Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 344
- Thread Author
- #1
வனிச்சூர்:
பாபு பேசியதை கேட்டவர்களுக்கு நியாயமாக தான் தோணியது.மேலும் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருக்க,காபி எடுத்துட்டு வந்த ஷமீராவோ இருவருக்கும் கொடுத்தவள், அண்ணா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?
நல்லா இருக்காங்கடா பாப்பா.பாரதிக்கு கல்யாணம் டா. அதான் இந்தியாவுக்கு வந்தேன்...
அப்படியாணா,ரொம்ப சந்தோஷமென்று இவனுங்களோடு பேசிக் கொண்டிருக்க அங்கு ஒருத்தனுக்கோ நெருப்பு இல்லாமல் புகைய,மனைவியை கொலை காண்டில் பார்த்து கொண்டிருந்தான்..
கணவனின் பார்வையை உணர்ந்தவள் எதுக்கு இவரு நம்மள முறைச்சிட்டு இருக்காரென்று யோசிக்க,மேல வாடியென்று கண்ணை காட்டினான்.
எல்லாரும் இருக்கும் போது எப்படி மேல வருவதென்று அவனைப் போல் கண்களால் பேச,அதெல்லாம் எனக்கு தெரியாதென்ற செழியனோ, மேலே வா என்று புருவத்தை தூக்கி சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக செல்ல,சிறிது நொடிகள் சென்று ஷமீராவும் மேலேயிருக்கும் அறைக்குள் வர,எட்டி மனைவியை இழுத்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு என்னடி ரொம்ப ஓட்டி உரசிட்டு நிற்கிற..
புருஷன்காரன் இருக்கிறேனே அவனை உனக்கு கண்ணு தெரியலையா?என்று அவள் கையை பிடித்து முறுக்கிக் கொண்டு தனது நெஞ்சோடு அணைத்தபடி கேட்க,என்ன செழியன் பொறாமையோ என்றாள்.
நான் என்ன வெங்காயத்துக்கு பொறாமைப்பட போறேனென்று, அவளின் தோள் பட்டையில் கடித்து வைக்க,பின்ன எதுக்கு இப்படி பண்றீங்களாம்?.
அது எப்படி டி நான் இருக்கும் போது நீ போய் அவன் வாய பொத்துர..என்ன விட அவ்ளோ உரிமையானவனானு மனைவியை தன்னோடு இறுக்க, இதுதான் பொசசிவ்னஸ் என்றாள்.
"ம்ம் மயிறுனஸ்"
பரவாயில்லை,என் பொண்டாட்டி கிட்ட தானே பொசசிவ்வா இருக்க முடியும். இனிமே விளையாட்டுக்கு கூட என்ன தவிர வேற எவனையும் தொடக்கூடாது புரியுதா டி.
உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு மாமா சட்டையை பிடிக்கிறீங்களென்று ஷமீராவும் கோபமாக கேட்க,மாமா,மண்ணாங்கட்டி எல்லாம் உன் கழுத்துல இது ஏறுவதற்கு முன்னாடினு ஞாபகம் வச்சுக்கோ.
எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்க...அப்ப என்னை தப்பா நினைக்கிறீங்களானு கோவமா கேட்கவும்,அடியேய் நான் என்ன அர்த்தத்துல சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன அர்த்தத்துல பேசுறேடி?.
ஓஓஓ..நீங்கள் சொல்றதுக்கு வேற அர்த்தம் என்ன சொல்லுங்க?
உங்ககிட்ட இப்படி ஒரு புத்தியை எதிர்பார்க்கவே இல்லையென்று தன்னை கட்டிப் பிடித்து நிற்பவனை உதறி தள்ளிய ஷமீராவோ கோபமாக அங்கிருந்து சென்று விட்டாள்...
கீழேயிருந்த பாபுவிற்கு வெளிநாட்டிலிருந்து கால் வர,சார் தாண்டா பண்றாருனு பரத்திடம் சொல்லியவன் அட்டென்ட் பண்ணி பேசிக்கொண்டு வெளியே வர,அது வளைவான பகுதி என்பதால் வெளியேயிருந்து உள்ளே வந்த கண்மணியோ எதிரே ஆள் வருவதை எதிர்பார்க்காமல் வேகமாக வந்து மோத,ஒரு நொடி அதிர்ந்த பாபுவோ தன் மேல் மோதியவள் கீழே விழப் போவதை பார்த்து எட்டி அவளை இழுத்து பிடித்து நிறுத்த அவன் நெஞ்சில் மேல் மோதி நின்றாள்.
முதல் முறையாக யாரோ முன் பின் தெரியாத பெண்ணின் ஸ்பரிசம் பட்டவனுக்கு உடல் சிலிர்க்க, கண்மணிக்கும் அதே உணர்வு தான் வந்தது.
ஒரு நிமிடம் இருவரும் ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க மீண்டும் கால் வரும் சத்தம் கேட்டு சுதாரித்தனர்.
சாரி என்று அவன் சொல்ல கண்மணியே எதுவும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டாள்.
தனது தலையை கோதிக் கொண்டவனோ யார்ரா இவள்?.
பார்த்த நிமிடத்திலேயே நம்மள சாய்ச்சிட்டாளேயென்று முணுமுணுத்தவன் அட்டென்ட் பண்ணி சொல்லுங்க சாரென்றவனோ,அங்கு சொல்லிய செய்தியை கேட்டு ஓகே சார் செக் பண்றேனென்று சொல்லி விட்டு வீட்டுக்குள் வந்தவன்,சற்று முன்னால் தன்னை தீண்டியவள் எங்கேயாவது தென்படுகிறாளானு பார்வையால் அலச,அவளங்கில்லை.
ஷமீரா மட்டும் தான் ஹாலிலிருக்கும் பரத்திடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது...
ஒருவேளை சொந்தக்கார பொண்ணா இருப்பாளோ?.இல்ல இந்த வீட்டு பொண்ணா இருப்பாளா?.ஒன்னும் புரியலையே...ஆனா ஆளு பார்க்க அம்சமா இருக்கிறாளே..
இவள் கிட்ட அப்படி என்ன இருக்குன்னு தெரியலையே?.மத்த பொண்ணுங்க மேல வராத பீலிங்ஸ் இவள் கிட்ட வருதே...பார்த்தவுடனே பச்சை குத்தியது போல நெஞ்சில் ஒட்டிக்கிட்டாளேனு தனக்குள் பேசிக் கொண்டிருக்க,அங்கு வந்த புவனாவோ தம்பி சாப்பிட வாங்கப்பா என்கவும் பரத்தும் பாபுவும் எழுந்து சென்றனர்.
புவனாவும் ஷமீராவும் எல்லாருக்கும் பரிமாற மற்றவர்கள் சாப்பிட்டு முடித்தனர்....
பிடிச்ச வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிற உரிமை இவளுக்கிருக்கு.அது இல்லையென்று என்னால் மறுக்க முடியாது.இவ்வளவு தூரம் நம்பி முடிவெடுத்துருக்காள் என்றால் அப்ப உங்க வீட்டு பையன் மேல் எந்த அளவு நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்பதை புரிஞ்சுக்க முடியுது.இந்த நம்பிக்கையை கடைசி வரைக்கும் நீங்க காப்பாத்தணுமென்றான்.
அதற்கு தம்புசாமி தாத்தாவோ,நிச்சயமாக தம்பி.பொண்ணு எங்கள் வீட்டுக்கு வந்துருச்சு.இனிமே அதோட பொறுப்பு எங்களுடையது தான்.ஒன்னும் கவலைப்படாதப்பா என் பேரன் நல்லபடியா பார்த்துப்பான்.
சரிங்க தாத்தா நாங்கள் கிளம்புகிறோம் என்க...ஏன் தம்பி இன்னும் ரெண்டு நாள்ல பிள்ளைகளுக்கு நல்ல காரியம் இருக்கே,இருந்து முடிச்சிட்டு போங்களேன்னு சொல்ல... பாபுவும் பரத்தும் யோசனையாக பார்த்துக் கொண்டனர்.
அதான் தாத்தா உங்களை பங்ஷனுக்கு இருந்துட்டு போக சொல்றாங்களே என்கும் செழியனை பார்த்த பாபுவோ,தாத்தா தான கூப்பிடுகிறார்கள்.நீங்க கூப்பிடலையே என்றான்.
பாபு சொன்னதை கேட்டு செழியானால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. ஆமாம் நாம இதுவரைக்கும் எங்களுடைய பங்க்ஷனில் கலந்து கொள்ளுங்களென்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையேனு அவனுக்கு தோன்றியது.
கணவனின் முகத்தை பார்த்தவள் அவனை காப்பாற்றுவதாக நினைத்து ஏன் மாமா நாங்க சொன்னா தான் நீங்க கலந்து கொள்ளுவீங்களா என்க, அவளை முறைத்து பார்த்தவன் எதுவும் பதில் சொல்லவில்லை.
தம்பி உங்களுக்கு மேல ரூம் சுத்தம் பண்ண சொல்றேனென்று அன்பரசன் சொல்ல,மாமா அங்க நம்ம வீட்டுக்கு நான் கூப்பிட்டு போறேன்னு செழியன் சொல்லவும்,அப்படியா சரிய்யா...
ஒரு சோட்டு புள்ளைங்க,கலகலப்பா இருப்பீங்க என்றவர் மனைவியிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்து தங்களது வயல் காட்டை நோக்கிச்சென்றார்.
மனைவி தன்னை பார்ப்பாளென்று செழியனும் பார்த்துக் கொண்டிருக்க அவளோ அவன் பக்கம் திரும்பவேயில்லை..
சும்மாவே இவளுக்கு மிளகாய் கடித்த போல சுள்ளுன்னு கோவம் வரும். இப்போது எத்தனை நாளைக்கு மூஞ்சிய தூக்கி வச்சிட்டு இருக்க போறாளோ தெரியலையே என்று மனதிற்குள் முணுமுணுத்தவன் பங்காளி நம்ம கிளம்பலாமா என்று பாபுவை கேட்க...தன்னை அவன் உரிமையோடு கூப்பிட்டதை பார்த்தவனுக்கு கோபம் குறைய சரி பங்காளி என்றான்.
பின்னர் பரத்தும் பாபுவும் மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து சென்றனர்.
தனது அறைக்குள் வந்த கண்மணிக்கு படபடப்பாக இருந்தது.சிறிது நிமிடத்தில் அவள் முகம் எல்லாம் வியர்த்து விட்டது. இதுவரை எந்த ஆண்மகனோடும் இப்படி அவள் நெருங்கி நின்றதில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னே தன்னிடம் காதலை சொன்னவனின் மேல் கூட அவளுக்கு பெரிதாக எந்த ஒரு உணர்வும் வரவில்லை.
முறைமாமன் செழியன் என்பதால் ஊரில் இருப்பவர்களோ செழியனையும் அவளையும் சேர்த்து கிண்டல் பண்ணும் போதெல்லாம் அவளுக்கு அப்படி ஒரு உணர்வு தோன்றியதில்லை..
இன்று யாரோ ஒரு ஆண்மகன் தன்னை அணைக்க இதுவரை தனக்குள் தோன்றாத உணர்வுகள் சடுதியில் உண்டாகியதை நினைத்தவளுக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது .
யார் இவன்?மாமா கூட வந்திருக்கிறானே,இதுவரைக்கும் இவனை நம்ம பார்த்ததே இல்லையே??மாமாவோட பிரண்டா இருப்பாங்களோ என்று யோசனை பண்ணினாள்.
கீழே பேச்ச குரல் கேட்டு,தனது ரூம் ஜன்னல் வழியாக நின்று அவர்கள் பேசுவதை கூர்மையாக கேட்க அப்பொழுது தான் அவன் ஷமீராவின் சொந்தக்காரன் என்பது புரிந்தது..
ஒருவேளை ஷமீக்கு அண்ணனா இருப்பாங்களோ?.
அய்யய்யோ ஷமீக்கு அண்ணன் என்றால் நமக்கும் அண்ணன் முறை வருதே...அடச்சி என்ன இப்படி ஆயிட்டோமென்று தனது தலையிலேயே தட்டிக் கொண்டவள் அங்கிருந்த கண்ணாடியை பார்க்க அவளின் இடது பக்கத்தில் தாவணி இடைவெளியில் இருக்கும் இடுப்பு தெரிய,இங்க தானே அவங்க பிடித்தார்களென்று நினைத்தவளுக்கு இப்பொழுதும் அவன் கையில் இருக்கும் வலிமையை உணர முடிந்தது...
அய்யோ கடவுளே நான் என்ன இப்படி ஆயிட்டேனென்று தனது நெற்றியிலே அடித்துக் கொண்டவள்,தலையை உலுக்கி அவனின் நினைவை கலைத்து விட்டு,ரெஸ்ட் ரூமிற்குள் சென்று முகத்தில் தண்ணீரை அடித்தாள்..
பின்னர் முகத்தை துடைத்துக்கொண்டு எதுவும் சொல்லாமல் அமைதியாக கீழே வர,கண்மணி நாம தான் இன்னும் சாப்பிடவில்லை என்று புவனா சொல்ல இதோமா என்றாள்.பிறகு மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.
அவன் எப்படி உறவாக வேண்டும் என்பதை கேட்கணுமென்று கண்மணிக்கும் ஆர்வமாக இருந்தது. இதைப்பற்றி கேட்டால் எங்கே ஷமீரா தன்னை தப்பா நினைப்பாளோ என்று யோசனையாக இருக்க,அதற்கு வழியில்லாமல் புவனாவே ஷமீராவின் அத்தை பையனஎன்று சொல்ல, அப்படியா என்று ஆச்சரியமாகக் கேட்டவளுக்கு மனதிற்குள் அப்போ ஷமீக்கு மாமன் முறை,ஹேய் எனக்கும் மாமா முறை தானென்கும் போது உள்ளுக்குள் ஓர் இதம் பரவியது...
பாபுக்கோ உள்ளே போனவள் ஒருமுறையாவது வெளியே வர மாட்டாளா என்று எண்ணம் வராமல் இல்லை.
சரி இங்க தானே இருக்கிறோம் அவளை பத்தி தெரிஞ்சுக்கலாமென்று நினைத்துக்கொண்டான்.
வீட்டிற்கு வந்த செழியனோ ரெண்டு பேரும் இங்கதான் தங்குறாங்கள் மா என்கவும் தாராளமாக தங்கட்டுமே இளா...இரு நான் போய் பக்கத்து ரூம் சுத்தமா இருக்கானு பார்க்கிறேன் என்றவாறு அவர் மேலே செல்ல போக...
எதுக்கு பங்காளி தனி ரூம்.உங்க ரூம்லே நாங்க தங்கிக்கிறோமென்று பாபு சொல்ல,அப்படியா அப்போ சரிங்கப்பா நான் போய் நைட்டுக்கு சமைக்கிறேன் என்றார்..
மச்சான்,மாத்து டிரஸ் எதுவும் நான் எடுத்துட்டு வரலையேடா என்க,டேய் நீயும் நானும் ஒரே அளவு தானடா நாயே.இதில் என்ன உனக்கு வருத்தமென்று பாபு கேட்க,அட நாதாரி பயலே டிரஸ் ஒகே தான்..
உள்ளே போட மற்ற துணிலாம் வேண்டாமாடா பன்னாடை பயலே,இலையவாடா கட்டிக்க முடியுமென்று பரத் திட்ட,செழியனுக்கோ அவர்கள் இருவரும் பேசுவதை கேட்டு சிரிப்பு வந்து விட்டது.