New member
- Joined
- Jun 20, 2025
- Messages
- 3
- Thread Author
- #1
வீட்டுக்கு வந்த சிவாவுக்கு, ஏதோ தவறாக தெரிந்தது..
"அம்மா, அப்பா" என்றவன் சற்று வேகமாக "தாத்...தா ....... எல்லாம் எங்கே போனீங்க? அட யாராச்சும் வாங்க" என்று கெஞ்சிய குரலில் அழைத்தான்.
அப்போது ஒவ்வொருவராக ஹாலுக்கு வந்தனர் ."என்னாச்சு எல்லாம் ஏன் இப்படி இருக்கீங்க ப்ளீஸ் ஏதாச்சும் சொல்லுங்க,எனக்கு பயமருக்கு,நான் திரும்பி வரும் போது கல்யாணவீடு கலகலப்பா இருக்கும்னு நினச்சேன். ஆன இங்க நிலைமை மோசமா இருக்கு. எல்லாருடைய, முகமும் அழுத மாதிரி இருக்கு.மாமா நீங்களாச்சும் சொல்லுங்க என்ன ஆச்சு," என்று பதட்டமாக சிவா எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருந்தான்,
அப்போது அவன் அப்பா ரவிச்சந்திரன்.
"சிவா உனக்கு மரேஜ் டேட் பிக்ஸ் பண்ணிட்டோம் "என்று சோகமாக சொன்னார்.
அதைக்கேட்டவனுக்கு, முழுதாக சந்தோசபட முடியவில்லை..
"அப்பா இது சந்தோச படுற விஷயம் தானே, அதுக்கு ஏன் இப்படி எல்லாரும் சோகமா இருக்கீங்க" என்று மீண்டும் பதட்டமாக கேட்டான் சிவா.
"இல்ல சிவா இந்த விஷயத்தை எப்படி சொல்றதுன்னு எங்களுக்கு தெரியல," என்றார் தாத்தா.
"தாத்தா என்ன சொல்றீங்க, ஐஸ்வர்யாவுக்கும்,எனக்கும் கல்யாணம் நடக்கணும்னு தான, எல்லாரும் ஆசைப்பட்டீங்க, இப்போ ஏன் உங்களுக்கு பிடிக்கலையா" என்று அடிக்குரலில் கேட்டான் சிவா,
"அய்யோ சிவா அந்த ஆசையெல்லாம் நிராசையா போச்சே. இத நீ எப்புடி தங்கப்போற டா" என்று சிவாவை கட்டியணைத்து கதறி அழுதாங்க சிவாவின் அம்மா சீதா.
"அம்மா என்ன சொல்றீங்க "என்றவாறு மெல்ல கீழே சரிந்தான் சிவா .
"சிவா கண்ணா மனசத் தேத்திக்கோ டா. தங்கம்,உனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கல்யாணம் நடக்காது,அப்டி நடந்தா ஐஸ்வர்யா உயிருக்கே ஆபத்துன்னு ஜோசியர் சொல்லிட்டாரு "என்றவுடன்.
அதைகெட்ட சிவாவின் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது எதுவும் பேசாமல், எழுந்து சிவா தன் ரூமிற்குள் சென்று கதவை லாக் செய்துகொண்டவன்.. அங்கிருந்த ஓவியத்தை பார்த்து கதறி அழுதான்..
அப்போதுதான் சிவாவிர்கு அப்பா சொன்னது நினைவிற்க்கு வந்தது..
" சிவா உனக்கு மேரெஜ் டேட் பிக்ஸ் பண்ணிருக்கோம்ன்னு அப்பா சொன்னாரே," என்று நினைத்தவன் அறையின் கதவைதிறந்து வேகமாக ஹாலுக்கு ஓடிவந்தான்...அனைவரும் சோகமாக அமர்ந்திருந்தனர்.
"அப்பா என்ககு மேரெஜ் னு சொன்னிங்க ,ஐஸ்வர்யா இல்லனா பொண்ணு யாரு?சொல்லுங்க அப்பா ஏன் அமைதியா இருக்கிங்க சொல்லுங்க ."என்று சிவா கேட்க..
"சிவா பொண்ணு உன் மாமாவுக்கு சொந்தம் "என்று ஒரு வரியில் பதிலளித்தார்..
"அப்போ எல்லாம் முடிவு பண்ணிட்டீங்க. எதுக்காக இவ்வளவு அவசரம்."என்றான்.
"அவசரம் இல்லை சிவா, அவசியம்"என்றார்..
"என்ன அவசியமா இருந்தாலும் எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்."என்றான்.
"சிவா உடனே உன் கல்யாணம் நடக்கனும்" என்றாங்க சிவாவின் அம்மா.
"அம்மா என்ன ஆச்சு மா, ஏன் இவ்வளவு அவசரம்" என்றான் சிவா .
"இப்போ உன் கல்யாணம் நடக்கலைனா. இன்னும் 5 வருஷத்துக்கு அப்புறமா தான் உன் கல்யாணம் நடக்கும்னு,ஜோசியர் சொல்லிட்டாரு. அதான்,அவசரமா எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டோம் .
கண்ணா,, எங்களுக்காக தயவு செஞ்சு சம்மதம் சொல்லுடா"என்று அவன் அம்மா கெஞ்சலாக, சொல்லவும்.
"என்னமா எல்லாருமா சேர்ந்து பெரியா குழியா தோண்டி,என் காதல்,என் வாழ்க்கை,என் உயிர்,எல்லாத்தையும் பொதைச்சுட்டிங்க,உங்களுக்காக நானும் சம்மதிக்கிறேன்" எனறுவேதனையோடு சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
சிவாவின் கல்யாண ஏற்பாடு ரகசியமாகசெய்யபட்டது.
கல்யாண நாளும் நெருங்கியது.ஆனால் சிவாவின் மனம் எப்படியாவது ஐஸ்வர்யாகிட்ட பேசி மனதை மாற்றிவிடலாம்" என்று நினைத்தான்.
விடிந்தால் கல்யாணம் ஆனால் மாளிகையில் திருமணத்துக்காக எந்த ஏற்பாடும் நடக்கவில்லை .
தோட்டத்து பங்களாவில் ரகசியமாக கல்யாணம்பண்ணி வைக்க திட்டம்.. என்ன நடக்குது என்று புரியாத சிவா, ஐஸ்வர்யாவிடம் தனியாக பேசுவதர்க்காக ஐஸ்வர்யாவின் அறைக்கு சென்றான்...
"ஐஸ்வர்யா "என்று மெல்லிய குரலில் அழைத்தான் சிவா.
"மாமா என்ன காலைல உனக்கு கல்யாணம்.இந்த நேரத்துல இங்க வந்துருக்க, மாமா நீ முதல்ல உன் ரூம்க்கு போ" என்றாள் ஐஸ்வர்யா.
"ஏ உனக்கு எந்த வருத்தமும் இல்லையா. ஏண்டி இப்படி சந்தோஷமா இருக்க,விடுஞ்சா, நான் வேர ஒரு பொண்ணுக்கு சோந்தமாக போறேன்.. உனக்கு கொஞ்சம் கூட வருத்தமா இல்லையா டி...நீ என்ன லவ் பண்ணது எல்லாம் பொய்யா "என்று கோவமாக கேட்டான் சிவா.
"ஏன் மாமா இவ்ளோ கோவம், நான் உன்ன ரொம்ப லவ் பண்றேன். அதுனாலதான் நான் உன்ன ஒரே ஒரு நாள் மட்டும்தான் அந்த பொண்ணுக்கு உன்ன நான் விட்டு கொடுக்குறேன் என்றால் ஐஸ்வர்யா.
அதை கேட்ட சிவா அதிர்ச்சியில் உறைந்துபோனான்.
"மாமா மாமா" என்று ஐஸ்வர்யா சிவாவை தட்டினாள்.
நினைவுக்கு வந்த சிவா.
"ஐஷு என்ன சோல்ற நீ,,ஒரு நாள் மட்டுமா,ஏய் சோல்லு டி இங்க என்ன நடக்குது சொல்லு" என்று கோவமாக கேட்டான் சிவா .
"மாமா அது வந்து அது "என்று தயக்கத்தோடு நின்றாள் ஐஸ்வர்யா.
"ஹே என்ன சொல்லு "என்று அனல் கக்கும் விழிகளில் அவன் கேட்கவும்...
"மாமா உனக்கு முதல் தாரம் நிலைக்காதுனு ஜோசியர் சோன்னாரு, அதுனாலதான் உனக்கு இப்போ யாருக்கும் தெரியாம மேரேஜ் நடக்கபோது .
உன் பர்ஸ்ட்நைட் முடுஞ்சதும் அடுத்தநாள் அந்த பொண்ண டிவோர்ஸ் பண்ணிட்டு, அடுத்த முகூர்த்ததுல நமக்கு ஊரரியா பிரமாண்டாமா கல்யாணம் நடக்க போது..அதுக்காக தான்,இதெல்லாம்" என்றாள் ஐஸ்வர்யா.
அதை கேட்டவன் இதயம் நொறுங்கியது,,
"இது அந்த பொண்ணுக்கு தெறியுமா" என்றான் உணர்ச்சிகழற்று..
"தெரியாது மாமா" என்றாள் ஐஸ்வர்யா.
"சரி இது யார் சோன்ன ஐடியா ஐஸ்வர்யா "என்றான் சிவா .
"நான் தான் மாமா" என்றுசந்தோஷமாக சொன்னாள்.ஐஸ்வர்யா.
"சீ வாய மூடூ இதசொல்ல உனக்கு அசிங்கமா இல்ல,ஏன் டி நீயெல்லாம் ஒரு பொண்ணா, உன் சுயநலத்துக்காக இன்னொரு பொண்ணோட வாழ்க்கைய நாசம் பன்ன பாக்குற,ச்ச உன்ன போய் காதலிச்சேன் பாரு."என்று முகத்தை சுழித்து சொன்னவன்..
"இங்க பாரு ஐஷு,நீங்க எல்லாரும் நினைக்கிறது கண்டிப்பா நடக்காது.
உனக்கு கடைசியாஒரு வாய்ப்பு தரேன்.. நான் அந்த பொண்ணு கழுத்துல தாலி கட்டப்போற கடைசி நிமிஷம் வரைக்கு மட்டும் தான் உனக்கு டைம்..
நீ வரலனா அப்புறம் லைப்லாங் எப்பவும் நான் உனக்கு கிடைக்கமாட்டேன்.நான் யாருகழுத்துல பர்ஸ்ட் தாலி கட்டுவேனோ அவ தான் என் பொண்டாட்டி..என் வாழ்க்கை முழுக்க, அவ மட்டும் தான்.. அத நீ மனசுல வச்சுக்கோ" என்று சொல்லிவிட்டு கிளம்பியவன். கீழே சென்றான். குடும்பத்தார் அனைவரும் அமர்ந்திருந்தனர்... அவன் மனதில் இருக்கும் வலி அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது,,
அவன் அருகில் வந்த அவன் அப்பா "சிவா நீ தோட்டத்துக்கு போ "என்றதும்.. தெளிவாக ஒரு முடிவேடுத்தவனாய்,தோட்டத்து பங்களாவிற்க்கு" சென்றான்.
அங்கு பொண்ணு வீட்ல இருந்து மணபெண் மற்றும் அவள் அப்பா அம்மா மட்டும் வந்திருந்தனர்.
சிவா மணபெண்ணை பார்க்கவில்லை.மறுநாள் காலை 5மணி மணவறையில், மணகோலத்தில் அமர்ந்திருந்தான் சிவா...
அப்போது ஐயர் மணமகளை அழைத்துவர சொன்னார் .மணமகளை அழைத்து வந்தனர்..மணமகளும் மணவறையில் சிவாவின் அருகில் அமர்ந்தாள்.
சிவாவிற்க்கு இப்போது படபடப்பு அதிகமானது.அவன்கண்கள் ஐஸ்வர்யாவை தேடியது.
அருகில் அமர்ந்திருந்த மணப்பெண் முகத்தை கூட அவன் பார்க்கவில்லை .. சற்று நேரத்தில் அங்கு வந்தாள் ஐஸ்வர்யா..ஆனால் சிவா எதிர்பார்த்தது போல் அவள் திருமணத்திற்காக வரவில்லை.
சிவாவின் திருமணத்தை காண வந்திருந்தாள். அது தெரியாமல், சிவாவின் உதடுகள் புன்னகைத்தது..
"ஐஸ்வர்யா மனசு மாறிட்டியா "என்று சந்தோசமாக அவன் கேட்கவும்..
"இல்ல மாமா உன் கல்யாணத்தை பார்க்க வந்தேன்..நான் நேத்து சொன்னது கண்டிப்பா நடக்கும்.. நீ கவலைப்படாமல் தாலி கட்டு "என்று புன்னகையோடு சொல்லவும்..
சிவாவிற்கு அவ்வளவு கோபம் வந்தது..
"இங்க பாரு ஐஸ்வர்யா. நீ நினைக்கிறது எதுவுமே நடக்காது..
இப்ப இங்க என்ன நடக்குமோ அது மட்டும் தான் உண்மை... இனி நீ கனவுல கூட என்ன நினைச்சு பார்க்க முடியாது.. நான் நேத்து சொன்ன மாதிரி,நான் யார் கழுத்துல பஸ்ட் தாலி கட்றேனோ..அவ தான் இந்த ஜென்மத்துல என் பொண்டாட்டி..அத யாராலும் மாற்ற முடியாது..." என்றான் சிவா.
"மாமா. நீ இப்போ கோபத்துல பேசுற,. நீ எதைப்பத்தியும் கவலைப்படாத,"என்றாள்..
பெண் வீட்டுக்காரர்கள், நடப்பதை வேட்டிக்கை பார்த்தார்களே தவிர எதுவும் பேசவில்லை..
"ஐயா முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு..தாலி கட்டுங்க "என்று தாலியை சிவாவின் கையில் கொடுத்தார் ஐயர்,அப்போது கூட சிவா அந்த பெண் முகத்தை பார்க்கவில்லை .
பார்க்காமலயே தாலியை அந்தப்பெண்ணின் கழுத்தின் அருகில் கொண்டு சென்றான்..
"முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்துங்க, என்னை லவ் பண்ணிட்டு இன்னொரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட போறீங்களே,,உங்களுக்கு மனசாட்சியே இல்லையா" என்று ஒரு பெண்ணின் குரல் ஒலிக்க..
வேகமாக பார்த்தனர்..
அப்போது பிங் கலர் சுடிதார் அணிந்து
ஒரு பெண் தேவதை போல் நின்றிருந்தாள்.. முகம் கோபத்தில் சிவந்திருந்தது...
"யாருமா நீ எதுக்காக இங்க வந்து பிரச்சனை பண்ற "என்று சிவாவின் அப்பா கேட்டார்.
"உங்க மகனும் நானும் லவ் பண்றோம் வீட்ல சொல்லி என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாரு, அத நம்பி நானும் அவர் ஆசைப்பட்ட மாதிரி அவர் கூட சேர்ந்து வாழ்ந்துட்டேன்..
ஆனா இப்ப எதுவுமே சொல்லாம இன்னொரு பொண்ண கல்யாணம் பண்ண இங்க உட்கார்ந்திருக்கிறாரு.. இது நியாயமா, நீங்களே என் வாழ்க்கைக்கு ஒரு பதிலை சொல்லுங்க" என்றாள் அந்தப் பெண்.
அப்போது சிவாவை பார்த்த அவர் அப்பா அம்மா இருவரும் "என்ன சிவா இது? என்ன நடக்குது, யாரு இந்த பொண்ணு" என்று சிவாவை பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்கவும்..
புரியாமல் தவித்தவன்..
"அப்பா இந்த பொண்ணு யாருன்னு கூட எனக்கு தெரியாது..இந்த நிமிஷம் வரைக்கும் நான் இவளை பார்த்தது கூட கிடையாது, எதுக்காக இங்க வந்து இப்படி பொய் சொல்லி நாடகமாடுறாள்ன்னு எனக்கு புரியல, தயவு செஞ்சு முதல்ல அவள வெளியே போக சொல்லுங்க,இவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
அவ சொல்றது எதுவும் உண்மை இல்ல. தயவு செஞ்சு அவளை வெளியே போக சொல்லுங்கப்பா, நானே மனசுல வலியோட தான் உட்கார்ந்துருக்கேன்.. உங்க எல்லாத்துக்காகவும் தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கிறேன்.
திடீர்னு இந்த பொண்ணு வந்து இப்படி சொல்றா,இவ ஏதோ பிராடு போல" என்றான் சிவா.
அப்போது ஐஸ்வர்யா வின் அப்பா.
"ஹே யாரு நீ உனக்கு எவ்வளவு பணம் வேணும்" என்று கோவமாக அவளிடம் கேட்கவும்...
"இங்க பாருங்க சார் உங்க பணம். சொத்து,எதுக்காகவும் நான் இங்க வரல,நான் வந்தது என்னோட சிவாவுக்காக.."என்று தன் மார்பில் கைவைத்து அழுத்தமாக என்னோட சிவா, என்று சொன்னவள்.
"அவரும் நானும் விரும்புனது உண்மை. ஆனா இப்போ எதுக்காக,என்னை தெரியாதமாதிரி பேசுறாருனு எனக்கு தெரியல,உயிரா காதலிச்சோம், ஒன்னா சேர்ந்து வாழ்ந்திருக்கோம்."என்று தைரியமாக சொல்லவும்..
கையில் இருக்கும் தாலியோடு, கோபமாக மணவரையை, விட்டு எழுந்தவன், சிம்ம நடையில் அவள் அருகில் வந்தான் சிவா..
உள்ளுக்குள் பயம் என்றாலும். அவன் முன்பு சற்று தைரியமாக அவள் நின்றாள்.
"நீ யாரு எதுக்காக என்மேல இப்படி பழியை போடுற,,உண்மைய சொல்லு, உனக்கு பணம் வேணும்னா எவ்வளவு வேணும்.வாங்கிட்டு போ, தேவையில்லாம என் மேல அபாண்டமா பழிய போடாத" என்று கோபமாக கத்தினான் சிவா..
" என்ன மாமா உன்னோட சுயரூபம் வெளிய தெரிஞ்சுருச்சுனு கோபப்படுறியா" என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்தாள் ஐஸ்வர்யா.
தொடரும்...