• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
ஓகே என்ற நிலவன் வாடா என்று மாறனை அழைத்துக் கொண்டு கீழே வந்தவன் இப்ப என்ன பண்ணலாம் என்க,உன் அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லு அவர் என்ன சொல்றாரு அதுபோல பண்ணலாம் என்றவன்,தனது போனை எடுத்து அவனது அப்பாவிற்கு கால் பண்ணினான்.

அந்த பக்கம் இரண்டாவது ரிங்கிளே அட்டென்ட் பண்ணிய மதி தம்பி என்று நா தழுக்க பேச,என்ன வாத்தி? எப்படி இருக்க? உன் பொண்டாட்டி நல்லா இருக்கா?ஆச்சி எப்படி இருக்காங்க என்றான்.

பழைய போலவே மகன் பேசுவதை கேட்டவர் மன்னிச்சிடுப்பா.அப்பா வேணும்னு எதுவும் பண்ணல.இப்படி ஒரு விஷயத்தை அந்த பொண்ணு எதுக்கு செஞ்சதுன்னு தெரியல என்க, நீயும் உன் பொண்டாட்டியும் கிளம்பி உடனே உன் மாமியார் வீட்டுக்கு வாங்க என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.

நிலவனும் அதேபோல் வேதநந்தனிடம் விஷயத்தை சொல்ல,அந்த பக்கமிருந்து அவர் சொன்னதை கேட்டவன் சரி பா என்று ஃபோனை வைத்துவிட்டு அவங்களை கஸ்டடியில் வைத்து விசாரிக்க சொல்றாரு என்கவும், அப்புறம் என்ன கிளம்பு போகலாம்.இந்த கேஸ முடிச்சு தூக்கி எறிஞ்சிட்டு டெல்லிக்கு போயி சேர்ந்தா தான் மனுஷனுக்கு நிம்மதியா இருக்கும் என்று வெளியே போனான்..

கடவுளே...

இவனுக்கு கல்யாணம் பண்ணிட்டு குடும்பமா கூட்டிட்டு போலாம்னு இருந்தா இப்படி ஆயிடுச்சே என்று நினைத்துக் கொண்டே கார் சாவியை எடுத்துக் கொண்டு நிலவன் வெளியே வர,அங்கே காரின் மேல் மாறனோ யோசனையோடு சாய்ந்து நிற்பது தெரிந்தது.

இருவரும் வேலன் பேலஸ் நோக்கி செல்லும்போது எதிரே போலீஸ் ஜீப் வந்தது.இவர்கள் காரை பார்த்து நிற்கவும், இவனுங்களும் காரை நிறுத்திவிட்டு எட்டிப் பார்க்க,அதிலிருந்து இறங்கி வந்த இன்ஸ்பெக்டர் இருவருக்கும் சல்யூட் அடித்தவன் சார் அந்த வேலனையும் அவங்க பேத்தியையும் அரெஸ்ட் பண்றதுக்கு வாரண்ட் வந்திருக்கு என்று சொல்ல,கொடுங்கள் என்று வாங்கிக் கொண்டவன் எங்களை ஃபாலோ பண்ணி வாங்க என்று சொல்லிவிட்டு சென்றார்கள்.

கால் மணி நேரம் பயணத்தில் வேலா பேலஸுக்கு போலீஸ் ஜீப்பும் வந்து நிற்க,அங்கிருந்த வேலை ஆட்களோ எதுக்கு போலீஸ் வருது என்று பேசிக் கொண்டனர்.

நேராக உள்ளார போக ஹாலில் உட்கார்ந்து இருந்த சரோஜா இவர்களை பார்த்து வாங்க தம்பி உட்காருங்கள் என்கவும் இருக்கட்டும் என்றவன் மிஸ்டர் வேலன் என்க..மாமாவை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருக்காங்க என்றார் .

என்ன அவருக்கென்று கேட்கவும்,பழம் வெட்டும் கத்தி வயிற்றில் குத்திடுச்சு தம்பி என்கவும் அப்படியா என்று தனது தாடியை தடவிய மாறன் மிஸ்டர் சதாசிவம்?.

ரூம்லதாப்பா இருக்கிறார் என்றார்.

நாங்க போய் பார்க்கலாமா என்று கேட்க, போங்க தம்பி என்றதும் கதவை தட்டி உள்ளே போனவன் மிஸ்டர் சதாசிவம் நீங்க நடிச்ச நாடகம் வரைக்கும் போதும் இன்னும் ரெண்டு செகண்ட்ல எந்திரிச்சு வெளியில வரணும்.இல்லனாக்க அடிச்சு இழுத்துட்டு போவேன் என்று மாறன் சொல்ல அதில் பதறி அடித்து எழுந்த சதாசிவம் எப்படி இவர்களுக்கு தெரிந்தது என்று திருத்திருவென்று முழித்தார்.

"போட்ட டிராமாவ கச்சிதமா போடணும்" அரைகுறையா போட்டா இப்படித்தான் மாட்டிப்பீங்க என்று சொல்லிவிட்டு நிலவனும் மாறனும் வெளியே வர, அவர்களுக்கு பின்னாடி வந்த சதாசிவத்தை பார்த்த சரோஜா என்னங்க உங்களுக்கு சரியாயிடுச்சா என்று சந்தோஷத்தில் அதிர்ந்து போக...

மனசை தேற்றிங்கங்கமா,உங்க புருஷன் இத்தனை நாள் நடிச்சுகிட்டு தான் இருந்தாரு.அவரை ஒரு கேஸ் விஷயமா விசாரிக்கணும் கூப்பிட்டு போறேன் என்று சொல்லிவிட்டு சதாசிவத்தோடு அங்கிருந்து சென்றனர்.

சரோஜாவோ கணவர் இத்தனை நாளா நம்மளை ஏமாற்றி இருக்கிறாரா என்று நினைத்து உடைந்து போய் அங்கிருந்த சோபாவில் உட்கார்ந்து விட்டார்.

அங்கிருந்த போலீஸ்காரர்களிடம் இவரை போய் கஷ்டடியில் வையுங்க நாங்கள் அவரோடு வரோம் என்று சொல்ல,எஸ் சார் என்று சொல்லிவிட்டு சதாசிவத்தை அழைத்துக் கொண்டு போலீஸ் ஜீப்பில் அவர்கள் சென்றுவிட இவனுங்கள் இருவரும் ஹாஸ்பிடலுக்கு சென்றவர்கள் அங்கிருந்த ரிசப்ஷனில் வேலன் பற்றி விசாரிக்க செகண்ட் ப்ளோரில் மூணாவது ரூம் என்றனர்.

அதேபோல் மாடிக்கு வந்தவர்கள் கதவை தட்டி உள்ளே போக அங்கே வேலனோ டிவியை பார்த்துக் கொண்டு ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தார்.

இருவரையும் பார்த்தவன் வாங்க தம்பி எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு தெரியலை?மாத்தி மாத்தி எப்படி ஆயிருக்கு பாருங்கள் என்கவும் தனது காதை குடைந்த மாறன்,கடுப்பா வருது எனக்கு,சப்புனு அறைஞ்சிடுவேன் வயச கூட பாக்காம..இந்த ஆளை நீ கவனி டா என்றான்.

இப்ப எப்படி இருக்கீங்க வேலன் என்கவும் நம்ம வயசு என்ன? அனுபவத்தில் கூட இவன் பாதி கிடையாது?பேர் சொல்லி கூப்பிடுறானே என்று நிலவனை பார்த்து மனதிற்குள் திட்டிய வேலன் பரவால்ல தம்பி...

அப்படியா,எந்திரிச்சு நடக்கலாம் முடியுதா என்றான்.ஓ அதெல்லாம் நடக்க முடியுது பாருங்க.ஆனா எதுக்கு தான் டாக்டர் இங்கே இருக்க சொல்லிருக்கிறார் என்று தெரியவில்லை என்று பெட்டில் இருந்து கீழே இறங்கி நடந்து காட்ட,ஓகே அப்போ வாங்க போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என்றான்.

என்ன தம்பி சொல்றீங்க என்று அதிர்ந்து போய் வேலன் கேட்க,போலீஸ் ஸ்டேஷன் போகலாம் வாங்கன்னு சொன்னேன்.நீங்களே நடந்து வரிங்களா இல்ல உங்களை ஸ்ட்ரக்சர்ல வச்சி தூக்கிட்டு போகணுமா எப்படின்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க என்று பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டுக் கொண்டு நிலவன் சொல்ல..

கண்டிப்பா அவன் சொன்னதை செய்வான் என்பது புரிந்து என்னுடைய வக்கீல் கிட்ட நான் பேசணும் என்றான்.

நீங்கள் யார் கிட்ட வேணா பேசுங்க அது தேவையில்லாத விஷயம். இப்போதைக்கு எங்களோட வாருங்கள் என்று அவரை அழைத்துக்கொண்டு காரில் ஏறியவர்கள் நேராக போலீஸ் ஸ்டேஷன் நோக்கி சென்றார்கள்

கவியால் இப்பொழுது நடக்க முடியாது என்பதால் அவள் குணமாகி வந்த பிறகு அவளை கஸ்டடியில் வைக்கலாமென்று வேதநந்தன் இருவரிடமும் சொல்லிவிட்டார்.

இரண்டு சேரில் அப்பனும் மகனும் உட்கார்ந்திருப்பதை பார்த்துக் கொண்டு நிலவனும் மாறனும் அவர்களுக்கு எதிரில் இருந்த சேரில் வந்து உட்கார்ந்தவர்கள் அப்புறம் ரெண்டு பேரும் எந்த சென்டர்ல டிராமாவுக்கு கத்துக்கிட்டீங்க?.
நல்லா நடிக்கிறீங்களே,சொன்னா எங்களுக்கும் அது பயன்படுமே என்று மாறன் கேட்க,நிலவனுக்கு சிரிப்பு வந்து விட்டது.

தனது மகன் அங்கு நன்றாக உட்கார்ந்திருப்பதை பார்த்த வேலனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.இப்போதைக்கு இங்க இருந்து வெளியே போகணும் என்று நினைத்தவன்,தம்பி எதுக்குப்பா எங்களை இப்படி கூப்பிட்டு வந்திருக்கிற என்றார்..

சொல்றேன்...அப்புறம் அப்பாவும் பிள்ளையும் பாசத்தை புழிஞ்சிட்டீங்களா? உடம்பு எப்படினு நல்லா விசாரிச்சிட்டீங்களா என்க...ஆமா தம்பி கடவுள் புண்ணியத்துல என் பையன் குணமாகிட்டான் என்கவும்...அப்படியா கடவுள் புண்ணியத்துலயா ஆமா ஆமா என்று மாறன் சொல்ல,ஏண்டா இப்படி...என்னால சிரிப்ப அடக்க முடியல டா மாறா...

"நேரடியாக விஷயத்துக்கு வாடா" இந்த ரெண்டு காமெடி பீஸை பாத்து கடுப்பா வருது என்று நிலவன் சொல்லவும்...

சரி வேலன் ஆர்த்தியை எப்படி கொலை பண்ணுனீங்க என்க...என்னா என்று அதிர்ந்து போன சதாசிவமோ அப்போ அன்னைக்கு கத்தியால குத்தினது ஆர்த்தியை தானாப்பா என்று வாயை விட்டான்.

மகன் சொன்னதைக் கேட்டவர் அடே என்று திரும்பி சதாசிவத்தை அறைய போக வெல்டன் மிஸ்டர் வேலன் வெல்டன்.இத்தனை வயசு ஆன பிறகும் பையனை அடிக்க கைய ஓங்குறீங்களே என்ன ஒரு கண்டிப்பான அப்பா சூப்பர் சூப்பர் என்று கையை தட்டினான்.

தம்பி எங்களை கிண்டல் பண்ணியது போதும் எதுக்கு எங்களை இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க அதற்கான முதல்ல காரணத்தை சொல்லுங்க என்றான்.

நல்ல கேள்வி ஆனா உங்களோட கேள்விக்கு எந்த பதில் சொல்வது என்று தனது நெற்றியில் தட்டிய மாறன் சந்திரிகாவை கொலை பண்றதுக்கு ஆட்களையே அனுப்புனீங்களே அந்த கேஸ்லயா?.

இல்ல பணத்துக்கு ஆசைப்பட்டு ஆர்த்தியை கொலை பண்ணுனீங்களே அதை சொல்றதா, இல்லை வெரோனிகாவை கடத்தி பாதாள அறையில் அடைத்து வைத்திருக்கிங்களே அந்த கேஸ் சொல்றதா இல்லை சொத்துக்காக உங்க மாமனாரை கொலை பண்ணிங்களே அதுக்காக சொல்வதா இதில் எந்த கேஸ்ல உங்களை அரெஸ்ட் பண்ணியதை சொல்வது என்கவும், அதையெல்லாம் கேட்ட வேலனோ ஆடிப் போய் உக்காந்து விட்டான்.

இதெல்லாம் இவனுக்கு எப்படி தெரிந்தது என்று திருதிருவென்று வேலன் முழிக்க உங்க சாயமெல்லாம் வெளுத்துப் போய் ரொம்ப நேரம் ஆகுது.

அப்புறம் சொல்ல மறந்துட்டேன் இன்ஸ்பெக்டர் பன்னீர கூட நீங்க தானே ஆளு வச்சி கொன்னீங்க என்கவும்,அப்பா இவங்க சொல்றதெல்லாம் என்ன என்று சதாசிவம் பதற மிஸ்டர் சதாசிவம் எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் பண்றீங்க?.உங்களுக்கு இது செட் ஆகலையே..!

உண்மையிலேயே நீங்க ஆர்த்திக்காக வருத்தப்படுறீங்களா என்கவும் ஆமாம் சார் நான் பெத்த பொண்ணு போல தான் வளர்த்தேன்.ஆர்த்தி ஆக்சிடென்ட்ல இறந்துட்டான்னு தான் எங்க அப்பா சொன்னாங்க .

ஆனா அவளை கத்தியால குத்தினதை என் கண்ணால பார்த்தேன் என் அப்பாவும் கவியும் அங்கு இருந்தாங்க. குத்துவதை நான் தூரத்தில் இருந்து பார்த்ததால அது என் பொண்ணு ஆர்த்தினு எனக்கு தெரியாது என்கவும் தெரியாமலே எப்படி அது ஆர்த்தி நீங்க சொல்றீங்க என்றான்.

உண்மையிலேயே அது ஆர்த்தி என்று முகத்தை பார்க்கல… நான் தூரத்தில் இருந்து பார்த்தேன்.எங்க எஸ்டேட்டுக்கு வர வழியில் தான் இந்த சம்பவம் நடந்தது.

அதற்கு மறுநாள் தான் ஆர்த்தி கார்ல போயிட்டு இருக்கும்போது ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க ஏன்னா ஆர்த்தி என்கிட்ட அவளுடைய பிரண்டோட கல்யாணத்துக்காக கோயம்புத்தூர் போறதாவே சொன்னாள்.

அப்பா...நீங்க தான் கெட்டவர்னா எதற்கு என் பொண்ணையும் இப்படி கெடுத்து வச்சிருக்கீங்க ஏன்ப்பா இப்படி பண்ணுனீங்க என்று பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் வேலனிடம் கேட்க வாய மூடுடா நான் பண்ணுனேன்னு நீ பார்த்தியா?.

இவனுங்க ரெண்டு பேரும்தான் புரியாம பேசுறாங்க நீயும் என்னை கேள்வி கேட்குறியா என்கவும் மிஸ்டர் வேலன் இன்னொரு வார்த்தை எங்களை பார்த்து அவன் இவன் பேசுனிங்க நல்லா இருக்காது ஒரு அதிகாரி கிட்ட எப்படி பேசணும்னு தெரியாதா என்று நிலவன் அங்கிருந்த டேபிளை தட்ட அதில் அப்பனும் மகனும் அரண்டு போனானுங்கள்.

அப்புறம் ஒரு விஷயம் வேலன் உங்க பேத்தி கவி இருக்காங்களே நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டாங்க நீங்களும் சொல்லிட்டீங்கன்னா சுலமபாகிடும் என்க...

என்னாஆஆஆ கவி எல்லாத்தையும் சொல்லிட்டாளா முட்டாள் முட்டாள் அவளுக்காக தானே இவ்வளவும் பண்ணுனேன் அவ எப்படி என்னை மாட்டி விடலாம் என்று கத்தினார்...

கூல் கூல்..என்ன நடந்துச்சுனு உங்க பக்க கதையை சொல்லுங்க முடிந்தால் உங்களை நாங்கள் காப்பாற்றுகிறோம் என்று மாறன் சொல்ல,இதற்கு அப்புறம் மறைக்கிறதுக்கு என்ன இருக்கு என்று நினைத்தவன் என்னை ஏமாற்றிவிட்டு இனி நீ எப்படி ஊருக்குள்ள இருக்குற நானும் பாக்குறேன் என்று சொந்த பேத்தி என்று நினைக்காமல் கவியின் மேல் சினத்தை கொண்டு நடந்ததை வேலனும் சொல்ல தொடங்கினான்.

அதாவது கவி என் பையனுக்கு ஒரே பொண்ணு தான்.பணம் கொஞ்சம் அதிகமா இருந்தால அவளோட பழக்க வழக்கங்கள் எல்லாம் ஸ்கூல் படிக்கும்போதே சரியில்லை.

இது என் பையனுக்கு தெரியாம நான் தான் பாத்துக்கிட்டேன்.ஏன்னா எனக்கு இருக்கிற ஒரே வாரிசு அவ என்ன போலையே வளருவது ஒரு விதத்தில் பெருமையாகவும் எனக்கு இருந்துச்சு.

எங்க அவளோட குணம் தெரிஞ்சு என் பையன் என்கிட்ட இருந்து அவளை பிரித்துவிடுவான் என்று அவளை வெளி ஊர்ல தங்கி படிக்க வச்சேன் அங்க போய் இன்னும் அவள் சகவாசாம் கெட்டுப் போயிடுச்சு.
 
Active member
Joined
Jun 3, 2025
Messages
721
அப்பதான் ஒருநாள் குடிச்சிட்டு கார் ஆக்சிடெண்ட் பண்ணியதால காலேஜ்ல இருந்து அவளை சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க.அது போலீஸ் கேஸ் ஆயிடுச்சு பிறகு பணத்தை கொடுத்து செட்டில் பண்ணிட்டு இந்த எஸ்டேட் கூப்பிட்டு வந்து இதெல்லாம் பார்க்க சொல்லும் போது தான் பக்கத்து எஸ்டேட்ல இருக்கும் நிலமாறனை விரும்புறேன்னு என்கிட்ட வந்து சொன்னாள்.

எங்கள விட சாலை எஸ்டேட் பரம்பரை பணக்காரவங்க சொத்துலையும் அதிகமானவங்க அவங்க பேரன் என் பேத்தியை கல்யாணம் பண்ணிட்டா நானும் நம்பர் ஒன் ஆகிடுவேன்னு கணக்கு போட்டு நானும் அதுக்கு சம்மதம் சொன்னேன்.

கவியோட உண்மையான குணம் யாருக்குமே தெரியாது பாக்குறவங்களுக்கு ரொம்ப அப்பாவி போல தான் இருப்பாள்.

ஆர்த்தியை என் மகன் குழந்தையிலிருந்து தத்து எடுத்து வளர்க்க,அவளும் ரொம்ப பொறுப்பான பொண்ணா வளர்ந்தாள்.எங்க எல்லார்கிட்டயும் நல்லா பாசமா நடந்துபா என்னமோ தெரியல ஆர்த்தி எங்க வீட்ல வளந்தாலும் என்னோட பேத்தியாக மனசில் அவளை ஏத்துக்க முடியவில்லை.

அந்த நேரத்துலதான் சாலா எஸ்டேட்டுக்கு புதுசா ஒரு பொண்ணு செக்கரட்டரியாக வந்து இருப்பதாகவும் நிலமாறனும் அந்த பொண்ணும் நெருங்கி பழகுவதை கேள்விப்பட்டு கவி வந்து என்கிட்ட சொல்லும்போது நான் தீவிரமா அவங்கள கண்காணிக்கும் போது தான் ரெண்டு பேரும் காதலிக்கிறாங்க விஷயமே எனக்கு தெரிஞ்சது.

அது மட்டும் இல்லாம அந்த பொண்ணு ஒரு நாள் ஹாஸ்பிடல் போயிட்டு வரும்போது அதை என்னுடைய வேலையால் ஒருத்தன் பாத்துட்டு வந்து சொல்ல நான் போய் விசாரிக்கும் போது தான் அந்த பொண்ணு கர்ப்பமாக இருக்கிற விஷயம் தெரிஞ்சது.

நிச்சயமா இந்த விஷயம் வெளிய தெரிஞ்சாக்க உடனே சாலாமா ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க அப்ப என்னுடைய பேத்திய வாழ்க்கை என்ன ஆவதுன்னு நினைச்சேன்.

எனக்கு கவி வாழ்க்கை தான் முக்கியமா தெரிஞ்சது.அந்த பொண்ணு உயிரோட இருந்தால் தானே நிலமாறன் கல்யாணம் பண்ணுவான்.அவளை கொலை பண்ணிடலாம்னு பேசிட்டு இருக்கும்போது இதை ஆர்த்தி காதில் வாங்கிய விஷயம் எங்களுக்கு தெரியாது.

தற்செயலா திரும்பும் போது யாரோ ஜன்னல் கிட்ட இருந்து போறது பார்த்து நாங்க வேளியே வரும்போது ஆர்த்தி ரூமுக்குள்ள போனது தெரிஞ்சது.

கவிய போய் சாதாரணமா அவ என்ன பண்றான்னு விசாரி? நாம பேசியதை காதுல வாங்கினாளா இல்ல வேற யாரான்னு நான் சொல்ல,சரினு அதேபோல கவி போகும்போது ஆர்த்தி அங்க போன்ல பேசிட்டு இருந்ததை கேட்டுட்டு வந்து என்கிட்ட சொன்னா...

உடனே நாங்க ரெண்டு பேரும் அவளை மிரட்டுவதற்காக ரூம்குள்ள போய் தேடினால் ஆர்த்தி அங்க இல்ல.எங்க போனாளென்று வெளியில வந்து பார்க்கும்போது மெயின் கேட் தாண்டி ஆர்த்தி வெளில போவது தெரிஞ்சது.

கண்டிப்பா இவ எஸ்டேட்டில் இருக்கும் என் பையன் கிட்ட தான் சொல்ல போறான்னு நினைச்சு நாங்க ரெண்டு பேரும் பின்னாடியே காரை எடுத்துக் கொண்டு போகணோம்.

அது எஸ்டேட் என்கிறதால அந்த நேரத்துல யாருமே வர மாட்டாங்க அது எங்களுக்கு வசதியா போனது.வேகமாக போய் ஆர்த்தியை புடிச்சு இந்த நேரத்தில் எங்கே போறேன்னு சாதாரணமாக கேட்டபோது அவளோ நீங்க ரெண்டு பேரும் பேசினதை காதுல வாங்கிட்டேன்.

இத நான் சதா அப்பா கிட்ட சொல்றதுக்கு தான் போறேன்னு சொல்லவும் கண்டிப்பா இவளை உயிரோடு விட்டாக்க ஆபத்துனு நான் அவள் கையை பிடிச்சுக்க வீட்ல இருந்து எனக்கே தெரியாம கவி எடுத்திட்டு வந்த கத்தியை எடுத்து குத்தியதும் ஆர்த்தி உயிர் அங்கே போயிடுச்சு.

பிறகு என்னோட அடியாட்களுக்கு போன் பண்ணி வர வச்சி இந்த பாடிய கார் ஆக்சிடென்ட் போல நாளைக்கு பண்ணிடுங்கன்னு சொல்லிட்டு வந்துட்டேன் அதேபோல மறுநாள் கார் கார் விபத்தில் கவி இறந்த போல செட் பண்ணிட்டாங்க...பிறகு நானும் கவியும் வீட்டுக்கு வரும்போது தான் வெரோனிகா எதிரில் வருவதை பார்த்தோம் அவ எங்களை பார்த்த உடனே ஓட ஆரம்பிச்சிட்டாள்.

அப்பதான் அவளுக்கு விஷயம் தெரிஞ்சதையும் இவளை விட்டாக்க பிரச்சனை என்று அவளையும் கார்ல கடத்தி ஆர்த்திக்காக மயக்க மருந்து கலந்து எடுத்து வந்த கர்சிப்பை வெரோனிகா முகத்துல வச்சதும் மயங்கிட்ட பிறகுதான் பாதாள அறையில் அடைச்சு வச்சுட்டோம்..

முழுக்க முழுக்க காரணம் என்னுடைய பேத்தி கவி.அவளோட சுயநலத்துக்காக தான் ஆர்த்தியை கொன்றாள்.அவள் கூட இருந்தனே தவிர என் மேல எந்த தப்பும் இல்லை என்று வேலன் சொல்ல, இதுவரை சொன்னது எல்லாம் வீடியோவில் அங்கே ரெக்கார்டு ஆகி கொண்டிருந்தது.

மிஸ்டர் சதாசிவம் நீங்க எதுக்கு பேரலைஸ் வந்தபோது நடிச்சீர்கள் என்று கேட்க இந்த கொலை நடந்ததை நான் பாத்துட்டேன்.இதை பற்றி கேட்டால் ஏற்கெனவே எங்க அப்பா என்னை அடைச்சு வச்சு வெளியில விடாம மூணு மாசம் வைத்திருந்தார்.அதேபோல திரும்ப பண்ணிடுவாருன்னு பயந்துட்டு தான் இப்படி நான் நடிச்சேன் என்றார்.

தம்பி நான் எந்த தப்பும் பண்ணல கவிய அரெஸ்ட் பண்ணுங்க பா கொலை பண்ணுது அவள். இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.என் பேத்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கிறதுக்காக தான் அந்த பொண்ணை அடைச்சு வச்சேன்.

அதுவும் இல்லாமல் மாசமாக இருக்கும் பொண்ணு.தூங்கும் வரை பெட்டியை மூடி வச்சி அதன் பிறகு காற்றுக்காக பெட்டியை திறந்து விடசொல்லிருந்தேன்.இல்லனா அந்த பொண்ணையும் கொலை பண்ணிருப்பாள் என்று நேர்மையாக பேசுவது போல் வேலன் சொல்ல...

ஓகே என்று இருவரும் எழுந்து வெளியே போக தம்பி என்க, போனவர்கள் திரும்பி அவரை பார்த்து சிரித்து விட்டு கண்டிப்பா உங்களை விடுதலை பண்ணிட்டு தான் சார் மறுவேலை என்று சொல்லிட்டு போனவர்கள் இது எல்லாம் வேதநந்தனிடம் சொல்ல,கோர்ட்டில் ஒப்படைக்க சொன்னார்.

ஓகே இப்ப போய் பேத்தி டிராமாவை பார்க்கலாமா என்று மாறன் கேட்க, பார்க்கலாமே என்றவன் அதற்கு முன்பு ஏதாச்சும் சாப்பிட்டுக்கலாம் என்க சரி என்று அங்கிருந்த ஹோட்டலில் ஈவினிங் டிபன் சாப்பிட்டுவிட்டு இருவரும் கவி அட்மிட் ஆகியிருக்கும் ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள்.

கதவைத் தட்டி விட்டு உள்ளே போக அங்கே மருத்துவ உபகரணங்களோடு படுத்திருப்பவளை பார்க்க சிறிதும் இறக்கம் வரவில்லை.இருவரையும் பார்த்தவள் நீங்க யார் என்று கேட்க என்னம்மா எங்களை யாருன்னு தெரியாதா என்று நிலவன் கேட்க...

தெரிஞ்சு வச்சிருக்கிற அளவுக்கு நீங்க என்ன பெரிய ராஜா விட்டு குழந்தைகளா என்றாள்.திமிர பாரேண்டா இவளுக்கு என்று மாறன் சொல்ல,அணையிற விளக்கு இப்படி தான் பிரகாசமா எரியும் என்றான்

அப்புறம் கவி இப்ப உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா என்கவும் கண்ணு தெரியுதா இல்லையா என் நிலைமை இப்படி இருக்கு பாத்துட்டு நக்கல் பண்றிங்க முதல்ல யாரை கேட்டுட்டு இங்க உள்ள வந்தீங்க வெளியில போங்க,நர்ஸ் நர்ஸ் என்று கத்தினாள்.

உனக்கு தொண்டையில் ஆபரேஷன் பண்ணிருக்கு,இப்படி கத்துறியே உனக்கு குரல் நல்லா வந்துடுச்சா? எங்கே அ சொல்லு அம்மா சொல் என்று நக்கலாக நிலவன் கேட்க ஸ்டுப்பிட் யார் நீங்கள் என்று அவள் பேசினாலும் குரல் மட்டும் கீச்சுகிச்சு என்று தான் வந்தது.

ஓ நாங்க யாருன்னு தெரியாது இல்லையா ஓகே.இது மாறன் நான் நிலவன்.மாறன் யார் தெரியுமா நிலமாறன் இருக்கானே நிலமாறன் அவனோடு அண்ணன் இளமாறன்.

நான் இரண்டு மாறன்களோட தங்கச்சி இளமதி இருக்காளே அவளோட ஒரே ஒரு புருஷன் என்கவும் நீங்களா என்று அவள் அதிர்ந்து போய் பார்க்க நாங்கள் தான் அப்புறம் உன் தாத்தா சொல்றாரு ஆர்த்தியை நீதான் கொலை பண்ணியாமே என்கவும் என்னாஆஆஆ ஆர்த்தியை நான் கொலை பண்ணிட்டேனா?.

எஸ்...உங்க தாத்தா அப்படி தான் சொல்றாரு வீடியோ பாக்குறியா என்று வேலன் பேசிய வீடியோவை கவியிடம் போட்டு காண்பிக்க நோ நான் பண்ணல..எங்க தாத்தா சொல்லிக் கொடுத்து தான் நான் இப்படி பண்ணுனேன் என்றாள்.

என்னம்மா சொல்ற என்கவும் ஆமா நிலமாறனுக்கு சொத்து நிறைய இருக்கு அவனை கல்யாணம் பண்ணிட்டு பக்கத்திலேயே வந்துட்டனாக்க நீ அந்த வீட்டுக்கு ராஜகுமாரியா இருக்கலாம்.

ஒரே மருமக உன்னை யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க அப்படி இப்படின்னு எனக்கு ஆசை வார்த்தை சொல்லி எங்க தாத்தா கூப்பிட்டு வந்தாரு.பணம் இருப்பதால் நானும் சில கெட்ட பழக்கத்தை எல்லாம் கத்துவச்சிருந்தேன் அப்போ ஒருத்தனை குடிபோதையில் ஆக்சிடென்ட் பண்ண தாத்தா தான் பணத்தை கட்டி கூப்பிடு வந்தார்.

அப்புறம் எஸ்ட்டேட்டுக்கு போயிட்டு வரும்போது தான் நிலமாறனை பார்த்தேன் ஃபர்ஸ்ட் விருப்பம் இல்லாம இருந்த அப்புறம் நிலமாறனை எனக்கு பிடிச்சிருச்சு அவனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணும் போது எங்கிருந்து வந்தாளோ அனாதை கழுதை...

என்னோட நிலனை அவள் மயக்கிட்டா. அவங்க ரெண்டு பேரையும் சில இடத்தில் ஒன்றாக பார்த்தேன்.அப்போது தான் அவங்க காதலிப்பது எனக்கு புரிந்து கொலைவெறி வந்தது.

நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவனை இவ எப்படி விரும்பலானு எனக்கு கோவம் வந்தது அதை எங்க தாத்தா கிட்ட போய் சொல்லும் போது தான் வெரோனிகா கர்ப்பமா இருக்குற விஷயம் தெரிஞ்சது.

என்ன பண்ணலாம் என்கிற போது வெரோனிகா உயிருடன் இருக்கிற வரைக்கும் உனக்கு நிலமாறன் கூட கல்யாணம் நடக்காதுன்னு சொன்னார். அவளை கொல பண்ண பேசியதை ஆர்த்தி கேட்டுட்டாள்.

கார்ல பாலோ பண்ணிட்டு வந்தோம் ஆர்த்தி கிட்ட போய் அத பத்தி வெளியில சொல்லாத என்கும் போது எங்க தாத்தா தான் சொன்னாரு ஆர்த்தியை உயிரோடு விட்டாக்க கண்டிப்பா இந்த விஷயம் வெளியில தெரிஞ்சிடும் அப்புறம் நிலமாறன் உனக்கு கிடைக்க மாட்டான்னு.

என்ன பண்றது தாத்தா என்க கார்ல கத்தி இருக்கு எடுத்து குத்துன்னு சொன்னாரு. தாத்தா ஆர்த்தியை இறுக்கமா புடிச்சுக்க நான் தான் கத்தி எடுத்து என் தாத்தா சொன்ன போல குத்துனேன் என்று அவளும் அவள் வாயாலே வாக்குமூலத்தை கொடுத்தாள்.

அப்புறம் வெரோனிகாவை என்ன பண்ணீங்கன்னு கேட்க, நான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டு வரும்போது எதிரில் வெரோனிகா வருவது தெரிஞ்சு அவளை கடத்தி எங்க பழைய பேலஸில் அடைத்து வைத்துவிட்டு வந்துட்டோம்ன்னு சொன்னாள்.

வீட்டுக்கு உன்னை போல ஒரு பொண்ணு இருந்தாக்க ரொம்ப விளங்கிடும் என்றவனுங்கள் உன்னை அப்புறம் வந்து பார்க்கிறோம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்தவர்கள் அங்கே தயாராக இருந்த இரண்டு போலீஸிடம் அவள் எங்கும் தப்பித்து ஓட முடியாதபடி பார்த்துக்க சொல்லிவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி வர இரவு ஆனது.

இருவரும் கலைத்து போய் வருவதை பார்த்த சாலாட்ச்சி பாட்டி போயிட்டு பிரஷ் ஆகிட்டு வாங்கப்பா டிபன் சாப்பிடலாம் என்க, சரி பாட்டி என்று இருவரும் ரூமிற்கு போய் பிரஷ் ஆகிட்டு வந்து சாப்பிட உட்காரு காலிங் பெல் சத்தம் கேட்டது.

உங்க மகளும் மருமகனும் தான் வந்து இருப்பாங்க என்று சொல்லிக் கொண்டே அவனுங்கள் சாப்பிட,வேலையால் போய் கதவை திறக்கவும் மதிவாணனும் வேதவள்ளியும் பதறி அடித்துக் கொண்டு உள்ளே வந்தவர்கள் என்ன ஆச்சு?

யாருக்கு என்ன ஆச்சு?

எதுக்கு மாறன் இப்படி வர சொல்லி போன் பண்ணுனான் என்றனர்.

தொடரும்…
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top