• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 11, 2025
Messages
27
Chapter 3

வேதனைகள் எனக்கு
சகஜம் தான்
ஆனால் நீ தரும் வேதனைகள்
என்னை வதைக்கிறதே

அதற்கு என்ன பெயர் வைப்பேன்...

வீட்டிற்கு வந்த தேவி அப்பாவை காண ஓடினாள். அங்கே கற்பகம் என்ன செய்வது என தெரியாமல் நின்று இருந்தவள் “வண்டி கிடைச்சுதா, போலாமா”... என்று கேட்டாள்


“இல்லைக்கா”... என அழுதவள் அப்பாவின் நெஞ்சை நீவி விட்டாள். மூச்சு விட முடியாமல் திணறிகொண்டு இருந்தார் சோமு.

“என்னாச்சுங்க” என்று கணவனை கேட்டாள்.

“அவன் சரியான நிலைமையில இல்லைடி, புல்லா குடிச்சிருக்கான்”... என மேலோட்டமாக கூறினான் கோபால்.

“அவர் குடிச்சிருந்தா என்ன உங்ககிட்ட சாவி கொடுக்க வேண்டியது தானே, அவரென்ன மனுஷன் தானே வேற எதாவதா”... என இவள் அடுக்கிக்கொண்டே போக, “கற்பகம் நிறுத்து வேற என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்”... என்றான் கோபால்.

“ஏம்மா தங்கச்சி அப்பாவை பைக்ல வச்சு நான் துண்டு வச்சு என்னோட சேர்த்து கட்டிக்கிறேன், நீ பின்னால் உட்கார்ந்து பிடிச்சுக்கறியா”... என்று கேட்டான் சட்டென்று.

அவளுக்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை, கண்ணீர் மல்க அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் சரி என்பது போல.
"என்னம்மா இது" என சமாதானம் கூறியவன்,

“அப்போ சரி வாங்க, கற்பகம் வண்டி சாவி எடுத்துட்டு வா, ம்மா நீ பெரிய துண்டு கொண்டு வாம்மா”... என அவன் துரிதப்படுத்த கற்பகம் வாசலுக்கு ஓடினாள்.

வெளியே ஓடியவள் அடுத்த நொடி “என்னங்க இங்க வாங்க” என கத்தினாள்.

“என்னடி” என வெளியே வந்தான் கோபால்.

வாசலில் காரை கொண்டு வந்து நிறுத்தினான் வாசு. அவனை கண்டதும் கோபால் முகம் மலர, “இருப்பா வந்திடறேன்” என உள்ளே ஓடினான்.

“தங்கச்சி நீ நகரு” என கூறி சோமுவை அவன் தூக்கும் முன் வலிய கரம் ஒன்று அவரை அப்படியே குழந்தை போல தூக்கி கொண்டது.

அவள் நிமிர்ந்து பார்க்க, பாகுபலி சிவலிங்கத்தை தூக்கி கொண்டு செல்வது போல அசால்ட்டாக தூக்கி கொண்டு வெளியேறி இருந்தான் அவன். கோபால் அவனுடன் ஓடி சென்று கார் கதவை திறந்து விட உள்ளே அவரை படுக்க வைத்தான். பின்னால் ஓடி வந்த தேவி மறுபுறம் ஏறிக்கொண்டு தந்தையின் தலையை தாங்கி பிடித்து மடியில் வைத்து கொண்டாள். கோபால் முன் புறம் ஏறிக்கொள்ள, வண்டி புறப்பட்டது. கற்பகம் வீட்டில் இருந்து கொண்டாள்.

வண்டி நேராக 24 மணி நேர மருத்துவமனைக்கு சென்று நின்றது. இவள் இறங்க முதல் ஆண்கள் இருவரும் இறங்கி கொள்ள, முன்பு போலவே அவரை அலேக்காக தூக்கி கொண்டு சென்றான் வாசு.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டார் சோமு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஓய்ந்து போய் இருக்கையில் அமர்ந்தாள் தேவி. வாசு வெளியே சென்றிட அவன் பின்னே ஓடினான் கோபால்.

“தாங்க்ஸ் பா”...என்றான் கோபால்.

“ஆமா அவ எதுக்கு என்னை அடிச்சா”... என்று கேட்டான் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து கொண்டே.

அய்யயோ கேட்கறானே என்ன பதில் சொல்றது என திருதிருத்தான் கோபால். “மம் அதை அப்பறம் வச்சுக்கறேன். இவளுக்கு தானே வேலை கேட்ட”... என அடுத்த கேள்வியை கேட்டிருந்தான்.

“அது.... ஆமாம்பா” என இவன் கூற, சார் சார் என பின்னிருந்து ஒரு நர்ஸ் அழைத்து கொண்டிருந்தாள்.

இருவரும் திரும்பி பார்க்க, “சார் அந்த பொண்ணு மயங்கிட்டாங்க”... என கூவினாள்.

அய்யோ என கோபால் ஓட இது வேறயா என சலித்து கொண்டே சிகரெட்டை வீசி எரிந்து விட்டு பின்னால் சென்றான் வாசு.

அங்கே இன்னொரு அறையில் தேவியை படுக்க வைத்து சோதித்து கொண்டிருந்தனர். அடுத்து அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்ற துவங்கினார்கள். என்னடா இது என வாசு சைகை செய்ய கோபாலுக்கு தான் என்ன சொல்வது என்று புரியவில்லை.

”பாவம்பா” என்றான் இவனும் பாவமாக. அவனை தீயாக முறைத்த வாசு வெளியே செல்ல, “சார் அமெளண்ட் பே பண்ணுங்க”.. என்றாள் ரிசப்ஷனில் இருந்த பெண்.

“ம்ம் அங்கே படுத்திட்டு இருக்காளே அவகிட்ட கேளுங்க” என கூறிவிட்டு வெளியே வந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். ஆழ்ந்து இழுத்து வளையமாக வெளியிட்டவன் என்ன நினைத்தானோ அதை தூக்கி வீசி விட்டு ரிசப்ஷன் சென்றான்.

“ஃபர்ஸ்ட் எய்ட் மட்டும் பண்ணுங்க மத்த ட்ரீட்மெண்ட் அமெளண்ட் பே பண்ணதும் பார்த்துக்கலாம்”... என்று அவர்கள் பேசிக்கொண்டிருக்க, தனது டெபிட் கார்டை எடுத்து நீட்டி இருந்தான் வாசு.

அவன் லுங்கி சட்டையும் தோற்றமும் பார்த்து அந்த கார்ட் அவனது தானா என பலத்த யோசனைக்கு பிறகு அதை வாங்கி பணத்தை தீட்டி விட்டு அவனிடம் திரும்ப கொடுத்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.

அதை வாங்கி கொண்டவன் கிளம்ப நினைக்க அவனால் போக முடியவில்லை, அங்கே இருந்த நீள்விருக்கையிலேயே அமர்ந்து விட்டான். அப்போது வெளியே வந்த கோபால், “நீ இன்னும் கிளம்பலையாப்பா”.. என்றான் அருகே அமர்ந்து கொண்டே. தீயாக அவனை முறைத்தவன் “என்னவாம் அவளுக்கு”... என்றான் கண்களை மூடி சுவற்றில் சாய்ந்தபடியே.

“அப்பாவுக்கு உடம்புக்கு முடியலைன்னு சரியா சாப்பிடாம இருந்திருக்கு அதான் மயங்கிருச்சு”... என்றான் கோபால் பரிதாபமாக.

அதற்கு மேல் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்து விட்டான் வாசு. “நீ வேணும்னா கிளம்பு வாசு நான் இருக்கேன்” என்றவனை கண் திறந்து ஒரு பார்வை பார்த்தான், அதன் பிறகு கோபால் ஏன் அதை கூற போகிறான். அவனும் பேசாமல் அமர்ந்து கொண்டான். வாசு மீண்டும் கண்ணை மூடிக்கொண்டான்.

நான்கு மணி நேரம் கழித்து கண்ணை திறந்தாள் தேவி. அறையை சுற்றி பார்த்து விட்டு பதட்டத்துடன் எழுந்து கொள்ள முயற்சிக்க அவள் கைகள் வென்ஃப்லான் போடப்பட்டு இருந்தது. அதை மெதுவாக எடுத்து விட்டவள் வெளியே வந்தாள். அங்கே இருக்கையில் அமர்ந்தபடியே கோபால் உறங்கி இருக்க, போனை பார்த்துகொண்டு அமர்ந்து இருந்தான் வாசு. இவளை பார்த்ததும் போனை அணைத்து பாக்கெட்ல் போட்டவன் எழுந்து வெளியே சென்றான். அப்போது தான் விடிந்து இருந்தது, கொஞ்சம் ஆட்கள் வந்து போக இருக்க அப்பாவை தேடி சென்றாள்.

மூச்சு திணறல் சீராகி நிம்மதியாக உறங்கி கொண்டு இருந்தார் சோமு. அவரை அப்படி பார்த்த பிறகு தான் அவளுக்கு மூச்சே வந்தது. அதன் பிறகே அவள் மயங்கி விழுந்தது, அவன் காரோடு வந்து உதவி செய்தது எல்லாம் மூளை ரீவைண்டு செய்து பார்க்க துவங்கியது. வேகமாக வெளியே ஓடினாள் அங்கே அவனும் இல்லை அவன் வண்டியும் இல்லை. கண்களை அங்கும் இங்கும் சூழல விட்டு தேட எந்த பலனும் இல்லை.

மீண்டும் உள்ளே வர கோபால் எழுந்திருந்தாள். “இப்போ எப்படிம்மா இருக்கு”... என்று கேட்டான்.

பரவையில்லை என்பதாக தலையாட்டினாள், அதற்குள் கற்பகம் வந்து சேர்ந்தாள். வந்ததும் சோமுவை பற்றி விசாரித்தாள், அடுத்து “ஏங்க அந்த வாசு இப்போ தான் கிளம்புராரு போல”... என்று கேட்டாள்.

“ஆமாடி இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தான், நான் போக சொன்னேன் போகலை”

“நான் கூட என்னமோ நினைச்சேன் நல்லவரா தான் இருக்காரு. கேட்டதும் வண்டியை எடுத்துட்டு வந்துட்டாரே” என்று புகழ்ந்தாள்.

ஆமா ஆமா என்று தலையை உருட்டினான் கோபால். அடுத்து மருத்துவர்கள் வந்து சோமுவை பற்றி விளக்கி விட்டு சென்றனர்.

தேவி பணத்திற்கு என்ன செய்வது என்று யோசித்தவள் தனது காதில் இருந்த சிறிய கம்மலை கழட்டி கொடுத்து “அண்ணா இதை அடகு வச்சு இல்லை இல்லை வித்து தர முடியுமா பில் கட்டனும்” என்றாள்.

“இரு தேவி நான் கொண்டு வந்திருக்கேன்”, என கற்பகம் கூறினாள்.

“இல்லைக்கா நீங்க இவ்வளவு உதவி செஞ்சதே போதும். இதை மட்டும் வித்து குடுங்க”... என்றாள்.

“அதை அப்புறமா வித்துக்கலாம். இப்போ போய் எவ்வளவுன்னு கேட்டு கட்டிட்டுவாங்க” என்று கூறினான் கோபால்.

தேவி தயங்கி நிற்க, வா என அவளை அழைத்து கொண்டு ரிசப்ஷன் சென்றாள் கற்பகம்.

பில் எவ்வளவு என இருவரும் கேட்க, “அவர் தான் ஏற்கனவே கட்டிட்டாரே” என்று கூறினாள் அந்த பெண்.

“யார் கட்டினா” என்று தேவி குழப்பதுடன் கேட்க,

“உங்க கூட வந்தாரே அவர் தான்”... என்று கூறினாள். கற்பகமும் தேவியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு கோபாலிடம் சென்றனர்.

அவனிடம் விஷயத்தை கூறிட, “அப்படியா” என்று கேட்டான் அவனும்.

“அது கூட தெரியாம நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என்று கற்பகம் கணவனை காய்ந்து கொண்டு இருந்தாள்.

“இல்லைடி கொஞ்சம் கண் அசந்துட்டேன் அதான் தெரியலை” என்று கூறினான் கோபால்.

“ஆமாம் சினிமாக்கு போனாலும் தூங்கறது ஹாஸ்பிடல் வந்தாலும் தூங்கறது” என திட்டினாள் அவள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top