New member
- Joined
- Dec 11, 2025
- Messages
- 27
- Thread Author
- #1
மதியம் நேரம் வெயிலை பொருட்படுத்தாமல் கடற்கரை ஓரம் இருந்த ஒரு மரத்தின் அடியில் படுத்து கிடந்தான் வாசு. அவன் இன்னும் கொஞ்சம் சரியாக இருந்திருக்கலாமோ, ஒற்றை வார்த்தை அவள் கேட்ட ஒற்றை வார்த்தையில் உயிர் வலியை உணர்கிறான். அவனுடன் பழகிய பெண்களை போல அவளையும் நினைத்தானா என்று கேட்கிறாள். நியாயம் தானே படுக்கையை மட்டுமே பகிர்ந்து கொள்ள வந்த பெண்களை தானே அவனுடன் கண்டிருக்கிறாள் வேறு எப்படி கேட்பாள் என்று எதிர்பார்க்க முடியும்.
நேற்று வரை அவள் சரி என்று சொல்லியே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்த மனம், இன்று காலையில் அவள் பேசிய பேச்சில் அவன் மீதான தவறுகளை உணர்ந்து அவள் சரி சொல்ல வேண்டுமே என்று தவம் கிடக்கிறது.
ஒற்றை வார்த்தை கூட தவறாக யாரும் தன்னை பேசிவிட கூடாது என்பதில் உறுதியாக இருப்பவள் எப்படி தவறுகளுடனே வாழும் ஒருவனை ஏற்றுக்கொள்வாள்.
ஆனால் இது நாள் வரையில் அவனுக்கு அவன் செயல்கள் எதுவுமே தவறாக தெரிந்தது இல்லை. வயிற்று பசிக்கு உண்டேன் என்பது போல உடல் பசிக்கு கிடைத்ததை எடுத்து கொண்டேன் என்று தான் வாழ்ந்து வந்தான். அது இப்போது எத்தனை பெரிய தவறு என்று அவனுக்கு புரிய துவங்கி இருந்தது.
ஆனால் காலம் கடந்த ஞானம் ஒரு போதும் பலன் தராதே
இப்போது கூட அவள் அருகே தடுமாறும் உணர்வுகளை தடுக்க முடியாமல் தான் இப்படி ஓடி வந்திருக்கிறான். தனிமை அவனை என்ன செய்ய வைக்கும் என்று அவனுக்கே தெரியாது. அவள் இருந்த அறையிலேயே மதி மயங்கி கிறங்கி கிடப்பவன் ஆளில்லாத இடத்தில் அவளிடம் எப்படி விலகி இருப்பான். ஏற்கனவே அவன் குணம் நடவடிக்கை செயல் என்று எதிலும் அவள் கொண்டிருப்பது அதிருப்தி மட்டும் தானே என்ன செய்வான்.
மாலை கவிய துவங்கவும் அவள் கிளம்பும் முன் ஒரு முறை பார்த்து விட எண்ணி வேகமாக கிளம்பி வந்திருந்தான். ஆனால் அவன் வருவதற்கு முன்பே அவள் கிளம்பி சென்று இருந்தாள்.
வெற்றிடமாய் வரவேற்ற அவ்விடத்தை தீயிட்டு பொசுக்க தோன்றிய உணர்வை குடம் குடமாக தண்ணீரை ஊற்றி குளிர்விக்க முயன்றான். ஆனால் முடியவில்லை குளிரும் கூட அவள் கதகதப்பை கேட்டு அவனை அலைக்கழித்தது.
இத்தனை நாட்கள் தேவை என்று பட்டதை அப்போதே நிறைவேற்றிக்கொண்டவன் இன்று அவள் தான் அவன் தேவை என்று தெரிந்தும் கூட விலகி நின்று விரதம் காக்க வேண்டிய நிலை.