Member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 39
- Thread Author
- #1
அவன் வருந்துவது இவளுக்கும் வலியை தந்திருக்க வேண்டும், அவன் கையை பற்றிக்கொண்டவள் “வாசு, நான் அப்படி சொல்லி அழுதது கூட எனக்கு நினைவுல இல்லை. அப்போ நான் நானாவே இல்லை. இருந்த ஒரே உறவும் போனதுல எனக்கு பைத்தியம் பிடிக்காம இருக்க காரணம் நீங்க மட்டும் தான். எனக்கு கண்ணு முன்னாடி இருந்தது எல்லாம் நீங்க.. நீங்க.. நீங்க மட்டும். எவ்வளவு உரிமையா எல்லா விஷயமும் செய்தீங்க, உங்க இடத்திலே வேற யார் இருந்திருந்தாலும் கூட இப்படி மனபூர்வமா எல்லாம் செய்திருப்பாங்களா தெரியாது. ஆனா என்னோட சேர்த்து என் அப்பாவையும் ஏத்துகிட்டா மட்டும் தானே இதெல்லாம் சாத்தியம். நான் அதை நினைச்சு தான் ஆறுதல் பட்டுகிட்டு இருந்தேன். ஆனா நீங்க இவ்வளவு வருத்தப்பட்டு இருக்கீங்கன்னு எனக்கு தெரியாது வாசு. என்னை மச்சிருங்க”
அவள் உண்மையான மனதுடன் உரைக்க, “என்ன தேவா நீ” என அவள் தலையை வருடினான் வாசு.
“நான் ஏதோ என்னோட ஆதங்கத்தை சொன்னேன், நீ இப்படி வருத்தப்படுவன்னு நினைக்கவே இல்லை. தெரிஞ்சிருந்தா சொல்லிறுக்க மாட்டேன்”
“இல்லை நீங்க இப்படி என்கிட்ட மனசுவிட்டு பேசறது தான் எனக்கு பிடிச்சிருக்கு. நமக்குள்ள என்ன விஷயம் நடந்தாலும் நாம இப்படி பேசி தீர்த்துக்கறது தான் நல்லது. இதை இப்போ மட்டும் இல்லை, எப்பவும் நாம செய்யனும்” என்றாள் உறுதியாக.
ம்ம் அவனும் ஆமோதிப்பாக தலையாட்டினான்.
“ஆமா அப்புறம்” என அவள் ஏதோ கேட்க வாயெடுக்க.
“தேவா இன்னைக்கே எல்லாத்தையும் பேசி முடிச்சுடனுமா, நம்ம காலம் இன்னும் இருக்கு. தூங்கும்மா நாளைக்கு பேசிக்கலாம்” என்றான்.
அவன் சொல்வது சரி தானே, இன்னும் இருக்கும் காலமெல்லாம் அவனுடன் தானே கழிய போகிறது. இன்றே கடைசி என திரையரங்கில் போஸ்டர் ஒட்டப்படுவதை போல எல்லாவற்றையும் இன்றே பேசிட என்ன அவசியம் வந்தது. அவளுக்குமே மிகவும் களைப்பாகத்தான் இருந்தது. நிம்மதியாக கண் மூடி பல நாட்கள் ஆகிவிட்டது. அவள் மனதிற்குளம் உடலுக்கும் ஆழ்ந்த நித்திரை தேவைப்பட்டது. அது அவனருகில் கிடைக்கும் என்று அவள் மனம் நம்பியது.
“நான் உங்க மடியிலேயே படுத்துக்கட்டுமா” தைரியமும் தன்னம்பிக்கையும் கொண்ட பெண், சிறு பிள்ளை போல கேட்க, வாம்மா என்று அவளை வாரி அணைத்து கொண்டான். அந்த அணைப்பில் துளியும் காமம் இல்லை. இவள் எனது பொக்கிஷம் இவளை போற்றி பாதுகாப்பேன் என்ற கண்ணியம் மட்டுமே இருந்தது.
அவன் சுவற்றில் சாய்ந்து கொள்ள அவன் மடியில் அவள் தலை வைத்து படுத்து கொண்டாள். அவன் மடி சேர்ந்த நிம்மதி அவளுக்கு, அவளை தன் மடி சேர்த்து கொண்ட நிம்மதி அவனுக்கு. இருவருக்குமே பல நாள் தூக்கம் இப்போது கை சேர்ந்ததில் இதமாய் அணைத்து கொண்டாள் நித்ரா தேவி.
குடும்ப வாழ்க்கைக்கும் வெறும் கண்ணியமும், நேர்மையும் மட்டும் போதுமா. காதலும் காமமும் இரண்டற கலந்த சங்கமம் அல்லவா சம்சார சாகரம். அந்த சாகரத்தில் எப்போது இருவரும் மூழ்க போகிறார்கள்.