• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
39
Chapter 23
உனைக் காணும்போது மட்டும்
தொண்டைக்குழி அடைத்துக் கொள்கிறது.
வார்த்தைகள் ஏனோ

குரல்வலைக்குள்
சிக்கிச் சிதிலமடைகிறது.

காலையில் அவள் கண் விழித்த போது அவன் அங்கே இல்லை, பதறித்தான் போனாள் தேவயானி. அடித்து பிடித்து எழுந்து வந்து பார்க்க, கிச்சன் உள்ளே ஏதோ உருட்டிக்கொண்டிருந்தான்.

அவளை விட்டு எங்கும் போக மாட்டான் என்று தெரிந்தும் கூட சில நொடி விலகளை கூட இனி ஏற்க முடியாது என்பது போல ஆனது அவளது நிலை. அந்த சிறிய சமயலறையில் அவன் நெடிய உருவம் நிற்கும் போது இன்னுமே அந்த இடம் சிறியதாக தோன்றியது.

அவனை கண்டதும் எழுந்த நிம்மதி பெருமூச்சில் கைகட்டி ஒற்றை தோளை சுவற்றில் பதித்து நீண்ட பெருமூச்சுடன் நின்றாள். அவள் மூச்சு கற்று அவள் வரவை சொன்னதுவோ, திரும்பி பார்த்தவன் இதழ் பிரியாமல் சிரித்தான்.

அவளுக்கு தான் சிரிப்பே மறந்து போனது போல ஆனது. இவன் சிரிக்கும்போது எத்தனை அழகாக இருக்கிறான். ரசனை என்பது அழகு என்ற சொல்லிற்கு அப்பாற்பட்டது. எதை நாம் ரசிக்கிறோமோ அதுவே நம் கண்களுக்கு அழகு. ஆனாலும் இவன் அழகு தான் கருப்பட்டி சிலை போல, வியர்வையில் மினுமினுக்கும் அவன் தேகம் கூடுதல் சிறப்பு. ஈரமான கருப்பட்டி போல, நினைப்பே இனித்தது அவளுக்கு.

அவளா ஒரு ஆடவனை இப்படி ரசிக்கிறாள், அவளுக்கே ஆச்சர்யம் தான். ஆனால் அவன் யாரோ ஒரு ஆடவன் இல்லையே அவள் கணவன். இப்படியே சென்று அவன் தோளோடு சேர்த்து அணைத்தபடி அவன் முதுகில் சாய்ந்து கொண்டால் என்ன. என்ன செய்வான்?... தேவி உனக்கு ஏன் காலையிலே தேவையில்லாத கற்பனை எல்லாம் வருது. தன்னை தானே கடிந்து கொண்டாள்.

அவள் எதிரே சூடாக எதையோ நீட்டினான் வாசு, என்னவென்று பார்க்க காப்பி தூளின் மணம் நாசியில் சுர்ரென ஏறியது. “எனக்கு எதுவும் செய்ய தெரியாது, இதுவே யூட்யூப் பார்த்து செஞ்சேன்” என்றான் சிறியதாக எட்டி பார்த்த வெட்கத்துடன்.

‘ஏனாம் என்னை எழுப்பி இருக்கலாமே’, வாய் வரை வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கி விட்டு அந்த காப்பியின் மணத்தை ஆழ்ந்து சுவாசித்தாள். காப்பி இன்னும் அவன் கையிலேயே இருக்க, “ஒரு நிமிஷம் பிரஷ் பண்ணிட்டு வந்திடறேன்” என்று பின்பக்கம் சென்றாள்.

அவள் காப்பி கோப்பையை வாங்காமல் செல்லவும், அதையும் அவள் சென்ற திசையையும் மாறிமாறி பார்த்து கொண்டிருந்தான் வாசு.

சொன்னது போலவே திரும்ப ஓடி வந்து அவன் கையில் இருந்ததை வாங்கி கொண்டாள். ஆசையாக ஒரு மிடறு விழுங்கி வைத்தவள், முகத்தையே கலவரத்துடன் பார்த்து கொண்டிருந்தான் வாசு. கண்ணாடி போல அவள் தொண்டைக்குழிக்குள் இறங்கும் குளம்பியை அவனால் கான முடிந்தது. கண்கள் மூடி அதை விழுங்கியவன், கண் திறந்து அவனை பார்த்தாள், இரு புருவங்களையும் மேலேற்றி என்ன என்பது போல அவன் கேட்க, உதட்டை மடித்து அவனை பாவமாக பார்த்தாள். அவன் புரியாமல் அவளை பார்க்க அடுத்த நொடியே பளீரிட்ட புன்னகையுடன் கட்டை விரலையும் ஆள் காட்டி விரலையும் மடக்கி மற்ற மூன்று விரல்களையும் நீட்டி பிரமாதம் என்பது போல சொன்னாள்.

அவன் தலையை மேலும் கீழும் அசைத்து நிஜமா என்று கேட்டபடியே அவள் கையில் இருந்த கப்பை வாங்கி தானும் குடித்தான். அவள் குடித்த எச்சில் கப்பில் அவன் குடிக்க முற்பட, அய்யோ என பதற போனவள் அவன் சாதாரணமாக குடித்து முடிக்கவும் அமைதியாகி விட்டாள்.

“ம்ம் நல்லா தான் இருக்கு” என்றான் அவனும்.

“நல்லா தான் இருக்கா, நான் குடிச்சதுலயே பெஸ்ட் எவர் காப்பி
இது தான்” பாராட்டு பத்திரம் வழங்கினாள் அவள்.

உடனே இடைவரை குனிந்து தலை தாழ்ந்து அவன் நன்றி தெரிவிக்க, சிரித்தபடியே அவன் கையில் இருந்த காப்பி கப்பை இவள் வாங்கி கொண்டு பருக துவங்கினாள். அவள் அப்படி செய்யவும் சட்டென பதறியவன், பிறகு அவள் என்னவென பார்த்த பார்வையில் அப்படியே அமைதியாகி போனான்.

அதன் பிறகு அவள் குளித்து விட்டு வர, அவன் வீட்டை துடைத்து கொண்டிருந்தான். “நான் வந்து செஞ்சுக்க போறேன் நீங்க ஏன்”... அவள் அவசரமாக அவன் கையில் இருந்து மாப்பை வாங்க முயல, அதை தன் பக்கம் நகர்த்தி கொண்டவன் “பசிக்குதும்மா ஏதாவது செஞ்சு கொடேன்” என்றான் அவன்.
“சரி இதை அப்படியே வச்சிடுங்க நான் வந்து பார்த்துக்கறேன்” என கூறிக்கொண்டே கிச்சன் சென்றவள், இருந்த கோதுமை மாவை எடுத்து சப்பாத்தி செய்து கொண்டே உருளை கிழங்கு
வேகவைத்து மசித்து கடப்பா செய்தாள். கூடவே கொஞ்சம் பாலில் சேமியாவை போட்டு பாயாசமும் செய்து முடித்தவள் வெளியே வர, வீடு மொத்தமும் துடைத்து முடித்திருந்தான் அவன்.

“நீங்க போய் குளிச்சுட்டு வாங்க” அவனை அனுப்பி வைத்து விட்டு தந்தையின் படத்தின் அருகே சென்றவளுக்கு தொண்டையை அடைத்து கொண்டு வந்தது. அப்பா என்று நெஞ்சம் கதற, தேவா என்ற அவன் குரலில், தன் கவலை மறந்தவளாக “ஹா இதோ வந்துட்டேன்” என ஓடினாள்.

சொல்லுங்க என அவள் கேட்க, “டவல் கொண்டு வர மறந்துட்டேன்மா” என்றான். ஓடி சென்று அவனுக்கு புது துண்டு ஒன்றை எடுத்து கொண்டு வந்தவள் கதவின் மேலே போட்டு வைத்தாள்.

அப்பா படத்தின் முன் விளக்கேற்றி விட்டு கண் மூடி நின்றவள் கண் திறந்த போது அவனும் எதிரே நின்று இருந்தான். இடையில் அவள் கொடுத்த டவலும், மார்பை மறைத்தபடி அவள் உபயோகித்த டவலும் அணிந்து கை கூப்பி நின்று இருந்தான்.

என்னதான் டவல் அணிந்திருந்த போதும், தினவெடுத்த மார்பும், ஆண் வாசனையும் அவள் மனதை தாக்க, “நீங்க டிரஸ் பண்ணிட்டு வாங்க நான் சாப்பிட எடுத்து வைக்கிறேன்” என்று அவசமாக கூறி சென்று விட்டாள்.

உடை மாற்றிக்கொண்டு வந்தவன் சாப்பிட அமர, “ரெண்டு பேருமே சேர்ந்து சாப்பிடலாமே” என்று கூறினான். எந்த வித அலட்டலும் இல்லாமல் அவளும் அமர்ந்து கொள்ள இருவரும் சாப்பிட்டனர். எப்போதும் போலவே அவள் சமையலை ரசித்து சாப்பிட்டவன், அவளையும் ரசிக்கும் கண்களை திருப்ப இயலாது தவித்து போனான். ஈர தலையில் துண்டு கட்டி இருந்தாள். ஆங்காங்கே லேசாக அரும்பி இருந்த வியர்வை துளி வைரமாய் மின்னி கொண்டிருந்தது. புடவையை இழுத்து சொருகி வேலை பார்த்ததன் விளைவாக கொஞ்சமே கொஞ்சம் சேலை விலகி குட்டி நிலவாய் தெரிந்த இடையை பார்க்காமல் இருக்க முடியவில்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top