• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
ரெண்டுக்கும் என்ன பெரிய வித்யாசம் இருக்கு, படுத்துகிட்டு போர்த்திக்கிட்டாலும், போர்த்திக்கிட்டு படுத்து கிட்டாலும் ரெண்டுமே ஒண்ணு தானே”.. என்றாள் கற்பகம்.

“இல்லைக்கா வேற வேற, நாம வேலை செய்யறோம், அங்கே உழைப்பும் உரிமையும் இருக்கும் அதனால உதவி கேட்கலாம். ஆனா உதவி செஞ்சவங்க கிட்ட வேலைக்கு போனா அங்க அடிமைத்தனம் தான் மேலோங்கி இருக்கும். உன் கடனை கொடுக்கற வரைக்கும் நீ எனக்கு அடிமைங்கற மாதிரி”.. என்றாள் விளக்கமாக.

தேவி சொன்ன விளக்கத்தில் கற்பகம் அசந்தே போனாள். “எப்படி தேவி இப்படி எல்லாம் யோசிக்கற. எனக்கு இப்படி எல்லாம் யோசிக்க தெரியாதும்மா. நம்மளுக்கு உதவி செய்தாங்களா அவங்களுக்கு செருப்பா தேய்ஞ்சாலும் பரவாயில்லைன்னு மட்டும் தான் நினைப்பேன்” என்றாள்.

“இதையே தான்கா நானும் சொன்னேன், அப்படி நாம நினைச்சா பரவாயில்லை, அவங்க நினைச்சா அது அடிமை வாழ்க்கை மாதிரி தானே”..என்றாள்.

“ஓஹ், இப்ப என்ன முடிவு பண்ண போற”..

“தெரியலைக்கா நாளைக்கு காலையில வரைக்கும் டைம் இருக்கு பார்க்கலாம்”..என்றாள்.

“சரி இந்தா”.. என ஒரு கிண்ணத்தை கொடுத்தாள் கற்பகம், “என்னக்கா இது” என திறந்து பார்க்க அதில் சாம்பாரும் கருணைக்கிழங்கு வறுவலும் இருந்தது.

“எதுக்கு கா இதெல்லாம்” என சங்கடமாக கேட்டாள்.

“நீ அப்பாவை பார்க்கறேன்னு உன்னோட உடம்பை நல்லா பார்த்துக்கறது இல்லை, அதனால தான் ஹாஸ்பிடல்ல மயங்கி விழுந்து இருக்க. அந்த பொண்ணு சரியா சாப்பிடறதே இல்லை போல நீ கொஞ்சம் பார்த்துக்க மாட்டியான்னு, உங்கண்ணன் தான் திட்டினாரு. எனக்கு குடுக்கணும்னு தோணும் ஆனாலும் நீ எது கேட்டாலும் வேணாம்னு சொல்லுவியா, மீறி கொடுத்த தப்பா நினைச்சுக்க போறேன்னு தான் குடுக்க மாட்டேன். இனி நீ என்ன நினைச்சாலும் சரி நான் குடுப்பேன் நீ சாப்பிட்டு தான் ஆகனும்” என்றாள் உத்தரவாக.

“அக்கா எனக்காக இவ்வளவு செய்யறீங்க உங்ககிட்ட வாங்க கூடாதுன்னு எல்லாம் இல்லை, அப்பா சாப்பிடாம இருக்கும்போது நான் மட்டும் எப்படி சாப்பிடறது அதனால தான் செய்யறது கூட இல்லை நீங்க தப்பா நினைக்காதீங்க” என்றாள் கெஞ்சலாக.

“தப்பா தான் நினைப்பேன், இதை வாங்கிக்கலைன்னா”.. என்றாள்

அதற்கு மேல் பேச முடியாமல், எடுத்து வைத்து கொண்டாள். கற்பகம் இன்னும் கொஞ்சம் நேரம் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.

அவள் சென்றதும் தந்தையின் தேவையை கவனித்து விட்டு வந்தவளை மீண்டும் அவனது யோசனை ஆக்ரமித்து கொண்டது. என்ன செய்வது என்ன செய்வது என யோசித்தாள். அவளுக்கு வேலை வேண்டும், அவனது கடனை கொடுத்தே ஆக வேண்டும். கழுத்தை நெருக்கும் பெரிய கடன் இல்லாவிட்டாலும் நாளைக்கே கொடு என்று அவன் கேட்டால் அவளால் முடியாதே. நிதர்சனம் கண்ணெதிரே தோன்ற வேறு வழி இல்லாமல் வேலைக்கு சென்று தான் ஆகவேண்டும் என எண்ணிக்கொண்டாள்.


கணவன் வந்ததும் அவனிடம் விஷயத்தை கூறினாள் கற்பகம். அப்படியா என்று ஆச்சரியம் கொள்ளாமல், “இதை எதிர்பார்த்தேன்” என்று கூறினான் கோபால்.

“எப்படி சொல்றீங்க”..

“அவன் சுலபத்துல யாருக்கும் உதவி செய்யறவன் இல்லை, அப்படிபட்டவன் பணத்தை கட்டினான்னு தெரிஞ்சதுமே எனக்கு தோணுச்சி”..

“ஏங்க இதுல ஏதாவது”..

மனைவி என்ன கூற வருகிறாள் என்று புரிந்ததும், “ச்ச ச்ச அப்படி எல்லாம் எதுவும் இல்லைடி. அவன் யார்கிட்டயும் வழிஞ்சு நின்னு பேசி நான் பார்த்ததே இல்லை. அப்படிபட்டவன் அந்த பொண்ணு அடிச்சும் கூட சும்மா இருக்கானேன்னு தான்”..

“எது அடிச்சாளா” என பதறி எழுந்தாள் கற்பகம். ஆமாடி என மனைவியை இழுத்து மீண்டும் நெஞ்சில் போட்டு கொண்டான் கோபால்.

“என்னங்க சாதாரணமா சொல்றீங்க” அவள் பதட்டம் குறையவே இல்லை.

“ஏண்டி அடி வாங்கினவனே சாதாரணமா தான் இருக்கான் என்னை என்ன பண்ண சொல்ற”


“அதனால தான் தேவி அங்க வேலைக்கு போக யோசிக்கறாளோ”..

“இருக்கலாம்”..

“ஆனா அவர் தானே வேலைக்கு கூப்பிட்டு இருக்காரு”..

“ஆமா”..

“அப்பறம்”

“விழுப்புரம், அதை அப்பறம் பார்த்துக்கலாம் இப்ப புருஷனை கவனி”.. என்றான் இறுக அணைத்துகொண்டு

அவன் சொன்னதும் வெட்கத்தில் சிவந்தவள் அவனை கவனிக்கும் வேலையில் இறங்கினாள்.


இங்கே இரவின் தனிமையில் வானத்தை பார்த்தபடி படுத்து இருந்தான் வாசு.

தலையில் முக்காடு இட்டபடி அவனை நெருங்கி வந்தது ஒரு உருவம். அவன் அருகில் வந்ததும், முக்காடை நீக்கியது அது. அவள் அந்த தெருவில் வசிக்கும் ஒருத்தி தான்.

“என்ன வாசு இன்னைக்கு போன் பண்ணவே இல்லை, உன்னை பார்க்காம இருக்க முடியலை, அதான் நானே கிளம்பி வந்தேன்” என்று அவனது தொடையில் கை வைத்தாள்.

சட்டென அவள் கையை உதறியவன், “கிளம்பு” என்றான் ஒற்றை வார்த்தையில்.

“என்ன வாசு நல்ல மூட்ல இருக்கேன்”..என அவன் நெஞ்சை தொட, அவள் கையை பற்றி முறுக்கினான் அவன்.

“கிளம்புன்னு சொன்னா போய்ட்டே இருக்கணும், அதைவிட்டுட்டு உரசி கொஞ்சி எல்லாம் என்னை ஒண்ணும் பண்ண முடியாது. எனக்கு வேணும்னா வேணும் வேணாம்னா வேணாம்தான்”.. என்றவன் ஒரே தள்ளாக கீழே தள்ளினான்.

அவன் கையை பற்றி முறுக்கியதிலேயே வலி உயிர் போக, அதற்கும் மேல் அங்கிருந்தால் பலமாக அடி வாங்க கூடும் என்று புரிந்தவள் எழுந்து சென்று விட்டாள்.

அவள் போனதும் படுக்க போனவன் என்ன நினைத்தானோ நேராக குளியலறைக்கு சென்று நன்றாக குளித்தான். அதன் பிறகே வந்து படுக்கையில் விழுந்தான். குளிர் நீர் உடலின் உஷ்ணத்தை குறைத்திருக்க படுத்ததுமே உறங்கி போனான்.
 
Member
Joined
May 9, 2025
Messages
99
Aha payan thirundhitanna orea adiella
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top