விட்டு ஓடி விட்டான்.

நேராக கண்ணனின் ரூமிற்கு வர அங்கு பரத்தும் பாபுவும் மெத்தையில் படுத்து கொண்டு கண்ணனிடம் பேசிக் கொண்டிருக்க போகலாமாடா என்றான்.

அடேய் இந்த நேரத்தில் வீட்டில் போய் என்ன பண்ண போறீங்கள்?.விடிய இன்னும் கொஞ்ச நேரம் தானிருக்கு. இங்கையே படுங்களென்று கண்ணன் சொல்லவும் சரி நீ கீழ படு நாங்க பெட்ல படுக்குறோம் என்றவாறு செழியன் ரெஸ்ட் ரூமிற்குள் போய் கையை கழுவிட்டு வந்தான்.

எதேஏஏ தரையில படுக்கணுமானு கண்ணன் முறைக்க,வீட்டுக்கு மருமகன் எனக்கு தான் முதல் உரிமை என்கவும் இதுக்கு ஒன்னும் குறைச்சல் மயிர் இல்லை என்றபடியே இரண்டு தலகாணியை எடுத்து கீழே போட பாபுவும் பரத்தும் தரையில் படுத்துக் கொள்ள அவர்கள் பக்கத்தில் கண்ணன் படுக்க செழியனோ பொதிரென்று கண்ணன் மேல் வந்து விழுந்தான்.

அய்யோஓஓஓஓஓ....தடிமாடு அதான் மெத்த வேணும்னு கேட்டியே அதுல படுத்து தொலைய வேண்டியது தானே ஏண்டா இப்படி மேல வந்து விழுகுற?.

சென பன்னி கணக்கா இருக்கிறடா..மனுஷனுக்கு இடுப்பு ஒடைஞ்சிருச்சு பாரு எஎனகவும் மற்ற இருவரும் சிரித்து விட்டனர்.

சரி டா நேரம் ஆயிடுச்சு படுங்கடா.

தூங்க விட்டா தானே?நீ தான் நொய் நொய்ன்னு பேசிட்டு இருக்கியே என்று கண்ணனை முறைக்க,எல்லாம் நேரம்டா என்றான்.

செழியனுக்கோ தனது மனைவியின் நினைவாகவே இருந்தது.இன்னும் ஒரு நாள் தாண்டி மறுநாள் இன்னேரமெல்லாம் மாமா நெஞ்சு மேல தாண்டி நீ இருப்பாய் என்று அந்த நிகழ்வை நினைத்துப் பார்க்கவே அவனுக்கு ஒரு மாதிரியாக இருக்க கண்ட்ரோல் செழியா கண்ட்ரோல் இல்லன்னா மானம் போயிடுமென்று சொல்லிக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.

விடியலும் செங்கதிரவனோடு அழகாய் உதயமானது...மலை கிராமம் என்பதால் எப்போதும் லேசாக குளிராக இருந்து கொண்டே இருக்கும்.

ஷமீராவுக்கு வழக்கம் போல் தூக்கம் கலைய எழுந்து குளித்து முடித்தவள் வேறு உடையை போட்டுக் கொண்டு கதவை திறந்து வெளியே வர செழியனும் அப்பொழுது தூங்கி எழுந்து வெளியே வந்தவன் பிரஷ்ஷாக வரும் மனைவியை பார்த்து உதட்டை குவித்து முத்தம் கொடுப்பது போல் செய்ய விரலை நீட்டி எச்சரித்தவள் கணவனின் கையில் சிக்காமல் வேகமாக படியில் இறங்கி ஓடினாள்.

அவள் பதற்றத்தை பார்த்து சிரித்துக் கொண்டே தனது மீசையை முறுக்கிவிட்டபடி கீழே வந்தவன் அத்தை என்க,வா செழியா உனக்கான டீ ரெடியா தான் இருக்கு என்றவாறு ரஞ்சனி டீ டம்ளரோடு வரவும்,அத்தைனா அத்தை தான் என்றவாறு வாங்கி குடித்தான்.

ஷமீரா கிச்சனுக்குள் செல்வதை விஷமமாக பார்த்தவன் எதுக்கு உங்கள் பொண்ணு இப்படி புள்ளிமான் போல ஓடுறாள் என்கவும் என்ன விஷயம்னு தெரியலையே என்று மருமகனைப் பார்த்து சிரித்தார்..

ஐயையோ அத்தை நான் ஒன்னும் பண்ண வில்லை என்றான்...ஆஹான்...நீ பண்ணுனியா என்று நான் கேட்கவே இல்லையே செழியா என்கவும் ஆஹா வாய கொடுத்து நம்மளே மாட்டிக்கிட்டோமோ என்று முழித்தவன் ஹிஹி என்று அசட்டு சிரிப்பு சிரிக்க சரி நீ குடி...

நான் போய் ஷமீராவுக்கு காபி வைத்து கொடுக்கிறேன் என்றவாறு கிச்சன் பக்கம் செல்ல கவிதாவும் கண்மணியும் அதே போல் காலையில் எழுந்து பிரஷ் ஆகி கீழே வரவும் அவர்களுக்கும் டீயை கொடுத்தார்.

பின்னர் மற்ற வேலைகளை பார்க்க தொடங்க சரித்தை நான் வீட்டுக்கு கிளம்புறேன்.பரத்தும் பாபுவும் தூங்குகிறார்கள் என்று சொல்லிவிட்டு மனைவியை பார்த்து கண்ணடிக்க அவளோ போடா என்று சொல்ல போடவாஆஆஆஆ!!

கையில் மாட்டுவ இல்லடி அப்போ இருக்கு உனக்கு என்று அவனும் உதட்டை அசைத்து சொன்னான்.

கணவனின் உதட்டசைவை படித்தவள் என்னாஆஆ என்று அதிர்ந்து போய் நிற்க,நிச்சயமா என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து சென்றான்.

நல்லா படம் ஓட்டுறாங்கய்யா இங்கயென்று கவிதா சொல்ல,அருகில் உட்கார்ந்திருந்த கண்மணியோ ஏய் சும்மா இருடி.அப்பா காதில் விழுந்தது உன் முதுகுல டின்னு கட்டிடுவாரு என்றாள்.

அப்பா காதில் விழுதோ இல்லையோ நீயே கத்தி காட்டி விட்டுடு என்று தனது அக்காவை பார்த்து முறைத்தாள்..

அன்பரசனும் கனகரசனும் எழுந்து வெளியே வர ரஞ்சனி பெரியவனும் சின்னவனும் வந்துட்டானுங்க டீ எடுத்துட்டு வாம்மா என்று சுமதி பாட்டி குரல் கொடுத்தார்.

ரஞ்சனியும் புவனாவும் தோட்டத்தில் இருந்ததால் ஷமீரா தான் அவர்கள் இருவருக்கும் டீ யை கொண்டு வந்து கொடுக்க இருவரும் சிரித்துக் கொண்டே எடுத்துக் கொண்டனர்.

நேரமும் கடந்து சென்றது.செல்லத்துரை வானதி தம்பதியினர் முறைப்படி பூ, பழம்,வெற்றிலை பாக்கு அதன் மேல்1001 ரூபாய் பணத்தோடு தம்புசாமி வீட்டிற்கு வந்தவர்கள்,தாத்தா பாட்டி இருவரிடமும் தாம்பாளத்தை நீட்டி நாளைக்கு நடக்கும் பங்க்ஷனுக்கு வீட்டினர் அனைவரும் வருமாறு அழைத்தனர்.

பின்னர் சொந்த பந்தங்களுக்கும் வீடு தேடி சென்று வெத்தலை பாக்கு வைத்து பங்க்ஷனுக்கு வருமாறு சொல்லிட்டு வீட்டுக்கு வர அங்கு வண்ண விளக்குகள் ஒரு பக்கம் ஜோடித்துக் கொண்டிருக்க வாசலில் பந்தல் போட்டு வாழை மரத்தை கட்ட,ஒரு பக்கம் ரேடியோ செட் கட்டிக் கொண்டிருந்தார்.

ஷமீராவுக்கு இன்று பர்த்டே என்றாலும் வாங்கிட்டு வந்த கிப்ட் அவளுக்கு இதுவரை கொடுக்கவில்லையே என்ற ஞாபகம் வர,பாபு மட்டும் பக்கத்து தெருவிலிருக்கும் வீட்டிற்கு வந்தான்.

வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே வர கண்மணியோ பசங்கள் எக்ஸாம் பேப்பரை திருத்திக் கொண்டிருக்க காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் அவனைக் கண்டு கீழே குனிந்து கொண்டாள்.

பாபுவும் தன்னவள் இங்கு இருப்பாளன்று எதிர்பார்க்கவில்லை.

எப்பொழுதும் ரூமுக்குள் தானே இவள் அடைந்து கொண்டிருப்பாள்னு நினைத்தபடி வந்தவன் கண் முன்னால் தனது தேவியின் தரிசனம் கிடைத்ததை பார்த்து பாபுக்கு இதயத்துடிப்பு கொஞ்சம் அதிகமானது.

எப்படியாவது இவளிடம் பேசி பேரை கேட்டு விட வேண்டுமென்று நினைத்துக் கொண்டவன் அவளை நோக்கி நெருங்கி செல்ல நீண்ட கால்கள் தன்னை நோக்கி வருவதை பார்த்த கண்மணியோ சேரிலிருந்து எழுந்து பின்னாடியே நகர்ந்து சென்றாள்.

இருவருக்கும் இரண்டு அடி தூரம் இடைவெளி இருக்க,வீட்ல யாரும் இல்லையா என்கவும் கீழே குனிந்து கொண்டவள் இல்லை எல்லாரும் டவுனுக்கு போயிருக்காங்க என்றாள்.

ஷமீராவும் இல்லையா?என்க ம்ம் இல்லை என்று பொறுமையாக சொன்னாள்.அப்போ நீங்க மட்டும் தான் இருக்கீங்களா என்கவும் ஆமாம் என்று தலையசைக்க இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்தவன் என்னோட பேரு டேவிட் பாபு.

ஷமீராவோட அத்த பையன்.நம்ம கல்யாணம் பண்ணிக் கொள்ளலாமா? என்க,திடீரென்று இப்படி கேட்பான் என்பதை எதிர்பார்க்காதவள் அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

சோழனூரிலிருந்து கிளம்பியவர்கள் காலை 11:00 மணிக்கெல்லாம் மதுரைக்கு வந்து சேர்ந்தனர்.அங்கே மதிய உணவை சாப்பிட்டு விட்டு சீர்வரிசை வைப்பதற்காக பழங்கள் மற்ற பொருட்களையும் வாங்கிக் கொண்டு மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.

செழியன் வீடு:

ஒரு வழியாக இவர்கள் வனிச்சூருக்கு வந்து சேர மாலை ஏழு மணி ஆனது. அந்த மலைப்பதை வழியாக வரும்போது பாட்டியாலையும் அந்த இயற்கையை ரசிக்காமல் வர முடியவில்லை எவ்வளவு அழகா இருக்கு தம்பி இந்த ஊரு.

எப்படி தம்பி இவ்வளவு தூரம் அந்த பையனை தெரிஞ்சது என்று கேட்க,அந்த விஷயம் தான் இன்னும் புரியவில்லை அத்தை என்று ராணியும் யோசனையோடு சொல்ல, உன் மருமகள் வாயை திறந்தால் மட்டும் தான் விஷயம் தெரியும்.

அவள் தான் சரியான கல்லுளி மங்கியா இருக்கிறாளே,இல்லன்னா இவ்வளவு பெரிய விஷயத்தை கமுக்கமாக செய்வாளா.

சரி ஆனது ஆகிவிட்டது குடும்பத்தோடு நல்லபடியா இருந்தா சந்தோஷம்தான். இல்லனாக்க உன் அண்ணன் அந்த பொண்ணுகாரிய மொன்னு தின்னுடுவானே என்று சாரதா பாட்டி வருத்தமாக சொல்ல, ஆமாங்கத்தை எனக்கும் அதுதான் யோசனையா இருக்கென்றார்.

சித்தி இங்குள்ள மனுஷர்களை பார்த்தாக்க கொஞ்சம் முரட்டுத்தனமா தானிருக்கு.ஆனா உண்மையிலேயே அவங்க பழகுற விதம் எல்லாம் ரொம்ப பாசமானவங்களா தான் தெரியுது.

அதைவிட உன் பேத்தியோட புருஷன் சும்மா ராஜா போல இருக்கிறானென்று அந்தோணி சொல்லவும் அப்படியா என் பேத்திக்கு மட்டும் என்னய்யா கொறச்சல்?ராணி போல அத்தனை அம்சமும் பொருந்தியவளென்றார்.

மூவரும் பேசிக்கொண்டே செழியன் வீட்டிற்கு வந்து சேர,அங்கே பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்க,சொந்த பந்தம் வந்து கொண்டிருப்பதும் தெரிந்தது.
காரில் இருந்தபடியே எல்லாத்தையும் பார்த்துக் கொண்டே இறங்கினர்.

அவர்களை பார்த்த வானதியும் செல்லதுரையும் வாங்க வாங்க என்று வரவேற்க பாட்டிமாவை தங்களது சித்தி என்று அந்தோணி அறிமுகப்படுத்த வணக்கங்கம்மா என்றனர்.

பாட்டியும் வணக்கம் பா என்று சொல்ல பின்னர் மூவரும் உள்ளே வந்தனர்.

வீட்டைப் பார்த்து வியந்தபடியே பாட்டியம்மாவும் அவர்களோடு உள்ளே வந்து ஹாலில் இருந்த மர சோபாவில் உட்கார்ந்தார்.

நான் தான் செழியனோட அப்பா என்னோட மனைவி இவங்க என்று வானதியை அறிமுகப்படுத்து சரிங்கப்பா என தலையசைத்தார்...

வானதி டீ எடுத்துட்டு வா என்கவும் இதோங்க,ரெடியா தான் இருக்கு என்றவர்,அம்மா சக்கரை போட்டு குடிப்பீங்களா என்கவும்,பாட்டியோ சீனி போட்டு குடிக்க மாட்டேன் மா என்க....

இங்கேயும் சீனி கிடையாது மா கருப்பட்டியும் நாட்டு சர்க்கரையும் தான் என்க அப்போ சந்தோஷம் என்றார்.

அதேபோல் சிறிது நிமிடத்தில் மூவருக்கும் டீ யை கொண்டு வந்து கொடுக்க அவர்கள் குடித்துக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்த இருவரும் அங்கே இருப்பவர்களை பார்த்து அதிர்ந்து போனானுங்கள்....

வீழ்ந்தேனடி....
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top