Active member
- Joined
- Jun 3, 2025
- Messages
- 694
- Thread Author
- #1
மன்னார்குடி:
கவியின் கத்தலை கேட்டு அதிர்ந்து போன சரோஜாவோ கையிலிருந்த கிண்ணத்தை கீழே தவற விட்ட பிறகே சுதாரித்தவர் கவீஈஈஈ என்று பல்லை கடிக்க அம்மா அம்மா அங்க பாருமா என்னை யாரோ குத்த வராங்களென்று ஓடி வந்தவளோ கட்டிலின் அந்த பக்கம் போய் ஒளிந்து கொண்டாள்.
மகளை பார்த்த சதாசிவமோ மனைவியிடம் எதையோ சொல்ல முயன்று முடியாமல் போவதை எண்ணி அவர் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்தது.
ஏய் ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சு வெளில வாடி.நைட்ல தான் சாவடிக்கிறனு பாத்தால் இப்ப பகல்லையே ஆரம்பிச்சுட்டியானு மகளை திட்ட,அவளோ பயந்து கொண்டே அங்கிருந்த கபோர்டை எட்டிப் பார்க்க அதுவோ வெறுமையாக இருந்தது.
கவி இப்ப நீ வரப் போறியா இல்லையா என்கும் சரோஜா குரலுக்கு எந்திரிச்சு வெளியே வந்தவள் சாரி மா என்க,மரியாதையாக ரூமை விட்டு வெளியே போ என்றவர் இருங்கள் நான் போய் சாப்பிட எடுத்து வரேனென்க வேண்டாம் என்று இடது கையை தூக்கி அசைத்தவர் வாயை மட்டும் துடைத்து விட சொல்லி சைகை செய்தார்.
ஏங்க நாலு வாய் கூட சாப்பிடல இன்னும் கொஞ்சூண்டு ஜூஸ் ஏதாச்சும் பண்ணி எடுத்துட்டு வரட்டுமா என்று பரிவோடு சரோஜா கேட்க வேண்டாம் என்று இதுவே போதும் என்று ஒத்த கையால் சைகை செய்ய, சரி என்று அங்கிருந்த தண்ணீரைத் தொட்டு கணவரின் வாயை துடைத்துவிட்டு மாத்திரையை எடுத்து அவரது வாய்க்குள் வைத்து தண்ணீரை புகட்டினார்.
கணவரின் நிலையை நினைத்து உள்ளுக்குள் வேதனை இருந்தாலும் தானும் உடைந்து விட்டால் கணவர் நிச்சயமாக உடைந்து போவார் என்பதை புரிந்து கொண்ட சரோஜாவோ தைரியமாக இருப்பது போல் காட்டிக்கொண்டார்.
நீ போமா என்று சைகையில் சொல்ல இருக்கட்டும் நான் இங்கே இருக்கிறேன் என்க சரி என்று கண்ணை மூடியே சதாசிவத்தின் மனக்கண்ணில் ஏதோ நிகழ்வுகள் ஓடிக் கொண்டிருக்க அவரால் எதுவும் செய்ய முடியாத நிலையை நினைத்து மனதிற்குள் வேதனை பட தான் முடிந்தது.
சதாசிவத்தின் நிலையை கபோர்டின் மேல் உட்கார்ந்து அழுதவாறு பார்த்துக் கொண்டிருந்து உருவமும் அப்பா என்க அந்த சத்தத்தை உணர்ந்தாரோ என்னவென்று தெரியவில்லை பட்டென்று கண்களை திறந்து அந்த கபோர்டை பார்க்க அதுவோ எப்போதும் போல வெறுமையாக இருந்தது.
விட்டால் போதும்டா சாமி என்று தந்தையின் ரூமிலிருந்து வெளியே வந்த கவியோ பெருமூச்சை இழுத்து விடும்போது வேலைக்கார பெண்மணியோ மேடம் உங்களை பெரியைய்யா வரச் சொல்றாங்க என்கவும்,ஓஓ என்றவள் தாத்தா எங்கே இருக்கிறார்கள் என்று கேட்க,அவங்க ஆபீஸ் ரூம்ல தான் இருக்காங்களென்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்றார்.
ஐயோ தாத்தா என்ன சொல்ல போறாருன்னு தெரியலையே கவி என்று முணுமுணுத்துக் கொண்டு முதல் மாடியில் இருக்கும் தாத்தாவின் ஆபீஸ் ரூமை நோக்கி சென்றவள் வாசலில் நின்று கதவை தட்டி விட்டு சில நொடிகள் சென்ற பிறகு கதவைத் திறந்து உள்ளே போக அங்கே சேரில் உட்கார்ந்திருந்த வேலனோ உள்ளே வரும் கவியை தான் கோவமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
தாத்தா வரச் சொன்னிங்கலாமே என்கவும் முட்டாள் முட்டாள் என்ன காரியம் பண்ணி வச்சுக்கிட்டு இருக்கிற என்று வாய்க்க வந்தபடி சராசரியாக வேலன் திட்ட கவியோ வழக்கம்போல் அவருக்கு பயந்து கொண்டு அமைதியாக நின்றாள்.
தினமும் எதற்கு இப்படி கத்தி கலாட்டா பண்ணிட்டு இருக்க என்கவும்,நான் என்ன தாத்தா பண்றது அப்படி கனவு வருதே...
கண்டதெல்லாம் நினைத்தால் இதுபோல வர தான் செய்யும்.இதற்கு தான் நான் உன்னை எஸ்டேட்டுக்கு வந்து வேலை பாரு வேலை பாருன்னு சொல்றேன்.
நீ என்னவென்றால் மூணு வேளைக்கு பதில் 30 வேளையாக தின்னுகிட்டு வீட்டுல அதிகாரம் பண்ணிட்டு இருக்கலான்னு இருக்கியா? இத்தனை சொத்தையும் கஷ்டப்பட்டு நான் சம்பாதித்தது எனக்கு அப்புறம் என் பையனோட உழைப்புகள் இருக்கு நீ காலம் முழுவதும் உட்கார்ந்துட்டு தின்னுட்டு போகலாம்னு இருக்கிறியா?.
ஒழுங்கு மரியாதையா இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பி கோத்தகரியில் நம்ம எஸ்டேட்டிற்கு நீ போற என்கவும்,தாத்தா அங்கேயா என்று கவி அதிர,அங்கதான் உன்னை போக சொல்றேன்.
நம்ப எஸ்டேட் அது தானே என்று கோவமாக பார்த்தவர் என்னோட கவுரவத்துக்கும் பணத்துக்கும் முன்னாடி பேத்தி பொண்டாட்டி புள்ளனு எந்த உறவையும் நான் பார்க்க மாட்டேன்.
முதல்ல எனக்கு அதுதான் முக்கியம் புரிகிறதா என்று கடுமையாக கேட்க, ஹம் தாத்தாயென தலையை அசைத்தவள் நான் மட்டும் தனியா போகணுமா என்று பாவமாக கேட்டாள்.
பேத்தியின் முகத்தை பார்த்த வேலனோ தனது போனை எடுத்து,அதில் சம்மந்தி என்று சேவ் பண்ணியிருந்த நம்பருக்கு கால் பண்ணினார்.
அந்த பக்கம் அட்டென்ட் பண்ணியதும் பரஸ்பரம் நலம் விசாரித்து விட்டு கவிக்கும் நிலமாறனுக்கும் கல்யாண விஷயம் பேசினோமே அது அப்படியே இருக்கே என்று வேலன் கேட்க அந்தப் பக்கம் இருந்த மதிவாணன் நானே உங்களுக்கு கால் பண்ணலான்னு இருந்தேன் சம்மதி.இப்பதான் பெரிய பையனுக்கு அமைஞ்சிருக்கு ஏப்ரல் 11ஆம் தேதி நிச்சயதார்த்தம் வச்சிருக்கோம். முறைப்படி வீட்ல வந்து சொல்றோம்.
அவனுக்கு முடிஞ்ச ரெண்டு மாசத்துல இவங்களோட கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லவும் சரிங்க என்றவர் மேலும் பொதுவாக சில விஷயங்களை பேசிவிட்டு போனை வைத்தார்.
அவர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த கருப்பு உருவமோ நடக்க விட மாட்டேன் என்று கொலைவெறியில் சொல்லிக்கொண்டே அந்த அறையை சுற்றிப் பார்க்கும் போது அழகுக்காக சுவற்றில் இருந்த கத்தி கண்ணில் படவும் அதை உற்று பார்த்து விகாரமாக பல்லை காட்ட,டேபிள் மேல் கையை வைத்து உட்கார்ந்திருந்த வேலனின் உள்ளங்கையின் மேல் புறத்தில் செங்குத்தாக வந்து விழ ஆஆஆ என்று வலியில் அலர,ரத்தமோ அவர் கையிலிருந்து பீறிட்டு வந்தது.
தனது தாத்தா போனில் பேசிய செய்திகளை கேட்ட கவியோ வானத்துக்கு பூமிக்கும் மனதிற்குள் துள்ளி குதித்தவள் தான் ஆசைப்பட்டவன் கூடவே கல்யாணம் நடக்கப்போவது நினைத்து பல கனவுகளில் மிதந்து கொண்டிருக்கும் போது வேலனின் அலறல் சத்தத்தை கேட்டு திரும்பிப் பார்க்க ரத்தம் டேபிளில் இருந்து கீழே வழிந்து ஓட கத்தியோ செங்குத்தாக அவரின் கையில் மேல் நின்றது.
தாத்தா என்று ஓடி வந்து கத்தியை பிடுங்கி எறிந்தவள் ஐயோ தாத்தா எப்படி ஆச்சு இது என்று கேட்க முட்டாள் எப்படி ஆயிடுச்சுனு என்னை கேட்டா எனக்கு எப்படி தெரியும் என்று அந்த வலியிலும் அவளைத் திட்ட மறக்கவில்லை.
சீக்கிரம் வாங்க ஹாஸ்பிடல் போகலாம் என்று தனது மேல் போட்டிருந்த ஷாலையை எடுத்து தாத்தாவின் கையில் கட்டியவள் அவரை அழைத்துக் கொண்டு வந்தவள் பாட்டி அம்மா சீக்கிரம் வாங்க என்க..
அவளின் குரலைக் கேட்டு இருவரும் வெளியே வந்தவர்கள் கையிலிருந்து இரத்தம் சொட்டியபடி வரும் வேலனை பார்த்து ஐயோ என்ன ஆச்சு என்று இருவரும் பதர, அம்மா சீக்கிரம் போய் டிரைவரை கார் எடுக்க சொல்லுங்கள் என்க...
சரோஜாவும் தனது வயதை மறந்து வேகமாக வெளியே ஓடி வந்தவர் அங்கே இன்னொரு வேலையாளோடு பேசிக் கொண்ணிருந்த டிரைவரிடம் சீக்கிரம் கார் எடுப்பா.மாமாவுக்கு அடிப்பட்டு என்க அவனும் காரை எடுத்துட்டு வரவும் அதற்குள் இவர்கள் வெளியே வந்தார்கள்.பின்னர் காரில் ஏறி ஹாஸ்பிடலுக்கு சென்றனர்.
இரத்தம் சொட்ட சொட்ட வேலன் போவதை பார்த்த அந்த கருப்பு உருவம் இதுதான் ஆரம்பம்.இன்னும் நீ சிந்த வேண்டிய ரத்தம் எவ்வளவோ இருக்கு. அவ்வளவு சீக்கிரம் உன்னை நான் விட்டுடுவேனா என்று சொல்லிக் கொண்டது.
பத்து நிமிடத்தில் ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்ந்தவர்கள் டாக்டரிடம் காட்ட வேலனின் கையில் 11 தையல் போடப்பட்டது.
கையில் தண்ணி படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.ரெகுலராக டேப்லெட் சாப்பிடுங்கள் என்று சொல்லிய டாக்டர் மாத்திரைகளை எழுதி கொடுத்தவர் ஏழாவது நாள் வந்து பாருங்க.
காயம் எப்படி இருக்குன்னு பார்க்கலாம் என்கவும் ஓகே டாக்டர் என்று சொல்லிக் கொண்டு ரிசப்ஷனுக்கு வந்து டாக்டருக்கான பீஸை கொடுத்துவிட்டு அங்கிருந்த மெடிக்கலில் மாத்திரையும் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
சென்னை:
இளமதியை ஒரு வழியாக சமாதானப்படுத்தி முடிப்பதற்குள் நிலவனுக்கு நாக்கு தள்ளியது.பின்னர் அவர்கள் லக்கேஜோடு கிளம்பி டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்தவர்கள் அவர்களுக்கான சென்னை பிளைட்டுக்கு காத்திருக்க,அதுவோ ஒரு மணி நேரம் மேலும் தாமதமாக வந்தது.
ஒரு மணி நேரம் கடந்திருக்க விமானம் வந்து விட்டதாக அறிவிப்பு வந்ததும் உள்ளே சென்றனர்.சிறிது நிமிடத்தில் டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானமோ சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து சேர இரவு 11 மணியானது.
வழக்கமான பார்மாலிட்டிசை முடித்துக் கொண்டு லக்கேஜோடு வெளியே வர அங்கே அவர்கள் டிரைவரும் காரோடு காத்திருந்தார்.பின்னர் அதில் ஏறியதும் அவர்களின் வீட்டை நோக்கி சென்றனர்.
ஒன்றரை மணி நேர பயணத்தில் அந்த பெரிய மாளிகையின் முன்னே வந்து கார் ஹாரனை அழுத்த வாட்ச்மேன் கதவை திறந்து விடவும் நீண்ட ஓடு பாதையில் ஓடிவந்த காரும் அதன் இடத்தில் வந்து நின்றது.
இவர்களுக்காக அங்கே தமிழக ஆளுநரும் நிலவனின் அப்பாவுமான வெற்றி நந்தனும் அவர் மனைவி காமாட்சியும் காத்திருக்க,காரில் இருந்து இறங்கிய மூவரையும் அணைத்து வரவேற்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றனர்.
வழியிலேயே பரிதி தூங்கிவிட்டதால் மகனோடு அவர்கள் ரூமிற்கு இளமதி சென்று விட,இப்பொழுது ஹாலில் நால்வர் மட்டும் இருந்தனர்.பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டிருக்கும் போது மாறனோ தனது தாய் மாமனை முறைத்தபடியே உட்கார்ந்திருந்தான்.
தங்கை மகனின் கொலை வெறி பார்வையை உணர்ந்த நந்தனோ அவன் பக்கம் திரும்பாமல் தனது அண்ணன் வேத நந்தனை பற்றி மகனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார்.
சமாளிக்கிறாராமா என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டவன் யோவ் மாமா அதான் ரீல் அறுந்து போயிடுச்சே பிறகு என்னவாமென்க,ஹிஹிஹி என்று மருமகனை பார்த்து சிரித்தவர் வெல்கம் டூ தமிழ்நாடு மாறா.
தாய்மாமானா போயிட்டியே என்பதாக பார்க்கிறேன்"இல்லன்னா எனக்கு வர வெறிக்கு என்ன பண்ணுவேன்னு தெரியாதென்றவன் ஏன்யா எத்தனையோ போலீஸ்காரர்கள் இருக்காங்க.அவங்களில் யாருக்காவது இந்த கேஸை கொடுக்காமல் மெனக்கெட்டு என்ன ஏன்யா கோத்து விட்ட?நீயெல்லாம் மாமானா?என்று பல்லை கடித்தான்.
மாறன் சொன்னதை கேட்டவர் கூல் டவுன் மருமகனே கூல்டவுன் என்றவாறு மனைவியின் பக்கம் திரும்பியவர் ஏய் காமாட்சி மாறனுக்காக பாதாம் பால் ரெடி பண்ண சொன்னனே எங்கே?.
போய் கொண்டு வந்து கொடு என மனைவியை விரட்ட,பாதாம் பால் என்ற பெயரை கேட்டவுடனே மாறன் அமைதியாக,எதுக்கு இந்த மானங்கெட்ட கோபம்னு கேட்கிறேன்? இதுக்கு எதுக்குடா ஊருக்குள்ள வெள்ளையும் சொல்லையுமா திரியுறீங்க என்று நிலவன் கேட்க,என்ன பண்றது என்னோட வீக்னஸ் பாதாம் பால்னு தெரிஞ்சே அதுல கை வைக்கிறீங்களே உங்களை எல்லாம் என்ன செய்ய...குடிச்சி தொலையுறேன் வேற வழி என்றான்.
அவனைப் பார்த்த நிலவன் இவ்வளவு சலிப்போட நீ குடிக்கணும்னு அவசியமே இல்லை மாப்பி என்றவன் அம்மா அவனுக்கு பாதாம் பால் வேண்டாமா என்கவும்,ஏன்டா ஏன் என்று நிலவனின பிடறில் ஓங்கி ஒரு அடி வைத்தவன் நீ எடுத்துட்டு வாத்தை என்றவாறு மாமா என்றான்....
சொல்லு மாறா?
உனக்கு என்ன தெரியணுமென்றார்.