New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
Chapter 2.2
அவன் நேராக கம்பெனி சென்றான். எங்கே என்ன என்றெல்லாம் அவள் கவனத்தில் பதியவில்லை. அப்பாவை காப்பாற்ற வேண்டும் அதற்கு யார் காலில் விழ வேண்டி இருந்தாலும் அவள் தயார் தான்.
கம்பெனி உள்ளே சென்றவன், தனியறையாக இருந்த ஒரு அறை கதவை தட்டினான், சத்தமே இல்லை.
அவன் போனை எடுத்து அடிக்க, அந்த அறை உள்ளிருந்து தான் சத்தம் வந்தது.
“அண்ணா அங்க தான் போன் அடிக்குது”... என்று பரபரத்தாள் தேவி.
இவன் போனை அணைத்து விட்டு சென்று கதவை திறக்கும் முன் தேவியின் கைகள் அந்த கதவை தள்ளி திறந்து இருந்தது.
உள்ளே அவள் கண்ட காட்சியில் அப்படியே முகம் சிவந்து விட முகத்தை திருப்பி கொண்டு வெளியே வந்து விட்டாள். உள்ளே ஒரு ஆணும் பெண்ணும் பார்க்க கூடாதா நிலையில் இருந்தனர்.
அதை கண்ட கோபால் தலையில் அடித்து கொண்டான். தேவி விலகி நிற்க, “வாசு”... என சத்தமாக அழைத்தான்.
உள்ளே அதி முக்கிய வேலையில் இருந்தவன் அதில் கடுப்பாகி ச்ச என சலித்தபடியே எழுந்து வந்தான். வந்தவன் “என்னடா” என கோபாலிடம் கத்தினான்.
“வண்டி வேணும் ஒருத்தருக்கு உடம்பு சரியில்லை, கொஞ்சம் சீரியஸ் அதான் வந்தேன்” என்றான்.
“எவன் சீரியஸா கிடந்தா என்ன சாவ கிடந்தா எனக்கென்னடா”... என்றவன் திரும்பி போனான்.
வாசு வாசு என கோபால் அழைக்க அவனை அசட்டை செய்தவன் தனது வேலையை பார்க்க சென்றான்.
தனக்காக கோபால் கெஞ்சி கொண்டிருக்க கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் சென்றவனை பார்த்தவளுக்கு அத்தனை கோபம். அவனை பார்த்த கோலமும் அவன் அலட்சியமும் தேவியை தன் வசமிழக்க செய்தது.
வேகமாக அவனருகில் வந்தவள் அவனை ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தாள்.
“மனுஷனா நீ, ஒரு உயிர் இந்த பூமிக்கு வர எவ்வளவு போராட்டம் நடத்துது தெரியுமா. உனக்கு இந்த உடம்பு மட்டும் தானே பிரதானம். உன்கிட்ட போய் உதவி கேட்க வந்தோம் பாரு. வாங்கண்ணா”... என்று கூறிவிட்டு முன்னே நடந்தாள்.
கோபாலும் கூட தேவி இப்படி செய்வாள் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் இருந்த அவசரத்திற்கு அங்கே நிற்க முடியாமல் அவனும் தேவி பின்னே ஓடினான்.
அது வரை அங்கே ஒரு பெண் இருந்ததையே கவனிக்கவில்லை அவன். அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளவே
அவனுக்கு ஒரு நிமிடம் ஆனது.
அதன் பிறகு கன்னத்தை தேய்த்து கொண்டவன் செல்லும் அவளையே வெறிக்க பார்த்து கொண்டிருந்தான்.
பிறகு கதவை தாண்டி உள்ளே பார்த்து இன்னும் அதே போசில் கிடந்தவளை சொடுக்கிட்டு அழைத்தவன், “ஏய் கிளம்பு”... என்றான் உத்தரவாக.
“என்ன அதுக்குள்ள கிளம்ப சொல்ற”, என அவள் இழுத்து கேட்க “அடிங்க” என எதையோ அடிக்க எடுத்தவனை கண்டு மிரண்டவள் தெறித்து ஓடி இருந்தாள்.
அதன் பிறகு, அங்கேயே நின்றவன் கன்னத்தை தடவி கொண்டான். அவள் அறைந்த இடம் காந்தல் எடுத்துக்கொண்டு இருந்தது.