• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Dec 11, 2025
Messages
35
Chapter 21

வார்த்தைகள் அற்ற
மொழிகள் பேசும்
உன் விழிகளுக்கு
என்ன பரிசு தருவேன்?
அழகான கவிதைகள்

பேசுகின்றனவே அவை!

அவள் கூறிகொண்டிருந்ததை அவன் எந்த விதமாக கேட்டுக்கொண்டிருக்கிறான் என்று கூட அவளுக்கு தெரியவில்லை, அவள் வெளிச்சத்தில் இருக்க அவன் முகம் இருளில் இருந்தது. அப்படியே வெளிச்சத்தில் இருந்தாலும் அவன் அப்படி ஒன்றும் மனதில் நினைப்பதை முகத்தில் காட்ட கூடியவன் அல்ல. அதனால் அவன் நினைப்பதை பற்றி யோசிக்காமல் மேலே தொடர்ந்தாள்.

"சகுந்தலா மூலமா உதவி கிடைக்கும்னு நான் நினைக்கவே இல்லை, என்னோட மொபைல் எடுத்துட்டு வந்து அவ என்கிட்ட கொடுத்தப்ப என்னால அதை நம்பவே முடியலை".

“உங்களையும் உங்க அப்பாவையும் காப்பாத்திக்கோங்கன்னு சொன்னா, ஆனா அப்போ கூட ஒரு நிமிஷம் என்ன செய்யறதுன்னு எனக்கு புரியலை. அப்பறம் அப்பாவுக்கு ஃபோன் பண்ணி அந்த அயோக்கியனோட கேவலமான செயலை சொன்னேன். அப்பா கூட நம்ப சிரமப்பட்டார். என்னையும் அடைச்சு வச்சிருக்கறதா சொல்லவும் அப்பா சுதாரிச்சுட்டார், அந்த ஊர்லயே இருந்த சில நம்பிக்கையான உறவினர்களை வரவச்சு விஷயத்தை சொன்னார். அவங்களுக்கு ஏற்கனவே இவன் இது போல செய்யறது தெரிஞ்சு இருக்கு, ஆனாலும் சம்மந்த பட்டவங்களே சும்மா இருக்கும்போது என்ன செய்ய முடியும்னு விலகி இருந்திருக்காங்க. அப்பா சொல்லவும் அவங்க எல்லாரும் போலீஸ்ஸை கூட்டிட்டு அங்கே வந்துட்டாங்க. போலீஸ் உதவியோட என்னை மீட்டாங்க. நான் முதல் அந்த பொண்ணை தேடி தான் போனேன், ஆனா அவளை வேற எங்கேயோ அடைச்சு வச்சிருந்தாங்க. போலீஸ்கிட்ட சொல்லி அவளை தேடி கண்டு பிடிச்சோம் அங்கே நடந்தது எல்லாத்தையும் சொன்னோம். ஆனா ஊர்காரங்க பாதி பேர் அவனுக்கு ஆதரவா தான் பேசினாங்க. இது எங்க சாதி பிரெச்சனை பெருசு பண்ணா விளைவு விபரீதமா இருக்கும், பெரிய சாதி சண்டை வரும்னு பயமுறுத்தினாங்க. அதனால போலீஸ் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தயங்கினாங்க. இப்போதைக்கு நீங்க தப்பிச்சதே போதும் கிளம்புங்கன்னு சொல்லி எங்களை அங்கே இருந்து அனுப்பினாங்க. இனி அவனுக்கு எனக்கு எந்த சம்பந்தமும் இல்லைன்னு எழுதி வாங்கிட்டு வந்தோம். பாதி உயிரா கிடந்த அந்த பெண்ணையும் மீட்டு கூட்டிட்டு வந்தோம்".

“ஒரு நடத்தை கெட்டவளுக்காக இவ்வளவு தவிக்கிறியே நீ மட்டும் என்ன பத்தினியாவா இருக்க போறன்னு என்னை பார்த்து கேட்டான். நான் அவனை எல்லார் முன்னாடியும் செருப்பாளா அடிச்சுட்டேன்”.

“அதுக்கு என்கிட்ட இருந்து நீ தப்பிக்க முடியாதுடி, என்னைக்கு இருந்தாலும் நான் உன்னை விட மாட்டேன்டி, நான் கட்டின தாலியை கழட்டி என் முகத்துல வீசி அடிச்சல்ல, திரும்ப நீயே வந்து என் கால்ல விழுவ, எழுந்து நடக்க முடியாத இந்த கிழவனை வச்சிக்கிட்டு நீ எங்கே போறேன்னு நானும் பார்க்கறேன்னு என்னை மிரட்டினான்".

“அடிபட்ட நாய் குலைக்குதுன்னு நானும் விட்டுட்டேன், அந்த பொண்ணை கூட்டிட்டு வந்து ஹோம்ல சேர்த்தோம், அங்கே தான் அவ பாதுகாப்பா இருப்பான்னு விட்டோம். அவ பண்ணது தப்பு தான் பிடிக்கலைன்னா நியாயம் சட்டப்படி பிரியறது தான் முறை. அதை செய்யலை ஆனா அதுக்காக அவங்க செய்த வேலை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாத செயல். அதை அவளுக்கு புரிய வச்சு இனி யோசிச்சு உணக்குன்னு ஒரு நாள்ல வாழ்க்கையை தேடிக்கன்னு சொல்லி அனுப்பினோம்"

"கோர்ட்ல விவாகரத்து வழக்கு போட்டு சட்டப்படி விவாகரத்து வாங்கினேன். ஒவ்வொரு முறை கேஸ் நடக்க வரும்போதும் என்னை விட மாட்டேன்னு அவன் திரும்ப திரும்ப சொல்ல அப்பா ரொம்பவே பயந்து போய்ட்டாரு. அதனால அவனுக்கு தெரியாம யாருக்கும் தெரியாத புது ஊருக்கு வந்தோம். அப்பாவோட மொத்த பணமும் ஊர்ல விவசாயம் பண்ணலாம்னு இடம் வாங்கி போட்டு இருந்தார். அதை அப்படியே விட்டுட்டு வந்ததால, பண தட்டுப்பாடு வந்துருச்சு. பாங்க்ல இருந்த மீதி பணத்திலே தான், அப்பாவோட மத்த செலவுகளை பார்க்க முடிஞ்சது. நாள் ஆக ஆக அந்தப் பணமும் கரைஞ்சு போனதால தான் வேலை தேடினேன். இங்கே என்னவெல்லாமோ நடந்திருச்சு. நடந்த எதையும் நான் மறைக்க நினைக்கலை. ஆனா, சந்தோஷமா இருந்தா மனசுல வச்சுக்கோ. சங்கடமா இருந்தா என் தோள்ல சாய்ஞ்சு அழுன்னு சொன்னீங்க. ஆனா, இந்த விஷயத்தை நான் ஒரு பொருட்டாவே நினைக்கலை. அப்பறம் சந்தோஷமும், சங்கடமும் எங்கே இருந்து வரும். அதனால தான் சொல்லலை”.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top